இரங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரங்கல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 நவம்பர், 2023

திராவிடர் கழக மகளிரணியின் மேனாள் மாநிலச் செயலாளர் க. பார்வதி அவர்களுக்கு கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் இறுதி மரியாதை


உடல் அரசு மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது

1213

'சுயமரியாதை சுடரொளி' க. பார்வதி அம்மையாரின் உடலுக்கு கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் கழகக் கொடிப் போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார். அம்மையாரின் குடும்பத்தாருக்கு தமிழர் தலைவர் ஆறுதலை தெரிவித்தார்.

சென்னை,நவ.9- திராவிடர் கழக மகளிரணியின் தொடக்க காலத்திலிருந்து பொறுப்பாளராக பணியாற்றி கழக மகளிரணியின் மேனாள் மாநில செயலாளராக தொண் டாற்றியவரும், கழகக் காப்பாளருமாகிய க.பார்வதி (வயது 77)  நேற்று (8.11.2023) இரவு சென்னை தாழம்பூரிலுள்ள அவர் மகன் இல்லத்தில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மறைவுற்றார். 

கழகத் தலைமையின் நம்பிக்கையைப் பெற்று பல்வேறு பொறுப்புகளை ஏற்று தொண்டாற்றியவர். கழகத்தில் மகளிர் தோழர்களை அரவணைத்து களப்பணிகளில் தீவிரமாக இறங்கிப் பணியாற்ற பெரிதும் ஊக்கமளித்ததுடன் தானும் அயராது பணியாற்றிய தொண்டறச் செம்மலாகத் திகழ்ந்தவர்.

விழிக்கொடை

சென்னை எழும்பூர் கண்மருத்துவமனை கண் வங்கிக்கு அவரது விழிகள் கொடையாக வழங்கப்பட்டன.

அவரது உடல் சென்னை பெரியார் திடலில் இன்று (9.11.2023) காலை வைக்கப்பட்டது.  அவரது உடலுக்கு கழகக்கொடி போர்த்தி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மோகனா அம்மையார், கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மரியாதை செலுத்தினர். 

கழகப்பொறுப்பாளர்கள், மகளிர் தோழர்கள் பெரியார் திடலில் திரண்டு அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

9
 கழக குடும்பத்தினர் கொள்கை வீராங்கனைக்கு இறுதி மரியாதை

இறுதி ஊர்வலம்10

மறைந்த க. பார்வதியம்மையாரின் உடல் அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது இறுதி ஊர்வலத்தில் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர் 

பகல் 12.45 மணிக்கு பார்வதி அம்மையார் உடல் மருத்துவ அவசர ஊர்தியில் ஏற்றப்பட்டன.

பெரியார் திடலிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு, பெரியார் ஈவெ.ரா.நெடுஞ்சாலையில் அன்னை மணியம்மையார் சிலைக்கு முன்பாக தமிழர் தலைவர் தலைமையில் மகளிரணி தோழர்கள் வீரவணக்கம் முழக்கமிட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

பார்வதி அம்மையாரது வேண்டுகோள்படி மாலைக்குப்பதிலாக உண்டியல் அமைக்கப்பட்டு, தோழர்கள் பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கினர்.

உடற்கொடை

சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அவர்து உடல் கொடையாக அளிக்கப்பட்டது.

மகன்கள் க.மணிமாறன்-இந்திராதேவி, க.செல்வமணி-அறிவுச்சுடர், மகள் க.மேகலா, கவுதமன், மருமகன் சின்னதுரை மற்றும் பேரப்பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆறுதலைத் தெரிவித்தார்.

திமுக மகளிரணி விஜயா தாயன்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன், பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கழகத் துணைப்பொதுச்செயலாளர்கள் பொறியாளர் ச.இன்பக்கனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, தலைமைக்கழக அமைப்பாளர் தே.செ.கோபால்,  இளைஞரணி மாநில துணை செயலாளர் சோ.சுரேஷ், மருத்துவர் மீனாம்பாள், சி.வெற்றிசெல்வி, டெய்சி மணியம்மை, பெரியார் செல்வி, பண்பொளி கண்ணப்பன், இறைவி, மாட்சி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வன், பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், க.ஜெயகிருஷ்ணன், பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், மு.கலைவாணன், நீதிபதி பரஞ்சோதி, பேராசிரியர் டாக்டர் சாந்தா, நெய்வேலி ஞானசேகரன், பேராசிரியர் நம்.சீனுவாசன், கழகப்பொறுப்பாளர்கள் ஆர்.டி.வீரபத்திரன், தாம்பரம் ப.முத்தையன், வெ.மு.மோகன், தளபதி பாண்டியன், வெ.கார்வேந்தன், செ.ர.பார்த்தசாரதி,கோ.நாத்திகன், க.இளவரசன், தே.ஒளிவண்ணன் மற்றும் கழகப்பொறுப்பாளர்கள், மகளிர் தோழர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் பெண்ணுரிமை சிந்தனைகளையும் பகுத்தறிவு கொள்கைகளையும்  மகளிரணியின் மூலம் கொண்டு சென்ற சிறந்த கொள்கைப் போராளி !

மனிதநேயத்துடன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டு கொள்கை வீராங்கனை மரியாதைக்குரிய மானமிகு பார்வதி அம்மா பெரியார் மருந்தியல் கல்லூரி சார்பில் வீரவணக்கம்!

------++++++--------+++++------++++--------

 

திராவிடர் கழக மகளிரணி மேனாள் மாநில செயலாளர் மானமிகு க.பார்வதிக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!

15

திராவிடர் கழக மகளிரணியின் மேனாள் மாநிலச் செயலாளர் சகோதரி மானமிகு க.பார்வதி (வயது 77) அவர்கள் நேற்று இரவு  (8.11.2023) அவரது மகன் இல்லத்தில் மறைவுற்றார் என் பதை அறிவிக்கப் பெரிதும் வருந்துகிறோம்.

50 ஆண்டுகளுக்கு மேலாகக் கழக வீராங்கனையாக, கழகம் நடத்திய அத்தனைப் போராட் டங்களிலும் தவறாமல் பங்கேற் றவர் - சிறை ஏகியவர்!

தமிழ்நாடு முழுவதும் சக மகளிரணி பொறுப் பாளர்களுடன் சுற்றிச் சுற்றி வந்து கழக மகளிரணியை மாவட்டம் தோறும் அமைத்ததில் அவரின் பங்கு மகத்தானது!

அவரது வாழ்விணையர் கணேசன் (மறைவு) அவர்களுடன் இணைந்தும் ஓய்வில்லாமல் கழகப் பணியே தன் உயிர் மூச்சாகக் கொண்டு உழைத்த ஒப்பற்ற ஒரு சகோதரியை கழகம் இழந்து தவிக்கிறது!

தன் பிள்ளைகளுக்கெல்லாம் ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்திக் காட்டிய கொள்கை வீராங்கனை!

தனது மரணத்திற்குப் பின் விழிக்கொடை வழங்கப்பட்ட நிலையில் சென்னை பெரியார் திடலில் தன் உடலைக் கொண்டு சென்று, அங்கு சில மணி நேரம் வைத்து,   மருத்துவமனையில் தனது உடலையும்  கொடையாக ஒப்படைக்க  வேண்டும் என்றும், உடலுக்கு மாலை ஏதும் அணிவிக்காமல் உண்டியல் வைத்து, மாலைக் குப் பதில் பணம் போட்டு, அந்தத் தொகையைப் பெரியார் உலகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் மரணத்திலும் தனது கொள்கை முத்திரையைப் பொறித்தவர்.

அவர் இழப்பு அவர்தம் குருதிக் குடும்பத் தினருக்கு மட்டுமல்ல; கழகக் கொள்கைக் குடும்பத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அவரின் அளப்பரிய கழகத் தொண்டுக்குக் கழகத்தின் சார்பில் வீர வணக்கம் செலுத் துகிறோம். அவர் மறைவால் துயருறும் குடும்பத் தினருக்கும்,  கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர், 
திராவிடர் கழகம்
சென்னை
9.11.2023  

ஞாயிறு, 24 ஜூலை, 2022

சுயமரியாதைச் சுடரொளி இராம. அரங்கண்ணல் துணைவியார் திருமதி ஆண்டாள் மறைவு : கழகத் தலைவர் இரங்கல், ஆறுதல்


தி.மு.க.வின் துவக்க கால முன்னோடிகளில் ஒருவரும், 'விடுதலை' நாளேட்டின் மேனாள் துணையாசிரியரும்,  முத்தமிழறிஞர் கலைஞரின் உற்ற தோழரும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் நண்பருமான இராம. அரங்கண்ணல் துணைவியார் திருமதி ஆண்டாள் அம்மையார் (வயது 87) நேற்று  (23.7.2022) சென்னை கோபாலபுரம் இராமசாமித் தெருவில் உள்ள இல்லத்தில் மறைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

ஆண்டாள் அம்மையார் தனது வாழ்நாள் முழுவதும் விருந்தோம்பலில்  சிறந்தோங்கிய பான்மையராவார்.   

அம்மையாரின் உடலுக்கு கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (24.7.2022) காலை 8.30 மணியளவில் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். 

இராம. அரங்கண்ணல் - ஆண்டாள் ஆகியோரின் மகன்கள்   பொறியாளர் அ.அசோகன் அரங்கண்ணல், டாக்டர் அ.அருள் (இங்கிலாந்து), அ.அன்புதுரை (மலேசியா) அ.ஆனந்தன், டாக்டர் அ.பொன்னுதுரை ஆகியோரிடம் அம்மையாரின் மறைவிற்குத் தமிழர் தலைவர் ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்தார்.

தமிழர் தலைவருடன் சென்ற கழகப் பொதுச் செயலாளர் 

வீ. அன்புராஜ், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, ஆடிட்டர் அ. இராமச் சந்திரன் ஆகியோரும் மறைந்த   அம்மையாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.  இறுதி நிகழ்வு இன்று  நடைபெற்றது.  


புதன், 20 அக்டோபர், 2021

மயிலை டி.ஆர்.சேதுராமனின் துணைவியார் டி.எஸ்.பிரேமா மறைவு


கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

சென்னை,அக்.20- தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன் அவர்களின் துணைவியார் டி.எஸ். பிரேமா (வயது-68) 18.10.2021இரவு 8.00 மணி அளவில் மறைவுற்றார். மயிலாப்பூர், புதுத்தெருவில் அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டிருந்தது.

19.10.2021 முற்பகல் 10.30 மணி அளவில்  திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார். டி.ஆர். சேதுராமன் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

உடன் மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, அமைப்பாளர் மு.ந.மதியழகன், துணைச் செயலாளர் சா.தாமோதரன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி .வீரபத்திரன், தரமணி கோ. மஞ்சநாதன், ஆயிரம் விளக்கு மு.சேகர், கோ.குமாரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, இரா. பிரபாகரன், பூவிருந்தவல்லி க.தமிழ்ச்செல்வன், பெரியார் மாணாக்கன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ்,  தாம்பரம் நகர துணை செயலாளர் மா.குணசேகரன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.




வெள்ளி, 10 ஏப்ரல், 2020

விருகை நாதன் மறைவு

விருகம்பாக்கம் பெரியார் பெருந்தொண்டர் நாதன் மறைந்தாரே!


