சனி, 24 ஜூன், 2023

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் (தியாகராயர் நகர்) கண்ணம்மாபேட்டை மு.ஏழுமலை(வயது 91) அவர்கள் மறைவு!

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் (தியாகராயர் நகர்) கண்ணம்மாபேட்டை மு.ஏழுமலை(வயது 91) அவர்கள் வயது முதிர்வின் காரணமாக 15.06.23 பிற்பகல் 1.30 மணி அளவில் கண்ணம்மாபேட்டை, சித்தி விநாயகர் கோயில் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் அவர்கள் 15.06.23 பி.ப.6.00மணி அளவில் மு.ஏழுமலை அவர்களின் உடலுக்கு  மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

16.06.23 காலை 8:30 மணி அளவில் தென்சென்னை மாவட்ட காப்பாளர் எம்.பி. பாலு அவர்கள் தலைமையில் பெரியார் பெருந்தொண்டர் ஏழுமலை அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கழக கொடி போர்த்தி மலர் மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி. வீரபத்திரன்,
தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, அமைப்பாளர் மு.ந. மதியழகன், துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், தாம்பரம் இலட்சுமிபதி, வடசென்னை கோ. தங்கமணி, தஙக.தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

11.00 மணி அளவில் கண்ணம்மா பேட்டை மின் சுடுகாட்டில் தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி தலைமையிலும் சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் ஆ.டி. வீரபத்திரன் அவர்களின் முன்னிலையில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் கு.அன்பு தனசேகரன் இரங்கல் உரை ஆற்றினார்.

தியாகராயர் நகர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. கருணாநிதி மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

நீலாங்கரை தோழர் ராஜேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகம் சித்தார்த்தன்
க.லட்சுமணன் தபசு, வெங்கடேசன், க.கண்ணன், திமுக தோழர் சுந்தர்,
காங்கிரஸ் எம்.குருசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மறைந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தியாகராயர் நகர் மு. ஏழுமலை அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் கடைசியாக பேசிய தியாகராய நகரில் தந்தை பெரியாரின் சிலையை நிறுவிய குழுவில் பெரிதும் பங்காற்றியவர்.
தியாகராய நகரில் உள்ள தந்தை பெரியாரின் சிலை 1975 ஆம் ஆண்டு தந்தை பெரியார் பேசிய அதே நாளில் அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அன்னை மணியம்மையார் அவர்களின் தலைமையில் இன் நிகழ்ச்சி நடைபெற்றது.
திராவிடர் கழகத்தின் மூன்று தலைவர்களை கண்ட தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் மு. ஏழுமலை அவர்களின்   தொண்டிற்கு புகழ் வணக்கம் செலுத்துகிறோம்!
விடுதலை நாளேடு,16.06.23

முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சபாநாயகம் மறைவு


இராஜாஜி, கல்வி வள்ளல் காமராசர் மற்றும் டாக்டர் கலைஞர் ஆகிய மூன்று முதல்வர்களுடன் பணியாற்றியவரும், தமிழ் நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளருமான சபாநாயகம் ஐ.ஏ.எஸ் உடல்நலக்குறைவால் 22.06.23 மாலை மறைவுற்றார். அவருக்கு வயது 101.

இந்திய ஆட்சிப் பணியில் 70 ஆண்டுகாலம் பணியாற்றியவர். ஆட்சிப் பணிக்கு முன் இராணுவத்திலும் பணியாற்றி இருக்கிறார். கலைஞரின் நன்மதிப்பை பெற்றவர்.
 
இன்று (23.06.23) முற்பகல் 10.00 மணி அளவில் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள பிஷப் கார்டன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

உடன் திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன், துணை பொதுச்செயலாளர் பிரின்ஸ் என்னாரசு பெரியார், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மாநில இளைஞர் அணி செயலாளர் தே.சுரேசு மற்றும் பெரியார் திடல் கலைமணி ஆகியோர் சென்று இருந்தனர்.

