கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 ஆகஸ்ட், 2023

தென்சென்னை மாவட்டம்: திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதியில் தெருமுனைப் பிரச்சார கூட்டம்


13

திருவல்லிக்கேணி, ஆக.5 29.07.2023, சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் திருவல்லிக்கேணி, அய்ஸ் அவுஸ் பகுதியில் உள்ள இருசப்பன் தெரு - பெசன்ட் சாலை இணைவில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் திருவல்லிக்கேணி பகுதி இளை ஞரணி சார்பில் "வைக்கம் போராட்ட நூற்றாண்டு - முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் கல்வி வள்ளல் காமராசர் பிறந்தநாள் தெரு முனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ச.மகேந்திரன் கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராக வன் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார். தலைமை கழக அமைப்பாளர் தே.செ.கோபால், மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் சா.தாமோதரன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

மாநில இளைஞரணி துணைச் செய லாளர் மு.சண்முகப்பிரியன் தொடக்க உரையாற்றினார்.

கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன்   உரையாற்றும்பொழுது, தந்தை பெரியார் அறிஞர் அண்ணா முத்தமி ழறிஞர் டாக்டர் கலைஞர், கல்வி வள்ளல் காமராஜர் ஆகியோர் ஏற்படுத்திய சமூக மாற்றங்களையும், சாதனைகளையும் எடுத்துக் கூறி அதன் பயனால் தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் தன்மானம், பகுத்தறிவு, கல்வி அறிவு, வேலைவாய்ப்பு பெற்று சமூக உயர்நிலை அடைந்ததையும், மேலும் பல பயன்களை எடுத்துக் கூறியதுடன், தமிழ்நாடு முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் அவர்களின் சமூக தொண்டினையும், ஆட்சியை நடத்தும் பாங்கையும் விரி வாக எடுத்துக் கூறினார். மணிப்பூரில் நடக்கும் கொடுமைகளை எடுத்துக் கூறி, பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட தற்கு வன்மையானக் கண்டனத்தைப் பதிவு செய்தார். வாரிசு அரசியல் என்றால் என்ன? என்பதை விளக்கி, பிஜேபி தான் வாரிசு அரசியல் செய்கிறது என சுட்டிக் காட்டினார். மூடநம்பிக்கைகளை விளக்கி கூறி மக்களுக்கு பகுத்தறிவு ஊட்டும் வகையில் எழுச்சிமிகு உரையாற்றினார்.

சிறப்பு பேச்சாளர் தஞ்சை 

இரா. பெரியார் செல்வன் அவர்களுக்கு மாணவர் கழக மாநில அமைப்பாளர் வி.தங்கமணி பாராட்டி பயனாடை அணிவித்தார். பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் ஆ. வீரமர்த்தினி அவர் களுக்கு மாணவர் கழக செயலாளர் வீ.யாழ்ஒளி பயனாடை அணிவித்தார்.

தென் சென்னை மாவட்ட இளை ஞரணி தலைவர் துரை.அருண், இளை ஞரணி செயலாளர் ந.மணிதுரை, இளை ஞரணி துணைத் தலைவர் இரா.பிரபாக ரன், இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, மகளிரணித் தலைவர் வி.வளர்மதி, பி. அஜந்தா, வி. தங்கமணி, வி.யாழ்ஒளி, மா.சண்முகலட்சுமி, ச.மாரி யப்பன், வடசென்னை மாவட்ட செய லாளர் சு.அன்புசெல்வன், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச் செல்வன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், ச.சந்தோஷ், ஆலந்தூர் சிவா, ஒளிப்படக் கலைஞர் பா. சிவக் குமார், கா.சுந்தர், கோல்டு பாட்ஷா, அய்ஸ் அவுஸ் உதயா ஆகியோருடன் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் செவிமடுத்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் கோ.அரிகரன் நன்றி உரையாற்றினார்.






வியாழன், 13 ஏப்ரல், 2023

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து பொதுக் கூட்டம்



தமிழர் தலைவர், கனிமொழி எம்.பி. உள்ளிட்டவர்கள் பங்கேற்பு

சென்னை, ஏப். 13- மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணி சார்பில் நேற்று (12.4.2023) மாலை சைதை - தேரடி திடலில் அரசியல் சட்ட விதிகளை தொடர்ந்துமீறி வரும் ஆளுநர் ஆர். என்.ரவியைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடை பெற்றது.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட் டணி சார்பில் 12.4.2023 அன்று ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பதிலாக சைதை - தேரடி திடலில் மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டமாக நடைபெறும் என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டறிக்கை விடுத்திருந்தனர்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் பேச்சைக் கண்டித்தும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்பு தல் வழங்காதது, ஸ்டெர்லைட் பிரச் சினை குறித்தும், சனாதன ஆதரவு குறித்து, தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும் நேற்று (12.4.2023) மாலை சைதை நேரடி திடலில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கனிமொழி எம்.பி. தலைமையுரை

இப்பொதுக் கூட்டத்திற்கு, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் கனிமொழி தலைமை தாங்கி உரையாற்றுகையில்:

"தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநி லங்களில் ஆளுநர்கள் மூலம் பா.ஜ.க குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. மாநில அரசால் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களைக் கிடப்பில் போடும் ஆளுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆளுநருக்கு எதிரான இந்தப் பொதுக் கூட்டம் இதோடு நின்று விடாது. டில்லி வரை சென்று இந்தக் கூட்டம் போராடும். ஆளுநர் தனது அதிகாரம் என்னவென்று புரிந்து கொண்டு நடக்க வேண்டும். இல்லை யென்றால் பெரியார் மண் உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்.

ஆளுநர் பதவி வேண்டாம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் போரா டிக் கொண்டிருக்கிறது. எங்களின் தியாகங்களை, போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதை முதலில் ஆளுநர் நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியதுபோல் மற்ற மாநிலங்களிலும் பேரவையில் தீர் மானம் நிறைவேற்ற வேண்டும் என பா.ஜ.க அல்லாத மாநில முதலமைச் சர்களுக்கு நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவிற்கே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு வழிகாட்டும்" என தெரிவித்தார். 

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலா ளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சு.திரு நாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில பொதுச் செயலாளர் மும்மது அபுபக்கர், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி யின் தலைவர் தி.வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவா ஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் உள்பட தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங் கேற்று ஆளுநரை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர்.

இம்மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப் பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மணிக்கம், துணை செயலா ளர் வி.பி.மணி, காங்கிரஸ் கட்சி தளபதி பாஸ்கர், தி.மு.க. நாடாளுமனற் உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்டக் கழகப் பொருளாளர் கூடுவாஞ்சேரி மா.இராசு, பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் அ.வீரமர்த்தினி, சைதை தென்றல், ஆவடி மாவட்ட கழக அமைப்பாளர் உடுமலை வடிவேல், சைதை ரவி, சண்முகப்பிரியன், மு.இரா.மாணிக்கம், வடசென்னை மாவட்டத் துணைத் தலைவர் கி.இராமலிங்கம், துணை அமைப்பாளர் சி.பாசுகர், விடுதலை நகர் பி.சி.ஜெயராமன் மற்றும் கழகத் தோழர்கள், தி.மு.க. பகுதிச் செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ், ள்ளிட்ட திமுக மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்ற னர்.

சென்னை சைதைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சி முழக்கம்!


 அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடக்கும் ஆளுநர் ரவி

ஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்!

இல்லையெனில் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்; 

மக்களிடம் செல்லுவோம் - அவர்களைத் தயாரிப்போம்!

எல்லா மன்றங்களையும்விட அதிகாரமிக்கது மக்கள் மன்றமே!

1

சென்னை, ஏப்.13  அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மாக நடக்கும் ஆளுநர் ரவி; ஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும்! இல்லையெனில் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்; மக்களிடம் செல்லுவோம் - அவர்களைத் தயாரிப்போம்! எல்லா மன்றங்களையும்விட அதிகாரமிக்கது மக்கள் மன்றமே என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மதச்சார்பற்ற கூட்டணி சார்பில்

மாபெரும் கண்டனக் கூட்டம்!

நேற்று (12.4.2023) மாலை சென்னை சைதாப்பேட்டை தேரடித் திடலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன உரையாற்றினார்.

அவரது கண்டன உரை வருமாறு:

போரை அறிவித்தாலே வெற்றி பெறும் திராவிட மாடல் ஆட்சி!

சிறப்பு வாய்ந்த எழுச்சி நிறைந்த இந்தப் போராட்டக் களத்தில், திராவிட மாடல் ஆட்சி எப்பொழுதும் தோற்காது, என்றைக்கும் வெற்றி பெறும் - எப்படிப்பட்ட வெற்றியைப் பெறும் என்று சொன்னால், போரில்லாமலே வெற்றி பெறும்; போரை அறிவித்தாலே வெற்றி பெறும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இன்றைக்கு நடைபெறவேண்டிய மிகப்பெரிய ஓர் ஆர்ப்பாட்டம், போராட்டம் பொதுக்கூட்டமாக இந்த சைதைத் தேரடி யில் நடைபெறக்கூடிய இந்நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற் றிருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகப் பொரு ளாளர் அருமைச் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களே,

இந்த நிகழ்ச்சியில் நம் அனைவரையும் வரவேற்று சிறப்பிக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் அருமை நண்பர் ஆர்.எஸ்.பாரதி அவர்களே,

சைதைப் பகுதியில் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பொறுப்பாளர்களே,

மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கக் கூடிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக இங்கே உரையாற்றக்கூடிய அருமைச் சகோதரர் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் அவர்களே,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா ளர் அன்பிற்குரிய தோழர் பாலகிருஷ்ணன் அவர்களே,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அருமைத் தோழர் இரா.முத்தரசன் அவர்களே,

மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களே,

இளைஞர்களின் குரலாக...

எனக்கு முன்னால், இளைஞர்களின் குரலாக மிக வேகமாக உரையாற்றிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருமைத் தோழர் வேல்முருகன் அவர்களே,

இந்நிகழ்ச்சியில் எனக்கு முன் உரையாற்றி, விடை பெற்று சென்றுகொண்டிருக்கக் கூடிய திராவிட இயக் கத்தின் போர்வாள் 500 டன் அய்சையும்கூட பொருட் படுத்தாமல், மிகப்பெரிய அளவிற்கு தன்னுடைய லட்சியத்தை பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கக் கூடிய அருமைச் சகோதரர் வைகோ அவர்களே,

வெள்ளம்போல் திரண்டிருக்கக்கூடிய அனைத்துக் கூட்டணிக் கட்சித் தோழர்களே, திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர்களே, தாய்மார்களே, சகோதரிகளே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செய லாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கவிஞர் கனிமொழி அவர்களே,

நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களே,

மேடையில் அமர்ந்திருக்கக் கூடிய அருமைத் தோழர்களை, நேரத்தின் அருமை கருதி, அனைவரையும் விளித்ததாகக் கருதிக் கொள்ளவேண்டும் என்று அன் போடு வேண்டிக்கொண்டு என்னுரையைத் தொடங்கு கின்றேன்.

 பொதுக்கூட்டமாக மாற்றுவதற்கு 

என்ன காரணம்?

பெரிய அளவிற்கு இதனைப் பொதுக்கூட்டமாக மாற்றுவதற்கு என்ன காரணம்? என்பதை அருள்கூர்ந்து நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றம், நீங்கள் வாக்களித்துத்தான் இன்றைய ஆட்சி உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்துத்தான் இந்த ஆட்சி உருவாகி யிருக்கிறது.

அப்படி உருவாகிய ஆட்சி, செயல்படவேண்டுமா? இல்லையா?

சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலமாகத்தானே வாக்குறுதிகளை செயல்படுத்த முடியும்

எதற்காக நாம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்து, ஓர் ஆட்சியை நிறுவி, அந்த ஆட்சி, அத னுடைய ஒப்பற்ற முதலமைச்சராக, நம்முடைய முதலமைச்சர் திராவிட சமுதாயத்தினுடைய மானத்தை, உரிமையைக் காப்பாற்றுகின்ற மிகப்பெரிய பொறுப்பை ஏற்றிருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களு டைய தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது என்று சொன்னால், சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலமாகத் தானே வாக்குறுதிகளை செயல்படுத்த முடியும்.

அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து, இதுபோன்று பொதுப் பிரச்சினைகள் என்று சொன்னால், ஒரே வகை யில் சிந்திக்கின்றார்கள் என்பதற்கு அடையாளமாக, ஓரிருவர் தவிர, மிகப்பெரிய அளவிற்கு அடிமைகளாக  ஆகிவிட்டவர்களைத் தவிர, மற்ற அத்துணை பேரும், பெரும்பாலானோர்  நலத்தைப் பயக்கக்கூடிய, அத் துணை பேருக்கும் வாய்ப்புள்ள சட்ட வரைவுகள், மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுத்து, ஆதரவு தெரிவித்த பின்பு ஆளுநருக்கு அனுப்பப்படுகிறது.

ஆளுநருடைய கடமை என்ன?

அவர் எதற்காக ஆளுநராக இருக்கிறார்?

திராவிட இயக்கங்களுக்கு கொள்கை எப்பொழுதும் உண்டு; நிரந்தரமாக உண்டு!

அடிப்படையிலே, திராவிட இயக்கங்களுக்கு ஆளுநர் பதவியைப் பொறுத்து தொடக்கத்திலிருந்தே ஒரு கொள்கை உண்டு; அந்தக் கொள்கை எப்பொழுதும் உண்டு; நிரந்தரமாக உண்டு. இருந்தாலும், ஆளுநராக இருக்கிறவர்கள் சரியாகப் பயன்படவேண்டுமல்லவா?

ஆளுநர் பொறுப்பே தேவையில்லை - ஆளுநர் பதவியே தேவையில்லை என்பதுதான் நம்முடைய நிரந்தர நிலைப்பாடு.

சரி, பரவாயில்லை!

ஆளுநர் இருந்தால், அந்த ஆளுநர் தன்னுடைய கடமையை ஒழுங்காக, சிறப்பாக செய்யவேண்டும்.

நம்முடைய கோரிக்கை!

நம்முடைய விருப்பத்திற்கு அவர் செய்யவேண்டும் என்றுகூட நாங்கள் வாதாட  வரவில்லை.  மாறாக, அவர் எந்த  அரசமைப்புச் சட்டத்தின்மீது உறுதிமொழி எடுத் தாரோ, அந்த உறுதிமொழிக்கேற்ப அவருடைய கடமை யைச் செய்யவேண்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கை.

இது ஒரு விசித்திரமான கோரிக்கை.

அவருடைய கடமையை நினைவூட்டுவதற்கு ஓர் அரசாங்கம்; அவருடைய கடமையை நினைவூட்டு வதற்கு ஒரு சட்டமன்றம்.

அதில் மக்கள் பிரதிநிதிகள்; அனைத்துக் கட்சித் தலைவர்கள் - இப்படிப்பட்ட தலைவர்கள் ஏன் தேவைப் படுகின்றனர்?

அருமை நண்பர்களே, இதோ என் கையில் இருப்பது அரசமைப்புச் சட்டப் புத்தகம்.

சமூகநீதியில், சமத்துவத்தில் 

உறுதியாக இருந்தார் டாக்டர் அம்பேத்கர்!

பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச் சட்டம். அவர்தான் அதற்கு மிக முக்கியமான தத்துவம் கொடுத்து உயிர் கொடுத்தார், உரு கொடுத்தார். அவருக்கு விருப்பமில்லாத விஷயங் களும் உள்ளே இருந்ததை வெளிப்படையாக சொன் னார். ஆனால், அப்படி இருந்தும்கூட, அவர் தெளிவாக பல செய்திகளில் உறுதியாக இருந்தார். சமூகநீதியில் உறுதியாக இருந்தார். சமத்துவத்தில் உறுதியாக இருந்தார்.

அரசமைப்புச் சட்டத்தில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற தத்துவங்களை முதன்மைப்டுத்தி அடிப்படையானவற்றை அடிக்கட்டுமானப் பகுதிகளில் கொண்டு வந்து வைத்தார்கள்.

‘திராவிட மாடல்’ ஆட்சி; இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய ஆட்சி!

அவற்றையெல்லாம் நிறைவேற்றக் கூடிய ஆட் சிக்குப் பெயர்தான் இங்கு நடைபெறக்கூடிய ‘திராவிட மாடல்' ஆட்சி; இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய ஆட்சி.

அப்படிப்பட்ட நிலையில், இங்கே ஓர் ஆளுநர் டில்லியிலிருந்து அனுப்பப்படுகிறார்.

அந்த ஆளுநர் எடுத்த உறுதிமொழி என்ன?

அவர் எடுத்த உறுதிமொழியைத்தான் இங்கே எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

நண்பர்களே, இங்கே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்; அதேபோல, நகராட்சியில் மேயர், துணை மேயர் உள்பட எல்லோரும் இருக்கிறார்கள்.

அமைச்சர்களுக்கு இருப்பதைவிட, வித்தியாசமான ஒன்று!

பொறுப்புகளை ஏற்கிறவர்கள், குடியரசுத் தலைவரி லிருந்து, நீதிபதிகளிலிருந்து, அமைச்சர்களிலிருந்து எல்லோரும் உறுதிமொழியைச் சொல்லி பிரமாணம் எடுக்கிறார்கள். அமைச்சர்களின் உறுதிமொழியில், காப்புறுதி உண்டு; ரகசிய காப்புறுதி  உண்டு; அதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.

அந்த சூழ்நிலையில், ஆளுநராக இருக்கின்றவர் களுக்குக் கொடுக்கப்பட்டு இருக்கின்ற அந்த வாக் குறுதியினுடைய வாசகங்கள், அமைச்சர்களுக்கு இருப்பதைவிட, வித்தியாசமான ஒன்று.

இதை சட்டப்பூர்வமாக சொல்லவேண்டும்; வழக் குரைஞர் என்ற முறையில். இங்கே சட்டம் படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அரசியல் உணர்வுள்ளவர்கள் அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும், இன்னுங்கேட்டால், ஆளுங் கட்சியாக, வடக்கே இருக்கக்கூடியவர்களாக இருந்தாலும்கூட, அவர்களும் கவனிக்கவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தின் 159 ஆவது பிரிவு சொல்லுவது என்ன?

அரசமைப்புச் சட்டத்தின் 159 ஆவது பிரிவு:

‘‘Oath or affirmation by the Governor.-Every Governor and every person discharging the functions of the Governor shall, before entering upon his office, make and subscribe in the presence of the Chief Justice of the High Court exercising jurisdiction in relation to the State, or, in his absence, the senior most Judge of that Court available, an oath or affirmation in the following form, that is to say -

swear in the name of God

“I, A. B., do solemnly affirm that I will faithfully execute the office of Governor (or discharge the functions of the Governor) of Tamil nadu (name of the State) and will to the best of my ability preserve, protect and defend the Constitution and the law and that I will devote myself to the service and well-being of the people of  Tamil nadu (name of the State)”

‘‘அரசமைப்புச் சட்டத்தை நான் காப்பாற்றுவேன்; அரசமைப்புச்  சட்டத்திற்காக நான் வாதாடுவேன். அரச மைப்புச்  சட்டத்திற்காக நான் எல்லா சட்டங்களையும் காப்பாற்றுவேன்.''

இதையெல்லாம் செய்துவிட்ட பிறகு, ஆளுநருக்குக் கூடுதலாக ஒரு பொறுப்பு இருக்கிறது. மாநிலத்தில் வரக்கூடியவர்களுக்கு, ஆளுநர் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிப்படி அது.

‘‘I will devote myself to the service and well-being of the people of State.''

அதாவது அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது, அரசமைப்புச் சட்டத்தின்மீது வாதாடுவது, அதனுடைய விழுமியங்களைக் காப்பாற்றுவது என்பதெல்லாம் ஒரு பக்கத்தில் இருக்கக்கூடிய கடமை என்றாலும், அதையும் தாண்டி அவருக்கு ஒரு முக்கிய பொறுப்பு இருக்கிறது.

வீட்டிற்கு வீடு இதைச் செய்யவேண்டும்!

அந்தப் பொறுப்பு என்னவென்றால் புரிந்துகொள் ளுங்கள்; இந்தச் செய்திகளை எல்லோருக்கும் சொல்ல வேண்டும். இங்கே வந்திருப்பவர்கள் தெரிந்துகொண் டால் மட்டும் போதாது; தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தெரிந்துகொள்ளக் கூடிய அளவிற்கு, திராவிட முன்னேற்றக் கழகமும், நம்முடைய கூட்டணி யும் செய்யவேண்டும்; வீட்டிற்கு வீடு இதைச் செய்யவேண்டும்.

ஆளுநர்மீது நமக்கென்ன தனிப்பட்ட முறையில் கோபமா? இந்த அரசிற்குக் கோபமா?

இன்னுங்கேட்டால், இங்கே நம்முடைய அருமைச் சகோதரர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் சொன்னதைப்போல, வேக மாகப் பாயவேண்டிய நேரத்தில்கூட நிதானமாக இருக்கிறார், நம்முடைய முதலமைச்சர் என்று வேண்டு மானாலும் சொல்லலாமே தவிர, அவர் வேகமாகப் பாய்கிறார் என்று சொல்ல முடியாது.

பாதுகாக்க வேண்டிய பொறுப்பு 

ஆளுநருக்கு உண்டு!

அரசமைப்புச் சட்டத்தில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது?

To the service and well-being of the people.

2
மக்களுக்குத் தொண்டு செய்யவேண்டும்; மக்கள் நல்வாழ்வு வாழவேண்டும்; அதைக் காப்பாற்றவேண்டிய,  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உண்டு.

இந்த வாசகம், அமைச்சர்களுடைய உறுதிமொழியில் கூட கிடையாது. ஆகவே, ஓர் ஆளுநருக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கிறது.

தற்கொலைகளுக்கெல்லாம் இடமில்லாமல், உயிர்களைக் காப்பாற்றவேண்டும்

அப்படிப்பட்டவர், ஆன்-லைன் சூதாட்டத்தைத் தடுக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து,  ஏற்கெனவே பழைய அரசில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் இருந்த ஓட்டைகளை எல்லாம் இல்லாமல் செய்யவேண்டும்; அதன்மூலம், அன்றாடம் தற்கொலைகள் மிகுந்துகொண்டிருக்கின்ற இடத்தில், அந்தத் தற்கொலைகளுக்கெல்லாம் இடமில் லாமல், உயிர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற முறையில், இன்றைய தி.மு.க. அரசு, முதலமைச்சரால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா!

யாருடைய உயிராக இருந்தாலும், மனித உயிர்கள். அந்த மனித உயிர்களைக் காப்பாற்றவேண்டும் என்பதற்கான மனித நேய சட்டம் இது.

ஆனால், அந்தச் சட்டத்தை நிறைவேற்றி அனுப்பு கின்ற நேரத்தில், ஆளுநர் என்ன செய்தார் என்பதை இங்கே நம்முடைய வேல்முருகன் அவர்கள் சொன் னாரே!

ஆளுநர், சூதாட்டக் கம்பெனிக்காரர்களின் 

பிரதிநிதிகளைச் சந்திக்கிறார்!

ஆளுநர் யாரைச் சந்திக்கிறார்?

சூதாட்டக் கம்பெனிக்காரர்களின் 40 பிரதிநிதிகளைச் சந்திக்கிறார். அதேநேரத்தில், அமைச்சர்களைச் சந்திப்பதற்குத் தாமதிக்கிறார்.

இப்படி நடந்துகொள்கிறார் என்றால், அதற்குப் பொருள் என்ன?

இன்னுங்கேட்டால், அவர் ஆர்.எஸ்.எஸ். உணர்வு உள்ளவர். பாரத கலாச்சாரத்தில் மிக முக்கியமானவர். அதன் காரணமாக, பாரதத்திலிருந்துதானே சூதாட்டத் தைக் கற்று வந்திருக்கிறார்கள்; பாரதத்தினுடைய கதையே சூதாட்டத்திலிருந்துதானே வருகிறது. அந்தப் பற்று அவருக்கு இருக்கலாம்; அதை அவரோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். அது சட்டமன்றத்தில் சட்டப் புத்தகத்தில் எட்டிப் பார்க்கக் கூடாது; தலைநீட்டக் கூடாது.

சூதாட்டத்தினுடைய கொடுமை எப்படிப்பட்டது என்பதற்கு, 

அதுதான் அடையாளம்!

இன்னுங்கேட்டால், இருப்பதிலேயே மிகவும் யோக்கியமானவன் ‘தர்மன்' என்று பஞ்ச பாண்டவ பாத்திரங்களில் சொல்வார்கள்.

அவருக்கென்ன ‘தர்ம ராஜா' என்று சொல்வார்கள்; இங்கேகூட ‘தர்மராஜா' கோவில் உண்டு.

அப்படிப்பட்ட சூழலில், அந்தத் தர்மன்தான் சூதாடு கிறான்; சூதாட்டத்தில் எல்லாவற்றையும் இழக்கிறான்; கடைசியில், சுற்றும் முற்றும் பார்க்கிறான், பந்தயம் கட்டுவதற்குப் பொருளில்லை. திரவுபதைதான் மிச்சம்.

திரவுபதையையும் வைத்து சூதாடுகிறான்.  சூதாட்டத் தினுடைய கொடுமை எப்படிப்பட்டது என்பதற்கு, அதுதான் அடையாளம்.

மனிதநேயத்தோடு 

அதை செய்கிறோம்!

இன்னுங்கேட்டால், அவனுக்கு முழு உரிமை உண்டா? என்று கேட்டால், கிடையாது; அய்ந்தில் ஒரு பாகம்தான் இவனுக்கு உரிமை உண்டு. நான்கு பேருடைய பாகத்தை அவனே எடுத்துக்கொண்டு சூதாடியிருக்கிறான். சூதாட்டத்தினுடைய கொடுமை அதன்மூலமாகத் தெரிகிறது. ஆனால், அதைப் படித்துவிட்டு, பாரதக் கலாச்சாரம் பேசி, சனாதனம் பேசுகிறீர்களே ஆளுநர் ரவி அவர் களே, இப்பொழுதாவது எங்களுடைய ஆட்சி வந்திருக்கிறது; மனிதநேயத்தோடு அதை செய்கி றோம் என்று சொல்லும்பொழுது, அதை ஏன் நீங்கள் ஊறுகாய் ஜாடியில் போடுகிறீர்கள்? என்பதுதான் கேள்வி.

அந்த மசோதாவை முதலில் ஆளுநர் திருப்பி  அனுப்பியபொழுது, அவர் சொன்ன காரணம் இருக்கிறதே, அதன்படி அரசமைப்புச் சட்டத்தை அவர் தெளிவாக உணர்ந்திருக்கிறாரா? படித்திருக் கிறாரா? என்கிற சந்தேகம்தான் எழுகிறது.

அறியாமையா? அல்லது ஆணவமா? என்ற கேள்வியைத்தான் கேட்கத் தோன்றுகிறது.

அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு, தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு உரிய அதிகாரம் இல்லை என்று சொல்கிறார்.

7 ஆவது ஷெட்யூலில்...

உடனடியாக அதே அரசமைப்புச் சட்டத்தைச் சுட்டிக்காட்டி, அதற்குப் பதில் எழுதினோம்;  நாங்கள் அறிக்கை எழுதினோம்.

7 ஆவது ஷெட்யூலில் மூன்று பட்டியல் இருக்கின்றன.

1. ஒன்றிய அரசினுடைய அதிகாரங்கள்.

2. மாநில அரசிற்குரிய அதிகாரங்கள்.

3. கன்கரண்ட் லிஸ்ட் - தமிழில் இது பொதுப்பட்டியல் என்று சிலர் சொல்கிறார்கள்; ஆனால், பொதுப் பட்டியல் அல்ல; தவறாகச் சொல்கிறார்கள். அது ஒத்திசைவுப் பட்டியல்.

அந்த ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கிறது என்று சிலர் நீங்களெல்லாம் நினைப்பீர்கள்.

சூதாட்டம் என்பது 

மாநிலப் பட்டியலில் இருக்கிறது

‘‘Betting and Gambling'' என்று சொல்லக்கூடிய இந்த சூதாட்டம் என்பது, அது மாநிலப் பட்டிய லிலேயே இருக்கிறது.

எனவே, இப்பொழுது சொல்லுங்கள், ஆளு நருக்கு அறியாமையா? அரசமைப்புச் சட்டத்தைப் படித்திருக்கிறாரா? இவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பதற்கு அவர் தகுதியானவரா? பதவிப் பிராமணம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழிப்படி நடந்திருக்கின்றாரா? என்று கேட்பது நியாயமான கேள்வி அல்லவா!

நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் நாடாளுமன்றத்தில், ‘‘ஆன்லைன் சூதாட் டத் தடைச் சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசிற்கு உரிமை இல்லை என்று சொல்லுகிறார்களே, அதற்கு உங்களுடைய பதில் என்ன?'' என்று கேட்டார்.

ஒன்றிய அமைச்சரின் பதில்!

நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அந்தக் கேள்விக்குப் பதில் சொன்னார், ‘‘நிச்சய மாக மாநில அரசினுடைய அதிகாரப் பட்டியலில் இருக்கிறது; 34 ஆவது அயிட்டத்தில் இருக்கிறது'' என்று சொன்னார்.

ஒன்றிய அமைச்சர் இப்படி சொல்லிய பிறகும்கூட, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அந்த மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்டிருந்தார்.

இது என்ன நியாயம்? தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

பதவிப் பிரமாண உறுதிமொழிப்படி 

ஆளுநர் நடக்கவேண்டாமா?

நமக்காக அல்ல; யாருக்காகவும் அல்ல. அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிராமணம் எடுத்துக்கொண்ட உறுதிமொழிப்படி ஆளுநர் நடக்கவேண்டாமா?

அதைத்தான் எங்களுடைய முதலமைச்சர் கேட்டார்.

இதுவரையில், தமிழ்நாடு ஆளுநர் நடந்துகொண்ட முறைகளைப்பற்றி, எனக்கு முன்பு உரையாற்றிய நண்பர்கள், தோழர்கள் சொன்னார்கள்.

சட்டமன்றத்தில் இருந்து 

வெளிநடப்பு செய்த ஒரே ஒரு ஆளுநர்!

தயவு செய்து எண்ணிப் பாருங்கள், இதுவரை நூறாண்டை தாண்டிய தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் வெளிநடப்பு செய் வார்கள்; ஆனால், சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த ஒரே ஒரு ஆளுநர், இந்தியாவிலேயே இவர்தான் என்றால், இதைவிடக் கேவலம், இதைவிட அரசமைப்புச் சட்டத்தைக் கொச்சைப்படுத்தக் கூடிய, அசிங்கமான, அருவெறுக்கத்தக்க - கடமை தவறுகின்ற நிலை வேறு இருக்க முடியுமா?

எனவேதான் நண்பர்களே, நிதானமாக, பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, கடைசியில் இனிமேலும் பொறுக்க முடியாது - பட்டதெல்லாம் போதும் என்று சொல்லக் கூடிய அளவிற்கு, தமிழ்நாடு முதலமைச்சரே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். அந்தத் தீர்மானத்தின் முன்பகுதி மிகவும் முக்கியமானது. 

144 சட்டமன்ற உறுப்பினர்கள் 

ஒப்புதல் கொடுத்தனர்!

ஆளுநரைப்பற்றி பேச முடியாது; விவாதிக்க முடியாது என்று சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய சில விதிமுறைகளையும் திருத்தி - மாற்றி, 144 சட்டமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஒப்புதல் கொடுத்த பிறகு, முறையாக, அடுத்த கட்டத்திற்கு வந்து, அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

ஆன்லைன் சூதாட்டத் தடைக்கு அவசரச் சட்டம் கொண்டு வந்த பிறகு, அதற்காக ஒரு நிரந்தரச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, ஆளுநருக்கு முதலில் அனுப்பி வைத் தார்கள். அதற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல், நீண்ட காலமாகக் கிடப்பில் போடப்பட்டு, பிறகு திருப்பி அனுப்பப்பட்டது.

அதற்குப் பிறகு இரண்டாவது முறை தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, இரண்டாவது முறையாக ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்த பிறகும், கிடப்பில் போட்டு வைத்திருந்தார் ஆளுநர்.

ஒப்புதல் கொடுக்கவில்லை; ஒப்புதல் கொடுக்கும்படியாக செய்யப்பட்டு இருக்கிறார்

சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்திருக்கிறார்.

எனவே, அவர் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்கவில்லை; ஒப்புதல் கொடுக்கும்படியாக செய்யப்பட்டு இருக்கிறார். அதுதான் மக்கள் போராட்டம்; மக்களிடத்தில் இருக்கிற அதிகாரம்தான் மிக முக்கியமானது.

அதேபோல, நீட் தேர்வு எதிர்ப்பு மசோதா. அதற்கும் அவர் முறையாக பதில் சொல்லவில்லை. நாடு முழுவதும் நாம் பிரச்சாரம் செய்தோம்.

ஆளுநரின் வேலை ஒரு தபால்காரரின் வேலைதானே தவிர, வேறு கிடையாது! 

இன்னுங்கேட்டால், நீட் தேர்வு மசோதாமீது ஆளுநர் முடிவெடுப்பதற்கு ஒன்றுமே கிடையாது. அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதுதான் இவருடைய வேலை அது ஒரு தபால்காரரின் வேலைதானே தவிர, வேறு கிடையாது.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அதிலும் அதிகப்பிரசிங்கத்தனமாக நடந்துகொண்டார். பிறகு அந்த மசோதா இரண்டாவது முறையாக நிறைவேற்றப் பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட எந்த மசோதாவாக இருந்தாலும், அந்த மசோதாவை ஆளுநர் தவிர்க்க முடியாது; மறுக்க முடியாது; ஒப்புதல் அளித்தே தீரவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தினுடைய காப்பாளராக இருக்கிறவர் - அதற்கு வியாக்கியானம் சொல்லவேண் டியது உச்சநீதிமன்றம். அந்த உச்சநீதிமன்றம் என்ன சொன்னது?  ஆளுநர்கள் தன்னுடைய கடமையைத் தவறக் கூடாது என்று சொன்னார்கள்.

பேரறிவாளன் வழக்கில், உச்சநீதிமன்றம் இதே ஆளுநரின் தலையில் குட்டு வைத்தது. மற்ற வழக்கு களிலும் ஆளுநரின் பங்கு என்ன? என்பதைப்பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.

மக்கள் வரிப் பணத்தை சம்பளமாகப் பெறக்கூடிய ஒருவர் தன்னிச்சையாக நடந்துகொள்வதா?

பொதுவாகவே, ஆளுநர் தேவையில்லை என்கிற ஒரு நிலை இருந்தாலும், இந்த ஆளுநர், அரசமைப்புச் சட்டத்தை மதிக்காமல், அரசமைப்புச் சட்டம் யாருக்காக இருக்கிறதோ, அந்த மக்களை மதிக்காமல், மக்களின் உயிரைப்பற்றி கவலைப்படாமல், இவர் தன்னிச்சையாக நடந்துகொள்கிறார். மக்கள் வரிப் பணத்தை சம்பளமாகப் பெற்றுக்கொண்டிருக்கக் கூடியவர்.

மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறார், ‘‘நான் குடி யரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டவன்'' என்று சொல்கிறார்.

குடியரசுத் தலைவருக்குத்தான் நீங்கள் கட்டுப்பட்ட வர் என்பதுபோல சொல்கிறீர்களே, அரசமைப்புச் சட் டத்தை அப்படியாவது ஒழுங்காகப் படித்திருக்கிறீர்களா? 

உங்களுக்குச் சம்பளம் கொடுப்பவர்கள் யார்?

தமிழ்நாட்டு மக்கள், தமிழ்நாட்டு மக்கள், தமிழ்நாடு அரசு தான் சம்பளம் கொடுக்கிறது!

தமிழ்நாடு அரசு உங்களுக்காக ஒதுக்குகின்ற நிதியைக்கூட யார் யாருக்கோ வாரிக் கொடுக்கிறீர்கள். 

ஆர்.எஸ்.எஸ். பாத்திரத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்!

நாங்கள் கொடுக்கின்ற பணத்தை நீங்கள் வாங்கி வைத்துக்கொண்டு, அட்சய பாத்திரம் நடத்துகிறீர்கள்; இன்னும் வெவ்வேறு பாத்திரங்களையெல்லாம் நடத்து கிறீர்கள். ஆர்.எஸ்.எஸ். பாத்திரத்தை ஏற்றுக்கொண்டி ருக்கிறீர்கள் என்றால், அதை எப்படி நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்?

தமிழ்நாடு முழுவதும் இப்படிப்பட்ட கூட்டங்கள், பெருந்திரள் ஆர்ப்பாட்டக் கூட்டமாக நடைபெறவேண்டும்!

எனவேதான் நண்பர்களே, மிக முக்கியமாக இந்தக் கூட்டத்தின் மூலமாக, இது முதல் கூட்டமாக இருக்க வேண்டும்; இது முடிவல்ல; இதுதான் தொடக்கம். தமிழ்நாடு முழுவதும் இப்படிப்பட்ட கூட்டங்கள், பெருந் திரள் ஆர்ப்பாட்டக் கூட்டமாக நடைபெறவேண்டும்.

பெருந்திரள் என்ற சொல்லை, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்தான் கொடுத்தார்கள்.

பெருந்திரள் கூட்டம் என்று வள்ளுவர்கோட்டத்தில் நடத்துங்கள் என்று சொன்னார் கலைஞர் அவர்கள்.

இருகை நீட்டி வரவேற்கிறோம்!

அந்தப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம், பெருந்திரள் கூட்டம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய கூட்டத்தை, எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும், கூட் டணித் தோழர்களும், இன்னும் ஏனைய அரசமைப்புச் சட்டத்தின் காப்பாளராக தங்களைக் கருதக்கூடிய வர்களாக யார் வந்தாலும், இருகை நீட்டி வரவேற்று, மக்களிடம் பிரச்சாரம் செய்யவேண்டும்.

இது என்னுடைய கருத்து மட்டுமல்ல நண்பர்களே, இது பொதுமக்களுடைய கருத்துமாகும்.

2022 ஆம் ஆண்டு  

‘‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’’ கட்டுரை!

‘‘டைம்ஸ் ஆஃப் இண்டியா'', ஏப்ரல் 18, 2022 ஆம் ஆண்டு வெளிவந்த நாளிதழில், நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து குரல்கள் எழுந்தபொழுது, ‘‘ஆளுநர் ராஜினாமா செய்யவேண்டும்'' என்று கட்டுரை எழுதியிருந்தார் ஒரு கட்டுரையாளர்.

Governor Should not Resign in set the force should be abolished

என்று Arun Raman Article in ‘‘Times of India'', April 28, 2022  எழுதியிருக்கிறார்.   அந்தக் கட்டுரையில் கடைசியாக, ‘‘ஒரு தனி நபருக்கு ஏன் இத்தனை ஏக்க ராவில் மாளிகை. அந்த இடம் காட்சியகமாக மாற்றப் படட்டும்; எதற்காக தனி மனிதருக்கு ஆடம்பரமான மாளிகை. வெள்ளைக்காரன் ஆடம்பரம் செய்தான் என்றால், அன்றைக்கு இருந்தது அந்நிய ஆட்சி - இன்றைக்கு இருப்பது சுதந்திர ஆட்சி!'' என்கிறார்.

இதை நாங்கள் கேட்கவில்லை. கட்டுரையாளர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

இன்றைக்கு ஆளுநர் பதவி 

தேவையில்லை!

ஆகவேதான் நண்பர்களே, பொதுமக்களிடம் நாம் எடுத்துச் சொல்லவேண்டிய விஷயம் - இன்றைக்கு ஆளுநர் பதவி தேவையில்லை; அது ஒழிக்கப்படுகின்ற வரையில்.

பல்கலைக் கழகத்திற்கு ஆளுநர் வேந்தர்; அங்கங்கே இணைவேந்தர் உண்டு. அந்தந்தத் துறையில் இருக்கக் கூடிய அமைச்சர்கள்.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் உள்ள ஆளுநரைப் பொறுத்தவரையில், அந்த அதிகாரங்களில், ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நியமிப்பதற்காகத்தான் அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்.

பல்கலைக் கழகங்களில் 

பட்டமளிப்பு விழாக்களே நடைபெறாத அளவிற்குச் செய்கிறார்

ஆனால், அதேநேரத்தில், பல்கலைக் கழகங்களுக்கு நான்தான் (ஆளுநர்) வரவேண்டும்; நான்தான் (ஆளுநர்) பேசவேண்டும் என்று சொல்லி, பட்டமளிப்பு விழாக்களே நடைபெறாத அளவிற்குச் செய்கிறார். பல பல்கலைக் கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறவில்லை. பட்டமளித்தால்தான், மாணவர்கள் பட்டதாரிகளாகி வேலைக்குப் போகவேண்டும்; அது அங்கே சுணக்கப்படுகிறது. அதைக் கண்டித்து நாங்கள் எல்லோரும் வற்புறுத்தினோம். பிறகு, தமிழ்நாடு அரசு, அந்த அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து எடுத்து, முழுக்க முழுக்க அரசாங்கத்தின் சார்பாகத்தான் வேந்தர் இருக்க வேண்டும்; ஆளுநர், வேந்தராக இருக்கவேண்டிய அவசியமில்லை என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும்.

அந்த வேந்தர் பொறுப்பு, ஆளுநருக்கு எப்படி கிடைக்கிறது என்று சொன்னால் நண்பர்களே,  ex-officio  - ஆளுநராக இருக்கின்ற காரணத்தினால், அவர் வேந்தராக ஆகிறார் என்கிற நிலை இருக்கிறது; அதை யும் எடுத்து மாற்றியிருக்கிறார்கள், மக்கள் நலன் கருதி.

அந்த மசோதாவும், இங்கே இருக்கக்கூடிய மசோதாவில் ஒன்றாக இருக்கிறது.

கிடப்பில் உள்ள சட்டவரைவுகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்

எனவேதான், அந்த சட்ட வரைவுகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

நாடாளுமன்றத்தில் கனிமொழி அவர்கள்,  தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் 20 மசோதாக்கள் கிடப்பில் இருக்கிறது என்று சொன்னார்கள்.

அடுத்த நாள் அண்ணாமலை சொல்கிறார், 20 மசோதாக்கள் அல்ல; 19 மசோதாக்கள்தான் என்று. 

இது புத்திசாலித்தனமான பதிலா? ஏன் ஆளுநர் மாளிகையில் ஊறுகாய் ஜாடியில் அவை  இருக்க வேண்டும்?

எதற்காக?

இவர்கள் இதை சொல்வதற்கு என்ன தகுதி இருக்கிறது?

மக்கள் தயாராக இருக்கவேண்டும்

எனவேதான், உச்சநீதிமன்றத்தையும் அவமதித்து, சட்டமன்றத்தையும் அவமதித்து, எல்லாவற்றையும்விட, மக்கள் மன்றத்தையும் அவமதித்துள்ள இவர்கள் இங்கே வேலையில்லை - இவர்களை வீட்டிற்கு அனுப்புவோம். அதற்கு மக்கள் தயாராக இருக்கவேண்டும்.

அரசாங்கம் ஒருபக்கத்தில் இருந்தாலும்,  மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்; அந்த மக்கள் கிளர்ச்சிக்கு இந்தக்  கூட்டணி பொறுப்பேற்கும். அரசு அதனுடைய கடமையைச் செய்யட்டும்; நாங்கள் எங்கள் வேலையை செய்துகொண்டிருப்போம். அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பதற்குத் நாங்கள் தயார்! தயார்!! தயார்!!! என்று மக்களைத் தயார்படுத்துகின்ற கூட்டம்தான் இது - மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்ற கூட்டமல்ல. 

வேகமாக நாடு முழுவதும் பரவும்!

ஏனென்றால், இன்னமும் நடக்கவேண்டிய பணி களும், இன்னமும் ஒப்புதல் கையெழுத்துப் போட வேண்டிய மசோதாக்களும் ஏராளமாக இருக்கின்றன. இன்னும் சில நாள்களில், அந்த மசோதாக்களில் எல்லாம் கையெழுத்துப் போடவேண்டும்; இல்லையானால், இந்தக் கிளர்ச்சி என்பது தொடக்கம்தான்; இது வேகமாக நாடு முழுவதும் பரவும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில், அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்றால், குடியரசுத் தலைவருக்கோ, பிரதமருக்கோ, முதலமைச்சருக்கோ, மற்றவர்களுக்கோ அல்ல; மக்களிடம்தான் இருக்கிறது.

அதுதான் அரசமைப்புச் சட்டம்.

மக்களைத் தயாரிக்கின்ற கூட்டம்தான் 

இந்தக் கூட்டம்!

ஆகவே, அதற்காக மக்களைத் தயாரிக்கின்ற கூட்டம்தான் இந்தக் கூட்டம். இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த தோழர்களுக்கு நன்றி!

நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று, நம்முடைய ஜனநாயகத்தைக் காப்பாற்ற, மக்க ளுடைய உறுதிமொழியைக் காப்பாற்ற ஆயத்தமாவோம், ஆயத்தமாவோம்!

‘திராவிட மாடல் ஆட்சிக்குத் 

துணை நிற்போம்!

தமிழ்நாட்டைக் காப்பாற்றவேண்டும், அது ‘திராவிட மாடல்' ஆட்சியால்தான்  முடியும். ஒப்பற்ற நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய செயல்திறனாலும், மதி வியூகத்தாலும், சிறப்பான ராஜ தந்திரத்தாலும், சாதுரியத் தாலும், அது ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டிக் கொண்டிருக்கிறது என்றாலும், அதற்குத் துணை இருப்போம் இந்தக் கூட்டணித் தோழர்கள் என்பதை எடுத்துச் சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு,13.04.2023



திங்கள், 17 அக்டோபர், 2022

ஈழப் படுகொலைக்கு எதிராய் கடைகள் அடைப்பு (அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு) (279)

 

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (279)

அக்டோபர் 16-31,2021

ஈழப் படுகொலைக்கு எதிராய் கடைகள் அடைப்பு

கி.வீரமணி

ஈழத்தமிழர் _ தமிழக மீனவர் பிரச்சினைக்காக 6.6.1997 அன்று திராவிடர் கழகம், தமிழ்நாட்டின் எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை இணைத்து மாபெரும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து, அதனை கடைப்பிடிக்கச் செய்தோம். சென்னையில் பல்வேறு பகுதியில் கடைகள், போக்குவரத்துகள் இயக்கப்பட-வில்லை. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஆதரவு தெரிவித்திருந்த தலைவர்கள் பலரும் கைது செய்யப்-பட்டனர். திராவிடர் கழகத் தோழர்களும் முழு அடைப்பில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு கைது ஆனார்கள். பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் மக்களின்றி இயக்கப்பட்டன. சென்னை பெரியார் நெடுஞ்சாலையில் கழகத் தோழர்கள், “கொல்லாதே! கொல்லாதே!’’ ஈழத் தமிழரைக் கொல்லாதே! என குரல் எழுப்பிக் கொண்டு சாலை மறியல் செய்து கழகப் பொறுப்பாளர்களுடன் கைது செய்யப்-பட்டனர்.

மாலை செய்தியாளர்களின் சந்திப்பின்-போது,  தமிழர்களிடையே இந்த முழு அடைப்புப் போராட்டம் ஒற்றுமையை விரிவாக்கி உள்ளது. மாநில அரசால் இன்னும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துச் சாதிக்க முடியும் என்னும் நம்பிக்கையை வலுப்படுத்திவுள்ளது. அமைதியான முறையில் நடைபெற்ற இப்போராட்டத்தில 15,000 பேருக்கு மேல் அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., தி.க., போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டனர். ஈழத்தமிழர் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்திட, தமிழக மீனவர்கள் படுகொலையைத் தவிர்த்திட மத்திய அரசினை மாநில அரசு வற்புறுத்திடவும், நமது தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்தும் மத்திய அரசிடம் வற்புறுத்தி நாடாளுமன்றத்தில் உரத்த குரல் எழுப்பியும் கடமையாற்றிட வேண்டுமென அனைத்துக் கட்சிகளின் சார்பில் செய்தியாளர்களிடம் கூறினேன்.

அதனைத் தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை தேரடித் தெருவில் 17.6.1997 அன்று ஈழத்தமிழர் படுகொலை, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை எதிர்த்தும், விளக்கும் வகையில் மாபெரும் பொதுக்-கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இன உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டம் ஒரு பொதுக்கூட்டமாக இல்லாது, தமிழ்நாட்டுத் தமிழர்களின் தன்மான உணர்வை, மனிதநேய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பார்க்கப்பட்டது. பொதுக்கூட்ட உரையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் மாநில அரசு, மத்திய அரசுக்கு ஈழத் தமிழர் நலனில் மேலும் அழுத்தம் தர வேண்டுமெனப் பேசினார்கள்.


திங்கள், 15 மார்ச், 2021

திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம்

திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

 

குடந்தையில் நேற்று (13.3.2021) மாலை நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகப் பேச்சாளர்களுக்கு வழிகாட்டுதல் உரையாற்றினார்  (குடந்தை, 13.3.2021)

புதன், 18 டிசம்பர், 2019

தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா (சுயமரியாதை நாள்) - கோட்டூர்

மாநிலம் முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா (சுயமரியாதை நாள்)

நீட் - "புதிய கல்விக் கொள்கையை" எதிர்த்து தெருமுனை பரப்புரைக் கூட்டங்கள்

சென்னை, டிச.18 தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடை பெற்ற தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா (சுயமரியாதை நாள்) ‘நீட்', ‘புதிய கல்விக் கொள்கையை' எதிர்த்து தெருமு னைப் பரப்புக் கூட்டங்கள் நடைபெற்றன.

நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:


அவர்களின்

தென் சென்னை - கோட்டூர்

தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த கோட்டூர் அங் காடி பகுதியில் 07.12.2019 அன்று மாலை 6.00 மணி அளவில் தொடங்கி திராவிடர் கழகம் - இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 87ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கூட்டம்  ந.மணித்துரை  (மாவட்ட இளைஞரணி செயலாளர்)   தலைமையிலும்  இரா.வில்வ நாதன் (தென்சென்னை மாவட்டத் தலைவர்), செ.ர.பார்த்த சாரதி (மாவட்ட செயலாளர்), டி.ஆர்.சேதுராமன் (மாவட்ட துணை தலைவர்), கோ.வீ.ராகவன் (மாவட்ட துணை செய லாளர்), சா.தாமோதரன் (துணை செயலாளர்),   மற்றும் மு.இரா.மாணிக்கம் (தலைவர், தென் சென்னை, பகுத்தறிவாளர் கழகம்) ஆகியோர் முன்னிலையிலும் சிறப்புடன் நடை பெற்றது.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ந.சிவசீலன் வரவேற்புரையாற்றினார். முன்னதாக 'இனநலம் கலைக் குழு'வை  சேர்ந்த பிரின்சு என்னாரசு பெரியார், இறைவி, து. கலைச்செல்வன், உடுமலை வடிவேலு ஆகியோரின்  கலை நிகழ்ச்சி நடைபெற்றது .

ஓவியா அன்புமொழி (மண்டல மகளிரணி செயலாளர்), ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), வீ.குமரேசன் (பொருளாளர்), ஆளூர் ஷாநவாஸ் (துணைப் பொதுச் செயலாளர், விடுதலை சிறுத்தை கட்சி)  ஆகியோர் உரையாற்றியதற்கு பின் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பணிகளைப் பாராட்டி அனைவரும் பேசினர். 31 சி சட்டம் வடிவமைத்துக் கொடுத்து ஒன்பதாவது அட்டவணையில் 69 சதவிகித பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை  மூன்று பார்ப்பனர் களை கொண்டே சேர்க்க வைத்து சாதனை படைத்தவர், ஏராளமான  மாநாடுகளையும் போராட்டங்களையும் நடத்தி  மண்டல் குழு அறிக்கையை அமலாக்க செய்தவர்,  அரசால் தமிழுக்கு ஆபத்து, இந்தி திணிப்பு, கல்வி உரிமை பறிப்பு, வேலைவாய்ப்பு பறிப்பு போன்ற  தமிழர்களின் உரிமைகள் தமிழ்நாட்டின் உரிமைகள்  பறிக்கப்படும் நிகழ்வுகளின் போதெல்லாம் குரல் கொடுத்து போராட்டங்களை நடத்தி  தமிழர் தலைவர் என்றென்றும் சாதனை படைத்து வருகிறார், சாதனைகளை பாராட்டும் வகையில் அமெரிக்க மனிதநேய அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியுள்ளது என  சுட்டிக் காட்டினர். பிஜேபி அரசின் தமிழர் விரோத செயல்களையும் பார்ப்பனர்களின் உயர்வுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்டோரின் இட ஒதுக்கீட்டை பறிப்பது குறித்தும் விளக்கி பேசினர்.

வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்), தே.செ. கோபால் (மண்டல செயலாளர்), சு.குமாரதேவன் (வட சென்னை மாவட்டத் தலைவர்), ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்), ஆர்.டி.வீரபத்திரன் (சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர்), அடையாறு த.க.நடராசன், வடசென்னை மாவட்ட செயலாளர் கணேசன்,  வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் கி.இராமலிங்கம், சோழிங்கநல்லூர் மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழினியன், வட சென்னை ப.க. அமைப்பு செயலாளர் ஆ.வெங்கடேசன், பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை செயலாளர்), வடசென்னை இளை ஞரணி தலைவர் தளபதி பாண்டியன்,  புரசை சு.அன்புச்செல் வன், பொழிசை கண்ணன், தரமணி கோ.மஞ்சநாதன், அ. அன்பு, வி.வளர்மதி, வி.தங்கமணி, வி,யாழ்ஒளி, பி.அஜந்தா, மு.பவானி, ஈ.குமார், மு.சண்முகப்பிரியன்,  பெரியார் சேகர், தாம்பரம் நகர செயலாளர் மோகன்ராஜ், குன்றத்தூர் சி.பரசுராமன் குன்றத்தூர் மு.திருமலை பூந்தமல்லி க.தமிழ்ச் செல்வன், சோழபுரம் சக்கரவர்த்தி,  சோழபுரம் ந.கஜேந்திரன், சு. தமிழ்ச்செல்வன், டி.தமிழ்ச்செல்வன், ஜி.டி.எம்.யாசிர், தமிழ ன் பிரபாகரன்,அ.தில்ரேஸ் பானு, எ.ஜெயவர்மன், சிறுத்தை சாகீர், மு.அய்ஸ்வர்யா, பா.முத்தழகு  மற்றும் சென்னை மண்டல கழகத் தோழர்கள் பெருமளவு பங்கேற்று இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பொதுமக்கள் பெருமளவில் வந் திருந்து கருத்துகளைக் கேட்டு பாராட்டு தெரிவித்தனர்.

ஜெயவர்மன் என்பவர் புதிய கழக உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார் .

இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

அறிவியல் மனப்பான்மையை வளர்க்க பரப்புரை பொதுக்கூட்டம்



அரும்பாக்கம், பிப். 19 தென் சென்னை மாவட்டம் அரும்பாக்கம் பகுதி பெருமாள் கோயில் தெருவில் 8.2.2019 அன்று மாலை 7 மணி அளவில் திராவிட மாணவர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம்  சார்பில் தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.இரா.மாணிக்கம் தலைமையில் தென் சென்னை மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் கு.பா.அறிவழகன் மற்றும் எஸ்.அருட்செல்வன் (பகுத்தறிவாளர் கழகம், தென் சென்னை) ஆகியோர் முன்னிலையிலும் இந்திய அரசியல் சட்டம்  51கிபின் படி  அறிவியல் மனப்பான்மையை வளர்க்க அறிவியல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தென் சென்னை மாவட்ட திராவிடர் மாணவர் கழக தலைவர் வி.விசுவாசு வரவேற்புரை ஆற்றினார்.

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர் சா.தாமோதரன் இணைப்புரை வழங்கினார்.

தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்த சாரதி  அறிவியல் கருத்துக்களை எடுத்துக்கூறி 'மந்திரமா அறிவியலா' என்ற நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார்.

பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், மாநில துணை தலைவர் அ.த.சண் முகசுந்தரம், திராவிடர் கழக மண்டல தலைவர் தி.இரா.ரத்தினசாமி, திராவிடர் மாணவர் கழக இணைச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை  ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியாக திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்,

அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டிய அரசு மூட நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கிறது, அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறது, புராண கதாபாத்திரங்களை அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் தொடர்புபடுத்தி மக்களை மடையர்களாக ஆக்க முயற்சிக்கிறது. சிலப்பதிகார கதாபாத்திர கண்ணகியை பற்றி எடுத்துக்கூறி மக்களையும் அவர்களின் உடைமை களையும் தீக்கிரையாக்க கண்ணகிக்கு யார் அதிகாரம் கொடுத்தது? கொளுத்துவது சரியா? விட்டலாச்சார்யா படத்தில்வரும் காட்சிகள்கூட அறிவியலுக்கு முன் னோடி ஆகிவிடுமா? என கேள்விக்கணைகளை தொடுத்தார்.  சித்த மருத்துவர்கள் சிலர் தெரிந்தே மருத்துவத்துக்கு எதிரான கருத்துக்களை கூறி மக்களை குழப்பி வருகின்றனர் என்றும், மனு தர்ம சாஸ்திரம் மனிதர்கள் பிறப்பையும், முனிவர்கள் பிறப்பையும் ஆபாசம் அருவருப்பான முறையிலே அறிவியலுக்கு எதிரான முறையிலேயும்,  பெரும்பான்மை மக்களை சூத்திரர்கள் இழிபிறவிகள் என்றும், பெண்களை பாவப் பிறவிகள் என்றும் கூறுகிறது அதனால் தான் அந்த நூலை தீயிட்டு கொளுத்தினோம்! என்றும், மேலும் பல அறிவியல் விளக்கங்களை எடுத்துக் கூறி இரவு 10 மணி அளவில் தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

தென்சென்னை பகுத்தறிவாளர் கழகத் தோழர் எம். இளங்கோவன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத் தார்.

ஆங்காங்கே நெகிழிகள் வைக்கப்பட்டு கூட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்ட ஒருங் கிணைப்பை அரும்பாக்கம் திராவிடர் கழகம் செய்தி ருந்தது.

திராவிடர் கழக மண்டல செயலாளர் தெ.செ.கோபால், தென் சென்னை மாவட்ட கழக தலைவர் இரா.வில்வநாதன், க.தமிழ்ச்செல்வன், க.பாலமுரளி கோ.மஞ்சநாதன், மதுரவாயல் சரவணன், வடசென்னை பகுத்தறிவாளர் கழக கோ.கோபால், செந்துறை இராசேந் திரன், கோ தங்கமணி, த.தனலட்சுமி, கு.பா. கவிமலர், மா.ராசு, தளபதி பாண்டியன், மு.டில்லிபாபு, எம்.பிரகாசம், ஏ.சுந்தர்,, சி.கார்வேந்தன், பெரு.இளங்கோ, எம்.ஜெயபிரகாஷ், குத்தாலம் கோவிந்தராஜ், வை.கலை யரசன், உடுமலை வடிவேல், கலைமணி, இரா.கோபால், க.இளவரசன், எல்.மகேந்திரன், எம்.சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

-  விடுதலை நாளேடு, 19.2.19

சனி, 26 ஜனவரி, 2019

திராவிட மாணவர் கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தும் அறிவியல் பரப்புரைக் கூட்டங்கள்

01-02-2019
சொற்பொழிவாளர் ஊர்
அதிரடி அன்பழகன்                               துறையூர்
இரா.பெரியார் செல்வன்                      காரைக்குடி
அண்ணா.சரவணன்                             புதுக்கோட்டை
சே.மெ.மதிவதனி                                திருச்சி

02-02-2019
இரா.பெரியார் செல்வன்                    மேட்டுப்பாளையம்
மாங்காடு மணியரசன்                       பழனி
யாழ் திலீபன்                                      கோவை
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்       கோபி
பா.மணியம்மை                                 தாராபுரம்

03-02-2019
அதிரடி அன்பழகன்                            மதுரை
இரா.பெரியார் செல்வன்                    தூத்துக்குடி
இராம.அன்பழகன்                             தேனி
மாங்காடு மணியரசன்                      கன்னியாகுமரி
சே.மெ.மதிவதனி                              தென்காசி

08-02-2019
கவிஞர் கலி.பூங்குன்றன்               தாம்பரம்
துரை.சந்திரசேகரன்                       தென்சென்னை
அதிரடி அன்பழகன்                         காஞ்சிபுரம்
இரா.பெரியார் செல்வன்                வடசென்னை
இராம.அன்பழகன்                         அரக்கோணம்

09-02-2019
துரை.சந்திரசேகரன்                      தருமபுரி
அதிரடி அன்பழகன்                        புதுச்சேரி
இரா.பெரியார் செல்வன்               திருப்பத்தூர்
இராம.அன்பழகன்                         நாமக்கல்
பூவை புலிகேசி                              குடியாத்தம்
சே.மெ.மதிவதனி                           எடப்பாடி

15-02-2019
இரா.பெரியார் செல்வன்               கள்ளக்குறிச்சி
அண்ணா.சரவணன்                      சிதம்பரம்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்  செய்யாறு
பா.மணியம்மை                            திண்டிவனம்

16-02-2019
இராம.அன்பழகன்                         பட்டுக்கோட்டை
பூவை புலிகேசி                             திருத்துறைப்பூண்டி
யாழ் திலீபன்                                திருவாரூர்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தஞ்சாவூர்
பா.மணியம்மை                          குடந்தை
பொறுப்பாளர்கள் கவனத்திற்கு:
மாவட்ட பகுத்தறிவாளர் கழக, திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் இது குறித்துத் திட்டமிட்டு, சொற்பொழிவாளர்களைத் தொடர்பு கொண்டு தேதிகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் இதனை ஒருங்கி ணைத்து உதவலாம்.
நிகழ்ச்சி குறித்த துண்டறிக்கையை ’விடுதலை’ செய்திப்பிரிவுக்கும், திராவிடர் கழகத் தலைமை நிலையத் துக்கும் அனுப்பிடல் வேண்டும்.
கூட்டத்திற்கான ஒலிபெருக்கி அனுமதியை காவல் துறையிடம் பெற்று, நன்கு விளம்பரம் செய்து மாணவர் களும், பொதுமக்களும் பயன்படக் கூடிய இடத்தில் கூட்டத்தை நடத்திட வேண்டும்.
- விடுதலை நாளேடு,26.1.19

புதன், 9 ஜனவரி, 2019

இந்து மதத்தில் பெண்களின் நிலை என்ன? நமோ சூத்திரர்கள்' என்றுதான் அழைக்கப்படுகின்றனர்

சென்னை சைதை கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கம்



சென்னை, ஜன.9 இந்து மதத்தில் பெண்களின் நிலை என்ன? நமோ சூத்திரர்கள்' என்றுதான் அழைக்கப் படுகின்றனர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்க உரையாற்றினார்.
பகுத்தறிவுப் பகலவனின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம்

24.12.2018 அன்று சென்னை சைதாப்பேட்டை தேரடியில் நடைபெற்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டத்தில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு: ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின், சைதைப் பகுதியில் அறிவாசான் அவர்களுடைய 45 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!

