பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் - பெரியார் பிஞ்சு இதழ் இணைந்து நடத்திய
அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 136ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும், பெரியார் பிஞ்சு இதழும் இணைந்து நடத்தும்பள்ளி மாணவ மாணவியர்களுக்கான பெரியார் 1000 வினா விடைப் போட்டி தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தாம்பரம்
அதன் ஒரு பகுதியாக தாம்பரம் மாவட்டம் சார்பில் மூன்று இடங்களில் தேர்வுகள் நடைபெற்றன.காலை 10 மணிக்கு தேர்வு என்று அறிவித்து இருந்த போதிலும் 8 மணியில் இருந்தே மாணவ மாணவியர்கள் தேர்வு மய்யங்களுக்கு ஆர்வமாய் வரத் தொடங்கினர்.
பின்னர் சரியாக 10 மணிக்கு தொடங்கிய தேர்வு 11:30 வரை நடை பெற்றது. தேர்வு தொடங்கும் முன்னரே தேர்வு மய்யத்திற்கு வருகை தந்த கழகத்தின் பொதுச் செயலாளர் வீ . அன்புராஜ் அவர்கள் தேர்வுப் பணிகளை பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல் தேர்வுப் பொறுப்பாளர்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.
தாம்பரம் சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் 343 மாணவ மாணவியரும், தாம்பரம் ஜெயகோபால் கரோடியா தேசிய மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வில் 184 மாணவ மாணவியரும், குரோம்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் 390 மாணவ மாணவியர் என மொத்தம் 917 பேர் தேர்வு எழுதினார்கள்.
தேர்வு எழுதிய மாணவ மாணவியர்களுக்கும் அவர்களோடு வருகை தந்த பெற்றோர்களுக்கும் தண்ணீர் பாட்டிலும் பிஸ்கட் பாக்கெட்டும் வழங்கப்பட்டது.
இத் தேர்வை கண்காணிக்கும் பணியில் முப்பதுக்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட் டனர். அவர்களுக்கு சென்னை மண்டல தலைவர் தி.இரா.இரத்தினசாமி அவர்கள் மற்றும் வடக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் வெ. ஞானசேகரன் , மாவட்ட தலைவர் ப. முத்தையன், மாவட்ட துணைத் தலைவர் கோ. நாத்திகன், மாவட்ட செயலாளர் கு.ஆறு முகம், மாவட்ட பொருளாளர் மா. ராசு, பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி. வீரபத்திரன், பொதுக்குழு உறுப்பினர் கே.எம். சிகாமணி ஆகியோர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.
குடந்தை
குடந்தை -புனித அன்னாள் மெட்ரிக் மேனிலை பள்ளி குடந்தை கழக மாவட்டம், குடந்தை பெருநகர பகுதிகளில் அமைந்துள்ள புனித அன்னாள் மெட்ரிக் மேனிலை யில் 6ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் 137 பேரும் ,10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 9 மாணவிகளும், பெரியார் 1000 வினாவிடை போட்டியில் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்.
இந்த மய்யத்திற்கு பெரியார் மணியம்மை பல்கலைகழக மாணவி கு.அறிவுவிழி நியமிக்கப்பட்டுஇருந்தார். மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் ராணிகுரு, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரா.கலைச்செல்வி, மாவட்ட கழக செயலா ளர் குடந்தை க.குருசாமி வலங்கை ஒன்றிய பகுத்தறி வாளர் கழக செயலாளர் கோவி.ரமேஷ் ஆகியோர் ஒருங்கினைப்பாளர்களாக பணியாற்றினார்கள்.
தேர்வு எழுதிய மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கலந்துகொண்ட மாண விகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அனைவ ருக்கும் பிஸ்கட் தேநீர் வழங்கப்பட்டது. நகர மேனிலை பள் ளியில், குடந்தை அக்ரகாரமாக இருந்த நிலை மாறி இன்று தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் அங்குள்ள ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை உண்டாக்கி இருக்கிறது என்பது (31.08.2014) அன்று நடைபெற்ற பெரியார் வினாவிடை போட்டியின் மூலமாக நிரூபணம் ஆகி உள்ளது.
