வியாழன், 26 ஏப்ரல், 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுக!


தமிழ்நாடே மனித சங்கிலியால் இணைந்தது!!

மத்திய அரசு செயல்படுமா? மாநில அரசு விழிக்குமா?

சென்னை, ஏப்.24 தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சென்னையில் பல்வேறு இடங்களிலும் மனித சங்கிலிப் போராட் டம் பொதுமக்களின் பங்களிப்புடன் காவிரி நீர் உரிமைமீட்புப் போராட்டமாக மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

தலைவர்கள்

புதுக்கோட்டையில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், தஞ்சையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, டி.ஆர்.பாலு, எல்.கணேசன், சென் னையில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், சிவகங்கையில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.இராமசாமி, திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், பெரம்பலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  ஆகி யோர் தலைமையில்  மனித சங்கிலிப்போராட்டத்தில் ஏராள மானவர்கள் கலந்துகொண்டார்கள். அண்ணா அறிவாலயம்

அண்ணாஅறிவாலயம் அருகில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் குழு தலைவர் கவிஞர் கனிமொழி, சென்னை சைதாப்பேட்டையில் மேனாள் மேயர் மா.சுப்பிரமணியம், மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி ஜி.ராமகிருஷ்ணன், காங்கிரசு கட்சி பீட்டர் அல்போன்ஸ், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீர பாண்டியன், மதிமுக மல்லை சத்யா,  பொன்.குமார், சென்னை வடக்கு மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன், மாதவரம் எஸ்.சுதர்சனம், எர்ணாவூர் நாராயணன், ஆகியோரும், சென்னை கிழக்கு மாவட்டத்தில் பி.கே.சேகர்பாபு, மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துக்கட்சியினரும் கலந்துகொண்டனர்.

தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், பிற இடங்களிலும் காவிரிநீர் உரிமைக்கான மனித சங்கிலிப் போராட்டத்தில் பெருந்திரளானவர்கள் பங்கேற்றனர்.

சென்னையில் கழகம்...

சென்னை எழும்பூரில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் வீஅன்புராஜ், எழும்பூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன்,   கழக வெளியுறவு செயலாளர் வீ.கும ரேசன், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணை செயலாளர் நா.பார்த்திபன்,  சென்னை மண்டல கழக செயலாளர் வி.பன்னீர்செல்வம், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், செய லாளர் தே.ஒளிவண்ணன் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, செ.தமிழ்சாக்ரட்டிஸ், தலைமைசெயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, சி.வெற்றிசெல்வி, சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் பா.மணியம்மை, எண்ணூர் வெ.மு.மோகன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், ந.கதிரவன் கு.செல்வேந்திரன், சண்முகப்ரியன், சேகர், வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ், மங்களபுரம் பாஸ்கர், செம்பியம் கி.இராமலிங்கம், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், தமிழ்மணி, இளைஞரணி கலைமணி, வை.கலையரசன், பெரியார் மாணாக்கன், பூவை செல்வி, தொண்டறம், சைதை இரவி, இரா.பிரபாகரன், சாந்தகுமாரி, கிஷோர், ஆனந்தி, ஜனனி, வி.வளர்மதி, பி.அஜந்தா, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, கவிமலர், அரும்பாக்கம் சா.தாமோதரன், பிரபு, அமுது, சரவணகுமாரி, அறிவன், இன்பன், கண்மணி, மலரணி, செவ்வியன், இன்சொல், செம்மொழி, சித்தார்த், மோகன்ராஜ், குடந்தை சங்கர் மற்றும் ஆதித்தமிழர் பேரவை கோவை வழக்குரைஞர் பன்னீர்செல்வம் தலைமையில் 20 பேர், திமுக பொறுப்பாளர்கள் தேவநிதி, ஜெ.விஜயக்குமார், து.களரிமுத்து, டி.வி.வேலு, வி.சுதாகர், கே.அன்னபூரணி, ந.கலையரசன், இ.மொய்தீன், எல்.சுந்தர்ராஜன், எம்.துலுக்கானம், வெ.மருதன், ஜெ.கிருஷ்ணமூர்த்தி, பா.கவுதம், அ.நிர்மலாதேவி, சே.பாலாஜி மற்றும் மதிமுக, விடுதலைசிறுத்தைகள்கட்சி, மனிதநேயமக்கள் கட்சி, எஸ்டிபிஅய், சிபிஅய்,சிபிஎம், காங்கிரசு உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் கழகத் தோழர்கள் இணைந்து கொண்டனர்

தமிழகத்தின் உரிமைக்கான போராட்டங்கள்

காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பையொட்டி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கில், நடுவர் மன்றத்தில் கூறப்பட்ட வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வார காலத்துக்குள்ளாக மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று 16.2.2018 அன்று தீர்ப்பை அளித்தது.

