தென் சென்னை கழக மாவட்டம் திருவல்லிக்கேணி, அய்ஸ் அவுஸ் பகுதியில் “தெருமுழக்கம் பெருமுழக்கம் ஆகட்டும்” பரப்புரைக் கூட்டம்
திருவல்லிக்கேணி, மார்ச் 30- தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் திரு வல்லிக்கேணி அய்ஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள அன்னி பெசன்ட் சாலை மற்றும் இரு சப்ப தெரு இணையும் இடத் தில் 22.03.2024 மாலை 6.30 மணி அளவில் அன்னை மணி யம்மையாரின் 105 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ”இந் தியா கூட்டணி வெல்ல வேண் டும் ஏன்?’ “தெரு முழக்கம் பெரு முழக்கமாகட்டும்” என்கின்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை கூட்டம், தென் சென்னை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ச. மகேந்திரன் தலை மையிலும் தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன் மாவட்ட துணைச் செயலாளர் சா. தாமோதரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் செ. ர.பார்த்தசாரதி வரவேற்புரை ஆற்றினார்.
கழக துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச. இன்பக்கனி தொடக்க உரை யாற்றினார்.
கழக மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரை ஞர் பா.மணியம்மை முதன்மை உரையாற்றினார். அவரின் உரைக்கு பின் கிராமப் பிரச் சாரக் குழு கழக மாநில அமைப் பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன் சிறப்புரையாற்றி னார்.
அவரது உரையில்; “தமிழ் நாடு ஆளுநர் அவர்கள், தமிழ் நாடு அரசு சொல்வதை செய்ய மாட்டேன்; உன்னால் முடிந் ததை செய் என்றார்; உச்ச நீதிமன்றம் கட்டளை இட்ட பிறகும் அடம் பிடித்தார் ஆளு நர்! மீண்டும் உச்சநீதிமன்றம் கண்டித்ததற்கு பிறகு தமிழ்நாடு அரசுக்கு பணிந்தார் ஆளுநர், இத்தனை அவமானங்களுக்கு பிறகு மீண்டும் அமைச்சர் க.பொன்முடி அவர்களுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார்.
ஒன்றிய அரசு யாரை அனுப் பினாலும் அவரை பணிய வைப்பதில் சிறந்தவர் நமது முதலமைச்சர் மு.க .ஸ்டாலின். திட்டமிட்டு தமிழ்நாட்டு மாணவர்களை மருத்துவம் படிக்க விடாமல் செய்ய மாநில பாடத்திட்டத்தில் கேள்வி கேட்காமல், சிபிஎஸ்சி பாடத் திட்டத்தில் கேள்விகளை கேட்கும் வகையில் நீட்டைக் கொண்டு வந்தார்கள்.
நமது மருத்துவ கட்ட மைப்பு இந்தியாவிலேயே சிறந்த கட்டமைப்புடையதா கும். தமிழ்நாட்டு மருத்துவர் கள் சிறந்த முறையில் மருத்து வம் பார்க்கிறார்கள். வெளி மாநில நோயாளிகள் தமிழ் நாட்டிற்கு வந்து மருத்துவம் பார்த்துக் கொண்டு செல்கிறார் கள். தமிழ்நாட்டு மருத்துவர் கள் இந்த நோயை சரி செய்ய முடியாது என்று கூறிவிட் டால், எந்த நாட்டிற்கு சென்றா லும் அந்த நோயை சரி செய்ய முடியாது; அந்த அளவிற்கு கெட்டிக்காரர்கள் தமிழ் நாட்டு மருத்துவர்கள்.
உயர்கல்வியில் இந்தியாவி லேயே தமிழ்நாடு முன்னணி யில் உள்ளது. ஆல் இந்தியா டாப்பர்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளனர்.
நாம் பிஜேபி என்கிற பார்ப் பன ஜனதா கட்சியை தோற் கடிக்க வேண்டும்! இந்தியா கூட்டணி வென்று இந்தியாவே திராவிட மாடல் ஆட்சியாக ஆகப்போகிறது என்று நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்கள்.
நீட்டை ஒழிக்கவும், ஜிஎஸ் டியை ஒழித்துக் கட்டவும், பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவைகளின் விலையை குறைக்கவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், விவசாய பொருள்களின் குறைந்த பட்ச ஆதார விலையை நிர் ணயிக்கவும், இந்தியா முழுக்க பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கவும், பெண்க ளுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கவும், தேசிய அடிமட்ட (குறைந்தபட்ச) நாள் கூலியை ரூ.179லிருந்து ரூ400ஆக உயர்த் தவும், தேசிய ஊரக 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக மாற்றவும் நாள் கூலியை ரூ400 ஆக உயர்த்தவும் இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கை மூலம் உறுதி அளித்துள்ளது. கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
அமையப்போகிற ஆட்சி, கூட்டணி ஆட்சியாக அமைய விருக்கிறது. ஆகையால் அனை வரும் இந்தியா கூட்டணியை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்!
தென் சென்னை நாடாளு மன்ற இந்தியா கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனை ஆதரித்தும், அதேபோல் மத்திய சென்னை யில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்தும் உதயசூரியன் சின்னத்தில் வாக் களித்து அமோக வெற்றி பெற செய்யுங்கள்.” என்று கூறினார்.
மாமன்ற உறுப்பினர் மங்கை ராஜ்குமார் மற்றும் கேரள என்.ரவி (திராவிட முன் னேற்றக் கழக 120ஆ வட்ட செயலாளர்) வருகை தந்து சிறப்பித்தனர். உரையாற்றிய வர்களுக்கு பயனாடை அணி வித்து சிறப் பிக்கப்பட்டது.
துணைப் பொதுச்செயலா ளர் வழக்குரைஞர் ச. பிரின்சு என்னாரசு பெரியார், மாநில தொழிலாளர் அணி பொரு ளாளர் கூடுவாஞ்சேரி இராசு, தென் சென்னை மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.மாரியப்பன், மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர் மு. சண்முகப்பிரியன், தென் சென்னை மாவட்ட இளைஞ ரணி செயலாளர் ந.மணிதுரை, துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, செய. குசேலன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி, மாவட்ட மகளிர் அணி தலைவர் வி.வளர்மதி, செயலாளர் பி.அஜந்தா, பெரியார் சுயமரி யாதை திருமண நிலைய இயக் குநர் பசும்பொன், மா.தமிழரசி, ஜெ.சொப்பன சுந்தரி, மு.பாரதி, வி.சகானாப்பிரியா, ஜெயசங்கரி, மயிலை ஈ.குமார், கோ. தங்கமணி, தங்க. தன லட்சுமி, வடசென்னை மகளிர் பாசறை தலைவர் த.மரகதமணி, ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் நா.பார்த்திபன், இரா.அருள், க.செல்லப்பா, எஸ். செல்வம், ச.இன்பத்தமிழன், உதயசூரியன், மு.திருமலை, இராயப்பேட்டை கோ.அரி, கா.சுந்தர், எ.தினேஷ்குமார், பேரறிவன் சேய், வை.கலையர சன், உடுமலை வடிவேலு, அசோக், இனியன், திராவிட முன்னேற்றக் கழக 120அ வட்ட தோழர்களும் பொதுமக் களும் கலந்து கொண்டு கூட் டத்தை சிறப்பித்தனர்.
இறுதியாக எஸ்.அப்துல்லா நன்றி கூறினார். கூட்டம் முடிந்த பின் வந் திருந்த அனைவருக்கும் சிற் றுண்டி வழங்கப்பட்டது.