சனி, 18 ஜூலை, 2020

தந்தை பெரியார் சிலையை அவமதித்த கூட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரியார் ஈவெரா நெடுஞ்சாலையில் அரும்பாக்கம் பகுதியில் அமைந்தகரை தோழர்கள் தளபதி பாண்டியன் ,அண்ணாநகர் ஆகாஷ், அரும்பாக்கம் என் பிரகாசம், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன் ஆகியோர் தந்தை பெரியார் சிலையை அவமதித்த கூட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். (17.7.20)

கோவையில் தந்தை பெரியார் சிலை அவமதித்த காவி காலிகலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுருத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாடம் நடைபெற்றது இடம் மயிலை லூப் சாலை.(17.7.20)

அடிப்படை உரிமை கோரி அறப் போராட்டம்


தென் சென்னை நுங்கம்பாக்கத்தில் அறப்போராட்டம்

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் செ.ர.பார்த்தசாரதி இல்லத்தின் எதிரே 15.7.20 முற்பகல் 10 மணி அளவில் நீட் தேர்வை நிறுத்தக் கோரியும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு கோரியும், சட்டப்படியான இட ஒதுக்கீட்டை வழங்கக்கோரியும் மருத்துவத்தை அடிப்படை உரிமையாக்கக் கோரியும் அறப் போராட்டம் நடைபெற்றது. 

செ.ர. பார்த்தசாரதி, கோ.குமாரி, கு.பா.கவிமலர், கு.பா.அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தென் சென்னை மயிலாப்பூரில் அறப்போராட்டம்
திராவிடர் கழக மாநில மாணவரணி துணைச் செயலாளர் வி. தங்கமணி தலைமையில் விவேகானந்தா கல்லூரி மற்றும் குருநானக் கல்லூரி மாணவர்கள் மயிலாப்பூர் கடற்கரையை ஒட்டிய லூப் சாலையில் இன்று முற்பகல் 10.30 மணி அளவில்நீட் தேர்வை நிறுத்தக் கோரியும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு கோரியும், சட்டப்படியான இட ஒதுக்கீட்டை வழங்கக்கோரியும் மருத்துவத்தை அடிப்படை உரிமையாக்கக் கோரியும் அறப் போராட்டம் நடத்தினர்.

அரும்பாக்கம் பெரியார் ஈவெரா நெடுஞ்சாலையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் வடசென்னை மாவட்ட இளைஞரணி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கழகத் தோழர்கள் வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன் தென்சென்னை மாவட்ட துணை செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன் எம் பிரகாசம் க.திருசெல்வம் அண்ணாநகர் ஆகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்
மயிலாப்பூர் லஸ் முனை பேருந்து நிறுத்தம் அருகில் 15.7.20 முற்பகல் 11 மணி அளவில்நீட் தேர்வை நிறுத்தக் கோரியும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு கோரியும், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை முழுமையாக வழங்கக்கோரியும் மருத்துவம் நல வாழ்வு வழங்குதலை அடிப்படை உரிமையாக்கக் கோரியும் அறப் போராட்டம் நடைபெற்றது.
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், இளைஞரணி செயலாளர் நா. மணித் துரை, ஈ.குமார், மு.சண்முகப்பிரியன் ஆகியோர் பங்கேற்றனர்.

வெள்ளி, 3 ஜூலை, 2020

தென்சென்னை மாவட்டத்தின் "விடுதலை விளைச்சல்" நிகழ்ச்சி


தென்சென்னை மாவட்டத்தின் "விடுதலை விளைச்சல்" நிகழ்ச்சி

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக விடுதலையின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் சிறப்பு "விடுதலை விளைச்சல்" காணொலி விழா. 16.06.2020 (செவ்வாய்க்கிழமை) மாலை 7.00 மணி அளவில் ஜூம் செயலி மூலமாக மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்புரை ஆற்றினார். சென்னைைை மண்டல தலைவர் தி.இரா.இரத்தினசாமி, சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் தொடக்க உரையாற்றினார்.

துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி வாழ்த்துரை வழங்கியதற்கு பின் மாநில கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
சிறப்புரையில் கழகம் கடந்து வந்த பாதை தந்தை பெரியார் ஆற்றிய முக்கிய பணிகள் விடுதலை ஏட்டின் மூலமாக நடைபெற்ற சாதனைகள் தந்தை பெரியாரின் வழியில் தமிழர் தலைவர் அவர்கள் வழிநடத்திச் செல்லும் பாங்கு மற்றும் ஈழப் பிரச்சினையில் கழகம் எடுத்த சரியான அணுகுமுறைகள் போன்றவற்றை விளக்கிக் கூறி தெளிவுபடுத்தினார். விடுதலை நாளேடு பரப்பும் வழிமுறைகளை எடுத்துக் கூறினார்.

மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.

மாவட்ட அமைப்பாளர் மு.ந. மதியழகன், துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன், தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.மு. மாணிக்கம், ஆ.வீரமர்த்திணி, ச. துணைவேந்தன், வடசென்னை ப.சேரலாதன், மயிலை ஈ.குமார், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், தர்மபுரி ஊமை. ஜெயராமன், தகடூர் தமிழ்ச்செல்வி, இளைஞரணி செயலாளர் ந.மணித்துரை, மு.சண்முகப்பிரியன், குன்றத்தூர் மு.திருமலை, தாம்பரம் மோகன்ராஜ், நாத்திகன், சீனிவாசன், சோழிங்கநல்லூர் பாண்டு, சோழவரம் சக்கரவர்த்தி, ம. வீ. அருள்மொழி, பெரம்பூர் வெங்கடேசன் பூ.சோமசுந்தரம் மாணவரணி வி.தங்கமணி மற்றும் பலர் கலந்து கொண்டு கருத்துக்களையும் கூறினர்.
நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட துணை செயலாளர் சா.தாமோதரன் காணொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.

- விடுதலை நாளேடு, 1.7.20 

தென் சென்னை நொச்சி குப்பம் பகுதியில் தொடர் துயர் துடைப்பு பணி


தென் சென்னை நொச்சி குப்பம் பகுதியில் தொடர் துயர் துடைப்பு பணி

28.6.20 முற்பகல் 10.00 மணி அளவில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மயிலை நொச்சி குப்பம் பகுதியில் கரோனா நோயின் தாக்கத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டிருந்தவர்களுக்கு ஏழாவது முறையாக மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் அவர்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப் பொருள்களை வழங்கினார்.

- விடுதலை நாளேடு, 29. 6. 20பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை பெரியசாமி படத்திறப்புபெரியார் பெருந்தொண்டர் தஞ்சை பெரியசாமி படத்திறப்பு
பெரம்பூர் இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தஞ்சாவூர் ஒன்றியம் புது மாத்தூர் பெரியார் பெருந்தொண்டர் வி.பெரியசாமி(88) அவர்கள் 1.6.20 அன்று சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் மறைந்தார்.
அவரது படத்திறப்பு நிகழ்ச்சி 17.6.20 அன்று 12:00 மணி அளவில் சென்னை அண்ணாநகர் இல்லத்தில் நடைபெற்றது.
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்கள் வி.பெரியசாமி அவர்களின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
பெ. திராவிட செல்வன்(மகன்) அவர்கள் அறிமுக உரையாற்றினார். தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, எ.அய்.ஆர்.எப். ரயில்வே சங்க பொறுப்பாளர்கள் தாடி மனோகரன், மோகன்தாஸ் ஆகியோர் அவருடைய தொண்டினை நினைவுகூர்ந்து உரையாற்றினர்.
பெ.அன்பழகன்(இளைய மகன்) நன்றி கூறினார்.
திராவிடர் கழக தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன், வட சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், ரயில்வே தொழிலாளர்களும் குடும்ப உறவினர்களும் கலந்து கொண்டனர்.

தனிமனித இடைவெளியுடன் கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது.
- விடுதலை நாளேடு, 28.6.20

வியாழன், 2 ஜூலை, 2020

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மனிதநேய உதவிகள்


18.6.20 முற்பகல் 11.00 மணி அளவில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மயிலை நொச்சி குப்பம் பகுதியில் கரோனா நோயின் தாக்கத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டிருந்தவர்களுக்கு ஆறாவது முறையாக மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் அவர்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப் பொருள்களை வழங்கினார்.
- விடுதலை நாளேடு, 20.6.20