வியாழன், 21 மே, 2020

அயோத்திதாச பண்டிதர் 175வது பிறந்த நாள்திராவிடர் இயக்க முன்னோடிகளில் ஒருவரான அயோத்திதாச பண்டிதர் அவர்களின் 175வது பிறந்த நாள் இன்று. ( 20.05.20)

வருந்துகிறோம்


தென் சென்னை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் எம். கே. காளத்தி அவர்களின் துணைவியார் கா.கர்ணம்மா(வயது-84) அவர்கள் 18.5.20 விடியற்காலை மறைவுற்றார். மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று தென்சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், இளைஞரணி துணைச் செயலாளர் இரா. பிரபாகரன் மற்றும் மயிலை சீனா ஆகியோர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். பிற்பகல் 2 .30 மணி அளவில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

சனி, 16 மே, 2020

கழகம் சார்பில் செங்கல்பட்டு அருகில் வாழ்வாதாரம் இழந்தோறுக்கு நிவாரணப் பணி


கழகம் சார்பில் செங்கல்பட்டு அருகில் வாழ்வாதாரம் இழந்தோறுக்கு நிவாரணப் பணி

கரோனா தடுப்பு அறிவிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்த செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறை கூற்றோடு அருகிலுள்ள 'கோடி தண்டலம்' என்ற ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி 06.05.20 முற்பகல் 11.00 மணி அளவில் அப்பகுதியில் உள்ள பின் மாஸ்டர் இன்ஞினியரிங்கு (Bin master Engineering) தொழிற்கூடத்தின் மூலம் பெறப்பட்ட ஒரு லட்ச ரூபாய் பெறுமானமுள்ள 25 கிலோ அரிசி மூட்டைகளை குடும்பம் ஒன்றுக்கு தலா 25 கிலோ அரிசி வீதம் 125 குடும்பங்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் வழங்கப்பட்டது. திராவிடர் கழகம் சார்பில் தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி மற்றும் ஆயிரம்விளக்கு மு.சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செங்கல்பட்டு பொருளாளர் எழிலரசன் மற்றும் நடராஜபுரம் வரதன் ஆகியோர் பங்கேற்றனர்.

- விடுதலை நாளேடு, 9.5.20

கால்டுவெல்' 206 வது பிறந்தநாள்

07.05.20 முற் பகல் 10.30 மணி அளவில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக 'கால்டுவெல் அவர்களின்' 206 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
நேபாள நாட்டைச் சேர்ந்த 'ஹட்சன்' என்பவர் இந்திய மொழிகள் அனைத்தும் ஆரிய மொழி சேர்ந்தது என்று ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டார்.
இந்த மோசடி ஆய்வை வெளிப்படுத்துவது போன்ற வகையில்....
தென்னிந்திய மொழிகளை ஆய்வு செய்த கால்டுவெல் அவர்கள் தென்னிந்திய மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்தது ஆரிய மொழிக்கும் திராவிட மொழிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை அறிந்து "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" எனும் மிக நீண்ட ஆய்வு நூலை எழுதி வெளியிட்டார்.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: Parthasarathy Rationalist

''மொழி நூலானது உலக மொழிகள் எல்லாவற்றையும் தழுவும் ஒரு பொதுக்கலை. உலக மொழிகள் எல்லாவற்றையும் ஆரியம் (Aryan) ,சேமியம் (Semitic), துரேனியம் (Turanian) என்னும் முப்பெருங் குலங்களாகப் பிரித்துள்ளார் மாக்கசு முல்லர்.
அவற்றுள் துரேனியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் திராவிடக் குடும்பத்தின் மொழிகளைத் திறம்பட வகுத்துக் காட்டியவர் கால்டுவெல்.
இங்ஙனமே பிறரும் பிற குடும்பங்களை வகுத்துக் காட்டி உள்ளனர். மேற்கூறிய முக்குலங்கட்கும் உள்ள தொடர்பை ஆராய்வதே இந்நூலின் நோக்கம்.
அவற்றுக்கொரு தொடர்புண்டென்று.அஃதாவது அம்மூன்றும் ஒரு குலத்தினின்றும் கவைத்திருக்க வேண்டுமென்று சென்ற நூற்றாண்டிலேயே மாக்கசு முல்லர் (Max Muller) திடமாகக் கூறிவிட்டார்.
அம்மூலத்திற்குத் திராவிடம் மிக நெருங்கியதென்று கால்டுவெல் கூறியுள்ளார்.இக்கூற்றை என்னாலியன்ற வரை முயன்று மெய்ப்பித்திருக்கிறேன் ''
வெள்ளி, 15 மே, 2020

மதுகடை மூடவலியுருத்தி.ஆர்ப்பாட்டம்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

தென்சென்னை.மாவட்டம் மயிலைபகுதி.நொச்சிநரில் திராவிடர்கழகத்தின் சார்பில் .பிள்ளைக்கு பாலில்லை.பசிக்கு உணவில்லை மதுகடை தேவையா? மதுகடை மூடவலியுருத்தி.ஆர்ப்பாட்டம் செய்த.தோழர்கள். 7. 5. 20 முற் பகல் 10.00 மணி அளவில் தென்சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி இல்லம் எதிரில் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, கோ.குமாரி மற்றும் கு.பா.கவிமலர் மத்திய மாநில அரசுகளை கண்டித்து மேற்கு மாம்பலம் கோடம்பாக்கம் சாலையில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் மு.ந.மதியழகன், தமிழ் மதி மற்றும் ம.கவின் ஆகியோர் கண்டன முழக்கமி ட்டனர்அரும்பாக்கம் பகுதியில் துணைச் செயலாளர் சா.தாமோதரன் தலைமையில் நடைபெற்றது.

செவ்வாய், 12 மே, 2020

காரல் மார்க்ஸ் 202வது பிறந்த நாள்

இன்று (5.5.20) முற் பகல் 10.00 மணி அளவில் தென் சென்னை திராவிடர் கழகத்தின் சார்பாக மெய்யியல் அறிஞர் காரல் மார்க்சின் 202வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
மாறுதல் என்பது மாறாதது! - காரல் மார்க்ஸ்

திராவிடமாணவர் கழக மாநில கலந்துரையாடல்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், திரை மற்றும் உட்புறம்


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 7 பேர், உரை
#திராவிடமாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக(03.05.2020) நடைபெற்றது.
#தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்துகொண்டு #வாழ்வியல் வழிகாட்டுதல் உரையை சிறப்புரையாற்றினார்
#80 க்கு அதிகமான மாணவர் தோழர்கள் பங்கேற்றார்கள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், உரை

தொழிலாளர் நாள்

இன்று (மே-1) தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தொழிலாளர் நாள் விழா கொண்டாடப்பட்டது. 1.5.20 முற் பகல்10.30 மணி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், Parthasarathy Rationalist, M S Muthu மற்றும் நேரு விவசாயிகள்சங்கம் உட்பட, பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்
Parthasarathy Rationalist

தொழிலாளர் நாளில் நினைவு கூற வேண்டியவர்களில் முதன்மையானவர்களில் கவிஞர் புதுவை சிவமும் ஒருவர்!

1936-37களில் ஆசியாவிலேயே முதல் முறையாக புதுவையில் 8 மணி நேர வேலை கவிஞர் 'புதுவை சிவம்' அவர்களின் முயற்சியால் நடைமுறைபடுத்தப்பட்டது..

ஞாயிறு, 10 மே, 2020

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 129 வது பிறந்தநாள்
29.4.20 முற் பகல் 11.00 மணி அளவில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 129 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது
புரட்சிக்களம் பாடிய கவிஞன்
வானின் வண்ணம் பாடிய கவிஞன் வாழ்வின் வசந்தம் பாடிய கவிஞன் அழகின் மயக்கம் பாடிய கவிஞன் அருவியின் அழகைப் பாடிய கவிஞன்
மலையின் சிகரம் பாடிய கவிஞன் கலையின் உணர்வைப் பாடிய கவிஞன்
நிலத்தின் நிலையைப் பாடிய கவிஞன்
நீரின் பெருமை பாடிய கவிஞன் கடலின் அலையைப் பாடிய கவிஞன்
உடலின் தன்மை பாடிய கவிஞன் காதல் சுகத்தைப் பாடிய கவிஞன் காம சுரத்தைப் பாடிய கவிஞன் மலரின் மணத்தைப் பாடிய கவிஞன்
மாந்தரின் மனதைப் பாடிய கவிஞன்
இயற்கை எழிலைப் பாடிய கவிஞன்
இல்லாத இறையைப் பாடிய கவிஞன் என்ற வகையில் எண்ணற்ற கவிஞருண்டு
ஆனால் . . .
அறிவின் ஆற்றலைப் பாடிய கவிஞன்
அழியாக் கல்வியைப் பாடிய கவிஞன்
பசியின் கொடுமையைப் பாடிய கவிஞன்
பகுத்தறிவுக் கருத்தைப் பாடிய கவிஞன்
ஜாதியை சாகடிக்கப் பாடிய கவிஞன்
சமத்துவம் சமைக்கப் பாடிய கவிஞன்
இசையின் இனிமையைப் பாடிய கவிஞன்
புரட்சிக் கனவைப் பாடிய கவிஞன் புரட்சிக் கருவைப் பாடிய கவிஞன் புரட்சியின் உருவைப் பாடிய கவிஞன்
பாரதிதாசன் ஒருவன் மட்டுமே !
அதனால் பெரியார் அப்பெருங் கவிஞனை புரட்சிக் கவிஞர் என்றே அழைத்தார் அந்தக் கவிஞன் காண விரும்பிய புதியதோர் உலகம் படைப்போம் - கெட்டப் போரிடும் உலகை வேரோடு சாய்ப்போம்!
பேதமிலா அறிவுடைய அவ் வுலகிற்கு பேசு சுயமரியாதை உலகென்று பெயர் வைப்போம்!
வாழ்க புரட்சிக் கவிஞர் !
- அதிரடி க . அன்பழகன்
- விடுதலை நாளேடு, 29.4.20

சர் பிட்டி தியாகராயரின் 169வது பிறந்த நாள்

27.4.20 முற்பகல் 11.00 மyணி அளவில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக திராவிடர் இயக்க முன்னோடி, தென்னிந்திய நலவுரிமை சங்கத்தின்(ஜஸ்டிஸ் கட்சி ) தலைவர், முதல் முதலாக சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் சர் பிட்டி தியாகராயரின் 169வது பிறந்த நாளை கொண்டாடப்பட்டது.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், திருவாரூா் கிருட்டினமூா்த்தி உட்படபடம் இதைக் கொண்டிருக்கலாம்: Parthasarathy Rationalist மற்றும் திருவாரூா் கிருட்டினமூா்த்தி


புரட்சித்தலைவர் வி.இ.லெனின் 150ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி

22.4.20 முற்பகல் 11.00 அளவில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக புரட்சித்தலைவர் வி.இ.லெனின் 150ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி!


புரச்சித்தலைவர் வி.இ.லெனின் 150ஆவது பிறந்த நாள் நிதழ்ச்சி!(22.4.20)


புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் 130வது பிறந்த நாள்
 தென் சென்னை திராவிடர் கழகம் சார்பாக 14.4.20  முற்பகல் 11.30 மணி அளவில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 130வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.