சனி, 29 ஜூலை, 2023

தென்சென்னை மந்தைவெளி பகுதியில் நடை பெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்


18

மந்தைவெளி, ஜூலை 29- தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் மந்தைவெளி இளைஞர் அணி சார்பில் “வைக்கம் போராட்ட நூற்றாண்டு - முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு” தெருமுனைப் பிரச்சார கூட்டம் 26.7.2023 அன்று மாலை 6 மணி அளவில் மந்தைவெளி பகுதி செயின்ட் மேரிஸ் பாலம் அருகில் நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இரா.மாரிமுத்து கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தலைமைக் கழக அமைப்பாளர்கள் தே.செ.கோபால், வி.பன்னீர்செல்வம், மாவட்டத் தலை வர் இரா.வில்வநாதன், மாவட்டத் துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், மாவட்டத் துணைச் செயலாளர் சா.தாமோதரன் முன்னிலை வகித்தனர்.

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.சண்முகப்பிரியன் தொடக்க உரையாற்றினார்.

துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் 

சே.மெ. மதிவதனி முதன்மை உரையாற்றினார்.

அதற்கடுத்து கழகப் பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வன் எழுச்சிமிகு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த 

இரா.மாரிமுத்துவுக்கும் மற்றும் பேச்சாளர்களுக்கும் பயனாடை அணிவித்துப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, மயிலை ஈ.குமார், வட சென்னை மாவட்ட செயலாளர் சு.அன்புசெல்வன், சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பி.சி.செய ராமன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி, ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், வி.வளர்மதி, பி.அஜந்தா, மா.சண்முகலட்சுமி, மா.தமிழரசி, மா.ஜெயலட்சுமி, மா.இனியவள், சா.இன்பக்கதிர், திமுகவை சேர்ந்த கோகுல், கந்தசாமி, மற்றும் எழுத்தாளர் சாலமுத்து ஆகியோருடன் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் செவிமடுத்தனர்.

கூட்டத்தின் முடிவில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இரா.மாரிமுத்து கழகக் கொடி ஏற்றினார்.

நிகழ்ச்சியின் முடிவில் ஆ‌பன்னீர் நன்றி உரை யாற்றினார்.வியாழன், 27 ஜூலை, 2023

மணிப்பூர் பி.ஜே.பி. ஆட்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை!சென்னையில் கழக மகளிரணி - மகளிர் பாசறையினர் ஆர்ப்பாட்டம்! மணிப்பூர் பி.ஜே.பி. ஆட்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை!

மாநில அரசே ராஜினாமா செய்! பிரதமரே நாடாளுமன்றத்தில் பதில் சொல்க!!

ஓங்கட்டும்! ஓங்கட்டும்!! பெண்ணுரிமைப் புரட்சி ஓங்கட்டும்!!!

வெடிக்கட்டும்! வெடிக்கட்டும்!! பெண்கள் கிளர்ச்சி வெடிக்கட்டும்!!!

1

சென்னை, ஜூலை 26 மணிப்பூரில் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன் கொடுமையைக் கண்டித்தும், இன, மத மோதலைத் தூண்டிவிடும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்தும் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் இன்று (26.7.2023) 11 மணிக்கு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

மணிப்பூரில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும், அங்கு கடந்த மூன்று மாதங்களாக மக்கள் வேட்டையாடப்பட்டும், ஒன்றிய அரசோ, மாநில அரசோ பாராமுகம் மட்டு மல்லாமல், துணைபோகும் நிலையைக் கண்டித்தும், திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை சார்பில் பெருந்திரளான மகளிர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட் டம் இன்று (26.7.2023) முற்பகல் சென்னையில் நடைபெற்றது.

மணிப்பூரில் மைதேயி - குகி சமூகத்தவர்களிடை யேயான மோதலால் விளைந்த வன்முறை, கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகத் தொடர்வது வேதனைக்குரியது. பெண்கள்மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை களும் பல நாள்களுக்குப் பின்னர் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.

மணிப்பூரில் சமவெளியில் வாழும் மைதேயி சமூகத் தினருக்குப் பட்டியல் பழங்குடியினர் தகுதி வழங்கு வதற்கு ஆதரவாக அம்மாநில உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு, அம்மாநிலத்தின் மலைவாழ் பழங்குடி சமூக மான குகி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த மே மாதம் 3 ஆம் தேதியன்று தொடங்கிய மோதலில் நூற் றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக் கணக்கானோர் காயமடைந்தனர், வீடுகளை இழந்துள் ளனர்.

பெரும்பான்மை மக்களாக இருக்கக் கூடிய மைதேயி சமூகத்தைச் சார்ந்தவர்கள் சிறுபான்மையாக இருக்கக் கூடிய பழங்குடியினரை வீடு புகுந்து தாக்கியும், படு கொலை செய்தும், வீடுகளை இடித்தும், தீ வைத்தும் கோரதாண்டவம் ஆடியுள்ளனர்.

இந்த மணிப்பூர் கலவரம் உலக அரங்கில் இந்தி யாவைத் தலைக்குனிய செய்துவிட்டது.  வன்முறையாளர் கள் எந்த அளவுக்குச் சென்றுள்ளனர் என்பதற்கு 19.7.2023 அன்று வெளிவந்த வீடியோ காட்சி நாட்டையே உலுக்கிவிட்டது.

மணிப்பூரில் வெறிபிடித்த ஒரு கும்பலால் பழங்குடி யினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடு மைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வின் காட்சிகளே அவ்வீடியோ காட்சியில் இடம்பெற்றிருந்தன.

பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் காலிகளிடம் எங்களைப் பிடித்துக் கொடுத்தவர்களே காவல்துறை யினர்தான் என்று கண்ணீரும், கம்பலையுமாகக் கூறி யிருப்பதும் நம் உயிர் ஓட்டத்தையே உறைய வைக்கிறது.

''நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா அல்லது காட்டுமிராண்டி விலங்குகள் உலவும் காட்டில்தான் வாழ்கிறோமா'' என்ற வினாவை இந்திய மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் நடக்கும் நிகழ்வுகள் பட்டவர்த் தனமாகத் தெரிவிக்கின்றன.

கடந்த மூன்று மாதங்களாக அம்மாநிலத்தில் சிறு பான்மை பழங்குடி மக்கள் குறி வைத்துத் தாக்கப்படு கின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பி.ஜே.பி. ஆட்சி இதற்குத் தூண்டுகோலாகவும், துணைபோவ தாகவும் இருக்கிறது என்று பாதிக்கப்பட்ட மக்களும், அனைத்துக் கட்சியினரும் ஒரே குரலில் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த ஒன்பது ஆண்டுகாலமாக ஒன்றிய பி.ஜே.பி. அரசின் ஆட்சியில் சிறுபான்மை சமூக மக்களும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரான ஒடுக்கப்பட்ட மக் களும் படும் அவதிக்கும், உயிர்ப் பலிக்கும் அளவேயில்லை.

''நெஞ்சம் பொறுப்பதில்லையே'' என்னும் நிலையில், ''இனியும் ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சி தொடர - மீண்டும் அதிகாரத்தில் அமர கிஞ்சிற்றும் உரிமை இல்லை - தகுதியில்லை'' என்பதே இந்திய மக்களின் எண்ண ஓட்டமாக உள்ளது.

''நாகரிகமும், மனித உரிமையும், ஜனநாயகமும், மதச்சார்பின்மையும், சமூகநீதியும் உயிர்ப் பிழைக்க ''இந்திய'' மக்களே ஒரே குரலில் எழுவீர்! வாக்குச் சீட்டால் பாசிசத்திற்கு மரணவோலை எழுதுவீர்! எழுதுவீர்!!'' என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 21.7.2023 அன்று அறிக்கை விடுத்திருந்தார்.

அதற்கேற்ப இன்று (26.7.2023) காலை 11 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறையின் சார்பில், மணிப் பூரில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை களைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி தலைமையில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணி யம்மை வரவேற்புரையாற்றினார்.

திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆர்ப்பாட்டத் தொடக்கவுரையாற்றினார். திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, திராவிட முன்னேற்றக் கழக மகளிரணி, மாநில சமூக வலைதள பொறுப்பாளர் மருத்துவர் ப.மீ.யாழினி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், உழைக்கும் பெண்கள் அமைப்பின் தேசிய கன்வீனர் தோழர் வகிதா நிஜாம்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் தோழர் வி.தனலட்சுமி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் கொள்கை பரப்புச் செயலாளர் தோழர் உமா ஆகியோர் ஆர்ப்பாட்ட கண்டன உரை நிகழ்த்தினர். திராவிடர் கழக மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி இணைப்புரை வழங்கினார்.

முன்னதாக இவ்வார்ப்பாட்டத்திற்கு பசும்பொன், சி.வெற்றிச்செல்வி, பூவை.செல்வி, பண்பொளி, நூர்ஜஹான், வளர்மதி, மு.ராணி, விஜயலட்சுமி, யுவராணி, அஜந்தா, மு.பவானி, பொன்னேரி செல்வி, உத்ரா பழனிச் சாமி, அருணா பத்மாசூரன், சுகந்தி, நதியா, இளையராணி, லலிதா, க.சுமதி, த.மரகதமணி, அன்புச்செல்வி, தலைமைக் கழக அமைப்பாளர்கள் தே.செ.கோபால், வி.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிறைவாக திராவிடர் கழக மகளிரணியின் தாம்பரம் மாவட்டத்  தலைவர் இறைவி நன்றி கூறினார்.

இவ்வார்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தையன், மோகன்ராஜ், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் ஆனந்தன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.


6

மணிப்பூரில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து திராவிடர் கழக மகளிர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொறுப்பாளர்கள் ஒலிமுழக்கம்! (சென்னை, 26.7.2023)

 மணிப்பூரின் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை நடத்தும் ஆர்ப்பாட்ட முழக்கங்கள்! (26.7.2023 சென்னை)

ஒழிக ஒழிக ஒழிகவே

ஒடுக்குமுறைகள் ஒழிகவே!


எந்தப் போர்கள் என்றாலும்

எங்கே கலவரம் நடந்தாலும்

முதற்பலி எல்லாம் பெண்களா?


அன்று அங்கே ஈழத்தில்

நேற்று மோடியின் குஜராத்தில்

இன்று இங்கே மணிப்பூரில்

எங்கு வன்முறைகள் நடந்தாலும்

பெண்கள் தான் இலக்குகளா?

பற்றி எரியது பற்றி எரியது!

மணிப்பூர் மாநிலம் பற்றி எரியுது!


நெஞ்சம் பதறுது நெஞ்சம் பதறுது

பழங்குடி மக்களைப் படுகொலை செய்வதும்

கூட்டுப் பாலியல் வன்முறை நிகழ்வதும்

கொடுமைகள் கேட்டு நெஞ்சம் பதறுது


காவல்துறையின் ஆயுதங்கள்

வன்முறையாளர் கரங்களிலா?

பாஜகவின் அரசு எந்திரம்

வன்முறையாளருக்குப் பாதுகாப்பா?


டபுள் என்ஜின் பாஜகவின்

மாநில அரசின் மக்களைக் கொல்லுது

ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்குது 

இந்திய அரசே வெட்கம் வெட்கம்!

மகளிரைக் காக்கத் தவறுகின்ற

இந்திய அரசே வெட்கம் வெட்கம்!


களையப்பட்டவை ஆடைகளல்ல

இந்திய மக்களின் இறையாண்மை!


'பேட்டி' 'பச்சாவ்' என்பதெல்லாம்

மோடி மஸ்தான் வெறும்பேச்சா?


பா.ஜ.க. ஆளும் மணிப்பூரில்

மோடி சாயம் வெளுத்தாச்சா?


ஒன்றிய அரசே! ஒன்றிய அரசே!

மவுனம் ஏன்? மவுனம் ஏன்?


பதில் சொல்! பதில் சொல்!

நாடாளுமன்றத்தில் பதில் சொல்!


பதவி விலகு பதவி விலகு

மணிப்பூர் கலவரத்தை வேடிக்கை பார்க்கும்

ஒன்றிய அரசே பதவி விலகு!


மக்களைக் காக்கத் தவறுகின்ற

ஒன்றிய அரசே பதவி விலகு!

மகளிரைக் காக்கத் தவறுகின்ற

ஒன்றிய அரசே பதவி விலகு!


கொடுமை கொடுமை மணிப்பூர் கொடுமை

வேடிக்கை பார்ப்பது அதனினும் கொடுமை!


வீதிக்கு வாரீர் மகளிரே!

வீதிக்கு வாரீர் மாணவரே!

குஜராத் மணிப்பூர் மாதிரிகள்

நாடு முழுவதும் நடக்காமல்

தடுக்க வாரீர் இளைஞர்களே!


ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின்

ஆட்சி இங்கே யாருக்கு?

ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பறிப்பு

பிற்படுத்தப்பட்டோர்க்கு வாய்ப்பு மறுப்பு

பழங்குடி மக்களின் வாழ்க்கை அழிப்பு

சிறுபான்மையோரின் உரிமை அழிப்பு

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின்

ஆட்சி இங்கே யாருக்கு?

