புதன், 28 மார்ச், 2018

டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரை துணைவேந்தராக நியமிப்பதா?

ஆளுநரைக் கண்டித்து மாணவர் அமைப்புகள் சென்னை - மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!



சென்னை, மார்ச் 28 தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத் தில் தமிழக ஆளுநரின் தலையீட்டின்பேரில்  ஆர்.எஸ்.எஸ்- அமைப்பைச் சேர்ந்தவரான சூர்யநாராயண சாஸ்திரி  என்பவர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டனம் வெளியிட்டு, மாணவர் அமைப்பு போராட்டம் நடத்தும் என்று அறிவித்தார்.

அதன்படி, அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நியமனத்தைக் கண்டித்து  நேற்று (27.3.2018) மாலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரு கில் ஆளுநருக்கு எதிராக மாணவர் அமைப்புகளின் சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிட மாணவர் கழகம், திமுக மாணவரணி, மதி முக மாணவரணி, சமூகநீதி மாணவர் பேரவை, தமிழ் நாடு மாணவர் முன்னணி, மாணவர் இந்தியா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் பேரவை உள்ளிட்ட  மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து கண் டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில், டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவரும், திராவிட மாண வர் கழக மாநில கூட்டுச் செயலாளருமாகிய சே.மெ.மதிவதனி தொடக்க உரையாற்றினார்.

திமுக மாணவரணி மாநில செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், மதிமுக மாணவர் அணி மணவை தமிழ் மாணிக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் பேரணி மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் செஞ்சுடர், கவிகணேஷ், மாணவர் இந்தியா பொருளாளர் அசாருதீன், தமிழ்நாடு மாணவர் முன்னணி இளையராஜா, சமூகநீதி மாணவர் பேரவை தமீம் அன்சாரி, திராவிட இயக்க தமிழர் பேரவை சிறீநாத்,  அகில இந்திய கிராமப்புற மாணவர்கள் சங்கம் அமுதரசன், திராவிட மாணவர் கழக சென்னை மண்டல செயலளர் பா.மணியம்மை உள்பட மாணவர் அமைப் புகளின் பிரதிநிதிகள் பலரும் கண்டன உரையாற்றினார்கள்.

திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் யாழ்திலீபன் தொகுத்து வழங்கினார். திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் நா.பார்த்திபன் உள்ளிட்ட மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிறைவுரை யாற்றினார்.

டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி திராவிட மாண வர் கழக அமைப்பாளர் பிரவீன்குமார் நன்றி கூறினார்.

கல்வித்துறையில் பல்கலைக்கழகங்களில், கல்லூரி களில் மத்தியில் ஆளும் பாஜக, ஆளுநர் தலையிடுவது, உயர் கல்வி, ஆய்வு மாணவர்கள் கல்வி உதவித்தொகையை நிறுத்துவதன் மூலமாக அவர்களின் கல்வி உரிமையை பறிப்பது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. டில்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகம், புனே தொலைக்காட்சி மற் றும் திரைப்படக் கல்லூரி, அய்தராபாத் மத்திய பல் கலைக்கழகம் உள்ளிட்ட நாடுமுழுவதும் கல்வி நிறு வனங்களில் இந்துத்துவாவைத் திணிக்கும் முயற்சியைத் தொடர்ந்து செய்து வருவதும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் கல்வி உரிமை யைப் பறிக்கின்ற வகையிலும் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழகத்திலிருந்து வட மாநிலங்களில், டில்லியில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தொல்லைக்கு உள் ளாக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மருத்துவ உயர் கல்வி பயிலும் மாணவர்கள் சாகடிக்கப்படுகின்றனர். அய்தராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலா எனும் தாழ்த்தப்பட்ட ஆய்வு மாணவர் கல்வி தொடரமுடியாமல் உயிரிழந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்படுவதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடும் எதிர்ப்பு பலதரப்பிலிருந்து கிளம்பி யது.

தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் பெயரில் இயங்கி வருகின்ற சட்டப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பணியிடத்துக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஒருவரை தமிழக ஆளுநர் நியமித்து அறிவித்துள்ளதைக் கண்டித்து மாணவர்கள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கமிட்டனர்.

கலந்துகொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் விவரம் வருமாறு:

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆ.பிரதாப், மேக்னாசரண், சரத்குமார், நிர்மல், நாகராஜ், அன்பு, பிரதீப், திராவிட மாணவர் கழகத்தைச் சேர்ந்த மு.மணிமாறன், க.கனிமொழி, செ.பெ.தொண்டறம், க.வெண்ணிலா, வி.யாழ்ஒளி, வி.தங்கமணி, தமிழ்நிலா, சகானாபிரியா, கோ.அன்பரசு, பிரபாகரன், நங்கநல்லூர் கார்த்திக், ச.அமுதன், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், வடசென்னை மாவட்டத் தலைவர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன்,  ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, சு.மோகன்ராஜ், பொழிசை கண்ணன், கண்ணதாசன், சீ.இலட்சுமிபதி, அரங்க.பொய்யாமொழி, இராமண்ணா,  வழக்குரைஞர் உத்திரக்குமாரன், கு.சோமசுந்தரம், ந.கதிரவன், சீனுவாசன், வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சோ.சுரேஷ், புதுவண்ணை எஸ்.செல்வம், வியாசர்பாடி மு.கவுதம், திருவொற்றியூர் மு.மாணிக்கம், இராயபுரம் ரேவந்த் குமார், புரசை காரல்மார்க்ஸ்,  அம்பேத்கர், கும்டிப்பூண்டி மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.நாகராஜன், செயலாளர் க.ச.கஇரணியன், பொன்னேரி வே.அருள், மீஞ்சூர் முருகன், சோழவரம் கஜேந்திரன், சக்கரவர்த்தி,   ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், பெரியார் மாணாக்கன், கலைமணி, கலையரசன், கொரட்டூர் கோபால்,  தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,  சைதை மு.ந.மதியழகன், கோ.வீ.ராகவன், அரும்பாக்கம் சா.தமோதரன், க.தமிழ்ச் செல்வன், சி.செங்குட்டுவன், ச.மகேந்திரன், ச.அருண் குமார், கோ.மஞ்சநாதன், சேத்பட் அ.பாபு, சூளைமேடு இராஜேந்திரன், மயிலை மோகன், புதுவண்ணை செல்வம், தங்க.தனலட்சுமி, இறைவி, பசும்பொன் செந்தில்குமாரி, வனிதா, பூவை செல்வி, கும்மிடிப்பூண்டி இராணி, வி.வளர்மதி, பி.அஜந்தா, தமிழ்செல்வி,  க.கலாரஞ்சனி, பெரியார் பிஞ்சு க.பகலவன், நிலா உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

மதுரை



27.3.2018 அன்று மாலை 4 மணியளவில் மதுரை ஆறுமுச்சந்தி சந்தை அருகில் டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் துணை வேந்தரா? தமிழக ஆளுநரின் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன போக்கை கண்டித்து திராவிடர் மாணவர் கழகம் சார்பில் மாநில திராவிடர் மாணவர் கழக துணைச் செயலாளர் தி.இலக்கியா தலைமையில் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மண்டல திராவிடர் மாணவர்கழக செயலாளர் சு.சித்தார்த், திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வி.சுதன், மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் மாணவர் கழக செயலாளர் பெ.தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார். மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் அவர்கள் தொடர்ந்து கா.சிவா, முன்னாள் மாவட்டச் செயலாளர் அ.வேல்முருகன், மதுரை மண்டலத் தலைவர் மா.பவுன்ராசா ஆகியோர் உரைக்கு பின்பு தலைமைக்கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை விளக்கி நிறைவாக சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் தென் மாவட்ட பிரச்சாரக்குழு அமைப்பாளர் தே.எடிசன்ராசா, அமைப்புச் செயலாளர் செல்வம், வழக்குரைஞர் கணேசன், மாவட்டத் தலைவர் எஸ்.முனியசாமி, மாவட்டச் செயலாளர் முருகானந்தம், மதுரை மண்டலச் செயலாளர் முருகேசன், மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் எஸ்.தனபாலன், செயலாளர் த.ம.எரிமலை, திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமர்நாத், திருப்பதி, மணிராஜ், சிவா, ரோ.கணேசன், பேக்கரி கண்ணன், சுப்பையா, பிச்சைப்பாண்டி, சுரேஷ், போட்டோ ராதா, ஆட்டோ செல்வம், கனி, கணேசன், இராஜேந்திரன், வேல்துரை ராக்குதங்கம், பொ.பவுன் ராஜ், பாக்கியலட்சுமி, அஜிதா, பெரிகாளியப்பன், அழகு பாண்டி, அன்புமதி, அய்யாசா, நாகமுத்து, விருதுநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி, நல்லவன் உள்ளிட்டவர்கள் திரளாகப் பங்கேற்றார்கள். திராவிட இயக்கத் தமிழர் பேரவை போட்டோ சரவணன் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு, 28.3.18

திராவிடர் கழக இளைஞரணி மண்டல கலந்துரையாடல் கூட்டம்

பொன்னேரியில் த் 6இல் எழுச்சிமிகு கருத்தரங்கம், பேரணி சென்னை மண்டல திராவிடர் கழக இளைஞரணி மாநாடு திராவிடர் கழக இளைஞரணி மண்டல கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு






 

சென்னை, மார்ச் 25 சென்னை மண்டல திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் கும்மிடிபூண்டி கழக மாவட்டம், பொன்னேரியில் அறிவிக்கப்பட்டுள்ள மண்டல இளைஞரணி மாநாட்டை, பேரணியுடன் சிறப் பாக நடத்திடவும் அம்மாநாட்டில் இளைஞரணி சார்பில் உண்மை சந்தாக்களை வழங் கிடவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை மண்டல திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் நேற்று (24.03.2018) மாலை 6 மணியளவில் பெரியார் திடல் எம்.ஆர்.இராதா மன்றத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையிலும், கழகப் பொதுச் செயலாளர்கள் வீ. அன்புராஜ், இரா. ஜெயக்குமார், மாநில இளைஞரணி அமைப்பாளர் இளந்திரையன், மாநில மாணவரணி செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மண்டலச் செயலாளர் வி. பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

மண்டல மாணவரணி செயலாளர் பா. மணியம்மை  கடவுள் மறுப்பு கூறி தலைவரை முன்மொழிந்தார். மாநில மாணவரணி கூட்டுச் செயலாளர் சே.மெ. மதிவதனி  வழிமொழிந்தார். மண்டல இளைஞரணி செயலாளர் ஆ. இர. சிவசாமி வரவேற்புரையாற்றினார்.

கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் தொடக்கவுரையாற்றினர். அவர் தமது உரையில், கழகத் தலைவரின் ஆணைப்படி கும்மிடிபூண்டி மாவட்டம் பொன்னேரி நகரில் வரும் மே மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ள மண்டல இளைஞரணி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்தும் அதற்காக தோழர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கினார்.

கடலூர் பொதுக் குழுவில் தமிழர் தலைவர் வெளி யிட்ட அறிவிப்பின்படி 'உண்மை' ஏட்டிற்கான சந்தா சேகரிப்பு பணி இளைஞரணி பொறுப்பாளர்களுக்கும், தோழர்களுக்கும் ஒதுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, அதன் தொடக்கமாக இம்மாநாடு விளங்கிட வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து மாநில மாணவரணி செயலாளர்

ச. பிரின்சு என்னாரெசு பெரியார் உரையாற்றினார். அவரது உரையில் கழக இளைஞரணி, மாணவரணி தோழர்களின் அண்மைக் கால செயல்பாட்டினை விளக்கியதுடன், தொடர்ந்து நடைபெறவுள்ள 'நீட்' எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்கள் பற்றியும், குடந்தையில் நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழக பவள விழா மாநாடு பற்றியும் உரையாற்றினார்.

தொடர்ந்து கும்மிடிபூண்டி மாவட்ட இளைஞரணி தலைவர் பொன்னேரி நாகராஜ், வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், ஆவடி மாவட்ட இளைஞரணி தலைவர் வெ. கார்வேந்தன், தாம்பரம் மாவட்ட இளைஞரணி விஜயகுமார், தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் மகேந்திரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பொழிசை கண்ணன், கும்மிடிபூண்டி மாவட்ட செயலாளர் இரா. இரமேஷ், வடசென்னை மாவட்டச் செயலாளர் தே. ஒளிவண்ணன், மண்டல மாணவரணி செயலாளர், பா. மணியம்மை, தாம்பரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கதிர்வேலன், வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சோ. சுரேஷ், கும்மிடிபூண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் இரணியன், தென் சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பவன்குமார், வடசென்னை மாணவரணி தலைவர்

வ. கலைச்செல்வன், கும்மிடிபூண்டி மாவட்ட  மகளிர் பாசறை செயலாளர் பொன்னேரி செல்வி, மாநில மாணவரணி கூட்டுச் செயலாளர் மதிவதனி  வடசென்னை மாணவரணி அமைப்பாளர் பார்த்திபன், வடசென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தமிழ்செல்வன், தாம்பரம் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கனி மொழி, கும்மிடிபூண்டி மாவட்ட மாணவரணி செயலாளர் எழில், தென் சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, ஆவடி மாவட்டத் தலைவர் பா. தென் னரசு, கும்மிடிபூண்டி மாவட்ட  மகளிர் பாசறை தலைவர் இராணி, தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக் குரைஞர் சு. குமாரதேவன் ஆகியோர் உரையாற்றினர்.

மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் கலந்துரையாடல் கூட்டத்தின் தீர்மானங்களை முன் மொழிந்து உரையாற்றினார். அவரது உரையில் இளை ஞரணி பொறுப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனை களை வழங்கி, பிரச்சாரக் கூட்டங்களை ஏராளமாய் நடத்திட வேண்டும் என்று தெரிவித்தார். அடுத்து மண்டல  செயலாளர் வி. பன்னீர் செல்வம் உரையாற்றினர்.

தொடர்ந்து கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்பு ராஜ் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில், சமகால அரசியல் சமூக நிகழ்வுகளை எடுத்துக் காட்டி பேசினார். சங்பரிவார் இந்துத்துவா அமைப்புகளின் செயல்பாடுகளையும், சூழ்ச்சித் திட்டங்களையும் விளக்கினார். குடந்தையில் நடைபெறவுள்ள மாநில மாணவர் கழக மாநாட்டையும், பொன்னேரி மண்டல இளைஞரணி மாநாட்டையும் சிறப்பாக நடத்திட தமது ஆலோசனைகளை வழங்கினார்.

இறுதியாக, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமை உரையாற்றினார். அவர் தமது உரையில் தந்தை பெரியார் கொள்கைகள் இன்று மாபெரும் தேடலை உருவாக்கியுள்ளதை சுட்டிக்காட்டி, இயக்கத்தின் வரலாற்று சுவடுகளை எடுத்துக் காட்டினார். தந்தை பெரியார் பற்றியும், கழகத்தலைவர் ஆசிரியர் பற்றியும் பல அரிய செய்திகளை விளக்கியதுடன் பொன்னேரி மாநாடு குறித்து சுவரெழுத்து, துண்டறிக்கை உள்ளிட்ட விளம்பரங்களை சிறப்பாக செய்திட வேண்டும் என்பதை விளக்கினார்.

