சைதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சைதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 ஜூலை, 2024

தென்சென்னை மாவட்ட தி.-க. தலைவர் எம்.பி.பாலு _ வள்ளியம்மாள் ஆகியோரின் செல்வன் பி.அருள் - உமா திருமண வரவேற்பு விழா

இயக்க வரலாறான தன் வரலாறு(239) : அமெரிக்காவில் டாக்டர் டட்லி ஜான்சன் எனக்கு இதய அறுவை சிகிச்சை 4 மணி நேரம் வெற்றிகரமாக செய்தார்!

டிசம்பர் 01-15 2019

அய்யாவின் அடிச்சுவட்டில்…

கி.வீரமணி

தென்சென்னை மாவட்ட தி.-க. தலைவர் எம்.பி.பாலு _ வள்ளியம்மாள் ஆகியோரின் செல்வன் பி.அருள் அவர்களுக்கும், சைதை வினாயகம்_பத்மாவதி ஆகியோரின் செல்வி உமா அவர்களுக்கும் 24.6.1991 அன்று இரவு 7 மணிக்கு சைதை கொத்தவால்சாவடி பி.எஸ்.டி. திருமண மண்டபத்தில் மணமக்கள் வரவேற்பு  விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

  தென் சென்னை மாவட்ட தி.க.தலைவர் எம்.பி.பாலு இல்லத் திருமண வரவேற்பில் ஆசிரியர் மற்றும் மோகனா அம்மையார்

இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள இயலாத நிலையில், அமெரிக்காவிலிருந்து என் சார்பாகவும் என்னுடைய துணைவியார் சார்பாகவும் அமெரிக்காவிலிருந்து வாழ்த்துக் கடிதத்தை எழுதினேன். நான் அமெரிக்காவிலே இருந்தபொழுது அங்கு எனக்கு வந்த ‘விடுதலை’யை படித்தேன். அதில், நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை மணமேடையில் படித்தார்கள் என்கிற செய்தியைப் படித்தேன். தந்தை பெரியாரின் கொள்கைப் பிடிப்பு நம்மை எங்கிருந்தாலும் இணைக்கும் என்று குறிப்பிட்டேன்.

சனி, 8 ஏப்ரல், 2023

ஈழத்தமிழர் _ தமிழக மீனவர் பிரச்சினைக்காக மாபெரும் முழு அடைப்பு! / சைதாப்பேட்டை தேரடித் தெருவில் மாபெரும் பொதுக்-கூட்டம்

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (279)

அக்டோபர் 16-31,2021

ஈழப் படுகொலைக்கு எதிராய் கடைகள் அடைப்பு

கி.வீரமணி

கட்டுரையின் ஒரு பகுதி......

ஈழத்தமிழர் _ தமிழக மீனவர் பிரச்சினைக்காக 6.6.1997 அன்று திராவிடர் கழகம், தமிழ்நாட்டின் எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை இணைத்து மாபெரும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து, அதனை கடைப்பிடிக்கச் செய்தோம். சென்னையில் பல்வேறு பகுதியில் கடைகள், போக்குவரத்துகள் இயக்கப்பட-வில்லை. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஆதரவு தெரிவித்திருந்த தலைவர்கள் பலரும் கைது செய்யப்-பட்டனர். திராவிடர் கழகத் தோழர்களும் முழு அடைப்பில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு கைது ஆனார்கள். பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் மக்களின்றி இயக்கப்பட்டன. சென்னை பெரியார் நெடுஞ்சாலையில் கழகத் தோழர்கள், “கொல்லாதே! கொல்லாதே!’’ ஈழத் தமிழரைக் கொல்லாதே! என குரல் எழுப்பிக் கொண்டு சாலை மறியல் செய்து கழகப் பொறுப்பாளர்களுடன் கைது செய்யப்-பட்டனர்.

மாலை செய்தியாளர்களின் சந்திப்பின்-போது,  தமிழர்களிடையே இந்த முழு அடைப்புப் போராட்டம் ஒற்றுமையை விரிவாக்கி உள்ளது. மாநில அரசால் இன்னும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துச் சாதிக்க முடியும் என்னும் நம்பிக்கையை வலுப்படுத்திவுள்ளது. அமைதியான முறையில் நடைபெற்ற இப்போராட்டத்தில 15,000 பேருக்கு மேல் அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., தி.க., போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டனர். ஈழத்தமிழர் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்திட, தமிழக மீனவர்கள் படுகொலையைத் தவிர்த்திட மத்திய அரசினை மாநில அரசு வற்புறுத்திடவும், நமது தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்தும் மத்திய அரசிடம் வற்புறுத்தி நாடாளுமன்றத்தில் உரத்த குரல் எழுப்பியும் கடமையாற்றிட வேண்டுமென அனைத்துக் கட்சிகளின் சார்பில் செய்தியாளர்களிடம் கூறினேன்.

அதனைத் தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை தேரடித் தெருவில் 17.6.1997 அன்று ஈழத்தமிழர் படுகொலை, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை எதிர்த்தும், விளக்கும் வகையில் மாபெரும் பொதுக்-கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இன உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டம் ஒரு பொதுக்கூட்டமாக இல்லாது, தமிழ்நாட்டுத் தமிழர்களின் தன்மான உணர்வை, மனிதநேய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பார்க்கப்பட்டது. பொதுக்கூட்ட உரையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் மாநில அரசு, மத்திய அரசுக்கு ஈழத் தமிழர் நலனில் மேலும் அழுத்தம் தர வேண்டுமெனப் பேசினார்கள்.

வியாழன், 23 பிப்ரவரி, 2023

பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி. பாலு 91ஆவது பிறந்தநாள்

செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி. பாலு 91 வது பிறந்தநாள் விழா

பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி. பாலு 91 வது பிறந்தநாள்

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி.பாலு அவர்கள் 14.02.2023 நண்பகல் ஒரு மணி அளவில் சைதாப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் 91வது பிறந்தநாளை 'கேக்' வெட்டி குதூகலமாக கொண்டாடினார்.

உறவினர்களும் தோழர்களும் வந்திருந்து வாழ்த்தி சிறப்பித்தனர்.

மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன் மற்றும் அவரின் இணையர் தமிழ்மதி, மாவட்ட துணை செயலாளர் கோ.வீ.ராகவன் ஆகியோர் பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர்.

அனைவருக்கும் பிரியாணி  உணவு வழங்கப்பட்டது.

செவ்வாய், 6 டிசம்பர், 2022

பொதுக்குழு உறுப்பினர் சைதாப்பேட்டை எம்.பி.பாலு - வள்ளியம்மா இணையர் சார்பாக பெரியார் உலகத்திற்கு நன்கொடை

பொதுக்குழு உறுப்பினர் சைதாப்பேட்டை எம்.பி.பாலு - வள்ளியம்மா இணையர் சார்பாக ரூ. 25 ஆயிரம் வழங்கினர்.(2013)

தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் சைதை மு.ந.மதியழகன் - தமிழ்மதி ஆகியோர் பெரியார் உலகத்திற்கு நன்கொடை

தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் சைதை மு.ந.மதியழகன் - தமிழ்மதி ஆகியோர் ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினர்.
(2013)

வழக்கறிஞர் வீரமர்த்தினி - சைதை தென்றல், வழக்கறிஞர் அருள்மொழி குடும்பத்தின் சார்பாக பெரியார் உலகத்திற்கு நன்கொடை

(தென் சென்னை)வழக்கறிஞர் வீரமர்த்தினி - சைதை தென்றல், வழக்கறிஞர் அருள்மொழி  குடும்பத்தின் சார்பாக ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 30.11.2013).

