ஞாயிறு, 31 மே, 2015

230 வது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு திருவல்லிக்கேணி

230 வது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு திருவல்லிக்கேணி-அய்ஸ் பகுதி இருசப்பன் தெரு-அன்னி பெசன்ட் சாலை இணைவிடத்தில் பார்த்தசாரதி கோயில் தெற்கு வாயில் எதிரில் 30.5.15 மாலை 6.00மணி அளவில் தொடங்கியது. 
முன்னதாக கடற்கரை-காமராசர் சாலையில் உள்ள பரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிலைக்கு மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைத்தலைவர் டிஆர்.சேதுராமன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது
230 வது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு திருவல்லிக்கேணி-அய்ஸ் பகுதி இருசப்பன் தெரு-அன்னி பெசன்ட் சாலை இணைவிடத்தில் பார்த்தசாரதி கோயில் தெற்கு வாயில் எதிரில் 30.5.15 மாலை 6.00மணி அளவில் . மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தலைமையில், மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் துணைத்தலைவர் டிஆர்.சேதுராமன் இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் இரா.பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை உரையாற்றியபோது..தலைமைக்கழக பேச்சாளர் ம.வீ.அருள்மொழி உரையாற்றியபோது..

 தலைமைக்கழக பேச்சாளர் சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் செ.தமிழ் சாக்ரடீசு உரையாற்றியபோது...

 கழக பொருளாளர் மானமிகு டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்கள் சிறப்புரையாற்றியபோது.

 ஈ.குமார் அவர்கள் நன்றி கூறினார். இரவு 10மணிக்கு கூட்டம் நிறைவுற்றது.

ஈ.குமார் நன்றி கூறினார்.

விடுதலை நாளேடு 28.5.15 பக்கம்-6 - விளம்பரம்
விடுதலை நாளேடு 1.6.15 செய்தி

தென்சென்னை சார்பில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு

திருவல்லிக்கேணி, ஜூன் 1_ தென்சென்னை திரு வல்லிக்கேணி- அய்ஸ் பகு தியில் நடைபெற்ற 230 ஆவது திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாடு             தென் சென்னை திருவல்லிக்கேணி-அய்ஸ் பகுதி இருசப்பன் தெரு- அன்னி பெசன்ட் சாலை இணை விடத்தில் பார்த்தசாரதி கோயில் தெற்கு வாயில் எதிரில் 30.5.15 மாலை 6 மணி அளவில் தொடங்கி யது.
முன்னதாக கடற்கரை- காமராசர் சாலையில் உள்ள பரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிலைக்கு மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் தலைமை யில் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி மற்றும் துணைத்தலைவர் டிஆர். சேதுராமன், ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவிக்கப்பட்டது 230 வது திராவிடர் விழிப்பு ணர்வு வட்டார மாநாடு மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி தலை மையில், மாவட்டத் தலைவர் இரா.வில்வநா தன் மற்றும் துணைத் தலைவர் டிஆர்.சேது ராமன், சி.செங்குட்டுவன், இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் இரா.பிரபாகரன் ஆகி யோர் முன்னிலையில் நடைபெற்றது.
ந.மணித்துரை வரவேற் புரையாற்றினார்.          மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணி யம்மை , தலைமைக்கழகப் பேச்சாளர் ம.வீ.அருள் மொழி, தலைமைக்கழகப் பேச்சாளர் சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் செ.தமிழ் சாக்ரடீசு ஆகியோர் உரையாற்றியதற்கு பின் கழகப் பொருளாளர் மானமிகு டாக்டர் பிறை நுதல் செல்வி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இந்த வட்டார மாநாட் டில் திருமகள், ஆர்.டி.வீர பத்திரன், மு.சண்முகப் பிரியன், சி.மகேந்திரன்ஈ.குமார்சைதை தென் றல், தரமணி கோ.மஞ்ச நாதன், மு.ஈழமுகிலன், ஆசிரியர் சா.இராஜேந் திரன், தளபதி பாண் டியன், இசையின்பன், தமீம் அன்சாரி, அய்ஸ் அவுஸ் சேது, இறைவி, மாட்சி, பசும்பொன், வி.யாழ்ஒளி, வி.தங்கமணி, மு.பவானி, பாண்டியன், கே.ஆறுமுகம், பாதுசா மைதீன், ச.துணைவேந்தன், ஆ.தினேஷ்குமார், தே.ஒளிவண்ணன் மற்றும் பல கழகத்தோழர்களும் கலந்துகொண்டனர்.
பொதுமக்கள் ஆர்வமு டன் பங்கேற்று விளக்க மும் எழுச்சியும் பெற்றனர். ஈ.குமார் அவர்களின் நன்றியுரையுடன் இரவு 10 மணிக்கு கூட்டம் நிறை வடைந்தது.


மாநாட்டை குறித்து வெளியிடப்பட்ட துண்ணறிக்கை-விடுதலை,1.6.15புதன், 27 மே, 2015

தென்சென்னை மாவட்ட இளைஞரணி, மாணவரணி கலந்துரையாடல் கூட்டம்


சென்னை, மே 27_ மயிலை பெரியார் படிப்ப கத்தில் தென்சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் கு.செல்வேந் திரன் தலைமையில் தென் சென்னை மாவட்ட இளை ஞரணி, மாணவரணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் தில் இளைஞரணி, மாண வரணி அமைப்பு புதுப் பித்தல் உள்ளிட்ட பல் வேறு திட்டங்கள் பற்றி ஆலோசனை செய்யப்பட் டது. அதன் அடிப்படை யில் தொடர் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக் கப்பட்டது. ஜூன் மாதத்தில் மந்தைவெளி, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதி யில் பிரச்சாரக் கூட்டம் பகுதிவாரியாக தோழர் களை சந்திப்பது இயக்க கொள்கைகளை விளக்கி துண்டறிக்கை கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
மறைந்த சுயமரியாதை சுடரொளிகள் அனகை அரங்க சிவா வேல்.சோம சுந்தரம், பேராசிரியை தம யந்தி இராஜதுரை, கழகத் துணைத் தலைவரின் அண்ணன் நாகராஜன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் செ.தமிழ்சாக் ரடீஸ், பா.மணியம்மை இயக்க ஆக்கப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு கருத் துகளை எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் குமார், சண்முகப்பிரியன், முகிலன், மணித்துரை, மகேந்திரன் பங்கு கொண்டு தங்களது கருத்துகளை எடுத்துரைத் தனர்.
விடுதலை,27.5.15

வெள்ளி, 15 மே, 2015

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்- சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தார்


புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்: சிலைக்கு தமிழர் தலைவர் 
மாலை அணிவித்தார்
சென்னை, ஏப். 29_ புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2015) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரி யாதை செய்தார்.
வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார் அவர் களின் பகுத்தறிவுக் கருத் துக்களை கவிதை வடிவில் எழுதி தமிழர்களுக்கு இனஉணர்வை ஊட்டி வந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 125_ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2015),
சென்னை காம ராசர் கடற்கரை சாலையி லுள்ள புரட்சிக் கவிஞர் சிலைக்கு கழகத் தோழர் _ தோழியர்களுடன் புடை சூழ சென்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்வில் திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருமகள், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே. நடராசன், வட மாவட் டங்களின் அமைப்பு  செய லாளர் வெ.ஞானசேகரன், வழக்குரைஞரணி அமைப் பாளர், வீரமர்த்தினி, சென்னை மண்டலச் செயலாளர் பன்னீர் செல்வம்,
சென்னை மண் டல இளைஞரணிச் செய லாளர் தமிழ் சாக்ரடீஸ், தொழிலாளரணி இணைச் செயலாளர் செல்வராஜ், பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன்.
தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் திருவள்ளுவன், பகுத்தறிவாளர் கழக வடசென்னை துணைத் தலைவர் வெங்கடேசன், தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் மயிலை சேதுராமன்.
சி.வெற்றிச்செல்வி, மீனாகுமாரி, உஷா, பசும் பொன், சீர்த்தி, மரகதமணி, தங்க.தனலட்சுமி, தங்க மணி, மஞ்சுநாதன், சண் முகப்பிரியன், மயிலை குமார், பெரியார் திடல் சுரேஷ், ரங்கநாதன், கலை யரசன், கலைமணி, தமிழ் குடிமகன், பிரபாகரன், அம்பேத்கர், விமல்ராஜ், சைதை தென்றல்,
வழக் குரைஞர் தெ.அருள்மொழி, பாலு, கோ.திராவிடமணி, கிருட்டிணகிரி மாவட்டச் இணைச் செயலாளர் சு.வனவேந்தன், பட்டுக் கோட்டை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வீரத்தமிழன், நீடாமங்கலம் இளை ஞரணிச் செயலாளர் பொன்.பாலா, செல் வேந்திரன், திராவிடமணி, ஈழமுகிலன்குமார் மற்றும் திரளான கழகத்தோழர் _ தோழியர்கள் பங்கேற்றனர்.
திமுக சார்பில் மாலை அணிவிப்பு
புரட்சி கவிஞர் பாரதி தாசன் சிலைக்கு திமுக சார்பில் முன்னாள் மேயர் சா.கணேசன், முன்னாள் அமைச்சர் வேழவேந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவம், மற்றும் பெருங் கவிகோ வா. மு.சேதுராமன், கலைமாமணி கவிக் கொண்டல் மா.செங் குட்டுவன், கவிஞர் கண் மதியன்,
ரவிச்சந்திரன், ராஜன், ராஜேஷ்குமார், செந்தில் குமார், எம்.ஜி. செல்வம், கனல் கங்கா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்,
-விடுதலை,29.4.15


வியாழன், 14 மே, 2015

வெள்ளுடை வேந்தர் தியாகராயர் பிறந்த நாள்: சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தார்


முன்னாள் மேயரும், நீதிக்கட்சித் தலைவருமான சர்.பிட்டி.தியாகராயர் அவர்களின் பிறந்த நாளையொட்டி சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு திராவிடர் கழகத்தின் சார்பில், கழகத் தோழர்கள் புடைசூழ சென்று, தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மகாபாண்டியன், நடராசன், சுந்தரம், சண்முகம் ஆகியோர் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து நூல்களை வழங்கி சிறப்பித்தனர் (சென்னை, 27.4.2015)
சென்னை, ஏப். 27_ வெள் ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் அவர்களின் பிறந்த நாளான இன்று (27.4.2015) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.
நீதிக்கட்சியைத் தோற் றுவித்த மும்மணிகளுள் முக்கியமானவரான வெள் ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் அவர்களின் 164 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்றுகாலை 10.30 மணியளவில் (27.4.2015), சென்னை மாநகராட்சி ரிப்பன் கட் டட வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழக தோழர், தோழியர்கள் புடைசூழ சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்வில் திரா விடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளா ளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர்கள் தஞ்சை இரா.ஜெயக் குமார், உரத்தநாடு இரா. குணசேகரன், மாநில விவ சாய அணி அமைப்பாளர் கணபதி, மாநில வழக் குரைஞரணி செயலாளர் வழக்குரைஞர் சிவகங்கை ச.இன்பலாதன்,
மாநில அமைப்பாளர் வழக்குரை ஞர் வீரமர்த்தினி, தலை மைச் செயற்குழு உறுப் பினர்கள் மதுரை தே.எடி சன்ராசா, திருமகள், சாமி, திராவிடமணி, திருப்பத் தூர் கே.சி.எழிலரசன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடரா சன், மேற்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் ஈரோடு சண்முகம், தொழி லாளரணி துணைச்செய லாளர் செல்வராஜ்.
திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு, சி.வெற்றிச்செல்வி, இறைவி, சென்னை மண் டல மாணவரணி செய லாளர் மணியம்மை தங்க. தனலட்சுமி, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன்,
செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி, அயன்புரம் மாடசாமி, வெற்றி வீரன், பகுத்தறி வாளர் கழக வெங்க டேசன், கலைமணி, திரு வொற்றியூர் கணேசன், செல்வேந்திரன், பாஸ்கர், தமிழ்குடிமகன், மகேஷ் மற்றும் திரளான கழகத் தோழர், தோழியர்கள் பங்கேற்றனர்

தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவிப்பு
சர்.பிட்டி.தியாகராயர் சிலைக்கு மாலை அணி விக்கச் சென்ற தமிழர் தலைவருக்கு சர்.பிட்டி. தியாகராயர் நலச்சங்கத் தின் சார்பில் அதன் தலைவர் கவிஞர் மகா. பாண்டியன் மற்றும் அதன் நிர்வாகிகள் நட ராஜன், சுந்தரம், சண் முகம் ஆகியோர் வர வேற்று பயனாடை அணி வித்து சிறப்பித்தனர்.
-.விடுதலை,27.4.15


சர்.பிட்டி தியாகராயர் 164வது பிறந்த நாள்-27.4.15
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சர்.பிட்டி தியாகராயர் சிலைக்கு மு.ப.10.30 மணி அளவில் மாலை அணிவித்தார்

விழாக் குழுவினர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கும் , துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கும் பயனாடை அணிவித்தனர்.

திராவிடர் இயக்கத்தால் தமிழும் தமிழரும் வளர்ந்தனரா? இல்லையா?

மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன் அவர்கள் கட்டுரை  -விடுதலை ஞாயிறு மலர் 28.3.15ல் வெளியானது

திராவிடர் இயக்கத்தால் தமிழும் தமிழரும் வளர்ந்தனரா? இல்லையா?
·         19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னையில் அன்றைய மவுண்ட்ரோட்டிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில் (Hotel and  Mess) பறையர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக்கூடாது என்று போர்டு வைத்திருந்தார்கள்.
·         பிராமணரல்லாத தமிழர்கள் - அதாவது பஞ்சம, சூத்திர மாணவர்கள் விடுதிகளில் தங்கிப்படிக்க அனுமதி கிடையாது.
·         அடையாளம் தெரியாத நபர் என்று ஒருவரைக் குறிப்பிடுவது போல் பிராமணரல்லாதார் என்பது தான் தமிழரின் அடையாளமாக இருந்தது.
·         1915 - ஆம் ஆண்டில் தமிழர்கள் வெறும் 5 சதவீதத்தினர் மட்டுமே படித்திருந்தனர். திராவிடர் இயக்கம் தோன்றுவதற்கு முன்பு தமிழன் இப்படித்தான் வாழ்ந்தான்.
·         2000 ஆண்டு காலமாக நீடித்த இந்த பிறவி பேதத்தை மனித நேயமற்ற கொடுமையை ஒழித்து அனைவருக்கும் அனைத்தும் என்ற சமத்துவத்தை உருவாக்கவே திராவிடர் இயக்கம் தோன்றியது. தந்தை பெரியார் போராடினார்; வெற்றிவாகை சூடினார்.
·         தந்தை பெரியாரின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் எனும் கொடையால் கன்னித்தமிழ் இன்று கணினித்தமிழாக வளர்ந்திருப்பதும் சுட்டுரையில் (டுவிட்டர்) இந்திய அளவில் # தமிழ் வாழ்க முதலிடம் பிடித்துள்ளதும், இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தில் இருந்து தமிழைக் காப்பற்றியதும், திருக்குறளை உலகறியச் செய்திருப்பதும், தமிழ் இன்று செம்மொழியாக பெருமைப்படுத்தப் பட்டிருப்பதும் திராவிடர் இயக்கத்தின் சாதனைகளே.
·         1) தமிழ் பெண்கள், 2) தாழ்த்தப்பட்ட தமிழர்கள், 3) பிற்படுத்தப்பட்ட தமிழர்கள் என வகைப்படுத்தி தனித்தனியே அவரவர்கள் வளர்ச்சியைக் கவனித்தால் திராவிடர் இயக்கம் தோன்றி 100 ஆண்டுகள் போராடிய பின் தமிழர்கள் அடைந்துள்ள வளர்ச்சியை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
·         தமிழும், தமிழரும் வளர்ந்துள்ளனர் என்பதற்குத் தமிழர் இல்லத் திருமண அழைப்பிதழே தக்க ஆதாரமாகும். 100 ஆண்டுகளுக்கு முன் தமிழர் இல்லத் திருமண அழைப்பிதழில் தமிழ் தமிழாக இருக்காது. அழைப்பிதழில் ஒரு தமிழர் கூட பட்டதாரியாக இருக்கமாட்டார். இன்றுள்ள அழைப்பிதழில் தமிழன் உயர்படிப்பும், உயர் பதவியும் பெற்றிருப்பதைக் காணலாம்.
·         தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தமிழரை உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்த்தியது திராவிடர் இயக்கம்.
·         லோக குரு குற்றவாளிக் கூண்டில் நிற்கும்போது தமிழன் நீதிபதி ஆசனத்தில் உட்காரும் நிலைக்கு உயர்த்தியதும் திராவிடர் இயக்கமே!
·         இன்றுள்ள தமிழ் நாட்டில் 12-ஆம் வகுப்புத் தேர்வில் ஆண்களை விட பெண்கள் அதிக சதவீதம் தேர்ச்சியும் அதிக மதிப்பெண்களும் பெறுகின்றனர். செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் அந்த மாணவிகள் அளிக்கும் பேட்டியே பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதற்குத் தக்க ஆதாரமாகும்.
·         ஆண்களுக்குள்ள உரிமைகள் அனைத்தும் இன்று பெண்களுக்குக் கிடைத்துள்ளன. தமிழ் வாழ்கின்றது, தமிழன் வாழ்கின்றான், தமிழ் வளர்ந்துள்ளது, தமிழனும் வளர்ந்துள்ளான். பெரியாரின் விருப்பமும், போராட்டமும் வெற்றி பெற்றுள்ளது. வாழ்க பெரியார்.-மு.ந.மதியழகன் (சென்னை-33)

-                -விடுதலை ஞாயிறு மலர் 28.3.15

திங்கள், 11 மே, 2015

கால்டுவெல் 201 ஆம் ஆண்டு பிறந்த நாள்:

தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் 201 ஆம் ஆண்டு பிறந்த நாள்:
சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, மே 7_ தமி ழறிஞர் இராபர்ட் கால்டு வெல் அவர்களின் பிறந்த நாளான இன்று (7.5.2015) அவரது சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணி வித்து மரியாதை செய்தார்.
தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் அவர்களின் 201 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (7.5.2015) சென்னை காமராசர் சாலை அண்ணா நினைவிட வளாகத்தில் அமைந்துள்ள அவரின் சிலைக்கு திரா விடர் கழகத் தோழர், தோழியர் புடைசூழ கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் காலை 11 மணிக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ் வில், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு மகள், சி.வெற்றிச்செல்வி, தொழிலாளரணி துணைச் செயலாளர் செல்வராஜ், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், சண்முகபிரியன், சென்னை மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, பவானி,
மரகதமணி, சுமதி, அரும்பாக்கம் தாமோதரன், உடுமலை வடிவேல், பெரியார் திடல் தோழர்கள் சுரேஷ், மகேஷ், சக்திவேல், விமல், பிரபாகர், வெற்றி, திருச்சி பெரியார் புத்தக நிலைய விற்பனையாளர் பூமிநாதன், கலைமணி, கலையரசன், லோகேஷ், சுகுமார், பழனிகுமார் மற்றும் தி.மு.க. கலை இலக்கிய பேரவை சென்னை பகுதி நிர்வாகி கள் எஸ்.பி.முருகேசன், சேதுராமன் மற்றும் திர ளான கல்வி அறிஞர்கள் பங்கேற்றனர்.

-விடுதலை,7.5.15பக்-8

ஞாயிறு, 3 மே, 2015

193வது திராவிடர் விழிப்புணர்வு மாநாடு-அரும்பாக்கம்


தென் சென்னை-அரும்பாக்கம் பகுதி கழகம் சார்பில் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ.பேருந்து நிறுத்தம் அருகில் 193வது திராவிடர் வழிப்புணர்வு மாநாடு 2.5.15ம் நாள் மாலை நடைபெற்றது.
30.4.15 விடுதலை நாளேட்டில் மாநாடு குறித்து வந்த விளம்பரம்.


 மாநாட்டிற்காக 30.4.15ஆம் நாள் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. பகுதியில் கடை வசூல் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்டத் துணைச் செயலாளர் சா.தாமோதரன், க.பாலமுரளி மற்றும் நொச்சி நகர் சேது ஆகியார் வசுல் பணியில் ஈடுபட்டனர்.
 மாநாட்டிற்கு மாவட்டத் துணைச் செயலாளர் சா.தாமோதரன் தலைமை தாங்கினார்.
 மாநாட்டில் மாவட்டத் துணைத் தலைவர் வரவேற்புரையாற்றினார். 
 மாநாட்டையொட்டி புத்தக விற்பனை நடைபெற்றது. கூடுவாஞ்சேரி மா.இராசு விற்பனை செய்தார்.


 சென்னை மண்டல இளைஞரணித் தலைவர் செ.தமிழ் சாக்ரடீசு உரையாற்றினார்.


கழக பொதுச் செயலாளர் ஒரத்த நாடு குணசேகரன் உரையாற்றினார்.


 பார்வையாளர் பகுதியில்...

 வழக்கறிஞர் அணி பொறுப்பாளர் வழக்கறிஞர் சு.குமாரதேவன் உரையாற்றினார்.
 தலைமைக் கழக பேச்சாளர் முத்து கதிரவன் அவர்களுக்கு மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி சால்வை அணிவித்தார்.

 தலைமைக் கழக பேச்சாளர் முத்து கதிரவன் அவர்கள் உரையாற்றிய போது..
 மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் உரை

 சிறப்பு பேச்சாளர்  செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களுக்கு மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்  சால்வை அணிவித்தார்.

               நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. (1.அய்யாவின் அடிச் சுவட்டில், 2.வாழ்வியல் சிந்தனைகள் -பாகம் 5 )

தாலி அகற்றும் விழாவை அடுத்து நடந்த போராட்டத்தின் விளைவாக சிறைச் சென்ற தோழர்களுக்கு பாராட்டி பயனாடை அணிவிக்கப்பட்டது.
 சென்னை மண்டல இளைஞரணித் தலைவர் செ.தமிழ் சாக்ரடீசுக்கு சிறப்பு பேச்சாளர்  செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் சால்வை அணிவித்தார்.


செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் சிறப்புரையாற்றினார்கழக பொதுச் செயலாளர் ஒரத்த நாடு குணசேகரன் அவர்களுக்கு சிறப்பு பேச்சாளர்  செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் சால்வை அணிவித்து பாராட்டினார்.


இறுதியாக க.தமிழ்ச் செல்வன் நன்றியுறையாற்றினார்.