வியாழன், 30 டிசம்பர், 2021

சென்னை மாநிலக் கல்லூரியில் வீசிய பெரியார் சிந்தனை என்னும் பூங்காற்று!

திங்கள், 27 டிசம்பர், 2021

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நினைவு நாள் (டிச.24) தென்சென்னையில் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

         

தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு 24.12.21 காலை எட்டு முப்பது மணி அளவில் தியாகராயநகர் தந்தை பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

                 



24.12.21 முற்பகல் பதினோரு மணி அளவில் தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் அண்ணா மேம்பாலம் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.


24.12.21முற்பகல் 11 .15 மணி அளவில் தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு மயிலாப்பூர் வீர பெருமாள் கோயில் தெரு முனையில் தோழர் யுவராஜ் அவர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கம் செய்யப்பட்டது.

தந்தை பெரியாரின்  நாற்பத்தி எட்டாவது நினைவு நாளை முன்னிட்டு 24.12.21முற்பகல் 11. 45 மணி அளவில் மயிலை லஸ் முனை( கார்னர்) அருகில் தென்சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இன்று(24.12.21) நண்பகல் 12.00 மணி அளவில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு மந்தைவெளி வன்னியம்பதி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
__________________________________________________________________________________
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நினைவு நாள் (டிச.24) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை

.........                                                  .......
சமூகநீதிக் காவலர் தலைவர் தந்தை பெரியார் நினைவு நாள் (டிச.24) தமிழ்நாடெங்கும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதன், 22 டிசம்பர், 2021

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உதவியாளராக பணியாற்றிய சண்முகநாதன் அவர்கள் மறைந்தார்

செவ்வாய், 14 டிசம்பர், 2021

சென்னை எம்.ஜி.ஆர். நகர் தோழர் கரு.அண்ணாமலை மகன் அ.அன்பரசன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்ததின் மகிழ்வாக நன்கொடை

விடுதலை சந்தா

சென்னை எம்.ஜி.ஆர். நகர் தோழர் கரு.அண்ணாமலை   மகன் அ.அன்பரசன்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்ததின் மகிழ்வாக தமிழர் தலைவரை சந்தித்து விடுதலை ஓர் ஆண்டு சந்தா வழங்கினார். உடன் தோழர்கள் கரு.அண்ணாமலை, அ.அன்பரசன், பெரியார் மணிமொழியன், மதன்குமார் மற்றும் வில்வநாதன். (பெரியார் திடல்-13.12.2021)

சனி, 11 டிசம்பர், 2021

ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் க.தமிழ்ச்செல்வன் இல்ல விழா

 

ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் .தமிழ்ச்செல்வன் - .லலிதா இணையரின் இரண்டாவது மகன் .விக்னேஷ் - .ஜெயந்தி ஆகியோர் இணையேற்பு விழா, 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை மாலையில்வானகரம் ராமசாமி தெருவில் உள்ளசிறீ கிருஷ்ணா திருமண மாளிகையில்திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்றதுநிகழ்வில் மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனிபேராசிரியர் சுப.வீரபாண்டியன்சட்டமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணசாமிகாரப்பாக்கம் கணபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்மணமக்கள் சார்பில் விடுதலை ஓராண்டு சந்தா வழங்கப்பட்டது.




தென்சென்னை கழக இளைஞரணி சார்பாக நடைபெற்ற தமிழர் தலைவர் பிறந்த நாள் - சிறப்புக் கருத்தரங்கம்

பி.பாலகிருஷ்ணன் அவர்களின் முதலாம் ஆண்டு (2.12.2021) நினைவாக நன்கொடை

நன்கொடை

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகிய வர்களின் பற்றாளரும், இராணு வத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வருமான சூளைமேடு சவுராஷ்ட்ரா நகர்   பி.பாலகிருஷ்ணன் (வயது 96) அவர்களின் முதலாம் ஆண்டு (2.12.2021) நினைவாக அவரின் மகன்கள் பா.துரைராஜ், ஆடிட்டர் பா.இராஜேந்திரன் (ஓய்வு) ரூ.500, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கியுள்ளனர். மற்றும் நினைவு கூரும் குடும்பத்தினர் மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்திகள்.

.பாலகிருஷ்ணன் (வயது 97) அவர்கள் மறைவு

  


திராவிடர் கழக நிகழ்ச்சிகளிலும் போராட்டங் களிலும் பங்கேற்றுவரும் சூளைமேடு பிடிசி ராஜேந் திரன் அவர்களின் தந்தையும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் அவர்களின் பற்றாளரும், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான சூளைமேடு சவுராஷ்ட்ரா நகர் 9ஆவது தெருவை சேர்ந்த கோ.பாலகிருஷ்ணன் (வயது 97) அவர்கள் 2.12.2020 அன்று மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். 3.12.2020 அன்று மாலை 3 மணி அளவில் அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்புக்கு: 9710242747.

வள்ளியம்மாள் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நன்கொடை

நன்கொடை

*சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகர் 9ஆவது தெருவைச் சேர்ந்த பா.வள்ளியம்மாள் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (27.6.2021) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது மகன்கள் பா.துரைராஜ், பா.ராஜேந்திரன் மற்றும் மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் சார்பாக ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!


வியாழன், 9 டிசம்பர், 2021

கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி நன்கொடை

 சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகரைச் சேர்ந்த கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையை அவரது நினைவாக கணவர் பா.இராசேந்திரன், மகள்கள்: ஆர்.பிரியதர்சினி - ஆனந்த்குமார், ஆர்.திவ்யா - கோகுல்ராஜ், மகன்: ஆர்.வெற்றிச்செல்வன் - வெ.அகிலா, பேத்தி: கோ.லக்சிதா ஆகியோர் வழங்கினர்.

அனகை ஆறுமுகம் இல்ல மண விழா


தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தின் துணை செயலாளர் அனகை ஆறுமுகம்  இல்ல திருமணம்  திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேரா சிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையில் 6-12-2021 திங்கள்கிழமை காலை  நடைபெற்றது.நிகழ்வில் அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், சோளிங்கர் மாவட்ட தலைவர் ஆர்.டி. வீரபத்ரன், தாம்பரம் நகர் செயலாளர் சு.மோகன்ராஜ், மற்றும் ஆவடி மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன் மற்றும் கழக தோழர்கள் பங்கேற்றனர்.



திங்கள், 6 டிசம்பர், 2021

பெரியார் உலகத்திற்கு தங்கம் நன்கொடை

சைதாப்பேட்டை எம்.பி.பாலு - வள்ளியம்மா இணையர் சார்பாக ரூ. 25 ஆயிரம் வழங்கினர்.

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்- வளர்மதி, பிரபாகரன்-அஜந்தா, மு.பாரதி குடும்பத்தினர் சார்பில் ஒரு பவுன் தங்கத்தினை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினர் (சென்னை, பெரியார் திடல், 30.11.2013).

தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி - கோ.குமாரி ஆகியோர்  தமது குடும்பத்தின் சார்பில் ரூ.25 ஆயிரத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (சென்னை, 1.12.2013).

தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் சைதை மு.ந.மதியழகன் - தமிழ்மதி ஆகியோர் ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினர்.

தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் வடுவூர் சி.செங்குட்டுவன் - உமா மகேஸ்வரி குடும்பத்தின் சார்பில் ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 29.11.2013).

(தென் சென்னை)அரும்பாக்கம் தாமோதரன்-வெண்மதி குடும்பத்தினர் சார்பில் ரூ. 25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 29.11.2013).

தென் சென்னை கோ.நடராசன் குடும்பத்தினர் சார்பில் ரூ. 25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 29.11.2013).

(தென் சென்னை)வழக்கறிஞர் வீரமர்த்தினி - சைதை தென்றல், வழக்கறிஞர் அருள்மொழி  குடும்பத்தின் சார்பாக ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினார் (சென்னை, பெரியார் திடல், 30.11.2013).

(தென் சென்னை)திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பார்வதி, கணேசன் குடும்பத்தின் சார்பில், ரூ.25 ஆயிரத்தை திராவிடர் கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினர் (சென்னை, பெரியார் திடல், 29.11.2013).


வெள்ளி, 3 டிசம்பர், 2021

செல்வி டெய்சி மணியம்மைக்கும், அருளானந்தம் _ செல்லம்மாள் ஆகியோருடைய செல்வன் அ.சிவாநந்தம் (எ) எஸ்.பி.கண்ணனுக்கும் திருமணம்


சென்னை திரு.வி.க.நகர் சமூகக் கூடத்தில் விசுவாசவரம் _ பொன்.இரத்தினாவதி ஆகியோருடைய செல்வி டெய்சி மணியம்மைக்கும், அருளானந்தம் _ செல்லம்மாள் ஆகியோருடைய செல்வன் அ.சிவாநந்தம் (எ) எஸ்.பி.கண்ணனுக்கும் 20.7.1997 அன்று தலைமையேற்று வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை நடத்தி வைத்தேன். மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இருவரையும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்தேன். இவ்விழாவில், கழகப் பொறுப்பாளர்கள், தி.மு.க. கட்சியின் முக்கிய பிரமுகர்கள், திராவிடர் கழகத் தோழர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி (281)

- உண்மை இதழ், நவம்பர் 16-30.2021