இந்த பள்ளிக்கு குடந்தை கழக தலைவர் கு.கவுதமன், செயலாளர் வழக்கறிஞர் பீ.இரமேஸ், ஆடிட்டர் சு.சண் முகம் மாவட்ட கழக செயலாளர் குடந்தை க.குருசாமி, தஞ்சை மண்டல இளைஞரணி தலைவர் அஜிதன், ஆகியோர் ஒருங்கினைப்பாளர்களாக பணியாற்றினார் கள் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் 176 பேரும், 10ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை 6 மாணவிகளும், பெரியார் 1000 வினாவிடை போட்டியில் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்.
குடந்தை சிறிய மலர் மேனிலை பள்ளியில் இந்த பள்ளி மாணவ மாணவிகள் மட்டுமல்லாது நேடிவ் மேனிலை பள்ளி, அறிஞர் அண்ணா மேனிலை பள்ளி, கார்த்தி வித்யாலயா , எ ஆர்,ஆர், நகராட்சி பள்ளி, அரசு ஆண்கள் மேனிலை பள்ளி, சோழபுரம், ஸ்டார் மெட்ரிக் மேனிலை பள்ளி ,அம்மாசத்திரம், செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேனிலை பள்ளி குடந்தை, உட்பட 18 பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் 236 பேரும், 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை 59 மாணவிகளும், பெரியார் 1000 வினாவிடை போட்டியில் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள் இந்த பள்ளிக்கு ஒருங்கிணைப்பாளர் களாக குடந்தை ஒன்றிய கழக தலைவர் ஜில்ராஜ், துணை தலைவர் ஆ தமிழ்மணி, நகர துணை தலைவர் நா.காமராஜ், பேராசிரியர் வினோத், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆடிட்டர் சு.சண்முகம், விழந்த கண்டம் மதியழகன், மாவட்ட தலைவர் வை. இளங்கோவன், பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் தி.கணேசன், அமைப்பாளர் ஏ. கைலாசம் ,வலங்கை ஒன்றிய தலைவர் நா.சந்திரசேகரன், துணை தலைவர் வீரமணி, குடந்தை ஒன்றிய செயலாளர் அசூர் செல்வம், மற்றும் கோவி.மகாலிங்கம், ஆகியோர் களப்பணி செய்தார்கள்.
கபிஸ்தலம் -மணி மெட்ரிக் மேனிலை பள்ளி (பாபநாசம்) மணி மெட்ரிக் மேனிலைப் பள்ளி கபிஸ்தலம், மணி மெட்ரிக் மேனிலை பள்ளி கணபதி அக்ரகாரம், ஸ்ரீ வித்யாஸ்ரம் மெட்ரிக் பள்ளி வடகுரங்காடுதுறை, ஸ்ரீ கோவிந்தசாமி மூப்பனார் உயர்நிலைப்பள்ளி கபிஸ்தலம், அரசு உயர்நிலைப்பள்ளி வாழ்க்கை, அரசு உயர்நிலைப்பள்ளி வன்னியடி, அரசு மேல்நிலைப்பள்ளி புள்ளபூதங்குடி,அரசு உயர்நிலைப் பள்ளி, ராமானுஜபுரம், அரசு உயர்நிலைப்பள்ளி இலுப் பக்கோரை அரசு மேல்நிலைப்பள்ளி வீரமாங்குடி ஆகிய 10 பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் 6ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் 262பேரும், 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை 38மாணவிகளும், பெரியார் 1000 வினாவிடை போட்டியில் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்
மாவட்ட துணை செயலாளர் சு.துரைராசு, அமைப் பாளர் வ.அழகுவேல், ஒன்றிய தலைவர் தங்க பூவா னந்தம், செயலாளர் சு.கலியமூர்த்தி, ஒன்றிய பகுத்தறி வளர் கழக தலைவர் தி.கணேசன், அமைப்பாளர் கைலாசம், திராவிடர் சமுதாய அறக்கட்டளை செயல் தலைவர் திருஞானசம்பந்தம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சு.சண்முகம், ஆகியோர் தேர்வுக்கான முழு ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.
கலந்துகொண்ட மாணவர்களுக்கு பெரியார் பிறந்த நாள் கேக் மற்றும் தேனீர் வழங்கப்பட்டது. பெரியார் 1000 தேர்வு கும்பகோணம் மாவட்டம் வலங்கைமானில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 69 பிரிவில் 125 மாணவ-மாணவியரும் 10, -12 பிரிவில் 62 பேரும் தேர்வு எழுதினர். மாவட்ட தலைவர் இளங்கோவன் செயலாளர் குருசாமி , மாவட்ட துணை செயலர் வலங்கை கோவிந்தன், குடந்தை கவுதமன், வலங்கை ஒன்றிய செயலர் பவானிசங்கர் தலைவர் சந்திரசேகரன் கலந்துகொண்டனர்.
பகுத்தறிவாளர்கழக அமைப்பாளர் மோகன் ஒருங் கிணைத்து தேர்வுகளை நடத்தினார். அரசு ஆண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் ச.செங்குட்டுவன், சித்தன் வாழூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இராசேந்திரன் ஆசிரியர் த.வீரமணி ஆகியோரது வாழ்த்துரையோடு சிறப்பாக முடிந்தது.
நெய்வேலி
நெய்வேலி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடை பெற்ற பெரியார் 1000 வினா-விடைப் போட்டியினை பொறியாளர் முன்னாள் என்.எல்.சி. கல்வித்துறை இணைச்செயலாளர் ஜோதிகுமார் அவர்கள் தலைமை வகித்து துவக்கி வைத்தார்கள். முன்னாள் மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி,நகர தலைவர் ச.கண்ணன், பொறியாளர் கண்ணன், பொறியாளர் வெங்கடே சன்,அமைப்பாளர் கு.இரத்தினசபாபதி, துணைத்தலை வர் த.பாஸ்கர், இளைஞரணி செயலர் ப.மாணிக்கவேல். இரா.நடராஜாமணி, நா.இராமராஜ், த.பிரபாகரன், இரா. பிரபாகரன், மற்றும் தமிழாசிரியர், ஓவிய ஆசிரியர், உடற் கல்வி ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டு மாணாக்கர்களை ஒழுங்குபடுத்தி தேர்வுஎழுத துணை புரிந்தனர். மாணாக்கர்களுக்கு பேனா, பென்சில், அழிப்பான் இவைகளை ஜோதிகுமார் அவர்கள் வழங்கினார்.
இறுதியில் துணைத்தலைவர் த.பாஸ்கர் அவர்கள் என்.எல்.சி. கல்வித்துறை செயலாளர், ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணாக்கர் களுக்கு பேனா, பென்சில், அழிப்பான் இவைகளை வழங்கிய ஜோதிகுமார் நன்கொடை அளித்து உதவிய பொறியாளர் இராவணன், பொறியாளர் சண்முகம் மற்றும் பள்ளியின் பணியாளர்களுக்கும் நன்றி கூறினார்.
அரும்பாக்கம்
தென் சென்னை மாவட்டம், அரும்பாக்கத்தில் உள்ள நேஷனல் ஸ்டார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் பெரியார் ஆயிரம் வினா _ விடைப் போட்டியில் 400_க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 136_ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும், பெரியார் பிஞ்சு இதழும் இணைந்து நடத்தும் பெரியார் ஆயிரம் வினா _ விடைப் போட்டி சென்னை, அரும்பாக்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் வகுப்பு ஒருங்கி ணைப்பாளர்களாக தலைமைக்கழகத்தின் சார்பாக இளவரசி, தெ.செ.மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட துணை செயலாளர் தமோதரன், மகளிரணி தோழி யர்கள் செ.கனகா, மு.பவானி, மயிலை குமார், மாரியப் பன், எத்திராஜ் ஆகிய திராவிடர் கழகத் தோழர்கள் பங்கு பெற்றனர்.
இந்நிகழ்வில் பெரியார் ஆயிரம் தேர்வை பள்ளி தாளாளர் கோ.பா.சாரதி தொடங்கி வைத்தார். தேர்வின் முடிவில் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் சிறப்பு பரிசினை திராவிடர் கழக பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி (வழக்குரைஞர்) வழங்கினார். உடன் திமுக 1-05_ஆவது வட்டச் செயலாளர் ந.அதியமான் பங்கேற்று சிறப்பித்தார்.
க.தமிழ்ச்செல்வன், மு.டில்லிபாவு, எம்.பிரகாசம், என்.எஸ்.கார்த்திக், க.திருச்செல்வன், த.தமிழ்ச்செல்வன், சி.செங்குட்டுவன், கோ.வி.ராகவன், தரமணி மஞ்சநாதன் உள்ளிட்ட கழகத்தோழர்கள் பலர் பெருந்திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
பூவிருந்தவல்லி
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து வழங்கிய பெரியார் 1000 _ வினா, விடைப் போட்டியில் 31.8.2014 அன்று பூவிருந்தவல்லி பகுதியில் நடைபெற்றது. இதில் முதல் நிலைத் தேர்வை 225 மாணவர்களும், இரண்டாம் நிலைத் தேர்வை 90 மாணவர்களும் எழுதினர்.
போட்டித் தேர்வுகளை எழுதிப் பழகும் பழக்கத்தை இருபால் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும், தந்தை பெரியாரின் சிந்தனைகளை மாணவர்களிடையே கொண்டு செல்லவும், பெரியார் 1000 என்ற பெயரில் வினா _ விடைப்போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ஆவடி மாவட்டத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற இத்தேர்வில், அம்பத்தூரில் 1,114 மாணவர்களும், ஆவடி நகராட்சியில் 162 மாணவர் களும், முத்தா புதுப்பேட்டையில் 85 மாணவர்களும், பூவிருந்தவல்லி பகுதியில் 315 மாணவர்களும் என்று ஆக மொத்தம் ஆவடி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மிகவும் உற்சாகத்துடன் பங்கேற்று எழுதியுள்ளனர்.
முதல் கட்டமாக ஆவடி பகுதியிலும் (30.8.2014) இரண்டாவது கட்டமாக 31.8.2-014 அன்று பூவிருந்த வல்லி அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது. இந்த நிகழ்வை மண்டலச் செயலாளர் வெ.ஞானசேகரன் தொடங்கி வைத்தார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தமிழ் சாக்ரடீஸ் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்தும் சிறப்பித்தார். ஆவடி மாவட்ட செயலாளர் பா.தென்னரசு தேர்வை மேற்பார்வையிட்டு தோழர்களை உற்சாகப்படுத்தினார்.
ஆவடி மாவட்ட உண்மை வாசகர் வட்டத் தலைவர் புழல் ராஜேந்திரன், ஆவடி மாவட்டத் தலை வர் கந்தசாமி, ராமதுரை, ஏழுமலை, ராமலிங்கம், மணி வண்ணன் ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர். கோபாலகிருஷ்ணன், உடுமலை வடிவேல் பெரியார் மாணாக்கன், திருமழிசை அரசு பள்ளி ஆசிரியர் மாட்சி, பூவை செல்வி, மணிமேகலை ஆகியோர் தேர்வு ஒருங் கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டு நல்ல வண்ணம் ஒத் துழைப்பு நல்கினர்.
தர்மபுரி
தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற பெரியார் ஆயிரம் வினா _ விடைப் போட்டி 11 மய்யங்களில் வெகுசிறப்பாக 30.8.2014 அன்று நடைபெற்றது. தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டி விழாவை பள்ளியின் தலைமை ஆசிரியர் முனியன் தலைமையில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.வேட்ராயன், மாநில ப.க.துணைத்த லைவர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர்களுக்கான போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி தொடங்கி வைத்தார். மாவட்ட ப.க.தலைவர் ஊமை ஜெயராமன் ஒருங்கிணைத்து நடத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் என்.நடராஜன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். விடுதலை வாசகர் வட்ட தலைவரும், கழகத்தின் கொடையாளருமான பெரியார் பெருந்தொண்டர் சின்னரா-ஜ் அவர்கள், வினா _ விடைக்குறிய தாளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர் ராஜாபிரபு மேற்பார்வையில் கழக நிர்வாகி கள். பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வன், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் இரா.பரிமளம், நகர தலைவர் துரை.சித்தார்த்தன் (மருத்துவர்), கிருட்டிணகிரி மாவட்ட செயலாளர் வனவேந்தன் சின்னசாமி, அர்ஜூனன், கல்வியாளர் சென்றாயன், அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பளி ஆசிரியர்கள் மல்லிகா, ஜே.ஆனந்தன், முருகேசன், கவுரன் தருமபுரி அதியமான் பள்ளி ஆசிரியர் ரவிச்சந்திரன், சி.கிருட்டிணமூர்த்தி, மாட்லாம்பட்டி பள்ளி ஆசிரியர்கள் இராமன், அளே தருமபுரி பள்ளி ஆசிரியர் மகேந்திரன் ஆகியோர் வினா _ விடைப் போட்டியை ஒருங்கணைத்து நடத்தினர்.
போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 164 பேரும், 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 186 பேர் என மொத்தம் 350 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் அனைத்து மய்யங்களிலும் போட்டியில் கலந்துக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பிஸ்கட், குடிநீர் வழங்கப்பட்டன.
வாலாசாப்பேட்டை
பெரியார் 1000 வினா _ விடை போட்டியில் கலந்து கொண்ட பள்ளிகள் வாலாசப்பேட்டை ஆண்கள், பெண்கள் மேனிலைப்பள்ளி, சுமைதாங்கி மேனிலைப்பள்ளி, காவேரிப்பாக்கம் ஆண்கள் பெண்கள் மேனிலைப்பள்ளி, ரெண்டாடி மேனிலைப்பள்ளி மற்றும் பாணாவரம் ஆண்கள், பெண்கள் மேனிலைப்பள்ளி மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக த.க.பா.புகழேந்தி (திமுக மாவட்ட பிரதிநிதி), செ.கோபி (மாவட்ட தி.க.செயலாளர்), சுரேசு (மாவட்ட தி.க.இளைஞரணி செயலாளர்), பொன் வெங்கடேசன் (மாவட்ட தி.க.து.செயலாளர்), ஆசிரியர் எஸ்.ராமஜெயம், எச்.ரஷீத்கான், சுனிதாராணி, ஆசிரியர் ரெண்டாடி மருதன், வாலாசப்பேட்டை மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள், சுமைதாங்கி பள்ளி ஆசிரியர் ஆர்.பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஆவடி மாவட்டம்
ஆவடி மாவட்டம் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக பெரியார் 1000 வினா _ விடை, பெரியார் சிந்தனைச்சோலையிலே, போட்டித்தேர்வு 6 மய்யங்களில் சிறப்பாக நடைபெற்றது. 6 மய்யங்களின் விவரம்: டி.செல்வம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மிட்னமல்லை அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, எஸ்ஆர்அய் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேது பாஸ்கரா நிகர் நிலைப்பள்ளி, எபினேசர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்ஆர்அய் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.
ஆவடி காமராஜர் நகர் டி.செல்வம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா _ விடை, பெரியார் சிந்தனைச் சோலையிலே போட்டித்தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்மணி, தே.தமிழ்நெறி, நெமிலி சங்கர், ஆசிரியர் ஜி.வசந்தா, பாக்யா ஆகியோரின் ஒத்துழைப்பால் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 200 மாணவ, மாணவியிர்கள் தேர்விலே கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு சிறப்பித்தவர்கள் மாவட்டத் தலைவர் மா.ஆ.கந்தசாமி, மாவட்டச் செயலாளர் பா.தென்னரசு, பள்ளித்தாளாளர் டி.செல்வம், கவிதா நந்தகுமார், காமராஜர் படிப்பகத் தலைவர் இராமநாதன், நகரத் தலைவர் இராஜேந்திரன், செயலாளர் கோ.முருகன், இளங்கோ, ராஜா மொகமத், நிழற்படக் கலைஞர் சேசாத்திரி, பெரியார் பிஞ்சு டி.எஸ்.செல்சியா, தமிழரசி, பிரீத்தி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.