சனி, 31 டிசம்பர், 2022

கவிஞர் கண்மதியன் அன்னையார் மறைவு! கழகத் தலைவர் இறுதி மரியாதை!

ஒன்றிய அரசின் மேனாள் அதிகாரி யும், கழகப் பற்றாளரும், கவிஞருமான கண்மதியன் அவர்களின் அன்னையார் திருமதி பாக்கியம் (வயது 102 அவர்கள் நேற்று முதல் நாள் (27.12.2022 மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். இன்று (29.12.2022) காலை 8:30 ணி அளவில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திருமதி பாக்கியம் அம்மாள் அவர்களின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

கழகத் தலைவருடன் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், தமிழக மூதறிஞர் குழு பொருளாளர் த.கு.திவாகரன், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, துணை செயலாளர் தாமோதரன், சூளைமேடு இராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்து
மரியாதை செலுத்தினர்.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களும் இறுதி மரியாதை செலுத் தினார். வெளிநாடுகளிலிருந்து அம்மை யாரின் பேரன்களும், உறவினர்களும் வந்திருந்தனர். அவர்களைக் கழகத் தலைவரிடம் கவிஞர் கண்மதியன் அறிமுகப்படுத்தினார்.

எவ்வித சடங்குகளுமின்றி இன்று காலை 10 மணியளவில் அம்மையாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
- விடுதலை நாளேடு, 29.12.22

வியாழன், 29 டிசம்பர், 2022

சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை ஏற்பாட்டில் சர். வில்லியம் மெயர் நினைவு அறக்கட்டளை கருத்தரங்கம்

சனி, 24 டிசம்பர், 2022

தந்தை பெரியார் 49ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணி - கருத்தரங்கம்

டிச. 24: தந்தை பெரியார் 49ஆவது நினைவு நாள் தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை


திங்கள், 19 டிசம்பர், 2022

கழக மணம் வீசிய திருப்பத்தூர்!

தமிழர் தலைவர் பிறந்த நாள் விழாவில் 'விடுதலை' சந்தாக்களை வழங்கினர் (தென் சென்னை)



புதன், 14 டிசம்பர், 2022

கழகப் பொதுச்செயலாளரிடம் விடுதலை சந்தா ரூ.1 லட்சம் உதயநிதி ஸ்டாலின் வழங்கல் (தென் சென்னை)


திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கழகப்பொதுச்செயலாளரிடம் விடுதலை சந்தாவுக்காக ரூ.1 லட்சம் வழங்கினார். இதுகுறித்து அவர் தம் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: பகுத்தறிவு, சமூகநீதிக் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் பெரும் பணியைத் தொய்வின்றிச் செய்து வரும் 'விடுதலை' நாளிதழுக்கு எனது சிறு பங்களிப்பாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை ஆயுள் சந்தாவாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் அன்புராஜ் அவர்களிடம் இன்று வழங்கினேன். வாழ்க பெரியார்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.



திங்கள், 12 டிசம்பர், 2022

விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - பார்வதி நன்னனின் மகள் அவ்வை - தமிழ்ச்செல்வன் இணையர் விடுதலை வாழ்நாள் சந்தா வழங்கினர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர் (கு.க.செல்வம் வாழ்நாள் சந்தா வழங்கினார்)