வியாழன், 18 ஜூலை, 2024

நீட் தேர்வை எதிர்த்து கழக இளைஞரணி மற்றும் மாணவர் கழகத்தினர் நடத்திய இருசக்கர வாகன பரப்புரைப் பயணத்தில் 5 குழுவினருக்கும் பல்வேறு இடங்களில் வரவேற்பு


விடுதலை நாளேடு

 சென்னை பயணக் குழுவிற்கு சிறப்பான வரவேற்பு

சென்னை, ஜூலை 17- நீட் தேர்வை எதிர்த்து கழக இளைஞரணி மற்றும் மாணவர் கழகத்தினரின் சென்னை முதல் சேலம் வரையிலான அய்ந்தாம் குழுவினருக்கு 12.7.2024 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை அமைந்தகரையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நீட் பற்றிய விளக்கப் பிரச்சாரம் சிறப்பான வகையில் செய்யப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் தலைமை வகித்தார்.

பா.சித்தார்த்தன், வழக்குரைஞர் உதயபிரகாஷ், துர்கபிரகாஷ், அருள்தாஸ், சு.நித்யகுமார் ஆகிய தோழர்கள் முன்னிலை வகித்தனர். சாம்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

குழுமிய பொதுமக்களிடையே துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு ஆகியோர் சமூக நீதியைப் பறிக்கும் நீட் பற்றி விளக்கமாகப் பேசினர்.
அண்ணாநகர் பகுதி தி.மு.க. செயலாளர் பரமசிவம், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மெட்டில்டா கோவிந்தராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் துறைத் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், மாவட்ட காங்கிரஸ் மேனாள் தலைவர் க.வீரபாண்டியன், பகுதி தி.மு.க. துணைச் செயலாளர் கே.பி.சுரேந்தர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் ராஜன், திமுக வழக்குரைஞர்கள் ஜீ.திவாகர், ஆ.முரளிதரன் மற்றும் அனைத்துக் கட்சித் தோழர்களும், வியாபாரிகள் சங்கப் பொறுப்பாளர்களும் பரப்புரைப் பயணக் குழுவினருக்கு வரவேற்பளித்து வாழ்த்தினர்.
அண்ணாநகர் பகுதி 102 அ வட்ட தி.மு.க. துணைச் செயலாளர் எம்.ஏ.டேனியல் பரப்புரைப் பயணக் குழுவினருக்கு உணவுத் தின்பண்டங்கள் வழங்கி, அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

செனாய் நகரில் தொழிலதிபர் சுந்தரபாண்டியன் பயணத் தோழர்களுக்கு குளிர்பானம் வழங்கி தமது தோழர்களோடு வரவேற்றார்.

அமைந்தகரையில்

அமைந்தகரை பி.பி.தோட்டம் முதன்மைத் தெருவில் பிரின்சு என்னாரெசு பெரியார் கழகக் கொடி ஏற்றினார். அமைந்தகரையில் பரப்புரைப் பணியை நிறைவு செய்து, தோழர்களிடம் விடைபெற்றுப் புறப்பட்ட பரப்புரைக் குழுவினர் அண்ணாநகர், ஓட்டேரி, பெரம்பூர், திரு.வி.க. நகர் ஆகிய பகுதிகளில் ஒலியெழுப்பிக் கொண்டே – நீட் தேர்வினைப் பற்றிய புரட்டைதோலுரித்தவாறு மூலக்கடை மய்யப் பகுதியை வந்தடைந்தனர்.

மூலக்கடையில்…

மூலக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாதவரம் கழக அமைப்பாளர் சி.வாசு தலைமை வகித்தார். கழக துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால் முன்னிலை வகித்தனர். செம்பியம் கழகத் தலைவர் ப.கோபாலகிருட்டிணன் வரவேற்றுப் பேசினார்.

தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் ஆகியோர் உரையாற்றிய பின்பு – நிறைவாக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் பரப்புரைப் பயணத்தின் நோக்கம் குறித்து விளக்கமாகப் பேசினார்.

வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், காப்பாளர் கி.இராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் தி.செ.கணேசன், அமைப்பாளர் சி.பாசுகர், கொடுங்கையூர் கழக தலைவர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, எருக்கமாநகர் கழக அமைப்பாளர் சொ.அன்பு, ச.இராசேந்திரன், க.செல்லப்பன், வ.கலைச்செல்வன், வ.தமிழ்ச்செல்வன், அ.செந்தமிழ்தாசன், கோ.சுந்தரமூர்த்தி மற்றும் கழகத் தோழர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பயணக் குழுவின் சொற்பொழிவாளர் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், குழுத் தலைவர் வழக்குரைஞர் சோ.சுரேஷ், ஒருங்கிணைப்பாளர் தருமபுரி மா.செல்லத்துரை ஆகியோருக்கு தே.செ.கோபால் பயனாடை அணிவித்தார். ச.இன்பக்கனிக்கு தங்க.தனலட்சுமி சால்வை அணிவித்து அனைத்துத் தோழர்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

பரப்புரைப் பணியை சேலம் சென்றடைந்து சிறப்பான வகையில் நிறைவு செய்தனர்.

அரியலூர் மாவட்டத்தில் வரவேற்பு

அரியலூர், ஜூலை 17- நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பாக இராமநாதபுரத்தில் தொடங்கிய இரு சக்கர ஊர்தி பரப்புரை பயணக் குழு 14. 7. 2024 ஞாயிறு மாலை 6 மணியளவில்அரியலூர் மாவட்டம் திருமானூருக்கு வருகை புரிந்தனர். திருமானூர் ஒன்றிய பொறுப்பாளர்கள்அவர்களை வரவேற்றனர். பின்னர்அரியலூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் அனைவரும் மாலை 6.30 மணி யளவில் கீழப்பழுவூர் கடைவீதியில் பயணக் குழுவை வரவேற்றனர்.பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று அரியலூர் நிர்மலா மேல்நிலைப்பள்ளி, கடைவீதி வழியாக ரத்து செய்!ரத்து செய்! நீட் தேர்வை ரத்து செய்!

ஒன்றிய பாஜக அரசே ரத்து செய்!
வேண்டாம் வேண்டாம் நீட் தேர்வு வேண்டாம்!

வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே! தாழ்த்தப்பட்ட மாணவர்களை வஞ்சிக்காதே! கிராமப்புற மாணவர்களை வஞ்சிக்காதே! பிற்படுத்தப்பட்ட மாணவர்களை வஞ்சிக்காதே – என்ற முழக்கங்களை எழுப்பியவாறு பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது.பின்னர் அரியலூர் அண்ணா சிலை அருகில் பரப்புரைக்கூட்டம் இரவு 7.20 மணியளவில் தொடங்கியது. மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் நிகழ்ச்சிக்கு தலைமையேற்க, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு..அறிவன் வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட இளைஞரணி தலைவர் க.கார்த்திக் மாவட்ட இளைஞரணி செயலாளர் லெ. தமிழரசன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.செந்தில், அரியலூர் ஒன்றிய தலைவர் சிவக்கொழுந்து, ஒன்றிய செயலாளர் த.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திமுக மாநில கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார். பயண குழுவினர் அனைவருக்கும் பயனாடை போர்த்தி சிறப்பு செய்தார்.தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன் தொடக்க உரையாற்றினார்.

சொற்பொழிவாளர் தே.நர்மதா சிறப்புரையாற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் உமாநாத் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தோழர்களை வழி நடத்தி வந்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன் மாநில ப.க. அமைப்பாளர் தங்க . சிவமூர்த்தி, காப்பாளர் சு.மணிவண்ணன் மாவட்ட இணை செயலாளர் ரத்தின ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பொன்.செந்தில்குமார், மாவட்ட விவசாய அணி தலைவர் மா. சங்கர் மாவட்ட தொழிலாளரணி தலைவர் தா.மதியழகன் செயலாளர் வெ.இளவரசன் மாவட்ட விவசாய அணி செயலாளர் இளவழகன், செந்துறை ஒன்றிய தலைவர் மு. முத்தமிழ்செல்வன் ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன் ஒன்றிய செயலாளர் தியாக. முருகன் ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் ஆ.ஜெயராமன், தா.பழூர்ஒன்றிய செயலாளர் பி. வெங்கடாசலம், திருமானூர் ஒன்றிய தலைவர் க. சிற்றரசு ஒன்றிய செயலாளர் பெ.கோபிநாதன், நகர செயலாளர் சு.சேகர், ஆண்டிமடம் நகர செயலாளர் டி எஸ் கே அண்ணாமலை குழுமூர் சுப்பராயன் ஆண்டிமடம்ஒன்றிய இளைஞரணி தலைவர் வே.செந்தில் செயலாளர் இரா.பாலமுருகன், மணிமாறன் பொன்பரப்பி சுந்தரவடிவேல் பா.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். அரியலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் க. மணிகண்டன் நன்றி கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டம் விசமங்கலம் – வரவேற்பு

நீட் தேர்வு இருசக்கர பிரச்சார பரப்புரை பயணம் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட குழு 14.07.2024 ஞாயிற்றுக் கிழமை மாலை 12.30 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் விசமங்கலம் கிராமத்திற்கு வருகை தந்தனர்.விசமங்கலம் பேருந்து நிலையத்தில் பரப்புரை நடைபெற்றது. பயணம் மேற்கொண்ட தோழர்கள் வினோத் கவுன்சிலர் தி.மு.க., டி.சி.கார்த்தி தி.மு.க. மாணவர் கழகத் தலைவர் ஆகியோர் இருசக்கர வாகன பரப்புரை மேற்கொண்ட தோழர்கள் வரவேற்று பயனாடை அணிவித்து மரியாதை செய்தனர்.

மாவட்ட செயலாளர் பெ. கலைவாணன் தலைமையில், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சி.எ.சிற்றரசன் வரவேற்பில் தோழமை இயக்கங்கள் தி.மு.க, ம.தி.மு.க, வி.சி.க, மனித நேய மக்கள் கட்சி ஆதி தமிழர் பேரவை, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் ஆகியோர்கள் பங்கேற்றனர்.

மாநில துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே. மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார். இப்பரப்புரையில் கழக தோழர்கள் அண்ணா. சரவணன் மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர், அ. உலகன் மாவட்ட தலைவர் மாணவர் கழகம், தங்க அசோகன் மாவட்ட துணைத் தலைவர், சி. தமிழ்ச்செல்வன் மாவட்ட தலைவர் ப. க., காளிதாஸ் நகர தலைவர், ஏ. டி. ஜி. சித்தார்த்தன் நகர செயலாளர், வ. புரட்சி மாவட்ட துணைத் தலைவர் விடுதலை வாசகர் வட்டம், பெ. ரா. கனகராஜ் கந்திலி ஒன்றிய தலைவர், ரா. நாகராசன் கந்திலி ஒன்றிய செயலாளர்,ம. சங்கர் மாவட்ட துணைத் தலைவர் இளைஞரணி, ப. அஜித் மாவட்ட துணைச்செயலாளர் இளைஞரணி, கே.ராஜேந்திரன் சோலையார்பேட்டை ஒன்றிய தலைவர், தா. பாண்டியன் சோலையார்பேட்டை ஒன்றிய செயலாளர், ப. நாத்திகன் மாவட்ட துணைச்செயலாளர், சுப்புலட்சுமி மாவட்ட தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்* இரா. கற்பகவள்ளி மாவட்ட தலைவர் மகளிர் பாசறை, சி. சபரிதா மாவட்ட செயலாளர் மகளிர் பாசறை, தி. நவநீதம் மாவட்ட அமைப்பாளர் மகளிர் பாசறை, கோ. திருப்பதி மாவட்ட தலைவர் ப.ஆசிரியரணி, குமரவேல் மாவட்ட செயலாளர் ப. ஆசிரியரணி, ஆர். பன்னீர் மாவட்ட செயலாளர் தொழிலாளரணி, கே. மோகன் மாவட்ட அமைப்பாளர் தொழிலாளரணி, எம்.ஞானபிரகாசம் குமரவேல், பெருமாள்சாமி, ஆ.ப.செல்வராஜ், இசை பிரியன் இளைஞரணி, சிவக்குமார் நகரதலைவர் சோலையார்பேட்டை ஜே.எம்.பி.வள்ளுவன் நகர அமைப்பாளர் சோலையார்பேட்டை, லட்சுமணன் சோலையார்பேட்டை பொறுப்பாளர், நரசிம்மன் நகர காப்பாளர், அன்புச் சேரன் நகர தலைவர் வாணியம்பாடி, மு. வெற்றி மாதனூர் ஒன்றிய தலைவர், சே. வெங்கடேசன் மாதனூர் ஒன்றிய செயலாளர், வே. அன்பு மாவட்ட செயலாளர் ப.க. எம்.என்அன்பழகன், நா. சுப்புலட்சுமி மாவட்ட ப. க. எழுத்தாளர் மன்றம், எஸ். சுரேஷ் குமார் மாவட்ட தலைவர் இளைஞரணி, ரவி ஆம்பூர் நகர தலைவர், இளங்கோ ஆம்பூர், ராஜ சேகர் கிரி சமுத்திரம்கிளை தலைவர், கோ. சங்கர் சுந்தரம் பள்ளி ஒன்றிய தலைவர், சி.சந்தோஷ் குமார் காக்கங்கரை ஆகியோர் பங்கேற்றனர்.

வாணியம்பாடி

நீட் தேர்வு இருசக்கர பிரச்சார பரப்புரை பயணம் சென்னையிலிருந்து புறப்பட்ட குழு 13.07.2024 சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் வாணியம்பாடி வருகை தந்தனர். வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பரப்புரை நடைபெற்றது நகர் வந்தடைந்தது . பயணம் மேற்கொண்ட தோழர்கள் அனைவருக்கும் பயனாடை அணிவிக்கப்பட்டது.

நாட்றம்பள்ளி

13.07.2024 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வருகை தந்தனர். நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் பரப்புரை நடைபெற்றது. பயணம் மேற்கொண்ட தோழர்கள் அனைவருக்கும் பயனாடை அணிவிக்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் பெ. கலைவாணன் தலைமையில், மாநில இளைஞரணி துணை செயலாளர் சி. எ. சிற்றரசன் வரவேற்பில் வாணியம்பாடி நகர தலைவர் அன்புச் சேரன் முன்னணியில் பரப்புரை நடந்தது.இதில் தோழமை இயக்கங்கள் ம. தி. மு. க, வி. சி. க, மனித நேய மக்கள் கட்சி ஆகியோர் பங்கேற்றனர்.

நாமக்கல் பூங்கா சாலையில் பரப்புரை

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் 15-07-2024 1.30 மணி அளவில் நாமக்கல் பூங்கா சாலையில் பிரச்சார பரப்புரை பயணம் நடைபெற்றது. இதில் பயணத் தலைவர் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன், பயண ஒருங்கிணைப்பாளர் சு.இனியன் கலந்து கொண்டனர்.

நாமக்கல் நகர செயலாளர் ப.ராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். நாமக்கல் மாவட்ட செயலாளர் வை.பெரியசாமி தலைமை வகித்தார். இந்திய கணசங்க கட்சித் தலைவர் மு.பெ.முத்துச்சாமி முன்னிலை வகித்தார். சட்டக் கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன் சிறப்புரை ஆற்றினார். இந்த பரப்புரை பயண பிரச்சாரக் கூட்டத்தில் திராவிடர் கழக அனைத்து அணியைச் சேர்ந்த தோழர்களும் தோழமை இயக்க தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர். வெண்ணந்தூர் ஒன்றிய தலைவர் இல.ப. செல்வகுமார் நன்றி கூறினார்.

கிருஷ்ணராயபுரத்தில்…

14-07-2024 கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் நடைபெற்ற நீட் ஒழிப்பு இருசக்கர வாகன பரப்புரை பயணத்தில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சிவகாமிசுந்தரி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மதுரையில்…

நீட் தேர்வு ஒழிப்பு இரு சக்கர வாகன பரப்புரை பேரணிக்கு மதுரை கழகத்தின் சார்பாக வரவேற்பு நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக