தென் சென்னை திராவிடர் கழகம்

நடவடிக்கை மற்றும் செயல்பாடு இடம் பெறும்

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சிந்தனை செய்வோம்
  • தமிழ் மலர்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வெற்றிவலவன் பக்கம்
  • சமூக நீதி
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu
தரமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தரமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 டிசம்பர், 2022

தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தரமணி பகுதியில் பெரியார் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் கழகக் கொடியேற்றம்.

04.12.2022 பிற்பகல் 3.00 மணி அளவில் தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தரமணி பகுதியில் பெரியார் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் மறைந்த தரமணி கோ.மஞ்சநாதனின் மகன் ம.ராஜி தலைமையிலும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையிலும் மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் புதிதாக ஏற்பாடு செய்யப்பட்ட கம்பத்தில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்
 December 05, 2022 • Viduthalai

04.12.2022 பிற்பகல் 3.00 மணி அளவில் தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தரமணி பகுதியில் பெரியார் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் மறைந்த தரமணி கோ.மஞ்சநாதனின்  மகன் ம.ராஜி தலைமையிலும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையிலும் மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் புதிதாக ஏற்பாடு செய்யப்பட்ட கம்பத்தில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார். உடன் திருவல்லிக்கேணி எஸ். அப்துல்லா.


.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:59 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கொடியேற்றம், தரமணி

புதன், 29 ஜூன், 2022

தரமணி கோ.மஞ்சநாதன் படத்திறப்பு கழகத் துணைத் தலைவர் - பொதுச்செயலாளர் பங்கேற்பு



  June 29, 2022 • Viduthalai

தரமணி, ஜூன் 29 கடந்த 27.06.2022, திங்கள் கிழமை, மாலை 3.30 மணி அளவில் தரமணி பெரியார் நகர், கம்பர் தெருவிலுள்ள பெரியார் இல்லத்தில் தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செயலாளர் தே.செ. கோபால், தென்சென்னை மாவட்ட துணைத்தலைவர் டி.ஆர்.சேதுராமன் ஆகியோர் முன்னிலையிலும் சுயமரியாதைச் சுடரொளி கோ.மஞ்சநாதனின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்று பேசினார்.

  சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி. வீரபத்திரன் தொடக்க உரையாற்றினார்.

 அதனைத் தொடர்ந்து தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், வழக்குரைஞர் 

ஒ. சுந்தரம் ஆகியோர் சுயமரியாதைச் சுடரொளி மஞ்சநாதனின் நினைவைப் பகிர்ந்து கொண்டு உரையாற்றினர்.

கழகத் துணைத் தலைவர் உரை

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சுயமரியாதைச் சுடரொளி கோ.மஞ்சநாதனின் படத்தை திறந்து வைத்து அவரின் தொண்டினைப் பாராட்டி பேசியதோடு, அவருடைய எதிர்பாராத மறைவு கழக குடும்பத்தினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது என்றும், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி அவருடைய குடும்பத்தினர் செயல்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை கழகம் எப்போதும் செய்ய தயாராக உள்ளது என்றும் கூறினார்.

'இந்த சமூகத்திற்கு தந்தை பெரியார் ஆற்றிய தொண்டினையும் அதனால் இந்த சமூகம் அடைந்த பலன்களையும் விளக்கி பேசி, பார்ப்பனர்கள் இறப்பை கூட விட்டு வைக்காமல் மூடப்பழக்க வழக்கங்களை திணித்து நம்முடைய சிந்தனையை மழுங்கடித்து பணம் பறித்து வாழ்ந்து வருகிறார்கள்'  என விளக்கி கருத்துரையாற்றினார்.

கழகப் பொதுச்செயலாளர் உரை

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு: 

  "சுயமரியாதைச் சுடரொளி அருமை தோழர் மஞ்சநாதன் அவர்களுக்கு செலுத்த வேண்டிய கடமையும் -  பொறுப்பும் செலுத்த வேண்டியவர் என்ற அடிப்படையில் தான் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் படத்தினை திறந்து வைத்துள்ளார்.

  திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர் ஒருவரின் மறைவு என்பது ஒரு சமூகப் போராளியின் மறைவு! அந்த மறைவின் தாக்கம் அந்த குடும்பத்தை விட சமூகத்தையே வெகுவாக பாதிக்கிறது. அந்த அடிப்படையில் சுயமரியாதைச் சுடரொளி மஞ்சநாதன் அவர்களின் மறைவு சமூகத்திற்கே பேரிழப்பாகும்.

திராவிட இயக்க சிந்தனைகளில் துளி அளவும் மாறுபடாமல் கழகத்தில் இணைத்துக் கொண்டு பணியாற்றியவர். சராசரி மனிதர்களை விட கருப்புச்சட்டை தோழர்களுக்கு வரும் இன்னல்கள் ஏராளம்; குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், வயதானவர் என்றால், உடல் உபாதைகள் என்று எந்த சிக்கல் வந்தாலும் துணிச்சலோடு, தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு எந்த விலையும் கொடுக்க தயார் என்று வாழக்கூடிய கொள்கை சீலர்கள் வரிசையில் வாழ்ந்தவர் அய்யா மஞ்சநாதன் அவர்கள்.

  என்னுடைய கொள்கை தான் எனக்கு முக்கியம்; அதில் தடுமாற்றம் இருக்காது என்று கடைசி வரை வாழ்ந்தவர். இவ்வளவு சீக்கிரம் அவரை இழப்போம் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. பெரியார் திடலில் வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்கள் எப்படியும் பார்த்து விடுவோம், அந்த அளவிற்கு நெருக்கமானவர் அய்யா மஞ்சுநாதன் அவர்கள் மீது அதிகம் கவனம் செலுத்தி அவருக்கு அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களுக்கு முடிந்த அளவு துணையாக இருந்து பாதுகாத்து தான் வந்தோம்! அப்பொறுப்பை நம்முடைய இரா.வில்வநாதன் ஆர்.டி.வீரபத்திரன், செ.ர.பார்த்தசாரதி உள்ளிட்டவர்கள் கவனித்து வந்தனர்.

