ஞாயிறு, 26 ஜூன், 2016

தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்


தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
சென்னை, ஜூன் 23 19.06.16ம் நாள் ஞாயிற்றுக் கிழமை முற் பகல் 11.00 மணியளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத் தில் தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலை மையிலும் மண்டல செயலாளர் பன்னீர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, மாவட் டத் தலைவர் இரா.வில்வநா தன் மற்றும் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி ஆகியோர் முன் னிலையிலும் நடைபெற்றது.
வி.யாழ்ஒளி கடவுள் மறுப்பு கூறினார். விடுதலை நாளேட்டை பரப்புதல், கொள் கைப்பரப்பு தெருமுனைக் கூட்டங்களை நடத்துதல் குறித்து கலந்துரையாடப்பட்டது.
கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் கருத் துரை வழங்கினார். முன்னதாக தென் சென்னை மாவட்ட திரா விடர் கழக துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன், துணைச் செயலாளர் சா.தாமோதரன், வடபழனி அ.செல்வராசன், கோடம்பாக்கம் ச.மாரியப்பன், ச.மகேந்திரன், சூளைமேடு ந.இராமச்சந்திரன், ஈ.குமார், ச.துணைவேந்தன், ந.மணித் துரை, க.செந்தில் கலை மற் றும் தோழர்களின் கருத்துகளை கூறினர்.
பின் கீழ்கண்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
1.மாவட்டம் முழுக்க துண் டறிக்கை வழங்குதல், 2.தெரு முனைக் கூட்டம் நடத்துதல், 3.விடுதலை நாளேட்டை பரப் புதல், சந்தா சேர்த்தல் என முடிவு செய்யப்பட்டது.
இளைஞரணி துணைச் செயலாளர் இரா.பிரபாகரன், கு.செல்வேந்திரன், தரமணி கோ.மஞ்சநாதன், மு.பவானி, வி.வளர்மதி, வி.தங்கமணி, பி.அஜந்தா, கு.பா.தமிழினி, த.அண்ணாதுரை, மு.சீனிவா சன், டி.சங்கர், எஸ்.தீபக் சூர்யா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலின் முடி வில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் சி.செங்குட்டுவன் நன்றி கூறினார்.
-விடுதலை,23.6.17

புதன், 22 ஜூன், 2016

நேஷனல் ஸ்டார் பள்ளிக்கு தந்தை பெரியார் படம்

தென் சென்னை கழக மாவட்டம் சார்பில் நேஷனல் ஸ்டார் பள்ளிக்கு தந்தை பெரியார் படம் வழங்கப்பட்டது

19.6.2016ம் நாள்  ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் தென் சென்னை மாவட்ட கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையிலும் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் சா.தாமோதரன் ஆகியோர் முன்னிலையிலும் துணைத் தலைவர் சி.செங்குட்டுவன் அவர்கள் தந்தை பெரியார் படத்தை அரும்பாக்கத்தில் உள்ள நேஷ்னல் ஸ்டார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிக்காக அதன் தாளாளர் ஜி.பி.சாரதி அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தரமணி கோ.மஞ்சநாதன், கோடம்பாக்கம் ச.மாரியப்பன், சூளைமேடு ந.இராமச்சந்திரன், கு.பா.தமிழினி மற்றும் க.அண்ணா துரை ஆகியோர் கலந்துகொண்டனர்.
-விடுதலை,21.6.16

ஞாயிறு, 19 ஜூன், 2016

புத்தக கண்காட்சியில்-10.6.16

10.6.16 மாலை புத்தக கண்காட்சியில்(தீவுத் திடல்) திராவிடர் கழக அரங்கில் நூல்கள் வாங்க பார்வையிட்டார் தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி.மாறன் மகள் திருமண வரவேற்பு

திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொறுப்பாளர் சிந்தாதிரிப்பேட்டை மாறன் அவர்களின் இரண்டாவது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 12.6.16 மாலை நடைபெற்றது. தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,  துணைச் செயலாளர் சா.தாமோதரன், தரமணி,கோ.மஞ்சநாதன், அரும்பாக்கம் க.தமிழ்ச்செல்வன் மற்றும் வட சென்னை அன்புச் செல்வன் ஆகியோர் வாழ்த்து கூறினர்.

சனி, 18 ஜூன், 2016

தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்-19.6.2016 -


19.6.2016 ஞாயிற்றுக்கிழமை
வேப்பேரி: காலை 10.30 மணி
இடம்: பெரியார் திடல், வேப்பேரி
தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்)
பொருள்: “விடுதலை” நாளேடு 82ஆம் ஆண்டு நிறைவையொட்டி விடுதலையை பரப்புதல், தொடர் தெருமுனைக் கூட்டங்கள் மாவட்ட கிளைக்கழக வளர்ச்சி பணி குறித்து கலந்துரையாடல்
மாவட்ட கழகத் தோழர்களின் வருகையை விழையும்: இரா.வில்வநாதன் (மாவட்டத் தலைவர்), செ.,ர.பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்)

ஞாயிறு, 12 ஜூன், 2016

நுழைவுத் தேர்வை எதிர்த்து திராவிட மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்

“மத்திய அரசே அவசர சட்டம் கொண்டு வா, கொண்டு வா!”

நுழைவுத் தேர்வை எதிர்த்து கொளுத்தும் வெயிலில்
சென்னையில் திராவிட மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்

நீதித்துறையிலும் இடஒதுக்கீடு வந்தால்தான் சமூகநீதிக்குப் பாதுகாப்பு கிடைக்கும் - தோழர்கள் முழக்கம்
சென்னை, மே7_ மருத்துவக் கல்லூரியில் சேருவ தற்கு நுழைவுத் தேர்வு கொண்டு வருவதை எதிர்த்து திராவிடர் மாணவர் கழகம் சார்பில் - கொளுத்தும் வெயிலில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. நீதித்துறையிலும் இடஒதுக்கீடு வந்தால் சமூகநீதிக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்று தோழர்கள் வலியுறுத்தினர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (7.5.2016) காலை 11 மணியளவில் மருத்துவக் கல்லூரி பொது நுழைவுத் தேர்வை திணிப்பதைக் கண்டித்தும், பொதுநுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் மாணவர் கழகம் மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை வகித்தார். திராவிடர் மாணவர் கழக சென்னை மண்டல செய லாளர் பா.மணியம்மை வரவேற்றார்.

திராவிடர் மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் நா.பார்த்திபன், சென்னை மண்டல, மாவட்டங்களின் இளைஞரணி, மாணவரணி பொறுப்பாளர்கள் ச.மகேந்திரன், சு.அன்புச்செல்வன், பா.தளபதி பாண்டியன், மங்களபுரம் பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி தொடக்கவுரை ஆற்றினார்.

கண்டன உரையாற்றியோர்

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை  பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, புதிய குரல் எழுத்தாளர் ஓவியா, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்க நிர்வாகி நா.வீரபெருமாள், அகில இந்திய டாக்டர் அம்பேத்கர் மாணவர் சங்க பொறுப்பாளர் சாக்கிய சக்தி, கிராமப்புற மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் அமுதரசன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார்கள்.

துணைத் தலைவர் உரை

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரையில் குறிப்பிடும்போது,

தந்தை பெரியார் அவர்கள் கூறும்போது, வருங்காலத்தில் ஆட்சி அதிகாரம் என்பது தாழ்த்ப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் கையில் வரும். அந்த நேரத்தில் ஆட்சி நிர்வாகத்துக்கு மேலாக  நீதி மன்றம் என்பது பார்ப்பனீய அமைப்பாக இருந்து கொண்டு அரசுகள் கொண்டுவரும் சட்டங்களை முடக்கும் என்று சொல்வார். அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு பிரச்சினையில் வழக்கு நீதிமன்றத்தில் இருந்தால், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில்கூட கூறிவிடுவார்கள். ஆனால், நீதிமன்றத்தில் பிரச்சினை இருக்கும்போது, நுழைவுத் தேர்வு நடத்த நீதிபதிகள் தீர்ப்பு அளிப்பது எப்படி?

சமூக நீதிக்கான நம்முடைய போராட்டம் அடுத்த கட்டமாக நீதிமன்றங்களிலும் இடஒதுக்கீடு தேவை என்பதை வலியுறுத்தும் போராட்டமாக இருக்கும்.  அரசமைப்பு சட்டம் முதல்முறையாகத் திருத்தப் பட்டதும்  நம்முடைய போராட்டத்தால்தான்.

முதல்வராக இருந்தபோது குஜராத்தில் மோடி நுழைவுத் தேர்வு குறித்து கூறும்போது, நுழைவுத் தேர்வு என்பது மாநில அரசின்மீது திணிப்பதாகும் என்றார். கூட்டாட்சித் தத்துவத்துக்கு விரோதமானது என்றார். அவர் முதல்வராக இருந்தபோது ஒரு பேச்சு. அவரே இப்போது பிரதமராக இருக்கும்போது செயல்படுவது வேறாக இருக்கிறது. நேற்று தமிழ்நாட்டுக்கு வந்த மோடி  நுழைவுத் தேர்வு பிரச்சினைகுறித்து,   அறிவு நாணயத்துடன் பேசியிருக்க வேண்டாமா? நுழைவுத் தேர்வு ஒழிக்கப்படும்வரை போராட்டம் ஓயாது.
_இவ்வாறு துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி

முன்னதாக ஆர்ப்பாட்ட தொடக்க உரையில் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி பேசும்போது,
இந்த நாட்டில் பல்வேறு கல்வி முறைகள் உள்ளன. பல்வேறு தாய்மொழிகளைக் கொண்டுள்ள மாணவர்களிடையே இந்தி மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் மட்டும் ஒரே மாதிரியான  நுழைவுத் தேர்வு நடத்துவதில் என்ன அடிப்படை உள்ளது? ஏன் இந்த அவசரம்?

2006ஆம் ஆண்டில் திமுக தலைவர் கலைஞர் தமிழகத்தில் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று சட்டம் கொண்டுவந்தார். கலைஞர் கொண்டு வந்த சட்டத்தின்மூலமாக தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லாமல் 1200 பேர் பொதுப்பட்டியலில் தேர்வானார்கள். அவர்களில் 430பேர் தாழ்த்தப்பட்ட மாணவர்கள், தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் 85 பேர் பொதுப்பட்டியலில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தார்கள். இப்படி தமிழ்நாட்டில் அருமையாக இருந்தமுறையை ஒழித்துக்கட்ட மோடி அரசு நினைக்கிறது. 2013ஆம் ஆண்டு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

ஒரே மாதிரியான தேர்வு சாத்தியமில்லை என்று    - அப்பொழுது தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார். தகுதி வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நகர்ப்புறங்களில் இருந்து மட்டுமே மாணவர்கள் மருத்துவர்களாக தேர்வானால், கிராமப்புறங்களில் சேவையாற்ற முன்வரமாட்டார்கள். மக்களுக்கு சேவை ஆற்றும் மருத்துவர்கள் வேண்டும் என்றால், கிராமப்புற மாணவர்கள் வரவேண்டும் என்று நீதிபதி 2013இல் குறிப்பிட்டிருந்தார். இப்பொழுது நடைபெறும் வழக்கில் செய்யலாம் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் மே முதல் நாள் அன்றே தேர்வு நடத்த உத்தரவிட்டது ஏன்?

மூன்று நீதிபதிகளுக்கு மேலாக 5 நீதிபதிகள் உத்தரவு உண்டு என்றாலும், தீர்ப்பை மே 9ஆம் தேதி அளிப்பதாகக்கூறி, மே ஒன்றாம் தேதி தேர்வு நடத்த வேண்டிய அவசியம் என்ன?

இந்தி, ஆங்கிலம் இரண்டு மொழிகளில் மட்டும், அதுவும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின்படி  நடத்த வேண்டிய அவசியம் என்ன? இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். இதில் ஆழமான சதி உள்ளது.

தமிழ்நாட்டைப்போன்றே வட கிழக்கு மாநிலத்தில் நுழைவுத் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்திலேயே நுழைவுத்தேர்வுகுறித்து பிரச்சினை எழுப்பியுள்ளார். அசாம் மாநிலத்தில் மருத்துவர்கள் குறைவாக இருக்கிறார்கள். இந்நிலையில் நுழைவுத்தேர்வின்மூலமாக வேறு மாநிலத்தவர் படித்துவிட்டு சென்று விடுவார்கள். அசாம் மாநிலத்தில் மாணவர்களுக்கு மருத்துவர் வாய்ப்பு கிட்டாது. மேலும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு நுழைவுத்தேர்வு எதிரானது என்று கூறியுள்ளார்.
தென் இந்தியாவில் திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எச்சரிக்கையால்தான், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மட்டும் கலந்தாய்வு என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தியா முழுவதும் நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்திட அனைவரும் முன்வரவேண்டும்
_இவ்வாறு கோ.கருணாநிதி தொடக்க உரையில் குறிப்பிட்டார்.
பிரின்சு கஜேந்திரபாபு உரை

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை  பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசும்போது குறிப்பிட்டதாவது:

இந்திய உச்சநீதிமன்றம் இதுவரை செய்திராத கொடும் தவறை செய்திருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும். ஆளுகின்ற பாஜகவின் வழக்குரைஞர்  நீதிமன்றத்துக்கு சென்று, இந்திய மருத்துவக்கவுன்சில், இந்திய அரசு இந்த நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று தயாராக இருக்கின்றது என்று கூறுகிறார். அப்போதுதான் இதில் உச்சநீதிமன்றம் தானாக தீர்க்க கூடியதா? மோடியின் தலைமையில் இருக்கக்கூடிய பாஜகவின் மத்திய அரசாங்கத்தின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டும் என்று தீர்ப்பு கொடுக்கிறது. அதைத்தான் நாம் உணரவேண்டும். கல்வித்திட்டம், பாடத்திட்டம் என்று வந்தால், நிபுணர் குழு அமைத்து கருத்து கேட்காமல், மத்திய அரசின் வழக்குரைஞர் கருத்தைக் கேட்டுக்கொண்டு, நீதிபதி தீர்ப்பு வெளியாகிறது. சென்னை அய்.அய்.டி 50 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. அங்கே 800 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால், தமிழர்கள்தான் என்றில்லாவிட்டாலும், தமிழ்நாட்டிலிருந்து வெறும் 10 விழுக்காட்டினர் மட்டுமே படிக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் யார் என்றால் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதற்கு காரணம் அகில இந்திய அடிப்படையில் சிபிஎஸ்இ அடிப்படையிலான நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. காரணம். கோவையில்  தனியார் கல்லூரிக்கு 80 இலட்சம் கேட்டபோது, அரசு சார்பில் கல்லூரி அமைத்தால்தான் ஏழை மாணவர்கள் படிக்க முடியும் என்று மருத்துவக் கல்லூரியைத் திறந்தார் காமராசர்.

தஞ்சையிலே தொடங்கி, தருமபுரி, கன்னியாதகுமரியில் இருந்த மருத்துவக்கல்லூரி,  சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை பொது மருத்துவக் கல்லூரி இவையெல்லாம் தமிழ்நாட்டில் தமிழர்கள் படிப்பதற்காக உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள்.  காமராசரை உயிரோடு இருந்த போது கொளுத்தி கொல்ல முயன்று, இப்போது காமராசர் கொள்கைக்கு சமாதி கட்ட பாஜக முயற்சிக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் நவோதயா பள்ளி கட்டமைப்பையும், ஆதிதிராவிடர் நலப்பள்ளியின் கட்டமைப்பையும் பார்க்க வேண்டாமா? இரண்டும் ஒரே கட்டமைப்பு கொண்டுள்ளதா? அப்படி இல்லாதபோது சம வாய்ப்பு கொடுக்காமல் போட்டி போடச் செய்கிறது மோடி அரசு, உச்சநீதிமன்றம் துணைபோகின்றது.
_இவ்வாறு பிரின்சு கஜேந்திரபாபு பேசினார்.
புதிய குரல் எழுத்தாளர் ஓவியா உரை

இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கும் ஒற்றைச்சாளர முறையில் என்று நுழைவுத் தேர்வு என்கிற சதித்திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்படுகிறது. நம்முடைய எதிர்ப்பால் இந்த ஆண்டு கிடையாது என்கிறார்கள். மாணவர்களிடையே தேர்வு முறையிலேயே மாற்றம் வரவேண்டும் என்கிற இந்த காலத்தில், 12ஆம் வகுப்புரை படித்தது மட்டுமல்லாமல் நுழைவுத் தேர்வும் கொண்டு வந்து சித்திரவதைக் கூடமாக ஆக்க வேண்டுமா? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே கலாச்சாரமா? ஒரே உடையா? பழக்கங்கள் ஒரே மாதியாக உண்டா? பலதரப்பட்ட மக்களுக்கு ஒரே நுழைவுத் தேர்வு ஏன்?

நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்  தமிழ்நாடு, கேரளா இந்தியாவுடன் இல்லாமல் இருந்தால் மிகப்பெரிய வளர்ச்சி பெற்ற நாடுகளாக இருந்திருக்கும் என்றார்.

கலப்பு பொருளாதாரம்குறித்து தந்தை பெரியார்  மட்டும்தான் சொன்னார்கள். அவர் கூறும்போது,  கலப்பு பொருளதாரம் என்று சொல்வது எதற்கு என்றால், இன்னும் போதிய அளவுக்கு இவர்கள் ரயில்வே நடத்தும் அளவுக்கு, போஸ்டல் நறடத்தும் அளவுக்கு வளரவில்லை. தனியாரிடம் விட்டுவிடுவார்கள் என்றார். இன்று அது நடக்கிறதா இல்லையா? அதேமாதிரிதான் இன்று நம்முடைய மக்கள் பகுத்தறிவு பெற்று, வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் இவர்கள் சொல்கின்ற எந்த தகுதி திறமை என்று எதுவும் மற்றவர்களிடம் கிடையாது.  இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ள திராவிடர் கழகத்துக்கு நன்றி.
_இவ்வாறு எழுத்தாளர் ஓவியா பேசியபோது குறிப்பிட்டார்.
பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்

ஆர்ப்பாட்ட கண்டன உரையாற்றிய கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பேசும்போது குறிப்பிட்டதாவது:

இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பம்தான். அண்மையில் வந்துள்ள  டைம்ஸ் ஆப் இந்தியாவில்   அய்.அய்.டி.யில் சேரும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கான பயிற்சிக்கு 45 நாள்களுக்கு ரூபாய் 22ஆயிரத்து 500 என்று  கூறுகிறது. அதாவது ஒரு மணி நேரத்துக்கு ரூபாய் 1,500 என்று நிர்ணயித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. நினைத்துப்பாருங்கள் இதில் கிராமப்புறத்தில் இருப்பவர்கள் பயன்பெற முடியுமா?  இது யாருக்காக செய்யப்படுகின்ற சூழ்ச்சி? சாதாரண மாணவர்கள் இதில் நுழைய முடியுமா?  நுழைவுத் தேர்வு கொண்டுவருகின்ற மோடியரசின் சூழ்ச்சியை முறியடிப்போம். இவ்வாறு  பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பேசினார்.
ஆர்ப்பாட்ட முடிவில் சென்னை மண்டல திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவசாமி நன்றி கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, சென்னை மண்டல தலைவர் தி.இரா.இரத்தினசாமி, சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் செ.உதயகுமார், வட சென்னை  மாவட்ட செயலாளர் தே.ஒளிவண்ணன், தென் சென்னை  மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கும்மிடிப்பூண்டி மாவட்ட செயலாளர் புழல் த.ஆனந்தன், மாநில திராவிடர் கழக இளைஞரணி துணைச் செயலாளர் பொழிசை கண்ணன், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் கெ.விஜயகுமார்

தென் சென்னை: இரா.பிரபாகரன், கோ.மஞ்சநாதன், டி.ஆர்.சேதுராமன், சா.தாமோதரன், மயிலை பாலு, க.வெற்றிவீரன், ச.மகேந்திரன், சி.செங்குட்டுவன், கு.சோம சுந்தரம், வீ.வளர்மதி, பி.அஜந்தா, மு.பவானி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, வி.நிலா, மு.ஈழமுகிலன், கு.செல்வேந்திரன், க.எழில், அ.அருண், மு.சண்முகப்பிரியன், ந.மணித்துரை, ச.அருண், ச.மாரியப்பன்.
பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள்: சென் னையில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி கல்வி பயிலும் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் சக்திவேல், வெங்கடேசன், சின்னராஜா, சென்னை பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள் ஆறுமுகம், வேந்தன், ராணிமேரி கல்லூரி ஆராய்ச்சி மாணவி கண்மணி, கிருத்துவ கல்லூரி மாணவி பிரியா ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

வட சென்னை: தே. ஒளிவண்ணன், த. மரகதமணி, பசும்பொன் செந்தில்குமாரி, சீர்த்தி, கலைமதி,  பெரியார் திடல் சுரேஷ், சா.தாமோதரன், தங்க.தனலட்சுமி, பாஸ்கர் மங்களபுரம், நதியா, பா.பார்த்திபன்,

வ.கலைச்செல்வன், சிவராமன், க.பார்வதி, பா.வெற்றிச் செல்வி, ஜெ.கோபி, இரா.சரவணன், இராஜேந்திரன், பெரியார் பிஞ்சு ஆ.கிஷோர், மோ.யாழினி, தளபதி பாண்டியன், பெ.செல்வராசு, பெரு. இளங்கோ, கா.எழில் (அமைந்தகரை), புரூனோ, தமிழ்மணி.

தாம்பரம்: மா.ராசு, சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், கடப்பேரி சோமசுந்தரம், மேடவாக்கம் விஜயஆனந்த், ஆர்.டி.வீரபத்திரன், தே.சுரேஷ், தாம்பரம் மு.மணிமாறன், அர்ச்சுனன்,
கே.எம்.சிகாமணி, ராமாபுரம் ஜனார்த்தனன், ராஜன், நடராஜன், நாகரத்தினம், விஜயகுமார், கீழ்க்கட்டளை த.பாண்டியன்

கும்மிடிப்பூண்டி:  விசயகுமார், சு. நாகராஜ், க.ச.க. இரணியன், ராஜ்குமார், மு. சுதாகர், க. சுதன், பழனி. சோ. பாலு, ஏ. முரளி, புழல் ஏழுமலை, வ. இரவி, கோ. முருகன், ந. கசேந்திரன், காந்திநகர் இராசேந்திரன், வி. கனிமொழி, இரா. சோமு.

ஆவடி: உ. கார்த்திக், அருண், கி. ஏழுமலை, மோகன ப்ரியா, க. கலைமணி, கனகசபை, பெரியார் மாணாக்கன், தொண்டறம், செல்வி, நந்தகோபால், வெ. கார்வேந்தன், உடுமலை வடிவேல், கொரட்டூர் கோபால், வை.கலையரசன்.

திருவள்ளூர்: டில்லிபாபு, ஸ்டாலின்.

வேலூர்: வேலூர் மண்டல தலைவர் வி. சடகோபன், மகளிரணி பொறுப்பாளர்; ஈஸ்வரி, போளூர் பன்னீர் செல்வம்.

செங்கல்பட்டு: பூ. சுந்தரம், செல்வமணி.

வேழவேந்தன், அம்பேத், ஆறுமுகம், வெங்கடேசன், கண்மணி, சின்னராஜா, பிரியா உள்ளிட்ட தோழர்கள்.

தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்க மாவட்ட செயலாளர் ஜமாலுதீன், சீனிவாசன், கிராமப்புற மாணவர்கள் சங்கம் அருள், புதிய குரல் முனைவர் பரிமளா, இதயச் சிற்பி, அகில இந்திய டாக்டர் அம்பேத்கர் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்ட ஒலி முழக்கங்கள்

போராட்டம் போராட்டம்
சமூகநீதிப் போராட்டம்
போராட்டம் போராட்டம்
மருத்துவக் கல்விக்கு
நுழைவுத் தேர்வா
நுழைவுத் தேர்வா?
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
நுழைவுத் தேர்வை
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
நுழைவுத் தேர்வா
நுழைவுத் தேர்வா?
உயர் ஜாதிக் கூட்டம்
உள்ளே நுழைய
தந்திரத் திட்டமா
தந்திரத் திட்டமா?
)    நுழைவுத் தேர்வா நுழைவுத் தேர்வா?
கிராமப்புற மக்களை
கிராமப்புற மக்களை
உள்ளே நுழையவிடாமல்
உள்ளே நுழையவிடாமல்
தடுத்திடும்
சூழ்ச்சித் திட்டமா சூழ்ச்சித் திட்டமா?
பொதுப்பட்டியலிலிருந்து
கல்வியை கல்வியை
மாநிலப் பட்டியலுக்கு
கொண்டுவா, கொண்டுவா!
மத்திய அரசே மத்திய அரசே!
பறிக்காதே, பறிக்காதே!
மாநில உரிமையை
பறிக்காதே, பறிக்காதே!
திணிப்பா திணிப்பா?
நுழைவுத் தேர்வு
திணிப்பா - திணிப்பா
பறிப்பா - பறிப்பா?
இட ஒதுக்கீடு
பறிப்பா - பறிப்பா?
தேவை தேவை     அவசர சட்டம்
தேவை தேவை
நுழைவுத் தேர்வை நீக்கி
அவசர சட்டம்
தேவை தேவை
மத்திய அரசே மத்திய அரசே!
கொண்டுவா, கொண்டு வா!
அவசர சட்டம்
கொண்டுவா, கொண்டு வா!
போராட்டம் போராட்டம்
சமூகநீதி சமூகநீதி
போராட்டம், போராட்டம்!
அனுமதியோம், அனுமதியோம்
நுழைவுத் தேர்வை,
அனுமதியோம், அனுமதியோம்
போராடுவோம் போராடுவோம்
வெற்றி கிட்டும் வரை
போராடுவோம் போராடுவோம்
உயரட்டும் உயரட்டும்!
கோரிக்கை நிறைவேற
கோடிக்கைகள்
உயரட்டும் - உயரட்டும்!
வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
மாணவர் போராட்டம்
வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
ஒடுக்கப்பட்டோர்
போராட்டம்
வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
கிராம மக்கள்
போராட்டம்
வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
பணி முடிப்போம், பணி முடிப்போம்
தமிழர் தலைவர் வீரமணி
தலைமையிலே
பணி முடிப்போம், பணி முடிப்போம்
தந்தை பெரியார்
பணி முடிப்போம், பணி முடிப்போம்
ஒன்றிடுவோம், ஒன்றிடுவோம்
வென்றிடுவோம், வென்றிடுவோம்!
வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க, வெல்க வெல்கவே!
சமூகநீதி சமூகநீதி
வெல்க வெல்கவே!
- திராவிடர் மாணவர் கழகம்
-விடுதலை,7.5.16

சனி, 11 ஜூன், 2016

தலைநகரில் தமிழர்தலைவரின் தேர்தல் பரப்புரைசைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர்  மா. சுப்பிரமணியன் அவர்களை ஆதரித்து  திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்: உடன்: எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்,  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், மாவட்ட தலைவர் வில்வநாதன்,  பெரியார் பெருந் தொண்டர் எம்.பி. பாலு, சைதை மகேஷ்வரன், கிருஷ்ணமூர்த்தி, சைதை அன்பு மற்றும் திராவிடர் கழக, தி.மு.க. பொறுப்பாளர்கள் உள்ளனர். (3.5.2016)


வட சென்னையில் துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சேகர்பாபு அவர்களை ஆதரித்தும், தென் சென்னையில் சைதாப்பேட்டைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் மா. சுப்பிரமணியன் அவர்களை ஆதரித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேற்று (3.5.2016) மாலை தேர்தல் பரப்புரை செய்தார்.

இரு நிகழ்ச்சிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். பெண்கள் கூட்டத்தைக் கண்ட கழகத் தலைவர், பெண்கள் பெரும் அளவில் கூடியுள்ளதால் தி.மு.க.வின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றே என்று எடுத்த எடுப்பிலேயே சொன்னபோது, பெருத்த ஆரவாரம் தொடக்கத்திலேயே களை கட்டி விட்டது.

சென்னையில் இந்தப் பிரச்சாரம் என்பதால் சென்னை தொடர்பான பிரச்சினைகளை முக்கியமாகக் கையில் எடுத்துக் கொண்டார்.

1. சென்னை துறைமுகம் -
மதுரவாயல் பறக்கும் பாலம் திட்டம்

சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் பாலம் திட்டம் மத்திய அரசின் உதவியோடு தி.மு.க. ஆட்சியில் தீட்டப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் நேரில் வந்து தொடங்கி வைக்கப்பட்ட  திட்டம் (8.1.2009).

மத்திய அரசு இதற்காக ரூ.1885 கோடி நிதியையும் ஒதுக்கியது. 900 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு மூன்றில் ஒரு பகுதி பணிகள் முடிந்து விட்ட நிலையில், ஆங்காங்கே தூண்களும் நிறுவப்பட்ட கால கட்டத்தில், இந்தப் பாலம் கட்டப்பட்டால் திமுக ஆட்சிக்கு அந்தப் பெருமை போய்ச் சேர்ந்து விடும் என்ற ஒரே காரணத்தால் திட்டத்தையே முடக்கி விட்டது - செல்வி ஜெயலலிதா தலைமையிலான மாநில அரசு. பணியை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்பட்ட காரணமாக ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனம் 900 கோடி ரூபாய் நட்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று வழக்குக் கூடத் தொடுத்து விட்டது. இந்த நட்ட ஈடு யார் தலையில் விடியப் போகிறது என்பது முக்கியமான கேள்வியாகும்.

இந்தத் திட்டத்தின் சிறப்புக் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்குரைஞர் வில்சன் எடுத்து வைத்த விவரங்கள் மிக முக்கியமானவை.

“மதுரவாயல் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்துக்கு, தமிழக அரசு விதித்த தடை தொடர்ந்து நீடித்தால், திட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெறும். மத்திய அரசு திட்டத்தைக் கை விட்டால் தமிழகத்துக்கு இழப்பு ஏற்படும். சென்னை துறைமுகத்துக்கு வரும் சரக்குகளில் 80 சதவிகிதம் சாலை மார்க்கமாகத்தான் வருகின்றன.

மெட்ரோ ரெயில் திட்டம் நடப்பதால், இப்போது சென்னை துறைமுகத்துக்கு சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில்கூட வருவதில் சிக்கல் உள்ளது. தென் பகுதி வழியாக இரவில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. துறைமுகத்துக்கு வரும் சுமார் 70 சதவிகித சரக்குகள் தென் பகுதியிலிருந்து வருகின்றன. இந்தச் சாலை அமைக்கப்பட்டால், துறைமுகம் மேலும் வளர்ச்சி அடையும். இந்தச் சாலையை நம்பி திருப்பெரும்புதூரில் ரூ.3000 கோடி செலவில் கண்டெய்னர் டெர்மினல் அமைக்க 121 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நிலங்களின் உரிமையாளர்களுக்கு இழப்பீடாக 235 கோடி ரூபாய் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னை - பெங்களூரு சாலையில் உள்ள மப்பேட்டில் உலர் துறைமுகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலைப் பணிகளைத் தொடருமாறு உத்தரவிட வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம், கடல், ஆறுகள், ஏரிகள் மீது பல்வேறு இடங்களில் பாலம் அமைத்து சாலைகள் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கூவம் ஆற்றில் மட்டும் பாலம் கட்டி ஏன் சாலை அமைக்கக் கூடாது? இந்தத் திட்டத்தில் 1800 கோடி ரூபாய்ச் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 900 கோடி ரூபாய் வரை இதுவரை செலவிடப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலை திட்டம் பொது மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. தனி நபரின் நலனுக்காக அல்ல. எனவே இந்தத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த உத்தரவிட வேண்டும். தற்போது சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் செல்ல ஒன்றரை மணி நேரம் ஆகிறது. இந்தத் திட்டம் வந்த பிறகு துறைமுகத்தில் இருந்து பறக்கும் சாலை வழியாக 25 நிமிடத்தில் மதுரவாயல் சென்று விடலாம்“ என்றெல்லாம் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

இவ்வளவு முக்கியமான தமிழ்நாட்டு வளர்ச்சியில் சிறப்பான பங்கு வகிக்கும் ஒரு திட்டத்தை ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக அரசு முடக்கியிருப்பது - நாட்டு வளர்ச்சியை விட - கலைஞர் மீதான வன்மம், காழ்ப்புணர்வுதான் தலைதூக்கி நிற்கிறது என்பதைத் திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் கூறியபோது கட்சிக்கு அப்பாற்பட்ட பொது மக்களைக்கூட சிந்திக்க வைத்தது.

