அய்ஸ் அவுஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அய்ஸ் அவுஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 17 மே, 2026

கழக ‘உரையாடல் குடிலில்’ நிரந்தர கழக நெகிழித்திரை வைக்கப்பட்டது (அய்ஸ் அவுஸ் பகுதி)

 

திராவிடர் கழகம்

திருவல்லிக்கேணி – அய்ஸ் அவுஸ் பகுதி கழகத்தின் சார்பில் 12.5.2026 மாலை 6:00 மணி அளவில் அன்னி பெசன்ட் சாலை, இருசப்ப தெரு சந்திப்பில்  (பார்த்தசாரதி கோவில் தெற்கு நுழைவு வாயில் எதிரில்) பகுதி கழக ‘உரையாடல் குடிலில்’ நிரந்தர கழக நெகிழித்திரை வைக்கப்பட்டது. தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, ,மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.அன்பு, எம்.டி.சி. செல்வம், தர்மா, உதயா  ஆகியோர் கலந்து கொண்டனர்.

- விடுதலை நாளேடு,17.05.26


புதன், 6 மே, 2026

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் படங்கள் இரா.வில்வநாதன் திறந்து வைத்தார்

திராவிடர் கழகம்

திருவல்லிக்கேணி கழக ஏற்பாட்டில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதியில் அன்னி பெசன்ட் சாலை, இருசப்ப தெரு மற்றும் கஜபதி தெரு சந்திப்பில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் படங்கள் அடங்கிய சுவர் விளம்பர ஓவியத்தை, காரல் மார்க்ஸின் பிறந்த நாளான 05.05.2026 ஆம் நாள் மாலை 5.30 மணி அளவில் தென் சென்னை மாவட்ட கழகச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தலைமையில், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் திறந்து வைத்தார். பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ. ராகவன், மாவட்டத் துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், சூளைமேடு நல். இராமச்சந்திரன், எம்.டி.சி. இராஜேந்திரன், ஆட்டோ சேகர், தர்மா, உதயா, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.அன்பு மற்றும் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

- விடுதலை நாளேடு, 06.05.2026


செவ்வாய், 25 நவம்பர், 2025

தென்சென்னை மாவட்டக் கழக சார்பில் முதல் தவணையாக ரூ.10 லட்சம் வழங்க கலந்துரையாடலில் முடிவு


தமிழ்நாடு
சென்னை, நவ. 25- தென் சென்னை மாவட்ட கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 22.11.2025 அன்று மாலை 6 மணி அளவில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ், கஜபதி தெருவில் உள்ள ஆர்.வீ. ஆட்டோ ஒர்க்ஸ் அருகில், மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்த சாரதி முன்னிலையிலும் நடை பெற்றது. மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன் கடவுள் மறுப்பு கூறினார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம் பெரியார் உலகம் நிதி திரட்டுதல், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், தமிழர் தலைவர் ஆசிரியரின் 93ஆவது பிறந்த நாளை(டிசம்பர்- 2) சிறப்பாக கொண்டாடுதல் குறித்து நோக்க உரையாற்றினார்.

நோக்க உரையின் அடிப்படையில் பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ. ராகவன், துணைச் செயலாளர் கரு. அண்ணாமலை, அரும்பாக்கம் சா. தாமோதரன், மயிலை சோ.பாலு, எம்.டி. சி. சு.செல்வம், வெ.கண்ணன், இளைஞர் அணி துணைத் தலைவர் அ.அன்பு, இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா. மாரிமுத்து, மந்தைவெளி எ. பன்னீர்செல்வம், தரமணி ம.ராஜு ஆகியோர் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

கவியருவி ஈரோடு தமிழன் பன், தாம்பரம் பெரியார் பெருந் தொண்டர் தி.இரா.ரத்தினசாமி, அவரது இணையர் ர.ஆதிலட்சுமி மற்றும் பெரியார் பெருந்தொண்டர் மயிலை ந.கிருஷ்ணன் ஆகியோரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

‘பெரியார் உலகம்’ கட்டுமான நிதிக்கு  தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் நன்கொடை வசூல் செய்து தருவதென ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது ஆண்டு (டிசம்பர்-2) பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்துவது எனவும்,

கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்து வழங்குதல் மற்றும் கழகப் பரப்புரைப் பணிகளை தீவிரப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