ஆனால், மத்திய அரசோ காலங்கடத்திவிட்டு, ஆறு வார கால அவகாசத்தின் கடைசி நாளில் ஸ்கீம் என்ற சொல்லுக்கு பொருள்விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்டு மேலும் மூன்று மாத கால அவகாசம் கோரியது. திமுக, திராவிடர் கழகம், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முசுலீம் லீக், மனிதநேயமக்கள் கட்சி, எஸ்.டி.பி.அய் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவது என்று முடிவெடுத்து, அதற்கான தொடர் போராட்டத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, 1.4.2018 முதல் அனைத்துக் கட்சிகளின் சார்பில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. முதல் கட்டமாக 4 நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து 5.4.2018 அன்று அனைத்துக் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் அண்ணா சாலை மற்றும் கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர். சென்னை எழும்பூரில் திராவிடர் கழகத் தோழர்கள் மாபெரும் எழுச்சியுடன் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள்.

இதை தொடர்ந்து, 5.4.2018 அன்று மாலை அனைத்துக்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக்கூட்டம் சென்னை அண்ணாஅறிவாலயத்தில் நடைபெற்றது.

தமிழர் தலைவர்  தொடங்கி வைத்த பயணங்கள்

காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. திருச்சி முக்கொம்பிலிருந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 7.4.2018 அன்று பயணத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடங்கி வைத்தார். திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்பு பயணத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். 9.4.2018 அன்று இரண்டாவது பயணக்குழுவை அரியலூரில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடங்கிவைத்தார். இரண்டு குழுக்களும் கடலூரில் பயணத்தை நிறைவு செய்தன. 12.4.2018 நிறைவு நாளன்று மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு உரிமை முழக்கமிட்டனர்.  12.4.2018 அன்று சென்னை வந்த பிரதமருக்கு 9 கட்சிகள் சார்பில் கருப்பு கொடி காட்டப்பட்டது.  மோடி கோ பேக் என்று குறிப்பிடப்பட்ட ராட்சத கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. புறாக்களின் கழுத்தில் மோடி கோ பேக் கட்டி பறக்கவிடப்பட்டது.  இதில், திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நடைப்பயணத்தின் நிறைவாக 13.4.2018 அன்று ஒன்பது கட்சித் தலைவர்கள் நேரில் ஆளுநரிடம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வலியுறுத்தும் மனு அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் 16.4.2018 அன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமரை நேரில் சந்திக்க நேரம் கேட்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைத்தே தீர வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் நோக்கிலும், அடுத்த கட்டப் போராட்டத்தைத் துவங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, அனைத்துக் கட்சிகளின் சார்பில் 23.4.2018 மாலை 4 மணி முதல் 5 மணி வரை அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்துக்கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்ட மாபெரும் மனித சங்கிலிப்போராட்டம் நேற்று (23.4.2018) மாலை நடைபெற்றது. அனைத்துக்கட்சிக்கூட்டத்தின் தீர்மானத்தின்படி நடைபெற்ற மனித சங்கிலிப்போராட்டத்தில் பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்றனர். காவிரி நதிநீர் மேலாண்மைவாரியம் அமைக்கப்படும்வரை தமிழகம் ஓயாது என்பதை உணர்த்தும்வகையிலும், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கின்ற  போராட்டமாகவும் மனித சங்கிலிப்போராட்டம் அமைந்தது.

கழகத் துணைத் தலைவர்

தமிழ்நாட்டுக்குரிய சட்டப்படி உரிய, நியாயப்படி உரிய, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய காவிரி நீர், இன்றைக்கு அரசியல் காரணங்களாலே முடக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக மத்தியில் இருக்கக்கூடிய மோடி தலைமையில் இருக்கக்கூடிய பாஜக ஆட்சி கருநாடகத்தில் நடைபெறக்கூடிய தேர்தல் அரசியல் ஆதாயத்தை உள்நோக்கமாகக் கொண்டு, சட்டப்படி தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய காவிரி நீரைத் தடை செய்கிறது. இது நீதிமன்ற அவமதிப்பு, மக்கள் மன்ற அவமதிப்பு என்பதை இந்த நேரத்திலே எடுத்துச் சொல்லி, காவிரி நீர் உரிமையில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கைப் பெறுகின்ற வரை இந்தப் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும். அறப்போராட்டம் நடந்துகொண்டிருக்கும். இந்த உரிமையைப் பெறுவதற்காக எவ்வளவு விலை கொடுக்க வேண்டுமோ அவ்வளவு விலையைக் கொடுக்க தமிழ்நாட்டு மக்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள் என்பதுதான் இந்த மனித சங்கிலிப் போராட்டத்தினுடைய நோக்கம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.