இந்தத் திட்டத்தை முடக்கியதால் ஆந்திர மாநில முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு மிகவும்  சாமர்த்தியமாக புதிய துறைமுகம் ஒன்றை உருவாக்குவதையும் தமிழர் தலைவர் சுட்டிக் காட்டினார்.

2. அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம்

அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டையொட்டி சென்னை கோட்டூர்புரத்தில் ரூ.172 கோடி செலவில் கலைஞர் தலைமையிலான திமுக அரசால் ஒன்பது தளங்களைக் கொண்ட நூலகம் உருவாக்கப்பட்டது. சிங்கப்பூரில் பெருமையாகப் பேசப்படும் நூலகத்தை ஒத்தது அது. ஒரே நேரத்தில் 5000 பேர் அமர்ந்து படிக்கலாம். ஏழை - எளிய வீட்டில் பாடங்களைப் படிக்க முடியாத நிலையில் உள்ள பிள்ளைகள்கூட தங்கள் நூல்களை எடுத்து வந்து இந்நூலகத்தில் அமர்ந்து படிக்க வசதி செய்யப்பட்டது.  தாயுள்ளத்தோடு இத்தகு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 12 லட்சம் நூல்கள் வரை இடம் பெற முடியும். குழந்தைகள் படிக்கவும், கண் பார்வையற்றோர் படிக்கவும் தனி ஏற்பாடுகள் உண்டு. தலைநகரம் மட்டுமல்ல; தமிழ்நாடே பெருமைப்படும் நூலகம் இது.
அண்ணா பெயரில் கட்சி - ஆட்சியை வைத்துள்ள அண்ணா திமுக ஆட்சி என்ன செய்தது? அதிகாரத்துக்கு வந்ததும் வராததுமாக அந்த நூலகத்தைக் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக மாற்றிட முடிவெடுத்தது. நீதிமன்றம் தலையில் குட்டித் தடுத்தது. மருத்துவமனை கட்ட வேறு இடம் கிடைக்கவில்லையா என்று நாக்கைப் பிடுங்கக் கேட்டது நீதிமன்றம்.

தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட சட்டமன்றமும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மருத்துவமனையாக மாற்றப் பட்டு விட்டது.

இதனைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆசிரியர் அவர்கள் அழகாகப் படம் பிடித்துக் காட்டி நடுநிலையாளர் களை நல்ல முறையில் சிந்திக்க வைத்தார்.

3) தொல் காப்பியப் பூங்கா
சென்னை - அடையாறு பகுதியில் தி.மு.க. ஆட்சியில் மேயராக மா. சுப்பிரமணியன் அவர்கள் இருந்த போது உருவாக்கப்பட்டது. தொல் காப்பியப் பூங்கா என்றும் பெயர் சூட்டப்பட்டது. திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது என்பதற்காக அதனைக் கடைசி வரை பொது மக்களுக்குப் பயன்படாதவாறு பார்த்துக் கொண்டனர்.  358 ஏக்கரில் ரூபாய் நூறு கோடி செலவில் நிர்மானிக்கப்பட்டது. முதல் அமைச்சர் கலைஞர் திறந்து வைத்தார். பாதிக்கு மேற்பட்ட பகுதிகள் நீர் நிலையால் சூழப்பட்டதால் வெளிநாட்டுப் பறவைகள் சிறகடித்துப் பறந்து வர வாய்ப்புண்டு - சுற்றுலா மய்யமாகவும், நடை பயில்வோர்க்கு நந்தவனமாகவும் காட்சி அளித்தது. மனம் பொறுக்குமா மதோன்மத்தர்களுக்கு? தொல்காப்பியப் பூங்கா என்ற பெயரையும் நீக்கி அடையாறு பூங்கா என்று புதுப் பெயர் சூட்டியது அதிமுக அரசு. தொல்காப்பியர் என்ன திமுககாரரா? என்று தமிழர் தலைவர் வினா எழுப்பியபோது வெட்கத்தால் மக்கள் தலை குனியும் நிலைதான்.

4) மக்கள் நலப் பணியாளர்கள்

“மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரம்பேர் திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டனர் என்பதற்காக பணி நீக்கம் செய்தது அ.இ.அ.தி.மு.க. அரசு. அதன் காரணமாக 13 ஆயிரம் குடும்பங்கள் வீதியில் நிறுத்தப்பட்டன.

இதில் யாருக்குத் தாயுள்ளம் இருக்கிறது? பணி நியமனம் செய்த கலைஞருக்கா? அவர்களை ஒரே வரியில் வேலையிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பிய ஜெயலலிதாவுக்கா?” என்ற வினாவையும் எழுப்பினார் விடுதலை ஆசிரியர் வீரமணி அவர்கள்.

(5) சமச்சீர்க்கல்வி

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக சமச்சீர் கல்வியை செயல்படுத்தாமல் நூறு நாட்கள் இழுத்தடித்து, பிள்ளைகளின் படிப்பைப் பாழ்படுத்தியதும் அஇஅதிமுக அரசே! நீதிமன்றம் தலையில் அடித்துச் சொன்னதற்குப் பிறகுதானே வழிக்கு வந்தது ஜெயலலிதா தலைமையிலான அரசு? கலைஞர் மீதுள்ள ஆத்திரத்தால் திருவள்ளுவர் படத்தைக்கூட புத்தகத்திலிருந்து நீக்க வில்லையா? ஆத்திரம் அறிவை மழுங்கச் செய்கிறது. இதனையும் மக்கள் மத்தியில் வைத்தார் கழகத் தலைவர்.

(6) மதுவிலக்கு


இந்தத் தேர்தலில் மதுவிலக்கு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டிய திராவிடர் கழகத் தலைவர், திமுக ஆட்சிக்கு வரும் நிலையில் முதல் கையொப்பம் மதுவிலக்கு என்று கலைஞர் அவர்கள் கூறி இருப்பதைச் சுட்டிக் காட்டினார். கலைஞர் அவர்கள் ஒன்றைச் சொன்னால், அதனை நிறைவேற்றுவதிலும் நாணயம் தவறாதவர் என்பதால் கலைஞர் அவர்கள் கூற்றுக்கு முக்கியத்துவம் உண்டு என்றார்.

அதே நேரத்தில் அ.இ.அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? இந்தப் பிரச்சினை மக்கள் மத்தியில் பேருரு எடுத்து விட்டது என்ற நிலையில்  வேறு வழியின்றி படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டு வருவோம் என்று முதல் அமைச்சர் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.

மதுவிலக்கு என்பது அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கை முடிவாக இருக்குமேயானால் அதனை சட்ட மன்றத்தில் தானே அறிவித்திருக்க வேண்டும்? அதை ஏன் செய்ய வில்லை?

மதுவிலக்குத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் மதுவிலக்கை செயல்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக சட்டப் பேரவையில் அறிவித்தாரா இல்லையா? இப்பொழுது முதல் அமைச்சர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சொல்லுவது தேர்தல் யுத்தியே தவிர - கொள்கை முடிவல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் சொன்னது தான் தர்க்க ரீதியாக சரியானதாகும்.

தி.மு.க.வைப் பொறுத்தவரையில் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்குக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான இடம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல் படுத்த சட்டம் இயற்றப்படும். மதுவிலக்கை அமல்படுத்தும் நடைமுறையை மேற் கொள்வதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய உரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு மாநில விற்பனைக் கழகம் (TASMAC) கலைக்கப்படும், இந்த விற்பனைக் கழகத்தின் மூலம் தற்போது  செய்யப்பட்டுவரும் மதுபான விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும். தமிழ்நாடு மாநில ஒருங்கிணைந்த ஒழுங்குமுறை விற்பனை வாரியம்   (TAMILNADU INTEGRATED REGULATED MARKETING CORPORATION)      புதிதாக உருவாக்கப்படும். ஏற்கெனவே, டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர்கள் புதிய நிறுவனத்தில் தங்கள் பதவி மூப்பினை இழக்காமல், பணியாற்ற வழிவகை செய்யப்படும்.

மதுபான விற்பனை செய்வதிலிருந்து அரசு முற்றிலும் விலகி, புதிதாக அமைக்கப்படும் வாரியத்தின் மூலம், மாவட்டங்கள் தோறும் ஏற்கெனவே, கழக ஆட்சி காலங்களில் உருவாக்கப்பட்ட, காய்கறிகளை மட்டும் விற்பதற்கான உழவர் சந்தையைப் போல், புதிய விரிவு படுத்தப்பட்ட சந்தைகள் உருவாக்கப்பட்டு, நெல், வாழை, மஞ்சள், கடலை, மிளகாய், பயறு வகைகள்,  வேளாண் விளை பொருள்கள், கைத்தறித் துணிகள், கைவினைப் பொருள்கள் முதலிய கிராம உற்பத்திப் பொருள்களைப் பொது மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மதுவுக்கு அடிமையானவர்கள் மதுப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறையின்கீழ் ஓர் அமைப்பு உருவாக்கப்பட்டு; அதன் மூலம் மாவட்டங்கள்தோறும் மறுவாழ்வு மய்யங்கள் (De Addiction Centres)   அமைத்து; மது பழக்கத்திற்கு ஆளானவர்களுக்கு உரிய மனநலப் பயிற்சியும் சிகிச்சைகளும் வழங்கப்படும்.

மதுவிலக்கு பற்றி உறுதிமொழி கொடுக்கும் மற்றவர்கள் எவராவது இவ்வளவு தெளிவாக திட்டவட்டமாகக் கருத்துத் தெரிவித்தது உண்டா? என்ற வினாவையும் எழுப்பத் தவறவில்லை தமிழர் தலைவர்.

தி.மு.க. தான் ஆட்சி அமைக்கப் போகிறது என்பதை மக்களும் திட்டவட்ட மாக தெரிந்து வைத்துள்ளதால் மதுவிலக்கை தி.மு.க. ஆட்சிதான் கொண்டு வரும் என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள்.

அதிமுகவைப் பொறுத்தவரையில் சட்டமன்றத்தில் விதி 110இன் கீழ் முதலமைச்சரே அதிகாரப் பூர்வமாக அறிவித்தாலும் செயலுக்கு வருவதில்லை. விதி எண் 110, ஆனால் மக்களுக்கோ 111. (கைதட்டல்)

டாஸ்மாக்கில் பணியாற்றுபவர்களுக் கான வேலை உத்தரவாதம் மட்டும் அல்லாமல் மதுவிலக்கால், ஏற்கெனவே அந்தப் பழக்கத்தில் இருந்தவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ ரீதியான ஏற்பாடுகள் வரை செய்யப்பட உள்ளது. இந்தப் பிரச்சினையில் திமுகவுக்குத் தானே தொலைநோக்குப் பார்வை உள்ளது என்றும் அழுத்தமாகவே பதிவு செய்தார்.
மதுவை திமுக ஆட்சிக் காலத்தில் கலைஞர் தானே கொண்டு வந்தார் - அப்படி இருக்கும்பொழுது அதுபற்றி கலைஞர் பேச அருகதை இல்லை என்கிறார் முதல்அமைச்சர் ஜெயலலிதா!
ஒன்றை இந்த இடத்தில் திட்டமிட்டு மறைக்கிறார்கள் 1971இல் மதுவைக் கொண்டு வந்த முதல் அமைச்சர் கலைஞர் தான் 1974ஆம் ஆண்டில் மதுக்கடைகளை இழுத்து மூடி மதுவிலக்கை கொண்டு வந்தார். அதனை ஏன் மறைக்கிறார் முதல் அமைச்சர்?

மறுபடியும் மதுவைக் கொண்டு வந்தவர் யார்? அதிமுக ஆட்சியில் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். தானே மீண்டும் மதுக்கடைகளைத் திறந்தார். இந்த உண்மையை மறைப்பானேன்? என்ற கேள்வி மிகவும் முக்கியமானது. மக்களும் பலத்த கரஒலி மூலம் வரவேற்கவும் செய்தனர்.
7. தேர்தல் அறிக்கை
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றன. ஆனால் திமுக வெளி யிட்டுள்ள தேர்தல் அறிக்கை என்பது ஓர் ஆவணமாகும். அரசமைப்புச் சட்டம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமாக இந்த ஆவணம் தயாரிக்கப் பட்டுள்ளது.

மக்களிடத்தில் சென்று மக்கள் பிரச்சினைகளை நேரில் அறிந்து, விவாதித்து தயாரிக்கப்பட்ட மக்களுக்கான தேர்தல் ஆவணம் இது. திமுகவினுடைய பொதுவான தேர்தல் அறிக்கை ஒன்று; மாவட்ட வாரியாக அம்மாவட்ட பிரச்சினைகள், தேவைகளைக் கருத்திலும் கணக்கிலும் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேர்தல் அறிக்கை என்பது இதுவரை எவரும் கேள்விப்படாதது - எவராலும் செய்யப்படாததுமாகும் என்று பாராட்டிய திராவிடர் கழகத் தலைவர் ஆளும் கட்சியின் தேர்தல் அறிக்கை இதுவரை வெளியிடப்படாததைச் சுட்டிக் காட்டியபோது கேலியாக மக்கள் நகைத்ததைக் காண முடிகிறது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தலைநகரில் தமிழர் தலைவரின் தேர்தல் பிரச்சாரம் வித்தியாசமானது  - விவேகமானது - ஆணித்தரமானது - ஆதாரங்களின் அடிப்படையிலானது - அடுக்கடுக்கான கேள்விக் கணைகளைக் கூர்மையாகக் கொண்டது; மக்களைச் சிந்திக்கவும் சிந்தித்த வழி செயல்படுத்தவும், தூண்டக் கூடியதாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

- மின்சாரம்வாடகைக் கேட்பாளர்கள்
வாடகைத் தாய் என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இப்பொழுதெல்லாம் இன்னொன்றையும் கேள்விப்படுகிறோம் - ஏன் நேரிலும் பார்க்கத்தான் செய்கிறோம். அதுதான் வாடகைக் கேட்பாளர்கள் என்பது!  பொதுக் கூட்டங்களில் கேட்பதற்காகப் பணம் கொடுத்துமக்கள் அழைத்து வரப்படுவதுதான் அது; அதனை வாடகைக் கேட்பாளர்கள் என்று சொல்லலாம் அல்லவா!
தலைக்கு 200 ரூபாய் 300 ரூபாய் 500 ரூபாய் வரை கொடுத்து வாடகைக்குக் கொண்டு வரப்படுகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம்  இப்படி வரக்கூடிய அதே மக்கள் மற்ற கட்சிகள் கூலி கொடுத்தாலும் வரத் தயாராகத்தான் இருக்கிறார்கள். அனைத்துக் கட்சிகளின் கொடிகளையும் தயாராகவே வைத்துள்ளனர். மக்களின் வறுமையையும், அறியாமையையும் இப்படி எல்லாம் விலைப் பேசுவது வெட்கப்படத்தக்கது. மக்களைக் கூலிகளாக மாற்றும் இந்தக் கேவலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று மானுட நேயத்தோடும் - மனித உரிமை உணர்வோடும் அழுத்திச் சொன்னார் ஆசிரியர்.

- சென்னை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழர் தலைவர் 3.5.2016
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 4_ சென்னையில் நேற்று (3.5.2016)  திமுக கூட்டணியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்று எழுச்சி உரை யாற்றினார். பெருந்திரளான மக்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரையைக் கேட்க பெரிதும் ஆர் வமுடன் திரண்டிருந்தனர்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திமுக கூட்டணியை ஆதரித்து நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தேர்தல் பரப்புரைப் பயணத்தை தேர்தல் பிரச்சாரத் திட்டக்குழு பொறுப் பாளர் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் மேற்பார்வையில், பொதுச்செயலாளர் இரா.செயக்குமார்,   தலைமைச்செயற்குழு உறுப்பினர் உரத்த நாடு இரா.குணசேகரன், பெரியார் வீர விளையாட்டுக்கழக மாநிலத் தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன் ஆகி யோர் ஒருங்கிணைத்து வருகிறார்கள்.

துறைமுகம்

துறைமுகம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பி.கே. சேகர்பாபு அவர்களை ஆதரித்து 56ஆவது வட்ட திமுக சார்பில் மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் 3.5.2016 மாலை 6 மணியளவில் சென்னை பிராட்வே ஜீல்ஸ் தெருவில் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, எழுச்சியோடு நடைபெற்றது.

கூட்டத்திற்கு 56ஆவது வட்ட திமுக செயலாளர் செ.தமிழ்வாணன் தலைமை தாங்கினார். வடசென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் அன்புச் செல்வன், திமுக தணிக்கை குழு உறுப்பினர் எல்.பலராமன், துறைமுகம் மேற்குப்பகுதி செயலாளர் எஸ்.முரளி, டி.போஸ், எல்.புகாரி, ஹேமந்த், அண்ணாதுரை மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கோல்டன் சுரேசு, திமுக கே.சவுந்தர், கி.விநாயகம், பி.கஜலெட்சுமி எம்.பரத்குமார், கி.ராதிகா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

உரையாற்றியோர்

கூட்டத்தில் கலந்து கொண்டு வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், திராவிடர் கழக தலைமைக்கழக பேச்சா ளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் உள்ளிட்ட பலரும் திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் பி.கே.சேகர்பாபுவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு உரையாற்றினர்.

தமிழர் தலைவருக்கு சிறப்பு

கூட்டத்தில் சிறப்புறையாற்ற, இரவு 7.15 மணியளவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு வேட்பாளர் பி.கே.சேகர்பாபு, திமுகவின் செ.தமிழ்வாணன், தணிக்கை குழு உறுப்பினர் எஸ்.பலராமன் உள்ளிட்ட திராவிடர் கழக, திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சால்வை அணிவித் தனர். பின்பு துறைமுகம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பி.கே.சேகர்பாபு வாக்கு கேட்டு பொதுமக்க ளிடம் வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

தமிழர் தலைவர் உரை

இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் துறைமுகம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பி.கே.சேகர்பாபு அவர்களுக்கு பொதுமக்களிடம் வாக்கு கேட்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி திமுக ஆட்சியின் சாதனைகளையும், அதிமுக ஆட்சியின் அவலங்களையும் விளக்கி ஆதாரங்களுடன் பல்வேறு செய்திகளை எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார்.

திமுக தேர்தல் பரப்புரை கூட்டமாக, வாக்கு கேட் கும் கூட்டமாக மட்டும் இல்லாமல், கடந்த காலங்களில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டிருந்த பல்வேறு நலத்திட்டங்கள் முடக்கப்பட்டு, கடந்த அய்ந்து ஆண் டுகளாக அதிமுகவின் செயல்பாடற்ற ஆட்சியின் பாதிப் புக்கு உள்ளானவர்களின் கொதிப்புகளின் பிரதிபலிப்பு களாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் உரையில் குறிப்பிட்டதாவது:

பி.கே.சேகர்பாபு தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவர் அல்லர். கடந்த அய்ந்து ஆண்டு காலத்தில் மாவட்ட செயலாளராக இல்லாத காலத்திலும் மக்கள் தொண்டராக செயல்பட்டுவந்துள்ளவர். ஆகவேதான், துறைமுகம் தொகுதியில் கலைஞர் பி.கே.சேகர்பாபுவை நிறுத்தியுள்ளார். இங்கே நிற்பவர் சேகர்பாபு அல்ல, கலைஞரே நிற்கிறார். வெற்றி பெறும வேட்பாளராக அவர் இருக்கிறார். எங்கெல்லாம் நாங்கள் செல்கி றோமோ அங்கெல்லாம் தெளிவாக தெரிகிறது. திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும்.  சிறு பான்மை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், தாய்மார் களுக்கான இயக்கமாக இந்த இயக்கம் செயல்பட்டு வந்துள்ளது. தாய்மார்களுக்கு நாற்காலியில் உட்காரும் துணிச்சலை இந்த இயக்கம்தான் ஏற்படுத்தித் தந்தது.  திமுக அரசியல் இயக்கம் மட்டும் அல்ல. சமுதாய இயக் கம் என்று திமுக தலைவர் கலைஞர் குறிப்பிட்டுள்ளார். சமுதாயப்புரட்சி இயக்கமாகும். எல்லார்க்கும் எல்லாம், அனைவருக்கும் அனைத்தும் என்கிற வாய்ப்பு இந்த இயக்கத்தால்மட்டும்தான் அளிக்க முடியும்.
திமுக தேர்தல் அறிக்கை ஓர் அற்புதமான ஆவணம். இதுபோன்ற தேர்தல் அறிக்கையை பொறுப்புணர்ச் சியுடன் அளித்துள்ளது திமுக தவிர  இந்தியாவிலேயே வேறு எந்தக்கட்சியும் கிடையாது.

அதிமுக ஆட்சியின் அவலம் குறித்து கூறும்போது சென்னை வெள்ளம் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. இன்னமும் புண் ஆறவில்லை. திமுகவின் தேர்தல் அறிக்கையுடன் மாவட்டங்களுக்கு என்று  தேர் தல் அறிக்கையில் தனியே புத்தகம் போட்டுள்ளார்கள்.
ஆளுங்கட்சி இன்னமும் தேர்தல் அறிக்கையை அளிக்கவில்லை. நிச்சயமாக ஆட்சியை அமைப்பது திமுகதான். ஏதோ கருத்து கணிப்புகள் வருகின்றன என்று அதைக்கொண்டு நாங்கள் சொல்லவில்லை. நாங் கள் மக்களை சந்தித்து வருகிறோம் என்று குறிப்பிட்டார்.

கலந்து கொண்டோர்

கூட்டத்தில் திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், துறைமுகம் காஜா, ஜி.எம்.தேவன், இராயபுரம் மனோ (காங்கிரசு), வழக்குரைஞர் சு.குமாரதேவன், கே.ஒளிவண்ணன், யூசூப் குலாம் முகம்மது, காங்கிரஸ் எஸ்.மணிபால், மனிதநேய மக்கள் கட்சி வீரன், மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, ஏழு கிணறு பகுதி திராவிடர் கழக தலைவர் கோ.கதிரவன், செயலாளர் கருக்தோவியன், கோ.பன்னீர்செல்வம், கொடுங்கையூர் பகுதி பொறுப் பாளர் தங்கமணி, தங்க தனலெட்சுமி, மாவட்டத் துணைச் செயலாளர் கி.செம்பியம் இராமலிங்கம், உள்ளிட்ட திராவிடர் கழகத் தோழர்கள், திராவிட முன்னேற்றக்கழக கூட்டணி கட்சியினர், மகளிரணியினர் பெருமளவில் பங்கேற்றனர். முன்னதாக தொடக் கத்தில் திமுக என்.ஆர்.பிரபா கரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். முடிவில் வட்ட துணைச் செயலாளர் ஜி.தனசேகரன் நன்றி கூறினார்.
சைதாப்பேட்டை

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் அவர்களை ஆதரித்து திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் 3.5.2016 அன்று இரவு 8.00 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை தொகுதி அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக வழக்குரைஞர் சிறீதரன் தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, திமுக பகுதி செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, துரைராஜ், திமுக தலைமைச் செயற்குழு உறுப் பினர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித் தனர்.

உரையாற்றியோர்

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத் தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்து திராவிடர் கழக தலைமை கழகப் பேச்சாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந் திரசேகரன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் செஞ்சி இராஜேந்திரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாவட்ட தலைவர் பூவை.முஸ்தபா உள்ளிட்டோர் உரையாற்றினர்.

தமிழர் தலைவருக்கு சிறப்பு

தமிழர் தலைவர் அவர்களுக்கு வேட்பாளர் மா.சுப் பிரமணியன், வழக்குரைஞர் சிறீதரன், இரா.வில்வநாதன் உள்ளிட்ட திராவிடர் கழக திமுக கூட்டணி கட்சியினர் சால்வை அணிவித்து மகிழ்ந்தனர்.

தமிழர் தலைவர் உரை

இறுதியாக சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்து வாக்கு சேகரித்து திமுக தேர்தல் அறிக்கையின் பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரைகேட்க இளைஞர்கள், பெண்கள் என பெருந்திரளானவர்கள் திரண்டிருந்தனர்.
சிறப்புரையில் சைதாப்பேட்டை கலைஞர் தொகுதி என்றும், தற்போதும் சைதாப்பேட்டையில் மா.சுப்பிர மணியன் நிற்கிறார் என்பதைவிட கலைஞரே நிற்பதாகக் கருதவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மாறுபட்ட ஏடுகள்கூட தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சிக்கு எதிரான அலை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன. மே 19ஆம் தேதி தேர்தல் முடிவில்  ஆறாவது முறையாக முதல்வர் கலைஞர்தான் ஆவார்.

தேர்தல் அறிக்கை Ôமக்கள் உரிமை சாசனம்Õ

ஓர் அரசுக்கு அரசமைப்பு என்பது முக்கியமானது. அதுபோல், திமுகவின் தேர்தல் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆறு மாதமாக அனைத்து தரப்பினரையும் சந்தித்து எல்லாத்தரப்பினருக்குமான அறிக்கையாக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாராகி Ôமக்கள் உரிமை சாசனம்Õ ஆக விளங்குகிறது.
வாடகைத்தாய் போல், வாடகை கேட்பாளர்களாக வாடகைக்கு, குத்தகைக்கு 3 மணிநேரம், 7 மணிநேரம் அவர்களை நகர விடாமல் செய்து 5 பேர் பலியானார்கள். எந்தத் தேர்தலிலும் இல்லாதவாறு மனித உரிமைகள் ஆணையம் 5பேர் இறந்ததுகுறித்து விளக்கம் கேட்டுள்ளது.

இந்த ஆட்சி ஏன் மாற்றப்பட வேண்டும்?

ஓர் ஆட்சி என்றால், கடந்த கால அரசின் தொடர்ச்சி தான். 1200 கோடி செலவு செய்து சட்டமன்றக் கட்டடம் அமைக்கும் பணியை அண்ணாசாலையில் சிம்சன் தந்தை பெரியார் சிலை அருகில் இரவு பகல் பாராமல் செய்தார் கலைஞர். அதை மருத்துவமனையாக மாற்று வதாக கூறினார்கள். நீதிபதி இக்பால் கேட்டார். மருத்துவ மனைக்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? அண்ணா நூற்றாண்டு நூலகத்தை 172 கோடி மதிப்பில் கலைஞர் அமைத்தார்.

அண்ணா பெயரில் உள்ள கட்சி, ஆட்சியில் அண்ணா பெயரில் நூற்றாண்டு நூலகத்தை கலைஞர் கொண்டு வந்தார் என்கிற ஒரே காரணத்துக்காக வன்மத்துடன், ஆணவத்துடன் முடக்குவதா?

நீதிபதிகள், அமைச்சர்கள் அனைவரும் இருக்கின்ற பகுதியான கிரீன்வேஸ் சாலையில் நாற்றத்தைப்போக்கி, மா.சு.ப்பிரமணியன் மேயராக இருந்தபோது  நடைப்பயிற்சி செல்லும்வகையில் சீரமைத்தார். திமுக ஆட்சியில் தொல்காப்பியர் பூங்கா பல கோடி செலவழித்து செய்தது. ஆனால், இப்போது அடையாறு பூங்கா என்று மாற்றப்பட்டுள்ளது.  தொல்காப்பியர் பூங்கா 5 ஆண்டு களாக மூடப்பட்டுள்ளது. திறப்பு விழா செய்யாமல் மூடு விழாவை செய்த அதிமுக அரசுக்கு மூடுவிழா செய்யவேண்டும். தொல்காப்பியர் என்ன திமுகவா?
20 லிட்டர் குடிநீர் வீடு தேடி வரும் என்றார்கள். இன்றைய விடுதலையில் ஒரு குடம் தண்ணீர் தனியார் ரூ.7க்கு கொடுப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
இன்னொருவருக்கும் சேர்ந்து உருகுவதுதான் தாயுள்ளம். 92 வயது கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் இரவு பகல் பாராமல் சென்னை வெள்ளத்தின்போது மக்களுக்காக உழைத்தார்கள். அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விட்டது. இதுதான் சொல்லாததையும் செய்ததா? பெரியார் நினைவு சமத்துவபுரம் ஜாதி ஒழிப்புக்கு, நல்லிணக்கத்துக்கு திமுகஅரசு ஏற்படுத்தியது.  அதிமுக வின் பழிவாங்கும், வன்ம அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். எந்தத் தொகுதியிலும் அதிமுக அமைச்சர்கள் உள்பட அவர்கள் எவரும் உள்ளே போக முடியவில்லை. தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று கலைஞர் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது.

கலைஞருக்கு தாயுள்ளம் இருக்கிற காரணத்தால்தான் தேர்தல் அறிக்கையில், டாஸ்மாக் மூடும்போது, டாஸ் மாக் பணியாளர்கள் 30,000 பேரின் பதவி மூப்பின்படியே, மாற்றுப்பணி அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

_இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பல் வேறு தகவல்களை தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டி சிறப்புரை ஆற்றினார்.

பங்கேற்றோர்

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், எஸ்.குணசேகரன், திராவிடர் கழக வழக்கு ரைஞர் அணி அமைப்பாளர் வீரமர்த்தினி, மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் முத்தையன், வழக் குரைஞர் நம்பியூர் சென்னியப்பன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், சா.கணேசன், திமுக தோழர்கள் கவிராஜ், கு.புகழ்வேந்தன், கவிதா கவுதமன், தென் சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் கு.செல்வேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் செங்குட்டு வன், வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் அன்புச்செல்வன் உள்ளிட்ட திராவிடர் கழக, திமுக கூட்டணியினர் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.

கூட்டத்தின் தொடக்கத்தில் திமுக கே.எஸ்.ரூசோ அனைவரையும் வரவேற்று உரையாற்றினர். முடிவில் ந.தமிழரசு நன்றி கூறினார்.

பெரியார் திடல் சுரேசு, வை.கலையரசன், காரல் மார்க்ஸ், யுவராஜ், திமுக பொறுப்பாளர்கள் சைதை எஸ்.பி.கோதண்டம், மகேஸ்வரன், கிருட்டிணமூர்த்தி, சைதை அன்பு, எம்.பி.பாலு, சைதை மதியழகன், சைதை எத்திராஜ், வாசுதேவன், சைதை தென்றல், உள் ளிட்ட திராவிடர் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை - சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியம் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், சைதை அன்பு, கிருஷ்ணமூர்த்தி, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் பலர் உள்ளனர் (3.5.2016)
சென்னை கிழக்கு மாவட்டம் - துறைமுகம் கிழக்குப் பகுதி தி.மு.க. சார்பில் ஜீல்ஸ் தெருவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில்  துறைமுகம்  தொகுதி தி.மு.க. வேட்பாளர் பி.கே.சேகர்பாபு அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தார். வடசென்னை மாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்  (3.5.2016)

சென்னை கிழக்கு மாவட்டம் - துறைமுகம் கிழக்குப் பகுதி தி.மு.க. சார்பில் ஜீல்ஸ் தெருவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், துறைமுகம்  தொகுதி தி.மு.க. வேட்பாளர் பி.கே.சேகர்பாபுவை ஆதரித்து வாக்கு சேகரித்தார். உடன் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், ஏழுகிணறு கதிரவன், புரசை அன்புச்செல்வன், 56 ஆவது தி.மு.க. வட்டக் கழகச் செயலாளர் தமிழ்வாணன் மற்றும் ஏராளமானோர் உள்ளனர்  (3.5.2016)


சென்னை - சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியம் அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாக்கு சேகரித்தபோது. கூடிய மக்கள் கூட்டம். (3.5.2016)