ஞாயிறு, 30 அக்டோபர், 2022
செவ்வாய், 12 பிப்ரவரி, 2019
சென்னையில் வருணாசிரம, சனாதனத்தை வலியுறுத்துகின்ற மனுதர்மம் எரிப்பு
சுயமரியாதை உணர்வுத் தீ கொழுந்துவிட்டது!
சென்னை, பிப். 7- திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மனுதர்ம எரிப்புப் போராட்டம் எழுச்சியு டன் நடைபெற்றது. சென்னையில் இன்று (7.2.2019) காலை நடைபெற்ற மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் தலைமையேற்று 54ஆம் முறையாக கைது செய்யப் பட்டார். கழகத் தலைவருடன் ஏராளமான தோழர்கள் சிறைபுகுந்தனர். தமிழகம் முழுவதும் மனுதர்மத்தை கொளுத்திய கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மனுதர்ம எரிப்புப் போராட்டம் நடத்தப்படம் நேரம் முற்பகல் 11 என்றே குறிப்பிடப்பட்ட நிலையில், சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அணி அணியாக தோழர்கள் ஆர்வத்துடன் திரண்டனர். கழகக் கொடி களுடன் கருஞ்சட்டைப் போர்ப்படையின் சிப்பாய்களாக குடும்பத்துடன் சிறையேக திரண்டார் கள். பெரியார் திடலில் அமைந்துள்ள 21 அடி உயர தந்தை பெரியார் சிலை முன்பாக குழுமினர்.
மனுதர்மம் எரிப்புப் போராட்டம் குறித்து திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 2.2.2019 அன்று அறிக்கை விடுத்தார். தமிழகமெங்கும் மனுதர்மம் எரிப்போர் பட்டியல் தயாரானது. காவல்துறை அனுமதி மறுத்தாலும், தடையை மீறி, மனுதர்மத்தை எரித்து சிறையேகிட ஆயத்தமானார்கள் இருபால் தோழர்கள்.
சுயமரியாதை உணர்வு கொந்தளிப்பின் வெளிப் பாடாக மனுதர்ம எரிப்புப்போராட்டம் வெடித்துள் ளது. ஆரிய ஆதிக்கத்துக்கு சாவுமணி அடிக்கப்பட்டது. தந்தை பெரியார் கொளுத்திய சுயமரியாதைத் தீ கனன்றுகொண்டு பலமுறை மனுதர்மத்தை எரித்து சாம்பலாக்கி வருகிறது. 7.2.2019 நாளான மனுதர்மம் இன்றும் சாம்பலாக்கப் பட்டது. சென்னையில் பெரியார் ஈ.வெ.ரா.சாலையில் அன்னை மணியம்மையார் சிலை அருகில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மனுதர்ம எரிப்புப் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. கழகப்பொறுப்பாளர்கள், இருபால் கழகத்தோழர் கள் மனுதர்ம எரிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டு அணிஅணியாக காவல்துறை வாகனத்தில் ஏற்றப்பட்டனர். சென்னை மண்டல கழக மாவட்டங்களாகிய தென் சென்னை, வடசென்னை, தாம்பரம், சோழிங்க நல்லூர், திருவொற்றியூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி மாவட்டங்களி லிருந்து போராட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
மனுதர்ம எரிப்புப்போராட்டம் அரசியல் ஆதாயத் துக்கான போராட்டமல்ல. சமூகத்தில் மாற்றத்தை ஏற் படுத்துகின்ற உரிமைப்போராட்டம் என்பதை நிரூபிக் கின்ற வகையில், கருப்பு மெழுகுவர்த்திகளாம் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் பங்கேற்றார்கள்.
மனுதர்மத்தை கழகம் கொளுத்திச் சாம்பலாக்குவது முதல் முறையல்ல. மக்களின் தன்மான உணர்வு பொங்க, ஆரிய, சனாதனத்தின் ஆதிக்கத்தை வேரோ டும், வேரடி மண்ணோடும் கிள்ளி எறிந்திட வேண் டும் என்றால், வருணாசிரமதர்மத்துக்கு அடிப்படை யான மனுதர்மம் எரித்து சாம்பலாக்கப்பட வேண்டும் என்று களம் கண்டனர் தோழர்கள்.