- இவ்வாறு செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் கூறினார்.

- விடுதலை நாளேடு, 24.4.18

திங்கள், 16 ஏப்ரல், 2018

ஆர்.டி. வீரபத்திரனின் 80ஆம் ஆண்டு பிறந்த நாள்

பெரியார் பெருந்தொண்டர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரனின் 80ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன். பிறந்த நாள் காணும் வீரபத்திரனின் வாழ்க்கை வரலாறு அடங்கிய மலரினை தமிழர் தலைவர் வெளியிட அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். உடன்: அன்பு தனசேகர், ஓ. சுந்தரம் உள்ளனர்.


ஆர்.டி. வீரபத்திரனின் மகள் ரமணதிலகம் --- மறைந்த காஜாமொகிதீன், குடும்பத்தினர் கனிமொழி, மதிவதனி ஆகியோர் பெரியார் உலகத்திற்கு ரூ.25 ஆயிரம் (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

ஆர்.டி. வீரபத்திரனின் மகன் கதிரவன் -- தேவி குடும்பத்தினர் தென்றல், நிலா ஆகியோர் பெரியார் உலகத்திற்கு ரூ.25 ஆயிரம் (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

ஆர்.டி. வீரபத்திரனின் மகள் டாக்டர் ரேவதி -- டேவிட் திலீபன் குடும்பத்தினர் கவிதா, கயன் ஆகியோர் பெரியார் உலகத்திற்கு ரூ.25 ஆயிரம் (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

- விடுதலை நாளேடு, 14.4.18

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடியைக் கண்டித்து நடைபெற்ற கருப்புக்கொடி போராட்டத்தால் குலுங்கியது சென்னை!



சென்னை. ஏப்ரல், 13. சென்னை திரு விடந்தையில் நடைபெறும் இராணு வக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பதற்காகவும், அடையாறு புற்றுநோய் மய்யம் மற்றும் சென்னை அய்.அய்.டி நிகழ்ச்சியில் பங்கேற்ப தற்காகவும் சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு, காவிரி மேலாண்மை வாரியம் உட்பட பல் வேறு பிரச்சினைகளுக்காக எதிர்க் கட்சிகள் கருப்புக்கொடி போராட் டத்தை சென்னையில் பல்வேறு இடங்களில் நடத்தின.

வரலாறு படைத்த கருஞ்சட்டைப் போராட்டம்!

சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவுக்கருகில் உள்ள அண்ணா சாலையில் நேற்று (12.4.2018) காலை முதலே கருப்புச்சட்டை, கையில் கருப்புக் கொடியுடன் மக்கள் கட்சி பேதமின்றி புற்றில் இருந்து ஈசல் புறப்படுவது போல வரத் தொடங்கிவிட்டனர். காவல் துறையினர் ஓரளவு எதிர்பார்த்திருந்தனர் என்றா லும், நேரம் செல்லச் செல்ல நிலைமை கட்டுமீறிப் போய்க் கொண்டிருந்தது. இந்த போராட்டத்தில் திராவிடர் கழகத்தோழர்களும் பங்கெடுத்துக் கொண்டனர். எல்லோரும் கருப்புக் கொடியுடனும், கருப்புச் சட்டையு டனும் இருந்ததால் யார் எந்தக்கட்சி, எந்த அமைப்பு என்ற பேதம் காண முடியாமல் போய், ஒட்டுமொத்தமாக அனைவருமே திராவிடர் கழகத் தோழர்கள்தான் என்னும் ஒரு மயக் கம்கூட ஏற்பட்டு விட்டது. நாலா பக்கமும் தி.மு.க. உள்பட பல்வேறு அமைப்புகளைச்சார்ந்த தோழர்கள் பிரதமர் மோடியை எதிர்த்து ஆக் ரோசத்துடன் ஒலி முழக்கங்களை எழுப்பியவண்ணம் இருந்தனர். கைது செய்யப்பட்டவர்களின் பேரணி!

கைது செய்வதற்கு போதிய வாக னங்கள் இல்லாததால் பயணிகள் இல் லாமல் வருகின்ற மாநகரப் போக்குவ ரத்து பேருந்துகளை மறித்து, ஓரங் கட்டி போராட்டக்காரர்களை முடிந்து வரையில் ஏற்றினர். கைது செய்யப் பட்டவர்களை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு அழைத்துச் சென்ற னர். சைதாப்பேட்டையிலிருந்து நந் தனம் சிக்னல் வரையில் சென்று அங்கிருந்து திரும்பி வரவேண்டும். சிக்னலில் பேருந்து நின்றவுடன் போராட்டக்காரர்கள் தன்னெழுச்சி யாக பேருந்தைவிட்டு அவர்களே இறங்கி, தாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு அண்ணா சாலையை முழுமையாக அடைத்தவாறு பேரணி யாக அதே ஒலிமுழக்கங்களுடன் கட் டுப்பாட்டுடன் அவர்களே சிறைப் படச் சென்றனர். காவலர்களால் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. அதுமட்டுமல்ல காலியாக இருக்கும் பேருந்தை உடனடியாக கலைஞர் வளைவுக்கு கொண்டு செல்ல வேண் டும் என்பதால், பேரணியாகச் செல் பவர்களைப்பற்றி கவலைப்படக்கூட வாய்ப்பின்றி சென்றதைக் காண முடிந்தது.

சூரிய வெப்பத்தைவிட சூடான போராட்டம்!

ஏதாவது விமானம் மேலே பறந் தால் போதும், ஒலி முழக்கங்களின் வேகம் இன்னும் கூடி ஆர்ப்பாட் டத்தை அடிக்கிற வெப்பத்தைவிட சூடாக ஆக்கியது. கைது செய்யப்பட்டு பேருந்தில் செல்பவர்கள் தங்கள் கைகளில் இருந்த கருப்புக்கொடியை பேருந்தின் சாளரத்தின் வழியே பறக்கவிட்டபடியே சென்றனர். இதைக்கண்ட சாலையில் சென்று கொண்டு இருக்கும் பொதுமக்களில் சிலர் தன்னெழுச்சியாக பிரதமர் மோடி யைக் கண்டித்து குரல் எழுப்பினர். கைதாப்பேட்டை கலைஞர் வளை வுக்கருகிருந்து ஏறக்குறைய 1500க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட் டனர். ஆனால் காவல் துறையினரால் 600 போராளிகளைத்தான் பதிவு செய்துகொள்ள முடிந்தது. திராவிடர் கழகத்தினர் சென்னை மண்டலச் செய லாளர் பன்னீர் செல்வத்தின் தலைமை யில் அந்த கருங்கடலின் பெரும் ஆர்ப்பரிப்பில், தங்களையும் இணைத் துக்கொண்டு கைதாகினர். முன்னதாக அதே இடத்தில் சிறை வைக்கப் பட்டிருந்த தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்கள் குழுத் தலைவர் கவிஞர் கனி மொழி அவர்களை திராவிடர் கழக மண்டல செயலாளர் பன்னீர் செல் வம், இயக்கத்தோழர்களோடு சென்று சந்தித்து நலம் விசாரித்தார். பங்கேற்றோர்

சென்னை மண்டல திராவிடர் கழகம் சார்பில் மண்டல செயலாளர் வி.பன்னீர்ச்செல்வம் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் தாம்பரம் மாவட்டத் தலைவர் பா.முத்தையன் ஆகியோர் முன்னிலையில் பிரதம ருக்கு கருப்புக் கொடி காட்டி கழக தோழர்கள் கைதாயினர். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வைக்கப்பட்டு மாலை 3.00மணி அளவில் அனை வரும் விடுவிக்கப்பட்டனர்.

ஆவடி மாவட்டம்

உடுமலை வடிவேல், ஆ.ப.நடரா சன், இளவரசன் (துணைச் செயலா ளர்), இரணியன், பூ.இராமலிங்கம், கொரட்டூர் கோபால், வேலவன். கும்மிடிப்பூண்டி மாவட்டம்

வி.பன்னீர்செல்வம் (மண்டல செயலாளர்), வே.அருள்,  க.சுகன்ராஜ், புழல் அறிவுமாணன், பழனி.பாலு, மத்தூர் அண்ணா.சரவணன் (மாநில துணை தலைவர், ப.க.)

தாம்பரம் மாவட்டம்

ப.முத்தையன், கே.நாத்திகன், பா.ஓவியச்செல்வன், ப.கண்ணதாசன், ம.சுடரொளி, சீ.லட்சுமிபதி, தே.சுரேஷ், வழக்குரைஞர் உத்திரகுமாரன், கு. சோமசுந்தரம், கு,ஆறுமுகம், பி.சீனி வாசன், மா.குணசேகரன், இரா.சிவ சாமி, க.தமிழினியன், பெ.மோகன், பி.சி.ஜெயராமன், விஜய், பொழிசை கண்ணன், சுதன்லீ, ஜெனார்த்தனம், கமலகண்ணன், சு.மோகன்ராஜ், க.முத்து

தென்சென்னை

இரா.வில்வநாதன், மயிலை பாலு, மணித்துரை, செ.ர.பார்த்த சாரதி, எம்.பி.பாலு, மஞ்சநாதன், டி.ஆர்.சேதுராமன், சேகர், கோ.வி. ராகவன், செல்வராஜ், செல்வேந்திரன், சண்முகப்பிரியன்

வடசென்னை

கி.இராமலிங்கம், தி.செ.கணேசன், தே.சே.கோபால், தளபதி பாண்டியன், ஆ.பாஸ்கர், சதிஷ்குமார், மும்மூர்த்தி, ஏ.மணிவண்ணன், பி.பாலு

மகளிரணி நூர்ஜஹான், பூவை செல்வி, ராணி, பசும்பொன் செந்தில்குமாரி, இளையராணி, துர்கா, மணியம்மை, மதிவதனி, சீர்த்தி, அர்ச்சனா, வி.தங்க மணி, வி.யாழ்ஒளி, வி.சகானப்பிரியா, வி.வளர்மதி, பி.அஜந்தா, ச.கிரித்திக், பெரியார் பிஞ்சு நிலா, பெரியார் பிஞ்சு வர்ணிகா.

- விடுதலை நாளேடு, 13.4.18

பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை



சென்னை, ஏப்.14 டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த நாள்விழா இன்று (14.4.2018) கொண்டாடப்படுகிறது. திரா விடர் கழகத்தின் சார்பில் சென்னை நேரு விளையாட்ட ரங்கம்  அருகில் அமையப் பெற்றுள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சிலைக்கு திரா விடர் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாலை அணிவித்தார்.

முன்னதாக தோழர்கள் முன்னிலையில் தெலங்கானா மாநிலத்திலிருந்து வருகை தந்த தோழர் சாரய்யா தலை மையிலான குழுவினர் அம் பேத்கர் தொண்டினைப் போற்றி தெலுங்கு மொழிப் பாடலை பாடினார்கள்.

மாநில மாணவரணி செய லாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைசெயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, பொதுக்குழு உறுப்பினர் வெ.மு.மோகன், வழக்குரை ஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி,  சி. வெற்றி செல்வி, பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் அண்ணா.சரவணன், தங்க.தனலட்சுமி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி,  வடசென்னை மாவட்டத் தலை வர் வழக்குரைஞர் சு.குமார தேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில் வநாதன், செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, மயிலை டி.ஆர்.சேது ராமன், செங்குட்டுவன், அரும் பாக்கம் சா.தாமோதரன், தமிழ் செல்வம், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடி வேல், சைதை மு.ந.மதிய ழகன், புரசை அன்புசெல்வன், ஆவடி கலைமணி, ஓட்டேரி சி. பாஸ்கர், மாநில மாண வரணி துணை செயலாளர் நா. பார்த்திபன்,  மங்களபுரம் பாஸ்கர், செம்பியம் கி.இரா மலிங்கம், விடுதலைநகர் செய ராமன், வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தள பதி பாண்டியன், செயலாளர் சோ.சுரேஷ், பா. பார்த்திபன், மயிலை ஈ.குமார், வழக்குரை ஞர் ந.விவேகானந்தன், கெடார் மும்மூர்த்தி, சைதை தென்றல், சேத்பட் பாபு,கொடுங் கையூர் கோ.தங்கமணி, கொடுங் கையூர் கோபால், அமுதரசன், அம்பேத்கர், விமல்ராஜ்,  தி.செ.கணேசன், சுமதி, க.வெண் ணிலா, மு.பவானி, தமிழ் செல்வி, இ.ப.சீர்த்தி, இ.ப.இன நலம், அர்ச்சனா  பா. நதியா, பா. கவிமலர் பெரியார் பிஞ்சுகள் அ.கு.தமிழ்த்தென்றல், அறிவு மதி, கவின் கலைக்கல்லூரி மாணவர் பிரபாகரன், மணி மொழி, மாதவரம் பிரகாஷ் புகைப்பட கலைஞர் சிவக் குமார், செஞ்சி ந.கதிரவன் மற்றும் தெலங்கானா மாநிலத்திலி ருந்து பிரஜா நாஸ்திக சமாஜம் அமைப்பின் தலைவர் ஜி.டி. சாரய்யா, கவிஞர் எர் உப்பாலி, ஸ்பார்ட்டகஸ், நாத் திக பாட கர்கள் சைலேந்தர், டப்டி. நரேஷ், மகேஷ்குமார், சஞ்சீவா  உள்ளிட்ட ஏராள மான தோழர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கழக இளைஞ ரணித் தோழர்கள் சென்னை வேப்பேரி பெரியார் திடலிலிருந்து நேரு விளை யாட்டரங்கம் வரை மாபெரும் எழுச்சியுடன்  இரு சக்கர வண்டி களில் கழகக் கொடிகளுடன்  ஊர்வலமாக சென்றனர்.

-விடுதலை நாளேடு, 14.4.18

வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா?




ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்

திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!



சென்னை, ஏப்.16 தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினத்த வர்கள் மீதான வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் மத்தியஅரசைக் கண்டித்து அனைத்துக்கட்சிகளின் சார்பில் இன்று காலை (16.4.2018) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினத்தவர்கள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை  உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்மூலமாக நீர்த்துப்போகச் செய்வதைக் கண் டித்தும், மத்திய அரசு சீராய்வு மனுவை உடனே தாக்கல் செய்யாமல் காலந்தாழ்த்தியதைக் கண்டித்தும், வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்துக்கு ஒன்பதாவது அட்ட வணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின் தலைமை

திமுக செயல் தலைவர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

கண்டன உரையாற்றியவர்கள்

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சட்டமன்ற காங்கிரசு கட்சித் தலைவர் கே.ஆர்.இராமசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்தியகம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத் தைகள் கட்சித்   தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முசுலீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாகிருல்லாஹ், திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மக்கள்கண்காணிப்பகம் ஹென்றி திபேன் ஆகியோர் கண்டன எழுச்சியுரையாற்றினார்கள்.

திமுக, திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரசு கட்சி, இந்திய யூனியன் முசுலீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக்க தமிழர் பேரவை, பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

கலந்துகொண்டவர்கள்

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்,  தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா, மாநிலங்களவைஉறுப்பினர்கள்வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி, கவிஞர் கனிமொழி, திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியம், பி.கே.சேகர் பாபு மற்றும்  தாயகம் கவி, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், தாம்பரம் ராஜா உள்ளிட்ட திமுக பொறுப்பாளர்கள், விடுதலைசிறுத்தைகள் கட்சிப் பொதுச்செயலாளர் இரவிக்குமார், மாவட்டச் செயலாளர் செல்வதுரை உள்பட அனைத்துக்கட்சிகளின் சார்பில் பொறுப்பாளர்கள், திரைப்பட நகைச்சுவை நடிகர் மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கழகத் தோழர்கள்

மாநில மாணவரணி செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன்,  திராவிட தொழிலாளர் கழகம் பெ.செல்வராசு, திராவிடர் கழக தலைமைசெயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, சி.வெற்றிசெல்வி, நூர்ஜகான் ராசு, இறைவி, பூவை செல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்சாரதி, செல்வராசு, அரும்பாக்கம் சா.தாமோதரன், வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ், தாம்பரம் நகர செயலாளர் மோகன்ராஜ், பகுத்தறிவாளர் கழகம் விஜய் ஆனந்த், கே.எம்.சிகாமணி, புகைப்படக் கலைஞர் சிவகுமார், ந.கதிரவன்,  உடுமலை வடிவேல், வேலவன், அறிவழகன்,  நுங்கம்பாக்கம் பவன், கணேசன், யுவராஜ், முரளி, சுதன், குமார் உள்பட ஏராளமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
- விடுதலை நாளேடு, 16.4.18

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

இதோ ஒரு வீர ............. பத்திரன்!



நீலாங்கரை மானமிகு ஆர்.டி.வீர பத்திரன் வயது 80 (13.4.1938) என் றாலும் தோற்றத்திலும் சுறுசுறுப்பிலும், வேகத்திலும் ஓர் ஓட்டக்குதிரைதான் - இளைஞர்தான்.

கழக நிகழ்ச்சி என்றால் ஜெர்மனுக் குக்கூட வந்து விடுவார். 2017இல் ஜெர்மனியில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டில் பங்கு கொண்டவர். ஆந் திரா, தெலங்கானா, விஜயவாடா, பெங் களூரு என்று இவரின் இயக்கத் தொடர்பு ஆச்சரியமானது.

இவ்வளவுக்கும் படிப்பு வெறும் நான்காம் வகுப்புதான். 10ஆம் வயதில் 6 வயது என்று சொல்லி முதல் வகுப்பில் சேர்த்தார்களாம். அப்பொழு தெல்லாம் அப்படித்தான் - ஆசிரிய ராகப் பார்த்து ஒரு பிறந்த நாளை குறிப்பிடுவது வழமைதான். செங் கற்பட்டு மாவட்டம் மேடவாக்கத்தைச் சேர்ந்த நூக்கம்பாளையம் தேசப்பன் - ஆதியம்மாள் ஆகியோருக்கு மூன் றாவது மகன் இவர்.