குடந்தையைச் சேர்ந்தவரும், விருகம்பாக்கத்தில் நீண்ட காலமாகக் குடியிருந்து கழகப் பணிகள் ஆற்றியவரும், கழகப் பாடல்களை மேடைகளில் கம்பீரமாகப் பாடி வந்தவருமான நாதன் (வயது 83) அவர்கள் நேற்று (7.4.2020) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கடைசி மூச்சு அடங்கும்வரை கழகப் பணியில் ஆர்வம் கொண்டவர் அவர்.

அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

- கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

8.4.2020

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக முன்னோடி அய்யா விருகை நாதன் அவர்கள் 7.4.2020 மாலை 3.00 மணிக்கு மறைவுற்றார். 8.4.20 முற்பகல் 10.00 மணி அளவில் விருகம்பாகத்திலுள்ள அவரது இல்லத்திற்கு சென்று தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அவரது உடல்மீது கழகக் கொடி போர்த்தி மரியாதை செலுத்தினார். உடன் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் சி. செங்குட்டுவன்,  துணைச் செயலாளர் சா. தாமோதரன் மற்றும் குடந்தை புவனேந்திரன் மரியாதை செலுத்தினர். இறுதி நிகழ்வு முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற்றது.

- விடுதலை நாளேடு, 8.4.20

சனி, 28 செப்டம்பர், 2019

பட்டினப்பாக்கம் மு.குணசுந்தரி மறைவுக்கு கழகத்தின் சார்பில் மரியாதை



தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன்  சகோதரியும், பெரியார் திடல் பணித் தோழர் மு.பவானியின் தாயாருமான மு.குணசுந்தரி (வயது 62) அவர்கள் 26.9.2019 அன்று இரவு மறைவுற்றார். மறைவு தகவல் அறிந்ததும் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் நேரில் சென்று மு.குணசுந்தரி உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். பெரியார் திடல் பணித் தோழர்களும் இறுதிமரியாதை செலுத்தினர். (27.9.2019)

- விடுதலை நாளேடு, 28. 9 .19

திங்கள், 29 ஏப்ரல், 2019

மானமிகு வசந்தி ஸ்டான்லி மறைவு: கழகத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது



சென்னை, ஏப்.28 தி.மு.க.வைச் சேர்ந்த மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் மானமிகு வசந்தி ஸ்டான்லி (வயது 56) அவர்கள் நேற்று (27.4.2019) இரவு 11 மணியளவில் உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறைவுற்றார்.

அவரின் மறைவு தகவல் அறிந்ததும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியூர் நிகழ்ச்சியில் இருந்த நிலையில் சகோதரி வசந்தி ஸ்டான்லி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை கொடுத்திருந்தார்.

இன்று (28.4.2019) காலை 10 மணிய ளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள   லாயிட்ஸ் காலனி ஏ3 இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வசந்தி ஸ்டான்லி அவர்களின் உடலுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகி யோர் கழகத் தலைவரின் சார்பில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி, அவரது  குடும்பத்தாருக்கும், அவரது சகோ தரர் கணேஷ் அவர்களுக்கும் கழகத் தலைவர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையை கொடுத்து ஆறுதல் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில் தென் சென்னை மாவட் டக் கழகத் தலைவர் இரா. வில்வநாதன், துணைத்தலைவர் மயிலை  சேதுராமன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, விருதுநகர் மாவட்ட தலைவர் இல. திருப்பதி, விமல் குமார், ஆனந்த் ஆகியோரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

மானமிகு வசந்தி ஸ்டான்லி அவர் களின் மறைவு தகவல் அறிந்ததும் திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வசந்தி ஸ்டான்லி அவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திமுக வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே. சேகர் பாபு, பேராசிரியர் தமிழச்சி தங்கபாண்டியன், மேனாள் காவல்துறை அதிகாரி சந்திர சேகர், துறைமுகம் காஜா, எழும்பூர் தேவநிதி, ஈரோடு இறைவன் உள்ளிட்ட பலர் வசந்தி ஸ்டான்லி உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
- விடுதலை நாளேடு, 28.4.19