ஞாயிறு, 29 மே, 2016

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்


புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, ஏப். 29_ புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர் களின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 126_ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2016) சென்னை காமராசர் கடற்கரை சாலையிலுள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  கழகத் தோழர், தோழியர் புடை சூழ சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, மோகனா வீரமணி, வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞான சேகரன், சென்னை மண்டல செயலாளர் பன்னீர்செல்வம், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராஜன்.
சி.வெற்றிச்செல்வி, ஆவடி மாவட்டத் தலைவர் தென்னரசு, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், துணைத் தலைவர் செங்குட்டுவன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் பார்த்திபன், மயிலை சேதுராமன், கொடுங்கையூர் கு.தங்கமணி, தங்க.தன லட்சுமி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குனர் பசும்பொன்,
பொறியாளர் சீர்த்தி, வலைக்காட்சி கலைமதி பெரியார்திடல் சுரேஷ், எம்.ஆர்.ராதா மன்றம் எம்.ரங்கநாதன், அயன்புரம் மாடசாமி, அரும்பாக்கம் தாமோதரன், விமல்ராஜ், சங்கர், கலைமணி, கோபி.முரளி, பெரியார் பிஞ்சு கிஷோர், மகேஷ், ராஜ், காரல் மார்க்ஸ், ஜோசப், மு.பவானி ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். திமுக சார்பில் முன்னாள் மேயர் சா.கணே சன் மீண்டும் கவிக்கொண்டல் கலைமாமணி மா.செங் குட்டுவன், முனைவர் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன், கயல் தினகரன், பெருங்கவிக்கோ வா.மு.சேது ராமன், கவிஞர் கண்மதியன், கவிஞர் பொன்னடியான் மற்றும் பலர் புரட்சிக் கவிஞர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
தமிழக அரசு சார்பில், புரட்சி கவிஞர் பிறந்த நாளை யொட்டி தமிழக அரசு சார்பில் அவரது சிலைக்கு செய்திதுறை சார்பில் அதன் இயக்குநர் ஜெ.குமரகுருபரன் அய்.ஏ.எஸ். இணை இயக்குநர் ஜெயசிறீ, உதவி இயக்குநர், சுப்பிரமணியன், மக்கள் தொடர்பு அதிகாரி கலை நேசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

-விடுதலை,29.4.16

வெள்ளுடைவேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் பிறந்த நாள்


சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, ஏப். 27_ வெள் ளுடைவேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் அவர்களின் பிறந்த நாளான இன்று (27.4.2016) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நீதிக்கட்சியைத் தோற்றுவித்த மும்மணி களுள் முக்கியமானவரான வெள்ளுடைவேந்தர் சர். பிட்டி. தியாகராயர் அவர் களின் 165ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (27.4.2016) சென்னை ரிப்பன் மாளிகை முன்பு உள்ள அவரது சிலைக்கு திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் கழகத் தோழர் தோழி யர்கள் புடைசூழ சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் திராவி டர் கழக துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன் றன், வெளியுறவு செயலா ளர் வீ.குமரேசன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராஜன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், செயலாளர் இ.சத்தியநாராயணன்,
பொருளாளர் மனோகர், செயலாளர் மா.சேரன், மாநில பகுத்தறிவு கலை இலக்கிய அணி செயலா ளர் மஞ்சை வசந்தன், மாநில இளைஞரணி செய லாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார், பொதுக் குழு உறுப்பினர் நீலாங் கரை ஆர்.டி.வீரபத்திரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநா தன், துணைத் தலைவர் செங்குட்டுவன், தாம்பரம் மாவட்டத் தலைவர் இரா.முத்தய்யன், தாம்பரம் மோகன ராஜ், சோமசுந்தரம், சென்னை மண்டல மாண வரணி செயலாளர் மணி யம்மை,
வடசென்னை மாவட்ட கழக செயலாளர் ஒளிவண்ணன், துணைச் செயலாளர் செம்பியம் கி. இராமலிங்கம், வடசென்னை மகளிரணி செயலாளர் பொறியாளர் இன்பக்கனி, சா.முகிலரசு, தரமணி மஞ்சுநாதன், சேகுவாரா, சி.வெற்றிச்செல்வி, சுமதி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பொறியாளர் சீர்த்தி, கொடுங்கையூர் தங் கமணி, தங்க.தனலட்சுமி, மரகதமணி, பவானி.
விடுதலை நகர் ஜெய ராமன், மேடவாக்கம் விஜய்,  ஆனந்து, ஆவடிராமலிங் கம், பெரியார் திடல் சுரேஷ், மகேஷ், இல.சங்கர், கலைமணி, காரல் மார்க்ஸ், அம்பேத்கர், உடுமலை வடிவேல் மற்றும் திரளான கழகத் தோழர் தோழி யர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக தியாக ராயர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்த தமிழர் தலைவருக்கு சர். பி.டி. தியாகராயர் பேரவைத் தலைவர் மகா பாண்டியன் பயனாடை அணிவித்து சிறப் பித்தார். சேகர் பதிப்பகம் வெள்ளையாம்பட்டு வெ.சுந் தரம் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்.
-விடுதலை,27.4.16

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்: சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தார்

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள்:
சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தார்
சென்னை, ஏப். 14_ அண்ணல் அம்பேத்கர் அவர் களின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஒலி முழக்கத்துடன்
மலர் மாலை அணிவித்து மரியாதை
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை நாயகர், இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான இன்று (14.4.2016) சென்னை பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கு அருகில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழக தோழர், தோழியர் புடைசூழ டாக்டர் அம்பேத்கர் வாழ்க! என ஒலி முழக்கத்துடன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கலந்துகொண்டோர்
இந்நிகழ்வில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னா ரெசு பெரியார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, வட மாவட்டங்களின் அமைப்பு செயலாளர் வெ.ஞானசேகரன், கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராஜன்.
சென்னை மண்டலத் தலைவர் தாம்பரம் தி.இரா.ரத்தினசாமி, செயலாளர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர்கள் சைதை எம்.பி.பாலு, நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், திருவள்ளுவன், எண்ணூர் மோகன், தமிழ் சாக்ரடீசு, வழக்குரை ஞரணி அமைப்பாளர் வீரமர்த்தினி, வேலூர் மண்டல தலைவர் சடகோபன்.
வேலூர் மாவட்டத் தலைவர் சிவக்குமார், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, துணைத் தலைவர் மயிலை சேதுராமன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், மாவட்ட செயலாளர் ஒளிவண்ணன், வழக்குரைஞர் ஆம்பூர் துரை, விடுதலை நகர் ஜெயராமன், சைதை மதியழகன், திருவெற்றியூர் கணேசன், புரசை அன்புசெல்வன்,
சி.காமராஜ், சி.வெற்றிச்செல்வி, அரும்பாக்கம் தாமோதரன், தொழிலாளரணி பெரியார் மாணாக் கன், ராஜூ பழனிபாலு, தங்கமணி குணசீலன், கொடுங்கையூர் தங்கமணி.தனலட்சுமி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, பசும்பொன் செந்தில்குமாரி, தரமணி மஞ்சுநாதன், மோகனப்பிரியா, மரகதமணி, வெற்றிசெல்வி, சுரேஷ், கலைமணி, காரல்மார்க்ஸ், மகேஷ், கலையரசன், வடசென்னை மாவட்ட செயலாளர் ச.இ.இன்பக்கனி, பெரியார் செல்வி,
வட சென்னை மாவட்ட துணைச் செயலாளர் செம்பியம்  கி.இராமலிங்கம், மாவட்ட அமைப் பாளர் சொ.அன்பு, தமிழ்செல்வன், தென்சென்னை இளைஞரணி மகேந்திரன், புரசை பாலமுருகன், அம்பேத்கர், நுங்கம்பாக்கம் வெற்றிமாறன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், மரகதமணி, பவானி, பெலா மு.தமிழ்ச்செல்வி, கலைமதி, சீர்த்தி, கவிமலர் மற்றும் கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.
-விடுதலை,14.416

வெள்ளி, 27 மே, 2016

கோ,வீ.ராகவனை நலம் விசாரித்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி


கோ,வீ.ராகவனை நலம் விசாரித்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி
தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு 18.2.16 அன்று முகப்பேர் எம்.எம்.எம்.மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 23.2.16 அன்று இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. 29.2.16 அன்று நலம் பெற்று இல்லம் திரும்பினார்.
இன்று (22.5.16)முற்பகல் 10.30 மணி அளவில் சென்னை சூளைமேட்டில் உள்ள கோ.வீ.ராகவன் அவர்கள் இல்லத்திற்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சென்று நலம் விசாரித்தார். கோ.வீ.ராகவன் அவர்களுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆலோசனையும் அறிவுரையும் வழங்கினார்.
செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் சி.செங்குட்டுவன், துணைச் செயலாளர் சா.தாமோதரன், ச.மாரியப்பன், ந.இராமச்சந்திரன், க.தமிழ்ச்செல்வன், தளபதி பாண்டியன், தணிகாசலம் ஜானகிராமன், வீ.புவனேஷ்வரி, வீ.அருண், வீ.கலையரசி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

ஞாயிறு, 1 மே, 2016

திருச்சி-சிறுகனூர்-19,20 நாள்களில்(மார்ச்) மாநாடு-2

திருச்சி-சிறுகனூர் பெரியார் உலக திடலில் 19,20 நாள்களில்(மார்ச்) நடைபெற்ற ஜாதி,தீண்டாமை ஒழிப்பு மற்றும் சமூக நீதி மாநாட்டு காட்சிகள்