மனித சங்கிலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனித சங்கிலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 அக்டோபர், 2022

மாபெரும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி! - சென்னை

 

 அனைத்துக் கட்சி- சமூக அமைப்பு தலைவர்கள் - தோழர்கள் பங்கேற்பு - தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் எழுச்சியுடன் நடைபெற்ற

மாபெரும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி!

தமிழர் தலைவர் கி.வீரமணி - கே.வி.தங்கபாலு - வைகோ - தொல்.திருமாவளவன் - கே.பாலகிருஷ்ணன் - இரா.முத்தரசன் - பேராசிரியர் சுப.வீரபாண்டியன் - ஜவாஹிருல்லா - வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்

சென்னை, அக். 12 -மதவெறி பரப்புரை செய்து சமூக அமைதியை சீர்குலைக்கும் ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கையை எதிர்த்து மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்கவும், நிலை நாட்டவும் நேற்று (11.10.2022) மாலை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள்,  அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது.

சென்னையில் அண்ணா சாலையில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலை அருகே நேற்று மாலை 4 மணியளவில் இம்மாபெரும் மனித  சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது. பெரியார் சிலையிலிருந்து அண்ணா மேம்பாலம்வரை மிக நீண்ட தூரம் வரிசையாக மதச்சார்பற்ற கட்சிகளின் மாநிலத் தலைவர்கள், இதர ஜனநாயக அமைப்புகளின் மாநிலத் தலை வர்களும் பங்கேற்ற இந்த மனித சங்கிலி அறப்போராட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சார்பு அமைப்புகள் மதவெறி பரப்புரை செய்து, சமூக அமைதியை சீர்குலைக்கும் நடவடிக் கைகளைக் கண்டித்தும், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளைப் பலவீனப்படுத்த, மாநில உரிமைகள் தொடர்ந்து பறிக்கப் படுவதைக் கண்டித்தும் ஒலிமுழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இப்போராட்டத்தில், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்றனர்.

தமிழர் தலைவர் பங்கேற்பு

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் தலைமையில் கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங் கேற்றனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமை யிலும், காங்கிரஸ் கட்சியின் மேனாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு அவர்கள் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ் ணன் அவர்கள் தலைமையிலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் தலைமையிலும், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையிலும், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன் அவர்கள் தலைமையிலும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அவர்கள் தலைமையிலும் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் பல்லாயிரக் கணக்கானோர் இம்மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஒலிமுழக்கங்கள்

இப்போராட்டத்தில், சாலையோரத்தில் அனைவரும் வரிசையாக நின்று கைகோத்தபடி ‘வீர வணக்கம், வீர வணக்கம் புரட்சியாளர் அம்பேத்கருக்கு, தந்தை பெரியா ருக்கு, மாமனிதர் மார்க்சுக்கு, பெருந்தலைவர் காமராசருக்கு, பேரறிஞர் அண்ணாவுக்கு வீர வணக்கம், வீர வணக்கம்' என்று தொடங்கி, ‘சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தை வென்றெடுப்போம், தமிழ் மண்ணின் மணம் காப்போம், வெறுப்பு அரசியலை விரட்டியடிப்போம்' போன்ற ஒலி முழக்கங்களை சுமார் ஒரு மணிநேரம் எழுப்பினர்.

பின்னர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தை கள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் திறந்த ஜீப்பில் நின்றபடி, அண்ணா சாலையில் மனித சங்கிலியில் பங்கேற்றவர்களைப் பார்த்து ஒலி முழக்கமிட்டவாறு சென்றனர்.

நிறைவாக அண்ணா மேம்பாலம் அருகே மனித சங்கிலி அறப்போராட்டம் முடிவடைந்தது.

திராவிடர் கழகத்தினர் பங்கேற்பு

இம்மனித சங்கிலிப் போராட்டத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, மாநில ப.க. தலைவர் தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர், பசும்பொன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர், சோ.சுரேசு, சென்னை மண்டல செய லாளர் தே.செ.கோபால்.