இறுதியாக மாநில மாணவரணி துணைச் செயலாளர் யாழ். திலீபன் நன்றியுரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் ஆவடி மாவட்டச் செய லாளர் சு. சிவக்குமார், துணைச் செயலாளர் இளவரசு, மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேலு, தென் சென்னை மாவட்டத் துணைச் செயலாளர்கள் சா. தாமோதரன், மஞ்சநாதன், த. லலிதா, செ.பெ. தொண்டறம், க. வெண்ணிலா, இ.ப. சீர்த்தி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வெற்றிச்செல்வி பூங்குன்றன், பூவைசெல்வி, பு.க. கனிமொழி, பு.க. மெய்மொழி, பா. பார்த்திபன், ச. மதியரசி, சட்டக்கல்லூரி மாணவர் ஆ. பிரதாப், செ. பிரவீன்குமார், ஓவியர் சிகரன், ந. சிவசிவன், யுவராஜ், தி.செ. கணேசன், கோ. பஞ்சநாதன், வி. பாக்கியலெட்சுமி, கு. செல்வேந்திரன், மு. புவனேஸ்வரி, கவுதமன், வை. கலையரசன், க. கலைமணி, காரல்மார்க்ஸ், வடசென்னை சிற்றரசு தாம்பரம் சீ. இலட்சுமிபதி, செ.ரவி, மு. மாணிக்கம், செ. தமிழ் சாக்ரட்டீஸ், மு. சேகர், மு. ஆனந்தன், புரசை அன்புச்செல்வன், மங்களபுரம் பாஸ்கர், பி. முரளிகிருஷ்ணன், ஆவடி ஸ்டீபன், கும்மிடிபூண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் க.ச.க. இரணியன், எம். பிரதீப் பீமன், பா. இரா. கலைவேந்தன், தாம்பரம் கா.பா. ராசன், த. விஜய்ரகுநாத், கொரட்டூர் பகலவன் கோபால், திலீப்குமார், க.. சுமதி, மா. சுடரொளி, குன்றத்தூர் ப. கண்ணதாசன், இ. தமிழ்மணி, வி. சோபன்பாபு, இராதிகா, தாம்பரம் மோகன்ராஜ், கார்த்திகேயன், க. சுகன்ராஜ்,

ஆ. வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்  நிறைவேற் றப்பட்டன.

சென்னை மண்டல இளைஞரணி - மாணவரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் எண் 1: கும்மிடிப்பூண்டி கழக மாவட்டம், பொன்னேரியில் 2018 மே - 6ஆம் நாள் திராவிடர் கழக இளைஞரணி சென்னை மண்டல மாநாட்டை மிக எழுச் சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது. மாநாட்டை விளக்கி சென்னை மண்டலத்துக்குட்பட்ட அனைத்து மாவட்டப் பகுதிகளிலும் சுவர் விளம்பரம், பிளக்ஸ் விளம்பரம் உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம், கடைவீதி வசூல் பணிகளை இளைஞரணி - மாணவரணி தோழர்கள் மாவட்ட, மண்டல திராவிடர் கழக பொறுப்பாளர்கள் வழிகாட்டுதலோடு சிறப்பாக செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

பொன்னேரியில் சென்னை மண்டல மாநாட்டை நடத்துவதற்கு வாய்ப்பளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண் 2: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் விருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் எண்3: விருத்தாசலத்தில் நடைபெற்ற இளை ஞரணி கலந்துரையாடல் கூட்ட முடிவின்படி மாவட்டத்திற்கு 100 உண்மை சந்தாக்களை திரட்டி, மே - 6 பொன்னேரி இளை ஞரணி மாநாட்டில் அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் எண் 4: நீட் தேர்வுக்கு விலக்குக்கோரி டில் லியில் ஏப்ரம் 3 ஆம் நாள் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெருமளவில் பங்கேற்பது எனவும், நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் வரையில் தொடர் நடவடிக்கைகளில் ஈடு படுவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 5: சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரை துணை வேந்தராக நியமித்த தமிழக ஆளுநரின் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனப்போக்கை இக்கலந்துரையாடல் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இப்போக்கைக் கண்டித்து மார்ச் 27ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்பது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் எண் 6: கும்பகோணத்தில் ஜூலை 8 ஆம் நாள் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டுக்கு அனைத்து வகையான ஒத்துழைப்புகளை வழங்குவதோடு, சென்னை மண்டலத்திலிருந்து பெருமளவில் தோழர்கள் பங்கேற்பது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 7: திராவிடர் கழக இளைஞரணி - மாணவரணி சார்பில் சென்னை மண்டலத்திற்கு உள்பட்ட அனைத்து மாவட்டங்களிலும், கழகக் கொள்கை விளக்கக் கூட்டங்கள் மற்றும் அவ்வப்போது ஏற்படும் முக்கியப் பிரச்சினைகள் தொடர்பாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

மே - 6 பொன்னேரியில் திராவிடர் கழக இளைஞரணி சென்னை மண்டல மாநாடு வரவேற்பு குழு

வரவேற்புக்குழு தலைவர்: இர.சிவசாமி (சென்னை மண்டல இளைஞரணி செயலாளர்)

வரவேற்புக்குழு செயலாளர்: சு.நாகராசன் (கும்மிடி பூண்டி மாவட்ட இளைஞரணி தலைவர்)

வரவேற்புக்குழு பொருளாளர்: க.கார்த்தி (கும்மிடிபூண்டி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்

வரவேற்புக்குழு துணைத் தலைவர்கள்: க.கண்ணன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), தளபதி. பாண்டியன் (வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர்), செ.தமிழ்சாக்ரட்டீஸ் (தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர்), கெ.விஜயக்குமார் (தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர்), வே.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட இளைஞரணி தலைவர்)

துணைச்செயலாளர்கள்: ச.க.இரணியன் (கும்மிடிபூண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர்), பெரியார் திடல் சோ.சுரேஷ் (வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர்), ச.மகேந்திரன் (தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர்), சட்டநாதன் (தாம்பரம் மாவட்ட இளைஞரணி செயலாளர்), வை.கலையரசன் (ஆவடி மாவட்ட இளைஞரணி செயலாளர்), சே.மெ.மதிவதனி (மாநில கூட்டுச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

உறுப்பினர்கள்: நா.பார்த்திபன் (மாநில மாணவரணி துணைச் செயலாளர்), பா. மணியம்மை (சென்னை மண்டல மாணவரணி செயலாளர்), க.பவன்குமார் (தென்சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), இரா.கதிர்வேல் (தாம்பரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), க.கலைமணி (ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), மு.முகிலன் (தென்சென்னை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்), இரா.பிரபாகரன் (தென்சென்னை மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்), வி.பிரபாகரன் (வடசென்னை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்), அ.இராஜசேகர் (மாவட்ட துணைத் தலைவர்), இரவி (மாவட்ட துணைச் செயலாளர்), மு.ராணி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்), வே.அருள் (பொன்னேரி நகர தலைவர்), மு.சுதாகர் (பொன்னேரி நகர செயலாளர்), கெ.முருகன் (மீஞ்சூர் ஒன்றிய செயலாளர்), சு.மல்லிகார்ஜூனன் (நகர இளைஞரணி தலைவர், பொன்னேரி), க.சுகன்ராஜ் ((நகர இளைஞரணி செயலாளர், பொன்னேரி), வ.தமிழ்ச்செல்வன் (வடசென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), கோ.பகலவன் (வடசென்னை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்) சே.கோபாலகிருஷ்ணன் (ஆவடி மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்), பா.இரா.கலைவேந்தன் (ஆவடி மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்), மு.பாஸ்கர் (வடசென்னை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்)

வரவேற்புக் குழு ஒருங்கிணைப்பாளர்கள்: த.சி.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவரணி செயலாளர்), இரா.இரத்தினசாமி (சென்னை மண்டல திராவிடர் கழக தலைவர்), வி.பன்னீர்செல்வம் (சென்னை மண்டல திராவிடர் கழக செயலாளர்), த.ஆனந்தன் கும்மிடிபூண்டி மாவட்ட திராவிடர் கழக தலைவர்), இரா.இரமேசு (கும்மிடிபூண்டி மாவட்ட திராவிடர் கழக செயலாளர்), பா.தென்னரசு (ஆவடி மாவட்ட திராவிடர் கழக தலைவர்), சிவக்குமார் (ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர்), சு.குமாரதேவன் (வடசென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவர்), ஒளிவண்ணன் (வடசென்னை மாவட்ட திராவிடர் கழக செயலாளர்), இரா.வில்வநாதன் (தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவர்), செ.ர.பார்த்தசாரதி (தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக செயலாளர்), தாம்பரம் முத்தையன் (தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர்), நாத்திகன் (தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக செயலாளர்), இரா.விஜயக்குமார் (பொதுக்குழு உறுப்பினர்)

