நீட் தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீட் தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

பாரா மெடிக்கல் படிப்பிலும் சமூகநீதியை ஒழிக்கும் ‘நீட் தேர்வு திணிப்பா?’ கண்டன ஆர்ப்பாட்டம்


ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியை கண்டித்து
தமிழ்நாடு முழுவதும் திராவிட மாணவர் கழகம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னையில் கழக துணைத் தலைவர் கண்டன உரையாற்றினார்

திராவிடர் கழகம்திராவிடர் கழகம்

சென்னை, பிப்.1 மருத்துவக் கல்லூரியில் ‘நீட்’டைத் திணித்து சமூகநீதிக்குக் குழி தோண்டியது போதாதென்று, பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வு என்பது முற்றிலும் சமூகநீதியை ஒழிப்பதே! இதனைக் கண்டித்தும், ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க., அரசின் சூழ்ச்சியை முறியடிக்கும் வகையிலும் திராவிட மாணவர் கழகம் சார்பில் நேற்று (31.1.2026) தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கண்டன உரையாற்றினார்.

வரும் கல்வியாண்டு முதல் இளங்கலை பிசியோ தெரபி (B.P.T.) மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி (B.OT) ஆகிய இரண்டு பட்டப் படிப்புகளில் சேர்வதற்குத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (Neet) பங்கேற்பதைக் கட்டாயமாக்கி தேசியத் துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (NCAHP) அறிவித்துள்ளது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சி காலத்தில்தான் தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளும், அதன் காரணமாக உருவாகும் ஆயிரக்கணக்கான மருத்துவர்களும்,  தமிழ்நாட்டின் அரசு மற்றும் தனியார் துணை மருத்துவப்படிப்புகளில் பயிலும் மாணவர்களும்தான் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்ட மைப்புப் பலமாக இருப்பதற்கான அடிப்படைக் காரணம்.

கிராமப்புற மாணவர்களின்…

கிராமப்புறங்களிலிருந்தும், ஏழை – எளிய குடும்பங்களிலிருந்தும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்தும் ஏராளமானோர் துணை மருத்துவப் படிப்புகளில் இணைந்து படித்து, பயிற்சி பெற்று உரிய தகுதியுடன் மருத்துவப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இலவசமாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கும் பள்ளிக் கல்வியை முக்கியமற்றதாக்கி, லட்சக்கணக்கில் பணம் கொடுத்துப் பயில வேண்டிய –தனியார் பயிற்சி மய்யங்களுக்கு ஆள் பிடித்துவிடும் வேலையைத் தான் ‘நீட்’ தேர்வு செய்துகொண்டிருக்கிறது.

இன்றும் ‘நீட்’ என்னும் மருத்துவக் கல்வித் தடையைத் தகர்க்கத் தமிழ்நாடு போராடிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இத்தகைய நுழைவுத் தேர்வை வேளாண் கல்லூரிகளுக்கு கொண்டு வருவதற்கும் இந்திய ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது.

மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு காரணமாக இணைய முடியாத சூழலில் இருந்தவர்கள், பாரா மெடிக்கல் சர்வீசஸ் எனப்படும் துணை மருத்துவப் படிப்புகளில் இணைந்து மருத்துவத் துறைக்கு சேவையாற்றி வந்தனர்; தற்போது அதனையும் இல்லாதொழிக்க ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அரசு சூழ்ச்சி செய்கிறது.

‘நீட்’ தேர்வுக்கான காரணங்கள் பொய்

‘நீட்’ தேர்வைக் கொண்டு வரும் போது அதற்கான காரணங்கள் என்றும், நியாயங்கள் என்றும் ஒன்றிய பா.ஜ.க. அரசு எவற்றையெல்லாம் சொன்னதோ, அவையெல்லாம் பொய் என்பது அப்பட்டமாக அவர்களாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்தான் பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வை ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். –  பா.ஜ.க. அரசு கொண்டு வருவதைக் கண்டித்தும், துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 25.1.2026 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

ஏற்கெனவே இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தமிழ்நாடு அரசு எதிர்த்து வரும் நிலையில் BPT, BOT படிப்புகளுக்கும் ‘நீட்’ கட்டாயமாக்கப்பட்டதை ஏற்க முடியாது எனவும், இது ஏழைக் குடும்பங்களை ‘நீட்’ பயிற்சிக்கு செலவழிக்க கட்டாயப்படுத்தும் செயல் என்றும் அக்கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்குகளைக் கண்டித்து திராவிடமாணவர் கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக நேற்று (31.1.2026) தமிழ்நாட்டில் அனைத்துக் கழக மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மருத்துவம், துணை மருத்துவப் படிப்பு மாணவர்கள், ஒத்த கருத்துள்ள கல்வியாளர்கள், அரசியல், சமுதாய அமைப்பினர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வைத் திணித்து சமூகநீதியை ஒழிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து நேற்று (31.1.2026) மாலை 4 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திராவிடர் மாணவர் கழக மாநிலத் துணைச் செயலாளர் செ.பெ. தொண்டறம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா பல்கலைக் கழக திராவிட மாணவர் கழகத் தலைவர் ப. வெங்கடேஷ் வரவேற்புரையாற்றினார். அண்ணா பல்கலைக் கழகச்செயலாளர் ரொசாண்டோ, மெட்ராஸ் பல்கலைக் கழக அமைப்பாளர் ஆதித்யலினார்டோ, வடசென்னை மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் டாவின்சி செ.க. புகழேந்தி, அன்புமதி, கண்ணம்மா, திராவிட இலக்கியா, நித்தியகுமார், நித்தியபூரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடசென்னை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ச.சஞ்சய் தொடக்கவுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் முழக்கம்…

போராட்டம்! போராட்டம்!! சமூகநீதிப் போராட்டம்!  திணிக்காதே திணிக்காதே!  ‘நீட்’ தேர்வைத் திணிக்காதே! பாரா மெடிக்கல் படிப்புகளிலும் ‘நீட்’ தேர்வைத் திணிக்காதே!

பிசியோதரபி படிப்புக்கு  நீட் எதற்கு? நீட் எதற்கு? ஆக்குபேசனல் தெரபிக்கு நீட் எதற்கு? நீட் எதற்கு? பறிக்காதே பறிக்காதே! மருத்துவக் கனவைப் பறிக்காதே! எத்தனைப் பலிகள்? எத்தனைப் பலிகள்?

எட்டுக்கோடி தமிழர்களின் ஒற்றைத் தீர்ப்பு ‘நீட்’ ஒழிப்பு! சட்டமன்றத் தேர்தலிலும்  நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவுக்கு மூக்கறுப்பு! நீட்டுக்கு எதிரான மக்கள் தீர்ப்பை மிதிப்பதா?  சட்டமன்றம் நிறைவேற்றிய  சட்டத்தை ஏற்க மறுப்பதா?

மருத்துவக் கனவைப் பறித்தது போல் துணை மருத்துவப் படிப்புகளுக்கும் கல்லூரி வாயிலை அடைக்காதே! தூண்டாதே தூண்டாதே!  ஒன்றிய அரசே தூண்டாதே!  மாணவர் போராட்டத்தைத் தூண்டாதே!

பள்ளிக்கல்வியை ஒழிக்க நினைக்கும்  கார்ப்பரேட்களின் கைக் கூலியே! கல்வித் துறையில் தனியார் மயத்தைத்  திணிக்கும் கள்ளக் கூட்டாளியே! பா.ஜ.க.வே! ஆர்.எஸ்.எஸ்.சே!மக்கள் விரோத ஒன்றிய அரசே!

ஓயாது ஓயாது! பாரா மெடிக்கல் படிப்புகளுக்கும் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கும் நீட் தேர்வை ஒழிக்கும் வரை  எங்கள் போராட்டம் ஓயாது! என கழகத் தோழர்கள் ஒலி முழக்கம் எழுப்பினர்.

கண்டன உரை

இதைத் தொடர்ந்து திராவிடர் கழக மாநில கிராமப்புற பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடிக.அன்பழகன், தோழர் மணியரசன் (புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி), தேனி அரசு செவிலியர் கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் வி.கே.ஆர். பெரியார் செல்வி, திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினர்.

நிறைவாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் ஆர்ப்பாட்டக் கண்டன உரையாற்றினார். ஆவடி மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சி. அறிவுமதி இணைப்புரை வழங்க, மாநில திராவிட மாணவர் கழக விளையாட்டு அணி அமைப்பாளர் ம. பூவரசன் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக வழக்குரைஞரணித்  தலைவர் த. வீரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு. குமாரதேவன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், மேனாள் துணைப்பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, சி.வெற்றிச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் மயிலாடுதுறை கி. தளபதிராஜ், பெரியார் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வடசென்னை மாவட்டத்தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், தென் சென்னை மாவட்டத்தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி,  தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன்,  திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு. மோகன், மா வட்ட செயலாளர் ந. ராசேந்திரன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர்  வே. பாண்டு, மாவட்டச் செயலாளர் தமிழினியன், காப்பாளர் ஆர்.டி. வீரபத்திரன், ஆவடி மாவட்ட தலைவர் வெ. கார்வேந்தன், செயலாளர் க. இளவரசன்.

மகளிரணி:  சுதா மதியழகன், ஆனந்தி, தங்க. தனலட்சுமி, த.மரகதமணி, இளவரசி, உத்திரகுமாரி,  ஆனந்தி, குயில்மொழி,காவியா, கவிநிஷா, மகிழினி, அமலசுந்தரி, அஞ்சலா, இரா.சு.உத்ரா, பெ. அனுசுயா, புஷ்பா, நன்மொழி.

இளைஞரணி – மாணவர் கழகம்: மு.சண்முகப்ரியன், பழனிசாமி, ராஜா, யாழ்.திலீபன், முரளி கிருஷ்ணன், சின்னத்துரை ச. சாஜய், க.கலைமணி, ஜெ.ஆனந்த்,நாகராஜ், அன்புமதி, அன்புச்செல்வி, வெங்கடேசன்.

தாம்பரம் மாவட்டம்:  தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், பழனிசாமி, கன்னடபாளையம் இராமச்சந்திரன், கு.ஆறுமுகம், சீர்காழி இராமண்ணா, அனகை சண். சரவணன், அ.கருப்பையா,வழக்குரைஞர் இரா. உத்திரகுமாரன், சந்திரசேகர், தனசேகர், மதியழகன்.

ஆவடி மாவட்டம்:  பூவை. க.தமிழ்ச்செல்வன், பெரியார் மாணாக்கன்,    தங்கதுரை, துரை. ராவணன், அய். சரவணன், சி. வச்சிரவேல், வி. வெங்கடேஷ், சுந்தர்ராஜன், பாசறை கோபால், கோ.முருகன், தமிழ்மணி,பன்னீர்செல்வம், அ.வெ. நடராசன், சந்திரபாபு, இரணியன், ஜெயராமன், சமத்துவமணி, சே.இளம்சேகுவரா, தேவேந்திரபாபு.

வடசென்னை: நா.பார்த்திபன்,பா.கோபாலகிருஷ்ணன், ச.இராசேந்திரன், அயன்புரம் சு. துரைராசு, கோ.தங்கமணி,  சி.பாசுகர், சி. காமராசு, க. இளவன், பாலமுருகன், பா.பார்த்திபன்.

தென் சென்னை :   டி.ஆர்.சேதுராமன்,  மு.சண்முகப்பிரியன்,  கரு.அண்ணாமலை, கோ.வீ.ராகவன்,  சா.தாமோதரன், ந.இராமச்சந்திரன், பா.இராசேந்திரன், எம்.டி.சி இரா.இரவி, டைலர் கண்ணன், த.ராஜா, மயிலை பாலு.

தோழர்கள்:  தமிழமுதன், (வேளச்சேரி),   செந்துறை மதியழகன், திருப்பூர் வழக்குரைஞர் க. பாண்டியன்,   மதுரை ராமச்சந்திரன்,  அருண், மாறன், இளவல்.

- விடுதலை நாளேடு, 01.02.26


யூ டியூப் காணொலி



வியாழன், 18 ஜூலை, 2024

நீட் தேர்வு ஒழிப்பு இருசக்கர வாகனப் பேரணியின் நான்கு, அய்ந்தாம் பயணக்குழுக்களின் முதல் நாள் மாட்சிகள்!

 

விடுதலை நாளேடு

5ஆம் குழு (சென்னை முதல் சேலம் வரை)

சென்னை, ஜூலை 14- சென்னையிலிருந்து இளைஞரணி, திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் 21 வாகனங்களில் பெரியார் திடலில் இருந்து புறப்பட்ட அய்ந்தாம் குழு, புரசை தாணா தெரு, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் பரப்புரையில் ஈட்டுபட்டவாறே சென்னை அடையாறு இந்திரா நகர் பிற்பகல் 2:30 மணிக்கு வந்தடைந்தனர். தென் சென்னை மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் மு.சண்முகப்பிரியன் அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.
தென் சென்னை மாவட்ட இளை ஞரணி தலைவர், வழக்குரைஞர் துரை அருண் நிகழ்ச்சியை தொடங்கிவைத்து உரையாற்றினார். தலைமைக்கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம் நிகழ்ச்சிக்கான நோக்கத்தை எடுத்துரைத்து உரையாற்றினார். தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் முன்னிலை வகித்து உரையாற்றினார்.
பரப்புரை பயண குழுத் தலைவர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், பரப்புரை பயண சொற்பொழிவாளர், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உரையாற்றி பயணத்திற்கான நோக்கத்தை மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

சென்னை மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சா.மாரிமுத்து நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
அடுத்து தரமணிக்குச் சென்ற பயணக்குழு தந்தை பெரியார் நகர் தரமணி கழகக் கொடியை திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஏற்றினார்.
அங்கிருந்து சோழிங்கநல்லூர் மாவட் டம், வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் 4:15 மணிக்கு பயணக்குழு வந்தடைந்தது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு தலைமையில் நடைபெற்றது. 172ஆவது வட்ட தி.மு.க. துணைச் செயலாளர் , உ.திருவேங்கடம். அனைவரையும் வரவேற்றார். மாவட்டக் காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன் நோக்கவுரை ஆற்றினார். திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து சோழிங்கநல்லூர் மாவட்டம், வேளச்சேரி விஜய நகர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இக்கூட்டத்தில் டிசம்பர் 3 இயக்கத் தலைவர் பேராசிரியர் த.மீ.நா.தீபக் கலந்துகொண்டார். மாவட்ட இளைஞரணித் தலைவர் நித்யானந்தம் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். அயந்தாம் பயணக்குழு தாம்பரம் மாவட்டம், பல்லாவரம் பேருந்து நிலையம், அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாம்பரம் நகர செயலாளர் சு. மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாணவரணி செயலாளர் ஜைனுல் கருத்துரை வழங்கினார். திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உரையில், நீட் தேர்வின் கொடுமைகளை விளக்கிப் பேசினார். தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ. நாத்திகன் நன்றி கூறினார். இக்குழுவின் முதல்நாள் பயணம் தாம்பரத்தில் நிறைவு பெற்றது.

நீட் தேர்வை ரத்து செய்! – சமூகநீதி காக்க நீட் தேர்வை ஒழிக்கும் வரை போராடுவோம்! என்ற ஒலி முழக்கங்களுடன் தமிழ்நாட்டின் அய்ந்து முனைத் தாக்குதல்களாக இளைஞர்களின் எழுச்சிகரமான இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம்!

 Published July 14, 2024

விடுதலை நாளேடு

நீட் தேர்வு குறித்து முதல் தகவல் வெளியானதிலிருந்து திராவிடர் கழகம், அதன் தலைவர் அதை ஒழிப்பதற்காக பல்வேறு போராட்டங்களை அறிவித்து நடத்திவருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ஒலித்த இந்த சமூகநீதிக்குரல் இன்று இந்திய துணைக்கண்டமெங்கும் எதிரொலித்திருக்கிறது. நீட் தேர்வை சவப்பெட்டியில் வைத்து அதன் பெட்டியில் கடைசி ஆணி அடிக்கும் வரை ஓயாத எங்கள் அறவழிப்பட்ட பிரச்சாரம் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் ஆணைப்படி திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் தமிழ்நாட்டின் அய்ந்து முனைகளிலிருந்து அய்ந்து போர்ப்படை போர்க்குரல் எழுப்பி சேலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தப் பயணமானது 11.07.2024 வியாழன் அன்று காலையில் தொடங்கிற்று, 15.07.2024 திங்கள் சேலத்தை அடைகின்றனர்.

தமிழ்நாட்டின் 5 முனைகளிலிருந்து 5 குழுக்கள் புறப்பட்டு மொத்தம் 229 இடங்களில் பரப்புரையில் ஈடுபட்டவாறே (11.07.2024) கல்வி வள்ளல் பச்சைத் தமிழர் காமராசர் பிறந்தநாளான 15.07.2024 அன்று மாலை சேலத்தில் சங்கமிக்கிறது. கழகக் கொடிகளுடன் செல்லும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயண நிறைவு விழாவில், சேலம் கோட்டை மைதானத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை ஆற்றுகிறார். நாடாளுமன்ற உறுப்பினர், மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகின்றனர்.

முதல் குழு கன்னியாகுமரியில் தொடங்கி வெண்ணந்தூர் வரை 41 இடங்களில் பிரச்சாரம் செய்தபடியே சேலம் சென்றடைய இருக்கின்றது. இந்தக்குழுவில் 9 இருசக்கர வாகனத்தில் 18 தோழர்கள் பயணம் செய்துகொண்டிருக்கின்றனர். வாகனப் பரப்புரைக் குழுத் தலைவர் இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) சொற்பொழிவாளர் மு.இளமாறன் (சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர்) வாகனப் பரப்புரை ஒருங்கிணைப்பாளர் சு.இனியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
இரண்டாம் குழு இராநாதபுரம் முதல் சேலம் வரையிலுமாக 9 இருசக்கர வாகனத்தில் 1 மகளிர் உள்பட 18 பேர் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். இராமநாதபுரத்தில் தொடங்கி அயோத்தியா பட்டினம் வரை 61 இடங்களில் பரப்புரை செய்தபடியே சேலம் சென்றடைகிறது. வாகனப் பரப்புரைப் பயணக் குழுத்தலைவர் நாத்திக. பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர், கழக சொற்பொழிவாளர் தே.நர்மதா, வாகனப்பரப்புரை ஒருங்கிணைப்பாளர் அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்)

மூன்றாம் குழு புதுச்சேரி முதல் சேலம் வரை 12 இருசக்கர வாகனங்களில் 20 தோழர்கள் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர். இதில் புதுச்சேரியில் தொடங்கி, பாப்பிரெட்டிபட்டி வரை 49 இடங்களில் பரப்புரை செய்துவிட்டு சேலம் சென்றடைகின்றனர். இதில் 12 வாகனங்களில் 20 தோழர்கள் பயணம் செய்துகொண்டிருக்கின்றனர். வாகனப் பரப்புரை பயணக்குழுத் தலைவர் தா. தம்பிபிரபாகரன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர், திராவிடர் கழகம்) ஒருங்கிணைப்பாளர் கோ.வேலு (மாநில இளைஞரணி துணைச் செயலாளர், திராவிடர்கழகம்) சொற்பொழிவாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதினி (துணைப்பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

நான்காம் குழு தாராபுரம் முதல் சேலம் வரையிலுமாக 4 இருசக்கர வாகனத்தில் 7 தோழர்கள் பயணம் செய்து வருகின்றனர். இதில் தாராபுரத்தில் தொடங்கி குள்ளக்கவுண்டனூர் வரை 38 இடங்களில் பிரச்சாரம் செய்தவாறே சேலம் சென்றடைகின்றனர். வாகனப் பரப்புரைப் பயணக் குழுத்தலைவர் த.சிவபாரதி (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) ஒருங்கிணைப்பாளர் மு.வீரமணி (மேட்டுப்பாளையம் மாவட்ட இளைஞரணித் தலைவர், திராவிடர் கழகம்) சொற்பொழிவாளர் தருமபுரி த.யாழ்திலீபன்
அய்ந்தாம் குழு சென்னை பெரியார் திடலில் தொடங்கி தொப்பூர் வரை 40 இடங்களில் பரப்புரை செய்தவாறே சேலம் சென்றடைய இருக்கின்றனர். இதில் 23 இருசக்கர வாகனத்தில் 6 மகளிர் உள்பட 37 பேர் பயணம் செய்து கொண்டிருக்கின்றனர். வாகனப் பரப்புரைப் பயணக் குழுத்தலைவர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர், திராவிடர் கழகம்) ஒருங்கிணைப்பாளர் மா.செல்லத்துரை (மாநில இளைஞரணித் துணைச் செயலாளர், திராவிடர் கழகம்) சொற்பொழிவாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
ஒவ்வொரு இடத்திலும் தோழமைக் கட்சியினர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். சமூகநீதியை சாகடிக்கும் கண்ணிவெடி எனும் தலைப்பிலான நான்கு பக்க துண்டறிக்கை கூடியிருக்கும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. நீட் தேர்வு ஒரு கண்ணிவெடி எனும் தலைப்பிலான 10 ரூபாய் மதிப்பிலான புத்தகம் பொதுமக்களிடையே விற்பனை செய்யப்படுகிறது.