வியாழன், 30 டிசம்பர், 2021

சென்னை மாநிலக் கல்லூரியில் வீசிய பெரியார் சிந்தனை என்னும் பூங்காற்று!

திங்கள், 27 டிசம்பர், 2021

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நினைவு நாள் (டிச.24) தென்சென்னையில் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

         

தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு 24.12.21 காலை எட்டு முப்பது மணி அளவில் தியாகராயநகர் தந்தை பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

                 



24.12.21 முற்பகல் பதினோரு மணி அளவில் தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் அண்ணா மேம்பாலம் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.


24.12.21முற்பகல் 11 .15 மணி அளவில் தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு மயிலாப்பூர் வீர பெருமாள் கோயில் தெரு முனையில் தோழர் யுவராஜ் அவர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கம் செய்யப்பட்டது.

தந்தை பெரியாரின்  நாற்பத்தி எட்டாவது நினைவு நாளை முன்னிட்டு 24.12.21முற்பகல் 11. 45 மணி அளவில் மயிலை லஸ் முனை( கார்னர்) அருகில் தென்சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இன்று(24.12.21) நண்பகல் 12.00 மணி அளவில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு மந்தைவெளி வன்னியம்பதி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
__________________________________________________________________________________
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நினைவு நாள் (டிச.24) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

.........                                                  .......
சமூகநீதிக் காவலர் தலைவர் தந்தை பெரியார் நினைவு நாள் (டிச.24) தமிழ்நாடெங்கும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதன், 22 டிசம்பர், 2021

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உதவியாளராக பணியாற்றிய சண்முகநாதன் அவர்கள் மறைந்தார்

செவ்வாய், 14 டிசம்பர், 2021

சென்னை எம்.ஜி.ஆர். நகர் தோழர் கரு.அண்ணாமலை மகன் அ.அன்பரசன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்ததின் மகிழ்வாக நன்கொடை

விடுதலை சந்தா

சென்னை எம்.ஜி.ஆர். நகர் தோழர் கரு.அண்ணாமலை   மகன் அ.அன்பரசன்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்ததின் மகிழ்வாக தமிழர் தலைவரை சந்தித்து விடுதலை ஓர் ஆண்டு சந்தா வழங்கினார். உடன் தோழர்கள் கரு.அண்ணாமலை, அ.அன்பரசன், பெரியார் மணிமொழியன், மதன்குமார் மற்றும் வில்வநாதன். (பெரியார் திடல்-13.12.2021)

சனி, 11 டிசம்பர், 2021

ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன் இல்ல விழா

 

ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் .தமிழ்ச்செல்வன் - .லலிதா இணையரின் இரண்டாவது மகன் .விக்னேஷ் - .ஜெயந்தி ஆகியோர் இணையேற்பு விழா, 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை மாலையில்வானகரம் ராமசாமி தெருவில் உள்ளசிறீ கிருஷ்ணா திருமண மாளிகையில்திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றதுநிகழ்வில் மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனிபேராசிரியர் சுப.வீரபாண்டியன்சட்டமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணசாமிகாரப்பாக்கம் கணபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்மணமக்கள் சார்பில் விடுதலை ஓராண்டு சந்தா வழங்கப்பட்டது.




தென்சென்னை கழக இளைஞரணி சார்பாக நடைபெற்ற தமிழர் தலைவர் பிறந்த நாள் - சிறப்புக் கருத்தரங்கம்

பி.பாலகிருஷ்ணன் அவர்களின் முதலாம் ஆண்டு (2.12.2021) நினைவாக நன்கொடை

நன்கொடை

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகிய வர்களின் பற்றாளரும், இராணு வத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வருமான சூளைமேடு சவுராஷ்ட்ரா நகர்   பி.பாலகிருஷ்ணன் (வயது 96) அவர்களின் முதலாம் ஆண்டு (2.12.2021) நினைவாக அவரின் மகன்கள் பா.துரைராஜ், ஆடிட்டர் பா.இராஜேந்திரன் (ஓய்வு) ரூ.500, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கியுள்ளனர். மற்றும் நினைவு கூரும் குடும்பத்தினர் மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகள்.

.பாலகிருஷ்ணன் (வயது 97) அவர்கள் மறைவு

  


திராவிடர் கழக நிகழ்ச்சிகளிலும் போராட்டங் களிலும் பங்கேற்றுவரும் சூளைமேடு பிடிசி ராஜேந் திரன் அவர்களின் தந்தையும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் அவர்களின் பற்றாளரும், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான சூளைமேடு சவுராஷ்ட்ரா நகர் 9ஆவது தெருவை சேர்ந்த கோ.பாலகிருஷ்ணன் (வயது 97) அவர்கள் 2.12.2020 அன்று மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். 3.12.2020 அன்று மாலை 3 மணி அளவில் அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்புக்கு: 9710242747.

வள்ளியம்மாள் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நன்கொடை

நன்கொடை

*சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகர் 9ஆவது தெருவைச் சேர்ந்த பா.வள்ளியம்மாள் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (27.6.2021) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது மகன்கள் பா.துரைராஜ், பா.ராஜேந்திரன் மற்றும் மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் சார்பாக ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!


வியாழன், 9 டிசம்பர், 2021

கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி நன்கொடை

 சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகரைச் சேர்ந்த கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையை அவரது நினைவாக கணவர் பா.இராசேந்திரன், மகள்கள்: ஆர்.பிரியதர்சினி - ஆனந்த்குமார், ஆர்.திவ்யா - கோகுல்ராஜ், மகன்: ஆர்.வெற்றிச்செல்வன் - வெ.அகிலா, பேத்தி: கோ.லக்சிதா ஆகியோர் வழங்கினர்.

அனகை ஆறுமுகம் இல்ல மண விழா


தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தின் துணை செயலாளர் அனகை ஆறுமுகம்  இல்ல திருமணம்  திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேரா சிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் 6-12-2021 திங்கள்கிழமை காலை  நடைபெற்றது.நிகழ்வில் அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், சோளிங்கர் மாவட்ட தலைவர் ஆர்.டி. வீரபத்ரன், தாம்பரம் நகர் செயலாளர் சு.மோகன்ராஜ், மற்றும் ஆவடி மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் மற்றும் கழக தோழர்கள் பங்கேற்றனர்.



திங்கள், 6 டிசம்பர், 2021

பெரியார் உலகத்திற்கு தங்கம் நன்கொடை

சைதாப்பேட்டை எம்.பி.பாலு - வள்ளியம்மா இணையர் சார்பாக ரூ. 25 ஆயிரம் வழங்கினர்.

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்- வளர்மதி, பிரபாகரன்-அஜந்தா, மு.பாரதி குடும்பத்தினர் சார்பில் ஒரு பவுன் தங்கத்தினை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினர் (சென்னை, பெரியார் திடல், 30.11.2013).

தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி - கோ.குமாரி ஆகியோர்  தமது குடும்பத்தின் சார்பில் ரூ.25 ஆயிரத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (சென்னை, 1.12.2013).

தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் சைதை மு.ந.மதியழகன் - தமிழ்மதி ஆகியோர் ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினர்.

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் வடுவூர் சி.செங்குட்டுவன் - உமா மகேஸ்வரி குடும்பத்தின் சார்பில் ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 29.11.2013).

(தென் சென்னை)அரும்பாக்கம் தாமோதரன்-வெண்மதி குடும்பத்தினர் சார்பில் ரூ. 25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 29.11.2013).

தென் சென்னை கோ.நடராசன் குடும்பத்தினர் சார்பில் ரூ. 25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 29.11.2013).

(தென் சென்னை)வழக்கறிஞர் வீரமர்த்தினி - சைதை தென்றல், வழக்கறிஞர் அருள்மொழி  குடும்பத்தின் சார்பாக ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 30.11.2013).

(தென் சென்னை)திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பார்வதி, கணேசன் குடும்பத்தின் சார்பில், ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினர் (சென்னை, பெரியார் திடல், 29.11.2013).


