சென்னை, ஜூலை7- சென்னையில் நேற்று முன்தினம் (5.7.2024) மறைவுற்ற தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு கழக சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப் பட்டது.
7.7.2024, பகல் 11.30 மணிக்கு சென்னை செம்பியம் பந்தர் தோட்டம் அரசு மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் பொது மக்கள் மரியாதை செலுத்துவதற்காக வைக் கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ. கோபால் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மறைவுற்ற ஆம்ஸ்ட்ராங் வாழ்விணையர் ஆ. பொற்கொடியிடம் தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், தே.செ. கோபால் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விடுத்துள்ள இரங்கல் அறிக்கையைக் கொடுத்து ஆறுதல் கூறினர்.
மாநில கழக இளைஞ ரணி துணைச் செயலாளர் சோ. சுரேசு, வடசென்னை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தி.செ. கணேசன், மாவட்ட இளை ஞரணித் தலைவர் நா. பார்த்திபன், செயலாளர் பா. பார்த்திபன், எருக்கமா நகர் கழக அமைப்பாளர் சொ. அன்பு, மங்களபுரம் கழக அமைப்பாளர் மா. டில்லிபாபு, பூம்புகார் நகர் ச. இராசேந்திரன், அ. செந்தமிழ்தாசன், இராஜேஷ் மற்றும் கழகத் தோழர்களும் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக