திங்கள், 28 பிப்ரவரி, 2022

சைதை எம்.பி. பாலுவின் 91ஆவது பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவர் அவருக்கு பயனாடை அணிவிப்பு

விடுதலை சந்தா

. படம் 3 : சைதை மூத்த பெரியார் பெருந்தொண்டர் எம்.பி. பாலுவின் 91ஆவது பிறந்தநாளையொட்டி தமிழர் தலைவர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். பாலு  விடுதலை சந்தாவும், பெரியார் உலகத்திற்கு ரூ.1000/-மும் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: அருள், செந்தில்நாதன், படம்  (சென்னை 28.2.2022)

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

சென்னை பெரியார் திடலில் கழகத் தோழர்களின் சுயமரியாதைத் திருமணங்கள்- 27.4.98


சென்னை பெரியார் திடலில் கழகத் தோழர்களின் சுயமரியாதைத் திருமணங்களை 27.4.1998 அன்று தலைமையேற்று நடத்தி வைத்தேன். இத்திருமண நிகழ்வு ஜாதி மறுப்பு திருமணங்களாக எளிய முறையில் நடைபெற்றது. நான்கு ஜோடி மணமக்கள் கி.முல்லைவேந்தன் _ கனகரத்தினம், கி.சேகர் _ மு.வெ.நிர்மலா, கி.இந்திரா _ கவிஇரவீந்திரன், சுஜாதா _ சாமிநாதன் ஆகியோரை வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ள வைத்து விழாவினை நடத்தி வைத்தேன். விழாவில் உரையாற்றுகையில், “ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுடைய குழந்தைகளுக்கு அரசு இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒரு சில ஆண்டுகளிலேயே ஜாதிப் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்’’ என எடுத்துக் கூறினேன். விழாவிற்கு சென்னை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து கழகத் தோழர்களும், உறவினர்களும் வந்திருந்தனர்.
-அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி
- உண்மை இதழ், 16-28.2.22

சென்னை கோட்டூர்புரம் பழனிச்சாமி இல்ல மணவிழா


திருச்சி கரூரில் சென்னை கோட்டூர்புரம் பழனிச்சாமி _ சம்பூரணம் ஆகியோரின் செல்வன் ப.கவுதமனுக்கும், சென்னையைச் சார்ந்த கோவிந்தசாமி _ அம்சவேணி ஆகியோரின் செல்வி புஷ்பலதாவுக்கும் கரூர் பிரேம் மகாலில் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா 26.4.1998 அன்று நடைபெற்றது. இந்த ஒப்பந்த விழாவில் கலந்துகொண்டு தலைமையேற்று நடத்தினேன். மணமக்கள் இருவரையும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா உறுதிமொழியினை பின்பற்றிக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து நடத்தி வைத்தேன். விழாவின் சிறப்புரையின்-போது ஏராளமான கழகத் தோழர்கள், “கீதையின் மறுபக்கம்’’ நூலை ஆர்வமாக மேடையில் வந்து பெற்றுச் சென்றனர். மணவிழாவிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரி தாளாளர் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி
- உண்மை இதழ், 16-28.2.22

தென்சென்னை மாவட்ட தி.க. இளைஞரணித் தலைவர் இரா. வில்வநாதன் - கா. வளர்மதி ஆகியோரின் வாழ்க்கை துணை நல ஒப்பந்த விழா


தென்சென்னை மாவட்ட தி.க. இளைஞரணித் தலைவரும், சென்னை கு.இராமசாமி_ பவுனம்மாள் ஆகியோரின் செல்வன் இரா.வில்வநாதனுக்கும், மு.காளியப்பன் _ ருக்மணி ஆகியோரின் செல்வி கா.வளர்மதிக்கும் 19.4.1998 அன்று மயிலையில் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவை தலைமையேற்று நடத்தி வைத்தேன். விழாவையொட்டி மண்டப பகுதி முழுவதும் கழகக் கொடி மற்றும் பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மணமக்களை வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா உறுதி மொழியினைக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து விழாவினை நடத்தி வைத்தேன். விழாவில் உரை நிகழ்த்துகையில், “வில்வநாதன் அவர்கள் இந்த இயக்கத்தில் கட்டுப்பாடு மிக்க இராணுவத் தொண்டர் போல பணியாற்றக் கூடியவர், ‘அடக்கமானவர், அமைதியானவர்’. அந்தப் பெருமையின் காரணமாகத்தான் இந்த மணவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும், மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் விளக்கிக் கூறினேன். மணவிழாவிற்கு சென்னையைச் சேர்ந்த பல்வேறு கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி
- உண்மை இதழ், 16-28.2.22

வியாழன், 17 பிப்ரவரி, 2022

பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி.பாலு அவர்களின் 90ஆவது பிறந்தநாள்: கழகப்பொறுப்பாளர்கள் பாராட்டு


தென் சென்னை மாவட்ட கழகத்தின் காப்பாளரும் பொதுக் குழு உறுப்பினருமான பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி. பாலு அவர்களின் 90ஆவது பிறந்த நாளை (14.2.2022) முன்னிட்டு தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவனும் 14.02.2022 காலை 11.00 மணியளவில் அவரின் இல்லம் சென்று பயனாடை அணி வித்து வாழ்த்தி பாராட்டியதுடன். அவரின் வாழ்விணையரை யும் பாராட்டினர்.

பெரியார் பெருந்தொண்டர் எம்பி.பாலு மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவனுக்கும் பயனாடை அணிவித்தார்.

சனி, 12 பிப்ரவரி, 2022

திராவிடப் பொழில், பெரியார் பிஞ்சு சந்தா


தாம்பரம் மாவட்டக் கழக செயலாளர் கோ.நாத்திகனின் 68ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு திராவிடப் பொழில், பெரியார் பிஞ்சு சந்தாக்களுக்கான தொகை ரூ.1040அய் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார். மாவட்ட தலைவர் ப.முத்தையன், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் சிவசாமி மற்றும் தோழர்கள் உடன் உள்ளனர். (11.2.2022)

தமிழர் தலைவரிடம் வாழ்த்து பெற்ற புதிய பொறுப்பாளர்கள் (வட சென்னை)


வடசென்னை - திருவொற்றியூர் ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணேசன்  ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை  சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், திருவொற்றியூர் நகர செயலாளர்

ந.ராசேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். (பெரியார் திடல், 9-2-2022)

கோட்சே - ஆப்தே பெயரில் பாரத ரத்னா விருதா? திராவிடர் கழக ஆர்ப்பாட்டத்தில் உரை

சனி, 5 பிப்ரவரி, 2022

காந்தியாரைக் கொன்ற கோட்சே - ஆப்தே பெயரில் பாரத ரத்னாவா?