சனி, 27 ஜூலை, 2024

அரும்பாக்கத்தில் நீட் எதிர்ப்பு பயணம் (இரண்டாம் நாள் பரப்புரை தொடக்கம்)

 


நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணத்தில் அய்ந்தாம் குழு சென்னை பெரியார் திடலில் தொடங்கி தொப்பூர் வரை 40 இடங்களில் பரப்புரை செய்தவாறே சேலம் சென்றடைந்தனர். இரண்டாம் நாளான 12.07.2024 அன்று தாம்பரத்திலிருந்து புறப்பட்டு முதல் தெருமுனைக் கூட்டம் நடைபெறும் அரும்பாக்கம் தாமோதரன் இல்லத்தினருகில் காலை 9:15 மணிக்கு வருகை தந்தனர்.

அங்கு தாமோதரன் இல்லம் அருகில் இருக்கும் கழகக் கொடியை கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஏற்றி வைத்து உரையாற்றினார். இந்தக் குழுவில் 23 இருசக்கர வாகனங்களில் 6 மகளிர் உள்பட 37 பேர் பயணம் செய்தனர். மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் சோ.சுரேஷ் இந்த பயணக் குழுத் தலைவராகவும், ஒருங்கிணைப்பாளராக மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் மா.செல்லத்துரை, கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சொற்பொழிவாளராகவும் இருந்து மிகச்சிறப்பாக பயணத்தை வழிநடத்திச் சென்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக