மணியம்மையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மணியம்மையார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 மார்ச், 2026

அன்னை மணியம்மையார் 48ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை


திராவிடர் கழகம்

சென்னை, மார்ச் 16- தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (16.3.2026) காலை, அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு காலம் வாழவைத்த தொண்டறத்தாய் அன்னை மணியம்மையாரின் 48ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (16.3.2026) காலை 10.30 மணியளவில் சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு கழகத் தோழர் – தோழியர்கள் பெருந்திரளாக சென்று மலர் மாலை அணிவிக் கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, தந்தை பெரியார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவுத் தூண் ஆகிய இடங்களில் மலர் வளையம் வைக்கப்பட்டது. பின்னர் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை யில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது

அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிட தொழிலாளரணி, பெரியார் மருத்துவமனை, திராவிடன் நிதி, பெரியார் நூலகர் வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், ஆடிட்டர் ஆர்.இராமச்சந்திரன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், நெய்வேலி ஞானசேகரன், மருத்துவர் டாக்டர் தர்ஷினி ஆனந்து, சி.வெற்றிச்செல்வி, பேராசிரியர் க.பெரியார் செல்வி, பொறியாளர் ச.இன்பக்கனி தங்க.தனலட்சுமி, பசும்பொன் செந்தில்குமாரி, இளவரசி, உமா, பூவை செல்வி, மு.செல்வி, வி.வளர்மதி, க.சுமதி, க.வெண்ணிலா, இளவேனில், பூங்குழலி, உத்ரா, வாணி, தேவி, விசாலாட்சி, வெண்ணிலா கதிரவன், க.அழகுமணி, வளர்மதி, மோகனப்பிரியா, பிரசீனா, அன்புமணி, மரகத மணி, ஆதிலட்சுமி, கலைவாணி, பெரியார் பிஞ்சு அதிரா.

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் மயிலை சேதுராமன், ஆயிரம் விளக்கு சேகர், காரைக்குடி பிராட்லா, மயிலாடுதுறை கி.தளபதிராஜ், வழக்குரைஞர் துரை அருண், தொழிலாளரணி செல்வராஜ், ஜனார்த்தனம், பெரியார் மாணாக்கன், சி.காமராஜ், எண்ணூர் மோகன், நங்கநல்லூர் தமிழினியன், கலைமணி, ஆனந்த், அசோக், டெய்சன், ராமு மற்றும் திரளான கழகத் தோழர்கள், பெரியார் திடல் பணித் தோழர்கள் அனைவரும் பங்கேற்று மரியாதை செலுத் தினர்.


செவ்வாய், 10 மார்ச், 2026

அன்னை மணியம்மையாரின் 107-ஆவது பிறந்த நாள் சிலைக்கு மாலை – நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை கழக துணைத் தலைவர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!



திராவிடர் கழகம்

சென்னை, மார்ச் 10- தொண்டறத்தாய் அன்னை மணியம்மையாரின் 107ஆவது பிறந்த நாளான இன்று (10.3.2026) காலை 10 மணியளவில் சென்னை பெரியார் திடலில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

முன்னதாக சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மகளிரணியினர் ஊர்வலமாகச் சென்று மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, தந்தை பெரியார் நினைவிடம், அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளி தூண் ஆகிய இடங்களில் கழகத் தோழர்கள் மலர் வளையம் வைத்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திராவிடர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிட தொழிலாளர் கழகம், திராவிடன் நலநிதி, பெரியார் மருத்துவமனை, பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யம், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகியவற்றின் சார்பில் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வீ.பன்னீர்செல்வம், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் ச.குமாரதேவன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், வழக்குரைஞர் துரை.அருண், திராவிடன் நலநிதி தலைவர் ப.சீத்தாராமன், விடுதலை அச்சக மேலாளர் சரவணன்.

மகளிரணி

பெரியார் மருத்துவமனையின் மருத்துவர் தர்சினி ஆனந்த், சி.வெற்றிச்செல்வி, பொறியாளர் ச.இன்பக்கனி, பேராசிரியர் பெரியார் செல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, உமா செல்வராசு, தங்க.தனலட்சுமி, மு.செல்வி, மு.செல்விமுரளி, நூர்ஜகான், மதனராணி, பூங்குழலி, வளர்மதி, மனோகரி, இளவரசி, கற்பகம், மரகதமணி, க.வெண்ணிலா, மீனாம்பாள், க.சுமதி, மோகனப்பிரியா, விசாலாட்சி, வாணி, தேவி, இந்திரா, இளவேனில், உத்ரா, சாந்தி, சண்முகலட்சுமி, பெரியார் பிஞ்சுகள் ஆதிரை, அதிரன், பெரியார் மருத்துவமனை செவிலியர் சந்தியா.

தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ப.முத்தையன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,  சென்னை  மேற்கு மாவட்டத் தலைவர் கரு.அண்ணாமலை, செயலாளர் சுப்பிரமணியன், மயிலை சேதுராமன், அரும்பாக்கம் தாமோதரன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், தமிழினியன், வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை ச.அன்புச்செல்வன், தொழிலாளரணி, செல்வராசு, இராமலிங்கம் மற்றும் சி.சித்தார்த்தன், சி.காமராஜ், கண்ணன், மகேஷ், டெய்சன், கலைமணி விஜய், பெரு.இளங்கோ, பொறியாளர் சிங்காரவேலன், ரங்கநாதன், ஜான்சன், கோ.தங்கமணி, முரளி, இளவரசு, தமிழ்செல்வன், முகப்பேர் முரளி, ஜனார்த்தனம், பெரியார் திடல் பணிமனைத் தோழர்கள் மற்றும் திரளான கழகத் தோழர் – தோழியர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

அன்னை மணியம்மையார் 107ஆம் ஆண்டு பிறந்த நாள் : நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை

-விடுதலை நாளேடு, 10.03.2026

செவ்வாய், 18 மார்ச், 2025

அன்னை மணியம்மையார் நினைவு நாள் – நினைவிடங்களில் மரியாதை, அன்னையார் சிலைக்கு மாலை அணிவிப்பு (சென்னை, 16.3.2025)

அன்னை மணியம்மையார் நினைவு நாள்

விடுதலை நாளேடு
திராவிடர் கழகம்

 அன்னை மணியம்மையார் நினைவு நாள் : கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை!

தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் நினைவு நாள்

திராவிடர் கழகம்

அன்னையார் சிலைக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மரியாதை

சென்னை, மார்ச் 16- தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 47ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (16.3.2025) அவரது சிலைக்கு மாலை அணிவித்து, நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

அன்னையார் சிலைக்கு மலர் மாலை
தந்தை பெரியாரை 95 ஆண்டுகாலம் வாழ வைக்கத் தன்னை அர்ப்பணித்த தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாளான இன்று (16.3.2025) காலை 10 மணிக்கு சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு திராவிடர் கழக மகளிரணியினர் மற்றும் கழகத் தோழர்கள் பெருந்திரளாக ஊர்வலமாகச் சென்று மலர் மாலை அணிவித்தனர்.

அய்யா, அம்மா நினைவிடங்களில் மரியாதை
இதையடுத்து பெரியார் திடலில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திராவிடர் கழக மகளிர், அணியினர் பாசறையினரால் அன்னை மணியம்மையார் நினைவிடம். சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடம், தந்தை பெரியார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
திராவிடர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிட தொழிலாளரணி, பெரியார் மணியம்மை மருத்துவமனை, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல அமைப்பு, திராவிடன் நிதி, பெரியார் அய்.ஏ.எஸ்., பயிற்சி மய்யம், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஆகியவற்றின் சார்பில் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.


பங்கேற்றோர்


இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், செயலவைத் தலைவர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மேனாள் மாவட்ட நீதிபதி இரா.பரஞ்சோதி, திராவிடன் நிதி பொது மேலாளர் அருள்செல்வன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், வழக்குரைஞர் சு.குமாரதேவன், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சோ.சுரேஷ், சி.வெற்றிச்செல்வி, க.பெரியார் செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன்,

மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள்
தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பெரியார் யுவராஜ், கரு.அண்ணாமலை, விருகை செல்வம், வெ.கண்ணன், டி.ஆர்.சேதுராமன், ச.மாரியப்பன், அரங்க.இராஜா, அரும்பாக்கம் சா.தாமோதரன், மயிலை பாலு, பா.மேகராஜன். வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், கி.இராமலிங்கம், சி.பாசுகர், நா.பார்த்திபன், சி.காமராஜ், கோ.தங்கமணி, சொ.அன்பு, அ.புகழேந்தி, த.மு.யாழ்திலீபன், சு.பெ.தமிழமுதன்.
சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு, ஆவடி – பூவை தமிழ்ச்செல்வன், உடுமலை வடிவேல், பெரியார் மாணாக்கன், க.கலைமணி, வை.கலையரசன், சக்திவேல், முகப்பேர் முரளி, படப்பை சந்திரசேகரன், திருவொற்றியூர் பெ.செல்வராசு, ஓவியர் பெரு.இளங்கோ, சரவணன், ச.சனார்த்தனன், மு.நா.இராமண்ணா, இருதயநாத், தஞ்சாவூர் கே.கருணாநிதி, ப.பிரசாத், நம்பியூர் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

கழக மகளிரணி
இறைவி, சண்முகலெட்சுமி, மா.தமிழரசி, சீர்த்தி, செ.பெ.தொண்டறம், நூர்ஜகான், மு.பவானி, வி.வளர்மதி, த.மரகதமணி, செ.உமா, ராஜேஸ்வரி, இ.இந்திரா, பூங்குழலி, இலக்கியா, முகப்பேர் செல்வி, பெரியார் பிஞ்சுகள் மகிழன், பிரபு, யாழிசை மற்றும் திரளான மகளிர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அன்னை மணியம்மையார் நினைவு நாள் – நினைவிடங்களில் மரியாதை, அன்னையார் சிலைக்கு மாலை அணிவிப்பு (சென்னை, 16.3.2025)

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

சீர்காழியை சேர்ந்த பெரியார் பெருந் தொண்டர் கு.ந.இராமண்ணா – ேஹமா ஆகியோரின் குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு 14ஆவது தவணையாக நன்கொடை ரூ.5,000 கழகத் துணைத் தலைவரிடம் வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், வழக் குரைஞர் த. வீரசேகரன். (இதுவரை வழங்கியது ரூ.55,000)

திராவிடர் கழகம்

அன்னையார் தலைமையில் நாம் எடுத்த உறுதிமொழி!

பெரியார் கல்வி நிறுவனங்கள்
தோழர்களே, தோழர்களே,
தந்தை பெரியார் மறைந்த நிலையில் திருச்சியில் அன்னை மணியம்மையார் தலைமையில் கூடிய நமது திராவிடர் கழகப் பொதுக் குழுவில் ஒரு மனதாக நாம் எடுத்த தீர்மானம் என்ன?
“திராவிடர் கழகத்தவராகிய நாங்கள், தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை, அவர் போட்டுத் தந்த பாதையில், எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் வென்று முடிப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்கிறோம்!” (6.1.1974)
இதன்படி அன்னையார் தலைமையிலும், அவர்களின் மறைவிற்குப் பிறகும் தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்றியிருக்கிறோம்; ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் மலரும் வரை நம் பணிகள் தொடரும்! தொடரும்!!
அதற்காக எந்த விலையும் கொடுக்கத் தயார் தயார் என்று அன்னையார் நினைவு நாளாகிய இன்று உறுதி எடுத்து உழைப்போம்! உழைப்போம்!
வாழ்க தந்தை பெரியார்!
வாழ்க அன்னையார்!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

திங்கள், 17 மார்ச், 2025

தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் – கழகத்தின் சார்பில் மரியாதை [சென்னை – 10.3.2025]

 

விடுதலை நாளேடு
ஆசிரியர் உரை, திராவிடர் கழகம்


அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் தொண்டற த்தாய் சிலைக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை

ஆசிரியர் உரை, திராவிடர் கழகம்

சென்னை, மார்ச் 10- தொண் டறச் செம்மல் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களின் 106ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2025) அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், நினைவிடத்தில் மலர் வளை யம் வைத்தும் மரியாதை செலுத் தப்பட்டது.
அன்னையார் சிலைக்கு மாலை
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டுகள் வாழ வைத்த அன்னை மணியம்மையாரின் 106ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2025) காலை 10 மணியளவில் திராவிடர் கழகம், கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையர் சிலைக்கு கழகத் தோழர் – தோழியர் ஊர்வலமாக சென்று மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்

தலைமையில் உறுதிமொழி
இதையடுத்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடம், தந்தை பெரியார் நினைவிடம் ஆகியவற்றில் மலர் வளையம் வைக்கப்பட்டு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உறுதிமொழி கூற கழகத் தோழர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடத் தொழிலாளரணி, திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, பெரியார் மணியம்மை மருத்துவமனை, திராவிடன் நிதி, பெரியார் சுயமரியாதை திருமண நிலையம், பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் மலர் வளையம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

சிங்கப்பூர் தோழர்கள்

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் மதியுரைஞர் வீ.கலைச்செல்வம் – மலையரசி கலைச்செல்வம் ஆகியோர் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

பங்கேற்றோர்

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர்கள் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், மருத்துவர் மீனாம்பாள், சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், அமுதரசன், இருதயநாத், முனைவர் ஜெயக்குமார், சி.வெற்றிச்செல்வி, க.பெரியார் செல்வி, பெரியார் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு மற்றும் மயிலை டி.ஆர்.சேதுராமன், தாம்பரம் சு.மோகன்ராசு, கி.இராமலிங்கம், கோ.தங்கமணி, சி.காமராஜ், பி.சி.ஜெயராமன், தமிழினியன், உடுமலை வடிவேல், பெரியார் மாணாக்கன், க.கலைமணி, தென்.மாறன், ஜெ.ஜெனார்த்தனன், மு.இரா.மாணிக்கம், சி.செல்லப்பன் மற்றும் எராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

மகளிரணியினர்…

இறைவி, செ.பெ.தொண்டறம், த.மரகதமணி, ஞானதேவி, கே.கனிமொழி, அருணா பத்மாசூரன், இரா.சு.உத்ரா பழனிசாமி, கே.மீனாம்பாள், கே.பிரித்தா, வி.வளர்மதி, ஆர்.ஏ.காவேரி, ஜி.வாணி, பி.இராஜேசுவரி, தங்க.தனலட்சுமி, மோகனப்பிரியா, ஜி.தங்கமணி, மு.இலக்கியா, மலையரசி கலைச்செல்வம், வீ.கா.தா.பெரியார்செல்வி, அன்பரசி, முத்துலட்சுமி, ஆதிலட்சுமி, நாகவள்ளி, மாலதி, இந்திரா, ரவணம்மாள் மற்றும் ஏராளமான மகளிர் நிகழ்வில் பங்கேற்றனர்.

தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 106ஆம் ஆண்டு பிறந்த நாள்


திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் – கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையில் கழகத் தோழர்கள் அன்னை மணியம்மையார் சிலை, நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர் [சென்னை – 10.3.2025]

சனி, 18 மார்ச், 2023

அன்னை மணியம்மையார் 45ஆம் நினைவு நாளில் தமிழர் தலைவர் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிப்பு, நினைவிடத்தில் மரியாதை

அன்னை மணியம்மையார் 45ஆவது நினைவு நாளையொட்டி நினைவிடத்தில் திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை தோழர்கள் மரியாதை


 

அன்னை மணியம்மையார் 45ஆவது நினைவு நாளையொட்டி நினைவிடத்தில் திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை தோழர்கள் மரியாதை செலுத்தினர் (சென்னை பெரியார் திடல், 16.3.2023)

சனி, 11 மார்ச், 2023

நெருக்கடி நிலை காலத்திலும் நிமிர்ந்து நின்றவர் அன்னை மணியம்மையார் அந்தத் துணிவோடு மதவாத சக்திகளை எதிர்த்து முறியடிப்போம்

அன்னை மணியம்மையார் சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

வெள்ளி, 10 மார்ச், 2023

கற்போம் - அவர் வழி நிற்போம்!அன்னையார்தம் பிறந்த நாளில் கழகத் தலைவரின் அறிக்கை

வியாழன், 4 பிப்ரவரி, 2021

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா காட்சிகளும் - மாட்சிகளும்!