திங்கள், 19 ஜூன், 2023

சென்னையில் திராவிடர் கழக மகளிர் அணி மகளிர் பாசறை பயிற்சி பட்டறை தொடங்கியது

   32

 
31

சென்னை. மே 27- 
மாநில திராவிடர் கழக மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை  இணைந்து நடத்தும் மகளிருக்கான ஒருநாள் பயிற்சி பாசறையை திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்து உரையாற்றினார். 

மாநில திராவிடர் கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறை இணைந்து நடத்தும் மகளிருக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு சென்னை பெரியார் திடலில் இன்று (27.05.2023) காலை தொடங்கியது.

பயிற்சி வகுப்புக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி  வரவேற்புரை ஆற்றினார். பயிற்சி வகுப்பிற்கு துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி   தலைமையேற்று உரை யாற்றினார்.  ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அதிமுக்கிய தேவை மகளிர் முன்னேற்றமே என்பதை விளக்கி, பயிற்சி வகுப்பினை தொடக்கவுரை நிகழ்த்தி கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்தார்.  இன்றைய காலகட்டத்தில் பெரியாரியல் பயிற்சி வகுப்புகள் நடப்பதன்  முக்கியத்துவம் குறித்து விளக்கி, மாநில ஒருங்கிணைப்பாளர் - பயிற்சி பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

தாயுமான தந்தை பெரியார் - ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் முதல் வகுப்பினை துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்  எடுத்தார்.

தொடர்ந்து கொடுக்கப்பட்ட தலைப்புகளில் வழக் குரைஞர். குமாரதேவன், கழக பிரச்சாரச் செயலாளர் வழக் குரைஞர் அ. அருள்மொழி, கழக துணைப் பொதுச் செயலாளர்கள் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி, மகளிர் பாசறை மாநிலத் தலைவர் வழக்குரைஞர் பா. மணியம்மை ஆகியோரின் வகுப்புகள் திட்டமிடப் பட்டுள்ளது. பயிற்சி வகுப்பின் நிறைவு விழாவில் சான்றிதழ் வழங்கி பொருளாளர் வீ.குமரேசன் நிறைவுரையாற்ற, வடசென்னை மகளிர் பாசறை தலைவர் த. மரகதமணி   நன்றியுரை வழங்குவார்.

35

36


தலைநகர் டில்லியில் நீதி கேட்டுப் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக திராவிடர் கழக மகளிர் மாபெரும் ஆர்ப்பாட்டம்

 

 4

சென்னை, ஜூன் 8 பாலியல் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண்சிங்கிற்கு எதிராக தலைநகர் டில்லியில் நீதி கேட்டுப் போராடும் மல்யுத்த வீராங்கணைகளுக்கு ஆதரவாக இன்று (8.6.2023) திராவிடர் கழக மகளிர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் அறவழி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினருமான, பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக, ஒலிம்பிக்கில் இந்தி யாவுக்கு பதக்கங்களை வென்று தந்த வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறி, அவரை கைது செய்ய வலியுறுத்தி டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் வன்கொடுமை செய்த பிரிஜ்பூஷன் மீது மோடி அரசு கரிசனம் காட்டி அவரை கைது செய்து சிறையில் அடைக்காமல் காத்து வருகிறது. 

இந்த நிலையில் 2004ஆம் ஆண்டு பிரிஜ்பூஷனின் மகன் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அப்படி தற்கொலை செய்து கொள் வதற்கு முன்பு அவர் ஹிந்தியில் எழுதிய கடிதத்தை 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது:

"எனது தந்தை மோசமானவர், அவரது நடவடிக்கை சரியில்லை, எனது சகோதர, சகோதரிகளிடம் அவர் நடக்கும் விதம் மோசமாக உள்ளது. அவர் எங்களுக்கு அப்பாவாக இருக்க தகுதியில்லாதவர்.

இப்படிப்பட்ட ஒரு நபருக்கு பிள்ளை யாக இருப்பதைவிட சாவதே மேல் என்று ஹிந்தியில் கடிதம் எழுதி வைத்து விட்டு அவரது மகன் தற்கொலை செய்துள்ளார். இந்த தற்கொலை வழக்கு 2004ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதியே முடித்து வைக்கப்பட்டு விட்டது. 