வெள்ளி, 3 டிசம்பர், 2021

செல்வி டெய்சி மணியம்மைக்கும், அருளானந்தம் _ செல்லம்மாள் ஆகியோருடைய செல்வன் அ.சிவாநந்தம் (எ) எஸ்.பி.கண்ணனுக்கும் திருமணம்


சென்னை திரு.வி.க.நகர் சமூகக் கூடத்தில் விசுவாசவரம் _ பொன்.இரத்தினாவதி ஆகியோருடைய செல்வி டெய்சி மணியம்மைக்கும், அருளானந்தம் _ செல்லம்மாள் ஆகியோருடைய செல்வன் அ.சிவாநந்தம் (எ) எஸ்.பி.கண்ணனுக்கும் 20.7.1997 அன்று தலைமையேற்று வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை நடத்தி வைத்தேன். மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இருவரையும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்தேன். இவ்விழாவில், கழகப் பொறுப்பாளர்கள், தி.மு.க. கட்சியின் முக்கிய பிரமுகர்கள், திராவிடர் கழகத் தோழர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி (281)

- உண்மை இதழ், நவம்பர் 16-30.2021

திங்கள், 29 நவம்பர், 2021

நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் மறைவு

                                                               வருந்துகிறோம்


தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் 26.11.2015 நண்பகல் 1 மணியவில் மாரடைப்பால் காலமானார் (வயது 63). அசோக் லைலேண்டு தொழிற் சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் சங்கத்தில் பொறுப்பாளராக இருந்தார். அவரது துணைவர் ந.பத்மாவதி அவர்களும் குடும்பத்தினரும் எந்தவிதச் சடங்கும் இன்றி இறுதி நிகழ்ச்சியை நடத்தினர்.
மாலை 5 மணியளவில் நுங்கம்பாக்கம் ஜெயலட்சுமிபுரத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு சென்று நுங்கம்பாக்கம் இடுகாடு அடைந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் மாவட்டத்தலைவர் இரா.வில்வ நாதன், தொழிலாளரணி பொறுப்பாளர் பெ.செல்வராஜ், நுங்கம்பாக்கம் பகுதி செயலாளர் க.வெற்றிவீரன், தரமணி கோ.மஞ்சநாதன், தமிழ்இனியன், மதிவாணன், பகுதி திமுக பொறுப்பாளர் நு.வே.மோகன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மா.நடராசன் அவர்கள் வீட்டிற்குச் சென்று இரங்கல் கூறினார்.
-விடுதலை,28.11.15

வியாழன், 25 நவம்பர், 2021

நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி - நுங்கை மா.நடராஜன் 6ஆம் ஆண்டு நினைவு நாள்


அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகத்தின் மேனாள் தலைவரும் நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக மேனாள் துணத் தலைவருமான எம்.நடராஜன் அவர்களின்  6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (26.11.2021) அவரது துணைவியார் ந.பத்மாவதி அவர்கள் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் ரூ.5 ஆயிரம், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு (உணவு அளிக்க) வழங்கினார். உடன் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி உள்ளார். நினைவு நாளை தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகமும்  அசோக் லைலேண்டு திராவிடர் தொழிலாளர் கழகமும் நினைவு கூர்கிறது. (24.11.2021)

வெள்ளி, 12 நவம்பர், 2021

திராவிடர் கழக இணையதள பயன்பாட்டாளர்கள் கலந்துரையாடல்



 திருச்சி பெரியார் மாளிகையில் 9.11.13ல் நடைபெற்ற திராவிடர் கழக இணையதள பயன்பாட்டாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களும்-அதில் ஒருவராக நானும் ( செ.ர.பார்த்தசாரதி ).படம்-தளபதிராஜ்

தரமணி பெரியார் பெருந்தொண்டர் ஜாபர் மறைவு

 



கடைசிவரை கருப்புச் சட்டையுடன் கொள்கை உறுதியுடன் தீவிரமாக பணியாற்றிய சென்னை தரமணி பெரியார் பெருந்தொண்டர் ஜாபர் (வயது-83) அவர்கள்   10.10.21 காலை 6.00 மணி அளவில் மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்து தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தரமணி அக்பர் தெருவில் உள்ள அவருடைய இல்லம் சென்று இறுதி மரியாதை செய்யப்பட்டது.

மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, தரமணி கோ. மஞ்சுநாதன் ஆகியோர் சென்றிருந்தனர்.

