புதன், 28 பிப்ரவரி, 2024

திருவள்ளுவர் சிலை நெற்றியில் பட்டையடிப்பு


     விடுதலை நாளேடு
2-47

26-2-2024 மாலை சென்னை மயிலாப்பூர், இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் சிலையின் தலையில் பூவை சுற்றியும் நெற்றியில் பட்டை அடித்தும் மத சாயம் பூசி சமூகவிரோதிகள் திருவள்ளுவர் சிலையை களங்கப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் கழகத்தின் சார்பில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன் மயிலாப்பூரில் உள்ள காவல்துறை துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன் ஆகியோர் உடன் சென்று இருந்தனர்.


ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

திராவிடர் கழக செயலவைத் தலைவராக வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தேர்வு! (தலைமைச் செயற்குழுக் கூட்டம்)

 Published February 3, 2024, விடுதலை நாளேடு

ஜனநாயகம்- மதச்சார்பின்மை – சமூகநீதி – சோசலிசம் – மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படும் நரேந்திர மோடி தலைமையிலான பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட

‘இந்தியா’ கூட்டணி வெற்றிபெற வாக்களிக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்!
கழகக் கட்டமைப்பை வலுப்படுத்துவோம்!
திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
இன்று (3.2.2024)  கடலூர் வள்ளி விலாஸ் செல்வ மகாலில் (இம்பீரியல் சாலை) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி  அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
முன்மொழிதல்: திராவிடர் கழகத் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
தீர்மானம் எண் 1:
இரங்கல் தீர்மானம்
மாணவர் பருவம் முதல் – குடும்பப் பாரம்பரியத்தைச் சார்ந்து, தந்தை பெரியார் கொள்கையின்பால் ஈர்க்கப் பட்டும், அரசு பணியில் இருந்தபோதும் அதே கொள்கை வழியில் பயணித்தும், பணி ஓய்வுக்குப் பிறகும், பகுத்தறிவாளர் கழகத் தலைவர், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர், திராவிடர் கழக செயலவைத் தலைவர் போன்ற முக்கிய பொறுப்புகளை வகித்து அருந்தொண்டாற்றியவரும், சிறந்த எழுத்தாளரும், மேடைப் பேச்சாளருமான கடலூர் மானமிகு சு.அறிவுக் கரசு அவர்களின் (வயது 84, மறைவு 22.1.2024) மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரின் இயக்கத் தொண்டிற்கு வீர வணக்கத்தையும், திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
திராவிடர் கழக மாநில மகளிரணி செயலாளராகப் பொறுப்பேற்று இறுதி மூச்சு அடங்கும்வரை மகளிரணி கட்டமைப்பைப் பலம் வாய்ந்ததாக உருவாக்குவதில் அரும்பணியாற்றியவரும், ஒருங்கிணைத்தவரும், திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் பங்கேற்று பலமுறை சிறை சென்றவரும், கடைசி மூச்சு அடங்கும்வரை ‘‘கழகம், கழகம்” என்று வாழ்ந்தவருமான க.பார்வதி (வயது 77, மறைவு 8.11.2023),
திராவிடர் கழகக் காப்பாளரும், திராவிடர் கழக தொழிலாளரணியின் மேனாள் மாநில செயலாளரும், தஞ்சை மண்டல திராவிடர் கழக மேனாள் தலைவரும், இறுதி மூச்சு அடங்கும்வரை கழகப்  பணிகளில் தன்னை முழுமையாக ஒப்படைத்தவருமான நெய்வேலி வெ.ஜெயராமன்  (வயது 82, மறைவு 22.12.2023), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கோவை க.கண்ணன் (வயது 84, மறைவு 2.1.2024) ஆகியோர் மறைவிற்கு இச்செயற்குழு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவர் (சி.பி.எம்.) தோழர் என்.சங்கரய்யா (வயது 102, மறைவு 15.11.2023), தமிழர் பெருமை கொள்ளும் நாகசுர மேதை மதுரை சேதுராமன் பொன்னுசாமி (வயது 91, மறைவு 27.11.2023), திரைப்படக் கலைஞரும், ‘பெரியார் விருதாளரும், தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் (வயது 71, மறைவு 28.12.2023), மாயவரம் நடராசன் என்ற தந்தை பெரியாரின் மெய்க்காப்பாளரின் அருமை மகனும், பிரபல ஆடிட்டரும், நமது இயக்கத்தின்பாலும், பொதுவுடைமை இயக்கத்தின்பாலும் மாறாப் பற்றுக்கொண்டவருமான சி.என்.ஜெயச்சந்திரன் (வயது 91, மறைவு 19.1.2024) ஆகிய பெருமக்களின் மறைவிற்கு கழகத் தலைமைச் செயற்குழு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேற்கண்டவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் இச்செயற்குழு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
முன்மொழிதல்: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தீர்மானம் எண் 2:
திராவிடர் கழகத்துக்குப் புதிய செயலவைத் தலைவர்
திராவிடர் கழக செயலவைத் தலைவராக இருந்து அரும்பணியாற்றிய மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் மறைவுற்ற காரணத்தால், அந்த இடத்திற்கு வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்களை செயலவைத் தலைவராக இக்கூட்டம் ஒருமனதாகத் தெரிவு செய்கிறது.
முன்மொழிதல்: திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்
தீர்மானம் எண் 3:
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலும் – நமது கடமையும்!
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையில்  தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெற்றுவரும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி- ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிராகவும், இந்திய அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாகவும், மதச்சார்பின்மை, சமூகநீதி, சோசலிசம் என்ற அடிக்கட்டுமானங்களைத் தகர்க்கும் வகையிலும், தன்னாட்சி நிறுவனங்களையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து சர்வாதிகாரப் போக்கிலும், ஜாதி, மதக் கலவரங்களைத் திட்டமிட்டுத் தூண்டும் வகையிலும், விஞ்ஞான மனப்பான்மைக்கு எதிராக பிற்போக்குப் பாதையில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பதிலும், மாநில சுயாட்சியின் அடிவேரை வெட்டி வீழ்த்தி, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைச் செயல்படுத்தும் வகையிலும், எதிலும் வெளிப்படைத் தன்மையற்ற வகையிலும், பொதுத்துறைகளைத் தனியார்வசம் தாரைவார்ப்பதில் தனிக் கவனம் செலுத்தும் போக்கும், ஏழைகளை வஞ்சித்து, அதேநேரத்தில், பெருமுதலாளிகளுக்கு வாராக் கடன் என்ற பெயரில் பெருந்தொகைகளைத் தள்ளுபடி செய்து அவர்களுக்கு வெண்சாமரம் வீசி அடைகாப்பதும், வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, மக்கள் நல்வாழ்வு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு முதலியவற்றில் பெரும் வீழ்ச்சியை நோக்கி மேலும் மேலும் வேகம் காட்டும் தன்மையிலும், கடும் விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகும் கொடுமையிலுமாக நடைபெற்றுவரும் மக்கள் விரோத பாசிச பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய ஆட்சியை நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்கும் ஒரே மார்க்கம்தான் – மக்கள் நல்வாழ்வுக்கும், சுய உரிமைக்கும், ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும், சமத்துவத்துக்கும், மக்கள் நல்லிணக்கத்துக்கும் உகந்தது ஆகையால், நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ‘‘இந்தியா கூட்டணிக்குப் பெரும் வெற்றியைத் தேடித்தரும்” ஜனநாயகக் கடமையை ஆற்றுமாறு வாக்காளர்ப் பெருமக்களை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது – வலியுறுத்துகிறது.
மக்கள் மத்தியில் இந்த வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து வகையான தேர்தல் களப் பணிகளை ஆற்றி, இருள்சூழ்ந்த ஆட்சி அதிகார நெடிவீசும், சமூகநீதிக்கும்,  சமத்துவத்துக்கும் எதிரான பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டுவதையே முக்கிய ஒரே குறிக்கோளாகக் கொண்டு, திட்டமிட்ட வகையில் பணியாற்றுவது திராவிடர் கழகத்தின் முக்கிய கடமை என்பதைத் தோழர்களுக்கு இச்செயற்குழு வழிகாட்டி வற்புறுத்துகிறது – முக்கியமான கட்டளைத் தீர்மானமாகவும் ஒருமனதாக நிறைவேற்றுகிறது!
முன்மொழிதல்: திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்  முனைவர் துரை.சந்திரசேகரன்
தீர்மானம் எண் 4:
கழகக் கட்டமைப்பை 
வலுப்படுத்தும் கடமை!
திராவிடர் கழக இயக்கப் பணிகளை எல்லா வகையிலும் வேகப்படுத்துவது – நவீன காலகட்டத்துக்கு ஏற்ப தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பிரச்சார யுக்திகளை மேற்கொள்வது, இயக்க ஏடுகள், இதழ்களுக்கான சந்தாக்களைச் சேகரிப்பதைத் தொடர் பணியாகவே செய்வது, மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர்ப் பாசறை, தொழிலாளரணி, பகுத்தறிவாளர் கழகம், அதன் இணை அமைப்புகள் முதலியவற்றைப் பலப்படுத்தி, மாபெரும் மக்கள் இயக்கமாகக் கட்டமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவது என்றும், பயிற்சிப் பட்டறைகளில் பயிற்சிப் பெற்றவர்களோடு நெருக்கமாக தொடர்பிலேயே வைத்து, கழக செயற்பாட்டாளர்களாக அவர்களை உருவாக்குவது என்றும், கழக அமைப்புகளில் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும் என்றும், பெரியார் படிப்பகம், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பெயரால் உள்ள நூலகங்களை சரிவரப் பராமரித்து, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்துவது என்றும், ‘‘பெரியார் பேசுகிறார்”, ‘‘பெரியார் வாசகர் வட்டம்” என்ற பெயர்களில் மாதாந்திர அரங்குக்கூட்டங்களை நடத்துவது என்றும், மாணவர்கள் மத்தியில் பேச்சுப் போட்டி, கலை நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்றும், அணிகளின் பொறுப்பாளர்கள் இதற்கான முழுப் பொறுப்பை ஏற்கவேண்டியவர்கள் என்றும் இச்செயற்குழு வற்புறுத்துகிறது.


திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

 


விடுதலை நாளேடு

பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளில் பயிற்சி பெற்றோரை ஒருங்கிணைப்போம்!
 கழகக் களப் பணிகளுக்கு அவர்களை ஆயத்தப்படுத்துவோம்!
 2024 ஆகஸ்டு திராவிடர் கழக எண்பதாம் ஆண்டு – 2025 சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாக்களைக் கொள்கை ரீதியாகக் கொண்டாடுவோம்!
சமூகநீதி – மதச்சார்பின்மை – ஜனநாயகம் – மாநில உரிமைகளுக்கு எதிரான
பாசிச மதவெறி பா.ஜ.க.வை வரும் தேர்தலில் வீழ்த்துவோம்!
திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

சென்னை,பிப்.24 திராவிடர் கழக இளைஞரணி செயல் பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் செயல் திட்டங் களும், மக்களாட்சிக்கு மாறான மதவெறி பா.ஜ.க. ஆட்சியை வரும் தேர்தலில் வீழ்த்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் திராவிடர் கழக இளைஞரணி மாநிலக் கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்டன.
24-02-2024 அன்று முற்பகல் சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடை பெற்ற திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வரு மாறு:

முன்மொழிதல்: மு.சண்முகப்பிரியன்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 1:
இரங்கல் தீர்மானம்

புதுக்கோட்டை மாவட்ட கழகக் காப்பாளர் பெ.இராவ ணன் வயது 90 (மறைவு 11-2-2024), கோவை மாவட்ட மேனாள் செயலாளர் பொள்ளாச்சி கழக செயல் வீரர் பாரதி வயது 67 (மறைவு 04-2-2024), விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டு பெரியார் பெருந்தொண்டர் கு.தாமோதரன் (மறைவு 06-2-2024) திராவிட இயக்க உணர்வாளர் கயல் தினகரன் வயது 88 (மறைவு 14-2-2024), ஆந்திர மாநிலம் – பாரத நாத்திக சமாஜ நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் வயது 80 (மறைவு 07-2-2024), முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கல்லக்குறிச்சி பெரியார் நேசன் வயது 94 (மறைவு 22-2-2024), தமிழ்நாடு அரசின் செய்தி விளம்பரத் துறை, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களது தந்தையார்முத்தூர் சா.பெருமாள்சாமி வயது 94 (22-2-2024) ஆகிய பெருமக்களின் மறைவிற்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இவர்களின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக் கும் இக்கூட்டம் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
முன்மொழிதல்: இரா.வெற்றிக்குமார்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 2:
பா.ஜ.க.அரசின் மக்கள் விரோதப் போக்கை
முறியடிக்க வேண்டும்

நாடு எதிர்கொண்டிருக்கும் இக்கட்டான சூழலில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவின் வாழ்வா சாவா பிரச்சினையாகும். இந்தியாவின் சமூகநீதி, மதச் சார்பின்மை, ஜனநாயகம், மாநில உரிமை, பன்மைத்துவம் ஆகியவற்றுக்குப் பெரும் ஆபத்தாகக் கடந்த பத்தாண்டு களாக பாஜக – ஆர்.எஸ்.எஸ். மதவாத ஆட்சி நடை பெற்று வருகிறது. இந்திய இறையாண்மைக்குரியோரான மக்களின் அடிப்படை உரிமைகள் பல வகையிலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இந் நிலையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் வளர்ச்சியை யும், ஒருங்கிணைந்த தன்மையையும் முன்னிறுத்திக் களம் காண்பது காங்கிரஸ் – திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணி தான் என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதல்படி, அக் கூட்டணி வெல்லுவதற்கும், இந்தியா காக்கப்படவும் பரப்புரையில் ஈடுபடுவது என இக் கூட்டம் உறுதி ஏற்கிறது.
தமிழ்நாடெங்கும் பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, தெருமுனைப் பிரச்சாரத்திலும், துண்டறிக்கை விநியோகித்தல் உள்ளிட்ட பிரச்சார முறைகளிலும் தீவிரமாக ஈடுபடுமாறு கழக இளைஞ ரணித் தோழர்களையும், பொறுப்பாளர்களையும் இக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
முன்மொழிதல்: எ.சிற்றரசு,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 3(அ):
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையும் – ஒருங்கிணைப்பும்

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவரும் பெரியாரி யல் பயிற்சிப் பட்டறைகளில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு, முறையாக நெறிப்படுத்தி, திராவிடர் கழகத்தின் இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் ஆகியவற்றில் களப்பணிக்கு உட்படுத்தி, தமிழர் தலைவர் தலைமையில் பெரியார் பணி முடிக்க இக் கூட்டம் உறுதியேற்கிறது.
முன்மொழிதல்: தா.தம்பிபிரபாகரன்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 3(ஆ):
கலை தொடர்பான பயிற்சிப் பட்டறை

வழக்கமாக நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஒருபக்கம் நடைபெற்றாலும், இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட நடிப்புத் துறைகளில் ஆர்வமுள்ள இருபால் இளைஞர்களுக்காக வென்றே தனிப் பயிற்சிப் பட்டறைகளைத் தக்கவர்களைச் கொண்டு நடத்துவது என்றும், பயிற்சிப் பட்டறை மாநில ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட அளவில் கழகத் தோழர்களிடமிருந்து தகவல் பெற்று, தக்கவர்களைத் தேர்ந்தெடுத்து இத்தகைய பயிற்சிகளை சிறப்பாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
முன்மொழிதல்: ம.செல்லதுரை,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 4:
திராவிடர் கழகத்தின் 80ஆம் ஆண்டு – மாநாடு

