திங்கள், 31 ஜனவரி, 2022

தி.மு.க. மேனாள் அமைச்சர், கவிவேந்தர் கா.வேழவேந்தன் மறைவுக்கு கழகம் சார்பில் மரியாதை


தி.மு.க. மேனாள் அமைச்சர், கவிவேந்தர் கா.வேழவேந்தன் அவர்கள் மறைவுக்கு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. கழகப் பொருளாளர் வீ.குமரேசன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி மற்றும் தோழர்கள் உள்ளனர். (27-1-2022 சென்னை)

வியாழன், 27 ஜனவரி, 2022

பெரியார் படிப்பக நன்கொடை


பட்டுக்கோட்டை பெரியார் படிப்பக கட்டட நன் கொடையாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தின் நிர்வாகக் குழு உறுப்பினர் டி.கே.நடராஜன்-குஞ்சிதம் குடும்பத்தினர் சார்பில் ரூ.1,10,000 (காசோலை) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது. (சென்னை பெரியார் திடல், 26.1.2022).

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

கண்மதியன் தாயார் பாக்கியம் 101 ஆவது பிறந்த நாள் விழா


 சென்னை,ஜன.3- கவிஞர் கண்மதியனின் தாயார் பாக்கியம் 101-ஆம் ஆண்டு பிறந்த நாள், கண்மதியன் கவிதைகள் 4 நூல் வெளி யீட்டு விழா 02-1-2022 அன்று காலை 11.30 மணியளவில் கோடம்பாக்கம் நயாகரா ஓட்டலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனை வரையும் கவிஞர் கண்மதியன் வரவேற்று உரையாற்றினார்.

மேனாள் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சு.இராசேசுவரன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கண்மதியன் கவி தைகள் நூலினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்  பெற்றுக் கொண்டார்.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ஆகியோர் அன்னையாரின் சிறப்புகளை எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அன்னை யாருக்கு சிறப்பு செய்து, தனது உரையில் தம்மம்பட்டியில் பிறந்த சாதாரண குடும்பத்தி லிருந்து வந்தவர் என்றாலும் 101-ஆம் ஆண்டு பிறந்தநாளில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். தம்மம்பட்டி என்று சொல்லும் போது அந்த ஊர்  தாக்குதலுக்கு உள்ளான ஊராகும். பகுத்தறிவு கவிஞர் கண்மதியன் தனது அன்னையாரை சிறு குழந்தை போல பாதுகாத்து பேணி வந்து - அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். வேரும் சரியான முறையில் உள்ளது விழுதுகளும் சரியாகவே உள்ளது என்று நெகிழ்ந்து வாழ்த்துரை ஆற்றினார்.

திருச்சியில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு தன்னுடைய குடும்பத்தின் சார்பாக கவிஞர் கண்மதியன்  கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ.25,000/- நன்கொடையாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் ராஜாராம் அய்.ஏ.எஸ். செல்வராசு அய்.ஏ.எஸ். பேராசிரியர் அரங்க சாமி, புலவர் பா. வீரமணி, வழக்குரைஞர் ரவிச்சந்திரன், சென்னை மண்டல செயலாளர் தே.செ. கோபால், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ், வடசென்னை மாவட்ட இளை ஞரணி தலைவர் தளபதி பாண்டியன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், அரும்பாக்கம் தாமோதரன், க.தமிழ்ச் செல் வன், இளைஞரணித் தோழர்கள் கோபால கிருஷ்ணன், பாலசந்தர், வெற்றிச்செல்வன், க.கலைமணி, சுரேஷ், அன்பரசு மற்றும் முக்கிய பிரமுகர்கள், குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர்.    இறுதியாக முனைவர் த.கு.திவாகரன் நன்றி கூறினார்.


புதன், 19 ஜனவரி, 2022

மயிலை திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு


திருவள்ளுவரின் 2053ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தென்சென்னை மாவட்ட கழகம் சார்பில் சுறவம்- 2 (15.1.2022 ) முற்பகல் 10.30 மணி அளவில் மாலை அணிவிக்கப்பட்டது.

தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் திருவள்ளுவர் சிலைக்கு   மாலை அணிவித்தார். செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைச்செயலாளர் கோ.வீ. ராகவன், இளைஞரணி மாவட்டத் தலைவர் ச.மகேந்திரன், செயலாளர் ந.மணிதுரை, மு.சண்முகப்பிரியன், ஈ.குமார், அப்துல்லா, பி.டி.சி. இராசேந்திரன், சக்திவேல் மற்றும் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

சனி, 1 ஜனவரி, 2022

2021ஆம் ஆண்டில் கழக முக்கிய நிகழ்வுகள்

 

 02.01.2021 தமிழ்நாடும் - தேர்தல்  nஅரசியலும் சிறப்புக் கூட்டம்

திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடும் தேர்தல் அரசியலும் எனும் தலைப்பில்  சிறப்புக் கூட்டம் காணொலி வழியாக நடைபெற்றது. கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

10.01.2021 சென்னை மண்டலத்தின்  பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

சென்னை மண்டலத்தின் சார்பில்  பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. ‘இந்துத்துவாவும் மதவெறி அபாயமும்‘ என்னும் தலைப்பில் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (காணொலி வழியாக) மாணவர்களுக்கு வகுப்பு நடத்தினார்.

16.01.2021 திராவிடப் பொழில் வெளியீட்டு விழா

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) பதிப்பித்துள்ள திராவிடப் பொழில் ஆய்விதழின் அச்சுப் பிரதி மற்றும் இணைய இதழின் (பீக்ஷீணீஸ்வீபீணீஜீஷீக்ஷ்லீவீறீ.ஜீனீu.மீபீu) வெளியீட்டு விழா இணைய வழியில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

16.01.2021 திராவிடர் திருநாள்  பொங்கல் விழா

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் திருநாள், பொங்கல் விழா தை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு விழா, பெரியார் விருது வழங்கும் விழா சிறப்புடன் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெரியார் விருது வழங்கி பாராட்டுரையும், சிறப்புரையும் ஆற்றினார். 

13.02.2021

சமூகநீதி பறிப்பு  சிறப்புக் கூட்டம்

ஒன்றிய பா.ஜ.க அரசின் சமூகநீதி பறிப்பும், தமிழ்நாடு அரசின் மவுனமும் எனும் தலைப்பில் காணொலி வழியாக சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

 27.02.2021

தோழர் தா.பாண்டியன் உடலுக்கு தமிழர் தலைவர்  மரியாதை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்களின் மறைவையொட்டி அவரது உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

28.02.2021 ‘‘Periyar E.V.Ramasamy A MAN AHEAD OF  HIS TIME’ நூல் வெளியீட்டு விழா

‘Periyar E.V.Ramasamy A MAN AHEAD OF HIS TIME’  எனும் ஆங்கில நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் புத்தகக்காட்சியின் வெளி அரங்கில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 06.03.2021 தமிழர் தலைவருக்கு டாக்டர் நரேந்திர 
தபோல்கர் நினைவு விருது

மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவாக அமெரிக்கவாழ் மராட்டியர்களால் உருவாக்கப்பட்ட மராட்டிய அறக்கட்டளை (Maharashtra Foundation) ஆண்டுதோறும் பல துறைகளில் சமூகப் பங்களிப்பு ஆற்றிவரும் சிறப்பாளர்களுக்கு டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு (Dr.Narendra Dabolkar Memorial Award) விருதுவழங்கி வருகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான விருது திராவிடர் கழகத்தின் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப்பட்டது

10.03.2021 அன்னை மணியம்மையார்  102 ஆம் ஆண்டு  பிறந்த நாள் விழா

அன்னை மணியம்மையார் 102 ஆம் பிறந்த நாள் விழா  தமிழ்நாடெங்கும் நடைபெற்றது. கழகக் குடும்பத்தினர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும் ஒலி  முழக்கங்கள் எழுப்பியும் சிறப்பாகக் கொண்டாடினர். அமெரிக்காவிலும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

16.03.2021 அன்னை மணியம்மையார்  43 ஆம் ஆண்டு நினைவு நாள்

அன்னை மணியம்மையார் நினைவு நாளில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு கழகத் தோழர்கள், மகளிர் தோழர்கள் மாலை அணிவித்தனர். பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.  


07.04.2021 முதுபெரும் பெரியார் தொண்டர்  bவே.ஆனைமுத்து அவர்களுக்கு  திராவிடர் கழகத் தலைவர் இறுதி மரியாதை

06.04.2021 அன்று உடல்நலக் குறைவினால் மறைவுற்ற முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வே.ஆனைமுத்து அவர்களின் உடலுக்கு  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தாம்பரம் இரும்புலியூரில் உள்ள அவரது இல்லத்தில் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

04.05.2021 தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு  தமிழர் தலைவர் நேரில் வாழ்த்து

07.05.2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்கும்  தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை அவரது இல்லத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

 13.05.2021 இடஒதுக்கீடுக்கு ஆபத்து - சிறப்புக் கருத்தரங்கம் 

திராவிடர் கழகத்தின் சார்பில் இடஒதுக்கீடுக்கு ஆபத்து - சிறப்புக் கருத்தரங்கம் காணொலி மூலம் நடைபெற்றது. கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரை ஆற்றினார்.

14.05.2021 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு  பெரியார் அறக்கட்டளை நன்கொடை

பெரியார் அறக்கட்டளைகள் சார்பில் முதலமைச்சர் கரோனா பொது நிவாரண நிதிக்கு தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ரூபாய் 10 லட்சம் வழங்கினார்.

22.05.2021 கழகத் தலைவருடன் அயலகத் திராவிடக் கல்வியாளர்கள் கலந்துரையாடல்

காணொலி மூலம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் தந்தை பெரியார் -  திராவிட இயக்கக் கொள்கைகளை தரணியெங்கும் கொண்டு செல்லும் வழிகள் குறித்து அயல் நாடுகளில் வாழும் திராவிடச் சிந்தனைச்  செல்வர்கள் கலந்துறவாடினர். 

29.05.2021 பெரியார் மணியம்மை மருத்துவ மனையில்  சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மய்யம்

பெரியார் திடலில் இயங்கி வரும் பெரியார் மணியம்மை மருத்துவமனையில்  தமிழ்நாடு மருத்துவம்  மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்  கரோனா சிகிச்சைப் பயன்பாட்டிற்கான சித்த மருத்துவ சிகிச்சை மய்யத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் திறந்து வைத்தார். 

26.06.2021 கன்னட திரைக்கலைஞர் சேத்தன் சிறப்புரை

பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில் காணொலி வழியாக கன்னட திரைக்கலைஞர் சமூக நீதி குறித்து சிறப்புரை ஆற்றினார். பன்னாட்டு மய்ய இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் அறிமுக மற்றும் முடிவுரை நிகழ்த்தினார்.

01.07.2021 நீட் தொடர்பான வழக்கு குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிகள் கூட்டம்

நீட்டை ஆதரித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. வழக்கு தொடுத்துள்ள நிலையில் அதனை எதிர்கொள்ளும் வகையில் திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிகள், அமைப்புகள் கூட்டம் சென்னை பெரியார் திடலில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  


15.07.2021 நூற்றாண்டு நாயகர் தோழர் சங்கரய்யாவிற்கு தமிழர் தலைவர் நேரில் வாழ்த்து

நூறாவது (100) அகவை காணும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களை அவரது இல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சந்தித்து  பொன்னாடை அணிவித்து, இயக்க நூல்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்வித்தார்.

 17.07.2021 பெரியார் பண்ணையின் திராவிட நாற்றுகள்  கலந்துரையாடல் தமிழர் தலைவர் வாழ்த்துரை

அமெரிக்க பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கழக மண்டலங்கள் வழியாக நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி வகுப்பில் பங்கு பெற்று முதல் பரிசு பெற்ற பெரியார் பண்ணையின் திராவிட நாற்றுகளான இளந்திராவிட சிங்கங்களை ஒருங்கிணைத்து காணொலி வழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தலைவர் ஆசிரியர்கி வீரமணி  திராவிட நாற்றுகளுக்கு, வாழ்த்துரை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

19.07.2021 தொலைப்பேசிகள் உளவு  -  கண்டன ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் நாட்டு நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ்  உளவுச் செயலியின் மூலம் நம் நாட்டு அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரின் தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்படுவதைக் கண்டித்து மே  17  இயக்கத்தின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் பங்கேற்றன. திராவிடர் கழகத்தின் சார்பில் தோழர்கள் பங்கேற்க கழகப் பொருளாளர் வீ.குமரேசன் கண்டன உரையாற்றினார்.

07.08.2021 முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நாள் கருத்தரங்கம்

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர்  3 ஆம் ஆண்டு நினைவு கருத்தரங்கம் காணொலி வழியாக திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அனைத்து கட்சித் தலைவர்கள் உரையாற்றினர்.  

14.08.2021 அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக  அரசாணை:  முதலமைச்சர் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை

தந்தை பெரியாரின் கொள்கையைச் சட்டமாக்கியவர் கலைஞர்; அவர் தனயன் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்து ஜாதியினரையும் உள்ளடக்கிய 58 பேருக்கு அர்ச்சகர் பணி ஆணை வழங்கி, அதனைச் செயல்படுத்தி  தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி சரித்திரம் படைத்து  தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில்  வெற்றி மலர்கள் தூவி மலர்வளையம் வைத்துமரியாதை செலுத்தினார். கழகத் தலைவர் ஆசிரியர் முதலமைச்சர் அவர்களை வரவேற்று இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பெரியார் அருங்காட்சியகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, புத்தகங்களை வழங்கி வரவேற்றார்.

19.08.2021 ஜாதி ஒழிப்பு திசையில் சாதனை படைத்த சரித்திரத்திற்கு பாராட்டு- சிறப்புக் கூட்டம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் படைத்த சட்டத்தை அமலாக்கி தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளினை அகற்றி ஜாதி ஒழிப்புத் திசையில் சாதனை படைத்த சரித்திரத்திற்குப் பாராட்டு  எனும் தலைப்பில் திராவிடர் கழகத்தின் சார்பில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பு பாராட்டுக் கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

4.9.2021 தலைமைச் செயற்குழு

சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக செயற்குழு மற்றும் அனைத்து கழக அமைப்புகளின் பொறுப்பாளர்களின் மாநில அளவிலான கூட்டம் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

6.9.2021 சமூக நீதி நாள்

தந்தை பெரியார் பிறந்தநாள் சமூக நீதிநாள் என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பிற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சரை "சமூகநீதிக்கான சரித்திர நாயகர்"என்றே இனி அழைப்போம் என்றும் ஆசிரியர் அறிவித்தார்.


17.9.2021 தந்தை பெரியார் பிறந்தநாள்

உலகம் முழுவதும் தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் பலர் பங்கேற்றனர். "கற்போம் - பெரியாரியம்" மற்றும் பெரியார் பற்றிய ஜப்பானிய மொழிப் புத்தங்கள் வெளியிட்டப்பட்டன.

2.10.2021 கருத்தரங்கம் -  நூல்கள் அறிமுகம்

தஞ்சாவூரில் திராவிடர் கழக சார்பில், “நீட்” தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் - ஏன்? எதற்கு? - கருத்தரங்கம், "கற்போம் பெரியாரியம்", “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றினார்.

12.10.2021  ஆய்வுரை நூல் வெளியீடு

சென்னை, பெரியார்திடல், அன்னை மணியம்மையார் அரங்கில் க.தமிழ்மல்லன் அவர்களின் “இராவண காவிய ஆய்வுரை” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலினை வெளியிட்டு கழகத் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

யாற்றினார்.

 30.10.2021 பயிற்சிப் பட்டறை

சென்னை பெரியார் திடல், நடிகவேள் இராதா மன்றத்தில் ‘உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் பங்கு’ பயிற்சிப் பட்டறையைத் தொடங்கி வைத்து தமிழர் தலைவர் சிறப்புரையாற்றினார்.

1.11.2021 பட்டமளிப்பு விழா

மெக்கன்ஸ் ஊட்டி கட்டடக் கல்லூரி 8ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பட்டமளிப்பு விழா உரையாற்றி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.

3.11.2021 ரஷ்ய தூதர் வருகை

சென்னை பெரியார் திடலுக்கு ரஷ்ய தூதர் மேதகு அலெக் அவுதேவ் வருகை புரிந்தார். ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து  நினைவுப் பரிசு வழங்கினார். மேதகு தூதருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து இயக்கப் புத்தகங்களை வழங்கினார். 

9.11.2021

தமிழர் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள்படி சென்னையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கல் மற்றும் நிவாரணப் பணிகளில் கழக இளைஞரணி மாணவர் கழகத்தினர் ஈடுபட்டனர். வெள்ள இடர் தீரும் வரை இப்பணி தொடர்ந்தது.

25.11.2021

டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23 வரை ‘விடுதலை’ சந்தா சேர்ப்பு வாரம் என்று இயக்கமாக நடத்துமாறு கழகத்தின் அனைத்து அணியினரும் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.


2.12.2021 சுயமரியாதை நாள்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்தநாளை உலகம் முழுவதும் கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று "அயோத்தி தாசர் சிந்தனைகள்" புத்தகத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

13.12.2021 பெரியார் பன்னாட்டு அமைப்பு சார்பில் சுயமரியாதை நாள்

பெரியார் பன்னாட்டமைப்பு (அமெரிக்கா) சார்பில் கழகத் தலைவர் ஆசிரியர் 89ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா- உலக திராவிடர் மகளிர் மாநாடு காணொலி வாயிலாக சிறப்பாக நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு "பகுத்தறிவுப் போராளி" விருது வழங்கப்பட்டது.

20.12.2021 நூற்றாண்டு விழா

சென்னை பெரியார் திடலில் இனமானப் பேராசிரியரின் நூற்றாண்டு விழா திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் விழாவுக்கு தலைமை தாங்கினார். கருத்தரங்கில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

23.12.2021 பெரியார் நினைவுநாள் கருத்தரங்கம்

தந்தை பெரியார் 48ஆவது நினைவுநாளையொட்டி நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. "சுயமரியாதைச் சுடரொளிகள்" (3 தொகுதிகள்)  நூலினை  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் பெற்றுக் கொண்டார்.

24.12.2021 பெரியார் நினைவுநாள் 

தந்தை பெரியார் 48ஆவது நினைவுநாளை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அய்யா - அம்மா நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை.

26.12.2021 முதுபெரும் தோழருக்கு வாழ்த்து 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் 97 வயது பிறந்தநாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

27.12.2021 தா.பாண்டியன் படத்திறப்பு - நினைவேந்தல்

தமிழ்நாடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை பெரியார் திடலில் தா.பாண்டியன் படத்திறப்பு - நினைவேந்தல் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் தா.பாண்டியன்  உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை.

28.12.2021கருத்துக் கோவை

சென்னை மாநிலக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை சார்பில் தந்தை பெரியார் நினைவுநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர் மத்தியில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஒரு மணி நேரம் உரையாற்றினார்.


தந்தை பெரியார் நினைவு நாள் டிசம்பர் 24 (2021)

 


சென்னை,டிச.24 தந்தை பெரியாரின் 46 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2019) திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் கழகப்பொறுப்பாளர்கள் பங்கேற்ற அமைதி ஊர்வலம் எழுச்சியுடன் நடைபெற்றது.


தந்தை பெரியார் நினைவு நாளான இன்று (24.12.2019) காலை 9.45 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்) அமையப்பெற்றுள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தந்தை பெரியார் வாழ்க, அன்னை மணியம்மையார் வாழ்க, தமிழர் தலைவர் வாழ்க, தமிழர் தலைவர் தலைமையில் தந்தை பெரியார்  பணிமுடிப்போம் என கழகத் தோழர்களின் முழக்கங்கள் வானைப் பிளந்தன.


அண்ணாசாலை சிம்சன் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து அமைதி ஊர் வலம் தொடங்கியது. சிந்தாதிரிப்பேட்டை, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை  வழியே பெரியார் திடலை அமைதி ஊர்வலம் அடைந்தது.



வைகோ - திருமாவளவன் - ஜி.இராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் (சி.பி.எம்.) மரியாதை


பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலையில் அமைந் துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு கழக மகளிர் தோழர்கள் மாலை அணிவித்தனர்.


பெரியார் திடலில் அமைந்துள்ள 21 அடி உயர தந்தை பெரியார் முழு உருவ சிலைப்பீடத்தில் மலர் மாலை வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.


கழகத் துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி மகளிர் சார்பில் மலர் வளையம் வைத்தார்.


திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் பெரியார் நினை விடம், அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.


தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உறுதிமொழி கூற, அனைவரும் தொடர்ந்து கூறி உறுதி யேற்றனர்.



அன்னை மணியம்மையார்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, திருமதி மோகனா வீரமணி, சிங்கப் பூர் நா.மாறன், கவிதா, கழகத் துணைப்பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம்,  பெரியார் பன்னாட்டமைப்பு இயக்குநர் சிகாகோ மருத்துவர் சோம.இளங் கோவன், மயிலை நா.கிருட்டிணன், த.க.நடராசன், சென்னை மண்டலத் தலைவர்  தி.இரா.இரத்தினசாமி, மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலை வர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் நீலாங்கரை ஆர்.டி.வீர பத்திரன், திருவள்ளூர் ஜெய.தென்னரசு மற்றும் ஆவடி, கும் மிடிப்பூண்டி,தென்சென்னை, வடசென்னை, தாம் பரம் உள்ளிட்ட சென்னை மண்டல கழகப் பொறுப் பாளர்கள்,  தோழர்கள், மகளிர் தோழர்கள், பெரியார் பிஞ்சுகள் என அனைவரும் தந்தை பெரியார் நினைவு நாளில் அணிதிரண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் அமைதி ஊர்வலத்தில் பங்கேற்று, பெரியார் நினைவிடத்தில் உறுதியேற்றனர்.


மகளிரணி, மகளிர் பாசறை, திராவிட தொழிலாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம், பெரியார் மணியம்மை மருத்துவ மனை, திராவிடன் நிதி,  பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் தந்தை பெரியார் நினைவிடம், அன்னை மணியம்மை யார் நினை விடம், சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.


தி.மு.க. - மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட்


சென்னை அண்ணா சாலை சிம்மன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், இந்திய மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலங்களவை உறுப்பினர்  டி.கே.ரங்கராஜன், மேனாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.துணை செயலாளர் வீரபாண்டியன், செயற்குழு உறுப் பினர் பெரியசாமி, மாவட்ட செயலாளர்கள் ஏழுமலை, எம்.எஸ்.மூர்த்தி, ஏ.அய்.ஒய்எஃப் வெங்க டேசன், ஒடுக்கப்பட்டோர் அமைப்பு சிவா, தமிழ்நாடு பழங்குடி மக்கள் தேசிய நிர்வாகக்குழு அய்.உசேன் இருந்தனர்.


விடுதலை சிறுத்தைகள் கட்சி


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் செல்வம் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பொறுப் பாளர்கள் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.


மதிமுக


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மல்லை சத்யா, ஜீவன் உள்ளிட்ட மதிமுக பொறுப்பாளர்கள் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.


தமிழர் தலைவர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள்- 2020

 

*அமைதி ஊர்வலம்             * கருத்தரங்கம்          *விருது வழங்கும் விழா

சென்னைடிச. 24- தந்தை பெரியார் அவர்களின் 47ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள்  இன்று (24.12.2020) சென்னையில் எழுச்சியுடன் நடை பெற்றன.

இன்று காலை 8.45 மணிக்கு சென்னை அண்ணா சாலை பெரியார் பாலம் அருகில் தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்தார்.  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்பொருளாளர் வீ.குமரேசன்பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் .அருள்மொழிசட்டத்துறை தலைவர் வழக்குரைஞர் .வீரசேகரன்வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதிதுணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் .இன்பக்கனிஅமைப்புச்செயலாளர் வி.பன்னீர்செல்வம்மாணவர் கழக மாநில செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் மாநிலமண்டல பொறுப்பாளர்கள்,  தென்சென்னைவடசென்னைஆவடிதாம்பரம்கும்மிடிப்பூண்டிசோழிங்கநல்லூர்திருவொற்றியூர் கழக மாவட்டப் பொறுப்பாளர்கள்மகளிரணி,  மகளிர் பாசறைஇளைஞரணிமாணவர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் அண்ணாசாலை பெரியார் சிலை அருகிலிருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டுசிந்தாதரிப்பேட்டைபெரியார் .வெ.ராநெடுஞ்சாலை வழியே பெரியார் திடலை அடைந்தது. 