பெரியார் உலகம் நிதி திரட்டுவதற் காக மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நிறைவாக இளைஞர் அணி துணைத் தலைவர் அ.அன்பு நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு, 25.11.25


புதன், 30 ஜூலை, 2025

பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி அளிப்பது செங்கல்பட்டு மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்க முடிவு தென்சென்னை கூட்டத்தில் தீர்மானம்


சென்னை, ஜூலை30– பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி அளிப்பது எனவும், செங்கல்பட்டு மாநாட்டிற்கு வாகனங் களில் சென்று பங்கேற்பது என்றும் தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல்  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது,

27.07.2025, ஞாயிற்றுக் கிழமை, முற்பகல் 11.00 மணிக்கு திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதி கஜபதி தெருவில் உள்ள ஆர்.வீ.ஆட்டோ ஒர்க்ஸ் வாயிலில் தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல்  கூட்டம் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

‘பெரியார் உலகம்’  நிதி திரட்டல், செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க  நூற்றாண்டு நிறைவு மாநாடு மற்றும் ‘குடிஅரசு இதழ்’ நூற்றாண்டு நிறைவு விழா, ‘விடுதலை ஏடு’ சந்தா சேர்த்தல், இயக்க பணிகள் குறித்து துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை, இளைஞரணி மாவட்ட செயலாளர் பெரியார் யுவராஜ், துணைத் தலைவர் அ.அன்பு, துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, பகுதி கழக பொறுப்பாளர்கள் சூளைமேடு நல்.இராமச் சந்திரன், இராயப்பேட்டை கோ.அரிகரன், எம்.ஜி.ஆர்.நகர் கண்ணன் ஆகியோர் கருத்துகளையும் செயல் திட்டங்களையும் கூறினர்.

மாநில  இளைஞரணி  துணைச் செயலாளர் சோ.சுரேஷ் செயல் திட்டங்கள் வகுப்பது குறித்தும், குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயலாற்றுவது  குறித்தும் விளக்கி உரையாற்றினார்.

அய்ஸ் அவுஸ் உதயா, மா.இனியவள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

‘பெரியார் உலகம்’  நிதியை பெருமளவில் திரட்டி தருவது என்றும்,  செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க  நூற்றாண்டு நிறைவு மாநாடு மற்றும் ‘குடிஅரசு இதழ்’ நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு பெருமளவில் வாகனங்களில் சென்று பங்கேற்பது என்றும், மாநாடு குறித்து சுவர் விளம்பரம் செய்தல், நெகிழி திரை வைத்தல்,  தெருமுனைக் கூட்டம் நடத்தி பரப்புரை செய்வது என்றும், ‘விடுதலை ஏட்டிற்கு’ சந்தாக்களை சேர்த்தல் என தீர்மானிக்கப்பட்டது.

இறுதியில் கோட்டூர் புரம் ச.தாஸ் நன்றி கூறினார்.


சனி, 30 மார்ச், 2024

தென் சென்னை கழக மாவட்டம் திருவல்லிக்கேணி, அய்ஸ் அவுஸ் பகுதியில் "இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் - ஏன்?" “தெருமுழக்கம் பெருமுழக்கம் ஆகட்டும்” பரப்புரைக் கூட்டம்


தென் சென்னை கழக மாவட்டம் திருவல்லிக்கேணி, அய்ஸ் அவுஸ் பகுதியில் “தெருமுழக்கம் பெருமுழக்கம் ஆகட்டும்” பரப்புரைக் கூட்டம்

விடுதலை நாளேடு
Published March 30, 2024

திருவல்லிக்கேணி, மார்ச் 30- தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் திரு வல்லிக்கேணி அய்ஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள அன்னி பெசன்ட் சாலை மற்றும் இரு சப்ப தெரு இணையும் இடத் தில் 22.03.2024 மாலை 6.30 மணி அளவில் அன்னை மணி யம்மையாரின் 105 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ”இந் தியா கூட்டணி வெல்ல வேண் டும் ஏன்?’ “தெரு முழக்கம் பெரு முழக்கமாகட்டும்” என்கின்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை கூட்டம், தென் சென்னை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ச. மகேந்திரன் தலை மையிலும் தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன் மாவட்ட துணைச் செயலாளர் சா. தாமோதரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் செ. ர.பார்த்தசாரதி வரவேற்புரை ஆற்றினார்.
கழக துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச. இன்பக்கனி தொடக்க உரை யாற்றினார்.

