கூடல் மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூடல் மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 ஜனவரி, 2019

திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்' பார்வையில்...

"பிஜேபி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்!"



"பெரியாருக்கு செருப்பு மாலை போட சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். அதனால்தான், இங்கே நாம் ஒருங்கிணைந்துள்ளோம். இது வெறும் கூடிக் கலைகிற கூட்டமல்ல. நமக்கான ஆட்சியாளர்களைக் கோட்டைக்கு அனுப்பவும் தயாரான கூட்டம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யுடன் யார் யாரெல்லாம் கூட்டணி சேர்கிறார்களோ, அவர்கள் எல்லாம் இனத் துரோகிகள்" என்று திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆவேசமாகக் கூறினார்.
திருச்சியில் கருஞ்சட்டை கர்ஜனை



பெரியார் நினைவு நாளை முன்னிட்டு டிசம்பர் 23ஆம் தேதியன்று திருச்சியில், தமிழின உரிமை மீட்புப் பேரணி மற்றும் மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், உயர் நீதிமன்றத் தில் அனுமதி பெற்று நிகழ்ச்சியை நடத் தினர். பல்லாயிரக்கணக்கில் தொண் டர்கள் குவிந்ததால், போலீஸார் பதற் றத்துடன் காணப்பட்டனர். திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், அரங்க. குணசேகரன் ஆகியோரின் ஒருங்கி ணைப்பில், ஆனைமுத்து, கொளத்தூர் மணி, கோவை ராமகிருட்டிணன், அதியமான் ஆகியோர் சகிதமாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேரணியைத் தொடங்கிவைத்தார். சிலம்பம், பறையாட்டம், மேளதாளம் எனக் களைக்கட்டியது பேரணி.
கருப்பு எங்கள் நிறம் என்ற கோவன் குழுவினர் பாடலுடன், மாநாடு ஆரம்ப மானது. ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும், சென்னை உயர் நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன. மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பேசுகையில், ``தந்தை பெரியாரின் வழியில் தேர்தலில் பங்கெடுக்காத இயக்கங்கள் திரண்டுள்ளோம். இனி, தமிழகத்தில் மதவெறி, சாதிவெறி அரசியல் தலைதூக்கினால் பெரியார் படை அதைத் தடுத்து நிறுத்தும். எட்டுவழிச் சாலை, மீத்தேன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் நமது சொத்துகளைப் பறித்து கார்ப்பரேட் கும்பலுக்குத் தாரைவார்ப்ப தற்கு ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள். இதற்கு எதிராக ஒன்றிணைவோம். இந்தக் கருஞ்சட்டைப் பேரணியின் தொடர்ச்சியாக நீலச்சட்டை, சிவப்புச் சட்டை பேரணிகளையும் நடத்த வேண்டும்" என்றார்.
எப்படி இணைந்தார்கள்?

2014-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள  பெரியாரிஸ்ட் டுகள் மீதும், பெரியார் இயக்கங்கள் மீதும் பிஜேபி, இந்து இயக்கங்கள் கடும் விமர்சனங்களை முன் வைத் தன. தமிழக அரசின் துணையுடன் பலர் கைது செய்யப்பட்டனர். எனவே, பி.ஜே.பி-க்கு எதிராக பெரியார் இயக்கங்கள் அனைத்தும் இணைந்து ஒற்றுமையை  வலியு றுத்த வேண்டும் என்ற ஆர்வம் பெரியார் அமைப்புகள் மத்தியில் எழுந்தது அதற்கான முயற்சிகள் கடந்த செப்டம்பரில் தொடங்கின. அந்த முயற்சிதான் திருச்சியில் மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது என்கிறார்கள்.

- இ. லோகேஷ்வர்


திராவிட இயக்கத் தமிழர் பேரவை யின் சுப.வீரபாண்டியன், ``பெரியார் என்பது ஒரு நூற்றாண்டின் சொல். இங்கு இவ்வளவு இயக்கங்கள் உள்ளன. இவை, பெரியார் பெயரிலான கிளைகள் தானே தவிர, பிளவுகள் அல்ல. இந்த மாநாட்டின் நோக்கம் மதவெறி எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு மட்டுமல்ல. சாதி ஆணவப் படுகொலைகளையும் இந்த மாநாடு எதிர்க்கிறது. நமது எச் சரிக்கை மதவெறியர்களுக்கு மட்டு மல்ல, சாதி வெறியர்களுக்கும் எதி ரானது. தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்ற கனவு கருகிப்போயிருக்கிறது. கரிசல் காட்டில் ஒருபோதும் கரும்பு வளராது. தமிழ் மண்ணில் தாமரை மலரவே மலராது" என்றார் ஆவேசமாக!
முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், "தமிழகத்தில்தான் சுய மரியாதைத் திருமணம் அங்கீகரிக் கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட திரும ணங்கள் மற்ற மாநிலங்களில் இல்லை. சாதி ஒழிப்பும், பெண்ணிய விடு தலையும் பெரியாரியக் கோட்பாடுகள். சாதி ஒழிப்பை மீண்டும் கையிலெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது" என்றார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோவை ராமகிருட்டிணன், "பிரான்ஸ் நாட்டில் எரிபொருளுக்கு எதிராக மஞ்சள் சட்டை வெற்றி பெற் றதைப் போல, இந்தக் கருப்புசட்டை அணியும் விளங்கும். நமது அடுத்த நிகழ்ச்சியில், பேரறிவாளனையும், நளினியையும் பங்கேற்கச் செய்வோம். நாம் சிறை நிரப்பும் போராட்டம் நடத் தினால், அவர்கள் வெளியே வரு வார்கள். அடுத்த திட்டம் இதுதான்" என்றார். திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், "பெரியாரை கொண்டாட காரணம், அவரது தொலைநோக்குப் பார்வைதான். இங்கு பல்லாயிரக்கணக் கான இளைஞர்களைப் பார்க்க முடி கிறது. இவர்களுக்கும் ஏன் பெரியார் பிடிக்கிறது என்றால், பெரியார் வீதியில் பேசியதை நீதிமன்றத்தில் மறுத்த தில்லை. தான் எழுதியதை அட்மின் எழுதினார் என்று சொல்லவில்லை. பெரியார், ஒரு ஹீரோவாகவே வாழ்ந் தார்" என்று சந்தடிசாக்கில் ஹெச்.ராஜாவைச் சீண்டினார்.
- சி.ய.ஆனந்தகுமார்,  இரா.அமுதினியன்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்
நன்றி: 'ஜூனியர் விகடன்' 30.12.2018
- விடுதலை நாளேடு, 29.12.18

ஞாயிறு, 6 ஜனவரி, 2019

திருச்சி கருஞ்சட்டைக் கடலின்முன் தமிழர் தலைவர் சங்கநாதம்

ஏகலைவன்களாகவும், சம்பூகனாகவும் இருக்கமாட்டோம்

கட்டை விரலைக் கேட்டால் தலையைக் கேட்கும் இளைஞர்கள் கிளர்ந்து எழுந்தனர்



திருச்சி, ஜன.5 ஏகலைவனின் கட்டை விரலை குருதட்ச ணையாகக் கேட்டால், துரோணாச்சாரியார்களின் தலையைக் கேட்கும் இளைஞர்கள் எழுந்துவிட்டனர் - இனி உங்கள் ஜம்பம் பலிக்காது என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திருச்சி கருஞ்சட்டை இளைஞர் கடலின்முன் சங்கநாதம் செய்தார்.
கருஞ்சட்டைப் பேரணி -மாநாடு

23.12.2018 அன்று திருச்சி கே.டி. திரையரங்கம் அருகில் தொடங்கிய கருஞ்சட்டைப் பேரணி உழவர் சந்தையில் நிறைவடைந்தது. அங்கே நடைபெற்ற தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சியுரையாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
திராவிடம், தமிழ் என்று சொன்னால், இதிலே சில பேரை பிரிப்பது - சிலரை விலைக்கு வாங்குவது என்பது இனி நடக்காது. இதில் எது நம்மைப் பிரிக்கிறதோ, அதைப்பற்றி கவலைப்படக்கூடாது என்று அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார். பெரியாருடைய சிந்தனை எங்களை ஒன்று சேர்த்திருக்கிறது. எது நம்மை இணைக்கிறதோ, அதனை அகலப்படுத்துங்கள் - எது நம்மைப் பிரிக்கிறதோ அதனை அலட்சியப்படுத்துங்கள் என்று சொன்னார். பிரிப்பது என்பது இங்கே இல்லை - இணைப்பது என்பதுதான் இங்கே இருக்கிறது.
அய்யா அழகாகச் சொன்னார்,
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு''
அவருடைய பார்வை மனிதப் பார்வை - வெறும் ரத்தப் பரிசோதனை அல்ல.
ஜாதியைக் குழிதோண்டி புதைக்கவேண்டாமா?

ஜாதி, தீண்டாமை, தொடாமை, நெருங்காமை, பார்க்காமை என்பதெல்லாம் காட்டுமிராண்டித்தனம் அல்லவா! அவை இன்னமும் இருக்கலாமா? இன்னமும் கவுரவக் கொலை என்று பெயர் வைத்துக்கொண்டு, பெற்றக் குழந்தைகளைக் கொல்லுகிறீர்களே, வளர்த்த குழந்தைகளைக் கொல்லுகிறீர்களே, அவ்வளவு தூரம் ஜாதி வெறி பெற்றோர்களைக்கூட மிருகங்களாக்கி இருக்கிறதே, அந்த ஜாதியைக் குழிதோண்டி புதைக்க வேண்டாமா?
எங்களுடைய சகோதரன் அவன் மலம் தூக்குகிறான்; மலத்தை தலையில் சுமக்கிறான், அவன் கீழ்ஜாதி. எங்கள் தோழர்கள் உழைக்கிறார்கள் உங்களுக்காக, அவன் சூத்திர ஜாதி; அவன் பஞ்சம ஜாதி என்கிறீர்கள். எங்களுடைய பெண்கள் படிப்பதற்கு உரிமை இல்லை என்ற அளவில் வைத்திருந்தீர்கள்.
பெரியார் பிறந்திருக்காவிட்டால் என்கிற கேள்வியை கேட்டுக்கொள்ளுங்கள், உங்களுக்கு நன்றாகப் புரியும்.
பெரியாருடைய தொலைநோக்கு எப்படிப்பட்டது - தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும் - அவர்தாம்
பெரியார் பார்!
அய்யா அவர்கள் இங்கே உரையாற்றும்பொழுது ஒன்றை சொன்னார், யாரோ சில இணைய இளைஞர்கள் பெரியார் என்ன கிழித்துவிட்டார்? என்று சொல்கிறார்கள் என்பதற்குப் பதில் சொன்னார்கள்.
பெரியார் கிழிக்கவில்லையப்பா, ஏற்கெனவே கிழித்த தையெல்லாம் ஒன்றாகத் தைத்துக் கொண்டிருக்கிறார். அதைத் தைப்பதற்கே அவருக்கு நேரம் போதாது. கிழித்துக் கிழித்துப் பிரித்துப் போட்டவைகளையெல்லாம் பெரியார் இணைப்பார். பெரியார் என்ற சக்தி இணைக் கக்கூடிய சக்தி.
எந்த அளவிற்குப் பெரியாருடைய பார்வை - இன்றைய அரசாங்கம் தனக்குப் பின்னாலே எப்படி உருவாகும் என்று நினைக்கக்கூடிய அந்தப் பார்வை வந்திருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு செய்தி.
இந்து' நாளிதழின் நூற்றாண்டு விழா மலர்

இதோ என் கைகளில் இருப்பது, இந்து' நாளிதழின் நூற்றாண்டு விழா மலர். இன்றைய இளைய தலைமுறையினரும், தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாதவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் - என்னுடைய கைகளில் இருக்கின்ற ஆதாரம், One hundred years of the Hindu இந்து' பத்திரிகையினுடைய நூற்றாண்டு மலர் இது. இப்பொழுது அதற்கு வயது 140. பெரியாருடைய வயதும், இந்து நாளிதழுனுடைய வயதும் ஒன்று.

அதில் உள்ள ஒரு முக்கியமான செய்தியை மட்டும் சொல்கிறேன்.
உங்களுக்கெல்லாம் தெரியும், சேரன்மாதேவி குருகுலம் - அங்கு நடந்த செய்திகள் அத்தனையும் உங்களுக்குத் தெரியும்.
40 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட புத்தகம் அது. இதை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஏ.வி.பி. ஆசைத்தம்பி நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்.
A Social reform question which figured in the columns of The Hindu in  April, 1925, was the controversy over the functioning of the Tamil Gurukula Vidyalaya at Shermadevi  in Tinnevelly District conducted by V.V.S.Aiyer, onetime revolutionary and associate of Bharati. Dr.Varadarajulu Naidu and other non-Brahmin leaders had objected to non-Brahmin boys of the institution being asked to take their meals separately. The matter went to Gandhiji who advised interdining but employment of Brahmin cooks. Dr.Varadarajulu Naidu was not satisfied with this arrangement as he did not like the condition about employing Brahmin cooks. He asked for the return of money subscribed to the funds of the Gurukula.
In a letter published in The Hindu on April 15,  V.V.S. Aiyer said, that except in the case of two Brahmin boys in the case of all other Brahmin and non-Brahmin students there was common dining, and he made it clear that no Brahmin taken into the Gurukula thereafter would be given any exemption from the general mess.
இதன் தமிழாக்கம் வருமாறு:
சமூகப் புரட்சியின் ஒரு குரலாக ஏப்ரல் மாதம் 1925 இந்து' ஆங்கில இதழில் வெளியான ஒரு செய்தி முக்கியமானதாகவும் விவாதப்பொருளாகவும் மாறியது, சேரன்மாதேவியில் உள்ள தமிழ் குருகுல வித்யாலயா என்ற பள்ளியில் ஒரு தீண்டாமை கொடுமை அரங்கேறியது தொடர்பான செய்தியாகும். அந்தப் பள்ளியை நடத்தியவர் வ.வே.சு அய்யர்.  இதன் புரவலராக சுப்பிரமணிய பாரதி, டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்றோர் உள்ளனர். அந்தப் பள்ளியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு வெளியில் உள்ள திண்ணையில் வைத்து அவர்கள் கொண்டுவந்த இலையிலேயே உணவு உண்ணவும், அவர்களுக்கு பார்ப்பனர்கள் பரிமாறாமல் அவர்களே உணவை எடுத்துக் கொள்ளவும் கூறப்பட்டனர். அதே நேரத்தில் பார்ப்பனர்களுக்குத் தனி அறையில், பார்ப்பனர்களால் சுவையான உணவு பரிமாறப்பட்டது. இது தொடர்பாக காந்தியாரிடம் புகார் கூறப்பட்டது, உடனடியாக காந்தியார் பள்ளிக்குக் கொடுத்த நிதியை திருப்பிக் கொடுக்குமாறு கூறினார். இதற்கு விளக்கமளித்த வ.வே. சுவாமிநாத அய்யர், சில காரணங்களுக்காக இரண்டு பார்ப்பனர் மாணவர்களுக்கு மட்டுமே தனியாக உணவு படைக்கப்பட்டது. அதுவும் குறிப்பிட்ட நாளில் மட்டும்தான். மற்றபடி பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோர் ஒன்றாகவே ஒரே இடத்தில் அமர்ந்து உணவு உண்டு வருகின்றனர் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
காந்தியாரிடம் அந்தப் பிரச்சினை செல்கிறது; பழைய காந்தியார் - வருணாசிரம தர்ம காந்தியார் - பின்னாளில் மாறிய காந்தியார் - எனவேதான், கோட்சேவால் அந்தக் காந்தியாரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்தப் பிரச்சினை காந்தியாரிடம் சமாதானத்திற்காக வந்தது.
அப்பொழுது காந்தியார் என்ன சொல்கிறார் என்றால்,
அங்கேயும் ஜாதியைத்தானே கொண்டு வருகிறீர்கள். நான் ஒத்துக்கொள்ள முடியாது என்றார். இந்தத் தகராறு தீரவில்லை. காந்தியாருடைய சமரசமே தோல்வி அடைந்துவிட்டது.
1924 இல் சேலத்தில் பிரம்மாண்டமான மாநாடு

நம்மைப் போன்ற பலர் பிறக்காத காலத்தில், 1924 ஆம் ஆண்டு - பெரியார் அவர்கள் காங்கிரசு தலைவராக இருந்த நேரத்தில், பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக இல்லாத போது - சேலத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்ட மாநாட்டில், அவர் பேசியது பதிவாகியிருக்கிறது இந்து பத்திரிகையில்.
Speaking at the public meeting at salem E.V.Ramasamy Naicker said, they must settle the Brahmin question even while the British Supremacy lasted, otherwise they would have to suffer under the tyranny of what he called ‘‘Brahmnocracy''.
இதன் தமிழாக்கம் வருமாறு:
இது தொடர்பாக சேலத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பேசும்போது, பார்ப் பனர்களின் ஆதிக்கம் மோசமானது, ஆங்கிலேயர்களின் அரசாங்கம் முடிவதற்குள் பார்ப்பனர்களின் அதி காரத்தை அடக்கவேண்டும். இல்லையென்றால். ஆங்கிலேயர்களிடமிருந்து நமக்கு கிடைக்கும் சுதந்திர குடியரசாக இருக்காது - டெமோக்கரசி' அது பார்ப்பனரின் ஆதிக்கம் அதாவது பிராமினோகரசி'யாக இருக்கும் என்று எச்சரித்தார்.
Brahmnocracy என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார் பெரியார்!
பெரியார் திண்ணைப் பள்ளிக்கூடம்தான் போன வர். இங்கிலீசு மொழிக்கே ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்தது என்பதுதான் மிக முக்கியம். இதுவரை யில் நாம் Aristocracy, Democracy என்றுதான் கேள் விப்பட்டிருப்போம். பெரியாருடைய சிந்தனை பாருங்கள், ‘Brahmnocracy' என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார்.
Democracy-க்கு என்ன  விளக்கம்? A Government of the People; for the People; by the People என்பதுதான்.
Brahmnocracy-க்கு  என்ன  விளக்கம்? A Govern ment of the Brahmins; for the Brahmins; by the Brahmins என்பதுதான்.
சுதந்திரம் வந்ததும் இதே நிலைதான். இவனிடமிருந்த அதிகாரம் அவனிடம் சென்றிருக்கிறது. அவனாவது கொஞ்சம் நியாயமாக நடப்பவன். ஆனால், அவனை விட இவன் மோசமானவனாயிற்றே. எதற்கோ பயந்துகொண்டு, எதிலோ காலை வைத்ததுபோல ஆகி விட்டதே என்று சொன்னார்.
எனவே கருஞ்சட்டைகளுக்கு வேலை இருக்கிறது; இந்தப் போராளிகளுக்கு இன்னும் வேலை இருக்கிறது.
இறுதியாக ஒன்றைச் சொல்லி முடிக்கின்றேன்.
உங்களைப் பார்த்து தேசத்தைக் காட்டிக் கொடுக் கிறவர்கள் - தேசத்திற்கு விரோதமாக பேசுகிறவர்கள் என்று சொல்கிறார்கள் - நாளைக்கு அவர்மீது வழக்கு - தேசத் துரோக வழக்கு!
இங்கே இருக்கின்றவர்கள் எல்லாம் தீவிரவாதிகளா?

சுதேசி, சுதேசி என்று வெள்ளைக்காரன் எதை உமிழ்ந்து போட்டானோ,  அதை எடுத்து வைத்துக் கொண்டு, இன்னமும் சட்டம், சட்டம் என்று அந்த சட்டங்களை நீங்கள் வைத்திருக்கிறீர்களே, இவர் என்ன பெரிய தீவிரவாதியா? இங்கே இருக்கின்றவர்கள் எல்லாம் தீவிரவாதிகளா?
மடங்களில் இருக்கின்றவர்கள் கொலை செய்து, ஜெயிலுக்கும், பெயிலுக்குமாக அலைந்துகொண்டு, பிறகு 89 பிறழ் சாட்சிகளால் வெளியே வந்த  சங்கராச்சாரிகள் எல்லாம் மகான்கள் இந்த நாட்டில்.
எங்கள் தோழர்களைப் பார்த்து, திருமுருகனைப் பார்த்து, இந்த அணியில் உள்ளவர்களைப் பார்த்து, தேசத் துரோகிகள், தேச விரோதிகள் என்று பேசுகிறார்களே, இதோ என் கைகளில் இருப்பது Shadow Armies: Fringe Organizations and Foot Soldiers of Hindutva, Dhirendra K. Jha. யிலீணீ என்பவர் எழுதியிருக்கிறார். அவர் ஒரு பார்ப்பனர்தான்.
அந்த நூலில் அவர்,
Four of these organisations – the Bajrang Dal, the Bhonsala Military School, the Hindu Aikya Vedi and the Rashtriya Sikh Sangat – are affiliated to the Rashtriya Swayamsevak Sangh (RSS). Others – the Sanatan Sanstha, the Hindu Yuva Vahini, the Sri Ram Sene and Abhinav Bharat
இந்த அமைப்புகளிலே சனாதன் சன்ஸ்தா அமைப்பு தான் தபோல்கரை கொலை செய்தது, கோவிந்த்  பன்சாராவை கொலை செய்தது, கவுரி லங்கேசை கொலை செய்தது. இந்திய ராணுவப் படையில் இருந்த துப்பாக்கி மருந்துகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பயன்படுத் தியிருக்கிறது, இன்னமும் அந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இங்கே இருக்கிற எந்தத் தோழர்களோ அல்லது இந்த மேடையில் உள்ளவர்கள் யாராவது அதுபோன்ற குற்றங்கள் செய்தது உண்டா? தயவு செய்து எண்ணிப் பாருங்கள்.
56 அங்குல மார்பளவு என்று தன்னை வர்ணித்துக் கொண்ட பிரதமர் மோடி அவர்களே, உங்கள் அரசின்கீழ், இந்த ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பு எப்படி இருக்கிறது? என்று சொல்லுகின்ற நேரத்தில், ஒரு செய்தி.
இதில் பல அமைப்புகள் இருக்கிறது - அதிலே கொலை அமைப்புகள் இருப்பது மட்டுமல்ல, Bhonsala Military School என்று இருக்கக்கூடிய அமைப்பில், ராணுவத்தில் அமைக்கப்பட்ட இந்தப் பள்ளிக்கூடத்தில், மூஞ்சே என்பவர் இத்தாலி பாசிச, முசோலினியைச் சந்தித்து, அவரிடம் கருத்து கேட்டு, அதன்படி  படை களை அமைத்து, அதன்படி ஆர்.எஸ்.எசை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை இந்தப் புத்தகத்தில் ஆதாரத்தோடு, மூஞ்சேஸ் எழுதிய டைரியில் இருந்த குறிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
இவைகளுக்கு நடவடிக்கை உண்டா?
இதற்குப் பெயர் தீவிரவாதமா? பயங்கரவாதமா?
அல்லது இந்த மேடையில் இருக்கிறவர்கள் உரிமை கேட்டால், எங்கள் உரிமைகளைக் கேட்டால், நீட் தேர்வைக் கொண்டு வந்து எங்கள் பிள்ளைகளை சாகடிக்கிறீர்களே என்று கேட்டால், எங்கள் மொழிக்கு இடமில்லை என்று, சமஸ்கிருதத்தைத் திணிக்கிறீர்களே என்று கேட்டால், நாங்கள் குற்றவாளிகளா?
எது உங்களுடைய வேர் என்று நினைத்தீர்களோ - அங்கேயே ஆட்டம் கண்டிருக்கிறீர்கள்!