பெரியார் .வெ.ராநெடுஞ்சாலையில் அமைந் துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு கழக மகளிரணிமகளிர் பாசறை பொறுப்பாளர்கள் மாலை அணிவித்தனர்பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் 21 அடி முழு உருவச்சிலைக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் தலைமையில் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப் பட்டதுதமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறஅவரைத் தொடர்ந்து கழகப்பொறுப்பாளர்கள் சூளுரை ஏற்றனர்.

அன்னை மணியம்மையார் நினைவிடம்சுயமரி யாதை சுட ரொளிகள் நினைவிடங்களில்  மலர் வளை யம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில்  தனி மனித இடைவெளிமுகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்புக்கான கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சிகள் நடை பெற்றன.  கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளின் காரணமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஊர்வலத் தில் பங்கேற்காமல் அரங்க நிகழ்வில் பங்கேற்றார்கள்.

Ôசமூக நீதிக்கான கி.வீரமணி விருதுÕ

வழங்கும் விழா

காலை 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரை பெரியார் பன்னாட்டமைப்பு (அமெரிக்காசார்பில்  Ôசமூக நீதிக்கான கி.வீரமணி விருதுÕ வழங்கும் விழா காணொலியிலும்நேரிலும் நடைபெற்றது.

காணொலிமூலம் பன்னாட்டளவில் பலரும் பங்கேற்றனர்விழாவில் பெரியார் பன்னாட்டமைப்பு (அமெ ரிக்காதலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் காணொலிமூலம் வரவேற்புரை ஆற்றினார்.

பெரியார் பன்னாட்டு அமைப்பு (அமெரிக்காசார்பில்  2020ஆம் ஆண்டுக்கான Ôசமூகநீதிக்கான கி.வீரமணி விருதுÕ விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் டாக்டர் தொல்.திருமாவள வன் அவர்களுக்கு  வழங்கப்பட்டதுடாக்டர் இலக்கு வன்தமிழ் காணொலிமூலம் விருதினை வழங்கினார்மருத்துவர் மீனாம்பாள் விருதினை நேரில் வழங்கினார்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர்திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சித்தமிழர் தொல்திருமா வளவன் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துரை ஆற்றினார்விருதினைப் பெற்றுக் கொண்டு எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமா வளவன் ஏற்புரை ஆற்றினார்.

 பேராசிரியர் டாக்டர் ரவிசங்கர் கண்ணபிரான் காணொலிமூலம் நன்றி கூறினார்.

விருது வழங்கும் விழாவில் விடுதலை சிறுத்தை கள் கட்சி செய்திதொடர்பாளர்வன்னியரசுதுணைப் பொதுச்செயலாளர் பாலாஜிமந்தைவெளி அசோக்சி.ராஜ்குமார் உள்பட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநிலமாவட்ட பொறுப்பாளர்கள்மகளிர் அணி பொறுப்பாளர்கள் பெருந்திரளானவர்கள் பங் கேற்றனர்.

தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்

முற்பகல் 11.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை  தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணி வித்து இயக்க வெளியீடுகளை வழங்கி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்பு செய்தார்.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் .இன்பக்கனி வரவேற்றார்.  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார்.

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி து.அரிபரந்தாமன் கருத்தரங்க சிறப்புரையாற்றினார்.

நூல் வெளியீடுபெரியார் விருது

‘’தந்தை பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள்’’ நூலை வெளியிட்டும்பெரியார் விருதினைப் பெற்றுக் கொண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன் ஏற்புரையாற்றினார்.

திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக் குரைஞர் பா.மணியம்மை இணைப்புரை வழங்கினார்.

தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகளில் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்பொருளா ளர் வீ.குமரேசன்அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம்சென்னை மண்டல செயலாளர் தே.செகோபால்வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன்தென்சென்னை  மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,  ஆவடி பா.தென்னரசுதிருவொற்றியூர் மாவட்டத் தலைவர்  வெ.மு.மோகன்பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன்பெரியார் புத்தக நிலைய மேலாளர் .நடராசன்,  கே.கே.சி.எழிலரசன்மோகனா வீரமணிசி.வெற்றிசெல்விஆம்பூர் வடசேரி மீரா ஜெகதீசன்அகிலா எழிலரசன்உமா செல்வராசுடெய்சி மணியம்மைபசும்பொன் செந்தில்குமாரி உள்ளிட்ட கழகப்பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