இருப்பினும் தற்போது 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழ் சமூக வலைதளத்தில் ஹிந்தியில் எழுதப்பட்ட கடிதத்தை வெளி யிட்டுள்ளது.

2004ஆம் ஆண்டே பாலியல் வன் கொடுமை குற்றவாளியான பிரிஜ்பூஷன் தனது குடும்பத்து உறுப்பினர்களிடையே நம்பிக்கைக்குத் தகுதியில்லாமல் நடந்து கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளது.

அப்போதே பிரிஜ்பூஷன்மீது 38 மோசமான கிரிமினல் குற்ற வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் இருந்தன.

1974 முதல் 2007ஆம் ஆண்டு வரை இவர்மீது குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் மோசமான நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு முறை சிறை சென்று வந்தவர் பிரிஜ்பூஷன் சிங். 

பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி உள்ளிட்ட பன்னாட்டு விளையாட்டு அமைப்புகள், இந்தியாவில் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு போராடி வரும் மல்யுத்த வீராங்கனை களுக்கு ஆதரவு தெரிவித்து, அவர்கள்மீது ஒன்றிய பாரதீய ஜனதா அரசின் தரம் தாழ்ந்த போக்கைக் கண்டித்துள்ளன.

இந்நிலையில் தலைநகரில் நீதி கேட்டுப் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக திராவிடர் கழக மகளிர் ஆர்ப்பாட்டம் இன்று (8.6.2023) காலை சென்னையில் நடைபெற்றது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இம்மாபெரும் கண்டன ஆர்ப் பாட்டம் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச. இன்பக்கனி தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மகளிரணி மாநிலச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி வரவேற்புரையாற்ற, சி.வெற்றிச்செல்வி, பசும்பொன், நூர் ஜஹான், வளர்மதி, அஜந்தா, மு.பவானி, இரா.சு. உத்ரா, அருணா   பொன்னேரி செல்வி, ராணி, இளையராணி, நதியா, த. சுமதி, யுவராணி, த.மரகதமணி,  பூவை செல்வி, அன்புச்செல்வி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி, புதிய குரல் ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் ஓவியா ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்ட உரையாற்றினர்.

திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை இணைப்புரை வழங்கினார். ஆர்ப்பாட் டத்தின் முடிவில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி தலைவர் இறைவி நன்றியுரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், முனைவர் மஞ்சுளா, மணிமேகலை உடுமலை, தொண்டறம், பிருந்தா (தருமபுரி), தங்க. தன லட்சுமி, மணிமேகலை, நூர்ஜகான், மீனாம்பாள், கவிநிஷா, சொப்பனசுந்தரி, ஹேமமாலினி, கோட்டீஸ்வரி, சண்முக லட்சுமி, சமிக்ஷா, சுஜித்ரா, தமிழ்மாறன் (பிஞ்சு), நிர்மலா, பவதாரணி, லலிதா, குமாரி, கவிமலர், தமிழரசி, தென்னரசி, பெரியார் செல்வி, மங்கலம், அறிவுமதி, அன்புமணி, நிர்மலா, மெர்சி, அமலி, சுகந்தி, மகிழினி (பிஞ்சு), இனியன் (பிஞ்சு), நன்னன் (பிஞ்சு), செம்மொழி (பிஞ்சு) விஜயா, அபினா சுருதி.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பங்கேற்று வழிநடத்தினார். மற்றும் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைக் கழக அமைப்பாளர்கள் வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வெங்க டேசன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், விடுதலை நகர் ஜெயராமன், தாம்பரம் மாவட்டச் செயலாளர் நாத்திகன், மோகன் ராஜ், வேலூர் பாண்டு, சி.காமராஜ், பெரியார் மாணாக்கன், கொடுங்கையூர் தங்கமணி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, அரும்பாக்கம் தாமோ தரன், கலையரசன், தி.செ.கணேசன், அருள், ஜி.தங்கமணி, செல்வம், உடுமலை வடிவேல், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் நா.பார்த்திபன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ந.ரமேஷ், இ.தமிழ்மணி, அறிவுச்செல்வன், இரா.மாணிக்கம், தாம்பரம் குணசேகரன், க.கலைமணி, யுகேஷ், அண்ணா, மாதவன், கமலேஷ், திருவொற்றியூர் மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன், தனசேகர், கணேசன், ஷாஜகான், திருவொற்றியூர் இராசேந்திரன், சதீஷ்குமார், பூவை தமிழ்ச்செல்வன், கொரட்டுர் முத்தழகு, ப.சேரலாதன் மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்றனர்.

திங்கள், 12 ஜூன், 2023

த.புகழேந்தி மறைவு கழகத் தலைவர் நேரில் மரியாதை


2

மறைந்த பெரியார் பெருந்தொண்டர் திருவாரூர் தங்கராசு அவர்களின் மகன் த.புகழேந்தி (செய்தி மக்கள் தொடர்பு கூடுதல் இயக்குநர் - ஓய்வு) இன்று (11.6.2023) காலை மறைவுற்றார். அன்னாரின் உடல் சென்னை-28 ராஜா அண்ணாமலைபுரம், மூன்றாம் தெரு கதவு எண் 13/7இல் பொது மக்களின் இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டிருந்தது. 

மறைவு தகவல் அறிந்ததும், பகல் 1 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திருவாரூர் தங்கராசு அவர்களின் இல்லத் திற்கு சென்று த.புகழேந்தியின் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செய்து அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். ஆசிரியருடன் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணை செயலாளர் மாரிமுத்து உடன் சென்று மரியாதை செலுத்தினர். 

- விடுதலை நாளேடு, 11.06.23

ஞாயிறு, 11 ஜூன், 2023

புதன், 7 ஜூன், 2023

தென் சென்னை மாவட்டத்தில் ஜூன் 15 முதல் தொடர் கூட்டங்கள் கலந்துரையாடலில் தீர்மானம்


10

சைதாப்பேட்டை, ஜூன் 7 - தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 3.6.2023 மாலை 6 மணி யளவில் சைதாப்பேட்டை கோடம் பாக்கம் சாலையில் உள்ள மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன் இல் லத்தில் மாவட்டத் தலைவர் 

இரா.வில்வநாதன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர். சேது ராமன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

ஈரோடு பொதுக்குழு தீர்மானம் மற்றும் சென்னையை சேர்ந்த ஆறு மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு களை செயல்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

தலைமை கழக அமைப்பாளர் தே.செ.கோபால் வழிகாட்டு கருத் துரைகளை கூறி நோக்க உரை யாற்றினார்.

மாவட்டத் துணைச் செயலாளர் சா. தாமோதரன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் மு. சண் முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ந. மணிதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியார் யுவராஜ், மாவட்ட இளை ஞரணி துணைத் தலைவர் ச.மகேந் திரன் மற்றும் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி ஆகி யோர் கருத்துகளை எடுத்துரைத் தனர்.

புதிய பொறுப்பாளர்களை அறி முகப்படுத்தி அவர்களுக்கு வாழ்த்து கூறப்பட்டது.

ம.தமிழ்மதி சைதை க. வாசு தேவன் ஆகியோர் கலந்து கொண் டனர். 

இறுதியாக கீழ்கண்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

1. கொல்கத்தாவில் இருந்து புறப் பட்ட கோரமண்டல் விரைவு தொடர் வண்டி 2.6.2023 அன்று ஒடிசா மாநிலத்தில் விபத்தில் சிக்கி சுமார் 275 பேர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

2. மாவட்டப் பகுதிகள் தோறும் கொடிக்கம்பம் மற்றும் அறிவிப்பு  பலகைகளை அமைப்பதெனவும்,

3. முப்பெரும் நூற்றாண்டுகளை விளக்கி, பகுதிகள் தோறும் நாள் ஒன்றுக்கு இரண்டு தெருமுனைக் கூட்டங்கள் என ஒருங்கிணைந்த முறையில் தொடர் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது எனவும், கூட்டங்களை ஜூன் மாதம் 15 ஆம் நாள் முதல் தொடங்குவது எனவும்,

4. தெருமுனைக் கூட்டங்களின் இறுதியில் முப்பெரும் நூற்றாண்டு களை விளக்கி மூன்று பொதுக் கூட்டங்களை நடத்துவது எனவும்,

5. நோக்கங்களை விளக்கி பொது வான துண்டறிக்கைகளை தயார் செய்து வழங்குவதெனவும்,

6. பகுதி கழகம் தோறும் புதுப் பித்து புதிய அமைப்புகளை ஏற் படுத்துவது எனவும் தீர்மானிக்கப் பட்டது.

மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து நன்றி கூறினார்.

திங்கள், 5 ஜூன், 2023

வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன் தமிழர் தலைவரிடம் ’விடுதலை’ சந்தா

 

 7

திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சி.நாகராஜன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து, ’விடுதலை’ நாளிதழுக்கு 89 - ஆம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, தலா ரூ.500/- என மொத்தம் 1000/- ரூபாயை வழங்கினார்கள். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன். (பெரியார் திடல், 1.6.2023)


கோ.வீ. ராகவன் 'பெரியார் உலகம்' நிதி வழங்கினார்

'பெரியார் உலகம் நிதி'

 

 சீர்காழி கு.நா. இராமண்ணா - ஹேமா சார்பில், பெரியார் உலகம் நிதிக்கு 6ஆவது தவணையாக நன்கொடை ரூ.5,000த்தை (இதுவரை 15,000)  கு.நா.இராமண்ணா தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். கோவி. ராகவன் 'பெரியார் உலகம்' நிதியாக ரூ.5,000த்தை வழங்கினார்.

ஞாயிறு, 4 ஜூன், 2023

சைதாப்பேட்டையில் நடைபெற்ற தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 03.06.2023 மாலை 6.00 மணி அளவில் சைதாப்பேட்டை கோடம்பாக்கம் சாலையில் உள்ள மாவட்ட அமைப்பாளர் மு.ந. மதியழகன் அவர்கள் இல்லத்தில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்கள் தலைமையிலும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன் மற்றும் மாவட்டத் துணைத் தலைவர் டி. ஆர். சேதுராமன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

ஈரோடு பொதுக்குழு தீர்மானம் மற்றும் சென்னையை சேர்ந்த ஆறு மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

தலைமை கழக அமைப்பாளர் தே.செ. கோபால் அவர்கள் வழிகாட்டு கருத்துரைகளை கூறி நோக்க உரையாற்றினார்.

மாவட்டத் துணைச் செயலாளர் சா. தாமோதரன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் மு. சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ந. மணிதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெரியார் யுவராஜ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ச.மகேந்திரன் மற்றும் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி ஆகியோர் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
புதிய பொறுப்பாளர்களை அறிமுகப்படுத்தியதுடன் அவர்களுக்கு வாழ்த்து கூறப்பட்டது.

ம. தமிழ்மதி சைதை க. வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இறுதியாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்
கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட கோரமண்டல் விரைவு தொடர் வண்டி 2.6.23 இரவு ஒடிசா மாநிலத்தில் விபத்தில் சிக்கி சுமார் 300 பேர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
2. மாவட்டப் பகுதிகள் தோறும் கொடிக்கம்பம் மற்றும் அறிவிப்பு  பலகைகளை அமைப்பதெனவும்,
3. முப்பெரும் நூற்றாண்டுகளை விளக்கி, பகுதிகள் தோறும் நாள் ஒன்றுக்கு இரண்டு தெருமுனைக் கூட்டங்கள் என ஒருங்கிணைந்த முறையில் தொடர் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது எனவும், கூட்டங்களை ஜூன் மாதம் 15 ஆம் நாள் முதல் தொடங்குவது எனவும்,
4. தெருமுனை கூட்டங்களின் இறுதியில் முப்பெரும் நூற்றாண்டுகளை விளக்கி மூன்று பொதுக்கூட்டங்களை நடத்துவது எனவும்,
5. நோக்கங்களை விளக்கி பொதுவான துண்டறிக்கைகளை தயார் செய்து வழங்குவதெனவும்,
6. பகுதி கழகங்கள் தோறும் புதுப்பித்து புதிய அமைப்புகளை ஏற்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து அவர்கள் நன்றி கூறினார்.