திராவிடர் கழகத்தின் 80 ஆம் ஆண்டு நிறைவு விழாவை இவ் வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் திராவிடர் கழக இளைஞரணியின் சார்பில் மாபெரும் எழுச்சி மாநாடாக நடத்திட ஆணையிடுமாறு திராவிடர் கழகத் தலைவரை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
முன்மொழிதல்: கோ.வேலு,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 5:
‘திராவிட மாடல்’ அரசுக்குப் பாராட்டு

‘‘வேலை கேட்டு, விண்ணப்பம் போட்டு அலுத்துப் போக மாட்டேன்; வேலை கொடுக்கும் நிலைக்கு என்னை உருவாக்கிக் கொள்வேன்” என்று தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வழங்கிய உறுதிமொழியை இன்றைய இளைஞர்களுக்கு மீண்டும் இக்கூட்டம் நினைவூட்டுகிறது.
சமூகநீதியையும், சீரான வளர்ச்சியையும் உருவாக்கும் வகையில், நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் தொடர்ந்து நல்ல திட்டங்களை மாணவர்களுக்கும், இருபால் இளைஞர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் செயல்படுத்திவரும் ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக் கூட்டம் தனது பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாடு அரசின் திட்டங்களை முறையாகப் பயன்படுத்தி, தொழில் முனைவோராகவும், உயர்கல்வி, ஆராய்ச்சிப் படிப்புகளில் சிறந்தோராகவும் தமிழர்கள் உருவாக அத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும், பிறருக்கு வழிகாட்டவும் நமது இளைஞரணித் தோழர்கள் முன் கை நீட்ட வேண்டும் என்று இக் கூட்டம் தீர்மானிக்கிறது.
முன்மொழிதல்: மு.அருண்குமார்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 6:
சமூகநீதிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

கடந்த பத்தாண்டுகளில் பல வகையிலும் சமூகநீதிக்கு ஆபத்துகளை உருவாக்கியுள்ளதோடு, பல கண்ணி வெடிகளையும் பாஜக அரசு புதைத்து வைத்துள்ளது. பாசிச பாஜக ஆட்சி ஒழிந்து, புதிய அரசு பதவியேற்றாலும், இந்த ஆபத்துகளிலிருந்து சமூகநீதியைக் காத்து, அதற்கு சட்டப் பாதுகாப்புகளை வழங்கி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமையை உறுதி செய்ய வேண்டியது பெரும் சவாலான பணியாகும். இந்தச் சவாலை எதிர்கொள்ள, சமூகநீதி குறித்த புரிதலை இளைஞர்களிடமும், பல்வேறு அமைப்புகளிடமும் உருவாக்குதல் அவசியமாகும். மக்களைத் தயார்படுத்தினால்தான், அதன் பின் அரசுகள் செயலாற்ற ஏதுவாக இருக்கும். அரசியல் சூழல் எப்படியாயினும், சமூகநீதிக்கு ஆபத்து வருவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. அதற்குத் தேவையான பரப்புரைகள், விழிப்பூட்டும் வகுப்புகள், ஒருங்கிணைப்புகள், போராட்டங்களை நடத்திட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டலை ஏற்றுச் செயல்படுவது என இக் கூட்டம் முடிவு செய்கிறது.
முன்மொழிதல்: நா.கமல்குமார்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 7:
ஜாதி-மதவாதத்தை எதிர்த்துக்
கிராமப் பிரச்சாரம்!

ஜாதி, மதவாதத்தைப் பரப்பி, தமிழ்நாட்டின் சமூகநீதிச் சூழலைச் சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அதன் தூண்டுதலில் பல ஜாதிய, மதவாத அமைப்புகளும் செயல்பட்டுவருவதை இக் கூட்டம் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனிக்கிறது. சமூக ஊடகங்கள் வாயிலாகவும், பொது ஊடகங்கள் வாயிலாகவும் பொய்ச் செய்தி பரப்புதல், செய்திகளைத் திரித்து வெளியிடுதல் என நயவஞ்சக நோக்கில் மேற்கண்ட அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டு இளைஞர்களிடம் இந்த நச்சுச் செடிகள் பரவிடா வண்ணம் தடுப்பது அனைத்து இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகள், கல்வியாளர்களின் கடமை என்பதை இக் கூட்டம் கவனத்துடன் சுட்டிக் காட்டுகிறது. அதற்கு முன்னோடியாக கிராமப்புறங்களில் தொடர் பரப்புரைகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்படுகிறது.
முன்மொழிதல்: ச.குமார்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 8:
சுயமரியாதை இயக்கத்தின்
நூற்றாண்டு விழா (2025)

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தோன்றிய நூறாம் ஆண்டு ஆகும். இது வெறும் வரலாற்றுக் குறிப்பு அல்ல – நாம் செல்ல வேண்டிய பாதையை நினைவூட்டும், வழிகாட்டும், விரைவுபடுத்தும் பாடக் குறிப்பும் ஆகும். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில் பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமூகநீதி ஆகியவற்றைத் தமிழர்களிடமும், பிற மாநிலத்தவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டியது நமது கடமை ஆகும். நமது இளைஞர்கள் எழுதவும், உரையாற்றவும், ‘மந்திரமா – தந்திரமா?’ உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் வாயிலாகப் பரப்புரை செய்யவும் தயாராக வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, பிற மொழிகளிலும் குறிப்பாக ஆங்கிலத்திலும் தங்கள் ஆளுமையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் இக் கூட்டம் வலியுறுத்துகிறது. அதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில், தகவல் தொழில்நுட்பத் துறையில் நாம் செல்ல வேண்டிய இலக்குகளை மனதில் கொண்டு அவற்றில் தீவிரமாகச் செயல்படும் வகையில் அதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
முன்மொழிதல்: த.ஜெகநாதன்,
மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 9:
அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) பிரிவின் அடிப்படையில் பாடத்திட்டம்