 மாலை 6 மணி அளவில் உடல் அடக்கம் நடைபெற்றது.

வழக்குரைஞர் சு.குமாரதேவன் அவர்களுக்கு பாராட்டு

வழக்குரைஞர் சு.குமாரதேவன் அவர்களுக்கு 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வாரியம்' குழு உறுப்பினர் பொறுப்பு

வட சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் அவர்களுக்கு 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வாரியம்' குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கி பெருமை சேர்த்துள்ளது தமிழ்நாடு அரசு. கழக தோழர்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடகூடிய அய்யா அவர்களுக்கு அவரின் அலுவலகத்தில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக நன்றி பாராட்டுகள் கூறியபோது...(22.10.21, மாலை)

வியாழன், 11 நவம்பர், 2021

காமராசர் பிறந்த நாள்

 

காமராசர் செய்த கல்விப்புரட்சி வரலாற்றில் நிலைத்து நிற்கும்!

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னைஜூலை 15 தமிழ்நாட்டின் இரட்சகர் என்று தந்தை பெரியார் அவர்களாலே வெகுவாகப் பாராட்டப் பெற்ற கல்வி வள்ளல் காமராசர் செய்த கல்விப் புரட்சி என்றென்றைக்கும் வரலாற்றில் நிலைக்கக் கூடிய ஒன்றாகும் என காசமராசர் சிலைக்கு இன்று (15.7.2021) மாலை அணிவித்த பின் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

''தாழ்த்தப்பட்டவனை டாக்டராக்கினேன்அவன் ஊசி போட்டு எவன் செத்தான்?'' என்று தைரியமாகக் கேட்ட அந்த காமராசருடைய ஆட்சிதான், 'திராவிட மாடல்என்று சொல்லக்கூடிய அதனுடைய முன்னோட்டமாக அவருடைய ஆட்சி அமைந்தது.

அதன் காரணமாககுலக்கல்வித் திட்டம் ஒழிந்துஎல்லோருக்கும் எல்லாமும்அனைவருக்கும் அனைத்தும் என்ற அந்த சமதர்மக் கொள்கையை அவர் வாழ்நாள் முழுவதும் ஆட்சி பீடத்திலிருந்து நிறைவேற்றிக் காட்டினார்.

அதனுடைய தொடர்ச்சிதான்இன்றைக்கும் திராவிடர் ஆட்சியாகஅண்ணாகலைஞர்அதே போன்றுஇப்பொழுது மு..ஸ்டாலின்  ஆட்சியாக நடந்து கொண்டிருக்கின்றது.

எனவேகாமராசருடைய ஆட்சி என்பது அது வெறும் கட்சியை நோக்கியதல்லஅது லட்சியங்களை நோக்கியது.

அத்தகைய சமதர்ம ஆட்சி என்றென்றைக்கும் தேவைப்படுகிறது.

ஜாதி வெறிமதவெறிபதவி வெறி இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டுஒரு சிறந்த வரலாற்றை உருவாக்கிய பெருமை அவருடைய ஆட்சியின் சாதனைகளாகும்.

 அவருடைய பிறந்த நாள் விழாவில்அவர் உருவாக்கியஅவர் விரும்பியஜாதியற்றசமதர்ம லட்சியத்தை உருவாக்கக்கூடிய ஒரு புதிய உலகத்தைப் படைப்போம் என்று உறுதியேற்கிறோம்.

செய்தியாளர்கொங்கு நாடு என்று பா...வினர் கோருகிறார்களே?

தமிழர் தலைவர்அவர்கள் குறுக்குசால் ஓட்டிதங்களுடைய தோல்வியை மறைப்பதற்காகவும்மு.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெறக்கூடிய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை இனி எந்தக் காலத்திலும் அசைக்க முடியாது என்கிற நம்பிக்கைக்கு அவர்களே வந்துவிட்ட காரணத்தினால்இப்படி ஒரு குறுக்கு வழியிலாவது - குருட்டுப் பூனை விட்டத்திலே பாய்ந்ததைப்போலபாய முடியுமாஎன்று பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக அவர்களுக்குப் பாடம் கற்பிப்பார்கள்.

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.


கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு  மந்தைவெளியில் உள்ள காமராசர் சிலைக்கு தென் சென்னை மாவட்டத்தின் சார்பில் அணிவிக்கப்பட்டது.
.............................................

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாளில்....!

பெருநிலையில் இருக்கின்றீர் காம ராசப்

பெருந்தகையீர்உம்பெருமை அவர்கள் கண்ணில்

கருவேலின் முள்போல உறுத்தும்நீவீர்

கடுகளவும் அஞ்சாதீர்கோட்சே கூட்டம்

திரைமறைவில் நோக்கத்தை வைத்தி ருக்கும்

வெளிப்புறத்தில் செல்வாக்கை வளர்க்கு மிந்த

விரிவுதனை நீர் அறிவீர்அஞ்ச வேண்டாம்!

கோட்சேக்கள் செல்வாக்கை வீழ்த்த வேண்டும்

ஏழைக்கும் செல்வனுக்கும் பன் மதத்தார்

எல்லார்க்கும் எதிலும் நலம்புரிய எண்ணி

வாழ்ந்ததுவும் குற்றமெனக் காந்தி அண்ணல்

மார்பு பிளந்தார்காமராசரேஎம்

தோழரேதிராவிடரே உமது மேன்மை

தொலைப்பதற்கும் வழிபார்க்கும் கோட்சே கூட்டம்!

ஆழ்ந்திதனை எண்ணிடுககோட்சே கூட்டத்

ததிகாரம் ஒழியுமட்டும் மீட்சி இல்லை!

புரட்சிக் கவிஞரின் இந்தப் பாடல் - இந்தக் காலத்துக்கு எத்தகைய பொருத்தம் என்பதை எண்ணிப் பாரீர்.

'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே!' என்ற சனாதன - வருணாசிரம சமூக அமைப்பில் கல்விப் புரட்சியைக் கொண்டு வந்த ஒரு மாபெரும் இயக்கம் திராவிட இயக்கம்.

திராவிட இயக்கம் என்று சொல்லும்பொழுது அதில் காமராசரையும் உள்ளடக்கமாகத்தான் கொள்ள வேண்டும்.

நம் இன எதிரிகளான பார்ப்பனர்கள் எப்படி எப்படி எல்லாம் காமராசரை அடையாளம் காட்டினார்கள்?

'கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டைஎன்று  'கல்கி'கள் கார்ட்டூன் போடவில்லையா? "குயில் முட்டையிடும் ஆனால் அடை காக்காது காகம்தான் குயிலிடும் முட்டைகளை அடை காக்கும்." அதே போல காமராசர் என்ற குயிலிடும் சாதனை முட்டைகளை பெரியார் என்ற காகம் அடை காக்கிறதுஎன்று கார்ட்டூன் போட்டவர்களும் அவர்களே!

இந்தப் பின்னணியில் பார்த்தால் காமராசரும் திராவிட இயக்கச் சிந்தனையாளரே என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இதனைக் கர்மவீரர் காமராசர் வாயாலேயே கூடக் கேட்கலாம்.

"எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்று பேசவும் ஆரம்பித்திருக்கிறார்கள் - யார் பேசுகிறார்கள் தெரியுமாஇதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்."

"கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு ஏழை மக்களை மேலும் ஏழையாக்குபவர்களே இதைக் கூறுகிறார்கள்நீ ஏழையாயிருப்பதுஏழையாய் இருக்க வேண்டும் என்பது உன் தலையெழுத்து என்று கூறி ஏமாற்றுகிறார்கள்தங்களின் நிலையை உயர்த்திக் கொண்டே இருக்கும் சூழ்ச்சி இதுஅந்தத் தலையெழுத்தை அழித்து எழுதுவோம்உழைக்க வேண்டியதேஏழையாய் இருப்பதே தலையெழுத்து எனறால்அந்தத் தலை எழுத்தை மாற்றி எழுதுவோம் - எழுத வேண்டியது அவசியம் என்றுதான் சொல்லுகிறேன்."

"எனவே கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு உங்களை ஏமாற்றுகிறவர்கள்தான்,  என்னைக் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று சொல்கிறார்கள்என்று பேசியவர் பச்சைத் தமிழர் காமராசர் (இராயக்கோட்டையில் காமராசர் உரை - விடுதலை 27.4.1966).

அதோடு நிற்கவும் இல்லைதந்தை பெரியார் மனம் நிறைவு பெறும் வகையில் அவரின் செயல்பாடுகள் இருந்ததாக தந்தை பெரியாரே எழுதியுள்ளார்.

"நான் எனது இலட்சியத்தில்  மனக் குறைவடைய வேண்டிய நிலையில்லாதவனாக இருக்கிறேன். 4, 5 மாதங்களுக்குமுன் மகிழ்ச்சியோடு காமராசர் வெளியிட்டார்அதாவது "பெரியாருக்கு இன்று என்ன குறைஅவர் போட்ட பாதையில்தான் காங்கிரஸ் இன்று போய்க் கொண்டிருக்கிறதுஅவர் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லைஎன்று பேசினார்.

"இனி எனக்கு ஏதாவது குறைகள் இருக்குமானால்,  அது மக்களிடையில் காணப்படும் கவலையற்ற தன்மையும்எதிரிகளின் சூழ்ச்சிக்கு ஆளாகும் தன்மையும் பற்றித்தான்" (தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர் 17.9.1969).

தந்தை பெரியாரும் பச்சைத் தமிழர் காமராசரும் ஒருவரை ஒருவர் எப்படி புரிந்து கொண்டு இருந்தனர் என்பது இவற்றின்மூலம் விளங்கவில்லையா!

ஆச்சாரியார் (ராஜாஜிகொண்டு வந்த வருணாசிரம குலக்கல்வித் திட்டத்தைக் குழி தோண்டிப் புதைத்துபல்லாயிரம் பள்ளிகளைத் திறந்து நாடெல்லாம் கல்வி நீரோடையைப் பாய்ந்தோடச் செய்த காரணத்தால் - தந்தை பெரியார் சொன்னார், "கல்வி சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சி ஆரம்பித்தாலும்கடவுள் வாழ்த்து சொல்லுவதை நிறுத்தி விட்டுகாமராசருக்கு வாழ்த்துக் கூற வேண்டும்என்று சொன்னவர் தந்தை பெரியார் (சேலம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி இலக்கியமன்ற விழாவில் - (5.7.1968)

தகுதிதிறமை பற்றி அவர் பேசியவை - பேசியது பெரியாராகாமராசராஎன்று நினைக்கத் தோன்றும்.

காமராசரின் இன நலனை உய்த்துணர்ந்த காரணத்தால்தான் அவரின் உயிருக்குக் குறி வைத்தது மதவாதக் கூட்டமும்இன எதிரி வட்டாரமும்.

இவற்றை உள்ளடக்கித்தான் புரட்சிக் கவிஞர் பாடினார் - கோட்சே கூட்டம் திரைமறைவில் நோக்கத்தை வைத்திருக்கும் என்று கூறினார்.

அந்த மதவாதப் பரம்பரை தான் ஆட்சி அதிகாரத்தில் ராமராஜ்ஜியத்தைக் கொண்டு வருவோம் என்று முழக்கமிடுகிறது.

காமராசரின் இந்தப் பிறந்தநாளில் மதவாத சக்திகளை வீழ்த்திட உறுதி கொள்வோம்!

வாழ்க காமராசர்!!

காமராசர் விரும்பிய சமூகநீதியை வென்றிடுவோம் - அதுவே காமராசருக்குச் சூட்டும் சரியான செயல் மாலை!


‘பச்சைத் தமிழர்' என்றும், ‘கல்வி வள்ளல்' என்றும் - இவற்றிற்கெல்லாம் மேலாக, ‘தமிழ்நாட்டின் ரட்சகர்' என்றும், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களால் புகழ்மாலை சூட்டப்பட்ட கர்ம வீரர் காமராசர் அவர்களின் 118 ஆவது பிறந்த நாள் இன்று (15.7.2020).


தமிழ்நாடு காங்கிரசின் தூய தொண்டராக தனது பொதுவாழ்வைத் தொடங்கி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர், ‘கிங் மேக்கர்' என்று உயர்ந்தவர்.


அதைவிட, அவர் முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டுமென்று வற்புறுத்தி, தயங்கிய அவரை அந்தப் பொறுப்பை ஏற்க வைத்தவர்கள் தலைவர் தந்தை பெரியாரும், டாக்டர் வரதராஜூலு (நாயுடு) அவர் களும் ஆவார்கள்!


அவர், ஆச்சாரியார் ஆட்சியில் கொடுமையின் உச்சமான குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து, ஆச்சாரியார் மூடிய 6,000 ஆரம்பப் பள்ளிகளைத் திறந்ததோடு, ஒடுக்கப்பட்ட மக்களும், ஏழை,  எளிய மக்களும் கல்விக் கண்ணைப் பெற அயராது பாடுபட்டார்.


‘‘இதற்கெல்லாம்  காரணம், பெரியார்; காரியம் காமராசர்'' என்று ‘ஆனந்தவிகடன்' போன்ற ஏடுகளே எழுதிய வரலாறு மறைக்கப்பட முடியாதது.


சமூகநீதியும், ஆட்சி நேர்மையும் அவரது முத்திரைகள் - திராவிடர் இயக்கம் காமராசரை எவ்வளவு பெருமைப்படுத்த முடியுமோ அவ்வளவு செய்துள்ளது.


தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் - இவர்கள் அரசியலைத் தாண்டி, இன உணர்வோடும், நியாய உணர்வோடும் காமராசரைப் பெருமைப்படுத்திடத் தவறவில்லை.


கலைஞர் ஆண்டுதோறும் காமராசர் பிறந்த நாளை கல்வி நாளாகக் கொண்டாட தனிச் சட்டமே இயற்றி, நன்றி பாராட்டினார்!


ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப்புகளில் ஒன்றான விசுவ இந்து பரிஷத் சார்பில், பசுவதைத் தடுப்பு ஆர்ப்பாட்டம் என்று பார்லிமெண்ட் தெரு விலும், அதற்கடுத்து டில்லியில் 3 மணிநேரம் நிர் வாண கோலத்தில் ‘சாதுக்கள்' - சாமியார்கள் நடத்திய கலவரத்தின்போது, காமராசர் வீட்டுக்கு 7.11.1966 இல் பட்டப் பகலில் சாமியார்கள் கூட்டத்தால் தீ வைக்கப்பட்டது. தி.மு.க. தோழர் ஒருவர் கொடுத்த தகவல் மூலம் அப்போது அதிலிருந்து தப்ப முடிந்தது. (‘‘காமராசர் கொலை முயற்சி சரித்திரம்'' என்று ஒருநூலே வெளிவந்துள்ளது).


அதையெல்லாம் தாண்டி, காமராசர் குல தர்மத்தை எதிர்த்து சமதர்மத்தை நிலைநாட்ட இறுதிவரைப் போராடிய சமூகநீதிப் போராளி!


‘தகுதி திறமை' பித்தலாட்டத்தை அம்பலப் படுத்தத் தயங்காதவர். உண்மை விளம்பி.


இன்று காமராசரை அவருடைய கொள்கை, வரலாறு தெரியாத,  அவர் உயிருக்கு உலை வைக்க முயன்றவர்களும்கூட, புகழ்ந்து பேசி, தமிழ்நாட்டில் கால் வைக்க முயலுகின்ற வேடிக்கைக் கூத்தும் நடைபெற்றுள்ளது!


காமராசர் ஏற்படுத்திய கல்விப் புரட்சி, திராவிடர் இயக்க ஆட்சிகளால் தொடரப்பட்டு வரும் நிலையில், அதனை ஒழிக்க முயலும் முயற்சிகளை முறியடித்து, சமதர்மம், சமூகநீதியை நிலைநாட்டி, காமராசர் காண விரும்பிய சமத்துவ சமுதாயம் அமைய உழைப்பதே காமராசருக்கு நாம் காட்டும் உண்மையான மரியாதை.


காமராசருக்கு நாம் சூட்டும் பெருமைமிக்க செயல் மாலையாகட்டும்!


வாழ்க பெரியார்! வாழ்க காமராசர்!

கி. வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


15.7.2020