பார்ப்பன பனியா ஆதிக்கத்துக்கு

சனாதனக் கூட்டத்துக்கு

சங்கிகளின் கொட்டத்துக்கு!


தூக்கியெறிவோம் தூக்கியெறிவோம்!

ஒன்றிய பா,ஜ,க,அரசினையே

ஜனநாயக வழியில் தூக்கியெறிவோம்!


ஓங்கட்டும்! ஓங்கட்டும்!

மகளிர் உரிமை ஓங்கட்டும்!


திராவிடர் கழக மகளிரணி மற்றும்

திராவிட மகளிர் பாசறை


மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து கழக மகளிர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்

சென்னை, ஜூலை 28 - மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித் தும், அங்கு கடந்த மூன்ற மாதங் களாக மக்கள் வேட்டையாடப் பட்டும், ஒன்றிய அரசோ, அம் மாநில அரசோ பாராமுகம் மட்டு மல்லாமல், துணை போகும் நிலை யைக் கண்டித்தும், திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மக ளிர் பாசறை சார்பில் சென்னையில் 26.7.2023 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் வருமாறு:

வழக்குரைஞர் அருள்மொழி, ச.இன்பக்கனி, செ.மெ.மதிவதனி, தகடூர் தமிழ்ச்செல்வி, பா.மணி யம்மை, பசம்பொன், வீரமர்த்தினி, இறைவி, மு.செல்வி (பூவை), உத்ரா பழனிச்சாமி, மணிமேகலை, அன்பு மணி, கோட்டீஸ்வரி, வெண்ணிலா, தங்க தனலட்சுமி, விஜயலட்சுமி, மெர்சி அஞ்சலா மேரி, அ.ப.நிர்மல், நாகவள்ளி, நூர்ஜஹான், அருணா, மீனாம் பாள், யாழினி, கோ.குமாரி, வி.வளர்மதி, பி.அஜந்தா, வி.யாழ் ஒளி, அ.ரேவதி, சி.அறிவுமதி, பரிமளா, ரம்யா, செ.பெ.தொண்டறம், ராணி, கீதா, வி.கே.ஆர்.பெரியார் செல்வி, பா.வினோதா, மங்க லட்சுமி, கோமதி பெரியார் செல்வம், கவிமலர், சண்முகலட்சுமி, ஜனனி தணிகாசலம், அருணா, அன்பரசி, அவந்திகா, அன்புச் செல்வி, க. சுமதி, திவ்யா வாசுகி.

ஆவடி மாவட்டம்: தமிழ்மணி, சுந்தராஜன், வஜ்ரவேலு, இளவரசு, பூவை.தமிழ்ச்செல்வன், முகப்பேர் முரளி, பூவை.லலிதா, முத்தழகு, அறிவுமதி, திவ்ய வாசுகி, பழ.சேர லாதன், வேல்முருகன், உடுமலை வடிவேல். திருநெல்வேலி மாவட்ட காப்பாளர் காசி.

தாம்பரம் மாவட்டம்: ப.முத்தை யன், நாத்தி கன், மோகன்ராஜ், குணசேகரன், ஜெயராமன், கூடு வாஞ்சேரி மா.ராசு, சோம சுந்தரம், வெங்கடேசன், ராமண்ணா, தமிழினியன்.

திருவொற்றியூர்: 

வி.மு.மோகன்

வடசென்னை: தி.செ.கணேசன், கே.தங்கமணி, செல்லப்பன், துரை ராஜ்

தென்சென்னை: இரா.வில்வநாதன், செ.ர.பார்த்தசாரதி, சா.தாமோத ரன், மு.சண்முகபிரியன், மு.சேகர், கு.பா.அறிவழகன், மு.இரா.மாணிக்கம், வி.வளர்மதி, பி.அஜந்தா, மு. பவானி, வி.யாழ்ஒளி, கோ.குமாரி, கு.பா.கவிமலர், மா.சண்முக லட் சுமி, மணிக்கம்

கும்மிடிப்பூண்டி: ஆனந்தன், அருள், ஜெகத் விஜய குமார், வடகரை உதயகுமார்.


வெள்ளி, 21 ஜூலை, 2023

தென் சென்னை துணைத் தலைவர் சி. செங்குட்டுவன் அவர்களுக்கு பாராட்டு


மன்னார்குடி மாவட்டம் வடுவூரில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் சிலை, சாலை மேம்பாட்டு பணியின் காரணமாக தென்பாதி ஊராட்சி மன்றம் வழங்கிய இடத்தில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு 09.07.2023 அன்று வெகு சிறப்பாக திறக்கப்பட்டது.
சிலை சீரமைப்பு பணி முழுமையையும் தன் சொந்த செலவில் செய்து கொடுத்த தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் துணை தலைவர் சி. செங்குட்டுவன் அவர்களை 14.07.2023ஆம் நாள் மாலை தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட்டி, தலைவர் இரா வில்வநாதன் அவர்கள் பயனடை அணிவித்தார். உடன் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் மற்றும் சி.செங்குட்டுவன் அவர்களின் இணையரும் பங்கேற்றனர்.
விடுதலை நாளேடு, 26.07.2023

ஞாயிறு, 16 ஜூலை, 2023

வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பதா?

 

 தமிழ்நாடெங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து 

திராவிடர் கழக இளைஞரணியினர்  பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

1

சென்னை, ஜூலை 14 அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுவதைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் வேலை வாய்ப்புகளை தமிழர்க்கென்று உறுதிப்படுத்து என்ற முழக்கத்துடன் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து இன்று (14.7.2023) காலை தமிழ்நாடெங்கும் மாபெரும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் கிளார்க் பணிகளுக்கு, அந்தந்த மாநில மொழிகளைப் படிக்க, எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக இருந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில், அரசு வங்கிகளில் கிளார்க் பணிகளில் தமிழ் நாட்ட வர்க்கும் இதுவரை வாய்ப்புகள் இருந்து வந்துள்ளன.

இந்நிலையில், வங்கித் தேர்வு நடத்தும் வங்கிப் பணியாளர் தேர்வுக் கழகம் (IBPS) சார்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியிடப்படும் விளம்பரத்தில், மாநில மொழிகளில் தேர்ச்சி என்பது கட்டாயம் இல்லை; அது ஒரு முன்னுரிமை மட்டுமே (Not Mandatory; it is Preferable)  என்று விளம்பரப்படுத்தி வருகிறது.

வெளி மாநிலத்தவர்கள் அதிகரிப்பு!

இதன் காரணமாக வேறு மாநிலங்களில் உள்ளோர் தமிழ்நாட்டில் தேர்வு எழுதி, கிளார்க் பணிகளிலும் சேரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது 2022-2023ஆம் ஆண்டுக்கான கிளார்க் பதவி நியமனங்களுக்குத் தேர்வுகள் நடைபெற்று, 288 பேர் கிளார்க் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன் விவரம்: யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா - 87, கனரா வங்கி - 100, பாங்க் ஆஃப் இந்தியா - 17, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா - 66, யூகோ வங்கி - 16, பஞ்சாப் & சிந்த் வங்கி  - 2 மொத்தம் - 288.

ஆறு அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் 288 பேர் கிளார்க்குகளாக பணி நியமனம் செய்யப்பட்டுள் ளனர். இதில் இந்த ஆண்டும் வெளி மாநிலத் தவர்கள், தமிழ்மொழி தெரியாதவர்கள் பணியில் சேர உள்ளனர்.

தமிழ் தெரியாமல்...

தொடர்ந்து 2017 முதல் இதே போன்று வெளி மாநிலத்தவர், கிளார்க் பதவிகளுக்கு விண்ணப்பித்து, தமிழ் தெரியாமல் வேலை பார்க்கின்றனர். சென்ற ஆண்டு ஏறத்தாழ 400 வெளி மாநிலத்தவர் இவ்வாறு வங்கிகளில் பணியில் சேர்ந்துள்ளனர்.

வங்கிகளில் கிளார்க் பணிபுரிவோர் வாடிக்கை யாளரிடம் நேரடி தொடர்புடையவர்கள். குறிப்பாக கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் இவர்களின் சேவை மாநில மொழியில் இருப்பது அவசியம்.

ஆனால், வங்கிப் பணியாளர் தேர்வுக் கழகம் (தனியார் நிறுவனம்) நடத்தும் தேர்வு மூலமாக தமிழ் தெரியாதவர்கள், பெரும்பாலும் ஒடிசா, கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து கிளார்க் பணியில் சேரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் தமிழ் மொழி பேச, எழுத படிக்கத் தெரியாது.

மாநில மொழி கட்டாயம்

ஒன்றிய அரசின் நிதித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி, மாநில மொழி கட்டாயம் என வலியுறுத்துகிறது. ஆனால், பொதுத் துறை வங்கிகள் அதற்கு நேர்மாறாக செயல்படுகின்றன.

ஒன்றிய அரசின் நிதித்துறையில் ஓர் அங்கமாக இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் நேஷனல் இன்ஸுரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஸுரன்ஸ், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் போன்ற அரசு காப்பீட்டு நிறுவ னங்களில், கிளார்க் பணிகளில் சேருவதற்கு, அந்தந்த மாநில மொழிகளில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதி, முறையாகக் கடைப் பிடிக்கப்படுகிறது.

ஆனால், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் மட்டும் குறிப்பாக கிளார்க் பணிகளுக்கு, இந்த விதி தளர்த்தப்பட்டதால், மொழி தெரியாதவர்களும், கிளார்க் பணிக்கு சேரும் நிலை ஏற்பட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

நிரந்தரத் தீர்வாக...

வங்கித் தேர்வு நடத்தும் நிறுவனம் கிளார்க்  பணிக்கு மாநில மொழி அறிவு கட்டாயம் என ஏற்கெனவே இருந்த விதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே நிரந்தரத் தீர்வாக அமையும்.

இப்பிரச்சினை குறித்து, ஒன்றிய அரசின் நிதியமைச்சர் மற்றும் வங்கித்துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசும் அதனை வலியுறுத்த வேண்டும் என்றும் 6.7.2023 அன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடை பெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வங்கிப் பணிகளில் தமிழ்நாடு இளைஞர்களின் வேலை வாய்ப்புப் பறிப்பைக் கண்டித்து ஜூலை14இல் தமிழ்நாடெங்கும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழர் தலைவர் அறிவித்தார். அதன்படி இன்று (14.7.2023) தமிழ்நாடெங்கும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மாபெரும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. 

சென்னையில்....

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (14.7.2023) காலை 11 மணியளவில் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர், ச. பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், தி.மு. கழக மாணவரணி இணைச் செயலாளர் எஸ். மோகன், அனைத்திந்திய இளை ஞர் பெரு மன்ற (கிமிசீதி) மாநிலத் தலைவர் தோழர் த.கு. வெங்கடேசன்,   விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநில செயலாளர் தோழர் சங்கத் தமிழன் ஆகியோர் ஆர்ப்பாட்ட கண்டன உரை நிகழ்த்தினர்.

பெருந்திரள் ஒலி முழக்கம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரண்டிருந்த தோழர்கள் எழுப்பிய முழக்கங்கள் வருமாறு:

* பறிக்காதே! பறிக்காதே! தமிழ்நாட்டு இளைஞர் களின் வாழ்வுரிமையைப் பறிக்காதே! வேலை வாய்ப்பைப் பறிக்காதே!

* அரசுடைமை வங்கிகளில் தமிழ்நாட்டில் பணி யாற்ற வடநாட்டவர்க்கு முன்னுரிமையா? வங்கிச் சேவைக்கு தமிழ் மொழி தேவையில்லையா?

* நடைமுறைப்படுத்து! நடைமுறைப்படுத்து! வங்கி எழுத்தர் பணிகளுக்கு மாநில மொழிகள் அவசியமென்பதை நடைமுறைப்படுத்து!  

* திணிக்காதே திணிக்காதே! மறைமுகமாக ஹிந்தி மொழியைத் திணிக்காதே! திணிக்காதே! தமிழ்நாட்டு வங்கிகளிலும் வடநாட்டவர்க்கே வேலை என்றால் படித்து முடித்து வேலைக்காகக் காத்திருக்கும் தமிழர்களுக்கு எதிர்காலம் இருளாவதா?

* உறுதிப்படுத்து! உறுதிப்படுத்து! தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் தமிழர்க்கென்று உறுதிப்படுத்து! தமிழ்நாட்டின் வங்கிச் சேவை தமிழில் என்று உறுதிப்படுத்து!  ஏடிஎம் இயந்திரங்களிலும் தமிழ்ச் சேவையை உறுதிப்படுத்து!

* நடைமுறைப்படுத்து!  நடைமுறைப்படுத்து! அரசுப் பணிகள் அனைத்திலும் உயரதிகாரப் பதவி களிலும் இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப் படுத்து! நடைமுறைப்படுத்து!   ஒன்றிய அரசே! தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்து!  

* ரத்து செய்! ரத்து செய்! இடஒதுக்கீட்டில் பொரு ளாதார அளவுகோலை ரத்து செய்! ரத்து செய்! வெல்லட்டும் வெல்லட்டும் சமூகநீதிப் போராட்டம்! ஓங்கட்டும் ஓங்கட்டும் ஒடுக்கப்பட் டோர் போராட்டம்!

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் நா. பார்த்திபன் வரவேற்புரையாற்ற, மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர் மு.சண்முகப்பிரியன் தொடக்க வுரையாற்றினார். 

தென் சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் துரை. அருண், செயலாளர் ந. மணிதுரை, தாம்பரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் தே. சுரேஷ், வடசென்னை மாவட்ட இளைஞரணி செய லாளர் சு.  அரவிந்தகுமார், திருவொற்றியூர் மாவட்ட இளைஞரணி தலைவர் இரா. சதீஷ்குமார், த. கவுதம், சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணி தலைவர் நித்தியானந்தம், செயலாளர் தமிழரசன், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்கள் பொறியாளர் ச. இன்பக்கனி, வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி, மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரை ஞர் பா. மணியம்மை, பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் ஆ. வெங்க டேசன்,  தலைமை கழக அமைப்பளார் தே.செ. கோபால், மாவட்ட தலைவர்கள் எண்ணூர் வெ.மு. மோகன், வழக்குரை ஞர் தளபதி பாண்டியன், இரா. வில்வ நாதன், தாம்பரம் ப. முத்தையன், நீலாங் கரை ஆர்.டி. வீரபத்திரன்,  வளர்மதி, இறைவி, த. மரகதமணி,  உத்ரா பழனிச் சாமி ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர் இர. சிவசாமி நன்றி கூறினார்.

பங்கேற்றோர்

மகளிரணி தோழர்கள் சி.வெற்றி செல்வி, தங்க.தனலட்சுமி, பூவை செல்வி, கொடுங்கையூர் கோ. தங்கமணி, ஆயிரம் விளக்கு சேகர், கோ.வீ. ராகவன், சூளை இராஜேந்திரன், அரும்பாக்கம் தாமோ தரன், சி.காமராஜ், வேலூர் பாண்டு, எஸ்.டி. செல்வராஜ், சேலம் மணிவண்ணன், வட சென்னை மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற செயலாளர் ஆ.சுரேஷ், சென்னை வடக்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் சத்தியநாராயணன், சென்னை மேற்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப் பாளர் ஓம்.குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை பொறுப்பாளர்கள் எழும்பூர் தொகுதி சேத்துப்பட்டு கோ.இளங்கோ, கு.வில்லான், சு.அன்பு தாசன், துறைமுகம் தொகுதி வட்ட செயலாளர்கள் ச.ராஜ்(60ஆவது வட்டம்), அ.கமல்(55ஆவது வட்டம்) ,பி.தென்னவன் (56ஆவது வட் டம்), மாவட்ட அமைப்பாளர்கள் துறை முகம் வ.முகிலன், வழக்குரைஞர் பூ.குமார், வீர.ரவிக்குமார், கோ.தமிழ்மணி, வழக் குரைஞர் நெப்போலியன், ராம்குமார், பாலு, சாய்ராம் உள்ளிட்ட பொறுப்பாளர் களும் ஏராளமான தோழர்களும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பொறுப் பாளர்கள் பங்கேற்றனர். திமுக மாணவரணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை, அனைத் திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்   கலந்துகொண்டனர்.


சனி, 15 ஜூலை, 2023

வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் கழக துணைத் தலைவர் உரை

 

21

சென்னை, ஜூலை 15 - அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாயப்பு பறிக்கப்படுவதைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் வேலை வாய்ப்புகளை தமிழர்க்கென்று உறுதிப்படுத்து என்ற முழக்கத்துடலும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து நேற்று (14.7.2023) காலை தமிழ்நாடெங்கும் மாபெ ரும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கழகத் துணைத் தலைவரின் கண்டன உரை

சென்னை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் கண்டன உரையாற்று கையில்:

அஞ்சல் துறையில் அகில இந்திய அளவிலே ஒரு தேர்வு நடைபெற்றது. வடமாநிலத்தைச் சேர்ந்த 25 பேர் தமிழ் தேர்வில் 25க்கு 25 மதிப்பெண் பெற்றி ருந்தனர். ஒரு தோழர் எப்படியோ ஒரு வட மாநிலத்தவரின் எண்ணைப் பிடித்து அரியானாவைச் சேர்ந்த வெற்றி பெற்ற ஒருவரிடம் தொலைப்பேசியில் பேசியிருக்கிறார்.  அரியானாக்காரர் ஹிந்தியில் பேசியிருக்கிறார். இவர், You have got 25, out of 25 in Tamizh. do you speak Tamizh?' என்று கேட்டிருக்கிறார். அதற்கு அரியானாக்காரர்.  I can't speak Tamizh    என்று சொல்லியிருக்கிறார். தமி ழில் தேர்வானவருக்கு தமிழ் தெரியா தாம்? ஆனால், 25 க்கு 25 மதிப்பெண் தமிழில்? இலக்கணமும் அதில் உண்டு.

- தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் துன்பப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஒன்றிய அரசு நம்மை சோதிக்கிறது. அம்பேத்கர், ’மக்கள் தங்களின் விகிதாச்சார அளவில் அவர்களுக்குரிய பங்கை பெறாவிட்டால், அவர்கள் கிளர்ந்து எழுவார்கள்’ என்று சொன்னார். அதை நினைவில் கொள்ளுங் கள். குட்டக்குட்ட குனிந்து கொண்டே இருக்க மாட்டார்கள்.  எழுச்சி, எரிமலை யாக வெடிக்கத்தான் போகிறது.

- நீதிக்கட்சியின் பனகல் அரசர் காலத் தில், அரசு தேர்வாணையம் கொண்டு வரப்பட்டது. ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் இருந்த நேரத்தில் ஓ.பன் னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தார், அவர் ’தமிழ்நாடு தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வுகளை இந்தியாவிலுள்ள எந்த மாநிலத்தவர்களும் எழுதலாம். என்று ஒரு அரசு ஆணையைப் பிறப் பித்தார். இப்படி மாற்றியதன் விளைவாக, ’பாண்டியனா, யோஜனா, நிம்மலா, மோகன், சந்தோஷ், தாஸ், குருபிரசாத் ரெட்டி, ராமு சுப்ப ரெட்டி, நாகேஸ்வர சென்னா, சாய்பாபா, ஜீவன்குமார் போன் றவர்களெல்லாம் தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தில் உதவிப்பொறியாளர்களாக இன்று பணியாற்றுகிறார்கள். எப்படி? ஓ.பி.எஸ். முதலமைச்சராக இருந்தபோது போட்ட அரசு ஆணை தான் காரணம்.

- இனிமேலும் நாம் இதில் கவனம் செலுத்தவில்லை என்றால் தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்காது என உரையாற் றினார்.

பங்கேற்றோர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் கமலேஷ், யுகேஷ், சி.வெற்றிச்செல்வி, அரும்பாக்கம் தாமோதரன், புரசை சு.அன்புச்செல்வன், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஜனாத்தனன், பெரியார் நூலக வாசகர் வட்டம் செல்லப்பன், சிவா, திருவொற்றியூர் சு.செல்வம், திருவொற்றியூர் ராஜேந்திரன், சிவக்குமார், சிறீதர், அஜந்தா, பூவை செல்வி, தொண்டறம், தங்க.தனலட்சுமி, கலைமணி, கொடுங்கையூர் தங்கமணி, படப்பை செ.சந்திரசேகர், மா.குணசேகரன், துரைராசு, செல்வக்குமார், சீர்காழி ராமண்ணா, தாம்பரம் லட்சுமிபதி, பெரியார் யுவராஜ், பா.பாலு, கணேசன், உடுமலை வடிவேல், துரை.ராவணன், ராஜவர்ணன், தமிழினியன், மகேந்திரன், பிரபாகரன், மோகன்ராஜ், ஆனந்தி, பா.வெற்றிச்செல்வி, அன்புமணி, தே.ஒளி வண்ணன், பெரியார் செல்வி, ஆ.வெங்கடேசன், பார்த்தசாரதி, சேகர், கொளத்தூர் கோபால், தி.செ.கணேசன், அருணா, சேரலாதன், தமிழ்ச்செல்வன், வேலுச்சாமி, வினோதா, மு.இரா.மாணிக்கம், பெரியார் மாணாக்கன், சோமசுந்தரம், பாண்டு, ராவணன், காமராஜ், பொழிசை கண்ணன், தாம்பரம் சுரேஷ், சூளைமேடு (பிடிசி) ராஜேந்திரன், ஆலத்தூர் செல்வராஜ், 

திருவொற்றியூர் மாவட்டம்

புதுவண்ணை செல்வம், திருவொற்றியூர் பாலு, மாணிக்கம், முரசு, கவுதமன், மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், செயலாளர் செ.ஒளிவண்ணன், நகர செயலாளர் இராசேந்திரன்.

எழுத்தாளர் தமிழ் மறையான் மறைவுக்கு கழகத்தின் சார்பில் மரியாதை

 12.07.23 மாலை 4.00மணி அளவில் அசோக் நகரில் உள்ள புத்தர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த எழுத்தாளர் தமிழ் மறையான் அவர்களின் உடலுக்கு துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரசு பெரியார் அவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
பெரியார் களம் க.இறைவி, தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன், து.கலைச்செல்வன், பெரியார் திடல் கலைமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை


22
7

சென்னை, ஜூலை 15 - கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 121ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2023) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலை, பெரியார் பாலம் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள காமராசர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, தலைமைக் கழக அமைப்பாளர்கள் தே.செ.கோபால், வி.பன்னீர் செல்வம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, தென்சென்னை மாவட்ட தலை வர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி.ஆர்.சேது ராமன், துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், மு.சேகர், மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் துரை.அருண், ச.மகேந்திரன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், பார்த்திபன், சோழிங்கநல்லூர் மவட்ட தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், செய லாளர் செம்பாக்கம் விஜய் உத்தமராஜ், மடிப்பாக்கம் பி.சி.ஜெயராமன், திருவொற்றியூர் மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், நெய்வேலி வெ.ஞான சேகரன், வடசென்னை மாவட்ட காப்பாளர் கி.இராம லிங்கம், இளை ஞரணித் தலைவர் நா.பார்த்திபன், ஆவடி மாவட்ட அமைப்பளர் உடுமலை வடிவேல், க.கலைமணி, ம.சக்திவேல், ஜெ.ஆனந்த், கமலேஷ் கொடுங்கையூர் கோ.தங்கமணி, பா.பாலு, க.செல்லப் பன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மகளிர் பாசறை த.மரகதமணி, தங்க.தனலட்சுமி, முத்துலட்சுமி உள்ளிட்ட தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.ஞாயிறு, 9 ஜூலை, 2023

குடந்தை மாணவர் அணி மாநாட்டில் தென் சென்னை தோழர்கள்

8.7.18 மாலை குடந்தை மாநகரத்தில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக பவழ விழா மாநாட்டின் பேரணியில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் அணிவகுத்த போது...

வியாழன், 6 ஜூலை, 2023

செயற்குழுவில் அறிவிக்கப்பட்ட தென் சென்னை பகுதி கழக புதிய பொறுப்பாளர்கள்


தென்சென்னை மாவட்டம்

எழும்பூர்

தலைவர்: த.சே.பிரபாகர்

செயலாளர் செ.திராவிடக் குமார்

சிந்தாதிரிப்பேட்டை: 

தலைவர்: என்.நல்லசிவம்

செயலாளர் : பு.செல்வகுமார்

திருவல்லிக்கேணி:

தலைவர் க. அன்பு 

செயலாளர் சி.அரி 

தியாகராயர் நகர்- தேனாம்பேட்டை 

தலைவர்:  ச.பாஸ்கர்

செயலாளர்: ச. துணைவேந்தன் 

விருகம்பாக்கம்

தலைவர்: சொக்கையா 

செயலாளர்: ச. மாரியப்பன் 

அமைப்பாளர்: சே.வெங்கடேசன் 

சைதாப்பேட்டை 

தலைவர்: சைதை தென்றல் 

செயலாளர்:  இரா.ரவி 

மயிலாப்பூர் 

தலைவர்: செய.குசேலன் 

செயலாளர்: ச.சந்தோஷ் 

அடையாறு

தலைவர்: ர.அண்ணாதுரை 

செயலாளர்: அசோக் 

மந்தைவெளி 

தலைவர்: பா. சிவக்குமார் 

செயலாளர்: ஈ.பழனிக்குமார்

சூளைமேடு

தலைவர்: ந.ராமச்சந்திரன் 

செயலாளர்: மெடிக்கல் சரவணன் 

நுங்கம்பாக்கம் 

தலைவர்: கி.சரவணன் 

செயலாளர்: ரவிக்குமார் 

சேத்துப்பட்டு 

அமைப்பாளர்: அ.நிக்சன்

கிண்டி - ஈக்காட்டுத்தாங்கல் 

தலைவர்:  மு.சேகர் 

செயலாளர்: கே.சரவணன்

கலைஞர் நகர் 

தலைவர்: கு.அய்யாதுரை 

செயலாளர்:  கரிகாலன் 

அரும்பாக்கம் 

தலைவர்:  மு. டெல்லிபாபு 

செயலாளர்: ஏ.சுந்தர்

தரமணி

தலைவர்:  ம.ராஜி 

செயலாளர்:  கண்ணன்


செயற்குழுவில் அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள்


திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை

தலைவர்: கருப்பட்டி கா.சிவகுருநாதன்

செயலாளர்: திண்டுக்கல் மு.நாகராசன்

விருதாச்சலம் மாவட்டம்

காப்பாளர்: புலவர் வை.இளவரசன்

தருமபுரி மாவட்டம்

1. காமலாபுரம் கு.சரவணன் (மாவட்டத் தலைவர்)

2. தருமபுரி பெ.கோவிந்தராஜ் (மாவட்டச் செயலாளர்)

3. சி.காமராஜ் (மாவட்ட துணைச் செயலாளர்)

சென்னை மாநகராட்சி

பகுதி கழகங்களின் பொறுப்பாளர்கள்

வடசென்னை மாவட்டம் 

புரசைவாக்கம் 

தலைவர்: அரவிந்த்

செயலாளர்:பாலமுருகன்

வில்லிவாக்கம் மற்றும் அயனாவரம்

தலைவர்: துரைராஜ் 

செயலாளர்: கு. வீரமணி

கொளத்தூர்:

தலைவர்:சி.அன்புச்செல்வன்

செயலாளர்: இராஜேந்திரன்

திரு.வி.க நகர்:

தலைவர்: கோபாலகிருஷ்ணன்

செயலாளர்: மும்மூர்த்தி

பெரம்பூர்:

தலைவர்: தி.செ.கணேசன்

செயலாளர்:  தமிழ்ச்செல்வன் 

அண்ணா நகர்:

தலைவர்: ஆகாஷ் 

செயலாளர் : சாம்குமார் 

கொடுங்கையூர்

தலைவர்: கோ.தங்கமணி 

செயலாளர் : ஜி.சரிதா 

அமைந்தகரை:

தலைவர்: அருள்தாஸ் 

செயலாளர்: துர்கபிரகாஷ்

திருவொற்றியூர் மாவட்டம்

எண்ணூர்:

தலைவர்: கவிஞர் மு.மணிகாளியப்பன்

செயலாளர்: பொ. ராமச்சந்திரன் 

திருவொற்றியூர் 

தலைவர்: ஆ. துரைராவணன்

செயலாளர்: தே.சங்கர் 

மாதவரம் 

தலைவர்: சி.வாசு 

செயலாளர்: சு. நாகராஜ் 

ராயபுரம் 

தலைவர்: த.கவுதம்

செயலாளர்: அரவிந்த் வாசுதேவன்

தென்சென்னை மாவட்டம்

எழும்பூர்

தலைவர்: த.சே.பிரபாகர்

செயலாளர் செ.திராவிடக் குமார்

சிந்தாதிரிப்பேட்டை: 

தலைவர்: என்.நல்லசிவம்

செயலாளர் : பு.செல்வகுமார்

திருவல்லிக்கேணி:

தலைவர் க. அன்பு 

செயலாளர் சி.அரி 

தியாகராயர் நகர்- தேனாம்பேட்டை 

தலைவர்:  ச.பாஸ்கர்

செயலாளர்: ச. துணைவேந்தன் 

விருகம்பாக்கம்

தலைவர்: சொக்கையா 

செயலாளர்: ச. மாரியப்பன் 

அமைப்பாளர்: சே.வெங்கடேசன் 

சைதாப்பேட்டை 

தலைவர்: சைதை தென்றல் 

செயலாளர்:  இரா.ரவி 

மயிலாப்பூர் 

தலைவர்: செய.குசேலன் 

செயலாளர்: ச.சந்தோஷ் 

அடையாறு

தலைவர்: அண்ணாதுரை 

செயலாளர்: அசோக் 

மந்தைவெளி 

தலைவர்: பா. சிவக்குமார் 

செயலாளர்: இ.பழனிக்குமார்

சூளைமேடு

தலைவர்: ந.ராமச்சந்திரன் 

செயலாளர்: மெடிக்கல் சரவணன் 

நுங்கம்பாக்கம் 

தலைவர்: கி.சரவணன் 

செயலாளர்: ரவிக்குமார் 

சேத்துப்பட்டு 

அமைப்பாளர்: அ.நிக்சன்

கிண்டி - ஈக்காட்டுத்தாங்கல் 

தலைவர்:  மு.சேகர் 

செயலாளர்: கே.சரவணன்

கலைஞர் நகர் 

தலைவர்: கு.அய்யாதுரை 

செயலாளர்:  கரிகாலன் 

அரும்பாக்கம் 

தலைவர்:  மு. டெல்லிபாபு 

செயலாளர்: ஏ.சுந்தர்

தரமணி

தலைவர்:  ம.ராஜு 

செயலாளர்:  கண்ணன்

ஆவடி மாவட்டம் -  ஆவடி மாநகராட்சி

மாவட்ட பொறுப்பாளர்கள்:

துணைச்செயலாளர்: உடுமலை வடிவேல்

துணைத்தலைவர்: மு.இரகுபதி, வை.கலையரசன்

துணைச்செயலாளர்: க.தமிழ்ச் செல்வன்

அம்பத்தூர் பகுதி

தலைவர் : பூ. இராமலிங்கம்

செயலாளர்: அய்.சரவணன்

மதுரவாயல் பகுதி

தலைவர் : சு.வேல்சாமி

செயலாளர் : தங்க. சரவணன்

ஆவடி பகுதி

தலைவர் : கோ.முருகன்

செயலாளர்: இ. தமிழ்மணி

பட்டாபிராம் பகுதி

தலைவர் : இரா.வேல்முருகன்

செயலாளர் : ஸ்டீபன்

கோயில்பதாகை பகுதி

தலைவர்: ரா.முருகேசன்

செயலாளர்: கன்னடபாளையம் தமிழரசன்

திருமுல்லைவாயல் பகுதி

தலைவர்: இரணியன் (எ) அருள்தாஸ்

செயலாளர்: இரவீந்திரன்

திருநின்றவூர் நகரம்

தலைவர் : அருண்

செயலாளர்: கீதா இராமதுரை

வேப்பம்பட்டு ஒன்றியம்

தலைவர்: பட்டாளம் பன்னீர்செல்வம்

செயலாளர்: சிவ.இரவிச்சந்திரன்

பூந்தமல்லி நகரம் 

தலைவர்: பெரியார் மாணாக்கன்

செயலாளர்: மணிமாறன்

பூந்தமல்லி ஒன்றியம் 

தலைவர்: அனகை ஆறுமுகம்

செயலாளர்: வெங்கடேசன்


கன்னியாகுமரி மாவட்டப் புதிய பொறுப்பாளர்கள்

காப்பாளர்கள்: சி.கிருட்டினேசுவரி, ஞா.பிரான்சிஸ்

மாவட்டத் தலைவர்: மா.மு.சுப்பிரமணியம்

மாவட்டசெயலாளர்: கோ.வெற்றிவேந்தன்

மாவட்டத் துணைத் தலைவர்: ச.நல்லபெருமாள்

மாவட்ட துணைச் செயலாளர்: அய்சக் நியூட்டன்

பொதுக்குழு உறுப்பினர்கள்: ம.தயாளன், மா.மணி

மாவட்ட இளைஞரணி தலைவர்: இரா.ராஜேஷ்

செயலாளர்: எஸ்.அலெக்சாண்டர்

மாவட்ட மாணவர் கழக தலைவர்: இரா.கோகுல்

செயலாளர்: திலக ஜோதி

மாவட்ட மகளிர் அணி தலைவர்: இந்திரா மணி

செயலாளர்: த.சிறீவள்ளி

மாவட்ட மகளிர் பாசறை தலைவர்: மஞ்சு குமாரதாசு

செயலாளர்: அன்பரசி

மாநகர மகளிர் பாசறை அமைப்பாளர்: சுதா பழனி

மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்

தலைவர்: உ.சிவதாணு

செயலாளர்: எம்.பெரியார் தாஸ்

அமைப்பாளர்: இரா.லிங்கேசன்

மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் அணி

அமைப்பாளர்: க.யுவான்ஸ்

நாகர்கோவில் மாநகரம் 

தலைவர்: ச.கருணாநிதி

செயலாளர்: மு.இராசசேகர்

துணைத் தலைவர்: கவிஞர் செய்க்முகமது

தோவாளை ஒன்றியம்: 

தலைவர்: மா.ஆறுமுகம்

செயலாளர்: ந.தமிழரசன்

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்: ஆரல் ம.தமிழ்மதி

அகஸ்தீஸ்வரம் ஒன்றியம்

அமைப்பாளர் குமாரதாசு

குருந்தன்கோடு ஒன்றியம்:

தலைவர்: ஆ.சிவக்குமார்

செயலாளர்: செல்லையா

ராஜாக்க மங்கலம் ஒன்றியம்:

அமைப்பாளர்: நீலகண்டன் (எ) ரவி

தக்கலை ஒன்றியம்:

தலைவர்: இரா.இராஜிவ்லால்

செயலாளர்: சி.இளங்கோ

திருவட்டாறு ஒன்றியம்

அமைப்பாளர்: த.டார்ஜன்

மூஞ்சிறை ஒன்றியம்

அமைப்பாளர்: சீனிவாசன்

கிள்ளியூர் ஒன்றியம்

அமைப்பாளர்: தே.சாம்பிராஜ்

பத்மநாபபுரம் நகரம்

அமைப்பாளர்: எஸ்.கே.அகமது

குழித்துறை நகரம்

அமைப்பாளர்: ஜெய்சங்கர்

கோயம்புத்தூர் மாவட்டம்

மாவட்டக் காப்பாளர்: இரா.ரெங்கநாயகியம்மாள்

மாவட்டத் தலைவர்: ம.சந்திரசேகர்

மாவட்டச் செயலாளர்: க.வீரமணி

மாவட்டத் துணைத் தலைவர்: மு.தமிழ்செல்வன்

மாவட்டத் துணைச் செயலாளர்: தி.க.காளிமுத்து

கோவை மாநகர திராவிடர் கழகம்

மாநகரத் தலைவர்: தி.க.செந்தில்நாதன்

மாநகரச் செயலாளர்: ஜா.திராவிடமணி

பொதுக்குழு உறுப்பினர்கள்: பழ.அன்பரசு - ச.திலகமணி

கோவை மாநகரம் அய்ந்து பகுதிக் கழகங்களாகப் பிரிக்கப்படுகிறது. திராவிடர் கழக பகுதிப் பொறுப்பாளர்கள்

1. கோவை, கணபதி பகுதி 

( 1 ஆவது வார்டு முதல் 20ஆவது வார்டு வரை)

பகுதிக் கழகத் தலைவர் - கவி.கிருஷ்ணன்

பகுதிக் கழகச் செயலாளர் - ஏ.சுபா

2. கோவை, பீளமேடு பகுதி

( 21ஆவது வார்டு முதல் 40ஆவது வார்டு வரை)

பகுதிக் கழகத் தலைவர் - ஏ.முருகானந்தம்

பகுதிக் கழகச் செயலாளர் - எம்.ரமேஷ்

3. கோவை, வடவள்ளி பகுதி

( 41ஆவது வார்டு முதல் 60ஆவது வார்டு வரை)

பகுதிக் கழகத் தலைவர் - ஆட்டோ சக்தி

பகுதிக் கழகத் செயலாளர் - வி.எம்.சி.இராஜசேகர்

4. கோவை, புலியகுளம் பகுதி

( 61ஆவது வார்டு முதல் 80ஆவது வார்டு வரை)

பகுதிக் கழகத் தலைவர் - இல.கிருஷ்ணன்

பகுதிக் கழகச் செயலாளர் - கே.கோவிந்த்

5. கோவை, சுந்தராபுரம் பகுதி 

( 81ஆவது வார்டு முதல் 100ஆவது வார்டு வரை)

பகுதிக் கழகத் தலைவர் - தெ.குமரேசன்

பகுதிக் கழகச் செயலாளர் - பா.ஜெயக்குமார்

திராவிடர் கழக மகளிரணி

கோவை மாவட்ட மகளிரணித் தலைவர்: முத்துமணி

கோவை மாவட்ட மகளிரணி செயலாளர்: சி.கலைச்செல்வி

கோவை மாவட்ட மகளிரணி அமைப்பாளர்: த.கவிதா

திராவிடர் மகளிர் பாசறை

கோவை மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்: கு.தேவிகா

கோவை மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர்: பெ.நதியா

திராவிடர் கழக இளைஞரணி

கோவை மாவட்ட இளைஞரணித் தலைவர்: இரா.சி.பிரபாகரன்

கோவை மாவட்ட இளைஞரணிச் செயலாளர்: ச.சசி

திராவிட மாணவர் கழகம்

திராவிட மாணவர் கழக மாவட்டத் தலைவர்: த.க.கவுதமன்

திராவிட மாணவர் கழக மாவட்டச் செயலாளர்: 

ஞா.தமிழ்செல்வன்

திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர்: க.கவுதமன்

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்