தமிழர் தம் மான மீட்பு இயக்கத்தின் தலைவர் வன்முறையை தூண்டவில்லை. சுயமரியாதை உணர் வைத் தட்டி எழுப்பியுள்ளார். அறவழியில் போராட் டத்துக்கான அழைப்பை விடுத்தார். கழகத் தலைவரின் ஆணையின்படி, இராணுவத்தையும் தாண்டிய கட் டுப்பாடு காக்கின்ற கழகத் தோழர்கள் பெருவிருப்புடன் சிறையேகப் புறப்பட்டனர். வில்லிலிருந்து புறப்பட்ட கணைகளாக, சீறிப்பாயும் புலியென வீறு கொண்டு புறப்பட்டது இருபால் கருஞ்சட்டைப் பட்டாளம்.
தமிழகம் முழுவதுமிருந்து வருணாசிரம மனுதர் மம் சாம்பலான செய்தி குவிந்துகொண்டிருக்கிறது. ஆரிய சனாதனம் ஆட்டம் கண்டு வருகிறது. கழகத் தோழர் களால் சிறைச்சாலைகள் நிரப்பப்பட்டு வருகிறது. கழகத் தலைவரின் கட்டளைக்கிணங்க, தன்னல மறுப்புடன் கருப்பு மெழுகுவர்த்திகள் களத்தில் அணி வகுத்தார்கள். மனுதர்ம எரிப்பு ஆரிய ஆதிக்கத்தைத் தகர்த்து, சமத்துவம் மற்றும் பெண்ணுரிமை மீட்புக் கான போராட்டம் வெடித்துக்கிளம்பியது.
ஊரெங்கும் இதே பேச்சு. ஆரிய வலையில் சிக்குண் டவர்களுக்கும் சேர்த்து பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்சப் பட்டுள்ளது. ஆரிய, ஆர்.எஸ்.எஸ். கூட்டம் இருக்கும் இடம் தெரியாமல் ஓடி ஒளிந்துகொண்டது.
மனு தர்மமா? அது என்ன? என்று கேட்பவர் களுக் கும் கழகத்தின் போராட்டத்தால் அனலென சுயமரி யாதை உணர்வுத் தீயாகப் பற்றிக்கொண்டது.
தமிழக மாநில உரிமைகளைப்பறித்து தமிழர்களை வஞ்சித்து வரும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங் கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் எளிதில் மக்களை சந்தித்துவிட முடியுமா?
ஏமாளிகளாக தமிழர்கள் இறுமாந்து இருந்தால் அரசியலிலும் அறுவடை செய்துவிடலாம் என்று அதற் காக வஞ்சகக் காவிக்கூட்டம் ஆயத்தமாகிவரும் சூழ லில், ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் ஆணிவேர் தகர்க்கப்பட் டுள்ளது. கழகத் தலைவரின் கட்டளை யால் மனுதர்மம் சாம்பலாக்கப்பட்டது. மனுதர்மத்தை அரசமைப்புச் சட்டமாக வேண்டும் என்று கூறும் மனுதர்ம சங்பரிவார் பாஜக கூட்டத்துக்கு இது ஒரு தக்க பதிலடியாகும்.
சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அமைந் துள்ள 21 அடி உயர தந்தை பெரியார் சிலை அருகிலி ருந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் கழ கத் தோழர்கள் மனுதர்மத்தை எதிர்த்து முழக்கமிட்ட படி ஊர்வலமாக சென்றனர். ஈ.வெ.கி.சம்பத் சாலை வழியே பெரியார் ஈ.வெ.ரா. சாலையை அடைந்து அன்னை மணியம்மையார் சிலை அருகில் தோழர்கள் குவிந்தனர். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.இ.இன் பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், திராவிடர் இயக்க ஆய்வு மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், தலைமைக்கழக சொற்பொழிவாளர் பெரியார் செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மனுதர்ம நூலில் கூறப்பட்டுள்ள பெண்களை இழிவு படுத்துகின்ற பகுதிகளையும், வருணாசிரம ஜாதி இழிவு களைக் கொண்டுள்ள பகுதிகளையும் சுட்டிக்காட்டி, மனுதர்ம நூல் எரிக்கப்பட வேண்டிய தன் அவசியம் குறித்தும், போராட்ட நோக்கங்கள் குறித்தும் எடுத்து ரைத்தார். அதன்பின்னர் கழகத் தலைவர் மனுதர்ம நூலை எரித்தார். கழகத் தோழர்கள் எழுச்சி முழக்கங் களுடன் மனுதர்மத்தை தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்கள் 54ஆம் முறையாக கைது செய்யப்பட்டார். காவல்துறையின் வாகனங்களில் அனைவரும் ஏற் றப்பட்டு, சென்னை புரசைவாக்கம் அழகப்பா பள்ளி அருகில் உள்ள கம்மாவர் மண்டபத்தில் அடைக்கப் பட்டனர். தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்க ளில் மனுதர்ம எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. மனுதர்மத்தை எரித்து கழகத் தோழர்கள் கைதாயினர்.
சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் சென்னை மண்டல கழகத்தின் கழக மாவட்டங்களிலிருந்து ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டு கைதானார்கள்.
சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் மனுதர்ம சாஸ்திர நகலை எரிக்க எழுந்தது காண் கருஞ்சட்டைப் படை!
- விடுதலை நாளேடு, 7.2.19
தமிழர் தலைவர் 54 ஆம் முறை கைது; தீ மூட்டி எரித்தார் மனுதர்மத்தை!
ஜாதி அழியவேண்டும்; தீண்டாமை ஒழியவேண்டும்; பெண்கள் உரிமைப் பாதுகாக்கப்படவேண்டும்
இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மமா?
வேரடி மண்ணோடு வீழ்த்துவோம்! வீழ்த்துவோம்!!
மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்!
சென்னை பிப்.7 இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக, மீண்டும் மனுதர்மத்தைக் கொண்டு வருவோம் என்று சொல்லுகின்ற எண்ணம் வேரடி மண்ணோடு அகற்றப்படவேண்டும் என் பதற்காகத்தான் இன்றைய இந்தப் போராட்டம். இந்தப் போராட்டம் ஒரு தொடக்கம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இன்று (7.2.2019) சென்னையில் நடைபெற்ற மனுதர்ம எரிப்புப் போராட்டத்திற்குத் தலைமை யேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவ்விவரம் வருமாறு:
மனுதர்மம்தான் ஜாதியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது
உலகில் எங்கும் இல்லாத கொடுமையான ஜாதிய அமைப்பு, வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்றுகின்ற இந்து மதம், அதனுடைய மிக முக்கியமாக சாஸ்திரமாக இருக்கக்கூடிய மனுதர்மம்தான் ஜாதியைப் பாதுகாத்துக் கொண் டிருக்கின்றது.
மனுதர்ம அடிப்படையில்தான், இந்து லா சட்டங்கள் இருக்கின்றன. அந்த மனுதர்மத்தைப் பொருத்தவரையில், உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி, தொடக்கூடிய ஜாதி - தொடக்கூடாத ஜாதி, பார்க்கக்கூடாத ஜாதி - பார்க்கக்கூடிய ஜாதி என்று பிரித்திருப்பதோடு மட்டுமல்லாமல், பெண்களை மிகக் கேவலமாக சித்தரித்து, பிறவியில் ஆண்கள் எஜமானர்கள்; பெண்கள் அடிமைகள்; எந்தக் காலத்திலும் பெண்கள் சுதந்திரமாக இருக்கத் தகுதியற்றவர்கள்; கல்வி அறிவு பெறக்கூடாதவர்கள் என்பதை வலியுறுத்துவதோடு, சூத்திரர்கள் என்று மிக பெரும்பாலான உழைக்கின்ற மக்களை, காலங்காலமாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டு களாக ஆக்கி வைத்துள்ளது மனுதர்மமே! அதனுடைய அடிப்படையில்தான் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறார்கள்.
மனுதர்மம் என்ன சொல்லுகிறது?
8 ஆவது அத்தியாயம்; 415 ஆம் சுலோகத்தில் மனுதர்மத்தில் உள்ள செய்தியை உங்களுக்குச் சொல்கிறோம்.
யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட் டவன்
பக்தியினால் வேலை செய்கிறவன்
தன்னுடைய தேவடியாள் மகன்
விலைக்கு வாங்கப்பட்டவன்
ஒருவனால் கொடுக்கப்பட்டவன்
குலவழியாகத் தொன்றுதொட்டு வேலை செய்கிறவன்
குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என்று சூத்திரர்களுக்குப் பொருள் சொல்லியிருக் கிறார்கள்.
இதைவிட மானக்கேடு, இதைவிட அவ மானம் வேறு இருக்க முடியுமா?
ஆகவேதான், மனுதர்மம் ஜாதியைப் பாதுகாப்பது, நம்முடைய பெரும்பாலான உழைக்கின்ற மக்களான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று பெயர் சொல்லி, அவர்களை காலங்காலமாக அடக்கி வைத்ததினுடைய விளைவுதான் - நம்முடைய மக்கள் இந்த மண்ணுக்குரியவர்களாக, பெரும் பான்மை மக்களாக இருந்தும்கூட, அவர்கள் மேலே வர இயலாத ஒரு சூழல் அடக்குமுறை ஏற்பட்டு இருக்கிறது.
