தென்சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தென்சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

தென்சென்னை முழுவதும் தொடர் தெருமுனைப் பிரச்சார கூட்டங்கள் நடத்த கலந்துரையாடலில் முடிவு

 

சென்னை, ஜூலை 27– தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 25.7.2026 அன்று மாலை 6.30 மணிக்கு அய்ஸ்அவுஸ் ஆர்.வி.ஆட்டோ கடையில் நடைபெற்றது. பொதுக் குழு உறுப்பினர் கோவி.ராகவன் கடவுள் மறுப்பு கூறினார்.

நீட் ஒழிப்பு, இரு சக்கர வாகனம் பரப்புரைப் பயணம். தந்தை பெரியார் பிறந்த நாள், விடுதலை சந்தா மற்றும் கூட்டத்தின் நோக்கம் விளக்கி மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் உரையாற்றினார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பெரியார் யுவராஜ் பரப்புரை பயணத்தின் மிக அவசியம், இளைஞர்கள் தோழர்கள் கலந்து கொள்வது மிக முக்கியம் என்பதை விளக்கி பேசினார். மாவட்ட துணை தலைவர் நான்கு நாட்கள் பரப்புரை பயணத்தில் பங்கேற்பதாகவும், இந்த பரப்புரை பயணம் அய்ஸ் அவுஸ் ஆயிரம் விளக்கு பகுதிகளில் தெருமுனை கூட்டம் போல் நடத்த வேண்டும் என்றும் பேசினார். மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மாரிமுத்து பரப்புரை பயணத்தில் பங்கேற்பதாகவும், தொடர் பரப்புரை பயணம் நமக்கு மிகப்பெரிய அளவுக்கு ஒரு பிரச்சார பயணமாக அமைய வேண்டும் என்றும் பேசினார்.

தொடர்ந்து மாவட்ட துணை தலைவர் சேதுராமன், சூளைமேடு ராமச்சந்திரன், சைதை ரவி பேசினர். அதனை தொடர்ந்து நான்கு நாள்கள் தொடர் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்தில் இரண்டு இரு சக்கர வாகனம் நான்கு நாள்கள் கலந்து கொள்வதென்றும் அய்ஸ் அவுஸ் பகுதியில் இருந்து தொடங்கும் போது 15 இருசக்கர வாகனம் பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் அய்ஸ் அவுஸ்ஆயிரம் விளக்கு பகுதியில் பரப்பரை என்பது தெருமுனைப் பிரச்சாரமாக நடத்திட வேண்டுமென்றும், தந்தை பெரியார் பிறந்த நாள் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இருந்து தென்சென்னை முழுக்க தொடர் தெருமுனைப் பிரச்சாரம் கூட்ட நடத்துவது என்றும், கடந்த விடுதலைச் சந்தாவை மீண்டும் தொடர்ந்து  புதுப்பிப்பது என்றும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அய்ஸ் அவுஸ்அன்பு நன்றி கூறினார்

கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற தோழர்கள்: மாவட்ட துணை தலைவர் மு.சண்முக பிரியன், மாவட்ட இளைஞரணி தலைவர் மணித்துரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் யுவராஜ், மாவட்ட துணை இளைஞரணி செயலாளர் மாரிமுத்து, அய்ஸ் அவுஸ் அன்பு அப்துல்லா, உதயன், கோவி ராகவன், பி டி சி ராஜேந்திரன், பி.டி.சி. செல்வம் சைதை ரவி அய்ஸ் அவுஸ் தர்மா, தெய்வ சிகாமணி, ம.இனியா, சிவா.


- விடுதலை நாளேடு, 27.07.26

ஞாயிறு, 1 மார்ச், 2026

திருவொற்றியூர், வடசென்னை, தென்சென்னை மாற்றிமைக்கப்பட்ட பகுதிகள், பொறுப்பாளர்கள் விவரம்

‘மேற்கு சென்னை’ புதிய மாவட்டமாகச் செயல்படும்!