மகத்தான தோழரை இழந்து நிற்கிறோம்! யார் யாருக்கு ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை! உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன், சமூகப் பார்வையுடன் வாழுங்கள் - தொண்டற மனப்பான்மையோடு வாழ்ந்து வழிகாட்டுங்கள். அது தான் நாம் அவருக்கு செய்ய வேண்டிய கடமையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொண்டு சுயமரியாதைச் சுடரொளி கோ.மஞ்சநாதன் அவர்களுக்கு தலைமை கழகத்தின் சார்பாக வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று உரையாற்றினார்.

பங்கேற்றோர்

சோழிங்கநல்லூர் மாவட்ட செயலாளர் அ. விஜய் உத்தம்ராஜ், அமைப்பாளர் குழ.செல்வராஜ், துணைத் தலைவர் தமிழினியன், சோழிங்கநல்லூர் பகுத்தறிவாளர் கழக தலைவர் பி.சி.ஜெயராமன், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன், தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராகவன் மற்றும் சா. தாமோதரன், ஆவடி மாவட்ட துணை செயலாளர் க.தமிழ்செல்வன், திராவிடர் தொழிலாளர் பேரவை பொருளாளர் கூடுவாஞ்சேரி இராசு, தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.இரா.மாணிக்கம், தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன், இளைஞர் அணி செயலாளர் ந.மணிதுரை, வீ.கதிரவன், வீ.இரமணதிலகம், இராஜேந்திரன், குமார், நங்கநல்லூர் பி.மோகன், பச்சை, கோடம்பாக்கம் ச.மாரியப்பன், சூளைமேடு ந. ராமச்சந்திரன், பிடிசி இராஜேந்திரன், தாம்பரம் சு.மோகன்ராஜ், சோமங்கலம் க.பாலமுரளி, பூவிருந்தவல்லி பெரியார் மாணாக்கன், கலைமணி, திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் பா. மணியம்மை, மஞ்சநாதன் அவர்களின் மகள்கள் ஆனந்தி, சவுந்தரி மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

மஞ்சநாதன் அவர்களின் மகன் தரமணி ம.ராஜி பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:03 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தரமணி, படத்திறப்பு, மஞ்சநாதன்

திங்கள், 13 ஜூன், 2022

தரமணி மஞ்சநாதன் மறைவு


கழகப் பொதுச்செயலாளர் தோழர்.அன்புராஜ் அவர்கள் தலைமையில் கழக கொடி போர்த்தி மறைந்த தோழர் கோ.மஞ்சநாதன் அவர்களுக்கு இராயப்பேட்டை மருத்துவமனையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. (13.6.22 நண்பகல்)
மறைவு
June 13, 2022 • Viduthalai

திராவிடர் கழக தென்சென்னை மாவட்ட தோழர் தரமணி கோ.மஞ்சுநாதன் (வயது 65) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடல் தரமணி கம்பர் தெருவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று (13.06.2022) மாலை 3 மணியளவில் இறுதி மரியாதை தரமணி இடுகாட்டில் நடைபெற்றது. தொடர்புக்கு: இரா.வில்வநாதன். தென் சென்னை மாவட்ட தலைவர் 9841895601

...........................................................

தரமணி மஞ்சுநாதன் மறைவுக்கு கழக துணைத்தலைவர் நேரில் இறுதி மரியாதை
 June 14, 2022 • Viduthalai

சென்னை, ஜூன் 14- தென் சென்னை தரமணி பகுதி   திராவிடர் கழக கொள்கை வீரர் கோ.மஞ்சு நாதன் (வயது 65) 12.06.2022  அன்று மறைவுற்றார். தகவலறிந்த கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நேற்று (13.06.2022) பகல் நேரில் சென்று கழகத்தின் சார்பில் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். 

இதில் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், மாவட்ட செயலாளர் விடுதலை நகர் பி.சி.ஜெயராமன், ஆவடி மாவட்ட கழக அமைப்பாளர் உடுமலை வடிவேல், தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மு. இரா.மாணிக்கம், மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், சென்னை மண் டல இளைஞரணி அமைப்பாளர் மு.சண்முகப்பிரியன்,  தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன் தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், தென் சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன்,  தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, மயிலாப்பூர் யுவராஜ், ஜெ.குமார், சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணி தலைவர் மு.நித்தியானந்தம், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன், பழவந்தாங்கல் க.தமிழினியன், புதுமை இலக்கியத் தென்றல் செயலாளர் வை.கலையரசன் குன்றத்தூர் திருமலை, க. கலைமணி, ஓட்டுநர் மகேஸ்வரன், அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாலை நடை பெற்ற மஞ்சுநாதனின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான கழக பொறுப்பா ளர்கள், தோழர்கள் வீரவணக்கம், வீரவணக்கம் என முழக்கமிட்டுச் சென்றனர். 

முன்னதாக தகவலறிந்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் அவர்கள் பகல் 1 மணிய ளவில் இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று தனது இறுதி மரியா தையை செலுத்தினார்.



இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:56 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தரமணி, மஞ்சநாதன், மறைவு

வெள்ளி, 12 நவம்பர், 2021

தரமணி பெரியார் பெருந்தொண்டர் ஜாபர் மறைவு

 



கடைசிவரை கருப்புச் சட்டையுடன் கொள்கை உறுதியுடன் தீவிரமாக பணியாற்றிய சென்னை தரமணி பெரியார் பெருந்தொண்டர் ஜாபர் (வயது-83) அவர்கள்   10.10.21 காலை 6.00 மணி அளவில் மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்து தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தரமணி அக்பர் தெருவில் உள்ள அவருடைய இல்லம் சென்று இறுதி மரியாதை செய்யப்பட்டது.

மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, தரமணி கோ. மஞ்சுநாதன் ஆகியோர் சென்றிருந்தனர்.

 மாலை 6 மணி அளவில் உடல் அடக்கம் நடைபெற்றது.
இடுகையிட்டது parthasarathy r நேரம் 2:02 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தரமணி, மறைவு, ஜாபர்

திங்கள், 22 பிப்ரவரி, 2021

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நூல்கள் வெளியீடு....