அதுமட்டுமல்ல நண்பர்களே, இன்னொரு மிக முக்கியமான ஒரு செய்தி; மனுதர்மத்தை எரிப்பதற்குக் காரணம் என்னவென்று உங் களுக்குச் சொல்கிறேன்.
மனுதர்மத்தைத்தான் அரசியல் சட்டமாகக் கொண்டு வரவேண்டுமாம்!
நாளைக்கு மீண்டும் பெரும்பான்மையோடு மத்தியில் மோடி அரசு - பா.ஜ.க. அரசு - ஆர்.எஸ்.எஸ். அரசு ஆட்சிக்கு வருமேயானால், அவர்கள் ஏற்கெனவே சொன்னபடி, அரசியல் சட்டத்தை எடுத்துவிட்டு, மதச்சார்பின்மை, ஜனநாயகம், சோசலிசம் ஆகியவற்றை சொல் லுகின்ற இன்றைய அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, இந்த மனுதர்மத்தைத்தான் அரசியல் சட்டமாக வைக்கவேண்டும் என்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள்; ஏற்கெனவே எழுதி வைத்திருக்கிறார்கள். அவர்களின் குரு நாதர் கோல்வால்கரும் அதைத்தான் சொல்லி யிருக்கிறார்.
எனவேதான், இந்த ஆபத்தை உணர்த்து வதற்காக, மனு அநீதி, மனுதர்மம் மனித தர்மத்திற்கு விரோதமானது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் தமிழ்நாடு முழுவதும் இந்த மனுதர்ம எரிப்பு நடைபெறுகிறது.
டில்லியிலுள்ள மாணவர்களும், இளைஞர்களும்...!
அண்மையில் டில்லிக்குச் சென்றபொழுது, அங்கே இருக்கின்ற மாணவர்கள், இளைஞர்கள் எல்லாம் இதுபற்றி கேட்டார்கள்; நாங்களும் பின்பற்றவிருக்கிறோம் என்று அவர்கள் தெளிவாகச் சொன்னார்கள்.
இங்கு வைத்தது ஜாதிக்கு வைத்த தீ!
வருணாசிரம தர்மத்திற்கு வைத்த தீ!
அநீதிக்கு வைத்த தீ!
எனவேதான், நாங்கள் பொதுச்சொத்துக்கு நாசமில்லாமல், பொது அமைதிக்குப் பங்கமில் லாமல், மிகத் தெளிவாக இங்கே ஒரு பக்கெட்டில் தண்ணீரைக் கொண்டு வந்து வைத்திருக்கிறோம்; இன்னொரு பக்கெட்டில் மணலைக் கொண்டு வந்து வைத்திருக்கிறோம்.
எங்களுக்கு ஜாதி அழியவேண்டும். தீண்டாமை ஒழியவேண்டும்
இந்த மனுதர்ம எரிப்பினால், அரசு உடை மைகளுக்கோ, பொதுமக்களுக்கோ எந்த விதமான இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் முன்னேற்பாடோடு தந்தை பெரியார் அவர்கள் எப்படி அமைதியாக எரிப்புப் போராட்டத்தினை நடத்துவார் களோ, அதேபோன்று இந்த எரிப்புப் போராட்டத்தினை நடத்தியிருக் கின்றோம். காவல்துறையை எதிர்ப்பது எங்கள் நோக்கமல்ல. தமிழக அரசின்மீதோ, மத்திய அரசின்மீதோ உள்ள வெறுப்பினாலும் அல்ல - எங்களுக்கு ஜாதி அழியவேண்டும். தீண்டாமை ஒழியவேண்டும்; பெண்கள் உரிமைப் பாதுகாக்கப்படவேண்டும். அதுமட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக, மீண்டும் மனுதர்மத்தைக் கொண்டு வருவோம் என்று சொல்லுகின்ற எண்ணம் வேரடி மண்ணோடு அகற்றப்படவேண்டும் என்பதற்காகத்தான் இன் றைய இந்தப் போராட்டம். இந்தப் போராட்டம் ஒரு தொடக்கம்! ஜாதியை ஒழிக்க, கடைசி அடையாளம் ஜாதிக்கு இருக்கின்ற வரையில், போராடு வோம், போராடுவோம், போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
வாழ்க பெரியார்! வாழ்க அம்பேத்கர்!!
வளர்க சமூக நீதி! ஒழிக ஜாதிகள்!!
நன்றி, வணக்கம்!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடையே கூறினார்.
- விடுதலை நாளேடு, 7.2.19