வடசென்னை  மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள்

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்: வ.தமிழ்ச்செல்வன் (எருக்கஞ்சேரி), மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்: வி.பிரபாகரன் (கொடுங்கையூர்), மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்: கோ.பகலவன் (கொரட்டூர்), மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்: மு.பாஸ்கர் (மங்களபுரம்)

1) புரசைவாக்கம் பகுதி

இளைஞரணி தலைவர்: க.பாலமுருகன், இளைஞரணி செயலாளர்: காரல்மார்க்ஸ்

2) அயன்புரம் பகுதி
இளைஞரணி அமைப்பாளர்: ஜனார்த்தனன்

3) பெரம்பூர் பகுதி
இளைஞரணி தலைவர்: இந்திரஜித், இளைஞரணி செயலாளர்: முரளிகிருஷ்ணன்

4) வியாசர்பாடி பகுதி
இளைஞரணி அமைப்பாளர்: மு.கவுதம்

5) மாதவரம் பகுதி
இளைஞரணி அமைப்பாளர்: பிரகாஷ்

6) வில்லிவாக்கம் பகுதி
இளைஞரணி அமைப்பாளர்: கா.பெ.இளவல்

7) எருக்கஞ்சேரி பகுதி
இளைஞரணி தலைவர்: இரவிக்குமார், இளைஞரணி செயலாளர்: லாரன்ஸ்

8) புதுவண்ணை பகுதி
இளைஞரணி தலைவர்: செல்வம், இளைஞரணி செயலாளர் : அம்பேத்கர்

9) இராயபுரம் பகுதி
இளைஞரணி தலைவர்: வெங்கடேசன், இளைஞரணி செயலாளர்: வி.ரேவந்த்குமார்

10) திருவொற்றியூர் பகுதி
இளைஞரணி தலைவர்: பா.பாலு, இளைஞரணி செயலாளர்: மாணிக்கம்

11) எண்ணூர் பகுதி
இளைஞரணி அமைப்பாளர்: ஆ.பாலசுப்பிரமணியன்

கும்மிடிப்பூண்டி புதிய பொறுப்பாளர்கள்

கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்: க.கார்த்திக், பொன்னேரி நகர இளைஞரணி தலைவர்: சு.மல்லிகார்ஜூன், பொன்னேரி நகர இளைஞரணி செயலாளர்: க.சுகன்ராஜ்

ஆவடி மாவட்ட இளைஞரணி புதிய பொறுப்பாளர்கள்

தலைவர்: வெ.கார்வேந்தன், துணைத் தலைவர்: சே.கோபாலகிருஷ்ணன், செயலாளர்: வை.கலையரசன், துணைச் செயலாளர்: பா. இரா.கலைவேந்தன், அமைப்பாளர்: க.கலைமணி

புதிய பொறுப்பாளர்கள்

பூவை பகுதி: வேல்சாமி (மதுரவாயல்) - தலைவர்

வெங்கடேசன் - செயலாளர்

திருநின்றவூர் பகுதி: ஸ்டீபன் (பட்டாபிராம்) - அமைப்பாளர்

ஆவடி பகுதி: க.கருணாமூர்த்தி - அமைப்பாளர்

அம்பத்தூர்: சோபன்பாபு - அமைப்பாளர்

மாநாட்டிற்கு நன்கொடை அணிவித்தோர்

ஆ.இர. சிவசாமி (மண்டல இளைஞரணி செயலாளர்) - ரூ.5,000/-

ப. முத்தையன் (தாம்பரம் மாவட்டத் தலைவர்) ரூ.5000/-

வழக்கறிஞர் சு. குமாரதேவன் (மாவட்ட தலைவர், வடசென்னை) ரூ.5,000/-

நன்கொடை வழங்கியோர்

குன்றத்தூர் க. கனிமொழி ரூ.200/-

குன்றத்தூர் க. மெய்மொழி ரூ.200/-

- விடுதலை நாளேடு, 25.3.18