சென்னையில் 6 மாவட்டங்களின் கலந்துரையாடல் கழக அமைப்பு முறையில் மாற்றங்கள் ஈரோடு பொதுக் குழு முடிவுகள் பற்றி விளக்கி வழிகாட்டும் உரை நிகழ்த்தினார்

18

சென்னை, மே 28 வடசென்னை, தென் சென்னை மற்றும் ஆவடி, தாம்பரம், கும்மிடிப் பூண்டி, சோழிங்கநல்லூர் கழக மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் 27.5.2023 அன்று மாலை 6.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில், அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமாக வந்திருந்த கழகத் தோழர்கள் பங் கேற்ற எழுச்சிமயமான கூட்டமாக நடைபெற்றது.

தலைமைக் கழக அமைப்பாளர் வி. பன்னீர் செல்வம் அனைவரையும் வரவேற்று - கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துக் கூறினார்.

மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக் குரைஞர் பா. மணியம்மை கடவுள் மறுப்புக் கூறினார்.

இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார்.

மாநிலப் பொறுப்பாளர்கள்

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பொதுச் செயலாளர்கள் வீ. அன்பு ராஜ், முனைவர் துரை. சந்திரசேகரன், பொரு ளாளர் வீ. குமரேசன், கழக ஒருங்கிணைப்பா ளர்கள் உரத்தநாடு இரா. குணசேகரன், தஞ்சை இரா. ஜெயக்குமார், துணைப் பொதுச் செய லாளர்கள் பொறியாளர் ச. இன்பக்கனி, பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி ஆகியோர் தோழர்கள், கழக கொள்கைப் பிரச்சாரப் பணிகளில் எவ் வகையில் ஈடுபட வேண்டும் என்பதைப் பற்றி விளக்கமாக தமது உரையில் குறிப்பிட்டனர். 

மாவட்டக் கழகத் தலைவர்களின் கருத்துகள் 

கலந்துரையாடலில் தாம்பரம் மாவட்ட தலைவர் ப. முத்தையன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், வட சென்னை மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி. வீரபத்திரன், கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர் புழல். ப. ஆனந்தன், ஆவடி மாவட்ட தலைவர் வெ. கார்வேந்தன் ஆகியோர் தமிழர் தலைவர் விடுத்த வேண்டுகோளின்படி, தமது பொறுப்பு மாவட்டங்களில் செய்து முடித்த கழகப் பணிகள் பற்றியும், இனி எதிர்வரும் காலத்தில் செய்திட திட்டமிடப்பட்டுள்ள கழகப் பணிகள் பற்றியும் சிறப்பாக எடுத்துக் கூறினர். 

21

கழகத் தலைவரின் வழிகாட்டும் உரை

நிறைவாக தமிழர் தலைவர், கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவர் தமது உரையில், ஈரோட்டில் 13.5.2023இல் நடைபெற்ற கழகப் பொதுக் குழுவிற்குப் பிறகு - அதன் தீர்மானங்கள்படி நல்ல தொடக்கத்தோடு நடைபெறுகின்ற கலந்துரையாடல் கூட்டம் இது என்பதைக் குறிப்பிட்டார்.

கழகத்தின் இளைஞரணி, மகளிரணி, மாண வர் கழகம் உள்ளிட்ட மாவட்டங்களின் அனைத் துக் கழகத் தோழர்களுமே - கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்வதில் தவறக் கூடாது  என்று அறிவுறுத்தினார். 

"தந்தை பெரியார் தொடங்கி வைத்த அறப்போரில் நாம் வெற்றி இலக்கை அடைய வேண்டும். பிரச்சாரம் - போராட்டம் என்பதை அடிப்படையாகக் கொண்டு பணி செய்து, கண்ணுக்குத் தெரியாது இருக்கின்ற தந்தை பெரியாரின் பற்றாளர்களை, கழகக் கொள்கையா ளர்களை நம் கண்ணுக்குத் தெரிந்தவர்களாக ஆக்குவதில் சலிப்பின்றி பணியாற்றுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

நமது கொள்கைகளை நேரடியாக எதிர்ப்ப வர்கள் எவரும் கிடையாது. விஷமப் பிரச்சாரம் செய்பவர்கள் மட்டுமே நமக்கு எதிராக உள்ள னர். இதையெல்லாம் கடந்து, துணிச்சலுடன் பாடுபட்ட தந்தை பெரியார் வ.ரா. அவர்களால் "மண்ணை மணந்த மணாளர்"  என்று குறிப்பிட்ட சிறப்புக்கொப்ப உலகத் தலைவராக இன்று உயர்ந்துள்ளார் என்று குறிப்பிட்டார்.

'கருத்தாடியவர்' என்ற அளவில் பெர்ட்டன்ரசல் போன்றவர்களுக்கு வரலாற்றில்  தனி இடமுண்டு. ஆனால் தந்தை பெரியார் 'கருத்தாடியவர்' மட்டுமல்ல. அதற்கென்று 'களமாடியவர்' என்கின்ற சிறப்பும் பெற்றவர்.

அவர் விட்டுச் செல்லாதது எதுவுமே இல்லை. தனக்குப் பிறகும் தனது கொள்கைப் பிரச்சாரத்துக்கு அவர் ஏற்படுத்தித் தந்த வசதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி - பிரச்சாரப் பணிகளில் வேகமாக அனைத்துத் தோழர்களும் ஈடுபட வேண்டும் என்று குறிப்பிட்டு, விரைவில் 'களப்பணிப் பயிற்சி' என கழகத் தோழர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுமெனவும் கூறினார்.

கழகக் கிளைகள் சார்பில் கழகக் கொடிகள் பறக்காத கிளை அமைப்புகளே இல்லை என்கின்ற நிலையை ஏற்படுத்துவதோடு - கொடிகளோடு சுற்றுச்சூழல் மேம்பாட்டை மய்யப்படுத்தி செடிகளும் நட்டு இயற்கை வளத்தை மேம்பாடு அடையச் செய்வீர் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ. கோபால் நன்றி கூறினார். அனைவருக்கும் சிற் றுண்டி ஏற்பாடுகளைச் செய்தார். இக்கலந்துரை யாடல் கூட்டத்தில் மண்டபம் நிரம்பி வழியும் அளவில் இருபால் தோழர்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

வடசென்னை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்படுகிறது திருவொற்றியூர் 

புதிய மாவட்டம் உருவாக்கம்  அதன் பகுதிகள் பின்வருமாறு:

1.வடசென்னை கழக மாவட்டம் 

1. புதிய வண்ணை நகர் 

2. பழைய வண்ணை நகர்

3.புளியந்தோப்பு

4.வியாசர்பாடி 

5.பெரம்பூர்

6. மகாகவி பாரதியார் நகர்

7.கவிஞர் கண்ணதாசன் நகர் 

8. கொடுங்கையூர் 

9.பெரியார் நகர் 

10. கொளத்தூர் 

11.அண்ணா நகர்

12.அயனாவரம்

13.கீழ்ப்பாக்கம்

14.புரசைவாக்கம்

15.வேப்பேரி

16.பாரிமுனை

17.எருக்கமா நகர்

18.அரும்பாக்கம்

19.பட்டாளம்

2. திருவொற்றியூர் கழக மாவட்டம்

1. இராயபுரம்

2. திருவொற்றியூர்

3. காசிமேடு

4. மணலி

5. மாத்தூர்

6. எலந்தமா நகர்

7. மாதவரம்

8.எண்ணூர் 

9.கத்திவாக்கம்

3.தென்சென்னை கழக மாவட்டம் 

1. கோயம்பேடு

2.விருகம்பாக்கம்

3.வளசரவாக்கம்

4.கலைஞர் கருணாநிதி நகர்

5.அசோக் நகர் 

6.கிண்டி 

7.சைதாப்பேட்டை  

8.அடையாறு

9.ஆலந்தூர் 

10.தியாகராயர் நகர்

11.கோடம்பாக்கம்

12. நுங்கம்பாக்கம்

13. எழும்பூர்

14. சேப்பாக்கம்

15. திருவல்லிக்கேணி

16. மயிலாப்பூர்

17. பட்டினப்பாக்கம்

18. இராஜா அண்ணாமலைபுரம்

19. மந்தைவெளி

20. கோட்டூர்புரம்

21. அரும்பாக்கம் 

வடசென்னை மாவட்ட பொறுப்பாளர்கள்

காப்பாளர்: கி.இராமலிங்கம்

தலைவர்: வழக்குரைஞர் தளபதி பாண்டியன்

செயலாளர்: புரசைவாக்கம் சு.அன்புச்செல்வன்

பொதுக் குழு உறுப்பினர்: தி.செ.கணேசன்

திருவொற்றியூர் மாவட்டம்

காப்பாளர்: பெரு. இளங்கோ

தலைவர் : எண்ணூர் வெ.மு.மோகன்

செயலாளர்: பொறியாளர் தே. ஒளிவண்ணன்

துணைத் தலைவர்: திருவொற்றியூர் ந.இராசேந்திரன்

வடசென்னை இளைஞரணி

தலைவர்: நா. பார்த்திபன்

செயலாளர்: சு. அரவிந்தகுமார்

திருவொற்றியூர் இளைஞரணி

தலைவர்: சதீஷ்குமார்

செயலாளர்: கவுதமன், காசிமேடு

திராவிடர் கழக மகளிரணி

வடசென்னை: 

தலைவர் : க. சுமதி

செயலாளர்: ம. யுவராணி

மகளிர் பாசறை

வடசென்னை: 

தலைவர் : த. மரகதமணி

செயலாளர்: பா. நதியா

முத்தமிழறிஞர் கலைஞர் 100 ஆவது பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை


5

சென்னை, ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100 ஆவது பிறந்த நாளான இன்று (3.6.2023) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேனாள் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2023) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்திருக்கும் கலைஞர் அவர்களின் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும், சிலைக்குக் கீழே பீடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் படத் திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக வழக்குரை ஞரணித் தலைவர் த.வீரசேகரன், துணைப் பொதுச்செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் செ.மெ.மதிவதனி, தலைமைக் கழக அமைப்பாளர் பொன்னேரி வி.பன்னீர் செல்வம், வழக்குரைஞர் சு.குமாரதேவன், வழக்குரைஞர் சென்னியப்பன், சி.வெற்றிச் செல்வி, இறைவி, முத்துசெல்வி, தங்க தன லட்சுமி, தங்கமணி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, தே.ஒளி வண்ணன் (மாவட்ட செயலாளர், திரு வொற்றியூர்), பெரியார் யுவராஜ் (தென் சென்னை இளைஞரணி அமைப்பாளர்), இரா.வில்வநாதன் (தென் சென்னை தலைவர்), செ.ரா.பார்த்தசாரதி (தென்சென்னை செயலாளர்), தளபதி பாண்டியன் (வட சென்னை தலைவர்), புரசை சு.அன்புச்செல்வன் (வடசென்னை செயலாளர்), ப.முத்தையன் (தாம்பரம் தலைவர்), கோ.நாத்திகன் (தாம்பரம் செயலாளர்), அரும்பாக்கம் தாமோதரன், அமைந்தகரை அருள்தாஸ், காப்பாளர் வெ.ஞானசேகரன், வாசகர் வட்ட பொருளாளர் ஜனார்த்தனன், உடுமலை வடிவேல், மு.ரெங்கநாதன்,  கலைமணி, யுகேஸ், ரவீந்திரன், முத்து லெட்சுமி, அருள் மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.