செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

ஆயிரம் விளக்கு மு.சேகர் இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா

 

1.02.2023 முற்பகல் 11.00 மணி அளவில் ஜாஃபர்கான் பேட்டை பாலாஜி அரங்கில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தோழர் ஆயிரம் விளக்கு மு.சேகர் - சே.கீதா இணையரின் மகன் சே. தமிழரசுவுக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த ப.வரதன் -  வ. பழனியம்மாள் இணையரின் மகள் வ. தீபலட்சுமிக்கும் வாழ்க்கை இணை ஏற்பு விழாவை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார். திருமண வீட்டார் சார்பாக ரேவதி வினோத் நன்றி கூறினார்.


வியாழன், 23 பிப்ரவரி, 2023

பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி. பாலு 91ஆவது பிறந்தநாள்

செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி. பாலு 91 வது பிறந்தநாள் விழா

பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி. பாலு 91 வது பிறந்தநாள்

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி.பாலு அவர்கள் 14.02.2023 நண்பகல் ஒரு மணி அளவில் சைதாப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் 91வது பிறந்தநாளை 'கேக்' வெட்டி குதூகலமாக கொண்டாடினார்.

உறவினர்களும் தோழர்களும் வந்திருந்து வாழ்த்தி சிறப்பித்தனர்.

மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன் மற்றும் அவரின் இணையர் தமிழ்மதி, மாவட்ட துணை செயலாளர் கோ.வீ.ராகவன் ஆகியோர் பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர்.

அனைவருக்கும் பிரியாணி  உணவு வழங்கப்பட்டது.

திங்கள், 20 பிப்ரவரி, 2023

பெருந்தொண்டர் மயிலை சாமிநான் அவர்களின் 75வது பிறந்த நாளில் தமிழர் தலைவர் பாராட்டுகிறார்.

சாதி ஒழிப்பு போரில் சட்டத்தை எரித்து சிறை சென்ற பெரியார் பெருந்தொண்டர் மயிலை சாமிநான் அவர்களின் 75வது பிறந்த நாளில் தமிழர் தலைவர் பாராட்டுகிறார்.
(17.2.13)

சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு

திருவள்ளுவர் திருநாளை(திருவள்ளுவர் ஆண்டு 2054, சுரவம்-2) முன்னிட்டு  16.01.2023 காலை 10:30மணி அளவில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மாவட்ட கழக தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில்   மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது, மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, பொறியாளர் ஈ. குமார், மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு. சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி தலைவர். ச. மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

தென் சென்னையில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்

தமிழ்ப் புத்தாண்டு (திருவள்ளுவர் ஆண்டு 2054) மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 15.01.2023 மு.ப.10.15 மணி அளவில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தியாகராயர் நகரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் தலைமையில் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது.

மாவட்ட அமைப்பாளர் மு.ந. மதியழகன், மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், துணைச் செயலாளர் சா. தாமோதரன், கோடம்பாக்கம் ச. மாரியப்பன், பி .டி. சி. ராஜேந்திரன் மற்றும் திருவல்லிக்கேணி அப்துல்லா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையின் கலந்துரையாடல் கூட்டம்

வியாழன், 16 பிப்ரவரி, 2023

நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி கோரி - ஒன்றிய அரசை கண்டித்து தமிழர் தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை மந்தைவெளியில் நடைபாதையில் ஆக்கிரமித்துக்கட்டப்பட்ட கோயில் அகற்றம்


சென்னை மந்தைவெளி பகுதியில் உள்ள சென்மேரிஸ் சாலை, புனித மேரி கல்லறை வாசலில் சட்டவிரோதமாக நடைபாதையில் கிறிஸ்தவ கோயில் கட்டப்பட்டு வந்தது, மந்தைவெளி பகுதி கழக பொறுப்பாளர் இரா.மாரிமுத்து மூலம் மந்தைவெளி சென்னை 28, மண்டலம் 9, மாநகராட்சி துறைக்கு தொலைபேசி வாயிலாக 3.2.2023 அன்று புகார்  கொடுக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் 11.2.2023 அன்று மாநகராட்சி அலுவலர்கள் மாதா கோயிலை இடித்து அகற்றினர்

செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

மயிலாப்பூர் - புரசைவாக்கத்தில் நடைபெற்ற பரப்புரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

மயிலையிலும் புரசையிலும் பொழிந்த பொன்மழை!

சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி (விசிக), தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார்


சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி (விசிக), தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு  பொன்னாடை அணிவித்தார். வழக்குரைஞர் அந்திரிதாஸ் (மதிமுக),  கே.ஏ.எம். முகம்மது அபுபக்கர் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்று புத்தகங்களை பெற்றுக் கொண்டனர்.


வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

மாநில மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத் தீர்மானங்கள்

அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் திராவிடர் கழகத்துணைத் தலைவர் மரியாதை

எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையின் மாநில கலந்துரையாடல் கூட்டம்- 30.1.2023

திராவிடர் கழக தொழிலாளரணி மாநிலக் கலந்துரையாடலில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்