மானுட வளர்ச்சியில் இன்றைய அறிவியலின் பங்கு மகத்தானது. உலக நாடுகள் அனைத்தும் அறிவியல் துறையில் அளப்பரிய சாதனைகளைப் புரிந்து வருகின்றன. பன்னெடுங்காலமாக விடைதெரியா கேள்விகளுக்கு அறிவியல் விடையளித்து வருவதுடன், புதிய புதிய கேள்விகளையும் எழுப்பிவருகிறது. இத் துறையில் வளர்ச்சியடையும் சமூகமே, நாளைய உலகின் பகுத்தறிவும், ஆளுமையும் மிக்க சமூகமாக உயரும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51 ஏ(எச்)சும் அதை வலியுறுத்துகிறது. அறிவியல் மனப்பான்மையும், அறிவியல் புத்தாக்கங்களும் பெருகும் வகையில் மாணவர்களையும், இளைஞர்களையும் ஈர்க்கும் வகையில் தனித்தன்மையான விழாக்களை, கண்காட்சிகளை, பயிற்சிகளை, கல்விக் கூடங்களைத் தாண்டியும் பொது மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் அரசு திட்டமிட வேண்டும் என்றும், அறிவியல் சார் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் திராவிடர் கழக இளைஞரணி கேட்டுக் கொள்கிறது.
முன்மொழிதல்: இர.சிவசாமி,
தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர்

தீர்மானம் எண் 10:
அரசமைப்புச் சட்டத்தின்
முகப்புரை பற்றி பாடத்திட்டம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை வலியுறுத்தும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் தத்துவங்களும், சமூக, அரசியல், பொருளாதார நீதியும், அடிப்படை உரிமைகளும் இந்தியாவின் அனைத்துத் தரப்பினருக்கும் சென்று சேர வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை பள்ளிகள் முதலே கொண்டு வருதல் அவசியமாகும். பள்ளிப் பாடத்திட்டங்களிலேயே அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் குறித்தும், அவற்றைக் காக்க குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் குறித்தும் விளக்கப்பட வேண்டும்; அதற்கேற்ற பாடங்களும் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
முன்மொழிதல்: ரெ.சுப்ரமணியன்,
தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவர்

தீர்மானம் எண் 11:
தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் வெளிமாநிலத்தவர்களுக்கா?

இந்திய ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் அந்தந்த மாநில மக்களுக்கு, அந்தந்த பகுதிகளில் வேலையை உறுதி செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட வேண்டும். தமிழ்நாட்டில் ரயில்வே, அஞ்சல் துறை, வங்கிப் பணிகள் உள்ளிட்ட பல அலுவலகங்களிலும், அலுவலகம் சாராத பணிகளிலும் அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குவிக்கப்படுவது கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களிடம் உரசல், மக்களின் தேவைகள் அறியாமல் புறக்கணிக்கப்படுதல் என்று தொடர் பிரச்சினைகள் எழுவதுடன், தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைப் பறிப்பு என்னும் கொடுமை நடந்து கொண்டுள்ளது. இந்நிலை ஏற்கத்தக்கதல்ல. இளைஞர்கள் மத்தியில் பதற்றமான மனநிலை உருவாகி வருகிறது. இதற்கான முடிவுரை ஏற்படுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய, மாநில அரசுகளை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

மயிலை த.வேலுவின் தாயார் த. கவுரி அம்மாள் மறைவு கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் நேரில் மரியாதை

 


விடுதலை நாளேடு
சென்னை தென்மேற்கு மாவட்ட தி.மு.கழக செயலாளரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த. வேலு அவர்களின் தாயார் த. கவுரி அம்மாள் அவர்கள் நேற்று (24.2.2024) மறைவுற்றார். மறைவுத் தகவல் அறிந்ததும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கவுரி அம்மாள் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி மயிலை த. வேலு அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். தென் சென்னை மாவட்டத் தலைவர் வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மயிலை சேதுராமன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
------------------------------------------------------------
-------------------------------------------------------------
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு அவர்களின் தாயார் த.கௌரி அம்மாள்(வயது 74) அவர்கள் 24.02.24 முற்பகல் மறைவுற்றார்.
அன்று இரவு 9.00 மணி அளவில்  திராவிடர் கழகத்தின் சார்பில்
கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள்   த. கௌரி அம்மாள் உடலுக்கு  மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைத்தலைவர்  டி. ஆர். சேதுராமன் மற்றும் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.
------------------------------------------------------------
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு அவர்களின் தாயார் த.கௌரி அம்மாள்(வயது 74) அவர்கள் 24.02.24 முற்பகல் மறைவுற்றார்.
அன்று இரவு 8.30 மணி அளவில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் அவர்கள் அன்னாரின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைத்தலைவர்  டி. ஆர். சேதுராமன் மற்றும் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.

அரும்பாக்கம் சா. தாமோதரன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் தலைவரிடம் விடுதலை வளர்ச்சி நிதி

 


 


 
அறிவு வழி காணொலி இயக்குநர் அரும்பாக்கம் சா. தாமோதரன் தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் தலைவரிடம் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000 வழங்கினார். ஆசிரியர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.(24.02.2024, சென்னை).

தென்சென்னை மாவட்டத்தில் தந்தை பெரியாரின் 50 ஆவது நினைவு நாளை முன்னிட்டு பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு

 24.12.23 காலை 8.30 மணி அளவில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில்  தந்தை பெரியாரின் 50 ஆவது நினைவு நாளை முன்னிட்டு தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு காலை 8.30 மணி அளவில் மாலை அணிவிக்கப்பட்டது.


 24.12.23 காலை 8.45 மணி அளவில்  தந்தை பெரியாரின் 50 ஆவது நினைவு நாளை முன்னிட்டு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் அண்ணா மேம்பாலத்தில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.


தந்தை பெரியாரின் 50ஆவது நினைவு நாளான 24.12.23 முற்பகல் ஆலந்தூர் பகுதி திராவிடர் கழகம் ஏற்பாட்டில் தந்தை பெரியார் படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழக தோழர்கள் பங்கேற்றனர்.

தந்தை பெரியாரின் 50ஆவது நினைவு நாளான 24.12.23 பிற்பகல் மந்தைவெளி பகுதி திராவிடர் கழகம் சார்பில்  மந்தைவெளி, வண்ணியம்பதி குடியிருப்பு பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது..








கோயிலைக் காட்டி மக்களை திசை திருப்புவதா? ( டி.ஆர்.பாலு எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா)

 Published January 24, 2024,விடுதலை நாளேடு

கோயிலைக் காட்டி மக்களை திசை திருப்புவதா?

வருகிற தேர்தலில் யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம்
தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

சென்னை, ஜன. 24- தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று (23-01-2024) மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடை பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தி.மு. கழ கப் பொருளாளரும் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எழுதிய உரிமைக்குரல், ஜி.ஸி.ஙிணீறீu – ஜிலீமீ விணீஸீ ணீஸீபீ விமீssணீரீமீ, விஹ் ஸ்ஷீவீநீமீ யீஷீக்ஷீ tலீமீ ஸ்ஷீவீநீமீறீமீss, பாதை மாறாப் பயணம் (பாகம்-3) ஆகிய நூல்களை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ஒன்றிய மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம், இந்து குழுமத் தலைவர் என்.ராம், கவிப்பேரரசு வைரமுத்து, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள் ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி கருணாநிதி, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடா ளுமன்ற மேனாள் உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி. டி.கே.எஸ். இளங்கோவன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாண்மை இயக்குநர் க. சந்தானம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு,
இன்று, நமது கழக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் – கழகப் பொருளாளருமான என் னுடைய அருமைச் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்கள் எழுதியுள்ள ‘பாதை மாறாப் பயணம்‘ புத்தகத்தின் மூன்றாவது பாகத்தை வெளியிடுகிறேன்.
பாலு அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை யில் சொல்லவேண்டும் என்றால், சின்சியா ரிட்டி! ஏதாவது சொன்னோம் என்றால், அதை முடித்துவிட்டுத்தான் அடுத்த போனே செய்வார்.

கலை­ஞர் மீது பாலு கொண்ட பற்று!

விருதுநகர் முப்பெரும் விழாவில் நம்முடைய பாலு அவர்களைப் பற்றிநான் பேசியதை, மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்க்கிறேன்… ‘கலைஞரின் தொண்டரா? தோழரா? செல்லப்பிள்ளையா? உடன்பிறப்பா? பற்றாளரா? வெறியரா? என்னவென்று பாலுவைச் சொல்வது? இது எல்லாம் கலந்த கலவைதான் பாலு‘ என்று அன்று நான் சொன்னேன்.

அன்றைக்கு நான் சுருக்கமாகச் சொன்னதற்கு விளக்கவுரையாக தன்னுடைய தன்வரலாற்றை எழுதி இருக்கிறார் நம் முடைய பாலு! 17 வயதில் தலைவர் கலைஞரின் பேச்சைக் கேட்டு அரசியலுக்கு வந்த பாலுவிற்கு, இப்போது 80 வயது! இன்றைக்கு வரைக்கும், ‘ஒரே கொடி – ஒரே இயக்கம் – ஒரே தலைமை‘ என்று கொள்கைப் பிடிப் போடு இயங்கிக் கொண்டு இருக்கிறார்.

முதல் பாகத்தில், அரசியலில் அவர் வளர்ந் தது பற்றியும், கழகத்தின் வளர்ச்சிக்காகத் தொண்டாற்றியது பற்றியும் எழுதிய அவர், இரண்டாவது பாகத்தில், அவரால் இந்திய நாடும் – நம்முடைய மாநிலமான தமிழ்நாடும் எப்படிப்பட்ட வளர்ச்சியை அடைந்தது என் றும் விரிவாக எழுதியிருக்கிறார்.
கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் நாடாளு மன்ற உறுப்பினராக, 12 ஆண்டுகள் ஒன்றியத் தில் அமைச்சராக இருந்திருக்கிறார். நாடாளு மன்றத்தின் இரண்டு அவைகளிலும் கழகத் தின் குரலை அவர் கம்பீரமாக ஒலித்திருக் கிறார்.

தமிழ்நாட்டில் ஓடும் தங்கநாற்கரச் சாலை யாக இருந்தாலும், தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் பாலங்களாக இருந்தாலும், இது அனைத்துமே நம்முடைய பாலு அவர்களின் திறமைக்கான மகுடங்கள்!

12 ஆண்டுகள் ஒன்றிய அமைச்சராக இருந்த பாலு, மூன்று முக்கியமான துறைகளில் முத்திரை பதித்தார். ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட் டிற்கு மட்டும் 22 ஆயிரத்து 758 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய பெட்ரோலியத் துறை சார்ந்த திட்டங்களை கொண்டு வந்தார்.
சுற்றுச்சூழல் – வனத்துறை அமைச்சராக இருந்தபோது, தேசிய பல்வகை உயிரின வளங்கள் ஆணையத்தைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்தார். கப்பல் – தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது, 56 ஆயிரத்து 644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தது. தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் 335 பாலங்களைக் கட்டியது பாலுவின் மாபெரும் சாதனை!

அரசியல் சூழ்ச்சியால் சேது சமுத்திரத் திட்டம் முடக்கம்!

ஆனால், இதையெல்லாம் விடப் பெரிய சாதனையாக வந்திருக்க வேண்டிய ஒன்று இருக்கிறது! அதுதான், அறிஞர் அண்ணாவின் கனவுத் திட்டமான சேதுசமுத்திரத் திட்டம்! தலைவர் கலைஞரின் வற்புறுத்தலால் இந்தத் திட்டம் 2004-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டாலும் அடுத்தடுத்து வந்த அரசியல் சூழ்ச்சிகளின் காரணமாக அந்தத் திட்டம் முடக்கப்பட்டது. அந்தத் திட்டம் நிறைவேறி இருந்தால், இந்தியாவின் வளர்ச்சிக்கும் – தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மிக முக்கிய மானதாக இன்றைக்கு அமைந்திருக்கும்.
இத்தகைய சாதனைக் களஞ்சியமாக இருக்கிறது டி.ஆர்.பாலு எழுதி இருக்கும் இந்த வாழ்க்கை வரலாறு! அதேபோல ஈழத் தமிழர் விடியலுக்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆற்றிய பணிகளையும், அதனால் ஆட்சியையே இழந்த தியாகத்தையும் யாராலும் மறக்க முடியாது. இனப்படுகொலை மற்றும் மனித உரிமைக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இலங்கை அரசு மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, அய்க்கிய நாடுகள் அவையிடம் கோரிக்கை மனு அளிப்பதற்காக என்னையும், டி.ஆர். பாலுவையும்தான் தலைவர் கலைஞர் அவர் கள் அனுப்பி வைத்தார். அய்.நா. துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசன் அவர் களையும், மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்களையும் சென்று சந்தித்து, ஈழத்தமிழர்களுக்காக வாதிட்டோம். இது தொடர்பான முழுமையான செய்திகளை பாலு இந்த நூலில் விளக்கமாக எழுதியிருக் கிறார்.

தலைவர் கலைஞர் அவர்கள் மறைவுற்ற பிறகு நடந்த நிகழ்வுகளைச் சொல்கிறபோது, அது கழக வரலாறாகவும், என்னுடைய வரலாறாகவும் அமைந்துவிட்டது. கழகத்தை யும் – என்னையும் – பாலுவையும் பிரித்து வரலாற்றை எழுத முடியாது! நெருக்கடிக் காலத்திற்கு முன்பு, கோபாலபுரம் பகுதியில் நான் இளைஞர் தி.மு.க. தொடங்கிய நேரத்தில் எனக்குத் துணையாக இருந்தவர். பின்னாளில் நெருங்கிய நண்பர்கள் ஆனோம். இந்த வளர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் வழித்தடத்தை விளக்கத்தான் இந்தப் ‘பாதை மாறாப் பயணம்‘! இது பாலுவின் வரலாற்றுப் புத்தகம் மட்டுமல்ல, மற்றவர்களுக்கு வழி காட்டும் புத்தகம்!
பா.ஜ.க.வை வீழ்த்தப் போகும் “இந்தியா” கூட்டணியின் உருவாக்கத்தில் நம்முடைய பாலுவிற்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. இந்தியாவின் எதிர்காலத்தை மனதில் வைத்து, எல்லோரும் கடமையாற்ற வேண் டும்! ஏன் என்றால், நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது, யார் ஆட்சியில் அமரக் கூடாது என்பதற்காக நடைபெறும் தேர்தல்!

கடந்த பத்தாண்டுகாலமாக, மக்களுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறை வேற்றாமல், தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதையும் செய்யாமல், பேரிடர் பாதிப்புக்குக் கூட நிதி ஒதுக்காமல் இறுதிக் காலத்தில் ஒரு கோயிலைக் காட்டி, மக்களைத் திசைதிருப்பப்பார்க்கிறது பா.ஜ.க. தலைமை. தேர்தலைச் சந்திக்க இருக்கும் பா.ஜ.க.விற்கு மக்களிடம் சொல்வதற்குச் சாதனை என்று எதுவும் இல்லை. அதனால்தான் முழுவதுமாக கட்டி முடிக்கப்படாத கோயிலை, அவசர அவரசமாகத் திறந்து, எதையோ சாதித்து விட்டதாகக் காட்ட நினைக்கிறார்கள். இது மாதிரியான திசைதிருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் சரியான பாடம் கொடுப்பார்கள். இது உறுதி!

எல்லா வகையிலும் மக்களை நசுக்கிய ஆட்சி, பா.ஜ.க. ஆட்சி. அந்தக் கோபம் மக்கள் மனதில் இருக்கிறது. தமிழ்நாட்டில் நாம் வலுவான கூட்டணியை அமைத்திருப் பது போன்று, இந்தியா முழுமைக்கும் வலு வான கூட்டணியை உறுதி செய்தாக வேண் டும்.

“இந்தியா” கூட்டணிக் கட்சிகள், தங்க ளுக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த் தையை அந்தந்த மாநிலங்களில் நடத்தி வருவதாக செய்திகள் வருகிறது. விரைவில் எல்லாம் நல்லபடியாக முடிந்து நாட்டு மக் களைக் காப்பாற்ற, தமிழ்நாட்டின் முன்னேற் றத்திற்கு உதவும் ஒரு ஒன்றிய அரசை உரு வாக்க நாமெல்லாம் தேர்தல் களத்தில் நுழை கிறோம். அதற்கும், டி.ஆர்.பாலு அவர்கள் தயாராக வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தப் பணிகளை எல்லாம் வெற்றிகரமாக முடித்த பிறகு, இந்த பாதை மாறாப் பயணத் தின் அடுத்தடுத்த பாகங்களை எழுதுவதற் கான வேலைகள் நம்முடைய டி.ஆர்.பாலு அவர்களுக்குக் காத்திருக்கிறது. தமிழ்நாட்டு முன்னேற்ற த்தின் வரலாற்றைச் சொல்ல, திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றை, தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் வரலாற்றை, இந்தத் திராவிட மாடல் அரசின் வரலாற்றைத் தொடர்ந்து கழகத்தினர் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து எனது உரையை நிறைவு செய்கிறேன். – இவ்வாறு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மக்­க­ளைத் திசை­ தி­ருப்­பப் பார்க்­கி­றது பா.ஜ.க. தலைமை. தேர்­த­லைச் சந்­திக்க இருக்­கும் பா.ஜ.க.விற்கு மக்­க­ளி­டம் சொல்­வ­தற்­குச் சாதனை என்று எது­வும் இல்லை. அத­னால்­தான் முழு­வ­து­மாக கட்டி முடிக்­கப்­ப­டாத கோயிலை, அவ­சர அவ­ர­ச­மா­கத் திறந்து, எதையோ
சாதித்­து­விட்­ட­தா­கக் காட்ட நினைக்­கி­றார்­கள். இது­மா­தி­ரி­யான திசை­தி­ருப்­பும் தந்­தி­ரங்­க­ளுக்கு மக்­கள் சரி­யான பாடம் கொடுப்­பார்­கள். இது உறுதி!

---------------------------





வியாழன், 15 பிப்ரவரி, 2024

தென்சென்னையில் கழகக் குடும்ப விழா - பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி.பாலு 93 வது பிறந்தநாள்


விடுதலை நாளேடு,
Published February 15, 2024

பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி.பாலு 93ஆவது பிறந்தநாள்-கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து.
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி.பாலு அவர்கள் 14.02.2024 மாலை 7.00 மணி அளவில் சைதாப் பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் 93ஆவது பிறந்த நாளை ‘கேக்’ வெட்டி குதூகலமாக கொண்டாடினார். உறவினர்களும் தோழர்களும் வந்திருந்து வாழ்த்தி சிறப் பித்தனர். தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்த சாரதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன் ஆகியோர் பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர்.

---------------------------------------------------------------------------------------------------------------------------






ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

பெரியார் உலகத்திற்கு நன்னன் குடில் நன்கொடை


விடுதலை நாளேடு,
Published September 20, 2023


பெரியார் உலகத்திற்கு மறைந்த புலவர் பெரியார் பேருரையாளர் 

மா. நன்னன் அவர்களின் குடும் பத்தின் சார்பில் கழகத் தலைவர் ஆசிரியரிடம் அளிக்கப்பட்ட நன்கொடை

புலவர் நன்னன் துணைவியார் 

பார்வதி அம்மாள் ரூ.3 லட்சம்

புலவர் நன்னன் மகள்

வேண்மாள் நன்னன் சார்பில்ரூ.3 லட்சம்

இவரது மகன் சார்பில்ரூ.1 லட்சம்

புலவர் நன்னன் மகள் 

அவ்வை நன்னன் சார்பில் ரூ.3 லட்சம்

அளிக்கப்பட்ட 

மொத்த நன்கொடை        ரூ.10 லட்சம்

(17.9.2023 – தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் – சென்னை பெரியார் திடலில்)

நன்கொடை

விடுதலை நாளேடு,
Published September 20, 2023


பெரியார் பேருரையாளர் புலவர் மா.நன்னன் மகள் அவ்வை நன்னன் பெரியார் உலகத்திற்கு ரூ.3 லட்சம் நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம்  வழங்கினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் (17.9.2023).