கலைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலைஞர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவிடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை


தமிழ்நாடு

சென்னை, ஆக.7 முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளான இன்று (7.8.2026) அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

திராவிட இயக்கத்தின் ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்’’ என்று தன்னை ஒரு வரி விமர்சனத்திற்குள் அடக்கி, பதிலளித்த வித்தகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 8ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2026) காலை10.30 மணியளவில் சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பெருந்திரளான கழகத் தோழர்களுடன் இணைந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், திராவிடர் கழக மாநில வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர்
ஆ. வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு  பெரியார், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி வி. பன்னீர்செல்வம், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு. குமாரதேவன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ. சுரேஷ், கழக சொற்பொழிவாளர் தேவ.நர்மதா. மகளிரணித் தோழியர்கள் பேராசிரியர் க. பெரியார்செல்வி, பசும்பொன், தங்க. தனலட்சுமி, மு. பவானி, நதியா, த.மரகதமணி, த.இளவரசி, பூவைசெல்வி, செ.பெ.தொண்டறம், அன்புச்செல்வி. தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், அய்ஸ்அவுஸ் அன்பு, ச. மகேந்திரன், பெரியார் மாணாக்கன், சி. காமராஜ், ஆனந்தன், ஜி. சண்முகம்.

தமிழ்நாடு

தாம்பரம் மாவட்டத் தலைவர் இரா. முத்தையன், மோகன்ராஜ், கருப்பையா, சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் கரு. அண்ணாமலை, செயலாளர் சுப்பிரமணியன்,  கொடுங்கையூர் தங்கமணி, எம்.ஆர். மாணிக்கம், அரும்பாக்கம் தாமோதரன்,  அருண், ஆனந்தன், நெய்வேலி, ஞானசேகரன்,  விடுதலை நகர்  பி.சி. ஜெயராமன், கலைமணி, அருண் ரங்கநாதன், விஜய், பார்த்திபன், பெரு. இளங்கோ, உடுமலை வடிவேல், ப. சிவக்குமார், இராவணன், ஆவடி மாவட்டச் செயலாளர் இளவரசன், பேராசிரியர் தீபக், சண்முகம் மாங்குடி துரை. ராகவன், சேரலாதன், முரளி கிருஷ்ணன், டாக்டர் பைரி நரேஷ் (தெலங்கானா) உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

- விடுதலை நாளேடு, 07.08.26

வெள்ளி, 12 ஜூன், 2026

மயிலாப்பூர் நொச்சி நகர்ப் பகுதியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்


திராவிடர் கழகம்

மயிலை, ஜூன் 12- முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 103ஆவது பிறந்தநாள் விழா  பொதுக்கூட்டம், 06.06.2026 அன்று மாலை 6.30 மணி அளவில் மயிலாப்பூர் நொச்சி நகர், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சாலை (லூப் சாலையில், தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன் தலைமையிலும், பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன், மாவட்ட இளைஞரணித் தலைவர் ந.மணிதுரை, மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் பெரியார் யுவராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.

தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தொடக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்புரையாற்றினார்.

மாவட்டத் துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம் பேச்சாளர் கோகுல் என்கிற குயிலன் ஆகியோர் உரையாற்றினர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மயிலாப்பூர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

இறுதியில் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி சிறப்புரை ஆற்றினார். எஸ்.முரளி (மயிலாப்பூர் கிழக்கு பகுதி செயலாளர், தி.மு.க), அ.தவநேசன் (125ஆவது வட்டச் செயலாளர், தி.மு.க.), மற்றும் திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். முன்னதாக அறிவுமானனின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சாலையின் இரு மருங்கிலும் கழகக் கொடிகள் கட்டப்பட்டு சிறப்பான முறையில் நிகழ்ச்சி விளம்பரப்படுத்தப்பட்டது.