கழக மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரை ஞர் பா.மணியம்மை முதன்மை உரையாற்றினார். அவரின் உரைக்கு பின் கிராமப் பிரச் சாரக் குழு கழக மாநில அமைப் பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன் சிறப்புரையாற்றி னார்.
அவரது உரையில்; “தமிழ் நாடு ஆளுநர் அவர்கள், தமிழ் நாடு அரசு சொல்வதை செய்ய மாட்டேன்; உன்னால் முடிந் ததை செய் என்றார்; உச்ச நீதிமன்றம் கட்டளை இட்ட பிறகும் அடம் பிடித்தார் ஆளு நர்! மீண்டும் உச்சநீதிமன்றம் கண்டித்ததற்கு பிறகு தமிழ்நாடு அரசுக்கு பணிந்தார் ஆளுநர், இத்தனை அவமானங்களுக்கு பிறகு மீண்டும் அமைச்சர் க.பொன்முடி அவர்களுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.

ஒன்றிய அரசு யாரை அனுப் பினாலும் அவரை பணிய வைப்பதில் சிறந்தவர் நமது முதலமைச்சர் மு.க .ஸ்டாலின். திட்டமிட்டு தமிழ்நாட்டு மாணவர்களை மருத்துவம் படிக்க விடாமல் செய்ய மாநில பாடத்திட்டத்தில் கேள்வி கேட்காமல், சிபிஎஸ்சி பாடத் திட்டத்தில் கேள்விகளை கேட்கும் வகையில் நீட்டைக் கொண்டு வந்தார்கள்.
நமது மருத்துவ கட்ட மைப்பு இந்தியாவிலேயே சிறந்த கட்டமைப்புடையதா கும். தமிழ்நாட்டு மருத்துவர் கள் சிறந்த முறையில் மருத்து வம் பார்க்கிறார்கள். வெளி மாநில நோயாளிகள் தமிழ் நாட்டிற்கு வந்து மருத்துவம் பார்த்துக் கொண்டு செல்கிறார் கள். தமிழ்நாட்டு மருத்துவர் கள் இந்த நோயை சரி செய்ய முடியாது என்று கூறிவிட் டால், எந்த நாட்டிற்கு சென்றா லும் அந்த நோயை சரி செய்ய முடியாது; அந்த அளவிற்கு கெட்டிக்காரர்கள் தமிழ் நாட்டு மருத்துவர்கள்.

உயர்கல்வியில் இந்தியாவி லேயே தமிழ்நாடு முன்னணி யில் உள்ளது. ஆல் இந்தியா டாப்பர்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளனர்.
நாம் பிஜேபி என்கிற பார்ப் பன ஜனதா கட்சியை தோற் கடிக்க வேண்டும்! இந்தியா கூட்டணி வென்று இந்தியாவே திராவிட மாடல் ஆட்சியாக ஆகப்போகிறது என்று நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்கள்.
நீட்டை ஒழிக்கவும், ஜிஎஸ் டியை ஒழித்துக் கட்டவும், பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவைகளின் விலையை குறைக்கவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், விவசாய பொருள்களின் குறைந்த பட்ச ஆதார விலையை நிர் ணயிக்கவும், இந்தியா முழுக்க பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கவும், பெண்க ளுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கவும், தேசிய அடிமட்ட (குறைந்தபட்ச) நாள் கூலியை ரூ.179லிருந்து ரூ400ஆக உயர்த் தவும், தேசிய ஊரக 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக மாற்றவும் நாள் கூலியை ரூ400 ஆக உயர்த்தவும் இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கை மூலம் உறுதி அளித்துள்ளது. கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது.

அமையப்போகிற ஆட்சி, கூட்டணி ஆட்சியாக அமைய விருக்கிறது. ஆகையால் அனை வரும் இந்தியா கூட்டணியை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்!
தென் சென்னை நாடாளு மன்ற இந்தியா கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனை ஆதரித்தும், அதேபோல் மத்திய சென்னை யில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்தும் உதயசூரியன் சின்னத்தில் வாக் களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள்.” என்று கூறினார்.
மாமன்ற உறுப்பினர் மங்கை ராஜ்குமார் மற்றும் கேரள என்.ரவி (திராவிட முன் னேற்றக் கழக 120ஆ வட்ட செயலாளர்) வருகை தந்து சிறப்பித்தனர். உரையாற்றிய வர்களுக்கு பயனாடை அணி வித்து சிறப் பிக்கப்பட்டது.

துணைப் பொதுச்செயலா ளர் வழக்குரைஞர் ச. பிரின்சு என்னாரசு பெரியார், மாநில தொழிலாளர் அணி பொரு ளாளர் கூடுவாஞ்சேரி இராசு, தென் சென்னை மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.மாரியப்பன், மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர் மு. சண்முகப்பிரியன், தென் சென்னை மாவட்ட இளைஞ ரணி செயலாளர் ந.மணிதுரை, துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, செய. குசேலன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி, மாவட்ட மகளிர் அணி தலைவர் வி.வளர்மதி, செயலாளர் பி.அஜந்தா, பெரியார் சுயமரி யாதை திருமண நிலைய இயக் குநர் பசும்பொன், மா.தமிழரசி, ஜெ.சொப்பன சுந்தரி, மு.பாரதி, வி.சகானாப்பிரியா, ஜெயசங்கரி, மயிலை ஈ.குமார், கோ. தங்கமணி, தங்க. தன லட்சுமி, வடசென்னை மகளிர் பாசறை தலைவர் த.மரகதமணி, ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் நா.பார்த்திபன், இரா.அருள், க.செல்லப்பா, எஸ். செல்வம், ச.இன்பத்தமிழன், உதயசூரியன், மு.திருமலை, இராயப்பேட்டை கோ.அரி, கா.சுந்தர், எ.தினேஷ்குமார், பேரறிவன் சேய், வை.கலையர சன், உடுமலை வடிவேலு, அசோக், இனியன், திராவிட முன்னேற்றக் கழக 120அ வட்ட தோழர்களும் பொதுமக் களும் கலந்து கொண்டு கூட் டத்தை சிறப்பித்தனர்.
இறுதியாக எஸ்.அப்துல்லா நன்றி கூறினார். கூட்டம் முடிந்த பின் வந் திருந்த அனைவருக்கும் சிற் றுண்டி வழங்கப்பட்டது.

-------++++++-----+++++-----+++++----++++--

புதன், 27 மார்ச், 2024

அய்ஸ் அவுஸ் அன்புவின் உடல் நலம் விசாரிப்பு


விடுதலை நாளேடு,
Published March 27, 2024

‘விடுதலை’ நாளேட்டை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இல்லம் உள்பட முக்கியமானவர்களின் இல்லம் மற்றும் அலுவலகம் தேடி நேரில் சென்று, ‘விடுதலை’ நாளேட்டை சேர்ப்பித்து வந்த அய்ஸ் அவுஸ் ‘விடுதலை’ அன்பு சிறிது காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நேற்று (26.03.2024) நண்பகல் நேரில் அவரது இல்லம் சென்று உடல் நலம் விசாரித்தார். உடன் தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் சென்றிருந்தார்.

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

இரா.பிரபாகரன் - சா.அஜந்தா வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா!

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (289)

மார்ச் 16-31,2022

இந்துத்வா எதிர்ப்பை மீறி கீதையின் மறுபக்கம் மலேசியாவில் வெளியீடு!

கி.வீரமணி

கட்டுரையின் ஒரு பகுதி...




தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் வில்வநாதனின் சகோதரரின் மணவிழா சென்னை அய்ஸ் அவுஸ் பகுதியில் 12.7.1998 அன்று நடைபெற்றது. அவ்விழாவிற்கு தலைமையேற்று, கு.இராமசாமி _ பவுனம்மாள் ஆகியோரின் செல்வன் இரா.பிரபாகரனையும், சூனாம்பேடு ஆ.சாரங்கன் _ மஞ்சளழகி ஆகியோரின் செல்வி சா.அஜந்தாவையும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ள வைத்து மணவிழாவினை நடத்தி வைத்தேன். அங்கு உரையாற்றுகையில், “பொதுமக்கள் சடங்கு, சம்பிரதாயம், மதம், கடவுள் மூடநம்பிக்கைகளை பின்பற்றக் கூடாது என்று வலியுறுத்தியும், வேலைவாய்ப்பில் ஆண்களும், பெண்களும் சமவிகிதத்தில் இருக்க வேண்டும்’’ என்பதை விளக்கியும் உரையாற்றினேன்.