மண்டல கலந்துரையாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மண்டல கலந்துரையாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 23 மே, 2022

ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டை சிறப்பாக நடத்த சென்னை மண்டல கலந்துரையாடலில் முடிவு

 

கழகத்துணைத் தலைவரிடம் விடுதலை சந்தாவை துரை ராவணன் வழங்கினார். உடன் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்.  திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் புரட்சிக்கவிஞர் பிறந்த நாளில் (29.4.2022) கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு கருஞ்சட்டை விருது அளிக்கப்பட்டதன் மகிழ்வாக சென்னை மண்டலத்தின் சார்பில் மு.சண்முகப்ரியன் பயனாடை அணிவித்தார். 

சென்னை,மே 17- சென்னை மண் டல பொறுப்பாளர்கள் கலந் துரையாடல் கூட்டம் 14.5.2022 முற்பகல் 11.00 மணி அளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள சிறு கூட்ட அரங்கில் கழகத் துணைத் தலைவர் கவி ஞர் கலி. பூங்குன்றன் தலைமை யிலும், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், சென்னை மண் டல செயலாளர் தே.செ.கோபால் மற்றும் தென் சென்னை மாவட்ட தலைவர் இரா வில்வ நாதன் ஆகியோர் முன்னிலை யிலும் நடைபெற்றது.

சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் 4.6.2022 மாலை 6.00மணி அளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெறவிருக் கும் 'ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டை’ சிறப்பாக நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க சில முக்கிய திட்டங்களை வகுத்துக் கொடுத்தார்.

தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்த சாரதி, அமைப்பாளர் மு.ந. மதியழகன், துணைத் தலைவர் டி, ஆர். சேதுராமன், ஆயிரம் விளக்கு மு. சேகர், வடசென்னை மாவட்ட தலைவர் வெ.மு. மோகன், ஆவடி மாவட்ட செயலாளர் க. இளவரசன், உடுமலை வடிவேலு, தொழி லாளர் அணி ஆ.துரை ராவ ணன், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.சண்முகப்பிரியன், தென் சென்னை மாவட்ட இளை ஞரணி தலைவர் ச.மகேந்திரன் ஆகியோர் கருத்துகளையும்‌ வழிமுறைகளையும் கூறினர்.  

மாநாட்டை விளக்கி ஆங்காங்கே சுவர் எழுத்துகளை எழுதுவது எனவும், சுவர் பேனர்களை ஒட்டுவது என வும், முடிந்த இடங்களில் நெகிழி பேனர்களை வைப்பது எனவும், மாநாட்டுக்கு முன்ன தாக மாநாடு நடக்கும் இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஒலி பெருக்கி மூலம் விளம்பரம் செய்வது எனவும், மாநாட்டிற் கான செலவுக்காக பொருள் உதவியை சிறந்த முறையில் திரட்டிக் கொடுப்பது எனவும், துண்டறிக்கைகளை கொடுத்து கடை வசூல் செய்வது எனவும் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக் கலந்துரையாடல் கூட் டத்தில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ. கணேசன், துணைச் செயலாளர் கெடார் மும்மூர்த்தி, தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் சி.செங்குட்டுவன், இளைஞ ரணி செயலாளர் ந.மணிதுரை, தரமணி கோ.மஞ்சநாதன்,  தி. முரளி மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர்.

தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ. ராகவன் நன்றி கூறி கலந்துரை யாடல் கூட்டத்தை முடித்து வைத்தார்.

ஞாயிறு, 8 மார்ச், 2020

சென்னை மண்டல கழக கலந்துரையாடலில் தமிழர் தலைவரிடம் முதற் பட்டியல்

மார்ச் 23இல் மத்திய அரசு அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம்
சென்னை. மார்ச் 8- சென்னை மண்டல கழகக் கலந்துரையாடல் கூட்டம் 6.3.2020 அன்று சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஏராளமான கழகத் தோழர் கள் பங்கேற்க எழுச்சியோடு நடைபெற்றது.
மாலை 6.30 மணிக்கு கூட்டம்  துவங் கியது. திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் சே.மெ.மதிவதனி கடவுள் மறுப்புக் கூறினார். அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் அனைவரையும் வர வேற்றுப் பேசினார்.
கழகத் துணைத் தலைவர் கருத்துரை
அடுத்துப் பேசிய கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் 10.3.2020 அன்று அன்னை மணியம்மையார் நூற் றாண்டு விழா குறித்தும், மார்ச் 23இல் தமிழர் தலைவர் அறிவித்துள்ளபடி மத் திய அரசு அலுவலகங்கள் முன்பாக நடை பெறவுள்ள முற்றுகைப் போராட்டத்தில் சென்னை மண்டல கழகத் தோழர்கள் பெரும் அளவில் பங்கேற்பதற்கு அனைத்து கழகப் பொறுப்பாளர்களும் முனைப்பா கப்  பணியாற்ற வேண்டுமெனக் கேட்டும், "விடுதலை" சந்தா சேர்ப்பு குறித்தும் விளக்கமாக தமது உரையில் குறிப்பிட்டார்.
போராட்ட வீரர்கள் - முதற்கட்டப் பட்டியல்
வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், கும்மிடிப் பூண்டி மாவட்ட தலைவர் புழல் த.ஆனந் தன், திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், ஆவடி மாவட்ட அமைப் பாளர் உடுமலை வடிவேல் ஆகியோர் தங்களது மாவட்டங்களில் நடைபெற்று முடிந்த கழகப் பணிகள் பற்றியும், எதிர் காலப் பணிகள் குறித்தும் விளக்கமாகக் குறிப்பிட்டனர். அனைத்து மாவட்டத் தலைவர்களும் மார்ச் 23இல் மத்திய அரசு அலுவலகம் முன்பாக நடைபெறவுள்ள முற்றுகைப் போராட்ட வீரர்களது முதற்கட்டப் பெயர் பட்டியலை தமிழர் தலைவரிடம் அளித்தனர்.
கழக துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி கழக மகளிரணிப் பணிகள் குறித்தும், சென்னை மண்டல தலைவர் தி.இரா.இரத்தினசாமி கழக நிகழ்ச்சிகள் நடத்தப்படும் போது அனைத்து கழகத் தோழர்களும் பெரும் அளவில் பங்கேற்க வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டுப் பேசினர்.
ஆவடி மாவட்ட இளைஞரணி தலைவர் வெ.கார்வேந்தன் மற்றும் பெரியார் பெருந்தொண்டர் அம்பத்தூர் துரை.முத்துக்கிருட்டிணன், அம்பத்தூர் பகுதி தலைவர் பூ.இராமலிங்கம் ஆகியோர் அம்பத்தூர் பகுதி கழக வளர்ச்சிப் பற்றி எடுத்துக் கூறினர்
கழகத் தலைவர் தலைமையுரை நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரையாற்றினார்.
சென்னை மண்டல கழகக் கலந்துரை யாடல் கூட்டத்தில் பெருமளவில் தோழர் கள் வந்து கலந்து கொண்டுள்ளது மகிழ்ச் சியளிப்பதாகக் குறிப்பிட்டார். முக்கிய மான பிரச்சினை களைப் பற்றி தெளிவான விளக்கங்களைத் தரும் சென்னை பெரியார் திடல் சிறப்புக் கூட்டங்களிலும் அதே போன்று தோழர் கள் அனைவரும் கலந்து கொண்டு - கருத்துக்களை செவிமடுத்து - பிறரைத் தெளிவுப்படுத்துவதற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இடையறாத முயற்சி - அதன் அடிப்படையிலான இடைவிடாதப் போராட்டம் வெற்றியே தரும் என்பதைக் குறிப்பிட்டு - நீட் எதிர்ப்புப் பிரச்சார தொடர் பயணம் மூலமாக தெளிவு பெற் றுள்ள பொதுமக்களும், கழகத் தோழர்க ளும் மார்ச் 23இல் பெருமளவில் முற்று கைப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்தார். சென்னை மண்டல கழகப் பிரச்சாரப் பணிகள் பற் றிக் குறிப்பிட்டும், கழகத்தின் கட்டுப்பாடு கள் பற்றியும் விளக்கமாக உரையாற்றினார்.
அம்பத்தூர் கழகத் தோழர் பெரியார் பெருந்தொண்டர் துரை.முத்துக்கிருட் டிணன் 'விடுதலை' வளர்ச்சிநிதி - நீட் எதிர்ப்பு முற்றுகைப் போராட்ட நிதியாக ரூ. 3000த்தை தமிழர் தலைவரிடம் மகிழ்ச் சியுடன் வழங்கினார். ஆவடி மாவட்ட செயலாளர் க.இளவரசன் 'விடுதலை' 2 ஆண்டு சந்தாக்குரிய தொகை ரூ. 3600யும், மேடவாக்கம் கழகத் தோழர் கே.அப்துல் சத்தார் ஒரு ஆண்டு 'உண்மை' சந்தா தொகை ரூ. 350யும் தமிழர் தலைவரிடம் வழங்கினர். ஆவடி மாவட்டத்தில் கழகத் தில் இணைந்த புதிய தோழர்களான இரத் தினம் - காயத்திரி இணையர் தமிழர் தலை வரிடம் அறிமுகப்படுத்தப்பட்டனர். தமி ழர் தலைவர் அவர்களை மகிழ்ச்சியுடன் பாராட்டினார். ஆவடி மாவட்டம் - அம்பத்தூர் நகர தலைவராக சரவணன், நகரச் செயலாள ராக கண்ணன் ஆகியோர் அறிவிக்கப்பட் டனர்.
சிறப்பாக நடைபெற்ற இக்கலந்துரை யாடல் கூட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொரு ளாளர் வீ.குமரேசன், கழக வழக்குரைஞ ரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசே கரன், மாநில கழக மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, திராவிட மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, த.க.நடராசன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் சமூகக் காப்பணி மாநில அமைப்பாளர் சோ. சுரேசு மற்றும் சென்னை மண்டல கழகத் தின் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், கிளைக்கழகப் பொறுப்பாளர்கள், இளை ஞரணி, மகளிரணி, மாணவர் கழகம்  சார்ந்த அனைத்துத் தோழர்களும் திரளா கக் கலந்து கொண்டனர். வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன் எற்பாட்டில் அனைவருக்கும் இரவு சிற்றுண்டி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியாக சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால் அனைவருக்கும் நன்றி கூறினார்.
தமிழ் சாக்ரட்டீஸ் கழகத்திலிருந்து நீக்கம்
சென்னை- தமிழ் சாக்ரட்டீஸ் கழகக் கட்டுப் பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகை யிலும், கழகத் தோழர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் தன்மையிலும் தொடர்ந்து நடந்து கொண்டு வருவதாலும், இது குறித்து கழகத் தோழர்கள் பலரும் ஆதாரங்களோடு புகார் கூறியதன் அடிப்படையில், அடுத்த அறிவிப்பு தலைமைக் கழகத்தின் சார்பில் வெளி வரும் வரை திராவிடர் கழ கத்திலிருந்து உறுப்பினர் உட்பட அவர் நீக்கி வைக் கப்படுகிறார்.
கழகத் தோழர்கள் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள்.
6.3.2020 அன்று மாலை சென் னைப் பெரியார் திடலில் கழகத் தலைவர் தலைமையில் நடை பெற்ற சென்னை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையா டலில் நடவடிக்கை எடுத்து அறிவிக்கப் பட்டது.
- தலைமை நிலையம்
- விடுதலை நாளேடு, 8.3.20

வியாழன், 22 நவம்பர், 2018

சென்னை மண்டல இளைஞரணி கழக கலந்துரையாடலில் தீர்மானம்


சென்னை மண்டல கழக கலந்துரையாடலில் தீர்மானம்




சென்னை, நவ.22 திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சென்னை மண்டல இளைஞரணி கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை மண்டல இளை ஞரணி சார்பில் 500   விடுதலை' சந்தாக்களை வழங் குவது என்றும், குருதிக் கொடை வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

சென்னை மண்டல திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திட லில் அன்னை மணியம்மையார் அரங்கில் 18.11.2018 அன்று காலை 11 மணியளவில் தொடங்கி நடை பெற்றது.

இக்கூட்டத்திற்கு ஆவடி வை.கலையரசன் கடவுள் மறுப்பு கூறினார். மண்டல இளைஞரணி அமைப் பாளர் சோ.சுரேஷ் தலைவரை முன்மொழிந்து உரை யாற்றினார். மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவசாமி வழிமொழிந்து வரவேற்புரையாற் றினார்.

மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் கலந்துரையாடல் கூட்டத்தின் முக்கிய நோக்கங்களை யும், அவற்றை செயல்படுத்துவதில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய அணுகுமுறைகளையும் கூறினார். குறிப்பாக விடுதலை சந்தா சேர்ப்பதன் முக்கியத் துவத்தை எடுத்துக் கூறி னார்.

அவரைத் தொடர்ந்து வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர் கெ.விஜயகுமார், செயலாளர் சட்டநாதன், தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் மகேந்திரன், செயலாளர் மணித்துரை, கும்மிடிபூண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் க.ச.க.இரணியன், அமைப்பாளர் கார்த்தி கேயன், ஆவடி மாவட்ட இளைஞரணி செயலாளர் க.கலைமணி, ஆவடி நகர இளைஞரணி தலைவர் இ.தமிழ்மணி, திருவொற்றியூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் இரா.சதீஷ், சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் நித்தியாநந்தம், வடசென்னை பெரம்பூர் பகுதி திராவிடர் கழக இளைஞரணி இந்திரஜித், புதுவண்ணை இளைஞரணி அமைப்பாளர் செல்வம் ஆகியோர் விடுதலை சந்தா சேகரிப்பில் தங்களது இலக்கு குறித்தும் கையாளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும் உரையாற்றினர்.

அவர்களைத் தொடர்ந்து தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், துணைத் தலைவர் சி.செங்குட்டுவன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், மண்டலச் செயலாளர் தே.செ. கோபால் ஆகியோர் அரிய கருத்துகளை வழங்கி உரை யாற்றினர்.

கூட்டத்தில் பங்கேற்ற புதிய தோழர்களான தாம்பரம் வசந்தகுமார், மயிலாப்பூர் கலையரசன், போரூர் தினேஷ், வடபழனி தினேஷ், வடபழனி இரமேஷ், பூபதி ஆகியோர் தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு உரையாற்றினர்.

பின்னர் மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ் கலந்துரையாடல் கூட்டத்தின் தீர் மானங்களை முன்மொழிந்தார். தொடர்ந்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை உரையை நிறைவுரையாகவும் வழிகாட்டுதல் உரை யாகவும் ஆற்றினார். அவரது உரையில் அரசியல், சமூக சிக்கல்களையும் இதுபோன்ற பிரச்சினைகளை கையாள்வதில் (தந்தை பெரியார் காலம் தொட்டு) இயக்கத்தின் நிலைப்பாட்டையும், விடுதலை ஏட்டின் தேவையையும், அதன் முக்கிய பங்களிப்புகளையும் விளக்கி உரையாற்றினார். இறுதியாக பொன்னேரி நகர மாணவர் கழக பொறுப்பாளர் சுகன்ராஜ் நன்றி யுரையாற்றினார்.

இக்கூட்டத்தில் வடசென்னை மாவட்ட அமைப் பாளர் புரசை அன்புச் செல்வன், பா.கோபாலகிருஷ்ணன், கா.காரல்மார்க்ஸ், ச.தாஸ், அம்பேத்கர், கோயம்பேடு அண்ணாதுரை, க.தமிழ்ச்செல்வன், தரமணி மஞ்சநாதன், மாணவர் கழகத் தோழர் கு.பா.கவிமலர், எண்ணூர் செல்வா, பெரம்பூர் முரளிகிருஷ்ணன், பெரம்பூர் உமாபதி ஆகியோர் பங்கேற்றனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:



தீர்மானம் 1:

இரங்கல் தீர்மானம்


கடலூர் மாவட்ட முன்னாள் மகளிரணி அமைப் பாளர் இரா.சீனியம்மாள் வயது 70 (20.10.2018), பகுத்தறிவாளர் கழக முன்னாள் மாநிலத்துணைத் தலைவர் வடசேரி இளங்கோவன் வயது 69 (31.10.2018), ஜாதி ஒழிப்புப் போராட்ட வீரரான கூடுவாஞ்சேரி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சு.மன்னார் வயது 85 (2.11.2018) அவர்களின் மறைவிற்கு சென்னை மண்டல திராவிடர் கழக இளைஞரணி ஆழ்ந்த இரங் கலையும், அவர்களின் அளப்பரியத் தொண்டிற்கு வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2:

குருதிக்கொடை


தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86ஆவது பிறந்த நாள் (சுயமரியாதை நாள்) & உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை உலகமயமாக்கும் பணியில் அயராது உழைத்துவரும் தமிழர் தலைவர் அவர்களின் பிறந்த நாளான (2.12.2018) அன்று சென்னை பெரியார் திடலில் நடை பெறும் மனிதநேயப் பணியான "குருதிக்கொடை" வழங்கும் முகாமில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட இளைஞரணித் தோழர்கள் குருதிக்கொடை வழங்கு வதென தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3:

விடுதலை சந்தா சேர்ப்பு


உலகின் ஒரே பகுத்தறிவு ஏடான  விடுதலை' நாளிதழுக்கு சந்தா சேர்ப்புப் பணியில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களோடு இணைந்து "500" விடுதலை சந்தாக்களை சேர்த்து தமிழர் தலைவர் அவர்களின் 86 ஆவது பிறந்த நாள் பரிசாக வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4:

"என் கடன் பெரியார் பணிமுடிப்பதே"


திராவிடர் கழக இளைஞரணி நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 86ஆம் ஆண்டு பிறந்த நாளை (சுயமரியாதை நாள்) முன்னிட்டு டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு தினங்களில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட ஏழு மாவட்டங்களில் "என் கடன் பெரியார் பணிமுடிப்பதே" எனும் தலைப்பில் நடைபெறவிருக்கும் கூட்டங்களை அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர்களின் ஆலோசனையினைப் பெற்று சிறப்பாக நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது

தீர்மானம் 5:

விடுதலை வளர்ச்சி நிதி


திராவிடர் கழக இளைஞரணித் தோழர்கள் தங் களுடைய பிறந்த நாள் உட்பட பிற நிகழ்வின்போது கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெறும்போதெல்லாம் பயனாடை களுக்குப் பதிலாக "விடுதலை வளர்ச்சி நிதி" வழங்கு வதென தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 6:

பெரியார் சமூக காப்பணி - மாநில மாநாடு


அ) தஞ்சையில் பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கான விளம்பரங் களில் சிறப்பாக இளைஞரணி பொறுப்பாளர்களும், தோழர்களும் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

ஆ) மாநில மாநாட்டையொட்டி தலைமை நிலை யம் அறிவித்துள்ளபடி பெரியார் சமூக காப்பணி யில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தோழர்கள் பயிற்சி யில் பங்கேற்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.

- விடுதலை நாளேடு, 22.11.18

புதன், 3 அக்டோபர், 2018

சென்னை மண்டல கழகக் கலந்துரையாடலில் கழகத் தலைவர் புதிய அறிவிப்பு

விடுதலைக்கு பத்து ஓராண்டு சந்தாக்களை சேகரிப்போர் பெயருக்கு முன் - முன்னொட்டாக விடுதலை என்று போட்டுக் கொள்ளலாம்

சென்னை மண்டல கழகக் கலந்துரையாடலில் கழகத் தலைவர் புதிய அறிவிப்பு




சென்னை, அக்.3 விடுதலை ஏட்டுக்கு பத்து ஓராண்டு சந்தாக்களை சேகரித்துக் கொடுப்பவர்கள் தங்கள் பெயருக்கு முன் - முன்னொட்டாக விடுதலை  என்று பொறித்துக் கொள்ளலாம் - அதற்கான சான்றினை தலைமைக் கழகம் வழங்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.

வடசென்னை, தென்சென்னை, தாம்பரம், ஆவடி, கும்முடிப்பூண்டி ஆகிய கழக மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று (2.10.2018) மாலை சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது.

எப்பொழுதும் நடக்கும் இத்தகு கூட்டத்தை - இம்முறை ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்ற கூட்டமாக நடைபெற்றது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் நா. பார்த்திபன் கடவுள் மறுப்புக் கூறி,  மண்டலச் செயலாளர் கொடுங்கையூர் தே.செ. கோபால் வரவேற்புரையாற்றினார்.

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ப.முத்தையன்,  செயலாளர் கோ.நாத்திகன், ஆவடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் பா.தென்னரசு, கும்முடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் புழல் ஆனந்தன், ஆவடி கழக மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேலு, ஆவடி மாவட்ட இளைஞரணி தலைவர் கார்வேந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் க.பார்வதி, எம்.பி.பாலு, நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் இர.சிவசாமி, தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர் விஜயகுமார், தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழ் சாக்ரட்டீஸ், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் சி.செங்குட்டுவன், தென்சென்னை மாவட்டக் கழக துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர்   தளபதி பாண்டியன், தோழர் க.பாலு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறியாளர் இன்பக்கனி, எண்ணூர் வெ.மு. மோகன், பெரியார் களம் அமைப்பின் தலைவர் இறைவி, மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உரையாற்றியதற்குப் பிறகு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவாக உரையாற்றினார்.



தோழர்களின் கருத்துகள்:

(அ). விடுதலை சந்தா சேர்ப்பு (கழக உறுப்பினர்கள் கட்டாயம் சந்தாதாரர் ஆகுதல்)

(ஆ). தெருமுனைக்கூட்டங்கள் நடத்துதல்.

(இ). கழகத் தலைவரை அழைத்து சென்னை மண்டலத்தில் உள்ள மாவட்டங்கள் அனைத்திலும் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை வெகு சிறப்பாக நடத்துதல்.

(ஈ). கிளைக் கழகம் தோறும் கழகக் கொடியினை ஏற்றுதல்.

(உ) ஒவ்வொரு வட்டத்திலும் முதல் கட்டமாக ஒரு பொறுப்பாளரை நியமனம் செய்தல்.

கழகத் தலைவர் கூறிய திட்டங்கள்:

1. மாவட்டக் கழகக் கூட்டங்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை.

2. மண்டலக் கழகக் கூட்டங்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை.

3. நகர, ஒன்றிய, கழகக் கூட்டங்கள் மாதந்தோறும்.

4. கழகக் கொடிகளை ஆண்டுக்கு இருமுறை புதுப்பித்தல், கழகக் கொடி இல்லாத இடங்களில் கொடி ஏற்றுதல்.

5.  விடுதலை சந்தாக்களை தொடர்ந்து திரட்டுதல். (வீடு தோறும் விடுதலை, கடைகள் தோறும் கழக வெளியீடுகள்)

6. தெருமுனைக் கூட்டங்கள்.

7. பொதுக்கூட்டங்கள்.

8. வட்டார மாநாடுகள்.

9. தலைமைச் செயற்குழு, பொதுக்குழுவின் முடிவுகளை தீர்மானங்களைப் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரக் கூட்டங்கள் வாயிலாகப் பரப்புதல்.

10. ஆண்டுக்கு இருமுறை சுயமரியாதைக் குடும்ப விருந்துகள் நடத்துதல்.

11.  கழகம் அறிவிக்கும் போராட்டங்களில் கட்டாயமாக கலந்து கொள்ளுதல்.

12. மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளர் அணிகளைப் பலப்படுத்துதல்.

13. விடுதலை உண்மை வாசகர் வட்டங்கள் அமைத்தல்.

முக்கியமான அறிவிப்பு:

விடுதலைக்கு பத்து ஓராண்டு சந்தாக்களை திரட்டித் தருவோர் தன் பெயருக்கு முன்னால் முன்னொட்டாக விடுதலை   என்று பொறித்துக் கொள்ளலாம்.

இதில் முதல் இடத்தைப் பெறுபவர் நமது பெரியார் மாணாக்கன் ஆவார். அதற்கான சான்றினைத் தலைமைக் கழகம் வழங்கும் என்ற  விடுதலை ஆசிரியர் - திராவிடர் கழகத் தலைவரின் அறிவிப்பினைத் தோழர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். வடசென்னை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் தி.சே.கணேசன் நன்றி கூறிட கலந்துரையாடல் கூட்டம் நிறைவு பெற்றது.

வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தன் பிறந்தநாளையொட்டி அனைவருக்கும் மாலை விருந்தளித்து உபசரித்தார்.

வடசென்னை மாவட்டம்

கீழ்ப்பாக்கம், அயன்புரம், வில்லிவாக்கம், கொளத்தூர், செம்பியம், பெரம்பூர், வியாசர்பாடி, எருக்கமாநகர், மாதவரம், கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், பாரதிநகர், ஓட்டேரி, திரு.வி.க.நகர், புரசைவாக்கம், எழும்பூர், புளியந்தோப்பு, அண்ணாநகர், அமைந்தகரை, செனாய்நகர்

தலைவர்: வழக்குரைஞர் சு.குமாரதேவன், செயலாளர்: தி.செ.கணேசன்

திருவொற்றியூர் மாவட்டம்

கொருக்குப்பேட்டை, பெத்தநாயக்கன் பேட்டை, ஏழுகிணறு, துறைமுகம், இரயாபுரம், காசிமேடு, வண்ணாரப்பேட்டை, புதுவண்ணை, ஆர்.கே.நகர், திருவொற்றியூர், எண்ணூர்

தலைவர்: வெ.மு.மோகன், செயலாளர்: பா.பாலு

தாம்பரம் மாவட்டம்

தாம்பரம் நகரம், பல்லாவரம் நகரம், ஆலந்தூர் நகரம், அனகாபுத்தூர் நகரம், குன்றத்தூர் ஒன்றியம், பரங்கிமலை ஒன்றியம், திருப்போரூர் ஒன்றியம், காட்டாங்குளத்தூர் ஒன்றியம் (மறைமறை நகர் நகரியம்)

தலைவர்: ப.முத்தையன், செயலாளர்: கோ.நாத்திகன்

திருவான்மியூர் கழக மாவட்டம்

ஈசிஆர் - திருவான்மியூர் (அடையாறு, சாஸ்திரிநகர், இந்திராநகர், கஸ்தூரிபாய் நகர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈச்சம்பாக்கம், பனையூர், உத்தண்டி, கானத்தூர், கோவளம்)

(ஓம்ஆர்) ராஜீவ்காந்தி சாலை

கந்தன் சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்க நல்லூர், செம்மஞ்சேரி, நாவலூர், படூர், கேளம்பாக்கம்

வேளச்சேரி முதல் மேடவாக்கம் சாலை

வேளச்சேரி, தரமணி, மடிப்பாக்கம், விடுதலை நகர், நாராயணபுரம், பள்ளிகரணை, மேடவாக்கம், பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், நங்கநல்லூர்.

தலைவர்: ஆர்.டி.வீரபத்திரன், செயலாளர்: பி.சி.செயராமன் (விடுதலைநகர்)




-  விடுதலை நாளேடு, 3.10.18

திங்கள், 30 ஜூலை, 2018

தமிழர் தலைவர் பங்கேற்கும் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நிறைவு பொதுக்கூட்டத்தை தியாகராயர் நகரில் எழுச்சியுடன் நடத்த முடிவு



சென்னை, ஜூலை 30 தென் சென்னை மாவட்ட சின்மயா நகர் பகுதியில் தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் சி.செங்குட்டுவன் அவர்கள் இல்லத்தில் 28.7.2018 அன்று மாலை 6 மணி அளவில் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தலைமையில்  சென்னை மண்டல கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது.

தென்சென்னை மாவட்டத்  தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்த சாரதி,  வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன்,  தாம்பரம் கழக மாவட்டத் தலைவர் ப.முத்தையன் , செயலாளர் கோ.நாத்திகன், ஆவடி கழக மாவட்டத்  தலைவர் பா.தென்னரசு, கும் மிடிப்பூண்டி கழக மாவட்டத்  தலைவர் புழல் சி.ஆனந்தன், செயலாளர் இரா.இரமேஷ் ஆகியோர்  முன்னிலையிலும், செப்டம்பர் 11இல் தென் சென்னை தியாகராயர் நகர் பகுதியில் தமிழர் தலைவர் பங்கேற்கும் விழிப்புணர்வு பிரச்சார பய ணம் நிறைவு பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து சென்னை மண்டல கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், மண்டலச் செயலாளர் தே.செ.கோபால் ஆகியோர் கருத்துரை வழங்கினர். சென்னை மண்டல மாவட்டங்களின் கழகப் பொறுப் பாளர்கள், கழகத் தோழர்கள்,மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள், மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும் சிறப்பாக நடத்துவது குறித்து கருத்துகளை கூறினர்.

தீர்மானம் இரங்கல் தீர்மானம்


17.7.2018 இல் போரூரில் இறந்த சட்ட எரிப்பு வீரர் மயிலை சி.சாமிநாதன் அவர் களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது.

இக்கூட்டத்தில் ச.இன்பக்கனி, பா.மணி யம்மை, மு.இரா.மாணிக்கம், க.இளவரசன், கு.செல்வி, மு.ந.மதியழகன், டி.ஆர். சேதுராமன், சி.செங்குட்டுவன், கோ.வீ.ராக வன், சா.தாமோதரன், இராமலிங்கம், சு.மோகன்ராஜ், செ.தமிழ்சாக்ரடீசு, பெரு.இளங்கோ, மு.சந்திரா, சோ.சுரேஷ், சு.அன் புச்செல்வன், மு.ராணி, க.தமிழ்ச்செல்வன், ந.இராமச்சந்திரன், ஈ.குமார், கு.செல்வேந் திரன், மு.சண்முகப்பிரியன், கோ.மஞ்ச நாதன், மு.திருமலை, க.ச.க.இரணியன், பர சுராமன், க.ச.பெரியார்மாணாக்கன், மா. இளையராணி, ச.துணைவேந்தன், ப.சக் கரவர்த்தி, வே.அருள், அறிவுமாணன், ந. கஜேந்திரன், எ.அன்பு, ந.ஜனாதிபதி, மா. இளையராணி, மு.ரா.பவதாரணி, மயிலை பாலு அறிவுமதி, ஈக்காட்டுத்தாங்கல் மு. சேகர், கும்மிடிப்பூண்டி உதயகுமார் மற்றும் பல தோழர்கள் கலந்துகொண்டனர்.

கூட்ட முடிவில் தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் ச.மகேந்திரன் நன்றி கூறினார்.

பிரச்சாரக் கூட்டத்திற்கு நிதி வழங்கியோர்

வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ரூ. 10,000, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் ரூ. 5,000,- கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் த.ஆனந்தன் ரூ. 2,000,-  தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன் ரூ. 2500,- தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி ரூ. 1000, சென்னை மண்டலச் செயலாளர் தி.செ.கோபால் ரூ. 2,000, பொன் னேரி செல்வி ரூ.2000,- ஆகியோர் நன்கொடையினை கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் ஆகியோரிடம் வழங்கினர்.

சென்னை மண்டல கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றோர்


சென்னை மண்டல கலந்துரையாடல் கூட்டத்தில், விழிப்புணர்வு நிறைவு பிரச்சாரக் கூட்டத்திற்கு நிதி வழங்கியோர்



தமிழர் தலைவர் பங்கேற்கும் விழிப்புணர்வு பிரச்சார நிறைவு விழா பொதுக் கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளதையொட்டி தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன் ரூ.5000 நன்கொடையாக கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 28.7.2018)

- விடுதலை நாளேடு 30.7 18

ஞாயிறு, 29 ஜூலை, 2018

சின்மயா நகரில் நடைபெற்ற சென்னை மண்டல கலந்துரையாடல் கூட்டம்

 



























28.7.18 மாலை 6 மணி அளவில்  தென் சென்னை மாவட்ட சின்மயா நகர் பகுதியில் தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் சி.செங்குட்டுவன் அவர்கள் இல்லத்தில் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்கள் தலைமையிலும்,  தென்சென்னை மாவட்டத்  தலைவர் இரா.வில்வநாதன் , செயலாளர் செ.ர.பார்த்த சாரதி,  வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன்,  தாம்பரம் கழக மாவட்டத் தலைவர் ப.முத் தையன் , செயலாளர் கோ.நாத்திகன், ஆவடி கழக மாவட்டத்  தலைவர் பா.தென்னரசு, கும்மிடிப்பூண்டி கழக மாவட்டத்  தலைவர் சி.ஆனந்தன், செயலாளர்இரா.இரமேஷ் ஆகியோர்  முன்னிலையிலும், செப்டம்பர் 11ல் தென் சென்னை தியாகராயர் நகர் பகுதியில் தமிழர் தலைவர் பங்கேற்கும் விழிப்புணர்வு பிரச்சார பயணம் நிறைவு பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து   சென்னை மண்டல கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், மண்டலச் செயலாளர் தே.செ.கோபால் ஆகியோர் கருத்துரை வழங்கினர். சென்னை மண்டல மாவட்டங்களின் கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள், மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்கள், மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும் சிறப்பாக நடத்துவது குறித்து கருத்துகளை கூறினர்.
தீர்மானம்
1.இரங்கல் தீர்மானம்
17.7.18ல் போரூரில் இறந்த சட்ட எரிப்பு வீரர் மயிலை சி.சாமிநாதன் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
        ச.இன்பக்கனி, பா.மணியம்மை, மு.இரா.மாணிக்கம், க.இளவரசன்,  கு.செல்வி, மு.ந.மதியழகன், டி.ஆர்.சேதுராமன், சி.செங்குட்டுவன், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், இராமலிங்கம், சு.மோகன்ராஜ், செ.தமிழ்சாக்ரடீசு, பெரு.இளங்கோ, மு.சந்திரா, சோ.சுரேஷ், சு.அன்புச்செல்வன், மு.ராணி, க.தமிழ்ச்செல்வன், ந.இராமச்சந்திரன், ஈ.குமார், கு.செல்வேந்திரன், மு.சண்முகப்பிரியன்,கோ.மஞ்சநாதன், மு.திருமலை, மு.சேகர், க.ச.க.இரணியன், பரசுராமன், க.ச.பெரியார்மாணாக்கன், மா.இளையராணி, ச.துணைவேந்தன், உதயகுமார், ப.சக்கரவர்த்தி, வே.அருள், அறிவுமாணன், ந.கஜேந்திரன், எ.அன்பு, ந.ஜனாதிபதி, மா.இளையராணி, மு.ரா.பவதாரணி, மயிலை பாலு, அறிவுமதி மற்றும் பல தோழர்கள் கலந்துகொண்டனர்.
கூட்ட முடிவில் தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் ச.மகேந்திரன் நன்றி கூறினார்.