கொடி ஏற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொடி ஏற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 ஜூன், 2026

மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் குளம் அருகில் திராவிடர் கழக கொடி ஏற்றப்பட்டது

மாலை அணிவித்து மரியாதை

திராவிடர் கழகம்

3.6.2026 நண்பகல் 12:00 மணி அளவில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் குளம் அருகில், தெற்கு மாட வீதி மற்றும் இராமகிருஷ்ண மடம் சாலை சந்திப்பில், தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட திராவிடர் கழக கொடி கம்பத்தில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் தென் சென்னைமாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தலைமையில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டத் துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், இளைஞர் அணி மாவட்டத் தலைவர் ந.மணிதுரை ஆகியோர் முன்னிலையில் மாவட்டத் துணைத் தலைவர் டி. ஆர். சேதுராமன் கொடி ஏற்றி வைத்தார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

- விடுதலை நாளேடு, 06.06.2026


செவ்வாய், 2 ஜூலை, 2019

அடையாறு புதுப்பிக்கப்பட்ட கம்பத்தில் கழகக் கொடியேற்றினர்



அடையாறு கஸ்தூரிபாய் நகரில் அடையாறு கு. அசோக்குமாரால் புதுப்பிக்கப்பட்ட கம்பத்தில் கழகக் கொடியினை பொதுக் குழு உறுப்பினர், பெரியார் பெருந்தொண்டர் எம்.பி. பாலு முன்னிலையில், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் ஏற்றி வைத்தார். கழக அமைப்பு செயலாளர் வி. பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாவட்ட  செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மாவட்ட அமைப்பாளர் மு.ந. மதியழகன், வை. கலையரசன் ஆகியோர் பங்கேற்றனர். (சென்னை, 1.7.2019)
- விடுதலை நாளேடு, 2.7.19
 

திங்கள், 19 நவம்பர், 2018

தரமணியில் கழக கொடி ஏற்றம்



12.11.18 முற்பகல் 11.00 மணி அளவில் தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தரமணி தந்தை பெரியார் நகர் பேருந்து நிலையம் அருகில் தரமணி மஞ்சநாதன் தலைமையில், பெரியார் பெருந்தொண்டர் தரமணி எம்.ஜாபர் அலி ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் ஆகியோர் முன்னிலையில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் கழக கொடியை ஏற்றிவைத்தார். ச.துணைவேந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-  விடுதலை நாளேடு, 18.11.18