எனவேதான், நீங்கள் அச்சுறுத்தினால், உங் களுக்கு ஒரே விடை - மே மாதம் வருகின்ற அந்தத் தேர்தலில், நாங்கள் செய்யவேண்டியதை - இப்பொழுது இந்திப் பிரதேசமே செய்திருக்கிறது - எது உங்களுடைய வேர் என்று நினைத்தீர்களோ - அங்கேயே ஆட்டம் கண்டிருக்கிறீர்கள்.

அவர்கள் மட்டுமல்ல,  தமிழ்நாட்டில், அவர்க ளோடு கூட்டு சேர்ந்தால், அவர்களும் தமிழர் களுடைய இன விரோதிகளாவார்கள், அது யாராக இருந்தாலும்.

நன்றாக நினைத்துப் பாருங்கள், அவர்கள் விலைக்கு வாங்குவார்கள், பிரிப்பார்கள். ஈழத் தமிழர்களைக்கூட இன்றைக்குப் பிரித்துக் கொண்டி ருக்கலாம் என்று நினைக்கிறார்கள். எனவேதான், எச்சரிக்கையாக இருக்கவேண்டும். தமிழர்களே, எச்சரிக்கையாக இருங்கள்!

துரோணாச்சாரியார்களுடைய தலையை வாங்கக்கூடிய அளவிற்கு எங்கள் இளைஞர்கள் துணிவாக இருப்பார்கள்!

நாம் இராவணனைத்தான் பாராட்டுவோம் - தென்னிலங்கையைப் பார்க்கிறேன், அடடா, பூரிக்கிறது என்று புரட்சிக்கவிஞர் சொன்னதுபோல இராவண லீலா நடத்தியது தமிழ்நாடு. ராமனை ஒருபோதும் ஆதரிக்காது. ராமராஜ்ஜியத்திற்கு இங்கே இடமில்லை. ஒருபோதும் சம்பூகன்களாக நாங்கள் இருக்கமாட்டோம்; ஒருபோதும்  ஏகலைவன்களாக நாங்கள் இருக்கமாட்டோம். துரோ ணாச்சாரியார்கள் கட்டை விரலைக் கேட்டால், துரோ ணாச்சாரியார்களுடைய தலையை வாங்கக்கூடிய அளவிற்கு எங்கள் இளைஞர்கள் துணிவாக இருப் பார்கள். சம்பூகன்களிடம் வாலாட்டாதீர்.
தமிழ்நாட்டில் இராவண விழா நடைபெறும்!

அடுத்து நடக்கப் போவது கருஞ்சட்டைப் பேரணி மட்டுமல்ல - அதற்கடுத்து இராவண விழா நடைபெறும் - இந்தத் தமிழ்நாட்டில்.
இராவணன் என்பது அசுரன். அசுரன் என்பது குடிகாரன் அல்லாதவன். சுரா என்பது சுராபானம். அதனைக் குடிக்காதவர்கள் அசுரர்கள். எனவேதான், ஒழுக்கமுள்ளவர்களை உருவாக்குவோம்; கொள்கை உள்ளவர்களை உருவாக்குவோம். அதுதான் இந்தக் கருஞ்சட்டைப் பேரணி.
எனவே, தமிழர்களே! தமிழர்களே!! தமிழ் இனத்தைக் காப்பதற்காக நீங்கள் கைகொடுங்கள்! பெரியார் தன்னுடைய மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு, இரண்டு பேரைப் பிடித்துக்கொண்டு யாருக்காகப் போராடினார்?
கடைசியாக 19 ஆம் தேதி, தியாகராயர் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்பொழுது  அம்மா' என்று முனகியபடியே  மரண சாசன உரையாற்றினார் தந்தை பெரியார். அவருடைய வலியைக்கூட பொறுத்துக்கொண்டு, உங்களை சூத்திரனாக விட்டுவிட்டுப் போகப் போகிறேனே என்று அழுதாரே, கலங்கினாரே அந்தப் பெரியாருடைய உணர்வுகளை நீங்கள் பெறுங்கள்! இந்தக் கூட்டம் அதற்கு ஒரு தொடக்கம்.
ஈரோட்டுக் கண்ணாடியால்தான் முடியும்

எனவே, எதுவும் நம்மைப் பிரிக்கக்கூடாது; எல்லாம் நம்மை இணைக்கும். நம்முடைய எதிரிகள் யார்? நம்முடைய நண்பர்கள் யார்? என்பதை அடையாளம் காணுவோம். முந்தைய எதிரிகள் நாணயமான எதிரிகள்; இப்பொழுதுள்ள எதிரிகள் நாணயம் கெட்ட எதிரிகள்; சூழ்ச்சி நிறைந்தவர்கள். எனவேதான், அந்த சூழ்ச்சி வலையை அறுத்தெறிய ஈரோட்டுக் கண்ணாடியால்தான் முடியும்.
அரசியல் அடிமைத்தனம் - கைவிலங்கு
பொருளாதார அடிமைத்தனம் - கால் விலங்கு
பண்பாட்டு அடிமைத்தனம் - மூளை விலங்கு
அந்த மூளை விலங்கை உடைக்கத்தான் ஈரோட்டு சம்மட்டி. அதற்குத்தான் கருஞ்சட்டை வீரர்கள் இங்கே திரண்டிருக்கிறார்கள்.
எனவே, நண்பர்களே! உங்களுடைய திரட்சி, உங்களுடைய ஒற்றுமை, உங்களுடைய பேரணி - பெரியார் என்பது வெறும் பிம்பம் அல்ல; பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போட்டவனே - அவனே நீதிமன்றத்திற்குச் சென்று பைத்தியக்காரன் என்று ஒப்புக்கொண்டிருக்கிறான். கீழ்ப்பாக்கத்திற்குச் சென்று சான்றிதழ் வாங்கி வெளியே வருகிறான்.
எனவே, பைத்தியக்காரர்களாக இருந்தாலும்கூட, காரியப் பைத்தியங்களை நாம் ஒருபோதும் அடையாளம் காணாமல் விட்டுவிட மாட்டோம் என்பதை எடுத்துச்சொல்லி,
இவ்வளவு சிறப்பான முயற்சிகளை செய்த தோழர் திருமுருகன் காந்தி அவர்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கத்திரிக்கோல் நடுவிலே தலையை விட்டால், உங்கள் நிலை என்ன?

நாங்கள் பிரிந்திருந்தோம் - பிரிந்திருக்கிறோம் என்று தப்புக் கணக்குப் போட்டு ஏமாந்துவிடாதீர்கள். கத்திரிக் கோலினுடைய இரண்டு முனைகள் பிரிந்திருப்பதுபோன்றுதான் இருக்கும். கத்திரிக்கோல் நடுவிலே தலையை விட்டால், உங்கள் நிலை என்ன என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.
- விடுதலை நாளேடு, 4.1.19

திருச்சி தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் தமிழர் தலைவர் இனமான உரை

நாங்கள் தமிழுக்குப் பிறந்தவர்கள் -சமஸ்கிருதத்திற்குப் பிறந்த பேடிகள் அல்லர்!

பிரித்தாளும் தந்திரத்தைக் கையாளலாம் என்று நினைத்தவர்களுக்கு, மிகப்பெரிய ஏமாற்றம்!

திருச்சி, ஜன.4 பல கருத்தாலே இவர்கள் எல்லாம் பிரிந்திருப்பார்கள் - நாம் நம்முடைய ஆரிய விளை யாட்டை விளையாடிக் காட்டலாம் - பிரித்தாளும் தந்திரத்தைக் கையாளலாம் என்று நினைத்தவர்களுக்கு, மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்து, நயவஞ்சக நரிகளே, உங்கள் கதை இனி நடக்காது என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திருச்சிக் கருஞ்சட்டை இளைஞர் கடலின்முன் இனமான உரையாற்றினார்.
கருஞ்சட்டைப் பேரணி -மாநாடு

23.12.2018 அன்று திருச்சி கே.டி. திரையரங்கம் அருகில் தொடங்கிய கருஞ்சட்டைப் பேரணி உழவர் சந்தையில் நிறைவடைந்தது. அங்கே நடைபெற்ற தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.


அவரது உரை வருமாறு:
பிரித்தாளும் தந்திரத்தைக் கையாளலாம் என்று நினைத்தவர்களுக்கு, மிகப்பெரிய ஏமாற்றம்

வரலாறு காணாத அளவு எந்த நகரத்தை - தான் பிறந்த ஊரைவிட்டுக்கூட - தன்னுடைய அடையாள மான ஈரோட்டைக்கூட மறந்து, பிரச்சாரம் செய்வதற்கு, தமிழ்நாட்டில் நடுநாயகமாக இருக்கின்ற நகரம் எது என்று தேர்ந்தெடுத்து - அதுதான் இந்த திருச்சி மாநகரம் என்பதைக் கண்டறிந்து - அறிவாசான் பகுத்தறிவுப் பகலவன், இந்த திருச்சி மாநகரில், தந்தை பெரியார் அவர்களுடைய, சமுதாயத்தின் புரட்சி வீரராக, தலைவராக, ஒரு எழுச்சி யுகத்தை உருவாக்கியவராக இருக்கக்கூடிய அந்த ஆசானுடைய நினைவு நாள் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள். அது ஒரு வர லாற்றுக்கான குறிப்பே தவிர, மற்றபடி அவருடைய தத்துவம் என்பது மறக்கப்படுவதே இல்லாத ஒரு தத்துவம். அப்படிப்பட்ட அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய நினைவைப் போற்றுகின்ற வகையில், ஒரு அற்புதமான கருஞ்சட்டைப் பேரணியை - பல கருத்தாலே இவர்கள் எல்லாம் பிரிந்திருப்பார்கள் - நாம் நம்முடைய ஆரிய விளையாட்டை விளையாடிக் காட்டலாம் - பிரித்தாளும் தந்திரத்தைக் கையாளலாம் என்று நினைத்தவர்களுக்கு, மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்து, நயவஞ்சக நரிகளே, உங்கள் கதை இனி நடக்காது.
நீங்கள் எங்களைப் பிரித்தாண்டு கொண்டு காலங் காலமாக இருக்கிறீர்கள். எங்கள் குடும்பம் ஒன்று. இதில் பலருக்குப் பல பாத்திரம் உண்டு என்பதைக் காட்டக்கூடிய அளவில் - எல்லோரையும் ஒருங்கிணைக்கக்கூடிய அற்புதமான ஒரு சிறந்த முயற்சியை எடுத்து, பல்வேறு தொல்லைகளுக்கிடையில், காவல்துறை தொல்லை, உயர்நீதிமன்றத்திற்குச் சென்று அனுமதி வாங்கி, திருச்சியில் கடல் கிடையாது; கருஞ்சட்டைக் கடல் இருக்கின்றது என்று பெருமைப்படக்கூடிய அளவிற்கு, வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கின்ற அன் பிற்கும் பாராட்டுதலுக்கும் உரிய அருமை சகோதரர், சமூகப் போராளி திருமுருகன் காந்தி அவர்களே,
அதேபோல, இம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கக் கூடிய இன உணர்வாளர், அன்பிற்குரிய அருமை நண்பர் மற்றொரு போராளி தோழர் பொழிலன் அவர்கள்,
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தோழர் ஆனைமுத்து அவர்களே,
பதவி எனக்கு முக்கியமல்ல,

நீதிதான் முக்கியம்!

அருமை பெரியார் பெருந்தொண்டர்கள், சமூகப் போராளிகள், சக போராளிகள் கொளத்தூர் மணி அவர்களே, கோவை இராமகிருஷ்ணன் அவர்களே, அரங்க.குணசேகரன் அவர்களே, நீதிபதி பதவியில் இருந்தாலும், கொள்கை என்று வருகின்ற நேரத்தில், பதவி எனக்கு முக்கியமல்ல, நீதிதான் முக்கியம் என்பதை தன்னுடைய நீதிபதி பதவிக்காலத்தில், என் றைக்கும் நிலைநாட்டி, இன்றைக்கும் துணையாக இருக்கக்கூடிய சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அன்பிற்குரிய அய்யா நீதிபதி அரிபரந்தாமன் அவர்களே,
ஆய்வாளர் அய்யா தொ.பரமசிவன் அவர்களே, சமூகப் போராளி இரா.அதியமான் அவர்களே,
இங்கே உரையாற்றி விடைபெற்றுச் சென்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் போராளி பேராசிரியர் சுப.வீ. அவர்களே,
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
என்று சொல்லக்கூடிய உணர்வு
பொருளாதார அறிஞர் வேந்தன் அவர்களே, ஓவியா அவர்களே, நேரத்தின் நெருக்கடி கருதி, அனைவரையும் விளித்ததாக அன்போடு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொண்டு, என்னுடைய உரையை நான் தொடங்குகிறேன்.
வெள்ளம்போல் தமிழர் கூட்டம்
வீரங்கொள்கூட்டம்; அன்னார்
உள்ளத்தால் ஒருவரே மற்
றுடலினால் பலராய்க் காண்பார்
என்று சொல்லக்கூடிய வண்ணம்,
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே, எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் என்று சொல்லக்கூடிய உணர்வு, இந்த மாநாட்டை சிறப்பாக எடுத்துக்காட்டி இருக்கிறது.
எத்தனை இடையூறுகள்? தந்தை பெரியார் இந்த சமுதாயத்தில் எதிர்நீச்சல் அடித்தவர். அவருடைய வாழ்நாள் முழுவதும் - தத்துவ ரீதியாக இன்றைக்கும் அவர்கள் மறையவில்லை. நம் நெஞ்சங்களில் நிறைந்தது மட்டுமல்ல, நம் ரத்த நாளங்களில் உறைந்திருக்கிறார் தந்தை பெரியார் அவர்கள்.
கனவு காணுகின்றவர்களின் எண்ணத்தை -

ஆழ குழிதோண்டிப் புதைக்கின்ற மாநாடுதான்!

அந்த உணர்வுகள்தான் எல்லாவற்றிற்கும் விடை. தமிழ்நாட்டில், கருஞ்சட்டைப் பேரணி என்று அவர்கள் உருவாக்கி, இன்றைக்குக் கருஞ்சட்டைகள் மட்டுமல்ல, வண்ணங்கள் எப்படி இருந்தாலும், எங்கள் எண்ணங்களுக்கெல்லாம் ஒருவர்தான்- தந்தை பெரியார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, வண்ணங்களையும் இணைத்து, எண்ணங்களை ஒரே இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி, இன்றைய சூழல் - தமிழகத்தையே சுரண்டிக் கொண்டு - தமிழகத்தையே ஆண்டு கொண்டு - தமிழகத்தையே வஞ்சித்துக் கொண்டு - தமிழகத்தையே புரட்டிப் போட்டு - தமிழ்நாட்டை காவி மண்ணாக்கிவிடலாம் - பெரியார் மண்ணை என்று கனவு காணுகின்றவர்களின் எண்ணத்தை - ஆழ குழிதோண்டிப் புதைக்கின்ற மாநாடுதான் - இந்தத் தமிழின உரிமை மீட்பு மாநாடாகும்.
அதற்காகத்தான் இங்கே இத்தனை பேர் சேர்ந்திருக்கிறோம். இது ஒன்றும் வியப்பல்ல. முதலில் நாங்கள் யாருக்காவது நன்றி செலுத்தவேண்டுமானால், பெரியார் சிலையை உடைப்போம்; பெரியாரை அவ மானப்படுத்துவோம்; பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போடுவோம் என்றெல்லாம் சொல்லி, சும்மா இருந்தவர்களை கிளப்பிவிட்டு, இன்றைக்குப் புயலை அறுவடை செய்துகொண்டிருக்கிறார்கள்.
எங்கள் எல்லோரையும் ஒரே மேடையில் சேர்த்த நண்பர்களே, அடிக்கடி அப்படி பேசுங்கள்; அடிக்கடி அப்படி அறைகூவல் விடுங்கள். அதுதான் எங்களை இன்னும் இறுக்கமாக ஆக்கும். இது மாநாடல்ல - ஒரு போர்ப் படை பாசறை.
இங்கே வந்திருக்கின்றவர்கள் கோட்டைக்குள் போவதற்காக வந்திருப்பவர்கள் அல்ல. கோட்டைக்கு யாரை அனுப்பவேண்டுமோ, அவர்களை அனுப்பவும் தயாராக இருக்கக்கூடியவர்கள்.
சிறைச்சாலைக்குள்ளே போவதற்குத் தயாராக இருக்கின்ற போராளிகளுடைய கூட்டம்

ஆனால், இங்கே வந்திருப்பவர்கள் கோட்டைக் குள்ளே போவது முக்கியமல்ல - சிறைச்சாலைக்குள்ளே போவதற்குத் தயாராக இருக்கின்ற போராளிகளுடைய கூட்டம் இந்தக் கருஞ்சட்டைக் கூட்டம்.
அந்தக் கூட்டம் இன்றைக்கு ஒன்றுபட்டு இருக்கிறது. திருமுருகன் காந்தி என்றால், ஏதோ ஒரு சாதாரண இளைஞனா? மனித உரிமைகளுக்காக அவர், அய்க்கிய நாடுகளில் உரையாற்றிவிட்டு, ஒரு தமிழன், ஒரு இளைஞன் அந்த அளவிற்குப் பெருமை பெற்றிருக்கிறான் என்று வரும்பொழுது, வெட்க மில்லாமல், அவரை கைது செய்து சிறைச்சாலைக்குக் கொண்டு போனது இருக்கிறதே - இந்த மனித உரிமைப் பறிப்பைப் பார்த்துக்கொண்டு நாங்கள் எல்லாம் சும்மா உட்கார்ந்துகொண்டு இருப்போம் என்ற நினைப்பா?
பெரியார் என்ற ஆலமரத்தின் விழுதுகள்

அவர் தனி மனிதர் அல்ல; இங்கே இருக்கும் எவரும் தனி மனிதர் அல்ல. பெரியார் என்ற அந்தத் தத்துவத்தினுடைய கிளைகள்; பெரியார் என்ற ஆலமரத்தின் விழுதுகள். அந்த வேரை எந்தக் கொம்பனாலும் அசைத்துவிட முடியாது. நீ தோண்டி னால், அந்தக் குழி உனக்காகத்தான்.
அந்த அடிப்படையில் நண்பர்களே, இந்தக் கருஞ்சட்டைப் பணி சாதாரணமானதல்ல. எனக்கு அதிகமாக, காந்தியைத் தெரியாது; அந்தக் காந்தியையும் தெரியாது; இந்தக் காந்தியையும் தெரியாது. ஆனால், தெளிவாக ஒன்றைச் சொல்லுகிறேன், அந்தக் காந்தியை சுட்டவனும் ஆர்.எஸ்.எஸ். இந்தக் காந்தியை அழிக்கவேண்டும் என்று நினைப்பவனும் ஆர்.எஸ்.எஸ். கடைசியில் அழிந்து போகக்கூடியதும் ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பனியம். ஆகவே, திருமுருகன் காந்தியை ஒரு தனி நபராகப் பார்க்கவில்லை.
திருமுருகன் காந்தி அவர்கள், என்னை சென்னை பெரியார் திடலில் வந்து சந்தித்தபொழுது, நான் அவரிடம் கேட்டேன். அவருக்கு இந்த உணர்வு எப்படி வந்தது என்று.
அவருக்குப் பாரம்பரியமாக, ஆங்கிலத்தில் சொல் வார்களே, டி.என்.ஏ.  என்று. அந்த மரபணு இந்தக் கருஞ் சட்டைப் பேரணியை உருவாக்கவேண்டும் என்று வந்தது.
அவருடைய தாத்தா ஈரோடு புலவர் ஆறுமுகமும், நானும், கலைஞர் அவர்களும் 1946 ஆம் ஆண்டில் மாணவர் சுற்றுப்பயணத்தில் தஞ்சை முழுவதும் சென்றவர்கள்.
எனவே, அவர் ஒரு தனி நபர் அல்ல. ஏதோ ஒரு நபர் அல்ல - ஊதித் தள்ளிவிடலாம், பொய் வழக்குப் போட்டுவிடலாம் என்று நினைக்காதீர்கள்.
காவல்துறை இதற்கு முன் இந்தப் பேரணிக்கும், மாநாட்டிற்கும் அனுமதி கொடுத்திருந்தால் எவ்வ ளவு நன்றாக இருந்திருக்கும். இவ்வளவு பெரிய பேரணி நடந்ததே - அந்தப் பேரணியில் ஒரு சிறு அசம்பாவிதம்கூட நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் எங்களைப் போன்றவர்கள் நடந்தே வந்தோம்.
நாங்கள் நடந்து காட்டுகிறவர்கள், எல்லாவற்றிலும். நடையில் மட்டுமல்ல, கொள்கையில் நடந்துகாட்டுகிற வர்கள்.
தமிழக அரசே, ஏன் இந்த அவமானத்தை நீங்கள் சுமந்தீர்கள்? ஒரு எடுபிடி அரசாக, டில்லிக்கு பொம்ம லாட்ட அரசாக இருக்கிறீர்களே, உங்களுக்கு வெட்க மில்லையா? நாளைக்கு எந்த முகத்தோடு, பெரியார் படத்திற்கு முன், பெரியார் சிலைக்கு - அவருடைய நினைவு நாள் என்று செல்லவிருக்கிறீர்களே, இது நியாயம்தானா? என்பதை எண்ணிப் பாருங்கள்.
அரசாங்கத்தினுடைய காதுகளைப் பிடித்துத் திருகி -  தலையில் குட்டு வைத்து...

பெரியாருடைய கருஞ்சட்டைப் பேரணி, அதுவும் பெரியாருடைய தலைநகரத்தில் நடைபெறும் ஒரு பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை - அரசாங்கத் தினுடைய காதுகளைப் பிடித்துத் திருகி -  தலையில் குட்டு வைத்து - அங்குள்ள நியாயாதிபதிகள், ஊர்வலத் திற்கு அனுமதி கொடுத்து -  இப்பொழுது எங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கிற காவல்துறைக்கு நீங்கள் இழிவை உண்டாக்கலாமா? என்று அரசைப் பார்த்துக் கேட்கிறோம்.
இந்த நாட்டு வரலாற்றிலேயே இதுபோன்ற சர்வ அடிமைகள்  கிடைத்ததே கிடையாது. என்று தணியும் இந்த அடிமை மோகம்? கண்டிப்பாகத் தணியும் வரு கின்ற மே மாதம்.
இந்தக் கருஞ்சட்டை அணி என்று சொல்கின்ற நேரத்தில் நண்பர்களே, ஒன்றை உங்களுக்குச் சொல்ல வேண்டும். 1945 ஆம் ஆண்டு திருச்சியில் கூடிய திராவிடர் கழக மாநாட்டில்தான், கருப்புச் சட்டை படையை ஈ.வெ.கி.சம்பத் அவர்களையும், கவிஞர் கரு ணானந்தம் அவர்களையும் நியமித்து தந்தை பெரியார் அமைத்தார்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கருஞ்சட்டைப் படையை அமைத்திருக்கிறார்கள். கருப்பு என்று சொன்னால், சாதாரணமா? எங்கே போனாலும், என்ன சொன்னாலும், தொலைக்காட்சி நண்பர்களும் இங்கே வந்திருக்கிறார்கள் - விடாது கருப்பு - அது தொடரும்.
அன்றைக்கு இருந்த கருஞ்சட்டையின் எண்ணிக்கை என்ன? இன்றைக்கு இருக்கின்ற

கருஞ்சட்டையினுடைய பெருமை என்ன?

1946 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற கருஞ்சட்டைப் படை மாநாட்டுப் பந்தலை எரித்தார்கள். கருஞ்சட்டை மறைந்துவிட்டதா? அன்றைக்கு இருந்த கருஞ்சட்டையின் எண்ணிக்கை என்ன? இன்றைக்கு இருக்கின்ற கருஞ்சட்டையினுடைய பெருமை என்ன?
தொழிலுக்காக, தொழில் தர்மத்திற்காக, நீதிமன்றத் திற்காக கருப்புச் சட்டை அணிந்தவர் நம்முடைய நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் - இன்றைக்கு அவர் கருஞ்சட்டை அணிந்து அமர்ந்திருக்கிறாரே, இதைவிட பெரியாருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி, பெரியாரின் தத்துவத்திற்குக் கிடைத்த பெரிய வெற்றி வேறு என்ன இருக்க முடியும்? என்பதை எண்ணிப் பாருங்கள்.
எனவேதான், கருஞ்சட்டை என்று சொன்னால், ஏதோ அது ஒரு நிறமல்ல. ஒரே ஒரு செய்தி, கருஞ்சட்டைக்கு விளக்கம் அதிகம் சொல்லவேண்டிய அவசியமில்லை.
போராட்டத்தினுடைய வடிவம் என்று சொன்னால், கருப்புச் சட்டை அணிந்துதான் போராடுகிறார்கள்

இன்றைக்கு நடைபெறும் எந்தப் போராட்டமாக இருந்தாலும், யார் போராடினாலும், எந்தக் கட்சியினர் போராடினாலும் தமிழ்நாட்டில், எல்லா கட்சிக்காரர்களும் கருப்புச் சட்டையைத் தைத்து வைத்துக் கொண்டிருக் கிறார்கள். அய்யப்பன் கோவிலுக்குப் போகிறவனை விடுங்கள் - அது டூப்ளிகேட் - அது தற்காலிகம். ஆனால், போராட்டத்தினுடைய வடிவம் என்று சொன்னால், கருப்புச் சட்டை அணிந்துதான் போராடுகிறார்கள். ஆளும் கட்சி உள்பட - முதலமைச்சரே கருப்புச் சட்டை அணிகிறார்.
அந்த அளவிற்கு கருப்புச் சட்டை என்பது ஒரு போர்க் குணம் - போர்ப் படையினுடைய தத்துவம். பெரியார் என்பவர் தனி மனிதரல்ல என்று அண்ணா சொன்னார். ஒரு சகாப்தம், ஒரு காலகட்டம், ஒரு திருப்பம் என்றார். அந்தத் திருப்பம் இப்பொழுது வந்திருக்கிறது.
அரசியலுக்குப் போகமாட்டோம்; ஆனால், இந்தக் கூட்டம் அரசியலை தீர்மானிக்கும், நிர்ணயிக்கும்

எனவே, இந்தக் கருஞ்சட்டை விளக்கம் என்பது போராட்டத்தினுடைய சின்னமாக, அனைவரும் அணிவது மட்டுமல்ல, அடிமைத்தனம் இழிவைக் குறிக்கும். சமூகநீதி, பகுத்தறிவு மட்டும் பேசும் என்று எதிர்பார்க்கக்கூடாது. கோவில் அர்ச்சகர் உரிமை - தமிழ் வழிபாட்டு உரிமைக்காகக் குரல் கொடுக்கும். இங்கே இருக்கிறவர்கள் இன உணர்வாளர்கள், எங்கள் மண், எங்கள் மொழி. இதில் எதற்கடா இன்னொரு மொழி என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா? எவ்வளவு பெரிய சூது நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் அரசிய லுக்குப் போகமாட்டோம்; ஆனால், இந்தக் கூட்டம் அரசியலை தீர்மானிக்கும், நிர்ணயிக்கும் அதை மறந்துவிடாதீர்கள்.
வாக்கு வங்கி எங்கோ இருக்கிறது என்று அரசியல் வாதிகளே, நீங்கள் யாரையோ திருப்திப்படுத்தவேண்டும் என்று பயப்படாதீர்கள்! இதோ கருஞ்சட்டை அணி உங்களைக் காப்பாற்றுவதற்காக என்றைக்கும் துணை நிற்கும். காரணம், ‘‘கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்.''
எங்களை பிரிவினைவாதிகள் என்று அச்சுறுத்தாதீர்கள்

வஞ்சிக்கப்படுகிற தமிழ்நாட்டைப்பற்றி கேட்பதற்கு நாதி உண்டா? எவ்வளவு பெரிய புயல் தாக்கியிருக்கிறது இந்த டெல்டா பகுதிகளை - இந்த நாட்டினுடைய பிரதமராக இருக்கக்கூடிய ஒருவருக்கு, சினிமா நடிகை யின் திருமண வரவேற்பிற்கெல்லாம் போக முடிகிறது. ஆனால், இந்த மண்ணில், எங்கள் செல்வங்கள், எங்கள் மக்கள் வீடு இழந்து, வாசல் இழந்து, தொழில் இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்களே, அவர்களைப் பார்த்து ஒரு ஆறுதல் வார்த்தை சொல்வதற்குக்கூட இந்த நாட்டின் பிரதமர் வரவில்லை என்றால், என்ன அர்த்தம்? தமிழ்நாட்டை அவர் தனியே பிரித்துக் கொடுத்துவிட்டார் என்று அர்த்தம். நாங்கள் பிரிக்க வில்லை - நீங்கள் பிரித்துவிட்டீர்கள். நீங்கள் பிரித்தால், அதனை நாங்கள் எடுத்துக்கொள்ளத் தயாராகத்தான் இருப்போம். எனவே, எங்களை பிரிவினைவாதிகள் என்று அச்சுறுத்தாதீர்கள்.
நாங்கள் தமிழுக்குப் பிறந்தவர்கள்; நாங்கள் என்ன சமஸ்கிருதத்திற்குப் பிறந்த பேடிகளா?

சில ஆங்கில ஏடுகள், கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்த காரணத்தினாலே, ‘ரா' போன்ற அமைப்புகள் - இங்கே இருக்கிறவர்களைப் பார்த்துப் பேசும்போது, விடுதலைப் புலிகளைப்பற்றி பேசுகிறார்களா? ஈழ விடுதலையைப்பற்றி பேசுகிறார்களா? அல்லது தமிழ் உணர்வு வேண்டும் என்று பேசுகிறார்களா? உடனே அவர்களை எல்லாம் தமிழ் வெறியர்கள் என்று சொல்கிறார்கள். ஏண்டா, நாங்கள் என்ன சமஸ்கிருதத்திற்குப் பிறந்த பேடிகளா? நாங்கள் தமிழுக்குப் பிறந்தவர்கள்.
எங்கள் ரத்தம் தமிழ் ரத்தம் - எங்கள் ரத்தம் திராவிடர் ரத்தம். இங்கே இருக்கின்ற அணிகளைத் தனித்தனியாக சொல்லவேண்டாம் - இதற்கு ஒரே ஒரு பெயர் சொல்லவேண்டுமானால், திராவிட தமிழ்ப் பேராயம் இங்கே கூடியிருக்கிறது. இனிமேல், இந்த அணியை சொல்லும்பொழுதெல்லாம், திராவிட தமிழ்ப் பேராயம் என்று அழைக்கவேண்டும்.
தீ அணைப்புப் படை போன்றது இந்த அணி. எனவே, இழந்த உரிமைகள் நிறைய -  அவற்றைத் பெறுவதற்குத் தனித்தனியே போராடவேண்டிய அவசியமில்லை. ஒரே களத்தில் நின்று போராடுவோம்.
(தொடரும்)
- விடுதலை நாளேடு, 3.1.19

சனி, 29 டிசம்பர், 2018

திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - 'ஜூனியர் விகடன்', 'நக்கீரன்' பார்வையில்..

"பிஜேபி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்!"

"பெரியாருக்கு செருப்பு மாலை போட சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். அதனால்தான், இங்கே நாம் ஒருங்கிணைந்துள்ளோம். இது வெறும் கூடிக் கலைகிற கூட்டமல்ல. நமக்கான ஆட்சியாளர்களைக் கோட்டைக்கு அனுப்பவும் தயாரான கூட்டம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யுடன் யார் யாரெல்லாம் கூட்டணி சேர்கிறார்களோ, அவர்கள் எல்லாம் இனத் துரோகிகள்" என்று திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆவேசமாகக் கூறினார்.
திருச்சியில் கருஞ்சட்டை கர்ஜனை
பெரியார் நினைவு நாளை முன்னிட்டு டிசம்பர் 23ஆம் தேதியன்று திருச்சியில், தமிழின உரிமை மீட்புப் பேரணி மற்றும் மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், உயர் நீதிமன்றத் தில் அனுமதி பெற்று நிகழ்ச்சியை நடத் தினர். பல்லாயிரக்கணக்கில் தொண் டர்கள் குவிந்ததால், போலீஸார் பதற் றத்துடன் காணப்பட்டனர். திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், அரங்க. குணசேகரன் ஆகியோரின் ஒருங்கி ணைப்பில், ஆனைமுத்து, கொளத்தூர் மணி, கோவை ராமகிருட்டிணன், அதியமான் ஆகியோர் சகிதமாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேரணியைத் தொடங்கிவைத்தார். சிலம்பம், பறையாட்டம், மேளதாளம் எனக் களைக்கட்டியது பேரணி.
கருப்பு எங்கள் நிறம் என்ற கோவன் குழுவினர் பாடலுடன், மாநாடு ஆரம்ப மானது. ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும், சென்னை உயர் நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன. மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பேசுகையில், ``தந்தை பெரியாரின் வழியில் தேர்தலில் பங்கெடுக்காத இயக்கங்கள் திரண்டுள்ளோம். இனி, தமிழகத்தில் மதவெறி, சாதிவெறி அரசியல் தலைதூக்கினால் பெரியார் படை அதைத் தடுத்து நிறுத்தும். எட்டுவழிச் சாலை, மீத்தேன் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் நமது சொத்துகளைப் பறித்து கார்ப்பரேட் கும்பலுக்குத் தாரைவார்ப்ப தற்கு ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள். இதற்கு எதிராக ஒன்றிணைவோம். இந்தக் கருஞ்சட்டைப் பேரணியின் தொடர்ச்சியாக நீலச்சட்டை, சிவப்புச் சட்டை பேரணிகளையும் நடத்த வேண்டும்" என்றார்.
எப்படி இணைந்தார்கள்?
2014-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள  பெரியாரிஸ்ட் டுகள் மீதும், பெரியார் இயக்கங்கள் மீதும் பிஜேபி, இந்து இயக்கங்கள் கடும் விமர்சனங்களை முன் வைத் தன. தமிழக அரசின் துணையுடன் பலர் கைது செய்யப்பட்டனர். எனவே, பி.ஜே.பி-க்கு எதிராக பெரியார் இயக்கங்கள் அனைத்தும் இணைந்து ஒற்றுமையை  வலியு றுத்த வேண்டும் என்ற ஆர்வம் பெரியார் அமைப்புகள் மத்தியில் எழுந்தது அதற்கான முயற்சிகள் கடந்த செப்டம்பரில் தொடங்கின. அந்த முயற்சிதான் திருச்சியில் மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது என்கிறார்கள்.
- இ. லோகேஷ்வர்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை யின் சுப.வீரபாண்டியன், ``பெரியார் என்பது ஒரு நூற்றாண்டின் சொல். இங்கு இவ்வளவு இயக்கங்கள் உள்ளன. இவை, பெரியார் பெயரிலான கிளைகள் தானே தவிர, பிளவுகள் அல்ல. இந்த மாநாட்டின் நோக்கம் மதவெறி எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு மட்டுமல்ல. சாதி ஆணவப் படுகொலைகளையும் இந்த மாநாடு எதிர்க்கிறது. நமது எச் சரிக்கை மதவெறியர்களுக்கு மட்டு மல்ல, சாதி வெறியர்களுக்கும் எதி ரானது. தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்ற கனவு கருகிப்போயிருக்கிறது. கரிசல் காட்டில் ஒருபோதும் கரும்பு வளராது. தமிழ் மண்ணில் தாமரை மலரவே மலராது" என்றார் ஆவேசமாக!
முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், "தமிழகத்தில்தான் சுய மரியாதைத் திருமணம் அங்கீகரிக் கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட திரும ணங்கள் மற்ற மாநிலங்களில் இல்லை. சாதி ஒழிப்பும், பெண்ணிய விடு தலையும் பெரியாரியக் கோட்பாடுகள். சாதி ஒழிப்பை மீண்டும் கையிலெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது" என்றார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோவை ராமகிருட்டிணன், "பிரான்ஸ் நாட்டில் எரிபொருளுக்கு எதிராக மஞ்சள் சட்டை வெற்றி பெற் றதைப் போல, இந்தக் கருப்புசட்டை அணியும் விளங்கும். நமது அடுத்த நிகழ்ச்சியில், பேரறிவாளனையும், நளினியையும் பங்கேற்கச் செய்வோம். நாம் சிறை நிரப்பும் போராட்டம் நடத் தினால், அவர்கள் வெளியே வரு வார்கள். அடுத்த திட்டம் இதுதான்" என்றார். திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், "பெரியாரை கொண்டாட காரணம், அவரது தொலைநோக்குப் பார்வைதான். இங்கு பல்லாயிரக்கணக் கான இளைஞர்களைப் பார்க்க முடி கிறது. இவர்களுக்கும் ஏன் பெரியார் பிடிக்கிறது என்றால், பெரியார் வீதியில் பேசியதை நீதிமன்றத்தில் மறுத்த தில்லை. தான் எழுதியதை அட்மின் எழுதினார் என்று சொல்லவில்லை. பெரியார், ஒரு ஹீரோவாகவே வாழ்ந் தார்" என்று சந்தடிசாக்கில் ஹெச்.ராஜாவைச் சீண்டினார்.
- சி.ய.ஆனந்தகுமார்,  இரா.அமுதினியன்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்
நன்றி: 'ஜூனியர் விகடன்' 30.12.2018
- விடுதலை நாளேடு, 29.12.18

வெள்ளி, 28 டிசம்பர், 2018

திருச்சி கருஞ்சட்டை - தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


* கோயில்களில் தமிழில் வழிபாடு


*ஊர்ப் பெயர்கள் தமிழில் மாற்றம்

* தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வுகள் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருக

* கையால் மலம் அள்ளும் முறைக்கு முடிவு கட்டுக!

*கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருக!

* 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்க!

ஜாதி, இன, அதிகார, ஆதிக்க, நிலையை முறியடிக்க தந்தை பெரியாரின் இறுதி உரையை மனதிற் கொள்வோம்!


திருச்சி கருஞ்சட்டை - தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்




திருச்சி, டிச. 24- ஒற்றைப் பண்பாடு - ஒற்றை அடையாளம் எனும் ஆர்.எஸ்.எஸ். - பார்ப்பனீய சக்திகளின் திணிப்பை முறியடிப்போம் என்றும், ஜாதி - இன - அதிகார - ஆதிக்க நிலைகளை வீழ்த்திட தந்தை பெரியாரின் இறுதி உரையை மனதிற்கொண்டு செயல்படுவோம் என்பது உட்பட (இரங்கல் தீர்மானத்தையும் சேர்த்து) 25 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

திருச்சியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டியக்கத்தின் சார்பில் எழுச்சியுடன் நடத்தப்பட்ட கருஞ்சட்டை மாநாட்டில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

வீரவணக்கத் தீர்மானங்கள்:


1) தாய்மொழி, இன, நாட்டுரிமைகளுக்காகப் போராடி உயிர்நீத்த ஈகியர்களுக்கும், 1938-1965 மொழிப் போராட்டங் களில் உயிரீந்த நடராசன், தாளமுத்து, அரங்கநாதன், சிவ கங்கை இராசேந்திரன் உள்ளிட்ட எண்ணற்ற மொழிப் போராளியர்களுக்கும், சாதி ஒழிப்புப் போராட்டக்களங்களில் இதுநாள்வரை உயிர்நீத்த கீழ்வெண்மணியின் 44 தாழ்த்தப் பட்ட மக்களுக்கும், இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட் டத்தில் உயிர்நீத்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி உள்ளிட்ட ஈகியர்களுக்கும், பார்ப்பனிய மற்றும் மத வெறிகளுக்கு எதிராக மக்கள் நேயத்தோடுப் போராடி உயிர்நீத்த ஈகியர்களுக்கும் பெரியாரிய உணர்வாளர் கள் கூட்டமைப்பு வீரவணக்கம் செலுத்துகிறது.

2) தமிழ்நாட்டிற்கு வெளியே பார்ப்பனிய மற்றும் மத வெறிகளுக்கு எதிராகப் போராடி அம் மதவெறியர்களாலே படுகொலை செய்யப்பட்டு உயிர்நீத்த தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் உள்ளிட்ட எழுத்தாளர்கள், அறிஞர் கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான போராளியர்கள், வெகு மக்கள் என அனைவருக்கும் இம் மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.

3) தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகத் தம் இன்னு யிர் ஈந்த எண்ணற்ற போராளியர்களுக்கும், ஈகம் செய்திருக் கிற தமிழீழ மக்களுக்கும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உயிர்நீத்த தமிழ்நாட்டுத் தமிழர்கள் அப்துல்ரகூப், முத்துக் குமார், செங்கொடி உள்ளிட்ட ஈகியர் அனைவருக்கும் இம் மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.

கொள்கைத் தீர்மானங்கள் :


4) ஒரே மக்கள், ஒரே சட்டம், ஒற்றைப் பண்பாடு, ஒற்றை அடையாளம் என்கிற வகையில் பார்ப்பனிய அதிகார வெறி கொண்டு இயங்குகிற இந்திய அரசு, இந்தியாவிற்குள் அடக் கப்பட்டுள்ள பல்வேறு மொழித்தேசங்களின் வரலாற்றையும், பண்பாட்டையும், அடையாளங்களையும் மறுக்கிறது. இந் நிலையில் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தேசிய இன அடையாள உரிமையின்கீழ்த் தங்களைத் தமிழர்கள் என்றே பதிந்து கொள்வதற்கான வகையில் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்துகிறது.

5) மாநில உரிமைகளை நசுக்குவதற்காகவே ஆங்கிலேயர் களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஆளுநர் என்கிற அதி கார வடிவம் இன்றும் தொடர்ந்து கொண்டு மொழித் தேசங் களான மாநிலங்களை அடக்கி ஆள்கிற நடைமுறையை இக்கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே ஆளுநர் என்போர் மாநிலங்களுக்குத் தேவையில்லை என இம் மாநாடு தீர்மானித்து அதை எதிர்க்கிறது.

6) தமிழ்நாட்டின் பண்பாட்டையும், வரலாற்றையும் முழு மையாய் அழித்துப் பார்ப்பனியப் பண்பாட்டை வரலாற்றைத் திணிக்கிற முயற்சியில் வன்முறைகளைத் தூண்டிப் பல படுகொலைகளையும் நடத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் தமிழ்நாட்டில் இயங்கத் தமிழக அரசு தடை செய்திட வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது.

7) தமிழ்நாட்டின் ஊர்ப் பெயர்களைத் தமிழில் மாற்ற வேண்டுவதான தமிழக அரசின் அண்மை அறிவிப்பை இம்மாநாடு வரவேற்கிறது. அந்த அறிவிப்பை விரைவில் நடைமுறைப்படுத்துவதோடு, எஞ்சியுள்ள எல்லா ஊர்ப் பெயர்களையும் முழுமையாகத் தமிழில் மாற்றிட வேண்டும் என்றும், தமிழ்ப் பெயரில்லாத இந்திய, தமிழக அரசுகளின் திட்டப் பெயர்கள், கோயில்கள் மற்றும் நிறுவனப் பெயர்கள் அனைத்தையும் தமிழிலேயே அமைத்திட வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

8) தமிழ்நாட்டின் கீழடி உள்ளிட்ட பழஞ்சிறப்புகளைக் காக்கும் வகையில், தமிழகத்தொல்லியல் பொருள்களை, வரலாற்று இடங்களை மிகுந்த அக்கறையோடு தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்பதோடு தமிழ்நாட்டில் இயங்கும் தொல்லியல் ஆய்வுத்துறை என்பது தமிழக அரசின் முழுக் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், அதற்குத் தமிழக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து போராடி மீட்க வேண்டும் என்றும் இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது.

9) தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் சாதி ஆணவப் படுகொலைகளில் ஈடுபட்டு வரும் சாதி வெறியர்களை இம் மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அப்படியானவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, ஆணவப் படு கொலைகளைத் தடுத்து நிறுத்திட தனிச்சட்டம் இயற்றிட வேண்டும் என்றும் அதற்கென அதுகுறித்த உயர்நீதி மன்ற தீர்ப்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது. மேலும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குத் தனிச் சிறப்புத் திட்டத்தின் வழி கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளித்திட வேண் டும் என்றும், அவர்கள் சாதி சமயமற்றவர்கள் என்று பதிந்து கொள்கிற வகையில் அரசு ஆவன செய்ய வேண்டும் என் றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

10) தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள் அனைத்திலும் தமிழில் மட்டுமே வழிபாடு இருக்க வேண்டும் என்றும், பிற மொழியினரின் வேண்டுகைக்கு வேண்டுமானால் அவர்களுக்கென அவர்கள் மொழியில் வழிபாடு செய்து கொள்ள வழி அமைக்கலாம் என்றும் வலியுறுத்துவதோடு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராதல் வேண்டும் எனவும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

11) அறிவியல் பெரிய அளவில் முன்னேறியிருக்கிற இக் காலத்தில் மலக்குழிக்குள் இறங்குவதும், கையால் மலம் அள்ளுவதுமான பணிகளில் மனிதர்களே ஈடுபடும் நிலைக்கு மாற்று வழிமுறைகளைக் கண்டறிந்து உடனடியாக நடை முறைப்படுத்த வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது. மேலும் கல்வி, வேலை வாய்ப்புகள் இட ஒதுக்கீட்டு அடிப் படையில் நிறைவு செய்யப்படுவதில் அரசு முழுக் கவனம் செலுத்துவதோடு, தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்த வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்து கிறது.

12) பொதுப்பட ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrence List) இருக்கிற கல்வித் துறையை மாநிலங்களின் பட்டியலுக்கு உடனே கொண்டு வரவேண்டும் என்றும், அந்த வகையில் தமிழ்நாட்டில் இருக்கிற கல்விக்கூடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும், இந்திய அரசின், பிற பன்னாட்டு நிறு வனங்களின் கல்விக் கூடங்கள், தமிழ்நாட்டில் இயங்க முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது. சித்தமருத்துவம் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கல்வியும் தமிழ்நாட்டு அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும் - என்பதோடு, கல்விக்கான எந்த வகை இந்தி யத் தேர்வுகளையும், நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளையும், தமிழ்நாட்டிலும் பிற அனைத்து மொழித் தேசங்களிலும் தடை செய்ய வேண்டும் என்றும், அவற்றோடு தொடக்கக்கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை அனைத்துக் கல்விகளும் தமிழ்நாட்டில் தமிழ்மொழி வழிக்கல்வியாகவே இருக்க வேண்டும் என்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளை மொழிப்பாடமாக மட்டுமே பயிலலாம் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

13) தமிழ்நாட்டின் ஆற்று நீர்ப்பாசனப் பரப்புகளுக்குத் தடையாகிற வகையில் கருநாடகா, கேரளா, ஆந்திரா அரசு கள் மேகதாது அணை, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை, பாலாற்றில் புதிய அணை என அணைகள் ஏதும் கட்டக் கூடாது என்றும், தமிழகப் பாசனப் பரப்புகளுக்கு இம்மி அளவும் தொல்லை வருகிற படியான அனைத்துச் செயல்பாடுகளையும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துத் தடுக்கவேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்து கிறது. மேலும் இந்திய அரசின் அணைகள் பாதுகாப்புச் சட்ட முன் வரைவைத் தமிழகம் எதிர்க்க வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது. .

14) தமிழ்நாட்டில் உள்ள வெளிநாட்டு மற்றும் ரிலையன்சு, டாட்டா உள்ளிட்ட இந்தியப் பெருமுதலாளிகளின் தொழிற் சாலைகளைப் படிப்படியாக நிறுத்தி, அவற்றைத் தமிழக அரசே தமிழக மக்களின் பங்கு முதலீட்டில் நடத்திட முன் வரவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டு நிலங்களை, சுற்றுச் சூழலை நாசப்படுத்தகிற மீத்தேன், அய்ட்ரோ கார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் மற்றும் அணுமின் நிலையங்களைத் தமிழக அரசு அமைச்சரவை ஒப்புதலோடு சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றிச் சட்ட மியற்றிக் கொள்கிற வகையில் முழுமையான முயற்சியில் தடுத்து நிறுத்திட வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது.

15) சென்னை உயர்நீதி மன்றத்தைத் தமிழ்நாடு உயர்நீதி மன்றம் என மாற்றுவதோடு, தமிழ்நாட்டிற்கான உச்ச நீதிமன் றம் தமிழ்நாட்டிலேயே அமைந்திட வேண்டுமான வகையில் அமைப்பை ஏற்படுத்தவும், தமிழ்நாடு உயர்நீதிமன்றம், தமிழ்நாடு உச்ச நீதிமன்றங்களில் தமிழே வழக்காடு மொழியா கிறபடியான அமைப்பு முறையைத் தமிழக அரசும், மக்களும், கட்சிகளும், இயக்கங்களும் முன்னின்று போராடி மாற்றவும் வேண்டுமென இம் மாநாடு வலியுறுத்துகிறது.

16) தமிழ்நாட்டு வணிகர்களை நசுக்கும் வகையில் தமிழ் நாட்டிற்குள் நுழைந்திருக்கிற, நுழைய இருக்கிற வெளிநாட்டு, மற்றும் ரிலையன்சு போன்ற இந்தியப் பெரு முதலாளிகளின் வணிக நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இயங்க வழிவிடக்கூடாது என இம் மாநாடு கட்டாயப்படுத்துகிறது. அதேபோல் வணிகர் களைப் பாதிக்கும் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட இந்திய அரசின் அனைத்து வரிகளையும் தமிழக அளவில் மறுத்திட வேண் டும் என இம் மாநாடு தீர்மானிக்கிறது.

17) தமிழ்நாட்டின் மின்சார வாரியத்தைத் தனியார் வயப்படுத்தி அதன் மூலம் இந்தியப் பெருமுதலாளிகளும், வெளிநாட்டு நிறுவனங்களும் தமிழகத்தில் முதலீடு செய்து தொழில் நடத்திட திட்டமிடுகின்றன. அதன்மூலம் இதுவரை அளிக்கப்பட்டு வரும் குடிசை வாழ் எளிய மக்களுக்கான இலவச மின்சாரமும் உழவர்களுக்கான கட்டணமில்லா (மானிய) மின்சாரமும் நிறுத்தப்படும் ஏற்பாடு உள்ளது. இப் போக்கை இம் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. மேலும், அண்மையில் ஏற்பட்ட கஜா புயலுக்கும், ஏற்கெனவே ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களுக்கும் அடிப்படைத் தேவைக்கான இழப்பீட்டைக்கூட இந்திய அரசு தமிழ்நாட்டிற்குக் கொடுக்கா மல் வஞ்சித்து வருவதை இம் மாநாடு கண்டிக்கிறது. தமிழ் நாட்டரசு கேட்டுக் கொண்ட வகையில் உடனடியாக 15 ஆயி ரம் கோடி உருவாவை இந்திய அரசு அளித்திட வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறது.

19) நெடுஞ்சாலைகள் அனைத்திலும் வழிப்பறிக் கொள் ளையர்கள் போல இந்திய அரசு, எடுபிடிகளையும், அடி யாட்களையும் வைத்துக் கொண்டு சுங்கச்சாவடிகள் அமைத்து வெகுமக்களிடம் வரிகள் பிடுங்கிக் கொண்டிருப்பதை இம்மாநாடு மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. ஏற்கெனவே வண்டிகள் வாங்கும்போதே சாலை வரிகள் கட்டப்பட்டிருக்கும் நிலையில் சாலை, சுங்க வரிகள் என வரிகள் பிடுங்கும் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமாய் இம் மாநாடு வலி யுறுத்துகிறது.

20) வேளாண் தொழில் மிகவும் நசுக்கப்பட்டு வரும் சூழலில், வேளாண் இடுபொருள்களுக்கு விலைகளைக் குறைக்க வேண்டும் என்றும், விளைச்சல் பொருள்களுக்கு நியாயமான வகையில் விலை அளித்துக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துவதோடு, அரிசி, கரும்பு உள்ளிட்ட விளைச்சல் பொருள்களுக்கு இந்திய அரசு விலை உறுதிப்பாடு (நிர்ணயம்) செய்யாமல் மேலாண்மைக் குழுக்களே விலை உறுதிப்பாடு (நிர்ணயம்) செய்யும் படியாக இருக்க வேண்டும் என்றும் இம் மாநாடு கட்டாயப்படுத்துகிறது.

21) தமிழ்நாட்டில் 28 ஆண்டுகளாகச் சிறையில் அடைப் பட்டுக் கிடக்கிற பேரறிவாளன், நளினி, இராபர்ட் பயாசு, சாந்தன், முருகன், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் தமிழக அரசின் ஒப்புதலோடு விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைத்த பின்பும், எந்த விடையும் சொல்லாமல் தமிழக ஆளுநர் அமைதியாயிருக்கும் நிலையைக் கைவிட்டுவிட்டு அவர்களை உடனடியாக விடு தலை செய்ய வேண்டும் என இம் மாநாடு வலியுறுத்துகிறது. அவர்களைப் போலவே பல ஆண்டுகளாய்ச் சிறையில் அடைப்பட்டிருக்கிற இசுலாமிய சிறையாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என மாநாடு வலியுறுத்துகிறது.

22) இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப் படுகொலைகளுக்கு அனைத்துத் தேச அளவில் சுதந்திரமான உசாவல் (விசாரணை) தேவை என்பதை இம் மாநாடு வலி யுறுத்துவதோடு, தமிழீழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

23) தமிழக வெகுமக்களிடையே விழிப்புணர்வை ஏற் படுத்துகிற வகையில் தமிழிய உணர்வு சார்ந்த சாதி, சமய மறுப்புணர்வைத் தெளிவு படுத்துகிற வகையிலான விழாக் களையும், நிகழ்வுகளையும், மூட நம்பிக்கை எதிர்ப்புப் பேரணிகளையும் தமிழகமெங்கும் பெரியாரிய உணர்வாளர் கள் கூட்டமைப்பின் இயக்கங்கள் ஒருங்கிணைந்தோ தனித்தோ முன்னெடுக்க வேண்டும் என இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது.

24) தமிழக மக்களுக்குப் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியதையும், சாதி இழிவை ஒழிப்பதையும் தன் வாழ்க்கை நோக்கமாகக் கொண்ட பெரியார், சாதி ஒழிப்புக்காக ஆழ்ந்து சிந்தித்துச் செயலாற்றிய அம்பேத்கர் மற்றும் தமிழிய மக்களிடையே அற உணர்வுகளைப் பரப்பிய அறிஞர்களும் செயற்பாட்டாளர்களுமான திருவள்ளுவர், வள்ளலார், அயோத்திதாசப்பண்டிதர், மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர், பாவேந்தர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் உள்ளிட்டவர்களின் பிறந்தநாள் நிகழ்வுகளைச் சிறப்பாக நடத்துவதோடு ஆரியப் பார்ப்பனியத்திற்கு எதிராய்ப் பெரியார் முன்னெடுத்து நடத்திய திருக்குறள் மாநாடுகளையும், சாதி ஒழிப்பு மாநாடுகளையும் இப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்து தொடர்ந்து ஆண்டு தோறும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடத்திட வேண்டுமென இம் மாநாடு அனைத்து அமைப்புகளையும் கேட்டுக் கொள்கிறது.

25. பெரியார் தம் இறுதிச் சொற்பொழிவிலே குறிப்பிட்டுக் கேட்டுக் கொண்டபடி, நம் நாடு தமிழ்நாடு என்கிற கொள்கை முடிவில், நம் மீதான சாதி இழிவுகளையும், அரசியல் அதிகா ரத்தையும் செய்து வரும் அனைத்து அந்நிய ஆதிக்கர்களை யும் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றிடும் வகையில் நம் நாடு தமிழ்நாடு என்கிற கொள்கை நோக்கோடு திட்டமிட்ட நீண்ட காலப் பணித்திட்டத்தை இக் கூட்டமைப்பு மேற் கொள்ள வேண்டுமென இம் மாநாடு பெரியாரிய உணர்வு கொண்ட அனைத்து இயக்கங்களையும் கேட்டுக் கொள்கிறது.

- விடுதலை நாளேடு, 24.12.18

"எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள கருஞ்சட்டையினர் ஒன்றாதல் கண்டே!"



பெரியார் சிலை மீது கை வைக்கலாம் என்று கருதிய ஆரிய சக்திகளே, ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களே - இங்கே பார் கருஞ்சட்டைக் கடலை - ஆர்த்தெழும் கடல் அலைகளாகப் - பொங்கி எழுந்த புயல் முகத்தைக் காட்டிய கருஞ்சட்டை பேரணியை - கருஞ்சட்டை மாநாட்டை என்று வரலாற்றுக் கல்வெட்டாய், காலத்தின் குரலாய் மண்ணையும், விண்ணையும் கிழித்து கிழக்குச் சூரியனாம் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக் கொட்டு முரசமாக கருஞ்சட்டை பேரணியாம் - தமிழின உரிமை மீட்பு மாநாடும் திருச்சியில் பயணித்தது.
கிட்டத்தட்ட 150 அமைப்புகள் இதில் இணைந்து பணியாற்றின. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்ட மைப்பு என்ற பெயரில் பேரணியும், மாநாடும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
நகரின் அனைத்துப் பகுதிகளிலும் ஏராளமான சுவரொட்டிகள் தந்தை பெரியாரின் உருவம் தாங்கி; திராவிடத் தமிழர்களே, தந்தை பெரியாரின் தத்துவச் செழிப்பு மாநாட்டுக்கும், பேரணிக்கும் வருக வருக என்று கட்டியம் கூறிடும் சுவர் எழுத்துகளுக்கும் பஞ்சமில்லை.
23.12.2018 ஞாயிறு பிற்பகல் 3.45 மணிக்கு திருச்சி ஜே.டி. திரையரங்கம் அருகில் பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தோழர்கள் என்னும் அலைகளாகப் போர்ப்பாட்டுப் பாடி அணிவகுத்து நின்றனர்.
கருஞ்சட்டைப் பேரணியை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களும், பெரியார் பெருந்தொண்டர் வே.ஆனைமுத்து அவர்களும் தொடங்கி வைத்தனர்.
பிரிவுகளுக்கு இடம் அளிக்காமல் ஒன்று திரண்டு - கருஞ்சட்டை அமைப்புகள் இணைந்து நின்று கைகோக்கும் தந்தை பெரியாரின் கொள்கைப் பேரணி இது! இது ஒரு தொடக்கமே தவிர முடிவல்ல. கட்டுப்பாடு காத்து அணிவகுத்துக் கொள்கை முழக்க மிடுவீர் என்று கேட்டுக் கொண்டார்.
திராவிடர் கழகம் உட்பட பல்வேறு அமைப்புகளும் தத்தம் இயக்கப் பதாகைகளைத் தாங்கி, இருபால் தோழர்களும் "பார் பெருத்ததால் படை சிறுத்ததோ - படை பெருத்ததால் பார் சிறுத்ததோ" என்று வியக்கும் வண்ணம் கோடையிடி முழக்கங்களிட்டுப் புறப்பட்ட கருஞ்சட்டைச் சேனை - பெரும்பாலும் வாலிபர்களின் அணிவகுப்பு என்றாலும் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர்களும்கூட, பெரியார் பிஞ்சுகளும் கூட ஓரளவு இந்தக் காணரும் கருஞ்சட்டைப் பேரணி - மாநாட்டில் திரண்டு வந்தனர்.
குமரி முதல் திருத்தணி வரை தொண்டர்கள் வாகனங்களிலும், பேருந்துகளிலும், இரயில்களிலும் வந்து குவிந்து கொண்டே இருந்தனர்.
எப்படிக் கட்டுப்படுத்தி இந்தக் கருங்கடலைக் கொண்டு சேர்ப்பது என்ற கவலை ஒருங்கிணைப்பா ளர்களுக்கு இருந்தது என்றாலும், அந்தக் கவலைக்கே இடமில்லாமல் 'இது தந்தை பெரியாரின் சேனை! கட்டுப்பாட்டுக்கும், கடமை உணர்வுக்கும் கட்டியம் கூறும் இலட்சியப் பாசறை' என்பதால் கரையை உடைக்காத கட்டுப்பாட்டுக் கடலாக அணிவகுத்துப் புறப்பட்டது. அச்சிட்டுக் கொடுக்கப்பட்ட முழக்கங்களை மட்டும் முழங்கி வந்தனர். திருச்சி நகரமே திரண்டு வந்தது போல சாலையின் இருமருங்கிலும் பொது மக்கள் திரண்டு நின்று பேரணியின் முழக்கங்களை உள்வாங்கி எதிரொலித்தனர்.
பிற்பகல் 3.45 மணிக்கு பேரணி புறப்பட்டது என்றாலும் 5.30 மணி வரை பேரணியின் கடைசிப் பகுதி வரை புறப்பட முடியாத அளவுக்கு அப்படியொரு நீண்ட படை வரிசை!
பேரணியில் ஏதாவது பிரச்சினை வராதா? கட்டுப் பாடு குலையாதா என்று கண்களில் விளக்கெண்ணெய்ப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கழுகுகளுக்குத் தீனி கிடைக்கவில்லை என்பது பேரணிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி!
பேரணியில் தத்தம் கொடிகளோடு முழக்கமிட்டு வந்த தோழர்களை சம்பந்தப்பட்ட அமைப்புகளின் பொறுப்பாளர்கள் தலைமையேற்று சிறப்பாக வழி நடத்தினர் என்பது சிறப்பானது. பேரணியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கழகக் கொடி தாங்கி கடைசி வரை நடந்தே வந்தார். பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்களும் நடந்தே வந்தனர்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், மே17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,  திராவிட விடுதலை கழகம் தலைவர் குளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் இரா.அதிய மான், தமிழ்புலிகள் கட்சிகள் நாகை திருவள்ளுவர், தமிழக மக்கள் முன்னணி பொழிலன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி குடந்தை அரசன், தமிழக மக்கள் புரட்சி கழகம் அரங்க.குணசேகரன் உள்ளிட்ட தலைவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
சிறுவர்கள் - வாலிபர்கள் - தமிழர்களின் வீரவிளை யாட்டுகளை நடத்திக் காட்டிக் கொண்டே வந்தனர். சிலம்பாட்டம், முத்திரை பொறித்த இருபால் தோழர்கள் பங்கேற்ற பறை முழக்கம் காதுகளைக் செவிடாக்கிற்று.


வீரவணக்கம் வீரவணக்கம்
தலைவர் தந்தை பெரியாருக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்.

வெல்லட்டும், வெல்லட்டும்
கருஞ்சட்டைப் பேரணி வெல்லட்டும்!

வேரறுப்போம் - வேரறுப்போம்
காவிப் பயங்கரவாதத்தை
வேரறுப்போம் - வேரறுப்போம்!

மீட்டெடுப்போம் - மீட்டெடுப்போம்
தமிழர் பண்பாட்டை மீட்டெடுப்போம்!

சாய்ப்போம் - சாய்ப்போம்
ஜாதியினை சாய்ப்போம்!
காப்போம் காப்போம்
பெண்ணுரிமை காப்போம்!
அனுமதியோம் - அனுமதியோம் ஜாதி ஆணவக் கொலைகளை அனுமதியோம்!

தமிழர் என்பது அடையாளம் ஜாதி, என்பது அவமானம்
ஜாதி பெருமை அவமானம்!
இடமில்லை இடமில்லை
மதவெறிக் காவிகளுக்கு
பெரியார் மண்ணில் இடமில்லை

மண்ணை அழிக்க மீத்தேனா,
மலையை அழிக்க நியூட்ரினோவா?
அனுமதியோம் அனுமதியோம்
தமிழா தமிழா ஒன்றுபடு
ஜாதி சழக்கை வென்றுவிடு.

எங்கள் ஆயுதம் பெரியாரே எங்கள் கேடயம் பெரியாரே!
பார்ப்பனியத்தை விரட்டியடிக்க
ஆதிக்க ஜாதியை ஒழித்துக்கட்ட
பெண்ணடிமை விலங்கொடிக்க
எங்கள் ஆயுதம் பெரியாரே! பெரியாரே!
உள்ளிட்ட முழக்கங்களை மண்ணும் விண்ணும் அதிர முழங்கி வந்தனர்.
பேரணியின் முதல் அணி உழவர் சந்தை வந்தடைய, அதற்குப் பிறகு ஒரு மணி 45 நிமிடம் கடந்துதான் கடைசி அணி உழவர் சந்தையை அடைய முடிந்தது என்றால் பேரணியின் நீட்சியை, எண்ணிக்கையினை, பலத்தை எளிதாக அறிந்து கொள்ளலாமே.
கே.டி. திரையரங்கம் அருகிலிருந்து புறப்பட்ட எழுச்சிமிகு கருஞ்சட்டை பேரணி கரூர் புறவழிச் சாலையிலிருந்து அணிவகுத்து சாலை ரோடு, மாரிஸ் ரோடு, சாஸ்திரி ரோடு ஆகிய நான்கு சாலைகளைக் கடந்து அண்ணா நகர் வழியாக உழவர் சந்தையில் சங்கமமாயிற்று.
முழுப் பேரணியையும் திராவிடர் கழகத் தலைவர் உட்பட முக்கிய பொறுப்பாளர்கள் மாநாட்டு திடலுக்கு சிறிது தூரத்திற்கு முன்பு உயரமான இடத்தில் நின்றபடி பார்த்தனர்.
பேரணியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திருமுருகன் காந்தி, பொழிலன், கோவை கு.இராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி, பேரா. சுப. வீரபாண்டியன், நாகை திருவள்ளுவன், அரங்க குணசேகரன், இரா.அதியமான், பொள்ளாச்சி உமாபதி, கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் தஞ்சை ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார்,  இளைஞரணி செயலாளர் இளந்திரையன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், தொழிலாளர் பேரவைத் தலைவர் மோகன், அமைப்புச் செயலாளர் மதுரை செல்வம், தென் மாவட்டப் பிரச்சாரக் குழுத் தலைவர் தே.எடிசன் ராஜா மற்றும் பல்வேறு மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் பங்கு ஏற்றனர்.
மாநாட்டு நிகழ்ச்சி



தொடர்ந்து உழவர் சந்தையில் தமிழின உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது.
முன்னதாக மகஇக கோவன் கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து  விடுதலை தமிழ்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் வர வேற்புரையாற்றினார்.  தமிழக மக்கள் முன்னணி தலை வர் பொழிலன் தலைமை தாங்கினார். தமிழ்புலிகள் கட்சி நாகை திருவள்ளுவன் தொடக்கவுரையாற்றினார். இலால்குடி முத்துசெழியன், அறிவரசன், க.திருநாவுக் கரசு, குறிச்சி.கபிலன், இரணியன், இரா.இளவழகன், அ.சி.சின்னப்பத்தமிழர், நா.கருணாகரன், கடவூர் ப.மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டின் நோக்க உரையை மே. 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விளக்கி உரையாற்றினார். தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,  சிறப்புரையாற்றினார்.
மார்க்சிய பெரியாரிய பொதுவுடமை கட்சி தலைவர் வே.ஆனைமுத்து, குளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் இரா.அதியமான்,  முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், டிச.3 இயக்கம் தீபக், புதிய குரல் ஓவியா, சமூகசெயற்பாட்டாளர் சரஸ்வதி, எழுத்தாளர் பாமரன், பேராசிரியர் அ.நீலகண்டன், காவிரி பாதுகாப்பு இயக்கம் முகிலன், திரைப்பட இயக்குநர் கோபி நயினார், தமிழ்நாடு திராவிடர் கழகம் க.சு.நாகராசன், ஆய்வறிஞர் முனைவர் க.நெடுஞ்செழியன்,  தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்குரைஞர் சங்க தலைவர் வழக்குரைஞர் பானுமதி, வழக்குரைஞர் கென்னடி,தமிழ்தேச மக்கள் முன்னணி மீ.த.பாண்டியன், சொல்லாய்வு அறிஞர் ப.அருளியார்     உள்ளிட்டோர் உரையாற்றினார். இம்மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தீர்மானங்களை முன்மொழிந்து தமிழக மக்கள் புரட்சி கழகம் அரங்க.குணசேகரன் பேசினார்.
ஜாதி மறுப்பு திருமணம்

இம்மாநாட்டில் மணமக்கள் செ.இனியன் - ஆ.சாரதா, சா.வசந்தி - சு.முத்துகுமார்,  பா.ஆனந்தராஜ் - க.பிரீத்தி ஆகிய மூன்று ஜாதி மறுப்பு திருமணங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் நடத்தி வைத்தார்.
கலந்து கொண்டோர்

இம்மாநாட்டில்   திரைப்பட இயக்குநர் கரு.பழனியப் பன், திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் கழக பிரச் சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, தி.க. பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் உரத்தநாடு குணசேகரன், மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னரெஸ் பெரியார், மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ் திராவிடர் கழகம், வழக்குரைஞர் கென்னடி,  உள்ளிட்ட 200 அமைப் புகளின் பொறுப்பாளர்கள், தோழர்கள், நிர்வாகிகள் இலட்சக்கணக்கில் கலந்து கொண்டனர்.  தமிழக மக்கள் ஜனநாயக கட்சி கே.எம்.செரீப், தந்தை பெரியார் திராவிடர் கழக பிரச்சார  செயலாளர் சினீ.விடுதலைஅரசு உள்ளிட்டோர் மாநாட்டை ஒருங்கிணைத்தனர்.
நிறைவாக தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் நிலவழகன் நன்றி கூறினார்.

திருச்சியில் நடைபெற்ற கருஞ்சட்டைப் பேரணி நிறைவு விழாவில், மணமக்கள் செ.இனியன் - ஆ.சாரதா, சா.வசந்தி - சு.முத்துகுமார்,  பா.ஆனந்தராஜ் - க.பிரீத்தி ஆகிய மூன்று ஜாதி மறுப்புத் திருமணங்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார். உடன் கோவை இராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி, திருமுருகன் காந்தி, மேனாள் நீதியரசர் அரிபரந்தாமன், அதியமான், கரு.பழனியப்பன், கோபி நயினார் மற்றும் பல்வேறு கட்சி, இயக்கத் தோழர்கள் உள்ளனர் (23.12.2018).
- விடுதலை நாளேடு, 24.12.18