சி.பி.அய்., சி.பி.எம்கட்சிகளின் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள்திராவிடர் கழகத்தின் பல்வேறு அணிகளின் மாநிலமண்டல பொறுப்பாளர்கள்தென்சென்னைவடசென்னைதாம்பரம்ஆவடிகும்மிடிப்பூண்டிசோழிங்கநல்லூர்திருவொற்றியூர் கழக மாவட்டங்களின்  பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தந்தைபெரியார் நினைவு நாளில் சென்னையில் கொள்கை முரசம் கொட்டிய மாட்சி

சென்னைடிச. 27- தந்தைபெரியார் நினைவு நாளன்று 24.12.2020 அன்று காலை முதலே சென்னை அண்ணாசாலை பெரியார் பாலம் அருகில் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல்அமைதி ஊர்வலத்தில் பங்கேற்புக்காக கருப்பு மெழுகுவத்திகளாம் கருஞ்சட்டைப்பட்டாளம் திரளத் தொடங்கியது.  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தந்தைபெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டபோது உணர்ச்சிப்பெருக்குடன் Ôபெரியார் வாழ்கÕ முழக்கங்கள் வானதிர முழங்கப் பட்டன.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கான கட்டுப்பாடுகளுடன் முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளியுடன் கழகப்பொறுப்பாளர்கள்மகளிர்மாணவர்இளைஞர்கள் தந்தைபெரியார் படத்தை ஏந்தியபடி அமைதி ஊர்வலத்த¤ல் பங் கேற்றனர்சிந்தாதிரிப்பேட்டைபெரியார்

.வெ.ரா.நெடுஞ்சாலை வழியே சென்று பெரியார் திடலை அடைந்தது அமைதி ஊர்வலம்அன்னை மணியம்மையார் முழு உருவச்சிலைக்கு மகளிர் அணிமகளிர் பாசறை பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்பெரியார் திடலில் பெரியார்  21 அடி உயர முழு உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுபெரியார் நினைவி டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் மலர்வளையம் வைக்கப்பட்டுசூளுரை ஏற்றனர் கழகப் பொறுப் பாளர்கள்திமுக,  மதிமுகவிடுதலை சிறுத்தைகள் கட்சிகாங்கிரஸ்இந்திய கம்யூனிஸ்ட் கட்சிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என  பல்வேறு   கட்சிகளின்அமைப்புகளின் சார்பில் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதுபல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்கள் அணிஅணியாக திரண்ட வண்ணம் இருந்தனர்காலைமுதலே பெரியார் திடல் பெரும் பரபரப்பில் காணப்பட்டது.

நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தந்தை பெரியார் நினைவு  நாள் நிகழ்ச்சிகளின் அரங்க நிகழ்வில் முதல் நிகழ்வாக பெரியார் பன்னாட்ட மைப்பு அமெரிக்கா சார்பில் Ôசமூகநீதிக்கான கி.வீரமணி விருது-2020Õ விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு மருத்துவர் மீனாம் பாள் வழங்கினார்காணொலிமூலம் விழாவில் பெரியார் பன்னாட்டமைப்பு (அமெரிக்காதலை வர் சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன்டாக்டர் இலக்குவன்தமிழ்பேராசிரியர் ரவிசங்கர் கண்ணபிரான் ஆகியோர் பங்கேற்றனர்.

விருதுபெற்ற தொல்.திருமாவளவன் அவர்க ளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பய னாடை அணிவித்து வாழ்த்துரை ஆற்றினார்சமூக நீதிக்கான கி.வீரமணி விருது 2020 பெற்றுக்கொண்டு எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் ஏற்புரை ஆற்றினார்.

தந்தைபெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமை யில் நடைபெற்றதுதுணைப்பொதுச்செயலாளர் .இன்பக்கனி வரவேற்றார்கழகத்துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுக உரையாற் றினார்சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஜஸ்டிஸ் து.அரிபரந்தாமன் கருத்தரங்க உரையாற் றினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்களுக்கு Ôபெரியார் விருதுÕ வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. Ôதந்தைபெரியாரின் சமூகநீதி சிந்தனைகள்Õ புத்தகத்தை தோழர் தா.பாண்டியன் வெளியிடஜஸ்டிஸ் அரிபரந்தாமன் பெற்றுக் கொண்டார்விருதுபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் ஏற்புரை ஆற்றினார்.பா.மணியம்மை இணைப்புரை வழங்கி னார்விழா நிறைவில் அமைப்புச்செயலாளர் விபன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றோர்

