மறைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறைவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 மே, 2026

டாக்டர் ஜி.ராஜூ மறைவு – ஆசிரியர் கி.வீரமணி இறுதி மரியாதை


மறைவு

சென்னை, மே 14- மறைந்த டாக்டர் ராஜூ (வயது-94) அவர்களின் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மரியாதை செலுத்தினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களோடு பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை ஒன்றாகப் படித்த ஆசிரியரின் நண்பர் (கடலூர்க்காரர்) மறைந்த டாக்டர் ஜி.ராஜூ (வயது-94) அவர்கள் நேற்று (13.5.2026) மறைவுற்றார். அவரது உடல் நுங்கம்பாக்கம் பள்ளி சாலையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களும் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

டாக்டர் ஜி.ராஜூ அவர்களின்  துணைவியாரிடமும், மகன் ரா.பிரபாகரிடமும், குடும்பத்தாரிடமும் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரங்கலும் ஆறுதலும் கூறினார்.

உடன் தென் சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, எம். வரதன் ஆகியோர் இருந்தனர்.

- விடுதலை நாளேடு, 14.05.26




வெள்ளி, 21 நவம்பர், 2025

கழகத் தோழர் கி.காண்டீபன் மறைவு



பேரமனூர், நவ. 19- பேரமனூர் திராவிடர் கழக பொறுப்பாளர்

கி.காண்டீபன் (வயது 52), 2.11.2025 அன்று காலை 7.00 மணியளவில் இயற்கை எய்தினார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகரியம், பேரமனூர், எம்.ஜி.ஆர். தெருவில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் மா. நரசிம்மன் கழக கொடி போர்த்தினார். கழக பொதுக்குழு உறுப்பினர் செங்கை சுந்தரம் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
உடன் மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர் மு. அருண், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் சே. சகாயராஜ், மாவட்ட அமைப்பாளர் அ.சிவ குமார், மாவட்ட துணைப் பொறுப்பாளர் சி.தீனதயாளன், மறைமலை நகர கழகத் தலைவர் திருக்குறள் வெங்கடேசன், மு ஏழுமலை, தென் சென்னை மாவட்டச் செய லாளர் செ.ர பார்த்தசாரதி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தி.பிற்பகல் 3.00 மணியளவில் இரங்கல் உரை ஆற்றினர்.
மாலை 4.00 மணி அளவில் புறப்பட்ட இறுதி ஊர்வலம், வீரவணக்க முழக்கத்துடன் இடுகாடு சென்றடைந்தது., இடுகாட் டில் உடல் புதைக்கப்பட்ட பின் சிறிது நேரம் அமைதி காக்கப்பட்டது.
இடுகாட்டில் அ.தி.மு.க நகர செயலாளர் எம்.ஜி. கே. கோபி கண்ணன், சிந்தனையாளர் பேரவை நிறுவனர் பன்னீர்செல்வம் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
பேரமனூர் நகர கழக தலைவர் கி நீலகண்டன், பேரமனூர் நகர செயலாளர் சு.விஜயராகவன், காட்டாங்குளத்தூர் ம.கருணாநிதி, மேனாள் நகர்மன்ற உறுப்பினர் முனுசாமி, கி.காண்டீபன் இணையர் கா.அனிதா, மைத்துனர் தினேஷ், மகன் கா.செல்வா, மகள் கா.மலர், குடும்பத்தினர், மறைமலை நகர் ஆட்டோ ஓட்டுநர்கள் கோத்ரேஜ் தொழிற்சாலை ப.மணிவண்ணன், கோ.ஆனந்தராஜ் மற்றும் நண்பர்கள் இறுதிவரை கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்,
சுயமரியாதைச் சுடரொளி கி.காண்டீபன் எண்ணப்படி, குடும்பத்தின ரின் ஒத்துழைப்புடன்; எந்த வகை மூடச் சடங்குகள் இன்றி கழகக் கொடி போர்த்தி இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.

- விடுதலை நாளேடு, 19.11.25


செவ்வாய், 28 அக்டோபர், 2025

தி.இரா.இரத்தினசாமி மறைவு – தமிழர் தலைவர் இறுதி மரியாதை

 


முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், தாம்பரம் மாவட்ட கழகக் காப்பாளருமான தாம்பரம் தி.இரா.இரத்தினசாமி அவர்களின் மறைவையொட்டி இன்று (14.10.2025) காலை 10:30 மணிக்கு சேலையூர் அன்னை இந்திரா நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கழகக் கொடியினைப் போற்றியும், மலர் மாலை வைத்தும் மரியாதை செலுத்தி, மகன்கள் இராமசாமி, சிவசாமி, மகள்கள் முத்துமணி, தங்கமணி, திருமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ப. முத்தையன், மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், பொதுக்குழு உறுப்பினர்கள் வெ. ஞானசேகரன், பூவை.செல்வி, தாம்பரம் மாவட்ட மகளிரணிப் பொறுப்பாளர்கள் நாகவள்ளி, நூர்ஜஹான், தாம்பரம் குணசேகரன், சேத்துப்பட்டு நாகராஜன், அனகை ஆறுமுகம் மற்றும் தோழர்கள் இருந்தனர்.

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தாம்பரம் தி.இரா.இரத்தினசாமி அவர்களுக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!!


முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தி.இரா.இரத்தினசாமி (வயது 82) அவர்கள் இன்று (14.10.2025) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். உழைப்பால் உயர்ந்த கொள்கை வீரராவார்! தூத்துக்குடி மாவட்டம் பண்டாரபுரத்திலிருந்து 70 ஆண்டுகளுக்குமுன் சைக்கிளிலேயே சென்னை வந்து சேர்ந்து சிறு சிறு தொழில்களைச் செய்து, உழைப்பால் உயர்ந்த நிலையை எய்தியவர்.

தொடக்கத்தில் மிட்டாய் வியாபாரம், புலி மார்க் சீயக்காய், ஜம்போ தீப்பெட்டி என்று கடைகளுக்கு விநியோகித்து, அன்னை இந்திரா நகர் (சேலையூர் பகுதி) வியாபாரிகள் சங்கத் தலைவர் என்கிற அளவுக்கு உயர்ந்தவர். அந்த நகரின் உருவாக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்ததோடு மட்டுமல்லாமல், அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து தொண்டறப் பணி ஆற்றியவர்.

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவராகவும், சென்னை மண்டல கழகத் தலைவராகவும், மாவட்டக் கழகக் காப்பாளராகவும் பல்வேறு பொறுப்புகளில் இருந்து அரிய இயக்கப் பணிகளை ஆற்றிய அரும்பெரும்  பெரியார் பெருந்தொண்டர் ஆவார். மாதந்தோறும் ஒரு கூட்டம் என்ற ஒருமுறையை தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்தி வந்தவர். கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கேற்றவர்.

அவரது வாழ்விணையர் ஆதிலட்சுமி அம்மையார்; மூன்று மகன்கள் மூன்று மகள்கள்; மகன் சிவசாமி தாம்பரம் மாவட்டக் கழக இளைஞரணித் தலைவர் பொறுப்பில் உள்ளார்.

கழகக் கொள்கையில் ‘முரட்டுத்தனமான’ உறுதி கொண்டவர். அவரது மறைவு, அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல; கழகத்திற்கே பேரிழப்பாகும்.

அவர்தம் பிரிவால் ஆறாத் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சுயமரியாதைச் சுடரொளி
மானமிகு தி.இரா.இரத்தினசாமி அவர்களுக்கு
வீர வணக்கம்! வீர வணக்கம்!!

கி.வீரமணி

  தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
14.10.2025

- விடுதலை நாளேடு,14.10.2025

திங்கள், 22 செப்டம்பர், 2025

நடிகவேள் எம்.ஆர். இராதா மனைவி கீதா மறைவு : தமிழர் தலைவர் மரியாதை

நடிகவேள் எம்.ஆர். இராதா மனைவி கீதா மறைவு : தமிழர் தலைவர் மரியாதை


செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலுவின் வாழ்விணையர் மறைவு : தமிழர் தலைவர் இறுதி மரியாதை



திராவிடர் கழகம்

தி.மு.க. பொருளாளர் டி. ஆர்.பாலு அவர்களின்  வாழ்விணையர்  –  தொழில்துறை அமைச்சர்
டி.ஆர்.பி. ராஜா அவர்களின் தாயார் பா. ரேணுகாதேவி அவர்கள் இன்று (19.8.2025) மறைவுற்றார் என்பதற்கு வருந்துகிறோம். கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்கள் அம்மையாரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.  டி.ஆர். பாலு அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இரங்கலும், ஆறுதலும்  தெரிவித்தார்.

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்,  தாம்பரம் மாவட்டக் கழகத்  தலைவர் ப.முத்தையன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, தாராசுரம் வை .இளங்கோவன், பொறியாளர் கரிகாலன், தோழர்கள் சூளைமேடு இராமச்சந்திரன், கோவி.ராகவன், பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு. மோகன்ராஜ்,  ராமு, அரும்பாக்கம் சா.தாமோதரன், த. மரகதமணி, உடுமலை வடிவேல், பூவரசன், கணேசன், புகழேந்தி ஆகியோர் கழகத்தலைவருடன் சென்று மரியாதை செலுத்தினர். (சென்னை – 19.8.2025)

- விடுதலை நாளேடு, 19.08.25


சனி, 16 ஆகஸ்ட், 2025

நாகாலாந்து ஆளுநர் மறைவு தமிழர் தலைவர் மரியாதை


விடுதலை நாளேடு
திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

நாகாலாந்து ஆளுநரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான இல.கணேசன் அவர்கள் மறைவிற்கு கழக தலைவர் ஆசிரியர் அவர்கள் நேரில் சென்று மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.  உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்ட துணை செயலாளர் கரு. அண்ணாமலை, வழக்குரைஞர் துரை அருண் ஆகியோர் உள்ளனர். தமிழர் தலைவரை சந்தித்த பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனிடம் இல. கணேசன் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். (சென்னை, 16.8.2025)


திங்கள், 9 ஜூன், 2025

மறைந்த திரைப்பட நடிகர் ராஜேஷ் உடலுக்கு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை

: ஜூன் 1, 2025
மறைவு

மறைந்த திரைப்பட நடிகர் ராஜேஷ் அவர்களின் உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் 31.05.2025 அன்று பிற்கல் 12.30 மணி அளவில் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. திராவிடர் கழக தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இரங்கல் அறிக்கையை வழங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மாவட்டக் கழகச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை, ஜனார்த்தனம் மற்றும் தோழர்கள் உடன் இருந்தனர்.(சென்னை இராமாபுரம்).

குறிப்பு:(உடன் க.சுப்பிரமணி)