வறுமைதான் இவரின் உறைவிடம். சென்னை தியாகராயர் நகரில் கண் ணம்மாபேட்டையில் தாய்மாமா பெருமாள் மாட்டுப் பண்ணை வைத் திருந்தார். அந்தத் தொழுவம் தான் வீரபத்திரனின் உறையுள். பள்ளிக்குச் சென்று வந்த நேரம் போக மீதி நேரமெல்லாம் மாட்டோடு இவரும் சிறு கன்றுகுட்டிதானாம்.

ஒரு நாள் மாமாவின் அடி தாங் காமல், டிக்கெட் வாங்காமல், ஏதோ ஓர் இரயிலில் ஏறினார். விடியற்காலை கண் விழித்தபோது அது விஜயவாடா வாக இருந்தது.

மொழி தெரியாத - அறிமுகமில் லாத இடத்தில் சுமை தூக்கும் வேலையில் ஈடுபட்டு, அதன்பின் வாடகை ரிக்ஷா ஓட்டி, லாரி கிளீன ராகி - இப்படியே எட்டாண்டுகள் கழித்து மறுபடியும் கண்ணம்மா பேட்டைக்கு ஒரு வழியாக வந்து சேர்ந்தார் நமது ஆர்.டி.வீரபத்திரன்.

கொஞ்ச காலம் டாக்சி டிரைவர் - அதன்பின் இராயல் என்ஃபீல்டில் ஓட்டுநர் பணி. கவிஞர் வாலியின் கார் ஓட்டுநராகவும் பணியாற்றியுள்ளார்.

32ஆம் வயதில் 1969ஆம் ஆண் டில் கஸ்தூரியைத் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்களுக்குப் பிறகு அண்ணன் குப்புசாமி, அண்ணி சந்திராதான் எல்லாம் இவருக்கு. இவர் களின் ஏற்பாட்டின் அடிப்படையில் தான் இந்தத் திருமணமும் கூட.

இந்தச் சூழ்நிலையில் கண்ணம்மா பேட்டையில் திராவிடர் கழக வீரர் நாதன் - அந்தக் காலகட்டத்தில் அந்தப் பகுதியில் பிரபலமானவர். (தந்தை பெரியார் இறுதியாக பேசிய சென்னை தியாகராயர் நகர் பொதுக் கூட்டத்திற்கு (19.12.1973) தலைமை வகித்தவர் இவர்).

வீரபத்திரனைக் கழகத்திற்கு இழுத் தவரே இவர்தான். அதுவும் எப்படி? தொடக்கமே பிள்ளையார் உடைப்பு போராட்டம். கண்ணம்மாபேட்டை தோழர் ஏழுமலை, இரகுராமன், அடையாறு டைலர் ஜோதி, அடை யாறு அரங்கநாதன், பிற்காலத்தில் ஓ.சுந்தரம், குடந்தை கவுதமன் ஆகி யோரின் நட்போடு கழகப் பணியில் ஈடுபட்டார்.

இராயல் என்ஃபீல்டில் விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு சொந்த தொழில்களைத் தொடங்கினார்.

தந்தை பெரியார் பல்சுவை மய்யம், தந்தை பெரியார் தேநீரகம், தந்தை பெரியார் உணவகம், தந்தை பெரியார் தொலைத் தொடர்பகம் என்று பல் வேறு சொந்த தொழில்களை நடத் தினார். கொழுத்த இராகு காலத்திலும், எமகண்டத்திலும்தான் இவற்றை யெல்லாம் தொடங்குவார். சொந்த வீட்டுக்குக் கால் கோள் எமகண்டத்தில் தான். அதிலும் குறிப்பாக விதவைப் பெண்களை முன்னிலைப்படுத்துவார்.

இரண்டு மகள்கள், ஒரு மகன் இவருக்கு. ஒரு மருமகன் முசுலிம், மற்றொரு மருமகன் கிறித்தவர். இப்படியெல்லாம் ஜாதி, மத ஒழிப்புப் புரட்சிதான்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரி யர் மானமிகு கி.வீரமணி, புலவர் புலமைப்பித்தன், திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை, கவி ஞர் கலி.பூங்குன்றன், வழக்குரைஞர் அருள்மொழி ஆகியோரை அழைத்து, வீட்டு நிகழ்ச்சிகளை யெல்லாம் இயக்கப் பிரச்சார நிகழ்ச் சிகளாக நடத்தினார்.
இரு மகள்களும் பொறியாளர் கள், பேரக் குழந்தைகள் உண்டு. எவ்வளவுக்கெவ்வளவு இளமையில் வறுமை இவரைக் கவ்விப் பிடித் ததோ, அவற்றுக்கெல்லாம் நிவார ணமாக எல்லா வளத்துடனும் நிம் மதியாக முழுநேர இயக்கப் பணி யாளராக இப்பொழுது நடைபோட்டு வருகிறார்.