தென்சென்னை சார்பாக மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, டி.ஆர்.சேது ராமன், கோவி.இராகவன், அரும்பாக்கம் சா.தாமோதரன், மு.ந.மதியழகன், ச.மகேந்திரன், சண்முகப்பிரியன், பி.டி.சி. இராசேந்திரன், யுவராஜ், அப்துல்லா, செல்வராசு, அரிதாஸ், பெரியார் பிஞ்சுகள் பெரியார் ஆதவன், பெரியார் இனியன் மற்றும் பூ.இராமலிங்கம், பெரியார் நூலக வாசகர் வட்டப் பொருளாளர் ஜெனார்த்தனம்.

வடசென்னை சார்பாக மாவட்டத் தலைவர் வெ.மு. மோகன், செயலாளர் தி.செ.கணேசன், கி.இராமலிங்கம், வழக்குரைஞர் தளபதி பாண்டியன், புரசை சு.அன்புச்செல்வன், ந.இராசேந்திரன், துரை.ராவணன், கு.ஜீவா, க.கலைமணி, சி.பாசுகர், பா.கோபாலகிருட்டிணன், கண்மணி துரை, க.செல் லப்பன், மனோகரன், திராவிடச்செல்வன் மற்றும் ஆலங்குடி குமார்.

மகளிரணி சார்பாக சி.வெற்றிச்செல்வி, க.சுமதி, க.வெண்ணிலா, சாந்தகுமாரி, தொண்டறம், முத்துலட்சுமி, அன்புமணி, த.மரகதமணி, இரா.தமிழரசி, ஜெயலட்சுமி, மணிமேகலை, க.கோட்டீசுவரி, பெரியார் பிஞ்சுகள் திலீபன், அதிரா மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில்...

இம்மனித சங்கிலிப் போராட்டத்தில் அண்ணா சாலை எல்.அய்.சி. கட்டடம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, மாநில பொதுச்செயலாளர் காண்டீபன், மாநில செயலாளர் அகரம் கோபி, இலக்கிய பிரிவு தலைவர் பி.எஸ்.புத்தன் மற்றும் எம்.எஸ்.திரவியம், நாஞ்சில் பிரசாத் உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இம்மனித சங்கிலி அறப்போராட்டத்தில் பேராயர் எஸ்றா.சற்குணம் உள்ளிட்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் பலரும் பங்கேற்றனர்.

மாற்றுத் திறனாளிகள் ஏராளமானோர் சக்கர நாற்காலி, 3 சக்கர மோட்டார் சைக்கிளுடன் ஒரே இடத்தில் திரண்டு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஒலி முழக்கமிட்டனர்.

செய்தியாளர்களிடம் தலைவர்கள் கருத்து

தலைவர்கள், மனித சங்கிலி அணிவகுப்பை பார்வை யிட்டபடி ஆயிரம் விளக்கு மசூதி பகுதிக்கு ஜீப்பில் சென்றனர். பின்னர் மனித சங்கிலி குறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஜாதி, மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி நாசகார வேலைகளைச் செய்யும் சக்திகளுக்கு இங்கு இடமில்லை என்பதை மனித சங்கிலி நிரூபித்துக் காட்டியுள்ளது. 

விசிக தலைவர் தொல்.திருமாவளவன்: தமிழ்நாட்டில் ஜாதியவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கக் கூடாது. அவர் களது பேரணிக்கு வழங்கப்பட்ட அனுமதியை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹி ருல்லா: மதச்சார்பின்மையை தமிழ்நாட்டில் மேலும் வலுப்படுத்துவோம். மக்களை பிளவுபடுத்தும் சக்திகளை முறியடிக்கும் வல்லமை மதச்சார்பற்ற கட்சிகளுக்கு உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: வேண்டுகோள் விடுத்தவுடன் தன்னெ ழுச்சியாக கலந்து கொண்டவர்கள் மூலம் பாஜகவுக்கு எதி ரான வெறுப்பு இங்கு வேரூன்றியிருப்பது தெரிகிறது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியை மண் மூடச் செய்வதற்கான எச்சரிக்கைதான் இந்த மனித சங்கிலி.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: தமிழ்நாட்டில் நவ.6 ஆம் தேதி ஆர்எஸ்எஸ்அணிவகுப்பு நடத்த அரசு அனுமதிக்கக் கூடாது. பள்ளிகளிலும் ஆர்எஸ்எஸ் பயிற்சி அளிக்க அனுமதிக்கக் கூடாது. அனுமதித்தால் எதிர் நடவடிக்கைகளை நாங்கள் மேற் கொள்ளும் நிலை ஏற்படும்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: தமிழ்நாட்டில் மதவாத இயக்கங்களுக்கு அனுமதியில்லை என்பதை தெளிவுபடுத்தும் விதமாக மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

வியாழன், 14 மார்ச், 2019

7 தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் மனித சங்கிலி போராட்டம்

தமிழர் தலைவர் உள்பட பல்வேறு கட்சியினர் பங்கேற்பு




சென்னை, மார்ச் 10- பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள சென்னை, சேலம், திருச்சி, நெல்லை, மதுரை, கோவை, புதுச்சேரி உள்ளிட்ட 7 பெருநகரங்களில் நேற்று (9.3.2019) மாலை  மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சென்னை வாலாஜா சாலையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பெருந்திரளான கழகத் தோழர் களுடன் தமிழர் தலைவர் பங்கேற்றார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் மனித சங்கிலிப் போராட்டம் நேற்று மாலை நடந்தது.



சென்னை அண்ணா சாலை அருகே உள்ள அண்ணா சிலையிலிருந்து வாலாஜா சாலை தொடக்கம் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை நடைபெற்ற இம்மனித சங்கிலி போராட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்னை மண்டல கழகத் தோழர் - தோழியர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.


இப்போராட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக் கனி, திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், திராவிட மாணவர்கள் கழக மாநில செயலாளர் ச.பிரின்சுஎன்னாரெசு பெரியார் மற்றும் மண்டல கழக, வடசென்னை, தென்சென்னை, தாம்பரம் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் திராளான கழகத் தோழியர்கள் பங்கேற்றனர்.



இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு, பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, எஸ்.டி.பி.அய். கட்சி தலைவர் நெல்லை முபாரக், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், தமிழ் பேரரசு கட்சி தலைவர் கவுதமன், தோழர் தியாகு, திரைக்கலைஞர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், மனோபாலா, இயக்குனர்கள், அமீர், வெற்றிமாறன், ராம், களஞ்சியம் உள்பட ஏராளமானோர் பங்கேற்று தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இப்போராட்ட முடிவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து போராட் டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

- விடுதலை நாளேடு, 10.3.19

வியாழன், 26 ஏப்ரல், 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுக!


தமிழ்நாடே மனித சங்கிலியால் இணைந்தது!!

மத்திய அரசு செயல்படுமா? மாநில அரசு விழிக்குமா?

சென்னை, ஏப்.24 தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சென்னையில் பல்வேறு இடங்களிலும் மனித சங்கிலிப் போராட் டம் பொதுமக்களின் பங்களிப்புடன் காவிரி நீர் உரிமைமீட்புப் போராட்டமாக மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

தலைவர்கள்

புதுக்கோட்டையில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், தஞ்சையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, டி.ஆர்.பாலு, எல்.கணேசன், சென் னையில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், சிவகங்கையில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.இராமசாமி, திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், பெரம்பலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  ஆகி யோர் தலைமையில்  மனித சங்கிலிப்போராட்டத்தில் ஏராள மானவர்கள் கலந்துகொண்டார்கள். அண்ணா அறிவாலயம்

அண்ணாஅறிவாலயம் அருகில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் குழு தலைவர் கவிஞர் கனிமொழி, சென்னை சைதாப்பேட்டையில் மேனாள் மேயர் மா.சுப்பிரமணியம், மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரசு கட்சி பீட்டர் அல்போன்ஸ், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன், மதிமுக மல்லை சத்யா,  பொன்.குமார், சென்னை வடக்கு மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன், மாதவரம் எஸ்.சுதர்சனம், எர்ணாவூர் நாராயணன், ஆகியோரும், சென்னை கிழக்கு மாவட்டத்தில் பி.கே.சேகர்பாபு, மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துக்கட்சியினரும் கலந்துகொண்டனர்.

தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், பிற இடங்களிலும் காவிரிநீர் உரிமைக்கான மனித சங்கிலிப் போராட்டத்தில் பெருந்திரளானவர்கள் பங்கேற்றனர்.

சென்னையில் கழகம்...

சென்னை எழும்பூரில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் வீஅன்புராஜ், எழும்பூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன்,   கழக வெளியுறவு செயலாளர் வீ.கும ரேசன், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணை செயலாளர் நா.பார்த்திபன்,  சென்னை மண்டல கழக செயலாளர் வி.பன்னீர்செல்வம், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், செய லாளர் தே.ஒளிவண்ணன் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, செ.தமிழ்சாக்ரட்டிஸ், தலைமைசெயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, சி.வெற்றிசெல்வி, சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் பா.மணியம்மை, எண்ணூர் வெ.மு.மோகன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், ந.கதிரவன் கு.செல்வேந்திரன், சண்முகப்ரியன், சேகர், வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ், மங்களபுரம் பாஸ்கர், செம்பியம் கி.இராமலிங்கம், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், தமிழ்மணி, இளைஞரணி கலைமணி, வை.கலையரசன், பெரியார் மாணாக்கன், பூவை செல்வி, தொண்டறம், சைதை இரவி, இரா.பிரபாகரன், சாந்தகுமாரி, கிஷோர், ஆனந்தி, ஜனனி, வி.வளர்மதி, பி.அஜந்தா, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, கவிமலர், அரும்பாக்கம் சா.தாமோதரன், பிரபு, அமுது, சரவணகுமாரி, அறிவன், இன்பன், கண்மணி, மலரணி, செவ்வியன், இன்சொல், செம்மொழி, சித்தார்த், மோகன்ராஜ், குடந்தை சங்கர் மற்றும் ஆதித்தமிழர் பேரவை கோவை வழக்குரைஞர் பன்னீர்செல்வம் தலைமையில் 20 பேர், திமுக பொறுப்பாளர்கள் தேவநிதி, ஜெ.விஜயக்குமார், து.களரிமுத்து, டி.வி.வேலு, வி.சுதாகர், கே.அன்னபூரணி, ந.கலையரசன், இ.மொய்தீன், எல்.சுந்தர்ராஜன், எம்.துலுக்கானம், வெ.மருதன், ஜெ.கிருஷ்ணமூர்த்தி, பா.கவுதம், அ.நிர்மலாதேவி, சே.பாலாஜி மற்றும் மதிமுக, விடுதலைசிறுத்தைகள்கட்சி, மனிதநேயமக்கள் கட்சி, எஸ்டிபிஅய், சிபிஅய்,சிபிஎம், காங்கிரசு உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கழகத் தோழர்கள் இணைந்து கொண்டனர்

தமிழகத்தின் உரிமைக்கான போராட்டங்கள்

காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பையொட்டி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கில், நடுவர் மன்றத்தில் கூறப்பட்ட வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வார காலத்துக்குள்ளாக மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று 16.2.2018 அன்று தீர்ப்பை அளித்தது.

ஆனால், மத்திய அரசோ காலங்கடத்திவிட்டு, ஆறு வார கால அவகாசத்தின் கடைசி நாளில் ஸ்கீம் என்ற சொல்லுக்கு பொருள்விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டு மேலும் மூன்று மாத கால அவகாசம் கோரியது. திமுக, திராவிடர் கழகம், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முசுலீம் லீக், மனிதநேயமக்கள் கட்சி, எஸ்.டி.பி.அய் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது என்று முடிவெடுத்து, அதற்கான தொடர் போராட்டத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, 1.4.2018 முதல் அனைத்துக் கட்சிகளின் சார்பில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. முதல் கட்டமாக 4 நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து 5.4.2018 அன்று அனைத்துக் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் அண்ணா சாலை மற்றும் கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர். சென்னை எழும்பூரில் திராவிடர் கழகத் தோழர்கள் மாபெரும் எழுச்சியுடன் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள்.