February 22, 2021 • Viduthalai

 

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாரதிதாசன் ஆய்விருக்கை சார்பில் 17.2.2021 அன்று விழா நடந்தது. விழாவில் இயக்குநர் கோ.விசயராகவன் இரு நூல்களை வெளியிட்டார். முதல் நூலை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், இன்னொரு நூலை புரட்சிக்கவிஞரின் பேரன் கோ.செல்வம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:04 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தரமணி, நூல் வெளியீடு

திங்கள், 15 பிப்ரவரி, 2021

"எல்லோருக்கும் உரியார்; அவர்தான் பெரியார்"


February 14, 2021 • Viduthalai

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சு. அறிவுக்கரசு-இரஞ்சிதம் அறக்கட்டளைப் பொழிவும், நூல் வெளியீடும்!

சென்னை, பிப். 14- உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தில் Òஎல்லோருக்கும் உரியார்; அவர்தான் பெரியார்” எனும் தலைப்பில், சு. அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளைப் பொழி வும், நூல் வெளியீட்டு விழாவும் நடை பெற்றது.

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத் தில் பிப்ரவரி மாதம் முழுவதும் தமிழ்த்தாய் 73 தமிழாய்வுப் பெரு விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், பன்னிரண்டாம் நாளான 12.2.2021 காலை 11 மணியளவில் “சு.அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்ட ளைச் சொற்பொழிவு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர் கள் தலைமை ஏற்றுச் சிறப்பித்தார். அதைத் தொடர்ந்து, திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவரும், அறக்கட்டளையின் நிறுவனருமான சு. அறிவுக்கரசு அவர்கள், சிறப்பாகச் செயல்படும் இயக்குநரையும், நிகழ்ச் சியை ஒருங்கிணைத்துக் கொண்டி ருக்கும் இவ்வறக்கட்டளையின் பொறுப் பாளரும், உதவிப்பேராசிரி யருமான முனைவர் நா. சுலோசனா ஆகியோ ருக்கு நன்றி தெரிவித்துப் பேசினார்.

அவர் தனது உரையில், தன்னிலும் கொள்கையில் சிறந்திருந்த காலம் சென்ற தனது இணையர் இரஞ்சிதம் அவர்கள், ஜாதி மறுப்பில் எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து, தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிகர்நிலைப் பல்கலைக் கழகத் திலுள்ள பெரியார் சிந்தனை உய ராய்வு மய்யத்தின் உதவிப் பேராசிரியர் த.ஜெயகுமார், “எல்லோருக்கும் உரி யார்; அவர்தான் பெரியார்” எனும் தலைப்பிலான ஆய்வின் சுருக்கத்தைப் பொழிவாக வழங்கினார். அதில் பார்ப்பனர் நலம் உட்பட சமூகம், அரசியல், இலக்கியம், பெண்விடுதலை, மூடநம்பிக்கை ஒழிப்பு, மொழிச்சீர் திருத்தம், கடவுள் மறுப்பு போன்ற பல்வேறு தலைப்புகளைப் பட்டிய லிட்டு, ஆன்மிகத்தில் நம்பிக்கைக் குரியவர்களாக இருந்தாலும் அவர் களும் பெரியாரை ஏற்றுக் கொண்டா டுவதைச் சுட்டிக்காட்டி, பெரியார் ஒருவர்தான் அனைவருக்கும் உரியார் என்று அனைவரின் ஒப்புதலோடு எண்பித்தார்.

முன்னதாகத் தலைமையேற்றுப் பேசிய இயக்குநர் கோ.விசயராகவன் பெரியாரின் அருமையை ஆய்வு மாணவர்களுக்கு சிறப்பாக எடுத்து ரைத்தார். நிகழ்வில் முனைவர் த. ஜெயக்குமார் எழுதிய எல்லோருக்கும் உரியார்; அவர்தான் பெரியார்! புத்த கத்தை இயக்குநர் வெளியிட, அறக் கட்டளையின் நிறுவனர் சு. அறிவுக் கரசு பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பட்டாபிராம் இந்து கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரி யர் முனைவர் தெய்வ அகண்ட பரமன் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். மற்றொருவர் முனைவர் பட்ட ஆய்வாளர் சுப்ப ராயன், பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த இராணிப்பேட்டை ஜெய ராமன், ஆவடி மாவட்ட அமைப்பா ளர் உடுமலை வடிவேல், உலகத் தமி ழாராய்ச்சி உதவிப்பேராசிரியர் முனைவர் மணி.கோ. பன்னீர்செல்வம், பெரியார் வலைக்காட்சி அருள் மற் றும் ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவிருந்தது.ஆனால் இயக் குநர் முனைவர் கோ.விசயராகவன் பெரியார் பெயரில் நடைபெறும் இந் நிகழ்வில் தான் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறி, காலை 11 மணியளவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:30 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அறிவுக்கரசு, உலக தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி

திங்கள், 19 நவம்பர், 2018

தரமணியில் கழக கொடி ஏற்றம்



12.11.18 முற்பகல் 11.00 மணி அளவில் தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தரமணி தந்தை பெரியார் நகர் பேருந்து நிலையம் அருகில் தரமணி மஞ்சநாதன் தலைமையில், பெரியார் பெருந்தொண்டர் தரமணி எம்.ஜாபர் அலி ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் ஆகியோர் முன்னிலையில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் கழக கொடியை ஏற்றிவைத்தார். ச.துணைவேந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-  விடுதலை நாளேடு, 18.11.18

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:28 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கொடி ஏற்றம், தரமணி
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

திராவிடம் வெல்லும்

திராவிடம் வெல்லும்

தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாள்

தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாள்
தியாகராயர் நகர்

Translate

இந்த வலைப்பதிவில் தேடு

முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் நன்கொடை வசூல்

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம, 22. 11 .2025 மாலை 6 மணி அளவில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ், கஜபதி தெருவில் உள்ள ஆர்.வீ. ஆட்டோ ஒர்க்ஸ் அருகில், மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன் கடவுள் மறுப்பு கூறினார். மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம் அவர்கள் பெரியார் உலகம் நிதி திரட்டுதல், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், தமிழர் தலைவர் ஆசிரியரின் 93 வது பிறந்த நாளை(டிசம்பர்- 2) சிறப்பாக கொண்டாடுதல் குறித்து நோக்க உரையாற்றினார். நோக்க உரையின் அடிப்படையில் பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ. ராகவன், துணைச் செயலாளர் கரு. அண்ணாமலை, அரும்பாக்கம் சா. தாமோதரன், மயிலை சோ.பாலு, எம்.டி. சி. சு.செல்வம், வெ.கண்ணன், இளைஞர் அணி துணைத் தலைவர் அ.அன்பு, இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா. மாரிமுத்து, மந்தைவெளி எ. பன்னீர்செல்வம், தரமணி ம.ராஜு ஆகியோர் கருத்துகளை எடுத்துரைத்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. இரங்கல் தீர்மானம் கவியருவி ஈரோடு தமிழன்பன், தாம்பரம் பெரியார் பெருந்தொண்டர் தி.இரா.ரத்னசாமி, இரத்தினசாமி அவர்களின் இணையர் ர. ஆதிலட்சுமி மற்றும் பெரியார் பெருந்தொண்டர் மயிலை ந.கிருஷ்ணன் ஆகியோரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 2. 'பெரியார் உலகம்' கட்டுமான நிதிக்கு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் நன்கொடை வசூல் செய்து தருவதன ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது. 3. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93 வது ஆண்டு (டிசம்பர் -2) பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்துவது எனவும், 4. கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்து வழங்குதல் மற்றும் கழக பரப்புரை பணிகளை தீவிரப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 5. பெரியார் உலகம் நிதி திரட்டுவதற்காக மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இளைஞர் அணி துணைத் தலைவர் அ. அன்பு நன்றி கூறினார்.
Powered By Blogger

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

Wikipedia

தேடல் முடிவுகள்

சிறப்புடைய இடுகை

தெலங்கான நாத்திக சங்கத்தினரின் இசைப் பாடலுடன் பெரவள்ளூரில் பெரியார் 148 ஆம் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம்!

சென்னை, செப்.20 வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், பெரம்பூர் – அகரம் – பெரவள்ளூர் சதுக்கத்தில் கடந்த 17.9.2026 அன்று மாலை 6 மணிக்கு, ...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16
தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில்-அறநிலையத்துறை-நுங்கம்பாக்கம்

லேபிள்கள்

  • ‘உரையாடல் குடில்
  • 'முகம்' மாமணி
  • 1000 ஆவது நிகழ்ச்சி
  • 1000ஆவது நிகழ்ச்சி
  • 13மாவட்டம்
  • 1985
  • 2020
  • 2021
  • 2022
  • 2025
  • 2053
  • 6 மாவட்டங்கள்
  • 90வயது
  • 9ஆவது அட்டவணை
  • அ. அன்பரசன் – பொ. மந்த்ரா அபிநயா
  • அ.பாபு
  • அகழாய்வு அறிக்கை
  • அகற்றம்
  • அசோக் நகர்
  • அஞ்சலா
  • அஞ்சாமை
  • அடையாறு
  • அண்ணா
  • அண்ணா நினைவு நாள்
  • அண்ணா பிறந்தநாள்
  • அண்ணாநகர்
  • அதிரடி அன்பழகன்
  • அம்பேத்கர்
  • அம்பேத்கர் பாலம்
  • அமுதவள்ளி
  • அமைச்சர்
  • அமைதிப்பேரணி
  • அமைந்தகரை
  • அமைப்பு
  • அய்ந்தாம் பயணக்குழு
  • அய்யாவின் அடிச்சுவட்டில்
  • அய்ஸ் அவுஸ்
  • அய்ஸ்அவுஸ்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சுனன்
  • அரங்கண்ணல்
  • அரங்கநாதன்
  • அரங்கம்
  • அரியலூர்
  • அரும்பாக்கம்
  • அரும்பாக்கம்< சா. தாமோதரன்
  • அருள்
  • அருள்மொழி
  • அவ்வை நடராசன்
  • அவமதிப்பு
  • அழகிரி
  • அழிப்பு
  • அளிப்பு
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிப்பு
  • அறிவிப்பு
  • அறிவிப்பு பலகை
  • அறிவு இல்லம்
  • அறிவுக்கரசு
  • அன்பளிப்பு
  • அன்பு
  • அனகை ஆறுமுகம்
  • அனைத்து கட்சி
  • அனைத்து ஜாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் பிறந்தநாள்
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியருக்கு பாராட்டு
  • ஆசைத்தம்பி
  • ஆட்சியர் அலுவலகம்
  • ஆடிட்டர் ராமச்சந்திரன்
  • ஆண்டு சந்தா
  • ஆண்டு மலர்
  • ஆதித்தமிழர்
  • ஆதித்தனார்
  • ஆம்ஸ்ட்ராங்
  • ஆயிரம் விளக்கு
  • ஆர்எஸ்எஸ்
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரம் வீரப்பன்
  • ஆலந்தூர்
  • ஆவடி
  • ஆளுநர்
  • ஆளுநர் எதிர்ப்பு
  • இசையின்பன்
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டைக் காக்க
  • இடஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு ஆணை
  • இடிப்பு
  • இணையதளம்
  • இணையேற்பு
  • இணையேற்பு நாள்
  • இதழ்
  • இதழ் வெளியீடு
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்தித் திணிப்பு
  • இந்திய எதிர்ப்பு
  • இந்திய மாணவர் சங்கம்
  • இந்திரா நகர்
  • இந்திராநகர்
  • இயக்க நிதி
  • இரங்கல்
  • இரண்டாம் கட்டம்
  • இரத்தினசாமி
  • இரயில் நிலையம்
  • இராசவேலு
  • இராமநாதபுரம்
  • இராயப்பேட்டை
  • இராஜரத்தினம் அரங்கம்
  • இராஜரத்தினம் ஸ்டேடியம்
  • இராஜா அண்ணாமலைபுரம்
  • இருசக்கர வண்டி
  • இல்லத் திறப்பு
  • இல கணேசன்
  • இலங்கைத் தூதரகம்
  • இலயோலா
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இளைஞர் அணி மாநாடு
  • இளைஞர்அணி
  • இளைஞரணி
  • இளைஞரணி மாநில மாநாடு
  • இறப்பு
  • இறுதி மரியாதை
  • இறுதி முழக்கம்
  • இறுதிப் பேட்டி
  • இறுதிப் பேருரை
  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை
  • ஈக்காட்டுத்தாங்கல்
  • ஈரோட்டுத் தீர்மானம்
  • ஈரோடு
  • ஈரோடு. சிறப்புத் தீர்மானம்
  • ஈழப்போராட்டம்
  • ஈழம்
  • உடல் நலன்
  • உடல்நலம்
  • உண்ணா நிலை
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உதயநிதி ஸ்டாலின்
  • உதவி
  • உயர்நீதிமன்றம்
  • உரை
  • உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
  • உறுதி முழக்கம்
  • உறுதிமொழி
  • உறுப்பினர் சேர்க்கை
  • ஊடகவியலாளர்
  • எத்திராஜ்
  • எத்திராஜன்
  • எதிர்ப்பு
  • எம் பி பாலு
  • எம் ஜி ஆர் நகர்
  • எம்.பி பாலு
  • எம்.பி.பாலு
  • எம்.ஜி.ஆர். நகர்
  • எம்.ஜி.ஆர்.நகர்
  • எம்பி பாலு
  • எம்ஜிஆர் நகர்
  • எரிப்பு
  • எழிலன்
  • எழுச்சி மாநாடு
  • எழுத்தாளர் மன்றம்
  • எழும்பூர்
  • எஸ்.அய். ஆர்.
  • ஏழுமலை
  • ஏற்புரை
  • ஒழிப்பு
  • ஒளிப்படக் கண்காட்சி
  • ஒளிபெருக்கி
  • ஓசூர்
  • ஓட்டேரி
  • ஓபிசி வாய்ஸ்
  • க.தனசேகரன்
  • க.பார்வதி
  • க.வெற்றிவீரன்
  • கடலூர்
  • கடற்கரை
  • கடை அடைப்பு
  • கடை வசூல்
  • கண்டண போராட்டம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டன உரை
  • கண்டனக் கூட்டம்
  • கண்டனம்
  • கண்மதியன்
  • கந்தவேல்
  • கம்யூனிஸ்ட்
  • கருத்தரங்கம்
  • கருப்புக் கொடி
  • கருப்புக்கொடி
  • கரூர்
  • கரோனா
  • கல்வி
  • கல்வெட்டு
  • கலந்துரை
  • கலந்துரையாடல்
  • கலைஞர்
  • கலைஞர் நகர்
  • கலைஞர் பிறந்த நாள்
  • கலைஞர் பிறந்தநாள்
  • கவிஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிதை
  • கவிதைப் பித்தன்
  • கழக கொடி
  • கழக நிகழ்வுகள்
  • கழக போராட்டம்
  • கள வீரர்கள்
  • கற்போம் பெரியாரியம்
  • கன்சிராம்
  • கனகரத்தினம்
  • கனடா
  • கனிமொழி
  • காசா
  • காஞ்சி
  • காட்டுப்பாக்கம்
  • காண்டீபன்
  • காணொலி
  • காமராசர்
  • காமராசர் அரங்கம்
  • காமராஜ்
  • கார்ல்மார்க்ஸ்
  • காரல் மார்க்ஸ்
  • கால்டுவெல்
  • காலக்கணக்கு
  • காலச்சுவடு
  • காவிரி
  • கி வீரமணி
  • கி. இராமலிங்கம்
  • கி.வீரமணி
  • கி.வீரமணி விருது
  • கிரகணம்
  • கிரிதரன்
  • கிளைக் கழகங்கள்
  • கிளைக்கழகம்
  • கீழடி
  • கு.க.செல்வம்
  • குட்டிமணி
  • குடந்தை
  • குடியரசுத்தலைவர்
  • குடியுரிமை
  • குடும்ப விழா
  • கும்பகோணம்
  • கும்மிடிப்பூண்டி
  • குமரேசன்
  • குமார்
  • குமாரி
  • குலக்கல்வி
  • குழந்தை நாதன்
  • குழு
  • குளக்கரை
  • குளித்தலை
  • கூட்டம்
  • கூடல் மாநாடு
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளம்
  • கேரளா
  • கைது
  • கையெழுத்து
