மந்தைவெளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மந்தைவெளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 ஜூன், 2026

மந்தைவெளி பகுதியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் மற்றும் திராவிடர் கழக கொடி ஏற்றம்


திராவிடர் கழகம்

சென்னை, ஜூன் 4– 3.6.2026 அன்று முற்பகல் 11:30 மணி அளவில் முத்தமி ழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மந்தைவெளி, விசாலாட்சி தோட்டம், செயின்ட் மேரிஸ் பாலம் அருகில், மந்தைவெளி பகுதி திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அப்படியே திராவிடர் கழகக் கொடி கம்பத்தில் தென்சென்னை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து தலைமையில், தென் சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி. மாவட்டத் துணைத் தலைவர்கள்
டி.ஆர். சேதுராமன், மு.சண்முகப்பிரியன், இளைஞர் அணி மாவட்டத் தலைவர்
ந. மணிதுரை ஆகியோர் முன்னிலையில், தென் சென்னை மாவட்டத் தலைவர்
இரா.வில்வநாதன் கொடி ஏற்றி வைத்தார்.
திமுக இளைஞரணி பகுதி அமைப் பாளர் திவான், திமுக வட்ட துணைச் செயலாளர் தினேஷ், ரஞ்சித் மற்றும் திமுக பொறுப்பாளர்களும், தோழர்கள் ராஜேஷ், சதீஷ், சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

- விடுதலை நாளேடு, 04.06.2026


செவ்வாய், 26 மே, 2026

தென்சென்னை மாவட்டக் கழகம் சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்த தீர்மானம்

திராவிடர் கழகம்

தென்சென்னை, மே 21– தென்சென்னை மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 19.05.2026 அன்று மாலை 6 மணியளவில் இளைஞரணி துணைச்செயலாளர் மாரிமுத்து உணவகத்தில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ் தலைமையில் மாவட்ட கழக தலைவர் இரா.வில்வநாதன் முன்னிலையில் நடைபெற்றது.

தேர்தலுக்கு பிந்தைய களச்சூழல், அடுத்தகட்ட செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. அனைவரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

தீர்மானங்கள்

மாதம் ஒரு தெருமுனை பிரச் சாரக் கூட்டம் நடத்துவது.

சுவர் விளம்பரம் செய்வது.

மாதம் ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

- விடுதலை நாளேடு, 21.05.26


சனி, 5 ஏப்ரல், 2025

இராஜா அண்ணாமலைபுரத்தில் தமிழ்நாடு அரசாணைக்கு எதிராக கட்டப்பட்டுள்ள கோவிலை இடித்து அப்புறப்படுத்தக் கோரி புகார் மனு!

தமிழ்நாடு அரசாணைக்கு எதிராக கட்டப்பட்டுள்ள கோவிலை இடித்து அப்புறப்படுத்தக் கோரி புகார் மனு!

ஞாயிறு மலர், தமிழ்நாடு
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த இராஜா அண்ணாமலைபுரம் முதன்மை சாலையில் அமைந்துள்ள ‘தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலைய வளா’கத்திற்குள் மதச்சார்பின்மைக்கு எதிராகவும், சட்ட விரோதமாகவும், தமிழ்நாடு அரசின் அரசாணையை மதிக்காமலும் இந்து மத கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இக் கோவிலை இடித்து அப்புறப்படுத்தக் கோரி, தென் சென்னை மாவட்ட கழக இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து 28.03.2025ஆம் நாள் சென்னை மாநகராட்சிக்கு இணைய வழியில் (ஆன் லைனில்) புகார் அளித்துள்ளார்.
இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 3 ஜனவரி, 2025

மந்தைவெளியில் நடைபெற்ற 'வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழா வெற்றி முழக்கமும்’, ‘தந்தை பெரியாரின் 51 ஆம் ஆண்டு நினைவு நாள்’ கூட்டமும்




புதன், 8 மே, 2024

மந்தைவெளியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா விளக்க பரப்புரைக் கூட்டம் தந்தை பெரியாரின் கொள்கை வழித் திட்டமே இந்தியாவிற்கு தேவையானது!



Published May 8, 2024

கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி விளக்கவுரை

சென்னை, மே 8 தந்தை பெரியாரின் கொள்கை வழித் திட்டமே இந்தியாவிற்கு தேவையானது என்று அனைவரும் உணர்ந்துள்ளனர் என் றார் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள்.
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கடந்த 2.05.2024 அன்று மாலை 7.30 மணி அளவில், தென் சென்னை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து தலைமையிலும், தென் சென்னை மாவட்ட துணை தலைவர் டி.ஆர். சேதுராமன் மற்றும் மாவட்டத் துணைச் செய லாளர் சா.தாமோதரன் ஆகியோர் முன்னிலை யிலும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்க விழா விளக்க பரப்புரை தெரு முனைக் கூட்டம் மந்தைவெளியில் நடை பெற்றது.
மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்புரையாற்ற, தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் தொடக்க உரை யாற்றினார்.
முன்னதாக ந.நாத்திகனின் ‘மந்திரமா? தந் திரமா?’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.சண்முகப்ரியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.கே.சிவா ஆகியோர் விளக்க வுரையாற்றினர்.

சுயமரியாதை என்றால் என்ன?
சிறப்புரையாற்றிய திராவிடர் கழக மாநில பரப்புரை செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி, சுயமரியாதை என்றால் என்ன? என்ற கேள்வியை கேட்டுவிட்டு, சுயமரியாதை என் றால் என்ன என்பதை கதைகள் மூலம் விளக்கி கூறினார்.
பார்ப்பனர்கள், நமக்கு கல்வி வராது என்று கூறி, நம்மையே நம்ப வைத்து, நம்மை பள்ளிக்கூடம்‌ சென்று படிக்க முடியாமல் செய்து விட்டனர். குழந்தைத் திருமணத்தை பார்ப்பனர்கள் நடத்தி வைத்து பெண்களை விதவைகளாக ஆக்கி வைத்த கொடுமை நடந்து வந்தது; ஒரு வயது குழந்தைகள் கூட விதவைகள் ஆக்கப்பட்டனர். இந்தக் கொடு மையை எதிர்த்துப் போராடிய சாரதா என்ப வரின் பெயரில் ‘சாரதா சட்டம்’ என்று குழந்தைகள் (பால்ய விவாகம்) திருமணத்தைத் தடை செய்யும் சட்டம் வெள்ளையர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

வெள்ளையரின் ஆட்சி நடைபெற்ற போது இந்தியர்களுக்கும் வேலை கொடுக்க வேண் டும் என கோரிக்கை வைத்தனர் காங்கிரஸ் காரர்கள். அதை ஏற்றுக்கொண்டது அன்றைய வெள்ளையர் அரசு. ஆனால், பார்ப்பனர்களே வேலை வாய்ப்பைப் பெற்று வந்தனர். இதை எதிர்த்து தான் தன்னை பெரியார் காங்கிரஸ் மாநாடுகளில் இட ஒதுக்கீடு கோரிக்கைகளை முன்வைத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்ததால் காங்கிரசை விட்டு தந்தை பெரியார் வெளியேறி சுயமரி யாதை இயக்கத்தை தோற்றுவித்தார்.
அதனால்தான் நமக்கு கல்வியும், வேலை வாய்ப்பும் கிடைத்தது. இன்றைய நிலையில் காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, இட ஒதுக்கீட்டை தேர்தல் அறிக்கையிலேயே வெளியிட்டு பரப்பி வருகிறது.

1957 ஆம் ஆண்டு ஜாதியை ஒழிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார் தந்தை பெரியார். இதன் விளைவாக இன்று தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தனது பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதி பட்டத்தை தூக்கி எறிந்து விட்டனர். ஜாதிப் பெயரை சொல்வதையே அவமானமாக கருதுகின்றனர்.
தந்தை பெரியாரின் கொள்கை வழி திட்டமே இந்தியாவிற்கு தேவையானது என்று அனைவரும் உணர்ந்துள்ளனர் என்றும், சுய மரியாதை திருமண முறைப்படி நடத்தப்பட்ட திருமணங்களைப் பற்றியும் விளக்கி கூறினார். பொட்டுக்கட்டி பெண்களை விபச்சாரிகளாக கடவுளின் பெயரால் ஆக்கி வைத்ததை எதிர்த்து சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள் போராடினார். டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் முயற்சியால் ‘தேவதாசி முறை ஒழிப்பு’ சட்டம் கொண்டுவரப்பட்டது. இத னால் பெண்கள் சுயமரியாதை உணர்வுடன் தலை நிமிர்ந்து வாழும் நிலை ஏற்பட்டது. சுயமரியாத இயக்கம், படி, படி என்று கூறி வந் ததால் அனைத்து துறைகளிலும் சாதனை களைப் படைத்து வருகிறார்கள் தமிழர்கள். ‘தனக்கு வழிகாட்டியாக தந்தை பெரியார் அமைந்ததால் தான் விண்வெளித் துறையில் என்னால் சாதிக்க முடிந்தது’ என அறிவிய லாளர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதை சுட்டிக்காட்டினார்.

சுயமரியாதை இயக்கத்தின் வேர்களை மறக்கக்கூடாது என்பதற்காகத்தான் இது போன்ற சுயமரியாதை நூற்றாண்டு விழாக்கள் நாடு முழுக்க நடைபெற்று வருகிறது என கூறி சிறப்புரையை முடித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களை 2024 ஆம் ஆண்டுக்கான ‘பெரியார் ஒளி’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதை பாராட்டும் முகமாக மாவட்ட கழகத்தின் சார்பாகவும் இளைஞர் அணியின் சார்பாகவும் மகளிர் அணியின் சார்பாகவும் பகுதி கழகத் தின் சார்பாகவும் மற்றும் விடுதலை சிறுத் தைகள், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய வற்றின் சார்பாகவும் வழக்குரைஞர் அ.அருள் மொழிக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தென் சென்னை மாவட்ட தொழிலாளரணி தலைவர் ச.மாரியப்பன், தென் சென்னை மாவட்ட மகளிரணி தலைவர் வி.வளர்மதி, செயலாளர் பி.அஜந்தா, மகளிர் பாசறை தலை வர் மு.பவானி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் மு.பசும்பொன், இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, மயிலை ஈ.குமார், மா.சண்முகலட்சுமி, ஜெ.சொப்பனசுந்தரி, வி.வித்யா, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் வி. தங்கமணி, வி.யாழ்ஒளி, எம்.ஜி.ஆர்.நகர் கரு.அண்ணாமலை, ஆவடி மாவட்ட துணை செயலாளர் க.தமிழ்ச் செல்வன், சீ.மணி, டி. ராஜா, செல்வம், ஆர். கிருஷ்ணன், வி. அகிலாண்டேஸ்வரி, எஸ். ரம்யா, ரவி, அ. ஷேக் அப்துல்லா, ராஜேஷ், மு. லோகநாதன், அ. பன்னீர்செல்வம், எஸ். மணி, இரா.அருள், அய்ஸ் அவுஸ் உதய சூரியன், மா.இன்பக்கதிர் மற்றும் பலர் கலந்து கொண்டு செவிமடுத்தனர்.
மந்தைவெளி பன்னீர் நன்றியுரை ஆற்றினார்.

சனி, 29 ஜூலை, 2023

தென்சென்னை மந்தைவெளி பகுதியில் நடை பெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்


18

மந்தைவெளி, ஜூலை 29- தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் மந்தைவெளி இளைஞர் அணி சார்பில் “வைக்கம் போராட்ட நூற்றாண்டு - முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு” தெருமுனைப் பிரச்சார கூட்டம் 26.7.2023 அன்று மாலை 6 மணி அளவில் மந்தைவெளி பகுதி செயின்ட் மேரிஸ் பாலம் அருகில் நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இரா.மாரிமுத்து கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தலைமைக் கழக அமைப்பாளர்கள் தே.செ.கோபால், வி.பன்னீர்செல்வம், மாவட்டத் தலை வர் இரா.வில்வநாதன், மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், மாவட்டத் துணைச் செயலாளர் சா.தாமோதரன் முன்னிலை வகித்தனர்.

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.சண்முகப்பிரியன் தொடக்க உரையாற்றினார்.

துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் 

சே.மெ. மதிவதனி முதன்மை உரையாற்றினார்.

அதற்கடுத்து கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் எழுச்சிமிகு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த 

இரா.மாரிமுத்துவுக்கும் மற்றும் பேச்சாளர்களுக்கும் பயனாடை அணிவித்துப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, மயிலை ஈ.குமார், வட சென்னை மாவட்ட செயலாளர் சு.அன்புசெல்வன், சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பி.சி.செய ராமன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், வி.வளர்மதி, பி.அஜந்தா, மா.சண்முகலட்சுமி, மா.தமிழரசி, மா.ஜெயலட்சுமி, மா.இனியவள், சா.இன்பக்கதிர், திமுகவை சேர்ந்த கோகுல், கந்தசாமி, மற்றும் எழுத்தாளர் சாலமுத்து ஆகியோருடன் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் செவிமடுத்தனர்.

கூட்டத்தின் முடிவில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இரா.மாரிமுத்து கழகக் கொடி ஏற்றினார்.

நிகழ்ச்சியின் முடிவில் ஆ‌பன்னீர் நன்றி உரை யாற்றினார்.



வியாழன், 16 பிப்ரவரி, 2023

சென்னை மந்தைவெளியில் நடைபாதையில் ஆக்கிரமித்துக்கட்டப்பட்ட கோயில் அகற்றம்


சென்னை மந்தைவெளி பகுதியில் உள்ள சென்மேரிஸ் சாலை, புனித மேரி கல்லறை வாசலில் சட்டவிரோதமாக நடைபாதையில் கிறிஸ்தவ கோயில் கட்டப்பட்டு வந்தது, மந்தைவெளி பகுதி கழக பொறுப்பாளர் இரா.மாரிமுத்து மூலம் மந்தைவெளி சென்னை 28, மண்டலம் 9, மாநகராட்சி துறைக்கு தொலைபேசி வாயிலாக 3.2.2023 அன்று புகார்  கொடுக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் 11.2.2023 அன்று மாநகராட்சி அலுவலர்கள் மாதா கோயிலை இடித்து அகற்றினர்

ஞாயிறு, 6 நவம்பர், 2022

இனியவள்' 6ஆவது (03.11.2022) பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை சந்தா

நன்கொடை - விடுதலை சந்தா

மந்தைவெளி பகுதி தோழர் இரா. மாரிமுத்து - மா.ஜெயலட்சுமி ஆகியோரின் மகள் 'இனியவள்' 6ஆவது (03.11.2022)  பிறந்தநாள் மகிழ்வாக  'விடுதலை: நாளேட்டிற்கு அரையாண்டு சந்தா தொகையை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோரிடம்  வழங்கி னர்.


சனி, 16 ஏப்ரல், 2022

சென்னை மந்தைவெளியில் 'வென்றது திராவிடம்' என்ற கல்வெட்டுடன் கழகக்கொடியை ஏற்றி வைத்து, சிந்தனை பலகை திறப்பு


கழகத் துணைத்தலைவர் பங்கேற்பு

சென்னை, ஏப். 16- சென்னை மந்தை வெளியில் தென் சென்னை மாவட்ட கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிந்தனை பலகை, ‘வென்றது திராவிடம்' கல்வெட்டு திறந்துவைத்து கழகக் கொடியை கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் ஏற்றிவைத்தார்.

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் இளை ஞர் அணி சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 131ஆவது பிறந்தநாள் 14.4.2022 முற்பகல் 10.30 மணி அளவில் மிகச்சிறப்பாகவும், எழுச்சியோ டும் கொண்டாடப்பட்டது.

மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தின் எதிரில் புதிதாக அமைக்கப்பட்ட 'வென்றது திராவிடம்' என்ற கல்வெட்டுடன் கூடிய கொடிக்கம்பத்தில் விசாலாட்சி தோட்டம் இரா. மாரிமுத்து தலைமையில் மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், இளைஞரணித் தலைவர் ச.மகேந்திரன் மற்றும் இளைஞரணிச் செயலாளர் ந.மணித்துரை ஆகியோர் முன்னி லையில் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கழகக் கொடியேற்றி யதோடு, சிந்தனைப் பலகையை யும் திறந்து வைத்து, மாணவர்க ளுக்கு பென்சில் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

அதன் பிறகு மந்தைவெளி விசாலாட்சி தோட்டத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தலைமை யில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் முன்னிலையில் சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் இரா.தே.வீரபத்திரன் வாழ்த்து முழக்கங்களுக்கு  இடையே மாலை அணிவித்தார்.  மயிலை யுவராஜ் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். வழக்குரைஞர் சு.குமாரதேவன், தரமணி கோ.மஞ்சுநாதன், மு.சண்முகபிரியன், இரா.பிரபா கரன், மாணவர் கழகம் கு.பா.அறிவழகன், கு.பா.கவிமலர், ஸ்டாலின், ராஜேஷ், விசா லாட்சி தோட்டம் ரஞ்சித், ராம்கி, கவுதம், கார்த்திக், பன் னீர், மந்தைவெளி ரஞ்சித், பாலாஜி, பெரியார்பிரியன், பாண்டி, பெரியார் ஆதவன், திமுக மாவட்ட பிரதிநிதிகள் சூரி, அய்யப்பன், திமுக வட்ட துணைச் செயலாளர் சரண்ராஜ் மற்றும் திரளான தோழர்கள், பொதுமக்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

சென்னை மந்தைவெளியில் எழுச்சியுடன் நடந்த தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்



சென்னை, ஆக.9- தென் சென்னை மாவட்ட மந்தை வெளி, இராஜா அண்ணா மலைபுரம் பகுதி திராவிடர் கழகம் சார்பில்   20.7.2019 அன்று மாலை 6 மணி அள வில் காமராசர் சாலை சீனி வாசா அவின்யூ இணைவில் தந்தை பெரியார் பிறந்த நாள் தெருமுனைப் பரப்புரை கூட்டம் மந்தைவெளி பகுதி பொறுப்பாளர் பொ.சிவக் குமார் தலைமையிலும், மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன் மற்றும் துணைச்செயலாளர்    கோ.வீ.ராகவன் ஆகியோர் முன்னிலையிலும்,  துணைச்செயலாளர் சா. தாமோதரன்  அவர்கள் வர வேற்புரை ஆற்ற மிக எழுச் சியுடன் நடைபெற்றது.

சிறப்புரை


மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மகளிர் பாசறை மாநில செயலாளர் பா.மணியம்மை ஆகியோர் உரையாற்றிய பின் மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றி னார்.

அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் தே.செ.கோபால், கோ.மஞ்சநாதன், க.தமிழ்ச் செல்வன், ஈ.குமார், மு.பவானி, இளைஞர் அணி துணைத் தலைவர் மு.முகிலன், மு.சண்முகப்பிரியன், செ.தமிழ்சாக்ரடீசு, மு.பசும் பொன், காரல் மார்க்ஸ், தில்ரேசு பானு, வேலவன், பா.பார்த்திபன், தாம்பரம் மோகன்ராசு, மா.குண சேகரன், மு.இரா.மாணிக்கம் மற்றும் கழகத்தோழர்களும் கலந்துகொண்டனர். மொதுமக்கள் கருத்துகளை செவிமடுத்து எழுச்சி பெற் றனர்.

இரவு 9.50 மணி அளவில் மாவட்ட மாணவர் கழக தலைவர் வி.விசுவாசு நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

- விடுதலை நாளேடு, 9.8.19

சனி, 20 ஜூலை, 2019

மந்தைவெளி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

தந்தை பெரியார் பிறந்த நாள் - தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்


மந்தைவெளி: 20.7.19, மாலை 6 மணி இடம்: காமராசர் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், மந்தைவெளி, சென்னை * வரவேற்புரை: மு.சண்முகப்பிரியன் * தலைமை: சிவக்குமார் * முன்னிலை: எம்.பி.பாலு, இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, சி.செங்குட் டுவன், டி.ஆர்.சேதுராமன், மு.ந.மதியழகன், சா.தாமோதரன் * சிறப்புரை: பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர், திராவிடர்கழகம்),  வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர், மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்), தி.இரா.ரத்தினசாமி (மண்டலத் தலைவர்), தே.செ.கோபால் (மண்டல செயலாளர்) * நன்றியுரை: சிவராஜ்

- விடுதலை நாளேடு, 18.7.19