வெள்ளி, 5 ஜூலை, 2024

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் தலைமைப் பொறுப்புகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரை நியமிக்கக் கோரி நாடு முழுக்க வங்கிகள் முன் ஆர்ப்பாட்டம்

 

அய்யாவின் அடிச்சுவட்டில் …: இயக்க வரலாறான தன் வரலாறு(257)

டிசம்பர் 01-15, 2020

கி.வீரமணி


வங்கிகள் முன் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள்

24.2.1995 அன்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் தலைமைப் பொறுப்புகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரை நியமிக்கக் கோரி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் முன் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தின்போது தோழர்கள் “மத்திய அரசே, வங்கிகளின் தலைமைப் பொறுப்பில் தாழ்த்தப்பட்டோரை நியமனம் செய்’’, “பிற்படுத்தப்பட்டோரை நியமனம் செய்’’, “பாரத ஸ்டேட் வங்கியா? பார்ப்பன வங்கியா?, “பொதுமக்கள் வங்கியா? பூணூல்களின் வங்கியா?’’, “தந்தை பெரியார் வாழ்க’’, “அம்பேத்கர் வாழ்க’’ போன்ற முழக்கங்கள் விண்ணதிர முழங்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி ஊழியர்களின் ஆதரவும் பெரும் அளவுக்கு கிடைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக