ஆர்ப்பாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆர்ப்பாட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 மே, 2026

இந்தியா முழுமையும் ‘நீட்’ ஒழிக்கப்படும்வரை போராட்டம் தொடரும்! மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் முழக்கம்!


திராவிடர் கழகம்

தமிழ்நாட்டில் தொடங்கிய எந்தப் போராட்டமும்,
இதுவரையில் தோற்றதாக வரலாறே கிடையாது!

திராவிடர் கழகம்

சென்னை, மே 16 ‘‘மாணவர் உரிமை காக்க, மாநில உரிமை காக்க, அரசியலமைப்புச் சட்டத் திரிபுவாதத்தைத் தடுக்க ‘இந்தியா முழுமையும் ‘நீட்’ தேர்வையே முற்றாக ரத்து செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (16.5.2026) தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மருத்துவக் கல்விக்கான தகுதித் தேர்வு என்ற பெயரில், ‘நீட்’ என்ற தேர்வு திணிக்கப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளில், அரியலூர் மாணவி அனிதா தொடங்கி இந்தியா முழுவதும் பல நூறு உயிர்கள் பலியாகியுள்ளன. பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக் கனவு பறிக்கப்பட்டது.

ஆனால், அதன் உண்மை முகம் அநீதியானது என்பது தொடர்ந்து அம்பலப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. ஆனாலும், விடாப்பிடியாக ஒன்றிய
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு ‘நீட்’ தேர்வைத் திணித்துக் கொண்டே இருக்கிறது. ‘நீட்’ நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை என்ற தனி அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் 2026–2027ஆம் கல்வியாண்டில் மருத்துவம் – இளநிலை (எம்.பி.பி.எஸ்.), பல் மருத்துவம் – இளநிலை (பிடிஎஸ்) உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்றது.

நாடு முழுவதும் 552 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 இடங்களிலும் தேர்வு  நடைபெற்றது. மொத்தம் 5,432 மய்யங்களில் தேர்வு நடைபெற்றுள்ளது. இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.

இந்நிலையில், அந்தத் தேர்வின் வினாத்தாள், தேர்வு நடக்கும் முன்பே ராஜஸ்தானில் கசிந்து விட்டதாகப் புகார் எழுந்து, அதை விசாரித்த சி.பி.அய்., வினாத்தாள் கசிந்ததை உறுதி செய்ததையடுத்து, மே 3ஆம் தேதி நடைபெற்ற ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.  மீண்டும் ஒரு தேர்வு (மறு தேர்வு) ஜூன் 21 அன்று நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இது முதல் முறை அல்ல; ‘நீட்’ தேர்வு என்பது, அதைக் கட்டாயப்படுத்திய பா.ஜ.க. அரசு சொன்னதுபோல, ‘தகுதி – திறமையின் அடையாளம்’ அல்ல; மாறாக ஊழலின் ஊற்றுக் கண் என்பதற்கு 10 ஆண்டுகளில் 89 முறை வினாத்தாள் கசிவுகள், 48  முறை மறுதேர்வுகள் நடந்துள்ளன என்பதே சான்று அல்லவா?

இப்போது மீண்டும் ஒரு மறுதேர்வா? ஏறத்தாழ 23 லட்சம் மாணவர்கள் நாடு முழுக்க அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டார்களே, மீண்டும் அந்த நிலை தொடரப் போகிறதா? மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதற்குத்தான் இப்படிப்பட்ட தண்டனைகளா?

இந்த முறைகேடுகள் நடந்ததை ஒப்புக் கொண்டு தேசியத் தேர்வு முகமை இந்தஆண்டு மே 3 அன்று நடைபெற்ற ‘நீட்’ தேர்வை ரத்து செய்துள்ளது. ஒன்றிய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் 22.80 லட்சம் மாணவர்கள், குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்.

ரத்து செய்யப்பட வேண்டியது இந்த ஒரு நாள் நடந்த ‘நீட்’ தேர்வு அல்ல; ஒட்டு மொத்தமாகவே ‘நீட் தேர்வு’ ரத்து செய்யப்பட வேண்டும். மருத்துவக் கல்வி நுழைவுக்கு அந்தந்த மாநிலங்கள் தேர்ந்தெடுக்கும் முறையே அரசியலமைப்புச் சட்டப்படியானது. இந்த குரலை அழுத்தமாக, உரக்க எழுப்ப வேண்டிய கால கட்டம் இது!

இதை வலியுறுத்தி இன்று (16.5.2026) தமிழ்நாடு தழுவிய அளவில் மாவட்டத் தலை நகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஒத்த கருத்துடையோர்களை ஓரணியில் திரட்டி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழகம்

தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளை யாட்டரங்கம் அருகில் இன்று (16.5.2026) காலை 10 மணியளவில்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:

நீட் ஒரு நீண்ட கால நோய். தமிழ்நாட்டினுடைய கல்வியை மட்டுமல்ல, இந்திய நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுடைய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமுதாய மக்களின் கல்வியைப் பறிப்பது உள்பட, அதாவது உயர்ஜாதிக்காரர்கள் மட்டுமே பயன்படக் கூடிய, அவர்களைப் பாதுகாக்கக்கூடிய ஒரு கல்வி முறை மீண்டும் உருவாக்கப்படவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட ஒன்றுதான், நீட் தேர்வாகும்.

மருத்துவக் கல்வியில், தொழிற் கல்வியில் தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அது இந்தியாவிலேயே வியப்படைக்கூடிய மாநிலமாக இருக்கிறது. திராவிடம் அதனைச் செய்து வருகிறது; ‘திராவிட மாடல்’ ஆட்சி இன்னும் வேகமாக அதனை உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது என்பதையெல்லாம் கண்டு, பொறுக்க முடியாதவர்கள் – தந்தை பெரியார் மண்ணிலே மனுதர்மத்திற்கு இடமில்லை; இங்குக் குலதர்மக் கல்வியை இடம்பெறா மல் தடுத்த மண், இந்த மண் என்பதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, நீட் என்ற ஒரு கண்ணி வெடியைப் புதைத்து, நம்முடைய இளம் பிள்ளை களுடைய கனவுகளையெல்லாம் தகர்த்து வரக்கூடியதை எதிர்த்து, இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது காலத்தின் கட்டாயம். அதுமட்டுமல்ல, இதுதான் சரித்திரத்தில் திருப்பு மய்யமும்கூட. தமிழ்நாட்டில் தொடங்கிய எந்தப் போராட்டமும், இதுவரையில் தோற்றதாக வரலாறே கிடையாது. 1952 இல், வகுப்புவாரி உரிமை என்பதை ரத்து செய்கிறோம் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்புக் கொடுத்த பிறகும்கூட, தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணா போன்றவர்களும்,  தனித்து திராவிட இயக்கம்தான் நின்று, இந்தியாவிலே, அதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே இருந்த சமூகநீதி, இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கக்கூடிய அளவிற்குப் பரவலான பலன்  கிடைத்தது.

இங்கே அரசியலுக்கு அப்பாற்பட்டு, அரசியல் நிலைப்பாடுகள் எல்லாம் ஒரு பக்கத்தில் இருந்தாலும், கொள்கைக் கூட்டணி என்பதுதான் மிக முக்கியம். கொள்கைக்காகத்தான் கூட்டணியே தவிர, பதவிக்காக கூட்டணி அல்ல என்பதை உணர்ந்து, திராவிடர் கழகம் வேண்டுகோள் விடுத்த நிலையில், மிகக்குறுகிய காலத்தில் நடைபெறுகின்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் எல்லோரும் பங்கேற்று இருக்கின்றார்கள்.

இவ்வார்ப்பாட்டம் சென்னை தலைநகரிலே மட்டும் நடைபெறவில்லை தோழர்களே, தமிழ்நாடு முழுக்க நடைபெறுகிறது. திருத்தணியில் தொடங்கி, கன்னியாகுமரி வரையில் நடைபெறுகின்றது.

இங்கே எத்தனைக் கட்சித் தோழர்கள் கலந்துகொள்கிறார்களோ, அதேபோல, தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, இப்போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் ஒலி முழக்கங்கள் எழுப்பட்டன. திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதினி வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, பொருளாளர் வீ. குமரேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி, திராவிடர் கழக சட்டத்துறை தலைவர் வழக்குரைஞர் த. வீரசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.செ. கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், மாநில இளைஞரணி இணை செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ்,  மாவட்டத் தலைவர்கள் இரா. வில்வநாதன், எண்ணூர் வெ.மு. மோகன், தாம்பரம், ப.முத்தையன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன், புழல் த. ஆனந்தன், வே. பாண்டு, வெ. கார்வேந்தன், மாவட்ட ச் செயலாளர்கள் செ.ர. பார்த்தசாரதி, ந. இராசேந்திரன், கோ. நாத்திகன், புரசை சு. அன்புச்செல்வன், ஜெ. பாஸ்கரன், க. இளவரசன், க. தமிழினியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

தொடக்க உரை

ஆர்ப்பாட்டத்தின் தொடக்க உரையை திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆற்றினார்.

கண்டன உரை

திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் உமா, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில துணைச் செயலாளர் அரிமா அசாருதீன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.கே ஹரீம், மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். யாக்கூப், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் நிஜாமுதின், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே. சிவா, ம.திமுக.வின் அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் ஆவடி அந்திரிதாஸ்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  பொருளாளரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்புக் குழு தலைவர் மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்  தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் ஆகியோர் ஆர்ப்பாட்ட கண்டன உரையாற்றியதை தொடர்ந்து ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்ட பின்னர் நிறைவாக ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச. பிரின்ஸ் என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்க, தென் சென்னை மாவட்டத்தலைவர் இரா. வில்வநாதன் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர்பாபு, பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், பேராசிரியர் ச.இராஜசேகரன், கவிஞர் கண்மதியன் மற்றும்  திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, எஸ்.டி.பி.அய்., பொதுப் பள்ளிக்கான மாநில மேடை, திராவிட இயக்க தமிழர் பேரவை ஆகிய கட்சிகளின் அனைத்து அணிகளைச் சேர்ந்த தோழர்களும், பொது மக்களும் பெருமளவில் கொடியுடன்  ‘நீட்’ தேர்வை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி எழுச்சி முழக்கமிட்டு பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதியுள்ள ‘‘நீட்’’ தகுதி திறமையின் அடையாளமா? ஊழலின் ஊற்றுக்கண்ணா?’’ என்ற புதிய புத்தகம் ஆர்ப்பாட்டத்தில் வெளியிடப்பட்டது.

 -விடுதலை நாளேடு, 16.05.2026

'நீட்' தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அளவில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் சென்னையில் பங்கேற்ற கழகத் தோழர்கள்

சென்னை, மே 17- “மாணவர் உரிமை காக்க, உரிமை காக்க, அரசியலமைப்புச் சட்டத் திரிபுவத்தைத் தடுக்க இந்தியா முழுமையும் 'நீட்' தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின் சார்பில் 16.5.2026 அன்று தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் எழும்பூர் இராசரத்தினம் விளையாட் டரங்கம் அருகில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற கழகத் தோழர்கள் விவரம் வருமாறு:-

தென் சென்னை

இரா.வில்வநாதன் (மாவட்ட கழகத் தலைவர்), செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்), கோ.வீ.ராகவன் (பொதுக்குழு உறுப்பினர்), டி.ஆர்.சேதுராமன்(துணைத்தலைவர்), பா.இராசேந்திரன்,எம்..டி.சி., ந.மணிதுரை (மாவட்ட இளைஞரணி தலைவர்), பெரியார் யுவராஜ் (இளைஞரணி இளைஞரணி செயலாளர்), பெரியார் யுவராஜ் (இளைஞரணி செயலாளர்) துணைத்தலைவர்), அ.அன்பு (மாவட்ட இளைஞ ராணி துணைத்தலைவர்), கோ.அரிகரன் (இராயப்பேட்டை பகுதி தலைவர்), க.விஜயராஜா (மயிலாப்பூர்), ம.தி.பெரியார் ஆதவன் (மாணவர் கழகம்), ம.தி.பெரியார் இனியன் (மாணவர் கழகம்), மு. ஆனந்தன்.

வட சென்னை

வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட கழகத் தலைவர்), புரசை சு.அன்புச் செல்வன் (மாவட்ட செயலாளர்), நா.பார்த்திபன் (துணைத் தலைவர்), ச.சஞ்சய் (மாணவர் கழகம்), தி.செ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்), ப.கோபாலகிருஷ்ணன், தமிழமு தன், சி.வாசு, கோ.தங்கமணி, யாழ்.பார். அ.செந்தமிழ். வ.கலைச்செல்வன்

தாம்பரம் மாவட்டம்

ப.முத்தையன் (மாவட்ட கழகத் தலைவர்), நாகவள்ளி, ஆ.கருப்பையா, இரா.சு.உத்ரா, மா.குணசேகரன், பொய்யாமொழி, மு.மதியழகன், கண்ணதாசன், சந்திரசேகர் (படப்பை), உத்திரகுமார் (ஊரப்பாக்கம்), சீர்காழி ராமண்ணா, லட்சுமணன் (கிளாம்பாக்கம்), சுரேஷ்

சென்னை மேற்கு மாவட்டம்

கரு.அண்ணாமலை (மாவட்ட கழகத் தலைவர்), க.சுப்பிரமணி (மாவட்ட செயலாளர்), ஜெனார்த்தன், அரும்பாக்கம் சா.தாமோதரன், சங்குநாதன், வழக்குரைஞர் டி.ராஜா, வழக்குரைஞர் அ.அன்பரசன், வழக்குரைஞர் தம்பி சேகுவாரா, அபிநயா, சேகர், மு.ரா.மாணிக்கம், அய்யாதுரை, ஏ.

சோழிங்கநல்லூர் மாவட்டம்

ஆர்.டி.வீரபத்திரன் (காப்பாளர்), வேலூர் பாண்டு (மாவட்ட கழகத் தலைவர்), தமிழினியன் (மாவட்ட செயலாளர்) ஆர்.கலைச்செல்வன் (துணைத் தலைவர்), வே.பா.அறிவன் (வழக்குரைஞர் அணி)

ஆவடி மாவட்டம்

கார்வேந்தன் (மாவட்ட கழகத் தலைவர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்), அ.வெ.நடராசன், துரை.முத்து கிருஷ்ணன், ஆவடி சுந்தரராஜன், வேல்முருகன், கொரட்டூர் பன்னீர்செல்வம், பாடி இராவணன், மணிவண்ணன், அம்பத்தூர் சரவணன், ரகுபதி, அருள்தாஸ், ரவிச்சந்திரன், சங்கர், சமத்துவ, சங்கர், மணி உயிராட்சல், திராவிடமணி, வெங்கடேசன், வேல்சாமி, ஆவடி தமிழ்மணி, பிரதாப், முருகன், கார்த்திகேயன், பூவை மாணாக்கன்,

மகளிரணி

ச.இன்பக்கனி, இறைவி, பெரியார்செல்வி, அஜந்தா, செ.பெ.தொண்டறம், தேவ.நர்மதா, கவுரி, ரம்யா, தமிழ்ச்செல்வி, தனுசிறி, ஜெனிதா, மனோஜ், த.மரகதமணி, ஆனந்தி, மெர்சி, அமலசுந்தரி, கவிநிஷா, பாக்கிய லட்சுமி, அன்பு, மணி, வி. பசும்பொன், வெற்றி, பூவை.செல்வி, குயில்மொழி, கா.சமிக்ஷா, கா.செம்மொழி, சமத்துவமணி, தேன்மொழி, அன்புச்செல்வி.

 -விடுதலை நாளேடு, 17.05.2026


நீட் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் 
                                                               யூ டியூப் காணொலி


நீட் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் 

16.05.26

கலந்துகொண்ட தென் சென்னை மாவட்டத் தோழர்கள் பட்டியல் 


இரா.வில்வநாதன், (மாவட்ட தலைவர்)

செ.ர.பார்த்தசாரதி ,(மாவட்ட செயலாளர்)) 

கோ.வீ.ராகவன்(பொதுக்குழு உறுப்பினர்),

டி.ஆர்.சேதுராமன்(துணைத்தலைவர்)

பா.இராசேந்திரன்,எம்..டி.சி.

ந.மணிதுரை (மாவட்ட இளைஞரணி தலைவர் ) 

பெரியார் யுவராஜ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்)

ச.மகேந்திரன் (மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ) 

அ.அன்பு (மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ) 

கோ.அரிகரன்(இராயப்பேட்டை,பகுதி தலைவர்)

க. விஜயராஜா (மயிலாப்பூர்)

வி.வளர்மதி,(மாவட்ட மகளிரணி தலைவர்)

மு.பவானி,(மாவட்ட மகளிர் பாசறை தலைவர்)

பி.அஜந்தா (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்) 

ம.தி.பெரியார் ஆதவன் (மாணவரணி)

ம.தி.பெரியார் இனியன்(மாணவரணி)

மு. ஆனந்தன்


வியாழன், 5 மார்ச், 2026

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சியைக் கண்டித்து சமூகநீதிக்கான பெரும் போராட்டத்தில் பங்கேற்றோர்




சென்னை, மார்ச் 5– ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. ஆட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறித்து அதிகாரப் பதவிகளை உயர்ஜாதியினரின் ஏகபோகமாக்கும் அநீதியைக் கண்டித்து 3.3.2026 அன்று சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் விவரம் வருமாறு:-

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், மாநில கழக மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில கழக கிராமப்புற பிரச்சார செயலாளர் முனைவர் அதிரடி அன்பழகன், துணைப் பொதுச் செயலாளர்கள் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், பொறியாளர் ச.இன்பக்கனி, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்கள் செ.பெ.தொண்டறம், பொறியாளர் தேவ.நர்மதா..

வடசென்னை

மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்ட கழகச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், காப்பாளர் கி.இராமலிங்கம், தி.செ.கணேசன், நா.பார்த்திபன், சி.பாசுகர், ப.கோபாலகிருஷ்ணன், அயன்புரம் துரைராசு, ஆ.பாஸ்கர், புரசை பாலா, இரா.எம்ரோஸ், ஓட்டேரி சேகர், பழ.சேரலாதன், வழக்குரைஞர் ஜெ.துரை, சி.காமராஜ், ஓ.இராமச்சந்திரன், சி.சித்தார்த்தன், வ.தமிழ்ச்செல்வன், அ.புகழேந்தி, பா.பார்த்திபன், சஞ்சய், பார்த்தீஸ்வரன், விஸ்வா, கோகுல், ச.விஜய், இரா.அருள், ம.பூவரசன், சி.முரளிகிருஷ்ணன்.

தென் சென்னை

மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட கழகச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,கோ.வீ.ராகவன், மு.சண்முகப்பிரியன், இரா.மாரிமுத்து, ந.இராமச்சந்திரன், ச.மாரியப்பன், நுங்கம்பாக்கம் சஞ்சய், ச.ஆனந்தன், பா.இராசேந்திரன்,எம்..டி.சி, ச.மகேந்திரன், அ.அன்பு, எம்.ஆனந்தன், உதயசூரியன், எஸ்.அப்துல்லா, ச.சந்தோஷ், வே.சித்தார்த்தன்.

மேற்கு சென்னை

மாவட்ட கழகத் தலைவர் கரு.அண்ணாமலை, மாவட்டக் கழகச் செயலாளர் க.சுப்பிரமணியன், நெய்வேலி வெ.ஞானசேகரன், மு.ரா.மாணிக்கம், அரும்பாக்கம் தாமோதரன், ச.ஜனார்த்தனன், சு.ஜெயசீலன், ஈக்காட்டுத்தாங்கல் மு.சேகர், அருள், தம்பி சேகுவாரா, ஜான்.

தாம்பரம்

மாவட்டக் கழகத் தலைவர் ப.முத்தையன், மாவட்ட கழகச் செயலாளர் கோ.நாத்திகன், வழக்குரைஞர் ஆர்.உத்திரகுமாரன், சு.மோகன்ராஜ், கருப்பையா, குணசேகரன், சன் சரவணன், இர.சிவசாமி, கார்த்திக், பழனிசாமி, மதியழகன், தனசேகரன், ராமண்ணா, ஆறுமுகம், பாலமுரளி, ஆதித்யா.

ஆவடி

மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன், மாவட்டக் கழகச் செயலாளர் க.இளவரசன், ரகுபதி, பூவை.தமிழ்ச்செல்வன், கோ.முருகன் இ.தமிழ்மணி, வேல் முருகன், பெரியார் மாணாக்கன், சுந்தர்ராஜ், சு.வெங்கடேசன், இனியன், நன்னன், சேத்பட் நாகராஜ், சதீஷ், கண்ணன், முகபேர் முரளி, தங்க ரவி, அ.சரவணன், பாசறை கோபால், பட்டரவாக்கம் ரவிச்சந்திரன், ஆ.வெ.நடராசன், முத்துகிருஷ்ணன், உடுமலை வடிவேல், வேல்சாமி, இரணியன், பன்னீர்செல்வம், சி.வச்சிரவேல், ஆதிரன், அண்ணாதுரை.

கும்மிடிப்பூண்டி

மாவட்ட கழகத் தலைவர் புழல் ஆனந்தன், வடகரை ஜெகத் விசயகுமார், வடகரை உதயக்குமார், பொன்னேரி அருள், சக்கரவர்த்தி, கஜேந்திரன், பெரியபாளையம் ஆகாஸ், அருணகிரி, செல்வராஜ், க.ச.க.இரணியன்.

சோழிங்கநல்லூர்

மாவட்ட கழகத் தலைவர் வேலூர் பாண்டு, மாவட்ட கழக செயலாளர் நங்கநல்லூர் தமிழினியன், காப்பாளர் இரா.தே.வீரபத்திரன், பி.சி.ஜெயராமன, நித்தியானந்தன்.

திருவொற்றியூர்

மாவடட கழகத் தலைவர் வெ.மு.மோகன், மாவட்ட கழகச் செயலாளர் ந.இராசேந்திரன், மா.சேகர், கோ.தங்கமணி, சி.வாசு.

மகளிரணி

சி.வெற்றிச்செல்வி, வி.கே.ஆர்.பெரியார்செல்வி, பசும்பொன், தங்க.தனலட்சுமி, பூவை செல்வி, வி.வளர்மதி, பி.அஜந்தா, த.மரகதமணி, நர்மதா, அறிவுமதி, சி.மெர்சி ஆஞ்சலாமேரி, சி.அமலசுந்திரி, வி.கே.மகிழினி, அன்புச்செல்வி, கீதா ராமதுரை, சுகந்தி தமிழ்மணி, எல்லம்மாள், தேன்மொழி, வள்ளி, முகபேர் செல்வி, இனியன், நாகவள்ளி, அருணா, மீனாம்பாள், நன்னன், புஷ்பா பன்னீர்செல்வம், நந்தினி அண்ணாதுரை, நதியா, வெண்ணிலா, த.இளவரசி, யாழ் தமிழ், திராவிட எழில்,  வெண்ணிலா, ராணி ரகுபதி (ஆவடி) ஆகியோர் பங்கேற்றனர்.

 - விடுதலை நாளேடு, 5.3.2

போராட்டத்தில் தென் சென்னை மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்டோர் பட்டியல்

1.இரா.வில்வநாதன், (மாவட்ட தலைவர்)

2.செ.ர.பார்த்தசாரதி ,(மாவட்ட செயலாளர்)

3.கோ.வீ.ராகவன்(பொதுக்குழு உறுப்பினர்),

4.மு.சண்முகப்பிரின் (துணைத்தலைவர்)

5.இரா.மாரிமுத்து(இளைஞர் அணி துணைச் செயலாளர்)

6.ந.இராமச்சந்திரன்,

7.ச.மாரியப்பன்

8.நுங்கம்பாக்கம் சஞ்சய்

9.ச.ஆனந்தன்

10.பா.இராசேந்திரன்,எம்..டி.சி

11.ச.மகேந்திரன் (மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ) 

12.அ.அன்பு (மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ) 

13.வி.வளர்மதி,(மாவட்ட மகளிரணி தலைவர்)

14.பி.அஜந்தா (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்) 

15.உதயசூரியன்

16.எஸ்.அப்துல்லா

17.ச.சந்தோஷ்

18.வே.சித்தார்த்தன்

19.ஆ.வீரமர்த்தினி(கழக செயலவைத் தலைவர்) 

20. த.வீரசேகரன் (வழக்குரைஞர் அணி தலைவர்)

21. சே.மெ.மதிவதனி துணைப் பொதுச் செயலாளர்)



,


செவ்வாய், 3 மார்ச், 2026

சென்னையில் ‘சாஸ்திரிபவன்’ முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்: தமிழர் தலைவர் ஆசிரியர் உள்பட தோழர்கள் கைது!



சமூகநீதிக்கான பெரும் போராட்டம் தமிழ்நாடு அளவில்!
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். பதவிகளில் பார்ப்பனர்– உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தைக் கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
57 ஆவது முறையாகக் கைது!

சென்னை, மார்ச் 3- ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறித்து அதிகாரப் பதவிகளை உயர்ஜாதியினரின் ஏகபோகமாக்கும் அநீதியைக் கண்டித்து இன்று (3.3.2026) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

தொடக்கத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆரப்பாட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காவல் துறை யினரால் கைது செய்யப்பட்டார். அவர் கைதாவது 57 ஆவது முறையாகும்.

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தந்த தகவலின்படி, இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), இந்திய அயல் தொடர்புப் பணி (IFS) உள்ளிட்ட அகில இந்திய சேவைகளில் அனுமதிக்கப்பட்ட மொத்தப் பணியிடங்கள் மற்றும் தற்போதைய பணியில் உள்ள அதிகாரிகள் பற்றிய சேவை வாரியான, மாநில வாரியான விவரங்கள் பின்வருமாறு:

மொத்தம் அனுமதிக்கப்பட்டுள்ள 6,877 இந்திய ஆட்சிப் பணி, 5,099 இந்திய காவல் பணி, 3,193 இந்திய அயல் நாட்டுப் பணி ஆகியவற்றில் முறையே 5,577, 4,594, 2,164 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

கடந்த அய்ந்து ஆண்டுகளில் 2020 முதல் 2024 வரை நடத்தப்பட்ட குடிமைப் பணி தேர்வுகளில் நேரடி நியமனமாக IAS, IPS, IFS சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள பட்டியலின்படி, அட்டவணை ஜாதி  (SC), அட்டவணை பழங்குடி (ST), பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (OBC) சார்ந்த அதிகாரிகளின் எண்ணிக்கை யும் தரப்பட்டுள்ளன.

01.01.2025 நிலவரப்படி, IAS,. IPS, IFS சேவை களில் மாநிலக் கட்டமைப்பு வாரியாக உள்ள காலிப் பணியிட விவரங்கள் சிவில் லிஸ்ட் (Civil List) அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 1,300 இந்திய ஆட்சிப் பணியிடங்களும், 505 இந்திய காவல் பணியிடங்களும், 1,029 இந்திய அயலுறவுப் பணியிடங்களும் காலியாக இருப்பதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய சேவைகளில் சமூக நீதி, சமச்சீர் பிரதிநிதித்துவம் மற்றும் நிர்வாகத் திறன் ஆகியவை குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், இந்தத் தகவல்கள் அரசின் அதிகாரப்பூர்வ பதிலாகப் பதிவாகியுள்ளன.

ஒன்றிய அரசு தந்துள்ள இந்த தகவல்களின்படி, சமூகநீதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அய்.ஏ.எஸ்.சில் 8 சதவீதம், அய்.பி.எஸ்.சில் 10 சதவீதம், அய்.எஃப்.எஸ்.சில் 17.28 சதவீதம் மட்டுமே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவு அதிகாரிகள் இருப்பதும் எஞ்சியுள்ள 82 சதவீதம் முதல் 92 சதவீதம் வரையிலான இடங்கள் பார்ப்பனர் உள்ளிட்ட உயர்ஜாதியினரால் அபகரிக்கப்பட்டிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவின் அதிகாரப்பிடி இன்னும் பார்ப்பனர்களின் கைகளில்தான் இருக்கிறது என்ற சுடும் உண்மையை ஒளிக்கப் பார்க்கிறார்கள்.

இந்தியாவின் திட்டங்களை வகுக்கும் பிரதமர் அலுவலகத்தின் அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 90 சதவீதத்திற்கும் மேல் பார்ப்பனர்களும், உயர் ஜாதியினரும்தான் என்கிறார்கள் தகவலறிந்த வட்டாரத்தினர்.

பார்ப்பன – உயர்ஜாதி ஆதிக்கத்தைப் பாரீர்!

2022 ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, 75 அமைச்சகம் மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றும் செயலாளர்கள், இணைச் செயலாளர்களின் எண்ணிக்கை 322 பேர்.
இதில்,
எஸ்.சி (பட்டியல் ஜாதியினர்) – 16
எஸ்.டி (பழங்குடியினர்) – 19
ஓ.பி.சி (பிற்படுத்தப்பட்டோர்) – 39
மட்டும் தான்!
உயர் அதிகாரமிக்க செயலாளர்கள் என்று மட்டும் எடுத்துக்கொண்டால்,
2019-ஆம் ஆண்டு நிலவரப்படி,
மொத்தமுள்ள 89 செயலாளர்களில்,
பழங்குடியினர் (ST) – 3
ஒடுக்கப்பட்டோர் (SC) – 1
இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) – 0
ஆம், ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டவர் இல்லை. ஒரே ஒருவர் தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்!

இந்தியாவின் உயர் அதிகாரம் அனைத்தும் பார்ப்பனர், உயர்ஜாதியினரின் கைகளிலேயே இருக்கிறது என்பதற்கு இதற்குமேல் என்ன ஆதாரம் வேண்டும்! பாரீர், பாரீர்! பார்ப்பன உயர்ஜாதி ஆதிக்கத்தைப் பாரீர்!

எனவே, சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வரும் இந்த ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து இன்று (3.3.2026) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகத் தோழர்கள் ஒன்றிய அரசின் அலுவலகங்கள் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

தமிழர் தலைவர் பங்கேற்பு

சென்னையில் இன்று (3.3.2026) காலை 11 மணியளவில் ஒன்றிய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற பெருந்திரளான ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கண்டன முழக்கங்களை ஒலித்து கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், காவல் துறையினரால் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கைது செய்யப்பட்டார்.

காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட தமிழர் தலைவரும், கழகத் தோழர்களும் முதற்கட்டமாக ஷெனாய் நகர் சமூக நலக் கூடத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.

தமிழ்நாடு

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, துணைப் பொதுச் செயலாளர்கள் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், நெய்வேலி ஞானசேகரன், பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், சி.வெற்றிச்செல்வி, பொறியாளர் ச.இன்பக்கனி க.பெரியார் செல்வி, பசும்பொன் உள்ளிட்டோர் மற்றும் வடசென்னை, தென்சென்னை, தாம்பரம், ஆவடி மாவட்டக் கழக நிர்வாகிகள் – தோழர்கள் பெருந்திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட
ஒலி முழக்கங்கள்!

வாழ்க வாழ்க வாழ்கவே சமூகநீதிப் போராளிகள் வாழ்கவே! வெல்லட்டும்! வெல்லட்டும்! சமூகநீதி வெல்லட்டும்! வீழட்டும்! வீழட்டும்! ஆரிய ஆதிக்கம் வீழட்டும்! உறுதி செய், உறுதி செய்! ஒன்றிய அரசே உறுதி செய்! உயர் அதிகாரப் பதவிகளில் ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை உறுதி செய்! தேவை! தேவை! அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை!

தமிழ்நாடு

 

ஒன்றிய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அரசே! ஏமாற்றாதே, ஏமாற்றாதே! இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் ஏமாற்றாதே, ஏமாற்றாதே! எங்கே எங்கே இடஒதுக்கீடு? உயர் பதவிகளில் இடஒதுக்கீடு! அமல்படுத்து! அமல்படுத்து! மண்டல் கமிஷன் பரிந்துரையை   முழுமையாக அமல்படுத்து!

நடைமுறைப்படுத்து! நடைமுறைப்படுத்து! இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்து! உயர் அதிகாரப் பதவிகளில் ஒடுக்கப் பட்டோருக்கும்,    பிற்படுத்தப் பட்டோருக்கும் சட்டப்படி இடஒதுக்கீட்டை  முழுமையாக வழங்கிடு!

ஒன்றிய அரசே, ஒன்றிய அரசே! வெளியிடு, வெளியிடு! வெள்ளை அறிக்கை வெளியிடு! ஒன்றிய அரசின் பதவிகளில் உயர் அதிகாரப் பதவிகளில் இடஒதுக்கீட்டு விவரங்களை முழுமையாக வெளியிடு!

 

அமைத்திடு, அமைத்திடு! சமூகநீதியைக் கண்காணிக்க அதிகாரமிக்க ஆணையத்தை அமைத்திடு, அமைத்திடு!       ஒன்றிய அரசே அமைத்திடு!

பின்பற்று! பின்பற்று! திராவிட மாடலைப் பின்பற்று! ஒன்றிய பாஜக மோடி அரசே! சமூகநீதியை நிலைநாட்டுவதில்   திராவிட மாடலைப் பின்பற்று! கற்றுக் கொள்! கற்றுக்கொள்!     பெரியார் மண்ணாம் தமிழ்நாட்டிலிருந்து ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதியைக் கற்றுக் கொள்!

 

EWS என்ற பெயரால் 10 சதவிகித இடங்களை அபகரிக்கும் பார்ப்பனச் சதியை முறியடிப்போம், முறியடிப்போம்! எங்கள் தந்தை பெரியாரும் பாபாசாகேப் அம்பேத்கரும் தமிழர் தலைவர் ஆசிரியரும் பெற்றுத் தந்த சமூகநீதியை அழிக்கத் துடிக்கும் ஆரியத்தை விடமாட்டோம், விடமாட்டோம்! போராடுவோம், வெற்றிபெறுவோம் வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!

தமிழ்நாடு

ஞ

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

பாரா மெடிக்கல் படிப்பிலும் சமூகநீதியை ஒழிக்கும் ‘நீட் தேர்வு திணிப்பா?’ கண்டன ஆர்ப்பாட்டம்


ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியை கண்டித்து
தமிழ்நாடு முழுவதும் திராவிட மாணவர் கழகம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னையில் கழக துணைத் தலைவர் கண்டன உரையாற்றினார்

திராவிடர் கழகம்திராவிடர் கழகம்

சென்னை, பிப்.1 மருத்துவக் கல்லூரியில் ‘நீட்’டைத் திணித்து சமூகநீதிக்குக் குழி தோண்டியது போதாதென்று, பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வு என்பது முற்றிலும் சமூகநீதியை ஒழிப்பதே! இதனைக் கண்டித்தும், ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க., அரசின் சூழ்ச்சியை முறியடிக்கும் வகையிலும் திராவிட மாணவர் கழகம் சார்பில் நேற்று (31.1.2026) தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கண்டன உரையாற்றினார்.

வரும் கல்வியாண்டு முதல் இளங்கலை பிசியோ தெரபி (B.P.T.) மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி (B.OT) ஆகிய இரண்டு பட்டப் படிப்புகளில் சேர்வதற்குத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (Neet) பங்கேற்பதைக் கட்டாயமாக்கி தேசியத் துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (NCAHP) அறிவித்துள்ளது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சி காலத்தில்தான் தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளும், அதன் காரணமாக உருவாகும் ஆயிரக்கணக்கான மருத்துவர்களும்,  தமிழ்நாட்டின் அரசு மற்றும் தனியார் துணை மருத்துவப்படிப்புகளில் பயிலும் மாணவர்களும்தான் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்ட மைப்புப் பலமாக இருப்பதற்கான அடிப்படைக் காரணம்.

கிராமப்புற மாணவர்களின்…

கிராமப்புறங்களிலிருந்தும், ஏழை – எளிய குடும்பங்களிலிருந்தும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்தும் ஏராளமானோர் துணை மருத்துவப் படிப்புகளில் இணைந்து படித்து, பயிற்சி பெற்று உரிய தகுதியுடன் மருத்துவப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இலவசமாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கும் பள்ளிக் கல்வியை முக்கியமற்றதாக்கி, லட்சக்கணக்கில் பணம் கொடுத்துப் பயில வேண்டிய –தனியார் பயிற்சி மய்யங்களுக்கு ஆள் பிடித்துவிடும் வேலையைத் தான் ‘நீட்’ தேர்வு செய்துகொண்டிருக்கிறது.

இன்றும் ‘நீட்’ என்னும் மருத்துவக் கல்வித் தடையைத் தகர்க்கத் தமிழ்நாடு போராடிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இத்தகைய நுழைவுத் தேர்வை வேளாண் கல்லூரிகளுக்கு கொண்டு வருவதற்கும் இந்திய ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது.

மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு காரணமாக இணைய முடியாத சூழலில் இருந்தவர்கள், பாரா மெடிக்கல் சர்வீசஸ் எனப்படும் துணை மருத்துவப் படிப்புகளில் இணைந்து மருத்துவத் துறைக்கு சேவையாற்றி வந்தனர்; தற்போது அதனையும் இல்லாதொழிக்க ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அரசு சூழ்ச்சி செய்கிறது.

‘நீட்’ தேர்வுக்கான காரணங்கள் பொய்

‘நீட்’ தேர்வைக் கொண்டு வரும் போது அதற்கான காரணங்கள் என்றும், நியாயங்கள் என்றும் ஒன்றிய பா.ஜ.க. அரசு எவற்றையெல்லாம் சொன்னதோ, அவையெல்லாம் பொய் என்பது அப்பட்டமாக அவர்களாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்தான் பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வை ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். –  பா.ஜ.க. அரசு கொண்டு வருவதைக் கண்டித்தும், துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 25.1.2026 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

ஏற்கெனவே இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தமிழ்நாடு அரசு எதிர்த்து வரும் நிலையில் BPT, BOT படிப்புகளுக்கும் ‘நீட்’ கட்டாயமாக்கப்பட்டதை ஏற்க முடியாது எனவும், இது ஏழைக் குடும்பங்களை ‘நீட்’ பயிற்சிக்கு செலவழிக்க கட்டாயப்படுத்தும் செயல் என்றும் அக்கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்குகளைக் கண்டித்து திராவிடமாணவர் கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக நேற்று (31.1.2026) தமிழ்நாட்டில் அனைத்துக் கழக மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மருத்துவம், துணை மருத்துவப் படிப்பு மாணவர்கள், ஒத்த கருத்துள்ள கல்வியாளர்கள், அரசியல், சமுதாய அமைப்பினர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வைத் திணித்து சமூகநீதியை ஒழிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து நேற்று (31.1.2026) மாலை 4 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திராவிடர் மாணவர் கழக மாநிலத் துணைச் செயலாளர் செ.பெ. தொண்டறம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா பல்கலைக் கழக திராவிட மாணவர் கழகத் தலைவர் ப. வெங்கடேஷ் வரவேற்புரையாற்றினார். அண்ணா பல்கலைக் கழகச்செயலாளர் ரொசாண்டோ, மெட்ராஸ் பல்கலைக் கழக அமைப்பாளர் ஆதித்யலினார்டோ, வடசென்னை மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் டாவின்சி செ.க. புகழேந்தி, அன்புமதி, கண்ணம்மா, திராவிட இலக்கியா, நித்தியகுமார், நித்தியபூரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடசென்னை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ச.சஞ்சய் தொடக்கவுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் முழக்கம்…

போராட்டம்! போராட்டம்!! சமூகநீதிப் போராட்டம்!  திணிக்காதே திணிக்காதே!  ‘நீட்’ தேர்வைத் திணிக்காதே! பாரா மெடிக்கல் படிப்புகளிலும் ‘நீட்’ தேர்வைத் திணிக்காதே!

பிசியோதரபி படிப்புக்கு  நீட் எதற்கு? நீட் எதற்கு? ஆக்குபேசனல் தெரபிக்கு நீட் எதற்கு? நீட் எதற்கு? பறிக்காதே பறிக்காதே! மருத்துவக் கனவைப் பறிக்காதே! எத்தனைப் பலிகள்? எத்தனைப் பலிகள்?

எட்டுக்கோடி தமிழர்களின் ஒற்றைத் தீர்ப்பு ‘நீட்’ ஒழிப்பு! சட்டமன்றத் தேர்தலிலும்  நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவுக்கு மூக்கறுப்பு! நீட்டுக்கு எதிரான மக்கள் தீர்ப்பை மிதிப்பதா?  சட்டமன்றம் நிறைவேற்றிய  சட்டத்தை ஏற்க மறுப்பதா?

மருத்துவக் கனவைப் பறித்தது போல் துணை மருத்துவப் படிப்புகளுக்கும் கல்லூரி வாயிலை அடைக்காதே! தூண்டாதே தூண்டாதே!  ஒன்றிய அரசே தூண்டாதே!  மாணவர் போராட்டத்தைத் தூண்டாதே!

பள்ளிக்கல்வியை ஒழிக்க நினைக்கும்  கார்ப்பரேட்களின் கைக் கூலியே! கல்வித் துறையில் தனியார் மயத்தைத்  திணிக்கும் கள்ளக் கூட்டாளியே! பா.ஜ.க.வே! ஆர்.எஸ்.எஸ்.சே!மக்கள் விரோத ஒன்றிய அரசே!

ஓயாது ஓயாது! பாரா மெடிக்கல் படிப்புகளுக்கும் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கும் நீட் தேர்வை ஒழிக்கும் வரை  எங்கள் போராட்டம் ஓயாது! என கழகத் தோழர்கள் ஒலி முழக்கம் எழுப்பினர்.

கண்டன உரை

இதைத் தொடர்ந்து திராவிடர் கழக மாநில கிராமப்புற பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடிக.அன்பழகன், தோழர் மணியரசன் (புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி), தேனி அரசு செவிலியர் கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் வி.கே.ஆர். பெரியார் செல்வி, திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினர்.

நிறைவாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் ஆர்ப்பாட்டக் கண்டன உரையாற்றினார். ஆவடி மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சி. அறிவுமதி இணைப்புரை வழங்க, மாநில திராவிட மாணவர் கழக விளையாட்டு அணி அமைப்பாளர் ம. பூவரசன் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக வழக்குரைஞரணித்  தலைவர் த. வீரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு. குமாரதேவன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், மேனாள் துணைப்பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, சி.வெற்றிச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் மயிலாடுதுறை கி. தளபதிராஜ், பெரியார் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வடசென்னை மாவட்டத்தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், தென் சென்னை மாவட்டத்தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி,  தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன்,  திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு. மோகன், மா வட்ட செயலாளர் ந. ராசேந்திரன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர்  வே. பாண்டு, மாவட்டச் செயலாளர் தமிழினியன், காப்பாளர் ஆர்.டி. வீரபத்திரன், ஆவடி மாவட்ட தலைவர் வெ. கார்வேந்தன், செயலாளர் க. இளவரசன்.

மகளிரணி:  சுதா மதியழகன், ஆனந்தி, தங்க. தனலட்சுமி, த.மரகதமணி, இளவரசி, உத்திரகுமாரி,  ஆனந்தி, குயில்மொழி,காவியா, கவிநிஷா, மகிழினி, அமலசுந்தரி, அஞ்சலா, இரா.சு.உத்ரா, பெ. அனுசுயா, புஷ்பா, நன்மொழி.

இளைஞரணி – மாணவர் கழகம்: மு.சண்முகப்ரியன், பழனிசாமி, ராஜா, யாழ்.திலீபன், முரளி கிருஷ்ணன், சின்னத்துரை ச. சாஜய், க.கலைமணி, ஜெ.ஆனந்த்,நாகராஜ், அன்புமதி, அன்புச்செல்வி, வெங்கடேசன்.

தாம்பரம் மாவட்டம்:  தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், பழனிசாமி, கன்னடபாளையம் இராமச்சந்திரன், கு.ஆறுமுகம், சீர்காழி இராமண்ணா, அனகை சண். சரவணன், அ.கருப்பையா,வழக்குரைஞர் இரா. உத்திரகுமாரன், சந்திரசேகர், தனசேகர், மதியழகன்.

ஆவடி மாவட்டம்:  பூவை. க.தமிழ்ச்செல்வன், பெரியார் மாணாக்கன்,    தங்கதுரை, துரை. ராவணன், அய். சரவணன், சி. வச்சிரவேல், வி. வெங்கடேஷ், சுந்தர்ராஜன், பாசறை கோபால், கோ.முருகன், தமிழ்மணி,பன்னீர்செல்வம், அ.வெ. நடராசன், சந்திரபாபு, இரணியன், ஜெயராமன், சமத்துவமணி, சே.இளம்சேகுவரா, தேவேந்திரபாபு.

வடசென்னை: நா.பார்த்திபன்,பா.கோபாலகிருஷ்ணன், ச.இராசேந்திரன், அயன்புரம் சு. துரைராசு, கோ.தங்கமணி,  சி.பாசுகர், சி. காமராசு, க. இளவன், பாலமுருகன், பா.பார்த்திபன்.

தென் சென்னை :   டி.ஆர்.சேதுராமன்,  மு.சண்முகப்பிரியன்,  கரு.அண்ணாமலை, கோ.வீ.ராகவன்,  சா.தாமோதரன், ந.இராமச்சந்திரன், பா.இராசேந்திரன், எம்.டி.சி இரா.இரவி, டைலர் கண்ணன், த.ராஜா, மயிலை பாலு.

தோழர்கள்:  தமிழமுதன், (வேளச்சேரி),   செந்துறை மதியழகன், திருப்பூர் வழக்குரைஞர் க. பாண்டியன்,   மதுரை ராமச்சந்திரன்,  அருண், மாறன், இளவல்.

- விடுதலை நாளேடு, 01.02.26


யூ டியூப் காணொலி



வெள்ளி, 5 டிசம்பர், 2025

ஆளுநர் ஆர்.என். ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்த தமிழ்நாடெங்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது


திராவிடர் கழகம்

* தமிழர் தலைவரின் 93ஆவது பிறந்த நாளையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். * தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்வப் பெருந்தகை தமிழர் தலைவர் பிறந்தநாளையொட்டி பொன்னாடை அணிவித்து, புத்தகங்களை வழங்கினார். உடன்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன். (சென்னை, 4.12.2025)

திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

சென்னை, டிச.5 தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டின்மீது அவதூறு பரப்பும் வகையில் தீவிரவாதம் தலை தூக்கி நிற்பதாக அபாண்டமாக அவதூறுப் பிரச்சாரம் செய்வதைக் கண்டித்து நேற்று (4.12.2025) தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

‘‘தமிழ்நாட்டில் தேசியப் பாதுகாப்புப் பிரச்சினைகள் உள்ளன. இங்கேயும் தேச விரோத சிந்தனைகளும், தீவிரவாதப் போக்கும் நிலவுகின்றன. இதைச் செய்பவர்கள் எவ்வித நடவடிக்கைகளையும் சந்திக்காமல் திரிகிறார்கள்.

ஆனால், என்.அய்.ஏ. அவர்கள்மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அதைவிட எனக்குத் தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் கலாச்சாரம்தான் கவலையைத் தருகிறது.

தேசத்தின் மற்ற பகுதிகளில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறது. இது நல்லதுஅல்ல’’ என்று ஒரு தனியார் காவித் தொலைக்காட்சிக்குக் கடந்த10 நாள்களுக்கு முன்பு பேட்டி அளித்துள்ளார் ஆளுநர் ஆர்.என். ரவி.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் நடவடிக்கைகளும், பேச்சுகளும் தமிழ்நாடு அரசுக்கும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், விரோதமாக இருப்பது அவர் வந்தது முதலே நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் தங்களது கடுமையான கண்டனத்தை ஆளுநர் ஆர்.என். ரவிக்குத் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு தனக்கு என்ன கட்டளையிட்டதோ, எத்தகைய குழப்பங்களை விளைவிக்க வேண்டும் என்று ஆணையிட்டதோ அவற்றை நோக்கிச் செயலாற்றுவதே தன்னுடைய முதல் கடமை என்று பா.ஜ.க. ஆளுநர் செயல்படுகிறார்.

அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு, தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தைச் சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கும் ஆளுநர் தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் இழித்துரைப்பதையும், பொய்யுரைப்பதையும், தமிழர்களின் சுயமரியாதையைக் குறி வைப்பதையும் ஒரு நாளும் பொறுத்துக் கொள்ள முடியாது. இது தந்தை பெரியாரின் தன்மான திராவிட மண்!

எனவே தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும், தீவிரவாதப் போக்குடையவர்கள், பிரிவினைவாதிகள் என்றெல்லாம் அவதூறு பேசும் ஆளுநரைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் நேற்று (4.12.2025) மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நேற்று 4.12.2025  மாலை5 மணியளவில் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் ஆர்ப்பாட்ட ஒலி முழக்கங்கள் கீழ்கண்டவாறு எழுப்பப்பட்டன.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் மாநில உரிமைகளைக் காப்போம்! கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் ஆளுநர் ரவியை கண்டிக்கிறோம்! தமிழ்நாட்டையும் தமிழர்களையும் இழிவுபடுத்தும் ஆர்.என்.ரவியைக்  கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்!

சிதைக்காதே சிதைக்காதே  நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்காதே! ஒரிசாவிலும் பீகாரிலும் தமிழர்களை இழிவுபடுத்தி ஒற்றுமையைக் குலைப்பவர் பிரதமரா? தமிழ்நாட்டின் வரிப் பணத்தில் சம்பளத்தை வாங்கிக் கொண்டு தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் ஆர்.என்.ரவி ஆளுநரா? ஆபத்து! ஆபத்து! ஆர்.எஸ்.எஸ்.சால் ஆபத்து! இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆர்.எஸ்.எஸ்.- சங் பரிவாரால் பா.ஜ.க.வால் ஆபத்து!

மதக் கலவரங்களை நாட்டில் தூண்டி பயங்கரவாதத்தை வளர்ப்பது யார்? ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க! ஷாகாக்கள் என்னும் பெயரால் வன்முறைப் பயிற்சிகள் தருவது யார்? ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.! திராவிடத்தைக் கொச்சைப்படுத்தி தனித் தமிழைக் கொச்சைப்படுத்தி தமிழ்நாட்டின் சம்பளம் வாங்க வெட்கமில்லையா? வெட்கமில்லையா? ஆர்.என்.ரவியே வெட்கமில்லையா? பொறுக்க மாட்டோம்! பொறுக்க மாட்டோம்! பண்பாட்டுப் படையெடுப்பைப் பொறுக்க மாட்டோம்! பொறுக்க மாட்டோம்! என்ற ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து திராவிடர் கழக கிராமப்புற பிரச்சார குழு செயலாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தின் தொடக்கவுரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து ம.தி.மு.க. எழும்பூர் பகுதிச் செயலாளர் தென்றல் நிசார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சேத்துப்பட்டு இளங்கோ, த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹாஜாகனி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு.செல்வப் பெருந்தகை, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் கண்டன உரைக்கு பின் திராவிடர்  கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆர்ப்பாட்டத் தலைமை கண்டன உரையை நிகழ்த்தினார். திராவிடர் கழக தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில தலைவர் வழக்குரைஞர்
த. வீரசேகரன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி வி. பன்னீர்செல்வம், திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்டத் தலைவர் முத்தழகன்.

மேலும் பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் வேல்.சோ. நெடுமாறன், பேராசிரியர் ச. இராஜசேகரன், திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வழக்குரைஞர் சு. குமாரதேவன்,  கொடுங்கையூர் தே.செ. கோபால் மற்றும் வெற்றிச்செல்வி, சி. காமராஜ், க. பெரியார் செல்வி.

வடசென்னை: மாவட்டதலைவர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை அன்புச்செல்வன், ராஜேந்திரன், செல்லப்பன், மரகதமணி, தங்கமணி, தனலெட்சுமி,  நா. பார்த்திபன், இந்திரா, மாலதி, லட்சுமி, வாணி, பூங்குழலி, நாகமணி, பிரசீனா, அஸ்வின், வழக்குரைஞர் அருண், கலைமணி, ஆனந்தன், மகேஷ், அசோக்குமார், டெய்சன், ஜனார்த்தனன்.

சோழிங்கநல்லூர் மாவட்டம்: மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, மடிப்பாக்கம் ஜெயராமன், ஆர்.டி. வீரபத்திரன், தமிழ் இனியன்,  மணிகண்டன்.

தென் சென்னை: மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, கோ.வீ. ராகவன், மு.ந.மதியழகன், ச.மகேந்திரன், பெரியார் யுவராஜ், இரா.ரவி, ச. மாரியப்பன், எம்.டி.சி. இராஜேந்திரன், ஆட்டோ சேகர், மு.பவானி, வி. வளர்மதி, வி.யாழ்ஒளி, சா.தாமோதரன், பி. அஜந்தா, மா.சண்முகலட்சுமி, த. ராஜா, மு. சண்முகப்பிரியன், நல். இராமச்சந்திரன், கரு. அண்ணாமலை, நுங்கம்பாக்கம் சஞ்சய்.

கும்மிடிப்பூண்டி மாவட்டம்: மாவட்ட தலைவர் புழல் த. ஆனந்தன், இரா.சோமு, மு. உதயகுமார், ஓவியர் ஜனாதிபதி.

ஆவடி மாவட்டம்:  மாவட்டத் தலைவர் வெ. கார்வேந்தன், செயலாளர் க. இளவரசன், க. தமிழ்ச்செல்வன், ஜெயராமன், சுந்தர்ராஜன், அய். சரவணன், பாசறை கோபால், இரணியன்,இராவணன், நாகராசன், வேல்முருகன், டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், தங்கரவி, பூ. இராமலிங்கம், சி.எல். துரை, அ.வெ. நடராசன், ரகுபதி, வெங்கடேசன், மணிமாறன், அன்புச்செல்வி, பசும்பொன், பூவை. செல்வி, உடுமலை வடிவேல்,. செ.பெ. தொண்டறம், சி. வச்சிரவேல், பெரியார் மாணாக்கன், சந்திரபாபு, பகுத்தறிவு,  மோகனப்ரியா.

தாம்பரம் மாவட்டம்: மாவட்டத் தலைவர் பா. முத்தையன், நாத்திகன், சு. மோகன்ராஜ், ம. குணசேகரன், கருப்பையா, எஸ்.ஆர். வெங்கடேசன், உத்ரமணி, உத்ரகுமார், ராமச்சந்திரன், தனசேகர், பாலகிருஷ்ணன், கரசங்கால் கதிர்வேல் ஆகிய கழகத் தோழர்களுடன், தி.மு.க., காங்கிரஸ்,  கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள்,  த.மு.மு. கழகம் என பெருந்திரளான தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

-விடுதலை நாளேடு, 05.12.2025


வியாழன், 9 அக்டோபர், 2025

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!


தமிழ்நாடு

* இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மனதை உலுக்குகின்றன!
* போர் நிறுத்தத்திற்கு ஒன்றிய அரசு முயற்சிக்கவேண்டும்!
காசா மீதான தாக்குதலைக் கண்டித்து
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்!

சென்னை, அக்.8 இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் மனதை உலுக்குகின்றன! போர் நிறுத்தத்திற்கு ஒன்றிய அரசு முயற்சிக்கவேண்டும்! காசா மீதான தாக்குதலைக் கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

காசா இனப்படுகொலகளைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் சென்னை எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் இன்று (8.10.2025) காலை 10.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செய லாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், ம.தி.மு.க. பொருளாளர் செந்திலதிபன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, த.வா.க. தலைவர் வேல்முருகன், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறூப்பினர் உ.வாசுகி, மேனாள் மாநிலச் செயலாளர்கள் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரை யாற்றும்போது,

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரக்கூடிய கண்மூடித்த னமான தாக்குதல்கள், நம் எல்லோருடைய மனதை இன்றைக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய மனது மட்டுமல்ல, உலகத்தையே இன்றைக்கு உலுக்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு

பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களையும், அய்க்கிய நாடுகள் அவையின் கொள்கைகளையும் அப்பட்டமாக மீறும் இந்தத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, மனிதநேய பண்போடு நம்மையெல்லாம் ஒருங்கிணைத்து இந்தக் கண்டன கூட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சார்ந்த அமைப்பு இதை எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கிறது! எழுச்சியோடு என்று சொல்வதைவிட உணர்ச்சியோடு இதை ஏற்பாடு செய்திருக்கிறது!

இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவிற்கும், குறிப்பாக, மாநிலச் செயலாளர் தோழர் சண்முகம் அவர்களுக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த கூட்டத்தில் பங்கெடுத்திருக்கக்கூடிய நாம் மட்டுமல்ல; மனிதநேய சிந்தனை கொண்டிருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதரும் காசாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இனப்படுகொலையை கண்டித்துக் கொண்டிருக்கிறோம்.

பாலஸ்தீன மக்களுக்கு நம்முடைய மனிதாபிமான, மனித உரிமை ஆதரவை மனப்பூர்வமாகநாம் வழங்குகிறோம்.இதுதான் இந்தக் கண்டன இயக்கத்தின் முழக்கமாக அமைந்திருக்கிறது!

50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்

கடந்த ஓராண்டாகவே, காசாவில் இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய தாக்குதல்கள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இதுவரையில், ஏறக்குறைய 11 ஆயிரம் பெண்கள் – 17 ஆயிரம் குழந்தைகள் – 175 பத்திரிக்கையாளர்கள் – 125 அய்.நா. ஊழியர்கள் என்று, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; 26 ஆயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்திருக்கிறார்கள்;ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்; சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஓராண்டில் காசாவின் பெரும்பகுதி அழிக்கப்பட்டுவிட்டது!

ஆனாலும், இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்புக் கொள்கைக்கு எதிராக, பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எல்லோருடைய இதயமும் நொறுங்கி போயிருக்கிறது!

அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொடுமை களுக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டுச் சொல்ல வேண்டும் என்றால்,கடந்த ஜூன் மாதத்தில்,  பட்டினியால் வாடக்கூடிய பாலஸ்தீனர்கள், உணவுப் பொருள் ஏற்றி வரும் லாரியை எதிர்பார்த்துக் காத்திருந்தபோது, 45 பேரை இஸ்ரேல் இராணுவம் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். உணவுக்காக காத்திருந்தவர்களின் உயிரையே பறித்திருக்கக்கூடிய இந்தக் கொடூரத்தை பார்த்து, எல்லோருடைய இதயமும் நொறுங்கி போயிருக்கிறது.

மனித உரிமைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமையான இந்த அநீதிகளைக் கண்டிக்காமல் – அமைதியாக கடந்து செல்ல யாருக்காவது மனது ஒப்புமா?

சில நாள்களுக்கு முன்னால், மற்றொரு செய்தி வந்தது…

காசாவில் மரணத்தின் விளிம்பில் தவித்துக்கொண்டு இருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு வழங்க, உணவுப் பொருள்கள் – மருந்துகள் – குழந்தைகளுக்கான பால் பவுடர்களைக் கொண்டு சென்ற, 47 நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்களைத் தடுத்து கைது செய்திருக்கிறது இஸ்ரேல்.

பன்னாட்டுச் சட்டங்களை மீறும் இதுபோன்ற செயல்களைக் கண்டிக்காமல் நம்மால் இருக்க முடியுமா?

இஸ்ரேல் நடத்திக்கொண்டிருக்கும் இனப்படுகொலை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்!

காசாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இரக்கமற்ற படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திக்கொண்டிருக்கும் இனப்படுகொலை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். இதுதான் இந்தக் கூட்டத்தின் நோக்கமாக அமைந்திருக்கிறது.

இதற்கான முயற்சிகளை, இந்திய ஒன்றி யத்தை ஆளக்கூடிய பா.ஜ.க. அரசு வேகமாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்தக் கூட்டத்தின் மூலமாக எல்லோருடைய சார்பிலும் நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

தாக்குதல்களை நிறுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்!

ஒன்றிய பா.ஜ.க. அரசு, இஸ்ரேல் மற்றும் பிற தொடர்பு டைய நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து, இந்தத் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுத்தாகவேண்டும்.

அய்க்கிய நாடுகள் சபை மற்றும் பிற பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து, காசாவில் அமைதியை நிலைநாட்டவும், மனிதாபிமான உதவிகளை செய்யவும், ஒன்றிய அரசு முயற்சிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

வேறொரு நாட்டு விவகாரமாகப்
பார்க்கக் கூடாது!

மனிதாபிமானம் இருக்கும் எல்லோரும் இதை வேறொரு நாட்டு விவகாரமாக நாம் பார்க்கக் கூடாது.

உலக அமைதி என்பது, எல்லோருக்கும் பொதுவானது! மனித உரிமை என்பதை எல்லோரும் காக்க வேண்டும்! மானுட உயிர்கள் ஒவ்வொன்றும் விலைமதிப்பு இல்லாதது! இந்த மூன்றையும் காக்கின்ற கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது!

இந்த மோசமான நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, உணவு – மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அவசிய உதவிகளும், உடனடியாக  முழுமையாக வழங்கப்பட வேண்டும்.

தெளிவான வாக்குறுதிகள்
வழங்கப்பட வேண்டும்!

பாலஸ்தீனர்களின் மறுவாழ்வுத் திட்டம், காசாவை மறு கட்டமைப்பு செய்வது – மனிதாபிமான உதவிகளை தொடர்ச்சியாக வழங்குவது ஆகியவை குறித்து தெளிவான வாக்குறுதிகள் வழங்கப்பட வேண்டும்!

அனைத்து பணயக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

உலக நாடுகள் முன் வைக்கும் நிபந்தனைகள் – உறுதிமொழிகள், பாலஸ்தீன மக்களுக்கு நன்மை செய்வதாக அமைய வேண்டும்.

இந்த நேரத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை உங்களிடம்நான் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்!

வருகின்ற14 ஆம் நாள், தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற இருக்கிறது.

இந்தக் கூட்டத்தொடரில், காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலைக் கண்டித்தும், அங்கு உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தியும், அதற்கான முயற்சிகளை இந்திய அரசு எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வைத்தும், சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்படும். இந்தத் தீர்மானம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இருக்கும்; அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, அனைத்துக் கட்சியினரும் இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

கடுமையான கண்டனத்தைத்
தெரிவித்துக் கொள்கிறேன்!

இந்த கூட்டம் மூலமாக, காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

அப்பாவி மக்கள் உயிர் இழப்பது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற என் விருப்பத்தை கோரிக்கையாக முன்வைத்து என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

முதலமைச்சர் உரையைத் தொடர்ந்து, காசா இனப்படுகொலையைக் கண்டித்து ஒலிமுழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதனைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

காசாவில் நடக்கும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தாத அய்.நா.வின் போக்கைக் கண்டித்தார். நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவரும் சூழலில், அமைதிக்கான நோபல் பரிசைக் குறிவைத்துத் தான் திடீரென போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுவதாகக் குற்றம் சாட்டினார். காசா மட்டுமல்லாமல், இலங்கையில் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளான போதும் அய்.நா. அமைப்பு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். இது தொடக்கம் தான்; இந்த இயக்கம் காசா மக்கள் மீட்கப்பட்டு, சுதந்திர பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தொடர்ந்து நடைபெறும் என்று உரையாற்றினார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாவட்டத் தலைவர்கள் இரா.வில்வநாதன், ப.முத்தையன், தளபதி பாண்டியன், வே.பாண்டு, மாவட்டச் செயலாளர்கள் செ.ர.பார்த்தசாரதி, கோ.நாத்திகன், புரசை அன்புச்செல்வன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பொதுக்குழு உறுப்பினர் தனலட்சுமி, தங்கமணி, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் காஞ்சி கதிரவன், மு.இரா.மாணிக்கம், உள்ளிட்ட ஏராளமான திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். (தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் முழு உரை நாளை வெளிவரும்.)

- விடுதலை நாளேடு, 8.10.25