திருவொற்றியூர், வடசென்னை, தென்சென்னை மாற்றிமைக்கப்பட்ட பகுதிகள், பொறுப்பாளர்கள் விவரம்

சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் தலைவர் அறிவிப்பு

திருவொற்றியூர் மாவட்டம்

மாவட்டத் தலைவர் – வெ.மு.மோகன்

மாவட்டச் செயலாளர் – ந.இராசேந்திரன்

மாவட்டத் துணைத் தலைவர் – எம்.ஆர்.எப்.சேகர்

மாவட்டத் துணைச் செயலாளர்கள் – செல்வம், வாசு

1.புது வண்ணை

2.பழைய வண்ணை

3.கொடுங்கையூர்

4.இராயபுரம்

5.திருவொற்றியூர்

6.காசிமேடு

7.மணலி

8.மாத்தூர்

9.எலந்தஞ்சேரி

10.மாதவரம்

11.எண்ணூர்

12.கத்திவாக்கம்

வடசென்னை மாவட்டம்

மாவட்டக் காப்பாளர் – கி.இராமலிங்கம்

மாவட்டத் தலைவர் – தளபதி பாண்டியன்

மாவட்டச் செயலாளர் – புரசை சு.அன்புச்செல்வன்

மாவட்டத் துணைத் தலைவர்கள் – நா.பார்த்திபன், பாலமுருகன்

மாவட்டத் துணைச் செயலாளர் – வ.தமிழ்ச்செல்வன்

மாவட்ட இளைஞரணித் தலைவர் – ஓட்டேரி ந.கார்த்திக்

மாவட்ட இளைஞரணிச் செயலாளர் – பா.பார்த்திபன்

  1. புளியந்தோப்பு
  2. வியாசர்பாடி
  3. பெரம்பூர்
  4. மகாகவி பாரதியார் நகர்
  5. கவிஞர் கண்ணதாசன் நகர்
  6. பெரியார் நகர்
  7. கொளத்தூர்
  8. அண்ணா நகர் – திருமங்கலம்
  9. அயனாவரம்
  10. கீழ்ப்பாக்கம்
  11. புரசைவாக்கம்
  12. வேப்பேரி
  13. பாரிமுனை
  14. எருக்கஞ்சேரி
  15. பட்டாளம்
  16. ஓட்டேரி
  17. வில்லிவாக்கம்,
  18. அமைந்தகரை
  19. மண்ணடி
  20. சூளை

தென்சென்னை மாவட்டம்

மாவட்டக் காப்பாளர் – சைதை மு.ந.மதியழகன்

மாவட்டத் தலைவர் – இரா.வில்வநாதன்

மாவட்டச் செயலாளர் – செ.ர.பார்த்தசாரதி

மாவட்டத் துணைத் தலைவர்கள்
– டி.ஆர்.சேதுராமன், மு.சண்முகப்பிரியன்

  1. எழும்பூர்
  2. சேத்துப்பட்டு
  3. நுங்கம்பாக்கம்
  4. சூளைமேடு
  5. சைதாப்பேட்டை
  6. புதுப்பேட்டை
  7. சிந்தாதிரிப்பேட்டை
  8. ஆயிரம் விளக்கு
  9. தேனாம்பேட்டை
  10. ராயப்பேட்டை
  11. நந்தனம்
  12. ஆழ்வார்பேட்டை
  13. சேப்பாக்கம்
  14. திருவல்லிக்கேணி
  15. நொச்சி நகர்
  16. பட்டினப்பாக்கம்
  17. மயிலாப்பூர்
  18. மந்தைவெளி
  19. ராஜா அண்ணாமலைபுரம்
  20. கோட்டூர்புரம்
  21. அடையாறு
  22. திருவான்மியூர்

மேற்கு சென்னை மாவட்டம்

புதிய பொறுப்பாளர்கள்

மாவட்டத் தலைவர் – கரு.அண்ணாமலை

மாவட்டச் செயலாளர் – ராமபுரம் க.சுப்பிரமணி

  1. அரும்பாக்கம்
  2. எம்.எம்.டி.ஏ. காலனி
  3. கோயம்பேடு
  4. வடபழனி
  5. சாலிகிராமம்
  6. சின்மயா நகர்
  7. விருகம்பாக்கம்
  8. வளசரவாக்கம்
  9. ராமாபுரம்
  10. கே.கே.நகர்
  11. அசோக்நகர்
  12. ஆழ்வார் திருநகர்
  13. ஜாபர்கான்பேட்டை
  14. ஈக்காட்டுதாங்கல்
  15. கிண்டி
  16. கத்திபாரா – ஆலந்தூர்
  17. கோடம்பாக்கம்
  18. தியாகராயர் நகர்

- விடுதலை நாளேடு, 01.03.2026

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் திராவிடர் கழக சென்னை மாவட்டகளின் கலந்துரையாடல் கூட்டம் 28.02.2026 மாலை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றது.

திருவொற்றியூர், வடசென்னை, தென்சென்னை மாற்றிமைக்கப்பட்ட பகுதிகள், பொறுப்பாளர்கள் மாற்றியமைக்கப்பட்டனர்.

'மேற்கு சென்னை’ என்று புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டது.