செவ்வாய், 27 செப்டம்பர், 2022

சி.பா.ஆதித்தனாரின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாள்! சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை


சென்னை, செப்.27 ‘தினத்தந்தி' நாளிதழின் நிறுவநரும் - தமிழ்நாடு மேனாள் அமைச்சருமான சி.பா.ஆதித்தனார் அவர்களின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (27.9.2022) காலை எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் மலர்மாலை அணிவித்தும், அவரது படத்திற்கு மலர் தூவியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, துணைத் தலைவர் சா.தாமோதரன், அய்ஸ்அவுஸ் அப்துல்லா,  

வே.சிறீதர், பா.சிவகுமார், க.கலைமணி, முத்துலட்சுமி, அன்பரசன், அருள், உடுமலை வடிவேல், மகேஷ், கணேஷ் மற்றும் தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

வியாழன், 15 செப்டம்பர், 2022

அறிஞர் அண்ணாவின் 114ஆம் ஆண்டு பிறந்த நாள்


சிலைக்கு - படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, செப். 15- அறிஞர் அண்ணா அவர்களின் 114ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2022) காலை 11 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கு மலர் மாலை அணிவித்தும், சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர் தூவியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொரு ளாளர் வீ.குமரேசன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, கழக அமைப்புச் செயலாளர் வி.பன் னீர்செல்வம், மாநில ப.க. பொதுச்செயலாளர் ஆ.வெங்க டேசன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், இளைஞரணி தலைவர் சி.மகேந்திரன், 'விடுதலை' நகர் பி.சி.ஜெயராமன், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், துணைச் செயலாளர் சு.மும்மூர்த்தி, கொடுங்கையூர் கழக அமைப்பாளர் கோ.தங்கமணி, செம்பியம் கழக தலைவர் பா.கோபாலகிருஷ்ணன், பெரியார் நூலக வாசகர் வட்டம் - செல்லப்பன், தங்க.தனலட்சுமி, முத்து லட்சுமி, செ.பெ.தொண்டறம், நர்மதா மற்றும் பல தோழர்கள் பங்கேற்றனர்.புதன், 14 செப்டம்பர், 2022

தென் சென்னை மாவட்டம் சார்பில் விடுதலை சந்தாவாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் வழங்கப்பட்டது

விடுதலை சந்தா

 தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் 05.09.2022 அன்று நண்பகல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை பெரியார் திடலில்(அருங்காட்சியகம்) சந்தித்து 'விடுதலை' சந்தாவிற்கு  ரூ1,00,000/-(ஒரு இலட்சம்) த்தையும் 'விடுதலை' வங்கி கணக்கு மூலம் செலுத்தப்பட்ட ரூ30,000/- (முப்பதாயிரம் )க்கான ரசீதையும் வழங்கினர். (71 ஆண்டு சந்தா மற்றும் 2 அரையாண்டு சந்தா)


வியாழன், 8 செப்டம்பர், 2022

மருத்துவர் மங்கையர்க்கரசி -அமுதன்சவுரிராஜன் (அடையாறு மாணவர் நகலகம்) மற்றும் சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் விடுதலை சந்தா தொகை வழங்கினார்

திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் தென் சென்னை சார்பில் விடுதலை சந்தா வழங்கினர்


திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா வழங்கினர் (சென்னை- 6.9.2022)
தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, ஆகியோர் விடுதலை சந்தா தொகை  ரூ.1,00,000த்தை கழகத் தலைவரிடம் வழங்கினர். மு. சண்முகப்ரியன், மணிதுரை ஆகியோர் விடுதலை சந்தா தொகை ரூ.20,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

திராவிடர் கழகத்தின் அமைப்பு முறைத் திட்டங்கள்

புதன், 7 செப்டம்பர், 2022

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் தீர்மானங்கள் - சென்னை

ஆசிரியரிடம் 27,605 ‘விடுதலை' சந்தாக்கள் அளிப்பு!

சனி, 3 செப்டம்பர், 2022

60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! (நா. எழிலன் எம் எல் ஏ)

தென்சென்னை மாவட்டத்தில் பெரியார் 1000 (சைதாப்பேட்டை)


தென்சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை, பாத்திமா சீனியர் செகன்டரி பள்ளியில், பெரியார்-1000 - வினா விடை போட்டித் தேர்வு 25.08.2022 அன்று நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் வேண்மாள் நன்னன் தொடக்க உரையாற்றி, தேர்வை தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகி நயீம்அதர் மற்றும் முகவர் நாஸ் பர்வார் கலந்துகொண்டனர்.    பள்ளி  மாணவர்கள் 98 பேர் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு எழுதினார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு சர்மிளா, தமிழ்ஆசிரியை. - பகுத்தறிவாளர்கழகம், திராவிடர்கழகம் தென்சென்னை. மு. இரா. மாணிக் கம், அரும்பாக்கம்சா. தாமோதரன். 

60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! -( சோமு கனிமொழி எம்பி)

  September 02, 2022 • Viduthalai
 மருத்துவர் என்.எசு. கனிமொழி (சோமு) எம்.பி., தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் மூலம்  'விடுதலை'  நாளேட்டிற்கு அய்ந்து ஆண்டு சந்தா வழங்கினார். (30.08.2022) 

வியாழன், 1 செப்டம்பர், 2022

திரைப்படக் கலைஞர் 'இனமுரசு' சத்யராஜ் அவர்கள் 'விடுதலை' சந்தாவுக்கு ரூ.50 ஆயிரம்

திரைப்படக் கலைஞர் 'இனமுரசு' சத்யராஜ் அவர்கள் 'விடுதலை' சந்தாவுக்கு ரூ.50 ஆயிரம் (காசோலை) கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினார்.