இவரின் துணைவியார் 2003இல் மரணமடைந்தபோது, மனமுடைந்து போனார் - வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளில் எல்லாம் தைரியம் கொடுத்து ஊக்கப்படுத்தியவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள். இதனை நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார்.

1962இல் பால் வியாபாரம் செய்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் சிந் தாதிரிப்பேட்டையில் தந்தை பெரியார் தங்கி இருந்தார். நாள்தோ றும் இவர்தான் அந்த வீட்டுக்குப் பால் கொடுப்பவர். அப்பொழுது முதலே தந்தை பெரியாரை நெருக் கமாகக் காணும், அறியும் வாய்ப்பு ஏற்பட்டு விட்டது.

கழகத்தில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளராகவும், மாவட்ட செயலாளராகவும், இப் பொழுது பொதுக்குழு உறுப்பின ராகவும் இருந்து வருபவர்.

ஈழத் தமிழர்களுக்காக திராவிடர் கழக பெருங்குரல் கொடுத்துக் கொண்டு, பாடுபட்டுக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் போராளிகள் சென்னையில் தங்கி இருந்தபோது அவர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததால், பல சோதனைகள் நடத் தப்பட்டன. எல்லா சோதனைகளையும் கடந்து, குற்றமற்றவர் என்ற மெய்ச் சான்றுடன் வெளியே வந்தார்.

டில்லியில் நடைபெற்ற சமூகநீதித் தொடர்பான போராட்டத்தில் திரா விடர் கழகத் தலைவர் மற்றும் தோழர் களும் கலந்து கொண்டபோது கைது செய்யப்பட்டனர்.

அந்தப் போராட்டத்தில் மேனாள் மத்திய அமைச்சர் சந்திரஜித் யாதவ், டி.பி.யாதவ், தமிழ்நாட்டிலிருந்து சென்ற தாம்பரம் முத்தையன் மற்றும் கழகத் தோழர்கள், வடநாட்டைச் சேர்ந்த சமூக நீதியாளர்கள் பங்கு கொண் டனர். மாலை விடுதலை செய்யப்பட்ட நிலையில் மேனாள் பிரதமர் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் இல்லத்திற்குக் கழகத் தலைவர் ஆசிரியர் சென்ற போது, வி.பி. சிங் அவர்களிடத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அவர் இல்லத்தில் அனைவருக்கும் தேநீர் விருந்து அளித்து உபசரிக்கப் பட்டது.

மண்டல் குழு தொடர்பாக உச்சநீதி மன்ற நீதிபதி ஜீவன்ரெட்டி பரிபூரணத் தய்யங்கார் உருவப் பொம்மை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
வேலூர் மத்திய சிறையில் 15 நாள் கள் கழகத் தலைவருடன் இருந்ததைப் பூரிப்போடு தெரிவித்துக் கொண்டார்.

வறுமையில் பிறந்து வளர்ந்து, பல்வேறு சமூக சூழலில் பல பழக்க வழக்கங்களுக்கெல்லாம் ஆளாகி, திராவிடர் கழகக் கொள்கைக்குள் காலடி பதித்து, பகுத்தறிவு வெளிச்சம் பெற்று, கழகத் தோழர்களின் நட்பும், கழகத் தலைவர் ஆசிரியர் அவர் களின் அரவணைப்பும், ஊக்குவிப்பும் என்னைப் பக்குவமும், சிறப்பும் பெற்ற ஒரு மனிதனாக வார்த்தெடுத் திருக்கிறது என்று பெருமிதத்துடன் கூறுவார் பெரியார் பெருந்தொண்டர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் அவர் கள்.

ஆம், பெரியார் கொள்கை, ஒரு வாழ்க்கை நெறியே!

பேட்டி: 2.4.2018

இடம்: பெரியார் திடல், சென்னை
பேட்டி கண்டவர்: கவிஞர் கலி.பூங்குன்றன்

உடனிருந்தவர்: வீரபத்திரன் அவர்களின் சகப் பயணாளி இராசேந்திரன்

- விடுதலை ஞாயிறு மலர், 07.04.2018