இந்தக் கூட்டம் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய விருப்பப்படி, ஒரு நல்ல வெற்றிகரமாக அமைந்த கூட்டம் - இதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தலைமைக் கழகம் தெரிவித்துக் கொள்கிறது.
தள்ளாத வயதிலேகூட மூச்சு வாங்கக்கூடிய அளவிற்கு அய்யா அவர்கள் ஒன்றரை மணிநேரம் உரையாற்றிவிட்டு, தன்னுடைய மூத்திரச் சட்டியைக் கைகளில் தூக்கிக்கொண்டு, மற்றவர்கள் அவரை தாங்கி, வேனில் அமர்ந்தவுடன், அவர் கொஞ்சம்கூட இடைவெளி இல்லாமல், அன்னை மணியம்மையாரைப் பார்த்து அல்லது எங்களைப் பார்த்து கேட்கக்கூடிய முதல் கேள்வி, இந்தக் கூட்டத்தில் புத்தகம் எவ்வ ளவு விற்பனையாயிற்று? என்று கேட்பார். அது பணத்திற்காக அல்ல; சில பேர் நினைக்கலாம், பெரியாருக்குப் பணத்தாசை என்று. அவருடைய எல்லா பொருள் களையும் மக்களுக்காகக் கொடுத்தவர் அவர்.
நாங்கள் 200 ரூபாய், 250 ரூபாய்க்கு விற்றது என் போம். அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு புத்தகமும் இரண்டணா, நாலணா அளவிற்குத்தான் இருக்கும். உடனே பெரியார் அவர்கள், கைதட்டி, பரவா யில்லையே, இவ்வளவு பேர் இரண்டணா, நாலணா புத்தகங்களை வாங்கியிருக்கிறார்கள் என்று சொன்னால், எவ்வளவு பேருக்கு அந்தப் புத்தகங்கள் படிப்பதற்குப் போயிருக்கும். இந்தக் கூட்டம் வெற்றிகரமாக அமைந் தது - நம்முடைய பிரச்சாரம் நீண்ட காலத்திற்குப் போயிருக்கிறது என்பார்கள்.
18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை!

அதுபோல, இங்கே நம்முடைய கவிஞர் கனிமொழி அவர்களின் மூலமாக விற்கப்பட்ட 60 செட் புத்தகங்கள், 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. ஒரு நல்ல மார்க்கெட் ஏஜெண்ட் எங்களுக் குக் கிடைத்தமைக்கு நன்றி. அடிக்கடி புத்தக வெளியீட்டு விழாவிற்கு அவரை அழைக்கவேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
இந்தப் புத்தகங்களை வாங்குவது முக்கியமல்ல; படியுங்கள் என்று சொன்னார்.
அறிவுப் புரட்சியை உருவாக்கியவர் தலைவர் தந்தை பெரியார்

ஒரு சிறந்த அறிவுப் புரட்சியை உருவாக்கியவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். இந்த நாட்டிலே, படிக்கவே வாய்ப்பில்லாத மக்களுக்குப் படிப்பை சொல்லிக் கொடுத்து, பிறகு எதைப் படிக்கவேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுக்கின்ற இயக்கம் இந்த இயக்கம் - தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கம். அதை நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
பல இடங்களில், தந்தை பெரியார் அவர்களை, பார்ப்பன எதிர்ப்பாளராக மட்டும் காட்டுகிறார்கள்; கடவுள் மறுப்பாளராக மட்டும் சொல்லுகிறார்கள்.
கடவுள் நம்பிக்கை ஒரு பக்கத்தில் இருக்கட்டும்; ஆனால், பெரியார் அவர்களுடைய கருத்துச் சுதந்திரம்,
பெரியார் அவர்களுடைய சமத்துவத்திற்கான போராட்டம்,
பெரியார் அவர்களுடைய பெண்ணுரிமைக்கான போராட்டம் இவைகளையெல்லாம் நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டாமா?'' என்று எனக்கு முன் இங்கே உரையாற்றிய நம்முடைய கவிஞர் கனிமொழி அவர்களும், அய்யா நல்லகண்ணு அவர்களும், கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும், அருள்மொழி அவர்களும் மிகச் சிறப்பான வகையில் எடுத்துச் சொன்னார்கள்.
தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையால், பயன்படாதவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே யாராவது இருக்கிறார்களா?

உங்களுக்குச் சுருக்கமான சில செய்திகளை நினைவூட்டுகிறேன். நேரிடையாக, கருப்புச்சட்டை அணிந்தவர்கள் ஒருபக்கம். அதேநேரத்தில், கருப்புச் சட்டை போடாமல், விபூதி பூசியிருப்பார்; நாமம் போட்டிருப்பார் அல்லது வேறு வகையான சிந்தனைகளுக்கு ஆளாகி, பக்தராகக்கூட இருப்பார் - ஆனால், அவர் உள்பட தந்தை பெரியார் அவர்களுடைய தொண்டால், தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையால், பயன்படாதவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே யாராவது இருக்கிறார்களா? என்று விரல்விட்டு எண்ணிப் பார்க்கவேண்டும். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

பார்ப்பன எதிர்ப்பாளர்கள் என்று தந்தை பெரியார் அவர்களையும், எங்களையும் சொல்கிறார்கள். நாங்கள் அதை பெரிய அளவிற்கு எடுத்துக்கொள்வதில்லை. ஏனென்றால், பார்ப்பனர்களை நாங்கள் தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை; அவர்களுடைய பேதத் தைத்தான் எதிர்க்கிறோம்.
அதற்கு அடுத்த செய்திகளுக்கு வருகிறேன்.
மனிதப் பார்வையோடு பெரியார் பார்த்தார். அந்தப் பார்ப்பன நண்பர்களேகூட கொஞ்சம் ஆற, அமர யோசனை செய்து, வெறுப்புகளில் இருந்து வெளியில் நின்று, மனிதநேயத்தோடு சிந்தித்துப் பார்த்தால், பெரியாரால், இந்த இயக்கத்தால், திராவி டர் இயக்கத்தால், சுயமரியாதை இயக்கத்தால், அவர்கள்தான் அதிகமாகப் பயன்பட்டு இருக்கிறார்கள், எங்களைவிட. இன்னுங்கேட்டால், பெண்கள் வேதம் படிக்கக்கூடாது; வெளியே வரக்கூடாது என்பது எல்லாப் பெண்களுக்கும்தான்.
இந்து மதம் எங்கே போகிறது?''

இந்து மதம் எங்கே போகிறது?'' என்ற நூலினை எழுதிய அக்னிஹோத்திரம் இராமானுஜ தத்தாச்சாரியார் அவர்கள் 101 வயது வரை வாழ்ந்தவர். கடைசி காலத்தில் உண்மையை சொல்லவேண்டும் என்று சொல்லியவர்.
அவர் எழுதிய நூலில்,
பெண்களுக்கும், ஆரியப் பெண்கள், பார்ப்பனப் பெண்களுக்குக்கூட அவர்கள் கொடுத்திருக்கின்ற பெயர் நமோ சூத்திரர்கள்'' என்றுதான்.
அந்தப் பெண் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும் சரி அல்லது அய்.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தாலும் சரி, பார்ப்பனப் பெண்களுக்குக்கூட மனு தர்மம் கொடுத்திருக்கின்ற பெயர் நமோ சூத்திரர்கள்'' என்றுதான்.
அந்தப் பெண்களை வாழவிட்டார்களா? கணவன் இறந்த பிறகு சதி என்ற பெயரில் மனைவியை உயிரோடு எரித்தார்கள். இன்றைக்கு அந்த முறை இல்லை இங்கே. வடநாட்டில் இன்னமும் இருக்கிறது. சதி மாதா கோவில் கட்டி வழிபட்டு வருகிறார்கள்.
இதுபோன்ற சனாதன வழக்கம் இருக்கவேண்டும் என்று சொல்வதுதான் ஆர்.எஸ்.எஸ்., அதனை செயல் படுத்துவதுதான் பா.ஜ.க. அரசு.
எங்களுக்கு என்ன தனிப்பட்ட முறையில் காவியின்மீது கோபம்? மனிதநேயத்திற்கு விரோதம் அல்லவா! கணவன் இறந்தால், மனைவியை உடனே ஓட ஓட விரட்டி, அந்தப் பெண் இளம்பெண்ணாக இருந்தாலும், நெஞ்சில் ஈரமில்லாமல், மனிதநேயம் இல்லாமல், அந்தப் பெண்ணை நெருப்பிலே போட்டு வதைத்தவர்கள். அதனை வெள்ளைக்காரன் தடுத்தான் என்று சொன்னால், இந்தக் கொள்ளைக்காரர்கள் மறுபடியும் அதனைப் புதுப்பிக்கவேண்டும் என்று கேட்கிறார்களே, அதற்குப் பெயர்தான் நண்பர்களே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, இந்து முன்னணி அமைப்பு, இந்துத்துவா தத்துவத்தினுடைய அமைப்பு. அவைக ளெல்லாம் இல்லை என்று சொல்ல முடியாது.
பேயைவிட பேய் பிடித்தவன் அதிகமாக ஆடுவான்!''

இன்றைக்குப் பார்ப்பனப் பெண்களில், விதவைகளாக இருக்கின்ற அந்த சகோதரிகளில் யாரையாவது மொட் டைப் பாப்பாத்தி'' என்று ஒருவரைப் பார்க்க முடியுமா? அப்படி யாராவது கண்டுபிடித்துக் கொடுத்தால், ஒரு லட்சம் ரூபாய் பரிசு கொடுக்கலாம். கண்டிப்பாக கண்டுபிடிக்க முடியாது யாராலும். அதேநேரத்தில், அந்த வெள்ளைப் புடவையை, நம்மாள்களில் சிலர் விடவில்லை, சில ஊர்களில்.
குன்றக்குடி அடிகளார் சொல்வார், பேயைவிட பேய் பிடித்தவன் அதிகமாக ஆடுவான்'' என்பார். இன்றைக்கு மொட்டைப் பாப்பாத்தி என்று மொட்டை அடித்துக் கொள்வதில்லை; வெள்ளைப் புடவை கட்டுவதில்லை. இவையெல்லாம் எப்படி வந்தது? பெரியார் கொடுத்த அருட்கொடை அந்த சமுதாயத்திற்கு. இதனை யாராவது மறுக்க முடியுமா? இன்றைக்குப் பெண்கள் படித்திருக்கிறார்கள். இன்றைக்குப் பெரியார் கொள்கைகள்  வெற்றி பெற்றிருக்கிறது
இன்றைக்கு எப்படிப் பார்த்தாலும், பெரியார் கொள்கைகள்  வெற்றி பெற்றிருக்கிறது.

எல்லோரும் கோவிலுக்குப் போகவேண்டும் என்று அவர்கள் ஆரம்பித்தார்கள்; கோவிலுக்குள் பேதம் இருக்கிறது, போகாதீர்கள் என்று நாங்கள் சொன்னோம்.
இப்பொழுது நிலைமை எப்படி இருக்கிறது என்றால், பெண்களே கோவிலுக்குப் போங்கள் என்று'' போராட்டம்.
பெண்களே கோவிலுக்குப் போகாதீர்கள்'' என்று அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்குச் சென்ற பெண்கள், அங்கே தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி நண்பர்கள் கேட்டார்கள், நாளைக்கு சுவர் அமைக்கும் போராட்டம் நடத்துகின்றோம்; திராவிடர் கழகமும் கலந்துகொள்ளவேண்டும்'' என்று சொன்னார்கள்.
மகளிர் அணியினரை கலந்துகொள்ளச் சொல் கிறோம் என்றோம்.
பிறப்புரிமை' என்ற தலைப்பில் குடிஅரசில் பெரியார் எழுதியது!

பெரியாருக்கு இருந்த சிந்தனை மனிதநேயம். பெரியார் கொள்கை என்ன? சில பேர் பெரியாருடைய கொள்கைளையும், திட்டத்தையும் போட்டு குழப்பிக் கொள்கிறார்கள்.
இதோ என் கைகளில் இருப்பது தந்தை பெரியார் அவர்கள் குடிஅரசு' ஏட்டில் எழுதிய மிகப்பெரிய ஒரு ஆரம்பமான கொள்கை விளக்க உரை.
பிறப்புரிமை'' என்ற தலைப்பில் எழுதியது.
மனிதனின் பிறப்புரிமை சுயமரியாதையே! திராவிடர், ஆரியர் என்றெல்லாம் சொல்லவில்லை அவர். மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு!
மனிதனுக்கு அடையாளமே அதுதானே! மாட்டிடம் போய் அதனை சொல்ல முடியுமா? மாட்டை, மனிதனைவிட காப்பாற்றுகின்ற ஆட்சி ஆயிற்றே இங்கே. அதிலும் பசு மாடாக இருந்தால்தான் காப்பாற்றுவார்கள். எருமை மாட்டை காப்பாற்ற மாட்டார்கள். பசு பாதுகாப்பு என்று ஒரு இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். நாங்கள் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கப் போகிறோம். எருமை மாடு பாதுகாப்பு இயக்கம் என்று.
இன்னுங்கேட்டால், பசு மாட்டைவிட, எருமை மாடுதான் அதிகமான அளவிற்கு பால் கொடுக்கிறது.
ஈ.வெ.கி.சம்பத் அவர்களும், கே.எஸ்.ராமசாமி அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும்பொழுது, ரஷ்ய நாட்டிற்குச் சென்றிருந்தார்கள். அப்படி செல்கையில், அங்கே உள்ள ஆரம்பப் பள்ளிகள் எப்படி நடைபெறுகின்றன என்பதை பார்க்கவேண்டும் என்று சொல்லி, அந்தப் பள்ளிகளைப் பார்வையிடச் சென்றார்கள்.
அங்கே பயில்கின்ற பிள்ளைகளின் அறிவுக்கூர்மை யைப் பார்க்கவேண்டுமே - இவர்களை வரவேற்று அவர்களுக்குப் பூச்செண்டுகளை அளித்தனர்.
இவர்களும் அந்தப் பள்ளியைப் பார்த்துவிட்டு, திரும்பிச் செல்லலாம் என்று நினைக்கையில்,
அந்தப் பள்ளியில் பயிலும் ஒரு பிள்ளை, நீங்கள் வருகிறீர்கள் என்றவுடன், இந்தியாவைப்பற்றி நூலகத்திற்குச் சென்று படித்தோம். சில சந்தேகங்கள் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனை உங்களிடம் கேட்கலாம் என்று நினைக்கிறோம்'' என்று சொன்னார்.
இவர்களும், சின்ன பிள்ளைகள்தானே, அப்படி என்ன சந்தேகம் கேட்கப் போகிறார்கள் என்று நினைத்து, சரி என்று சொன்னார்கள்.
ஒரு பிள்ளை எழுந்து, உங்கள் நாட்டில், பசு மாட்டை கும்பிடுகிறீர்களாமே? மாட்டைப் போய் கும்பிடலாமா? அதற்கு என்ன காரணம்?'' என்று கேட்டார்.
சம்பத் அவர்கள், அரசியலில் என்னதான் மாறு பட்டவராக இருந்தாலும், அடிப்படையில் பகுத்தறிவு வாதி. அதிலிருந்து மாறியவர் கிடையாது.
கே.எஸ்.ராமசாமி அவர்கள், காங்கிரசுகாரர்; அமைச் சராக இருந்தார் பின்னாளில். அவரைப் பார்த்து, இவர் பதில் சொல்வார் என்றார் சம்பத்.
கே.எஸ்.ராமசாமி அவர்களும், சின்ன பிள்ளைகள் தானே என்று நினைத்துக்கொண்டு, பசு மாட்டை நாங்கள் கும்பிடுவது  உண்மைதான். அதற்கு என்ன காரணம் என்றால், அது நிறைய பால் கொடுக்கிற தல்லவா, அந்த நன்றி உணர்ச்சிக்காக நாங்கள் அதனைக் கும்பிடுகிறோம்; அதை கோமாதா என்று நினைக்கிறோம்'' என்றார்.
எருமை மாடு அதைவிட அதிகமாகப் பால் கொடுக்கிறதே, அதை ஏன் நீங்கள் கும்பிடவில்லை?''

உடனே இன்னொரு பிள்ளை எழுந்து, எருமை மாடு அதைவிட அதிகமாகப் பால் கொடுக்கிறதே, அதை ஏன் நீங்கள் கும்பிடவில்லை?'' என்று கேட்டார்.
அதைப்பற்றி யோசிக்கிறோம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்கள்.
எதற்காக இந்தச் செய்தியை சொல்கிறோம் என்றால், நம் நாட்டில் மாடுகளில்கூட மிகப்பெரிய அளவிற்கு பேதம். எனவே, பேதமிலா பெருவாழ்வு என்பதுதான் பெரியாருடைய தத்துவம்.
-  விடுதலை நாளேடு, 9.1.19

புதன், 19 டிசம்பர், 2018

தந்தை பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்

நாள்: 24.12.2018 திங்கள் மாலை 6.30 மணி

இடம்: காரணீசுவரர் கோயில் தெரு, தேரடி, சைதாப் பேட்டை, சென்னை-15

தலைமை: எம்.பி. பாலு (பொதுக்குழு உறுப்பினர்)

வரவேற்புரை: இரா.வில்வநாதன் (தென்சென்னை மாவட்ட தலைவர்)

முன்னிலை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்), சி.செங் குட்டுவன் (மாவட்ட துணைத் தலைவர்), டி.ஆர்.சேதுராமன் (மாவட்ட துணை தலைவர்), கு.அய்யாத்துரை (திராவிடர் கழகம்), கோ.வீ.ராகவன் (மாவட்ட துணை செயலாளர்), சா.தாமோதரன் (துணை செயலாளர்), ச.மகேந்திரன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), ந.மணித்துரை ( மாவட்ட இளைஞரணி செயலாளர்)

சிறப்புரை: தமிழர்தலைவர்

ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

ஆர்.நல்லக்கண்ணு

(இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்),

கவிஞர் கனிமொழி எம்.பி.,

(மாநில மகளிரணி செயலாளர், திமுக)

கவிஞர் கலி.பூங்குன்றன்

(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

மா.சுப்பிரமணியன் (சைதை சட்டமன்ற உறுப்பினர், திமுக மாவட்ட செயலாளர்)

வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்)

அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்),

த.வீரசேகரன் (வழக்குரைஞரணித் தலைவர்), ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்),

ஆ.வீரமர்த்திணி(வழக்குரைஞர் அணி), வி.பன்னீர்செல்வம் (அமைப்பு செயலாளர்), தி.இரா.ரத்தினசாமி (மண்டலத் தலைவர்),

தே.செ.கோபால் (மண்டல செயலாளர்), சு.குமாரதேவன் (வடசென்னை மாவட்டத் தலைவர்),

ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்), ஆர்.டி.வீரபத்திரன் (சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர்),

பா.தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்), த.ஆனந்தன் (கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர்),

வெ.மு.மோகன் (திருவொற்றியூர், மாவட்ட தலைவர்),

த.க.நடராசன் (திராவிடன் நிதி தலைவர்),

பா.மணியம்மை (திராவிடர் மாணவர் கழக (மகளிர் பாசறை) இணைச் செயலாளர்), சைதை தென்றல் (சைதாப்பேட்டை தலைவர்)

   தியாகராய நகர் ஏழுமலை, செ.கனகா, அ.செல்வராசன், கௌதம் சொக்கையா, விருகை நாதன்,  க.தமிழ்செல்வன், கோ.மஞ்சநாதன், அரங்க.சுரேந்தர், ந.இராமச்சந்திரன், அ.பாபு, ச.மாரியப்பன், ரா.ரவி, மு.கோபால், ச.பாஸ்கர், மு.சேகர், மு.ஆனந்தன், மு.முகிலன், இரா.பிரபாகரன், கு.செல்வேந்திரன், ச.தாஸ், மு.சண்முகப்பிரியன், ஈ.குமார், அய்ஸ் அவுஸ் அன்பு, வி.வளர்மதி, க.விசயராசா, ச.துணைவேந்தன், சிவக்குமார்


மாலை 5 மணிக்கு திருத்தணி பன்னீர்செல்வம் அவர்களின் இசைநிகழ்ச்சி

 நன்றியுரை:- மு.ந.மதியழகன்(மாவட்ட அமைப்பாளர்


நிகழ்ச்சி ஏற்பாடு: தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம்