ஞாயிறு, 12 மே, 2024

சூளைமேட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா விளக்க பரப்புரை கூட்டம்



விடுதலை நாளேடு
Published May 12, 2024

சூளைமேடு, மே 12- தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 4.05.2024 மாலை 6.30 மணி அளவில் சூளைமேடு சவு ராட்டிரா நகர் முதல் தெருவில் சூளைமேடு பகுதி தலைவர் நல். இராமச்சந்திரன் தலைமையி லும் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டத் துணைச் செயலாளர், சா.தாமோ தரன் மற்றும் தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.இரா.மாணிக்கம் ஆகியோர் முன்னிலையிலும் சுயமரியாதை இயக்க நூற் றாண்டு தொடக்க விழா விளக்க பரப்புரை தெருமுனைக் கூட் டம் நடைபெற்றது.

மாவட்ட துணைச் செயலா ளர் கோ.வீ.ராகவன் வரவேற்பு ரையாற்ற, மாவட்டச் செயலா ளர் செ.ர.பார்த்தசாரதி தொடக்க உரையாற்றினார்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு. சண்முகப்ரியன் மற்றும் மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் ஆகியோர் விளக்கவு ரையாற்றினர்.
மாநில கிராமப்புற பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் அவர்கள் சுயமரியாதை இயக்கம் எப்படி தொடங்கியது, எதற்காக தொடங்கியது. சுயமரியாதை இயக்கத்தை தொடங்க வேண் டும் என்ற உணர்ச்சி தந்தை பெரியாருக்கு எப்படி எப்பொ ழுது தோன்றியது. சுயமரியாதை இயக்கம் தோன்றியிராவிட் டால் நம்முடைய நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தி ருக்கும் என்பதை வடநாட்டு ஆதாரங்களை சுட்டிக்காட்டி யும், தந்தை பெரியார் சுயமரி யாதை இயக்கத்தை தோற்றுவிப் பதற்கு முன்பாக இருந்த நிலை மையை எடுத்துக்காட்டியும், தந்தை பெரியாரின் வாழ்க்கை யில் ஏற்பட்ட அனுபவங்களை எடுத்துக்காட்டி சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவிக்க அவைகளே உந்து சக்தியாக அமைந்தது என்பதையும் விளக்கி கூறினார்.

தந்தை பெரியார் தொடங்கிய ‘குடிஅரசு’ இதழ் மூலமாகவே முதலாவதாக சுயமரியாதை பிரச்சாரம் தொடங்கப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக சுயமரி யாதை இயக்கம் தோற்றுவிக்கப் பட்டது. அந்த இயக்கம் பிறகு திராவிடர் கழகமாக இன்று வரை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க கோட் பாடுகளை அடிப்படையாக வைத்து இன்று பல கட்சிகள் தோன்றி செயல்பட்டு வருகின்றன.

மனித உரிமைகள் போற்றப் படவில்லை, மனிதன் மனிதனாக மதிக்கப்படவில்லை, மனிதனுக் கான அடிப்படை உரிமைகள் வழங்கப்படவில்லை, எல்லாம் எல்லாருக்கும் என்ற நிலை இல்லை, பார்ப்பனர்களுக்கு அடிமையாக பார்ப்பன தத்து வங்களுக்கு அடிமையாக மட்டுமல்ல பார்ப்பனர்களையே கடவுளாக வணங்கும் நிலையில் இருந்தார்கள் .
இந்திய ஒன்றியமாக வெள் ளைக்காரர்களால் ஒன்றிணைக் கப்பட்ட இந்த இந்திய நாட்டில் இருக்கின்ற இது போன்ற பிரச்சினைகளை முன்வைத்து நமது தமிழ்நாட்டை மய்யமாகக் கொண்டு சுயமரியாதை இயக்கத்தை தந்தை பெரியார் தொடங்கினார்.

பல பெயர்களில் உலகில் பல கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் இங்கே தந்தை பெரியார் ஒருவர்தான் சுயமரியாதை இயக்கம் என்ற பெயரில் சமூகப் புரட்சி இயக்கத்தை தொடங்கினார். சுயமரியாதை தான் மனிதனுக்கு முக்கியம் என்று உலகத்திற்கு உணர்த்தி யவர் தந்தை பெரியார். ‘மனிதன் என்றால் மானம் உள்ளவன் தான்!’ என்று மனிதனுக்கு விளக்கம் அளித்தார் தந்தை பெரியார்.

அழகுக்கு விளக்கம் தந்த பெரியார் ‘மனிதனுக்கு மானமும் அறிவும் அழகு’ என்று கூறினார். இதில் மானத்தை தான் முதன் மைப்படுத்தினார். மனிதன் மனிதனாக இருக்க வேண்டும் என்றால் உலக மொழிகளில் உள்ள சொற்களை எல்லாம் எடுத்து போட்டுப் பார்த்தால் சுயமரியாதை என்ற சொல்லுக்கு இணையாக எந்த சொல்லும் இல்லை என்றார்.
ஜெயிலுக்கு போகாமல் இருக்க வழக்குரைஞர் வைத்து எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய பலர் தயாராக உள்ள நிலையில் தந்தை பெரியார், சிறைக்கு செல்ல தயங்கியதே கிடையாது. வைக்கத்தில் கை, கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில் சளைக்காமல் கல்லு டைத்தவர் தந்தை பெரியார்.

பார்ப்பனர்களால் கட்ட மைக்கப்பட்ட கடவுள் தத்துவத் தில் கட்டுண்டு ஏமாற்றப்பட்டு, அடிமைத்தன்மையுடனும், கீழ் மக்களாக தமிழர்கள் வாழ்ந்து வருவதையும் விளக்கி கூறி; கட வுளின் பெயரால் நடத்தப்படும் கொடுமைகளையும் ஜாதி முறைகளையும் தகர்க்க தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் மூலமாக பரப்புரை செய்து போராடி வென்று காட்டினார்.
1921இல் கணக்கெடுக்கப் பட்ட ஒரு வயது முதல் 12 வயது வரை உள்ள கைம்பெண்கள் பட்டியலை படித்துக் காட்டி திருமண உறவுக்கு தகுதியே இல்லாத பெண்களுக்கு (1 முதல் -12 வயதுள்ள) அம்மா என்றே கூப்பிட தெரியாத ஒரு வயது குழந்தைக்கு திருமணம் செய்து வைத்த கொடுமையை, இந்து மதம் என்ற பெயரில் பார்ப் பனர்கள் செய்து வந்தனர். இதை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் போராடி வெற்றி கண்டது.

நீதிமன்றமே குற்றம் சுமத்தப் பட்ட மனிதன் இறந்து விட் டால், அதோடு முடித்துக் கொள் கிறது. ஆனால் இந்து மதத்தில் மனிதன் இருக்கும் போது மட்டும் சுரண்டப்படுவதில்லை இறந்த பின்பும் சுரண்டப்படு கிறான்.
சுயமரியாதை இயக்கம் எல்லோரும் படிக்கும் வாய்ப்பை உண்டாக்க வேண்டும், மனி தனை மனிதனாக மதிக்க வேண்டும் சுயமரியாதை உடன் வாழ வேண்டும் என்பதற்காக போராடி எல்லோருக்கும் கல்வி வாய்ப்பு வேலை வாய்ப்பு போன்றவற்றை பெற்று தந்தது.
‘நேக்கு தான் படிப்பு வரும்; நோக்கு வராது!’ என்று பார்ப் பனர்கள் சொன்னார்கள். சுய மரியாதை இயக்கத்தின் பயனால் இந்தியாவின் முதல் நிதி அமைச் சராக சர் ஆர். கே. சண்முகம் செட்டியாரும், முதல் சட்ட அமைச்சராக டாக்டர் அம் பேத்கரும் பொறுப்பேற்றனர். அம்பேத்கர் இந்திய அரசமைப் புச் சட்டத்தையே எழுதி கொடுத்தார்.
நீதி கட்சி படிக்கும் வாய்ப்பு தந்தது, காமராஜர் வந்தார், கல்வி நீரோடையை திறந்து விட்டார். திராவிட முன்னேற்ற கழகம் வந்தது கல்லூரி வரை படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்தது. தமிழ்நாடு உயர் கல்வியில் 52% , ஆல் இந்தியா டாப் – டாப் 10! பெண்களும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட் டோரும் அதிக மதிப்பெண் வாங்கி முன்னணியில் வந்து கொண்டுள்ளனர். நேக்கு தான் வரும் நோக்கு வராதுன்னு சொன்னிங்களே! நேக்கு வருது; நோக்கு ஏன் வரலை?
அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியாரின் தொண்டை பற்றி கூறும் போது, ‘தூற்றியவர் களின் கண் முன்னே வெற்றியைக் கண்டவர்’என்றார்.

இன்று இந்தியா முழுக்க தந்தை பெரியார் தேவைப்படு கிறார். அன்று தந்தை பெரியா ரின் கொள்கைகளை ஏற்க மறுத்த காங்கிரஸ் கட்சி, இன்று தந்தை பெரியாரின் கொள்கை யின் தாக்கத்தினால் மாறுதல் அடைந்து இந்தியா முழுக்க இக்கொள்கைகளை எடுத்துச் செல்ல முனைப்பு காட்டுகிறது.
என்று கூறி தனது சிறப்பு ரையை முடித்தார்.

பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் ஆ.வெங்க டேசன், தென்சென்னை மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.மாரியப்பன், இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, குன்றத்தூர் மு. திருமலை, மா.சண்முகலட்சுமி , எம்.ஜி.ஆர்.நகர் கரு.அண்ணாமலை, ஆவடி மாவட்ட துணை செயலாளர் க.தமிழ்ச்செல்வன், தாம்பரம் நகர தலைவர் சு.மோகன்ராஜ், ஆவடி மாவட்ட க.பாலமுரளி, படப்பை சந்திரசேகரன், எஸ். ஜெயகோபி, ஆர். நீலகண்டன் (திமுக), டி. ராஜா, மா. சண்முக லட்சுமி, ம. மூவேந்தன், ரா. சேகர், பி. வெங்கட்ராமன், ரா. தமிழ்ச்செல்வி, அய்ஸ் அவுஸ் உதயசூரியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். எம்.டி.சி. பா. இரா ஜேந்திரன் நன்றி உரையாற்றினார்.

------------++++++++++-----------++++++++-------



புதன், 8 மே, 2024

மந்தைவெளியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா விளக்க பரப்புரைக் கூட்டம் தந்தை பெரியாரின் கொள்கை வழித் திட்டமே இந்தியாவிற்கு தேவையானது!



Published May 8, 2024

கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி விளக்கவுரை

சென்னை, மே 8 தந்தை பெரியாரின் கொள்கை வழித் திட்டமே இந்தியாவிற்கு தேவையானது என்று அனைவரும் உணர்ந்துள்ளனர் என் றார் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள்.
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கடந்த 2.05.2024 அன்று மாலை 7.30 மணி அளவில், தென் சென்னை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து தலைமையிலும், தென் சென்னை மாவட்ட துணை தலைவர் டி.ஆர். சேதுராமன் மற்றும் மாவட்டத் துணைச் செய லாளர் சா.தாமோதரன் ஆகியோர் முன்னிலை யிலும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்க விழா விளக்க பரப்புரை தெரு முனைக் கூட்டம் மந்தைவெளியில் நடை பெற்றது.
மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்புரையாற்ற, தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் தொடக்க உரை யாற்றினார்.
முன்னதாக ந.நாத்திகனின் ‘மந்திரமா? தந் திரமா?’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.சண்முகப்ரியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.கே.சிவா ஆகியோர் விளக்க வுரையாற்றினர்.

சுயமரியாதை என்றால் என்ன?
சிறப்புரையாற்றிய திராவிடர் கழக மாநில பரப்புரை செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி, சுயமரியாதை என்றால் என்ன? என்ற கேள்வியை கேட்டுவிட்டு, சுயமரியாதை என் றால் என்ன என்பதை கதைகள் மூலம் விளக்கி கூறினார்.
பார்ப்பனர்கள், நமக்கு கல்வி வராது என்று கூறி, நம்மையே நம்ப வைத்து, நம்மை பள்ளிக்கூடம்‌ சென்று படிக்க முடியாமல் செய்து விட்டனர். குழந்தைத் திருமணத்தை பார்ப்பனர்கள் நடத்தி வைத்து பெண்களை விதவைகளாக ஆக்கி வைத்த கொடுமை நடந்து வந்தது; ஒரு வயது குழந்தைகள் கூட விதவைகள் ஆக்கப்பட்டனர். இந்தக் கொடு மையை எதிர்த்துப் போராடிய சாரதா என்ப வரின் பெயரில் ‘சாரதா சட்டம்’ என்று குழந்தைகள் (பால்ய விவாகம்) திருமணத்தைத் தடை செய்யும் சட்டம் வெள்ளையர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

வெள்ளையரின் ஆட்சி நடைபெற்ற போது இந்தியர்களுக்கும் வேலை கொடுக்க வேண் டும் என கோரிக்கை வைத்தனர் காங்கிரஸ் காரர்கள். அதை ஏற்றுக்கொண்டது அன்றைய வெள்ளையர் அரசு. ஆனால், பார்ப்பனர்களே வேலை வாய்ப்பைப் பெற்று வந்தனர். இதை எதிர்த்து தான் தன்னை பெரியார் காங்கிரஸ் மாநாடுகளில் இட ஒதுக்கீடு கோரிக்கைகளை முன்வைத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்ததால் காங்கிரசை விட்டு தந்தை பெரியார் வெளியேறி சுயமரி யாதை இயக்கத்தை தோற்றுவித்தார்.
அதனால்தான் நமக்கு கல்வியும், வேலை வாய்ப்பும் கிடைத்தது. இன்றைய நிலையில் காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, இட ஒதுக்கீட்டை தேர்தல் அறிக்கையிலேயே வெளியிட்டு பரப்பி வருகிறது.

1957 ஆம் ஆண்டு ஜாதியை ஒழிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார் தந்தை பெரியார். இதன் விளைவாக இன்று தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தனது பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதி பட்டத்தை தூக்கி எறிந்து விட்டனர். ஜாதிப் பெயரை சொல்வதையே அவமானமாக கருதுகின்றனர்.
தந்தை பெரியாரின் கொள்கை வழி திட்டமே இந்தியாவிற்கு தேவையானது என்று அனைவரும் உணர்ந்துள்ளனர் என்றும், சுய மரியாதை திருமண முறைப்படி நடத்தப்பட்ட திருமணங்களைப் பற்றியும் விளக்கி கூறினார். பொட்டுக்கட்டி பெண்களை விபச்சாரிகளாக கடவுளின் பெயரால் ஆக்கி வைத்ததை எதிர்த்து சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள் போராடினார். டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் முயற்சியால் ‘தேவதாசி முறை ஒழிப்பு’ சட்டம் கொண்டுவரப்பட்டது. இத னால் பெண்கள் சுயமரியாதை உணர்வுடன் தலை நிமிர்ந்து வாழும் நிலை ஏற்பட்டது. சுயமரியாத இயக்கம், படி, படி என்று கூறி வந் ததால் அனைத்து துறைகளிலும் சாதனை களைப் படைத்து வருகிறார்கள் தமிழர்கள். ‘தனக்கு வழிகாட்டியாக தந்தை பெரியார் அமைந்ததால் தான் விண்வெளித் துறையில் என்னால் சாதிக்க முடிந்தது’ என அறிவிய லாளர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதை சுட்டிக்காட்டினார்.

சுயமரியாதை இயக்கத்தின் வேர்களை மறக்கக்கூடாது என்பதற்காகத்தான் இது போன்ற சுயமரியாதை நூற்றாண்டு விழாக்கள் நாடு முழுக்க நடைபெற்று வருகிறது என கூறி சிறப்புரையை முடித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களை 2024 ஆம் ஆண்டுக்கான ‘பெரியார் ஒளி’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதை பாராட்டும் முகமாக மாவட்ட கழகத்தின் சார்பாகவும் இளைஞர் அணியின் சார்பாகவும் மகளிர் அணியின் சார்பாகவும் பகுதி கழகத் தின் சார்பாகவும் மற்றும் விடுதலை சிறுத் தைகள், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய வற்றின் சார்பாகவும் வழக்குரைஞர் அ.அருள் மொழிக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தென் சென்னை மாவட்ட தொழிலாளரணி தலைவர் ச.மாரியப்பன், தென் சென்னை மாவட்ட மகளிரணி தலைவர் வி.வளர்மதி, செயலாளர் பி.அஜந்தா, மகளிர் பாசறை தலை வர் மு.பவானி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் மு.பசும்பொன், இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, மயிலை ஈ.குமார், மா.சண்முகலட்சுமி, ஜெ.சொப்பனசுந்தரி, வி.வித்யா, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் வி. தங்கமணி, வி.யாழ்ஒளி, எம்.ஜி.ஆர்.நகர் கரு.அண்ணாமலை, ஆவடி மாவட்ட துணை செயலாளர் க.தமிழ்ச் செல்வன், சீ.மணி, டி. ராஜா, செல்வம், ஆர். கிருஷ்ணன், வி. அகிலாண்டேஸ்வரி, எஸ். ரம்யா, ரவி, அ. ஷேக் அப்துல்லா, ராஜேஷ், மு. லோகநாதன், அ. பன்னீர்செல்வம், எஸ். மணி, இரா.அருள், அய்ஸ் அவுஸ் உதய சூரியன், மா.இன்பக்கதிர் மற்றும் பலர் கலந்து கொண்டு செவிமடுத்தனர்.
மந்தைவெளி பன்னீர் நன்றியுரை ஆற்றினார்.