சனி, 3 டிசம்பர், 2022

ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்துக்கு அனுமதி அளித்த ஆளுநர் நிரந்தர சட்டத்துக்கு அனுமதி மறுப்பது ஏன்? கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

வியாழன், 1 டிசம்பர், 2022

ஆன்லைன் ரம்மி சூதாட்ட ஒழிப்புச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்து தமிழர் தலைவர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திங்கள், 17 அக்டோபர், 2022

தென் சென்னையில் விடுதலை வளர்ச்சி குழு -3ன் பொறுப்பாளர் சந்திப்பு நிகழ்ச்சி

15.10.2022 மாலை 7.30 மணி அளவில் தென்சென்னை மாவட்ட  திராவிடர் கழக பொறுப்பாளர் கலந்துரையாடல் கூட்டம்  சைதாப்பேட்டை மானமிகு மு.ந.மதியழகன் இல்லத்தில்  கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் அவர்கள் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது. 

மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன்,  செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, அமைப்பாளர் மு.ந.மதியழகன் மற்றும் துணைத் தலைவர் டி. ஆர். சேதுராமன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.

மாநில அமைப்புச்செயலாளர்கள் ஊமை.செயராமன், பொன்னேரி வி.பன்னீர்செல்வம்,  மண்டல செயலாளர்  தே.செ.கோபால்,  மத்தூர் நிலவன் ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கி சிறப்பித்தார்கள்.

மாவட்ட துணை செயலாளர்கள் கோ.வீ. ராகவன், சா.தாமோதரன், இளைஞரணி மாவட்ட தலைவர் ச. மகேந்திரன், இளைஞர் அணி செயலாளர் ந. மணிதுரை, திருவல்லிக்கேணி பகுதி தோழர் அப்துல்லா ஆகியோர் கருத்துகளை தெரிவித்தனர்.

8.10.2022இல் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தின் முடிவுகளை ஏற்று சிறப்பாக செயல்படுவது என வும் அறிவாசான் தந்தைபெரியார் பிறந்தநாள்விழா, ஆர்.எஸ்.எஸ்.எனும் டிரோசன்குதிரை நூல்அறிமுகவிழா நடத்துவது என்றும்,
மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தியாகராயர்நகர், சேப்பாக்கம், ஆயிரம்விளக்கு, விருகம்பாக்கம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் விடுதலை சந்தாக்களை திரட்டி   வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக   இளைஞர் அணி மாவட்ட தலைவர் ச. மகேந்திரன் அவர்கள் நன்றி கூறினார்.

ஈழப் படுகொலைக்கு எதிராய் கடைகள் அடைப்பு (அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு) (279)

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (279)

அக்டோபர் 16-31,2021

ஈழப் படுகொலைக்கு எதிராய் கடைகள் அடைப்பு

கி.வீரமணி

ஈழத்தமிழர் _ தமிழக மீனவர் பிரச்சினைக்காக 6.6.1997 அன்று திராவிடர் கழகம், தமிழ்நாட்டின் எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை இணைத்து மாபெரும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து, அதனை கடைப்பிடிக்கச் செய்தோம். சென்னையில் பல்வேறு பகுதியில் கடைகள், போக்குவரத்துகள் இயக்கப்பட-வில்லை. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஆதரவு தெரிவித்திருந்த தலைவர்கள் பலரும் கைது செய்யப்-பட்டனர். திராவிடர் கழகத் தோழர்களும் முழு அடைப்பில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு கைது ஆனார்கள். பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் மக்களின்றி இயக்கப்பட்டன. சென்னை பெரியார் நெடுஞ்சாலையில் கழகத் தோழர்கள், “கொல்லாதே! கொல்லாதே!’’ ஈழத் தமிழரைக் கொல்லாதே! என குரல் எழுப்பிக் கொண்டு சாலை மறியல் செய்து கழகப் பொறுப்பாளர்களுடன் கைது செய்யப்-பட்டனர்.