இதை தொடர்ந்து, 5.4.2018 அன்று மாலை அனைத்துக்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக்கூட்டம் சென்னை அண்ணாஅறிவாலயத்தில் நடைபெற்றது.

தமிழர் தலைவர்  தொடங்கி வைத்த பயணங்கள்

காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. திருச்சி முக்கொம்பிலிருந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 7.4.2018 அன்று பயணத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடங்கி வைத்தார். திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்பு பயணத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். 9.4.2018 அன்று இரண்டாவது பயணக்குழுவை அரியலூரில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடங்கிவைத்தார். இரண்டு குழுக்களும் கடலூரில் பயணத்தை நிறைவு செய்தன. 12.4.2018 நிறைவு நாளன்று மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு உரிமை முழக்கமிட்டனர்.  12.4.2018 அன்று சென்னை வந்த பிரதமருக்கு 9 கட்சிகள் சார்பில் கருப்பு கொடி காட்டப்பட்டது.  மோடி கோ பேக் என்று குறிப்பிடப்பட்ட ராட்சத கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. புறாக்களின் கழுத்தில் மோடி கோ பேக் கட்டி பறக்கவிடப்பட்டது.  இதில், திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நடைப்பயணத்தின் நிறைவாக 13.4.2018 அன்று ஒன்பது கட்சித் தலைவர்கள் நேரில் ஆளுநரிடம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வலியுறுத்தும் மனு அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் 16.4.2018 அன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமரை நேரில் சந்திக்க நேரம் கேட்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைத்தே தீர வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் நோக்கிலும், அடுத்த கட்டப் போராட்டத்தைத் துவங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, அனைத்துக் கட்சிகளின் சார்பில் 23.4.2018 மாலை 4 மணி முதல் 5 மணி வரை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்துக்கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்ட மாபெரும் மனித சங்கிலிப்போராட்டம் நேற்று (23.4.2018) மாலை நடைபெற்றது. அனைத்துக்கட்சிக்கூட்டத்தின் தீர்மானத்தின்படி நடைபெற்ற மனித சங்கிலிப்போராட்டத்தில் பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்றனர். காவிரி நதிநீர் மேலாண்மைவாரியம் அமைக்கப்படும்வரை தமிழகம் ஓயாது என்பதை உணர்த்தும்வகையிலும், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கின்ற  போராட்டமாகவும் மனித சங்கிலிப்போராட்டம் அமைந்தது.

கழகத் துணைத் தலைவர்

தமிழ்நாட்டுக்குரிய சட்டப்படி உரிய, நியாயப்படி உரிய, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய காவிரி நீர், இன்றைக்கு அரசியல் காரணங்களாலே முடக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக மத்தியில் இருக்கக்கூடிய மோடி தலைமையில் இருக்கக்கூடிய பாஜக ஆட்சி கருநாடகத்தில் நடைபெறக்கூடிய தேர்தல் அரசியல் ஆதாயத்தை உள்நோக்கமாகக் கொண்டு, சட்டப்படி தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய காவிரி நீரைத் தடை செய்கிறது. இது நீதிமன்ற அவமதிப்பு, மக்கள் மன்ற அவமதிப்பு என்பதை இந்த நேரத்திலே எடுத்துச் சொல்லி, காவிரி நீர் உரிமையில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கைப் பெறுகின்ற வரை இந்தப் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும். அறப்போராட்டம் நடந்துகொண்டிருக்கும். இந்த உரிமையைப் பெறுவதற்காக எவ்வளவு விலை கொடுக்க வேண்டுமோ அவ்வளவு விலையைக் கொடுக்க தமிழ்நாட்டு மக்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள் என்பதுதான் இந்த மனித சங்கிலிப் போராட்டத்தினுடைய நோக்கம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.

- இவ்வாறு செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் கூறினார்.

- விடுதலை நாளேடு, 24.4.18