இரா.பிரபாகரன், ஈ.குமார், ச.மகேந்திரன், அய்ஸ் அவுஸ் அ.அன்பு (இளைஞர் அணி துணைத் தலைவர்கள்), இரா.மாரிமுத்து (மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர்) வி.வளர்மதி (மகளிர் அணித் தலைவர்), பி.அஜந்தா, மு.பவானி (மகளிர் பாசறைத் தலைவர்), ஜெ.சொப்பன சுந்தரி, செய.குசேலன், வி.தங்கமணி, சா. தாமோதரன், வை. கலையரசன், மு. பசும்பொன், செ.பெ.தொண்டறம், சு.தமிழினி தானு, ஜெயசங்கரி, ஆர் ராதா, கு ரதியா, பார்வதி, எஸ்.வசந்தி, விஜயா, ஜி.ரேவதி, கவிதா, இனியன் சம்பத், மயிலை தா.தீபன்,ம.தி. பெரியார் இனியன், ம.தி. பெரியார் ஆதவன், சி. மதியழகன், அய். முனுசாமி, எம். ஜெய்கர், க. சதீஷ்,ஆர். கிருஷ்ணவேணி, சு. பரமசிவன், வே. நடராஜன், ஆர். அழகேந்திரன், நாராயணசாமி, நந்தகுமார், சி. சுப்பிரமணி, ஆர். கோவிந்தசாமி, வெங்கடேசன்,மோ.திருமலை மற்றும் கலந்து கொண்டனர்.

மாணவர் கழகப் பொறுப்பாளர் வி.யாழ்ஒளி நன்றி உரையாற்றினார்.

ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திராவிட இயக்க வரலாற்றினை செவிமடுத்து எழுச்சி பெற்றனர்.

-விடுதலை நாளேடு, 12.06.2026

யூ டியூப் காணொலி


ஒளிப் படங்கள்





வியாழன், 7 ஆகஸ்ட், 2025

முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தில் கழகத் தலைவர் தலைமையில் கழகத் தோழர்கள் புடைசூழ மரியாதை (சென்னை, 7.8.2025)


திராவிடர் கழகம்

திராவிடர் கழகம் திராவிடர் கழகம்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள்: நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2025) கலைஞரின் நினைவிடத்தில், மருத்துவப் பயனாளியாக பயன்பெற்றுத் திரும்பிய நிலையில், முதன்முதலாக தோழர்கள் புடைசூழ மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஒரத்தநாடு இரா.குணசேகரன்,
ஊமை.ஜெயராமன், வி.பன்னீர்செல்வம் மற்றும் தோழர்கள் உள்ளனர்.

முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு நாள் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை

சென்னை, ஆக.7 முத்தமிழறிஞர் கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முத்தமிழறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2025) காலை 10 மணியளவில் சென்னை கடற்கரை  காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், மருத்துவப் பயனாளியாகப் பயன் பெற்றுத் திரும்பிய நிலையில், முதன் முதலான நிகழ்ச்சியாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பெருந்திரளான கழகத் தோழர்களுடன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி,, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உரத்தநாடு இரா. குணசேகரன், ஊமை ஜெயராமன், வி. பன்னீர்செல்வம், துணைப் ெபாதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில தொழிலாளரணி செயலாளர் திருச்சி மு.சேகர், கலைஞர் அவர்களின் சிறப்பு உதவியாளர் முத்துவாவாசி, மல்லை சத்யா,  மாநில கிராமப்புற பிரச்சார செயலாளர் முனைவர் க. அன்பழகன். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ. கோபால், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ. சுரேசு, மாநில மகளிரணி துணைச் செயலாளர் க. இறைவி, மாநில விளையாட்டு அணி அமைப்பாளர் ம. பூவரசன்,  சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜு, துணைத் தலைவர் சு. இமயவரம்பன், மகளிரணி செயலாளர் வாசந்தி,  தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நெல்லுப்பட்டு அ. இராமலிங்கம், உரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் லெனின், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், அரும்பாக்கம் சா. தாமோதரன், அய்ஸ்அவுஸ் அ. அன்பு எம். ரங்கநாதன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப. முத்தையன், தொழிலாளரணித் தலைவர் மா. குணசேகரன், வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்ட காப்பாளர் கி. இராமலிங்கம், துணைத் தலைவர் நா. பார்த்திபன், பொதுக் குழு உறுப்பினர்கள் தி.செ. கணேசன், தங்க.தனலட்சுமி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் த. மரகதமணி,  மாணவர் கழகத் தலைவர் ச.சஞ்சய், தொழிலாளரணித் தலைவர் ஆ.துரைராவணன்,  கொடுங்கையூர் கழகத் தலைவர் கோ. தங்கமணி, செம்பியம் கழகத் தலைவர் ப. கோபாலகிருட்டிணன், பூம்புகார் நகர் கழக அமைப்பாளர் ச. இராசேந்திரன், கண்ணதாசன் நகர் கழக அமைப்பாளர் க. துரை, அண்ணாநகர் ப.சேரலாதன், மகளிரணி கோ. அன்புமணி, திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், செயலாளர் ந. இராசேந்திரன், ஜீவானந்த் மனோகரன், நெய்வேலி வெ. ஞானசேகரன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே. பாண்டு, பொதுக்குழு உறுப்பினர்கள் பி.சி. ஜெயராமன், கலைச்செல்வன், ஆவடி மாவட்ட செயலாளர் க. இளவரசன், துணைச் செயலாளர் பூவை. க. தமிழ்ச்செல்வன், உடுமலை வடிவேல், ஆவடி நகர துணைத் தலைவர் வஜ்ஜரவேலு, பூவை பகுதி தலைவர் க.ச. பெரியார் மாணாக்கன், க. கலைமணி, ஆளந்தன், மகேஷ் கணேசன், முகப்பேர் தி. முரளி, அயப்பாக்கம் அரிகிருஷ்ணன், திருநின்றவூர் இராசேந்திரன், மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் கலைஞர் நினைவிடத்திற்கு வந்திருந்து மரியாதை செலுத்தினர்.

- விடுதலை நாளேடு,7.8.2025

செவ்வாய், 3 ஜூன், 2025

முத்தமிழறிஞர் கலைஞரின் 102ஆம் ஆண்டு பிறந்த நாள் கலைஞர் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் கழகத்தின் சார்பில் மரியாதை



மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர்கள் ச. இன்பக்கனி, பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், தாம்பரம் ப.முத்தையன், புரசை சு.அன்புச்செல்வன், கி.தளபதிராஜ் மற்றும் தோழர்கள் உள்ளனர். * திருமதி ராசாத்தி கருணாநிதி அவர்களை தமிழர் தலைவர் உடல்நலம் விசாரித்தார். (7.8.2024)

பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசுிரியர் கி. வீரமணி மற்றும் பொறுப்பாளர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் பங்கேற்ற தோழர்கள்.


மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞரின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, பணித் தோழர்கள் , திண்டிவனம் சிறீராமுலு ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். (சென்னை பெரியார் திடல்)

கலைஞர் என்ற கலங்கரை வெளிச்சம்! முத்தமிழறிஞர் கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!



 கலைஞர் வாழ்கிறார்; மறையவில்லை – கொள்கை வெற்றியாக என்றும் வாழ்கிறார்!

திராவிடத்தின் புகழை திசையெட்டும் முரசொலிப்போம்!

முத்தமிழறிஞர் கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (7.8.2024). கலைஞர் வாழ்கிறார்; மறையவில்லை – கொள்கை வெற்றியாக என்றும் வாழ்கிறார்! திராவிடத்தின் புகழை திசையெட்டும் முரசொலிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
எண்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரராகவும், பொதுத் தொண்டின் புத்தாக்கப் பெருமானாகவும், பேச்சு, எழுத்து, ஆளுமை, கலைத்துறை, இலக்கியத் துறை, அரசியல் துறையில் அரியதோர் வரலாற்றுச் சாதனையாளரும், நமது கொள்கைக் குடும்பத்தின் பேராசான் தந்தை பெரியாரால் ‘‘மிகவும் முன்யோசனைக்காரரான பகுத்தறிவாளர்” என்று பல ஆண்டுகளுக்குமுன்பே பாராட்டப் பெற்றவரும், அவர்தம் அரசியல் வழிகாட்டி ஆசான் அறிஞர் அண்ணாவினாலேயே ‘‘நான் விட்ட பாதியை அவர் தொடர்ந்து முடிப்பார்” என்று சரியாக அறிந்து கொள்ளப்பட்டவருமான முத்தமிழறிஞர் நம் கலைஞர் அவர்களின் 6 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (7.8.2024)!

கலைஞரின் சாதனைகளிலேயே தலையாயது!
திருக்குவளை என்ற சிற்றூரில் பிறந்து, குவலயமே கொண்டாடிப் பின்பற்றவேண்டிய ஒருவராக, தமது உழைப்பாலும், அறிவு, ஆற்றலாலும் வளர்ந்ததோடு, தான் வளர்த்த இயக்கமும், கொள்கையும் மேலும் செயல்திறன் பெறும் வண்ணம் அதற்குரிய ஓர் ஆளுமை ஆற்றலையும் அடையாளம் காட்டி, பக்குவப்படுத்திய நாற்று செழித்த பயிர் என்பதை அவரும் உலகுக்கு நிரூபித்துக் காட்டும் வகையில், நமது முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஓங்கு புகழ் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகனாக ஒளிவீசும் – எதிர்நீச்சல் என்றாலும் சளைக்காதவராக சரித்திரம் படைத்தவராகியுள்ள காட்சி, கலைஞரின் சாதனைகளிலேயே தலையாயது!
ஈரோட்டுக் குருகுலம் இணையற்ற கொள்கை நாற்றுப் பண்ணை என்பது இதன்மூலம் உலகம் உணரும் வரலாறாகி, வாகை சூடி வருகிறது!
சோதனைகள் எல்லாம் சாதனைகளாகின்றன, உரிமைகள் வெற்றி உலா வருகின்றன! களமாடுவதோ அனைவருக்கும் கடமையாகி உள்ளது!
எனவே, நம் கலைஞரின் நினைவு என்பது கொள்கையின் மறு வார்ப்பு, லட்சியப் பயணத்தின் நெடிய பயணத்தின் நிகழ்கால, வருங்கால கட்டங்கள்!
உரிமைக் குரல் கொடுத்து – உறவுக்குக் (அனைவரிடமும்) கைகொடுப்போம்!

என்றும் வாழ்கிறார்; கருத்துக் கலங்கரை வெளிச்சமாக!
திராவிடத்தின் புகழை திசையெட்டும் முர சொலிப்போம்!
கலைஞர் வாழ்கிறார்; மறையவில்லை – கொள்கை வெற்றியாக என்றும் வாழ்கிறார்!
மக்களின் இதய சிம்மாசனம் என்றும் அவருடையது – நிரந்தரக் குடியிருப்பு!
எனவே, என்றும் வாழ்கிறார்; கருத்துக் கலங்கரை வெளிச்சமாக!
குருகுலத்து மாணவராகிய குவளை மலரின் மணம் என்றும் வீசும்; அகிலம் அதைப் பேசும்!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
7.8.2024

திங்கள், 3 ஜூன், 2024

முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆம் ஆண்டு பிறந்த நாள்: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மலர்மாலை வைத்து மரியாதை



விடுதலை நாளேடு 
Published June 3, 2024

முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2024) சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த கலைஞருடைய உருவப்படத்திற்குத் திராவிடர் கழகத் தோழர்கள் புடைசூழ, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மாலை அணிவித்து மரியாதை செய்தார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் அ.வீரமர்த்தினி, துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், திருவெற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் மோகன், சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வெற்றிச்செல்வி, வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், மு.சண்முகப்பிரியன், அரும்பாக்கம் தாமோதரன், தனலட்சுமி தங்கமணி, அன்புமணி மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் (சென்னை, 3.6.2024)


செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி


 கலைஞர் உள்ளூர்த் தலைவர் மட்டுமல்ல - தமிழ் உலகத் தலைவர்!

தமிழர்களுக்குத் தலைவர் மட்டுமல்ல - உரிமைகளுக்காகப் போராடும் அனைவருக்குமே அவர் தலைவர்! 

13

சென்னை, ஆக.7 கலைஞர் உள்ளூர்த் தலைவர் மட்டுமல்ல - தமிழ் உலகத் தலைவர்! தமிழர்களுக்குத் தலைவர் மட்டுமல்ல - உரிமைகளுக்காகப் போராடும் அனைவருக்குமே அவர் தலைவர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று (7.8.2023) முத்தமிழறிஞர் கலைஞரின் அய்ந் தாம் ஆண்டு நினைவு நாளினையொட்டி, அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள்!

''மானமிகுசுயமரியாதைக்காரன்'' என்றுதன்னை ஒரு வரியில் விமர்சித்துக்கொண்டவர் கலைஞர். தந்தைபெரியாரின்குருகுலத்தில்வளர்ந்து,அண்ணா விடம் அரசியல் பாடம் பெற்று, திராவிட ஆட்சியை, நீதிக்கட்சியினுடைய நீட்சியாக அண்ணா தொடங்கிய ஆட்சியை, மேலும் பல்வகையான எதிர்ப்புகளை யெல்லாம் சந்தித்து, நெருக்கடிகளுக்கெல்லாம் தலை கொடுத்து, இன்றைக்கு ஒப்பற்ற 'திராவிட மாடல்' ஆட்சியாக, இன்றைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் நடைபெறக்கூடிய ஆட்சியாக வரும் அளவுக்கு உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான்.

தமிழ்நாடு மற்ற மாநிலங்களைவிட, தலைநிமிர்ந்து பெருமிதத்தோடு இந்தியாவிற்கு வழிகாட்டக்கூடியதாக இருக்கிறது என்பதற்கு அடிக்கல் நாட்டியவர் - தந்தை பெரியாரிடம் கற்ற பாடம் - அண்ணாவிடம் கற்ற அரசியல் ஞானம் - இவற்றையெல்லாம் வைத்து, வளர்ந்து ஒரு திருப்பத்தை உருவாக்கிய தலைவருக்கு இன்றைக்கு (7.8.2023) அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள்!

நினைவு நாள் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு; அவரை என்றைக்கும் நாம் மறக்க முடியாது. எல்லா இடங்களிலும் அவருடைய புகழ் இருக்கிறது. அவரை விமர்சிப்பவர்கள்கூட, அவரைத் தவிர்க்க முடியாது.

கொடி மட்டும் உயருவதில்லை; 

மாநில சுயாட்சி உரிமையும் உயருகிறது கலைஞரால்!

இன்னும் சில நாள்களில் இந்தியா முழுவதும் ஆகஸ்டு 15 ஆம் தேதி மாநில முதலமைச்சர்கள் கொடியேற்ற இருக்கிறார்கள். அப்படி கொடியேற்றும்பொழுது, அந்தக் கொடி மட்டும் உயருவதில்லை; மாநில சுயாட்சி உரிமையும் உயருகிறது என்றால் அந்தப் பெருமை கலைஞருக்கே உரியது. ஒவ்வொரு மாநில முதலமைச்சரும் கொடியேற்றும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள் என்றால், அவர் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், பி.ஜே.பி.யைச் சார்ந்தவராக இருந்தாலும்கூட, அவர்களுக்கு அந்த வாய்ப்பை, அந்த உரிமையைப் பெற்றுத்தந்த மாபெரும் தலைவர் தான் இன்றைக்கு இங்கே படமாகவும், பாடமாக வும், அமைதியாகவும் இருக்கக்கூடிய அந்தத் தலை வராவார்.

உள்ளூர்த் தலைவர் மட்டுமல்ல - 

தமிழ் உலகத் தலைவர்!

அதுபோலவே, செம்மொழி எம்மொழி என்று உலக நாடுகளில், பற்பல நாடுகளில், தமிழர்கள் வாழுகின்ற நாடுகளில் எல்லாம் பெருமிதத்தோடு, தமிழ் ஆட்சி மொழியாகவும், பேச்சு மொழியாகவும், நடைமுறை மொழியாகவும் தமிழ் மொழி இருந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்கு செம்மொழித் தகுதியைப் போராடிப் பெற்றுத் தந்த தலைவர் என்ற பெருமை - உலகெங்கும் இருக்கக்கூடிய தமிழர்கள் மத்தியில் கலைஞருக்கு இருக்கும்பொழுது, அவர் உள்ளூர்த் தலைவர் மட்டுமல்ல - தமிழ் உலகத் தலைவராகவும் - தமிழர்களுக்குத் தலைவராக மட்டுமல்ல - உரிமை களுக்காகப் போராடும் அத்துணை பேருக்குமே அவர் தலைவராக இருக்கிறார். ''உரிமைகளுக்காக எப்படி போராடவேண்டும்? எப்படி எதிர்நீச்சல் போட வேண்டும்? என்பதை நான் கற்றுள்ளேன் - அதைக் காட்டியிருக்கிறேன் - தொடருங்கள்'' என்று பாடத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்!

வாழ்க கலைஞர்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடம் கூறினார். 

கலைஞர் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மரியாதை


2

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2023)  சென்னை காமராசர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்வளையம்  வைத்து மரியாதை செய்தார். உடன் கழகப்  பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர்கள் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சே.மெ.மதிவதனி, தென்சென்னை மாவட்டத் தலைவர் 

இரா.வில்வநாதன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.

----------------+-+++++++++--------++++++-------

முத்தமிழறிஞர் கலைஞரின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, முழக்கம் எழுப்பி தமிழர் தலைவர் மரியாதை

18
சென்னை, ஆக.7 முத்தமிழறிஞர் "மானமிகு சுயமரியாதைக்காரர்" டாக்டர் கலைஞர் அவர்களின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.8.2023) காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அறிஞர் அண்ணா நினைவிடம் அருகே அமைத்திருக்கும் கலைஞர்   நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி, மானமிகு சுயமரியாதைகாரன் என்று தன்னைப் பிரகடனப்படுத்திய கலைஞருக்கு வீர வணக்கம். அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டம் இயற்றி சமூகநீதி காத்த கலைஞருக்கு வீர வணக்கம், தந்தை பெரியாரின் தலை மாணாக்கர் அண்ணாவுக்கு அடுத்த மாணாக்கராகப் பெரியார் கொள்கைகளைச் செயல்படுத்திய கலைஞருக்கு வீர வணக்கம் என ஒலி முழக்கமிட்டார். அதைத் தொடர்ந்து கழகத் தோழர்களும்  வீர வணக்கம், வீர வணக்கம் என ஒலி முழக்கமிட்டனர்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, துணைப் பொதுச்  செயலாளர்கள் ச. இன்பக்கனி, ச. பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி, தலைமைக் கழக அமைப்பாளர்கள் பொன்னேரி பன்னீர்செல்வம்,  தே.செ. கோபால், திராவிட தொழிலாளர் கழக மாநில செயலாளர் திருச்சி சேகர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு. சண்முகப்பிரியன்,  சோ. சுரேஷ், மு. சண்முகப்பிரியன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைத் தலைவர் மயிலை சேதுராமன், அரும்பாக்கம் தாமோதரன், பி.டி.சி. இராஜேந்திரன், வழக் குரைஞர் த. வீரன், வழக்குரைஞர் வேலவன், கமலேஷ், ஆனந்த், கடலூர் வழக்குரைஞர் கனகசபாபதி, பெரியார் யுவராஜ்.

வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன்,  செயலாளர் புரசை சு. அன்புச் செல்வன், காப்பாளர்கள் கி. இராமலிங்கம், தி.செ. கணேசன், வட சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் பார்த்திபன், க. கலைமணி, வழக்குரைஞர் உதய பிரகாஷ், திருவொற்றியூர் மாவட்டச் செயலாளர் தே. ஒளிவண்ணன், பெரியார் நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் க.செல்லப்பன், ஏ. இராம்குமார்.தாம்பரம் மாவட்ட கழகத் தோழர்கள் சு. மோகன்ராஜ், பழனிச்சாமி சீர்காழி கு.நா. இராமண்ணா, பெரியார் களம் இறைவி, ஆவடி மாவட்ட செயலாளர் க. இளவரசன்,  துணைச் செயலாளர் உடுமலை வடிவேல் ச. தமிழ்ச் செல்வன், அண்ணாநகர் பழ. சேரலாதன், பகுத்தறிவாளர் கழக சுந்தர்ராஜன், இரணியன் மற்றும் திரளான கழகத் தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர். 

-----+++++++-----++++-----+++++----++----+++--



ஞாயிறு, 4 ஜூன், 2023

முத்தமிழறிஞர் கலைஞர் 100 ஆவது பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை


5

சென்னை, ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100 ஆவது பிறந்த நாளான இன்று (3.6.2023) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேனாள் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2023) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்திருக்கும் கலைஞர் அவர்களின் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும், சிலைக்குக் கீழே பீடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரின் படத் திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக வழக்குரை ஞரணித் தலைவர் த.வீரசேகரன், துணைப் பொதுச்செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் செ.மெ.மதிவதனி, தலைமைக் கழக அமைப்பாளர் பொன்னேரி வி.பன்னீர் செல்வம், வழக்குரைஞர் சு.குமாரதேவன், வழக்குரைஞர் சென்னியப்பன், சி.வெற்றிச் செல்வி, இறைவி, முத்துசெல்வி, தங்க தன லட்சுமி, தங்கமணி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, தே.ஒளி வண்ணன் (மாவட்ட செயலாளர், திரு வொற்றியூர்), பெரியார் யுவராஜ் (தென் சென்னை இளைஞரணி அமைப்பாளர்), இரா.வில்வநாதன் (தென் சென்னை தலைவர்), செ.ரா.பார்த்தசாரதி (தென்சென்னை செயலாளர்), தளபதி பாண்டியன் (வட சென்னை தலைவர்), புரசை சு.அன்புச்செல்வன் (வடசென்னை செயலாளர்), ப.முத்தையன் (தாம்பரம் தலைவர்), கோ.நாத்திகன் (தாம்பரம் செயலாளர்), அரும்பாக்கம் தாமோதரன், அமைந்தகரை அருள்தாஸ், காப்பாளர் வெ.ஞானசேகரன், வாசகர் வட்ட பொருளாளர் ஜனார்த்தனன், உடுமலை வடிவேல், மு.ரெங்கநாதன்,  கலைமணி, யுகேஸ், ரவீந்திரன், முத்து லெட்சுமி, அருள் மற்றும் திரளான தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.