மாலை செய்தியாளர்களின் சந்திப்பின்-போது,  தமிழர்களிடையே இந்த முழு அடைப்புப் போராட்டம் ஒற்றுமையை விரிவாக்கி உள்ளது. மாநில அரசால் இன்னும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துச் சாதிக்க முடியும் என்னும் நம்பிக்கையை வலுப்படுத்திவுள்ளது. அமைதியான முறையில் நடைபெற்ற இப்போராட்டத்தில 15,000 பேருக்கு மேல் அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., தி.க., போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டனர். ஈழத்தமிழர் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்திட, தமிழக மீனவர்கள் படுகொலையைத் தவிர்த்திட மத்திய அரசினை மாநில அரசு வற்புறுத்திடவும், நமது தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்தும் மத்திய அரசிடம் வற்புறுத்தி நாடாளுமன்றத்தில் உரத்த குரல் எழுப்பியும் கடமையாற்றிட வேண்டுமென அனைத்துக் கட்சிகளின் சார்பில் செய்தியாளர்களிடம் கூறினேன்.

அதனைத் தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை தேரடித் தெருவில் 17.6.1997 அன்று ஈழத்தமிழர் படுகொலை, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை எதிர்த்தும், விளக்கும் வகையில் மாபெரும் பொதுக்-கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இன உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டம் ஒரு பொதுக்கூட்டமாக இல்லாது, தமிழ்நாட்டுத் தமிழர்களின் தன்மான உணர்வை, மனிதநேய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பார்க்கப்பட்டது. பொதுக்கூட்ட உரையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் மாநில அரசு, மத்திய அரசுக்கு ஈழத் தமிழர் நலனில் மேலும் அழுத்தம் தர வேண்டுமெனப் பேசினார்கள்.

சனி, 2 ஜூலை, 2022

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் செய்தி எம்பி பாலு அவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

நன்கொடை

படம்: 1 19.06.2022 அன்று செஞ்சியில் நடைபெற இருக்கும் பகுத்தறிவாளர் கழக பொன்விழா   மாநாட்டுக்கு நன்கொடையாக பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் பொறியாளர் கரிகாலன் ரூ 10,000 (ரூபாய் பத்தாயிரம்) த்தை  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். படம்: 2  சைதை எம்.பி. பாலு அவர்களின் 91ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். படம்: 3  தரும. வீரமணி இயக்க இதழ்களுக்கு சந்தா  தொகையினை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை சைதாப்பேட்டை - 04.06.2022)

புதன், 8 ஜூன், 2022

இந்தி எதிர்ப்பு திறந்தவெளி மாநாடு

படம்: 1 இந்தி எதிர்ப்பு திறந்தவெளி மாநாட்டில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் திராவிடர் இயக்கப் போர்வாள் வைகோ, தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோருக்கு புத்தகங்களை வழங்கி சிறப்பிக்கப்பட்டது. படம் 2: நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து புத்தகங்களை வழங்கினார். உடன்: தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாநில அமைப்பு செயலாளர் 

வி. பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே.செ. கோபால் ஆகியோர் உள்ளனர். (சென்னை சைதாப்பேட்டை - 4.6.2022)

திங்கள், 22 மார்ச், 2021

கழகத்தோழர் மு.இரா.இளங்கோ _ சு.கனிமொழி ஆகியோரின் வாழ்க்கைத் துணை ஏற்பு விழா

சென்னை சைதை வர்த்தகர் சங்கக் கட்டடத்தில் 15.8.1995இல் கழகத்தோழர் மு.இரா.இளங்கோ _ சு.கனிமொழி ஆகியோரின் வாழ்க்கைத் துணை ஏற்பு விழாவை தலைமையேற்று உறுதிமொழி கூறச் செய்து நடத்தி வைத்தேன். இந்த மணவிழா ஆடிமாதம், செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் ஜாதி மறுப்பு இணையேற்பு விழாவாக நடைபெற்றது. அந்தப் பகுதியின் முக்கிய கழகப் பொறுப்பாளர்களும், கழகத்தினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி
- உண்மை இதழ் 16 -28. 2. 21