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்பொருளாளர் வீ.குமரேசன்மோகனா வீரமணிபிரச்சாரசெயலாளர் .அருள்மொழிதிமுக வர்த் தகப்பிரிவு தலைவர் கவிஞர் காசி முத்துமாணிக்கம்புலவர் பா.வீரமணிகவிஞர் கண்மதியன்,  பேராசிரி யர் ..மங்களமுருகேசன்மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்விசென்னை மண் டல செயலாளர் தே.செ.கோபால்பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா.கிருஷ்ணன்செயலாளர் கி.சத்தியநாராயணன்துணை செயலாளர் தென்.மாறன்பொருளாளர் .சேரன்செல்லப்பாபன்னீர்செல்வம்தங்கமணி.அருணாசலம்வீ.சனார்த்தனம்ஜெ.சனார்த்தனம்பெரியார் மாணாக்கன்செல்வி பூஜா.ராம் குமார்சீனிவாசன்கு.சோமசுந்தரம்மா.டில்லிபாபு.வெங்கடேசன்பொன்.இராமச்சந்திரன்சிறீ ராம்.வே.நடராசன்

வடசென்னை

வழக்குரைஞர் சு.குமாரதேவன் (மாவட்ட தலை வர்), தி,செ.கணேசன் (மாவட்ட செயலாளர்), கிஇராமலிங்கம்சு.மும்மூர்த்திபுரசை சு.அன்புச் செல்வன்சி.பாஸ்கர்தளபதி பாண்டியன்.தமிழ்ச்செல்வன்நா.பார்த்திபன்மு.டில்லிபாபுகோ.தங்கமணிதா.கருத்தோவியன்பா.கோபால கிருட்டிணன்

தென்சென்னை மாவட்டம்

இரா.வில்வநாதன்டி.ஆர்.சேதுராமன்கோ.வீராகவன்மு..மதியழகன்மு.சேகர்.ராமச்சந்திரன்சா.தாமோதரன்மஞ்சநாதன்.குமார்சண்முகப்பிரியன்.பவன்குமார்சிவசீலன்.துணைவேந்தன்மணித்துரை.சந்தோஷ்மயிலை பாலுமோகன்பாஸ்கர்.மகேந்திரன்விஜயராசு

தாம்பரம் கழக மாவட்டம்

கோ.நாத்திகன்சு.மோகன்ராஜ்மா.குணசேக ரன்ஊரப்பாக்கம் சீனிவாசன்பொய்யாமொழிபுஷ்பராஜ்பெரியார்செல்வன்பொழிசை கண் ணன்இலட்சுமிபதிகூடுவாஞ்சேரி ராசுபொழிசை கண்ணன்கிருட்டினமூர்த்திரத்தினகுமார்

சோழிங்கநல்லூர் கழக மாவட்டம்

ஜெயராமன்டி.தமிழ்இனியன்வசந்தாவே.மணிகண்டன்மறைமலைநகர் சிவகுருயா.இயேசுரா.பழனிலா.கருணாநிதி

ஆவடி மாவட்டம்

ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசுசெயலாளர் .இளவரசன்முத்தழகுஅம்பத்தூர் இராமலிங்கம்ஆவடி தமிழ்மணிகும்மிடிப்பூண்டி செ.உதயக்குமார்..கஇரணியன்செங்கை சுந்தரம்போளூர் பன்னீர்செல்வம்கொரட்டூர் பன்னீர்செல்வம்கொரட்டூர் கோபால்,  வழக் குரைஞர் ஜெ.துரைசாமிபெரியார் சமூக காப்பணி சி.காமராஜ்,  சோ.சுரேஷ்வடமணப்பாக்கம் வெ.இளஞ்செழியன்.

மகளிரணி மகளிர் பாசறை

சி.வெற்றிச்செல்வி.பார்வதிசே.மெ.மதிவதனிடெய்சி மணியம்மைஉமாமீரா ஜெகதீசன்பூவைசெல்விபசும்பொன் செந்தில்குமாரி.மரகதமணிபெரியார்செல்விவளர்மதிஅஜந்தாதங்கமணிதங்கதனலட்சுமிமணிமேகலைமோக னப்பிரியாசுமதிமுகப்பேர் செல்வியாழ்ஒளிதங்கமணிபேராசிரியர் அய்ஸ்வர்யாஅன்பு செல்விவெண்ணிலாமேகலாஅகிலாஅருள்மதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சிபிஅய்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன்மாவட்ட செயலா ளர்கள் எம்.எஸ்.மூர்த்திஎம்.கருணாநிதிமேனாள் சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.கண்ணன்ஏஅய்டி யுசி தலைவர் மு.சம்பத்துரைசாமிதமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சீ.சுகுமார்எஸ்.கே.சிவாபாரி

மதிமுக

மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யாஅமைப்புச்செயலாளர் .வந்தியத்தேவன்டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன்ஜீவன்டி.இராஜேந் திரன்கழகக்குமார்வழக்குரைஞர் சுப்பிர மணிமுராத் புகாரிமல்லிகா தயாளன்தி.மு.இரா ஜேந்திரன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி

வன்னியரசுஆளூர் ஷாநவாஸ்பாலாஜி உள்ளிட்ட மாநிலமாவட்ட பொறுப்பாளர்கள்மகளிர் பொறுப்பாளர்கள் பலரும் தந்தைபெரியார் நினைவு நாள் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.