  • கொடி ஏற்றம்
  • கொடியேற்றம்
  • கொடும்பாவி எரிப்பு
  • கொலை முயற்சி
  • கோ. அரங்கநாதன்
  • கோ.சாமிதுரை
  • கோ.பா.சாரதி
  • கோ.வீ. ராகவன்
  • கோட்சே
  • கோட்டூர்
  • கோட்டூர்புரம்
  • கோடம்பாக்கம்
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோவிந்தசாமி
  • கோவில்
  • கோவில்பட்டி
  • கோவை
  • சக்திதாசன்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சட்ட விழிப்புணர்வு
  • சட்டமன்றம்
  • சடுகுடு
  • சண்முகநாதன்
  • சண்முகப்பிரியன்
  • சத்யராஜ்
  • சந்தா
  • சந்தா வழங்கல்
  • சந்திப்பு
  • சந்திப்புக் கூட்டம்
  • சந்திரா
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சமூகநீதிக் காவலர்
  • சனாதனம்
  • சா. தாமோதரன்
  • சா.தாமோதரன்
  • சாதி ஒழிப்பு
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாமிநாதன்
  • சாலிகிராம்
  • சாஸ்திரி பவன்
  • சி.பா.ஆதித்தனார்
  • சி.பி.அய் – எம்
  • சிகாமணி
  • சிட்டிபாபு
  • சித்த மருத்துவர்கள்
  • சிதம்பரம்
  • சிந்தனை பலகை
  • சிந்தாதிரிப்பேட்டை
  • சிந்தாதிரிபேட்டை
  • சிலை திறப்பு
  • சிவகங்கை
  • சிறப்புக்கூட்டம்
  • சின்மயா நகர்
  • சு.குமாரதேவன்
  • சுதாகர்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதைச் சுடரொளி
  • சுவர் எழுத்து
  • சுவர் ஓவியம்
  • சுவரெழுத்து
  • சுழலும் சொற்போர்
  • சுற்றுலாத்துறை அமைச்சர்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • சூளைமேடு
  • சூளைமேடு நன்கொடை
  • செ.ர.பார்த்தசாரதி
  • செங்கல்பட்டு
  • செங்கற்பட்டு
  • செங்குட்டுவன்
  • செங்கை
  • செந்தில்வேல்
  • செந்துறை
  • செயல்முறை
  • செயலவைத் தலைவர்
  • செயற்குழு
  • செயற்குழுக் கூட்டம்
  • செல்வப்பெருந்தகை
  • சென்னை
  • சென்னை அசோக் நகர்
  • சென்னை காஞ்சி
  • சென்னை பல்கலைக்கழகம்
  • சென்னை மண் டலம்
  • சென்னை மண்டலம்
  • சேகர்
  • சேத்துப்பட்டு
  • சேதுராமன்
  • சேலம்
  • சைதாப்-பேட்டை
  • சைதாப்பேட்டை
  • சைதை
  • சைதை எம்.பி பாலு
  • சைதை எம்.பி.பாலு
  • சைதை துரைசாமி
  • சைதை தொகுதி
  • சைதை பாலு
  • சைதை மேற்கு
  • சோ.சுரேஷ் – மு.பவானி
  • சோமங்கலம்
  • சோமு கனிமொழி
  • சோழிங்கநல்லூர்
  • ஞாயிறு மலர்
  • டி ஆர் பாலு மனைவி
  • டி கே நடராஜன்
  • டி.ஆர். சேதுராமன்
  • டி.ஆர்.பாலு
  • டி.கே.நடராசன் – குஞ்சிதம்
  • டிரோஜன் குதிரை
  • டில்லி
  • டில்லி பெரியார் மய்யம்
  • டெய்சி
  • த.க.நடராசன்
  • த.புகழேந்தி
  • த.வீரசேகரன்
  • தங்கம்
  • தஞ்சாவூர்
  • தஞ்சை
  • தஞ்சை மாநாடு
  • தட்சிணாமூர்த்தி
  • தட்ஷணாமூர்த்தி
  • தடை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலைக்கு மாலை
  • தந்தை பெரியார் பிறந்த நாள்
  • தமிழ்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் வார விழா
  • தமிழ்ச்செல்வன்
  • தமிழ்நாடு முதல்வர் உரை
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் புலிகள்
  • தமிழச்சி
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழின எழுச்சி நாள்
  • தமிழினி
  • தரமணி
  • தலைமை கழகம்
  • தலைமை செயற்குழு
  • தலைமைக் கழகம்
  • தலைமைச் செயற்குழு
  • தலையங்கம்
  • தாக்குதல்
  • தாம்பரம்
  • தாம்பரம்<விஜயவாடா
  • தாமோதரன்
  • தாராபுரம்
  • தி.இரா.இரத்தினசாமி
  • தி.தொ.க.
  • தி.மு.க. மாணவர்
  • திசை
  • திட்டங்கள்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமுக
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் கலையரங்கம்
  • தியாகராயர் நகர்
  • தியாகராயர் பிறந்த நாள்
  • திராவிட மகளிர்
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடக் கொள்கை அறிக்கை 
  • திராவிடர் எழுச்சி மாநாடு
  • திராவிடர் எழுச்சி மாநாடு!
  • திராவிடர் கழக மகளிரணி
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திராவிடர்கழகம்
  • திரிபுரா
  • திருச்சி
  • திருத்தணிகாசலம்
  • திருத்தம்
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமண நாள்
  • திருமண வரவேற்பு
  • திருமணநாள்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருவண்ணாமலை
  • திருவல்லிக்கேணி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் சிலை
  • திருவான்மியூர்
  • திருவிழா
  • திருவெற்றியூர்
  • திருவொற்றியூர்
  • திரைப்படம்
  • திவாகரன்
  • திறந்தவெளி மாநாடு
  • திறப்பு
  • தினத்தந்தி
  • தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
  • தீர்மான விளக்கம்
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துண்டறிக்கை
  • துப்பாக்கிசூடு
  • துயர் துடைப்பு
  • துரை.அருண்
  • துரை.இராவணன்
  • துரைமுத்து
  • தூத்துக்குடி
  • தெருமுனை
  • தெருமுனை கூட்டம்
  • தெருமுனைக் கூட்டம்
  • தென் சென்னை
  • தென்சென்னை
  • தென்றல்
  • தென்னரசு
  • தே.செ.கோபால்
  • தேசியக் கல்வி
  • தேர்தல்
  • தேர்தல் பரப்புரை
  • தேனாம்பேட்டை
  • தேனி
  • தொல்லியல் அகழாய்வு
  • தொலைக்காட்சி
  • தொலைக்காட்சி நிலையம்
  • தொழிலாளர்
  • தொழிலாளர் அணி
  • தொழிலாளர் அமைச்சர்
  • தொழிலாளர் சட்டம்
  • தொழிலாளரணி மாநாடு
  • தொழிற்சங்கம்
  • தோழர்
  • நகல் எரிப்பு
  • நடராசன்
  • நடராஜன்
  • நடராஜன் குடும்பம்
  • நடவடிக்கைகள்
  • நடிகர்ராஜேஷ்
  • நடை
  • நரிமணம்
  • நலம் விசாரிப்பு
  • நன்கொடை
  • நன்னன்
  • நன்னன் குடில்
  • நன்னன் மகள்
  • நன்னிலம்
  • நாகநாதன்
  • நாகப்பன்
  • நாகம்மையார்
  • நாகர்கோயில்
  • நாத்திகர் மாநாடு
  • நால் அறிமுகம்
  • நிதி
  • நிவாரணப் பணி
  • நிவாரணம்
  • நிறைவு விழா
  • நினைவகம்
  • நினைவகம் திறப்பு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவு நாள் கூட்டம்
  • நினைவுநாள்
  • நினைவேந்தல்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீட் ஒழிப்பு
  • நீட் தேர்வு
  • நீட் தேர்வு எதிர்ப்பு
  • நீட் விலக்கு
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதிகள்
  • நீதிபதிகள் தீர்ப்பு
  • நீதிபதிகள் நியமனம்
  • நீதிமன்றம்
  • நீலகண்டன்
  • நுங்கம்பாக்கம்
  • நுழைவுத் (CUET) தேர்வு
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு நிறைவு விழா
  • நெகிழித்திரை
  • நேர்காணல்
  • நொச்சி நகர்
  • ப.க
  • பக்தவச்சலம்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுதி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சாட்சரம்
  • பட்டம்மாள்
  • பட்டாளம்
  • பட்டியல்
  • பட்ஜெட்
  • பட்ஜெட்டைக் கண்டித்து
  • படத் திறப்பு
  • படத்திறப்பு
  • படிப்பகம்
  • படுகொலை
  • பணி நிறைவு
  • பணிநிறைவு
  • பயணக் குழுவிற்கு வரவேற்பு
  • பயணம்
  • பயனாடை
  • பயிலரங்கம்
  • பயிற்சி
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சிப் பட்டறை
  • பரப்புரை
  • பரப்புரை பயணம்
  • பல்கலைக்கழகம்
  • பவழ விழா
  • பவழ விழா மாநாடு
  • பள்ளி
  • பா. தென்னரசு
  • பா.தட்சிணாமூர்த்தி
  • பாக்கியம்
  • பாடல் தொகுப்பு
  • பாத பூஜை
  • பாதுகாப்பு மாநாடு
  • பாம்குரோ
  • பார்த்தசாரதி
  • பார்வதி
  • பாரத் ஓவர்சீஸ் வங்கி
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுரை
  • பாலகிருஷ்ணன்
  • பாவாணர் மகன்
  • பாஸ்கர்
  • பி பி சிங்
  • பிரச்சார பயணம்
  • பிரச்சாரப் பயணம்
  • பிரபாகரன்
  • பிரேமா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பினராய் விஜயன்
  • புகழ் பேரணி
  • புகார்
  • புத்தகக்காட்சி
  • புத்தகம் வெளியீடு
  • புத்தாண்டு
  • புதிய பொறுப்பாளர்
  • புதிய பொறுப்பாளர்கள்
  • புதிய பொறுப்பு
  • புதுக்கோட்டை
  • புதுப்பேட்டை
  • புதுமை இலக்கிய தென்றல்
  • புதுமை இலக்கியத் தென்றல்
  • புரசை
  • புரசைவாக்கம்
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சிக்கவிஞர் விருது
  • புரட்சிக்கவிஞர் விழா
  • புரடசிக்கவிஞர்
  • புழல்
  • பூவிருந்தவல்லி
  • பெரியார்
  • பெரியார் ஆயிரம்
  • பெரியார் உலகம்
  • பெரியார் ஓட்டம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் பன்னாட்டு அமைப்பு
  • பெரியார் பிஞ்சு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் பிறந்தநாள்
  • பெரியார் பெருந்தொண்டர்
  • பெரியார் மேளா
  • பெரியார் யுவராஜ்
  • பெரியார் விருது
  • பெலா மு. சந்திரா
  • பேட்டி
  • பேரணி
  • பேரமனூர்
  • பொதுக் குழு
  • பொதுக் கூட்டம்
  • பொதுக்-கூட்டம்
  • பொதுக்குழு
  • பொதுக்குழு உறுப்பினர்
  • பொதுக்கூட்டம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பாளர் கலந்துரையாடல்
  • பொறுப்பாளர்கள்
  • பொறுப்பு
  • பொறுப்பு மாவட்டங்கள்
  • பொன்.மாடசாமி
  • பொன்முடி
  • பொன்விழா
  • பொன்னேரி
  • போராட்டம்
  • போரூர்
  • மகளிர்
  • மகளிர் அணி
  • மகளிர் பாசறை
  • மகளிர்ப் பாசறை
  • மகளிரணி
  • மகளிரணி -மகளிர் பாசறை
  • மகளிரணி கலந்துரையாடல்
  • மஞ்சநாதன்
  • மண்டல் குழு பரிந்துரை
  • மண்டல் பரிந்துரை
  • மண்டல கலந்துரை
  • மண்டல கலந்துரையாடல்
  • மண்டல மாநாடு
  • மண்டலம்
  • மண நாள்
  • மணநாள்
  • மணவிழா
  • மணவிழா வரவேற்பு
  • மணி அம்மையார்
  • மணிப்பூர்
  • மணியம்மையார்
  • மதியழகன்
  • மதிவதனி
  • மதுரை
  • மந்தவெளி
  • மந்தைவெளி
  • மம்தா
  • மயக்க பிஸ்கட்டுகள்
  • மயிலாப்பூர்
  • மயிலை
  • மயிலை த.வேலு
  • மயிலை முரளி
  • மரியாதை
  • மருத்துவக் கல்லூரி
  • மல்யுத்த வீராங்கனை
  • மலர் வளையம்
  • மலையாளிகள்
  • மறியல்
  • மறைமலைநகர்
  • மறைவு
  • மன்றல்
  • மனித சங்கிலி
  • மனுதர்ம எரிப்பு
  • மா. சுப்பிரமணியன்
  • மா.பா.அன்புதுரை
  • மாசு
  • மாட்சிகள்
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாணவர் இயக்கம்
  • மாணவர் எழுச்சி மாநாடு
  • மாணவர் கழகம்
  • மாணவர் நகலகம்
  • மாணவர் பேரணி
  • மாணவரணி
  • மாணவரணி கூட்டம்
  • மாணிக்கம்
  • மாதவன்
  • மாநாட்டு தீர்மானங்கள்
  • மாநாடு
  • மாநில இளைஞரணி
  • மாநில கலந்துரை
  • மாநில கலந்துரையாடல்
  • மாநில பொறுப்பாளர்
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாநிலக் கல்லூரி
  • மார்ஷல்
  • மாலை
  • மாலை அணிவி
  • மாலை அணிவிப்பு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மாவட்டக் கழகம்
  • மாவட்டம்
  • மின்சாரம்
  • மீனம்பாக்கம்
  • மீனா முத்தையா
  • மு.இரா.மாணிக்கம்
  • மு.சண்முகப்பிரியன்
  • முகம் மாமணி
  • முத்தரசன்
  • முத்தையன்
  • முதல்வர்
  • மும்பை
  • மும்மொழித் திட்டம்
  • முழக்கம்
  • முழு அடைப்பு
  • முற்றுகை போராட்டம்
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூர்த்தி
  • மெமோரியல் ஹால்
  • மேற்கு சென்னை
  • மேனாள் டிஜிபி ஏ.ராஜ்மோகன்
  • மேனாள் பிரதமர்
  • மோட்டார் சைக்கிள்
  • யுவராஜ்
  • யூஜிசி
  • ரகுராமன்
  • ரயில்
  • ரயில் மறியல்
  • ராதிகா தாயார்
  • ராமாபுரம்
  • ராமேசுவரம்
  • ராயப்பேட்டை
  • ராயல்டி
  • ராஜரத்தினம் அரங்கம்
  • ரிசர்வ் வங்கி
  • ரெக்கார்ட்ஸ்
  • லக்னோ
  • லெனின்
  • வ.உ.சி.
  • வ.கோட்டம்
  • வங்கி
  • வங்கிகள்
  • வங்கிப் பணி
  • வட்டார மாநாடு
  • வட சென்னை
  • வடசென்னை
  • வண்டி பரப்புரை
  • வர்ணாசிரம எதிர்ப்பு
  • வரவேற்பு
  • வரவேற்பு விழா
  • வருணாசிரம எதிர்ப்பு
  • வருமானவரம்பாணை
  • வழக்குரைஞர்
  • வழக்குரைஞரணி
  • வழகுரைஞர்
  • வள்ளியம்மாள்
  • வள்ளுவர் கோட்டம்
  • வள்ளுவர்கோட்டம்
  • வளசரவாக்கம்
  • வளர்ச்சி நிதி
  • வன்னி அரசு
  • வாகனம் பரப்புரை
  • வாசுதேவன்
  • வாழ்க்கை
  • வாழ்க்கை குறிப்பு
  • வாழ்த்து
  • வி.சி.க.
  • வி.பி.சிங்
  • வி.ஜி.பி.
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை சிறுத்தைகள்
  • விடுதலை நிதி
  • விடுதலை90
  • விடுதலைச் சந்தா
  • விருகம்பாக்கம்
  • விருது
  • வில்சன்
  • வில்வநாதன்
  • விலைவாசி
  • விழா
  • விழிப்புணர்வுப் பிரச்சார பயணம்
  • விழுப்புரம்
  • விளக்கக் கூட்டம்
  • விளக்கம்
  • விளம்பரம்
  • விளையாட்டுப் போட்டி
  • வீரசேகரன்
  • வீரமர்த்தினி
  • வீரர்
  • வீரவணக்கம்
  • வெளியீடு
  • வெற்றி
  • வே.சிறீதர்
  • வேட்பாளர்
  • வேலை வாய்ப்பு
  • வேலைத் திட்டம்
  • வேழவேந்தன்
  • வைக்கம்
  • வைக்கம் போராட்டம்
  • வைகோ
  • ஜனநாதன்
  • ஜனநாயக விரோதம்
  • ஜனவரி2024
  • ஜாதி ஒழிப்பு மாநாடு
  • ஜாபர்
  • ஜாபர்கான் பேட்டை
  • ஸ்டாலின்
  • ஹிந்தி எதிர்ப்பு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயர் எழுதிட போராட்டம்
    திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அ...
  • சூளைமேட்டில் 43வது மாநாடு-9.2.15
    விடுதலை,6.2.15 விடுதலை,8.2.15,பக்கம்-3
  • நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் மறைவு
                                                                                வருந்துகிறோம் தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகு...
  • மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் நன்கொடை
    பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்காக ரூ.5000, பெரியார் நூலக வாச...
  • கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி நன்கொடை
     சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகரைச் சேர்ந்த கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைக...
  • ச.துணைவேந்தன் - மு. உமா இணையேற்பு விழா
    சுயமரியாதை திருமண விழா நாள்: 10.2.2019 ஞாயிறு மாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள் இடம்: பத்மாவதி திருமண மண்டபம், சூனாம்பேடு மணமக்கள்:...
  • கு.பா. தமிழினி – சு. ஆகாஷ் மகோதர் வாழ்க்கை இணையேற்பு விழா
    கு.பா. தமிழினி – சு. ஆகாஷ் மகோதர் வாழ்க்கை இணையேற்பு விழா தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி – கோ. குமாரி இணையரின்...
  • இனமானப் பேராசிரியர் அன்பழகன் இறுதி ஊர்வலம்
    மறைந்த இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்...
  • சைதை எம்.பி. பாலு பேசுகிறேன்!
    1948 ஆம் ஆண்டு ஆலந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியாரின் பேச்சை முதல் முதலாக கேட்டேன். அன்று முதல் நான் பெரியாரின் ...
  • நடிகர் எம்.ஏ.கிரிதரன் அவர்களின் முதலாம் ஆண்டு  நினைவுநாளையொட்டி நன்கொடை!
    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, சிக்கல்நாய்க்கன் பேட்டை அஞ்சல் கிளிமங்கலத்தைச் சேர்ந்த பிச்சைமணியின் மகள் பி.முத்துச்செல்வி அவர...

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (57)
    • ▼  அக்டோபர் (2)
      • சுயமரியாதைக் குடும்ப விழா: கழகத் துணைத் தலைவர், கழ...
      • தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி செ...
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (10)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (6)
  • ►  2025 (94)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (16)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (9)
  • ►  2024 (177)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (22)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (40)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (10)
  • ►  2023 (164)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (14)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (13)
  • ►  2022 (180)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (23)
    • ►  செப்டம்பர் (13)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (25)
    • ►  ஜூன் (23)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (9)
  • ►  2021 (119)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (14)
    • ►  பிப்ரவரி (24)
    • ►  ஜனவரி (18)
  • ►  2020 (66)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (12)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (11)
  • ►  2019 (119)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (123)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (15)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (6)
  • ►  2017 (81)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (46)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (84)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (13)
    • ►  ஜனவரி (5)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.