புதன், 22 மார்ச், 2023

புதிய நியமனங்கள் வேலூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் :

மாவட்டச் செயலாளர் : ஆற்காடு கோ.விநாயகம்

மாவட்ட அமைப்பாளர் : என்.கே.சுப்பிரமணியம்

பொதுக்குழு உறுப்பினர் : கு.இளங்கோவன்

வேலூர் மாவட்டம்

மாநகர தலைவர் : உ.விஸ்வநாதன்

காஞ்சிபுரம் மாவட்டம்

மாவட்ட இணைச் செயலாளர் : காஞ்சி முரளி

செங்கல்பட்டு மாவட்டம்

மறைமலைநகர்:

நகர தலைவர் : திருக்குறள் ம.வெங்கடேசன்

நகர செயலாளர் : முருகன்

நகர அமைப்பாளர்  முடியரசன்

காட்டாங்குளத்தூர்:

ஒன்றிய அமைப்பாளர் : ம.நரசிம்மன்

செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள்

தலைவர்          : மதுராந்தகம் செ.கவுதம்

செயலாளர்      : சிங்கப்பெருமாள் கோவில் அருண்குமார்

அமைப்பாளர் : சூணாம்பேடு தெள்ளமுது

செங்கல்பட்டு மாவட்ட மாணவர் கழக பொறுப்பாளர்கள்

தலைவர்         : மு.சூரியா

செயலாளர்     : திருப்போரூர் சு.அன்பரசி

அமைப்பாளர் : சிங்கப்பெருமாள்கோவில் க.தாமரைச்செல்வி

மறைமலைநகர்

நகர மகளிரணி அமைப்பாளர் : மு.சந்திரா

சிங்கப்பெருமாள் கோவில்

நகர மகளிரணி அமைப்பாளர் : க.சவுந்தரி

ஆத்தூர் மாவட்டம்

பொதுக்குழு உறுப்பினர்  : ஆத்தூர் அ.சுரேஷ்

6.9.2022 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப் பட்ட நியமனங்கள் இவை.

ஞாயிறு, 19 மார்ச், 2023

சென்னை மண்டல திராவிடர் கழக மகளிர் கலந்துரையாடல்

சென்னை, மார்ச் 16- சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறையின் மாதாந்திரக் கலந்துரையாடல் கூட்டம் 11.3.2023 (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு தென் சென்னை பகுதி மயிலாப்பூர் தோழர் பவானி இல்லத்தில், அவரது தலைமையில் சிறப்பாக  நடைபெற்றது. 

பங்கேற்ற அனைவரையும் பொறியியல் கல்லூரி திராவிட மாணவர் கழகத் தோழர் தங்கமணி வரவேற்று உரையாற் றினார். 

துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி, அஜந்தா, எண்ணூர் விஜயா, யுவராணி, இளவரசி ஆகியோர் முன்னிலையில், உலக மகளிர் நாள் மற்றும் அன்னை மணியம்மையார் அவர்களின் 104ஆம் ஆண்டு பிறந்த நாள் பற்றிய கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, அன்னை மணியம்மையார் ஆற்றிய பணிகளைப் பற்றி தோழர் மணியம்மை எடுத்துரைத்தார். 

“உலக மகளிர் நாள்'' பற்றி புதிதாக இணைந்த தோழர்கள் உதவிப் பேராசிரியர் சசிமேகலா அவர்களும், மனநல ஆலோசகர் திருமகள் அவர்களும் வழங்கினர். 

மகளிரின் சமுதாய விழிப்புணர்வை அறிய...

பங்கேற்ற மகளிரின் சமுதாய விழிப்புணர்வை அறிய, சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி செயலாளர் இறைவி பல துறைகளிலும் முதன்மை பெற்று விளங்கிய பெண்மணிகள் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி (ரெட்டி), நாத்திக இயக்கத்தின் முதல் பெண் தலைவர் அன்னை மணியம்மையார்,  கள்ளுக்கடை மறியலில் ஈடு பட்டு, காந்தியாரால் பாராட்டப்பட்ட தோழர்கள் நாகம்மையார், எஸ்.ஆர்.கண்ணம்மாள், முதன்முதலில் விண்வெளிக்குச் சென்ற ரஷ்ய வீராங்கனை வாலண்டினா, இந்தியாவின் கல்பனா சாவ்லா, கல்வி வள்ளல் காமராஜர் அமைச்சரவையில் உள்ளாட்சி மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த லூர்து அம்மாள், சென்னை மாநகராட்சியின் தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்தைச் சேர்ந்த முதல் பெண் உறுப்பினர் - அண்ணல் அம்பேத்கர் அவர்களால் சகோதரி என்று அழைக்கப்பட்ட பெண்ணியப் போராளி மீனாம்பாள் சிவராஜ், இவருடன் இணைந்து தந்தை பெரியாருக்கு"பெரியார்" என்று பட்ட மளித்த தர்மாம்பாள், மகாராட்டிர மாநிலத்தின் சமுதாயப் போராளி,  தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் சமுதாயப் பெண் குழந்தைகளுக்குத் தன் கணவர் ஜோதிராவ் பூலே யுடன் இணைந்து கல்வி கற்பித்த சாவித்ரிபாய் பூலே, திராவிட பாரம்பரியத்தில் இருந்து முதன்முதலில் ஒன்றிய அமைச்சரான தாழ்த்தப்பட்டோர் சமுதாய வீராங்கனை சத்தியவாணி முத்து ஆகியோரின் படங்களைக் காண்பித்து அவர்களை அடை யாளம் கூறுமாறு மகளிர் அனைவரையும் கலந்துரையாடலில் உற்சாகமாகப் பங்கேற்கச் செய்தார். 

லூர்து அம்மாள் - சத்தியவாணி முத்துவை....

இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவை அனைவரும் அறிந்திருந்தது மகிழ்ச்சி அளித்தது.  ஆனால், தோழர்கள் லூர்து அம்மாள் மற்றும் சத்தியவாணி முத்து ஆகியோரை யாராலும் அடையாளம் கூற இயலவில்லை. இவர்களைப் பற்றியும், மற்ற பெண் தலைவர்கள் பற்றியும் கழகத் தோழர்கள் இறைவி, இன்பக்கனி, மணியம்மை ஆகியோர் எடுத்துரைத்தனர். 

நிறைவாக அம்மா சொப்பன சுந்தரி நன்றி கூற, கலந்துரை யாடல் இனிதே முடிந்தது. வருகை தந்த அனைவருக்கும் தென் சென்னை கழகத் தோழர் பவானி இரவு உணவு வழங்கிச் சிறப்பித்தார். 

பங்கேற்றோர் 

பா.வெற்றிச்செல்வி, சி.அமல சுந்தரி, கி.மெர்சி அஞ்சலா மேரி, சி.ஹேமாவதி, ம.சீதா, பா.நதியா, பா.மணிமேகலை, க.பண்பொளி, அன்புமணி, க.மாட்சி, வி.வளர்மதி, வி.யாழ் ஒளி, மு.பாரதி பி.அஜந்தா தமிழ்ச்செல்வி, அமுதா, ஜெய் சங்கரி, ஓவியா, சென்னை மண்டல மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணி, வெ.கா.மகிழினி. பெரியார் பிஞ்சுகள் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு பார் அசோசியேசன் மேனாள் தலைவரும், பிரபல சட்ட நிபுணரும், மேனாள் அட்வகேட் ஜென் ரலுமான மூத்த வழக்குரைஞர் மறைந்த ஆர். கிருஷ்ணமூர்த்தி (வயது 92) அவர்களின் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்

தமிழ்நாடு பார் அசோசியேசன் மேனாள் தலைவரும், பிரபல சட்ட நிபுணரும், மேனாள் அட்வகேட் ஜென் ரலுமான மூத்த வழக்குரைஞர் மறைந்த ஆர். கிருஷ்ணமூர்த்தி (வயது 92) அவர்களின் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், வழக்குரைஞர் துரை.அருண்,  திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சோ.சுரேஷ், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி,  மகேந்திரன்,  அசோக்குமார்,  கே.என்.மகேஷ்வரன், க.கலைமணி, பெ. அன்பரசன் உள்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (சென்னை - 19.10.2022)

மன்றல் நிகழ்வு துண்ட றிக்கை வழங்கல்

மே 29இல் நடைபெறவிருக்கும் மன்றல் நிகழ்வு துண்ட றிக்கைகளை சென்னை கடற்கரை பகுதியில் தென் சென்னை
மாவட்ட கழக தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மன்றல் குழுவினர் பொதுமக்களிடம் வழங்கினர். (25.5.2022)
- விடுதலை நாளேடு, 26.5.2022

சனி, 18 மார்ச், 2023

கோவை, திருப்பூர், சிவகங்கை, காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் அறிவிப்பு

 புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

கோவை,  திருப்பூர்,  சிவகங்கை, காஞ்சிபுரம் மற்றும் 

திருவண்ணாமலை மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் அறிவிப்பு

கோவை மாவட்டம் 

காப்பாளர்கள் : 

வசந்தம் கு.இராமச்சந்திரன், ம.சந்திரசேகரன்

மாவட்ட தலைவர் - தி.க.செந்தில்நாதன்

மாவட்ட செயலாளர் - புலியகுளம் க. வீரமணி

பொதுக்குழு உறுப்பினர்கள்:

பொள்ளாச்சி தி.பரமசிவம், 

மாவட்ட துணைத் தலைவர்

சி.மாரிமுத்து - பொள்ளாச்சி

மாவட்ட துணைச் செயலாளர்

தி.க.காளிமுத்து - வெள்ளளூர்

மாவட்ட அமைப்பாளர்

மு. தமிழ்செல்வன் - கோவை

கோவை மாநகர திராவிடர் கழகம்

மாநகரத் தலைவர் - வே.தமிழ்முரசு

மாநகரச் செயலாளர் -

வேலாண்டிபாளையம் பிரபு

திருப்பூர் மாவட்ட 

புதிய பொறுப்பாளர்கள்

மாவட்ட தலைவர் - யாழ்.ஆறுச்சாமி

மாவட்ட செயலாளர்- ப .குமரவேல்

பொதுக்குழு உறுப்பினர்கள்:

இரா.ஆறுமுகம், இல.பாலகிருஷ்ணன்

திருப்பூர் மாநகரம்

மாநகர தலைவர்- பா.மா.கருணாகரன்

மாநகர செயலாளர் - பெ.செல்வராஜ்

 சிவகங்கை மாவட்டம்

மாவட்ட தலைவர்: இர.புகழேந்தி  

மாவட்ட செயலாளர்: 

          பெ.இராசாராம் - காளாப்பூர்

மாவட்ட காப்பாளர்: 

ச. இன்பலாதன் - சிவகங்கை

மாவட்ட துணைத் தலைவர்:

ஜெ.தனபாலன், திருக்கோஷ்டியூர்

மாவட்ட அமைப்பாளர்:

ச.வள்ளிநாயகம் - மானாமதுரை

மாவட்ட துணை செயலாளர்: 

ஆ.தங்கராசா - வையகத்தூர்

சிவகங்கை நகரம்

நகர தலைவர் - 

வேம்பத்தூர் கே.வி.ஜெயராமன்

நகர செயலாளர் -  மணிமேகலை சுப்பையா

காஞ்சிபுரம் மாவட்டம் 

காப்பாளர்: டி .ஏ .ஜி .அசோகன் 

மண்டலத் தலைவர் - எல்லப்பன் 

மண்டலச் செயலாளர் - கா. கதிரவன்

மாவட்டத் தலைவர் - அ.வெ. முரளி 

மாவட்டச் செயலாளர்- கி. இளையவேள் 

மாவட்ட இணைச் செயலாளர்: 

வாலாஜா ஆ.மோகன்

மாவட்ட அமைப்பாளர் - செ.ரா. முகிலன் 

காஞ்சி நகர தலைவர்- ச.வேலாயுதம் 

காஞ்சி நகர செயலாளர் - இ. இரவீந்தர்

திருவண்ணாமலை மாவட்டம்

தலைவர் - சி. மூர்த்தி

செயலாளர் - மூ.க. ராம்குமார்

- கலி. பூங்குன்றன்

துணைத் தலைவர், திராவிடர் 

(கழகத் தலைவர் ஆணைப்படி)

சென்னைப் பெரியார் திடலில் சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம்!

பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் - ருசிய கலைஞர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்

பெரியார் விருது அளிக்கப்பட்ட பெருமக்கள்

ஒரே குதூகலம் - திராவிடர் திருநாள் விழா வெகு சிறப்பு

சென்னை, ஜன. 18- சென்னைப் பெரியார் திடலில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 29ஆம் ஆண்டு திராவிடர் திருநாளாம் பொங்கல் விழா பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுடன் சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமமாக நேற்று (17.1.2023) நடைபெற்றது. ருசிய கலைஞர்களின் ஆடல் பாடல், பெருமைப்படத்தக்க தமிழினப் பெருமக்களுக்குப் பெரியார் விருது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளின் சங்கமமாக நடைபெற்றது. விழா சிறப்புரையை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆற்றினார். விழா விவரம்  வருமாறு:

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 29ஆம் ஆண்டு விழா , திராவிடர் திருநாள் பொங்கல் விழா ஆகியவை 17.01.2023 அன்று சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.

சுயமரியாதை குடும்பங்களின் சங்கமம்!

காலையில் தொடங்கிய சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமத்தில் பெரியார் பிஞ்சுகள் தொடங்கி இளையோர், முதியோர் என்று வயது வேறுபாடின்றி விளையாட்டு போட்டி கள், உற்சாகமூட்டும் நடனம், சிலம்பம், பறை என்று மாலை வரை திராவிடர் திருநாள் கொண்டாட்டங்கள் தொடர்ந்தன.

தமிழர் கலையும்- ரஷ்ய நடன நிகழ்ச்சியும்!மாலை நிகழ்ச்சி அலங்காநல்லூர் வேலுஆசான் குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், அரங்கம் அதிரும் பறையுடன் தொடங்கியது. அதுவரை அரங்கில் இருந்த யாரும் கண்டு களித்திடாத ரஷ்யா நாட்டினரின் நடன நிகழ்ச்சி, அதிலும் நிகழ்ச்சியின் ஊடே தந்தை பெரியாரின் சோவியத் பயணம் குறித்தும், இந்திய-ரஷிய நட்புறவு தெற்கிலிருந்து தான் ஆரம்பித்தது, இன்றும் ஆசிரியர் அந்த நட்புறவை வலுப்படுத்தும் முதல் நபராக இருக்கிறார் போன்ற செய்திகளை எல்லாம் இந்திய-ரஷ்ய நட்புறவு கழக ஒருங்கிணைப்பாளர் தங்கப்பன் விவரித்தார். நிகழ்வின் முத்தாய்ப்பாக "சங்கே முழங்கு" எனும் பாரதிதாசன் பாடலை ரஷ்யர்கள் நடனத்தின் மூலம் முழங்கினர்.

வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!

நிகழ்வில், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார. வாழ்க பெரியார்! வெல்க திராவிடம் என்று கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையுரை நிகழ்த்த நிகழ்வு தொடங்கியது.

தமிழறிஞர். அவ்வை நடராசன் அவர்களுடைய படத் தினை கழகத் தலைவர் திறந்து வைத்தார்.

பாராட்டு!

பெரியார் பெருந்தொண்டர் சைதை.பாலு பற்றிய குறிப்பு களை தென் சென்னை மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி வாசித்தார். குறிப்பாக, 91 வயதை நெருங்கக் கூடிய அவரின் வாழ்க்கை குறிப்பு, அவருடைய சிந்தனை, கண்ட போர்க் களங்கள், திராவிடர் கழகத்தில் அவர் கண்ட களங்கள், சிறை ஆகியவற்றை தெரிவித்தார். அவரை பாராட்டி கழகத் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து, நினைவுப் பரிசினை வழங்கினார். இன்றைக்கும் தனது  தெருக்குரலின் மூலம் ஜாதிய கட்டமைப்புகளுக்கு எதிராக பாடல் வரிகளை எழுதி, இசைக்கும் தெருக்குரல் அறிவு அவர்களுக்கு தமிழர் தலைவரால் பாராட்டு செய்யப்பட்டது. அவரைப் பற்றிய அறிமுக குறிப்பினை பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் வாசித்தார்.

பெரியார் விருதுகள் 2023!

பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் 2023 ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது, எழுத்தாளர் வீ.மா.ச.சுபகுண ராஜன், குழலிசைக் கலைஞரும், திரைப்பட பின்னணி பாடகருமான அருண்மொழி (எ)நெப்போலியன் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது.

தமிழ் சமூகத்திற்கு நடைபெற்ற பெரு வெடிப்பு தந்தை பெரியார்!

பெரியார் விருதினை பெற்ற எழுத்தாளர் வீ.மா.ச.சுபகுண ராஜன் அவர்கள் தனது ஏற்புறையில் ; 

இது ஏற்புரை அல்ல; நன்றி உரையே! பெரியார் பெயரில் விருது பெற்றிருப்பதற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கி றேன் என்றும், காரணம் பெரியார் இல்லை என்றால், அவரது சிந்தனை இல்லை என்றால், உங்கள் முன்னாடி நிற்கும் நான் ஒருபோதும் தோன்றியிருக்க முடியாது என்றார்.இது எப்படி பெரியார் மண் என்று நிறைய பேர் கேள்வி கேட்பார்கள். உலகம் தோன்றியதற்கு காரணம், பெருவெடிப்பு (ஙிவீரீ ஙிணீஸீரீ) என்று அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படி, தமிழ் சமூகத்திற்கு நடைபெற்ற பெருவெடிப்பு பெரியார் தான் என்றார்.  கேரளம், மராட்டியம், மைசூர் போன்ற பகுதிகளில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. சில பகுதிகளில் தமிழ்நாட்டிற்கு முன்பே பல சமூக நீதி கருத்துகள் தோன்றியது. ஆனால் , அங்கு நடைபெறாத மாற்றங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றது என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார் என்பதை பல செய்திகளுடன் விளக்கினார். பார்ப்பனியம் எங்கு இருந்தாலும் அதை அழித்து விட வேண்டும் என்பதில் பெரியார் எப்படி முனைப்பாக இருந்தார் என்பதை விளக்கி, பகுத்தறிவு , சுயமரியாதை, சமூக நீதி ஆகியவற்றை தமிழ் சமூகத்திற்கு கொடுத்து நம்மையெல்லாம் வழிநடத்த பெரியார் இருக்கிறார் என்பதை பதிவு செய்து, இந்த விருதுக்கு நான் தகுதியானவனா என்பது தெரியவில்லை; ஆனால் நன்றி சொல்வதற்கு தகுதியானவன் என்று ஆசிரியருக்கும், இந்த நிகழ்விற்காக உழைத்த தோழர்களுக்கும் நன்றி கூறினார்.

முதல் விருதே பெரியார் விருதுதான்!

பெரியார் விருதை பெற்று ஏற்புரை வழங்கிய அருண் மொழி (எ)என்ற நெப்போலியன் அவர்கள் தனது ஏற்புரையில்;

குக்கிராமத்தில், இசை என்றால் என்ன என்று தெரியாத ஒரு ஊரில் பிறந்த அவர் புல்லாங்குழலை தேர்ந்தெடுக்க வில்லை என்றும், புல்லாங்குழல் தான் தன்னை தேர்ந்தெடுத்திருக்கிறது என்றார். ஆறு, ஏழு வருடமாக மேடை கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்த தனக்கு இருந்த ஒற்றை நோக்கம், ஒரே ஒரு  முறை ,தான் வாசிக்கும் குழல் ஒளிப்பதிவில் வரவேண்டும் என்பதே. ஆனால் இயற்கை தன்னை விட்டு வைக்காமல் இசையோடு பயணிக்க வைத்தது என்றும், 32 ஆண்டு காலமாக இசை மேதை இளையராஜா அவர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் வாய்ப்பை பெற்றதாகவும், ஏறத்தாழ 43 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்தும் இதுவரை ஒரு விருது கூட பெறவில்லை, தான் பெரும் முதல் விருதே பெரியார் விருதுதான் என்றார். இந்த விருதை பெறுவதற்காக தான் மற்ற விருதுகள் இத்தனை ஆண்டு காலம் தன்னை தேடி வராமல் இருந்தது என்றும், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விருது வழங்கிய அனைவருக்கும் நன்றி என்று, இதனால் அவர் அடையும் மட்டற்ற மகிழ்ச்சியை, ஆனந்தத்தை பதிவு செய்தார்.

ஆசிரியரை சந்தித்தது மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்!

நிகழ்வில், தமிழர் தலைவர் ஆசிரியரிடம் பாராட்டினை பெற்ற தெருக்குரல் அறிவு அவர்கள் தனது ஏற்புரையில்;

இந்த நாள் இவ்வளவு சிறப்பாக அமையும் என்று, தான் திட்டமிடவில்லை என்றும், தனது பாடல் காட்சியை பார்த்த உடனே தன்னை பாராட்ட வேண்டும் என்று ஆசிரியர் நினைத்ததை கூறி, இங்கு வந்து ஆசிரியரை சந்தித்தது தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக இருப்பதாகவும், தான் பள்ளிக்கூடத்தில் பயின்றபோது அரக்கோணம் பகுதியில் திராவிடர் கழக கூட்டம் நடைபெற்றுக் கொண் டிருக்கும், பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு கூட புரியும் வண்ணம் எப்படி அரசியல் பேசுவார்கள் என்றும், பகுத்தறிவு கருத்துகளை வீதியெங்கும் கொண்டு போய் சேர்த்த ஆணிவேரான மேடையில் நிற்பது பெருமையாக இருக்கிறது என்றார். இன்றைய தலைமுறை பெரியாருக்கும், அம்பேத் கருக்கும், திராவிட இயக்கத்திற்கும் நன்றி காட்ட கடமைப்பட்டுள்ளது என்றார். வாழ்வில் நம்முடைய எல்லா அம்சங்களும் சூறையாடப்படுகிறது. அதை எதிர்த்து, அதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு முறையேனும் பெரியார் திடலுக்கு வர வேண்டும் என்றார். சமூகம் பற்றிய புரிதலை, அந்த உணர்வை தனக்கு ஏற்படுத்தியதில் இப்படிப் பட்ட செய்திகளுக்கு மிக முக்கிய பங்கு இருப்பதாகவும்,  உணர்வெழுச்சி மட்டும் இப்போது தேவையில்லை,  சமத்துவம் சார்ந்த புரிதலுடன் கூடிய ஒரு பயணம் நமக்கு தேவைப்படுகிறது என்றும், இந்த சமயத்தில் தன்னை பாராட்டிய ஆசிரியருக்கும், அனைவருக்கும் தான் நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்று பதிவு செய்தார்.

தமிழறிஞர் அவ்வை நடராசனும் - ஆசிரியரும்!

அவ்வை அருள்மணி அவர்கள் ,தனது தந்தையார் அவரது மறைவுக்கு  முன்னாள் ஆசிரியருடன் இறுதியாக பகிர்ந்த மேடையை பற்றி கூறி, தனது தாயாரின் பெயர் இங்கர்சால் என்றும், அதே பெயரை தலைப்பாக வைத்து இதே மேடையில் அவரது தாயார் பேசியதை நினைவு கூர்ந்து, ஆசிரியருக்கும் அவர்கள் குடும்பத்திற்குமான உறவைப் பற்றி விளக்கி அனைவருக்கும் நன்றி கூறினார்.

எங்கள் தோள்கள் உங்களை தூக்கிச்

சுமக்க தயாராக இருக்கிறது!

சிறப்புரை நிகழ்த்திய ஆசிரியர் அவர்கள் தனது உரையில்; எல்லையற்ற மகிழ்ச்சி அடையும்போது பேச முடியாமல் போகும் அப்படி ஒரு தருணத்தில் தான் இருப்பதாகவும் , தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளும், ரஷ்ய கலை நிகழ்ச்சிகளும் எவ்வளவு இனிமையாக அமைந்தது என்பதை விவரித்து, அதில் முத்தாய்ப்பாக "சங்கே முழங்கு"  எப்படி அனைவரையும் ஈர்த்தது என்பதை பதிவு செய்தார். திருக்குறள்  கேட்டு பழகியவர்கள் எல்லாம் இப்போது தெருக்குரல் கேட்கிறார்கள் என்றார். கலை ஒரு சாரர் கையில் மட்டும் இருந்ததை மீட்டதே பெரியார் தான் என்றார். அந்த மீட்பு வேலையை தற்போது பெரியார் முத்தமிழ் மன்றம் பார்க்கிறது என்றும், அதற்கு மிக நேர்த்தியாக இது அனைத்தையும் செய்து முடித்த கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் , மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் இதற்காக உழைத்த அனைவரையும் நெகிழ்ந்து பாராட்டினார். இது ஒரு ஏணி; தமிழரை ஏற்றி விட வேண்டும் , ஏற்றம் பெற வேண்டிய தமிழர்களை ஏற்றி விட வேண்டும் என்று நினைக்கும் மேடை இது என்றார். திராவிடர்களுக்கு அறிவு பஞ்சமில்லை ; அவர்களை அடையாளம் காட்டும் வேலையை செய்வதற்கு நாங்கள் இருக்கிறோம். இருட்டில் இருப்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே திடலின் வேலை என்றார். பெரியார் அனைவருக்கும் உரியார்; ஒருவரைத் தவிர அவர்தான் நரியார் என்றும் அப்படிப்பட்ட நரியார்களை பார்த்து சிங்கங்கள் பயப்படத் தேவையில்லை. அந்த சிங்கங்களை அழைத்து தான் இன்றைக்கு பெருமைப்படுத்தி இருக்கிறோம். இவர்கள் அடையும் பெருமை, நமக்கான பெருமை என்றார். அனைவரும் உணர்ச்சி அடையும் வகையில் , எங்கள் தோள்கள் உங்களை தூக்கி சுமக்க தயாராக இருக்கிறது என்றார். தொடர்ந்து, மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களைப் பற்றி பல செய்திகளை குறிப்பிட்டு, இறந்தும் இருப்பாராக எப்படி அவர் வாழ்கிறார் என்பதை எல்லாம் நினைவு கூர்ந்து, அவரின் குடும்பத்திற்கு நாங்கள் இருக்கிறோம் ; இது எங்கள் குடும்பம் என்று அவரின் நினைவு போற்றி மிகுந்த மனநிறைவுடன் உரை நிகழ்த்தி,

வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு என்று நிறைவு செய்தார்.

நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும், சிறப்பாக அமைய உழைத்த அனைவருக்கும் பெரியார் திடல் மேலாளர்  ப.சீதாராமன் நன்றியுரை கூறினார்.

சுயமரியாதை குடும்பங்களின் சங்கமம் 

போட்டி உற்சாகத்துடன் பங்கேற்ற பெரியார் பிஞ்சுகள்

ஆண்டுதோறும் திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தைபெரியார் முத்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் திராவிடர் திருநாள் பொங்கல் பெருவிழா சுயமரியாதை குடும்பங்களின் சங்கமமாக மழலைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு துறைகளில் சாதனையாளர்களான தமிழர்களை அடையாளம் கண்டு தந்தைபெரியார் பெய ரில் விருது அளித்து பாராட்டப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று (17.1.2023) காலையிலிருந்தே  சென்னை பெரியார் திடலில் குடும்பம் குடும்பமாக கழகத்தினர் பெரியார் பிஞ்சுகளான மழலைகளுடன் குவிந்தனர். 

பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் அனை வருக்கும் இனிப்புப் பொங்கல், வடையுடன் வழங்கப்பட் டது. பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் சார்பில் இனிப்புப் பொங்கல் வழங்கப்பட்டது.

பகல் உணவு இடைவேளைக்குப்பின்னர்  பிற்பகல் நிகழ்வாக பெரியார் திடலில் அமைக்கப்பெற்றுள்ள தந்தை பெரியார் 21 அடி உயர முழு உருவச்சிலை முன்பாக அனைவரும் கூடினர்.  பெரியார் பிஞ்சுகளை உள்ளடக்கிய பெரியார் வீர விளையாட்டுக் குழுவினர்  பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டினர். இளைஞர்கள், பெண்கள் அனைவரையும் கரவொலி எழுப்பி உற்சாகமூட்டினர்.

நாள் முழுவதும் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மாலையில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற திராவிடர் திருநாள் விழா மேடையில் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் சான்றிதழ், இயக்க வெளியீடுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

சென்னைப் பெரியார் திடலில் சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம்!

       சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமத்தில் பங்கேற்றோர் தமிழர்              தலைவருடன்...

சென்னை. ஜன. 20- சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சியில் ஏராளமான இயக்க குடும்பங்களின் தோழர்கள் கலந்து கொண்டு, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் உற்சாகத்துடன் பங்கேற்று பரிசுகளை தட்டிச் சென்றனர்.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 29ஆம் ஆண்டை முன்னிட்டு, ”திராவிடர் திருநாள்” சென்னை பெரியார் திடலில் 17-01-2023 அன்று நடைபெற்றது. அத்துடன் கடந்த ஆண்டுகளைப் போலவே சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெரியார் திடலில் தந்தை பெரியார் சிலையை ஒட்டியுள்ள வெளியரங்கில் பகல் 11 மணியளவில் ”சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம்” எனும் பெயரிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. பெரியவர்கள் இருபாலருக்கும் வேக நடைப் போட்டி, செங்கல் தூக்குதல், சைக்கிள் டயர் உருட்டுதல், இசை நாற்காலி, சிறுவர்களிலும் இருபாலருக்கும் ஓட்டப் பந்தயம், வேக நடைப்போட்டி, சாக்குப் போட்டி, சைக்கிள் டயர் உருட்டுதல், பலூன் ரயில், ஸ்பூன் - எலுமிச்சம் பழம், குறிபார்த்து எறிதல் உள்ளிட்ட ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டன. 

இயக்கக் குடும்பத் தோழர்கள் மிகுந்த குதூகலத்துடன் பங்கேற்றுச் சிறப்பித்தனர். மாலை நடைபெற்ற ”திராவிடர் திருநாள்” நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், குடும்ப விழாவில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பித்தார்.

காலை முதல் குடும்ப விழா விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற பா.சு.ஓவியச் செல்வன் தலைமையில் மு.க.பகலவன், நா.பார்த்திபன், உடுமலை வடிவேல், மாட்சி, மு.கலைவாணன், பொன்னேரி செல்வி, பவானி, கி.மணிமேகலை, த. மரகதமணி, வை.கலையரசன், அன்பரசன்,  மு.க.முத்தரசன், மங்களபுரம் பா. பார்த்திபன், அரவிந்த், பெரியார், சமரசம், எருக்கஞ்சேரி கலைச் செல்வன், சிற்றரசு, கிஷோர், மணிவண்ணன், கணேசன், தமிழரசன், கலைமணி, சுரேஷ், அண்ணா.மாதவன், மகிழ் உள்ளிட்டோர் ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். குடும்ப விழா ஒருங்கிணைப்புப் பணிகளை துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், சீர்த்தி, பொதுக் குழு உறுப்பினர் பூவை செல்வி, ஆதிலெட்சுமி உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.

சென்னைப் பெரியார் திடலில் சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம்!

பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் - ருசிய கலைஞர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்

பெரியார் விருது அளிக்கப்பட்ட பெருமக்கள்

ஒரே குதூகலம் - திராவிடர் திருநாள் விழா வெகு சிறப்பு

சென்னை, ஜன. 18- சென்னைப் பெரியார் திடலில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 29ஆம் ஆண்டு திராவிடர் திருநாளாம் பொங்கல் விழா பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுடன் சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமமாக நேற்று (17.1.2023) நடைபெற்றது. ருசிய கலைஞர்களின் ஆடல் பாடல், பெருமைப்படத்தக்க தமிழினப் பெருமக்களுக்குப் பெரியார் விருது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளின் சங்கமமாக நடைபெற்றது. விழா சிறப்புரையை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆற்றினார். விழா விவரம்  வருமாறு:

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 29ஆம் ஆண்டு விழா , திராவிடர் திருநாள் பொங்கல் விழா ஆகியவை 17.01.2023 அன்று சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது.

சுயமரியாதை குடும்பங்களின் சங்கமம்!

காலையில் தொடங்கிய சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமத்தில் பெரியார் பிஞ்சுகள் தொடங்கி இளையோர், முதியோர் என்று வயது வேறுபாடின்றி விளையாட்டு போட்டி கள், உற்சாகமூட்டும் நடனம், சிலம்பம், பறை என்று மாலை வரை திராவிடர் திருநாள் கொண்டாட்டங்கள் தொடர்ந்தன.

தமிழர் கலையும்- ரஷ்ய நடன நிகழ்ச்சியும்!மாலை நிகழ்ச்சி அலங்காநல்லூர் வேலுஆசான் குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், அரங்கம் அதிரும் பறையுடன் தொடங்கியது. அதுவரை அரங்கில் இருந்த யாரும் கண்டு களித்திடாத ரஷ்யா நாட்டினரின் நடன நிகழ்ச்சி, அதிலும் நிகழ்ச்சியின் ஊடே தந்தை பெரியாரின் சோவியத் பயணம் குறித்தும், இந்திய-ரஷிய நட்புறவு தெற்கிலிருந்து தான் ஆரம்பித்தது, இன்றும் ஆசிரியர் அந்த நட்புறவை வலுப்படுத்தும் முதல் நபராக இருக்கிறார் போன்ற செய்திகளை எல்லாம் இந்திய-ரஷ்ய நட்புறவு கழக ஒருங்கிணைப்பாளர் தங்கப்பன் விவரித்தார். நிகழ்வின் முத்தாய்ப்பாக "சங்கே முழங்கு" எனும் பாரதிதாசன் பாடலை ரஷ்யர்கள் நடனத்தின் மூலம் முழங்கினர்.

வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!

நிகழ்வில், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார. வாழ்க பெரியார்! வெல்க திராவிடம் என்று கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையுரை நிகழ்த்த நிகழ்வு தொடங்கியது.

தமிழறிஞர். அவ்வை நடராசன் அவர்களுடைய படத் தினை கழகத் தலைவர் திறந்து வைத்தார்.

பாராட்டு!

பெரியார் பெருந்தொண்டர் சைதை.பாலு பற்றிய குறிப்பு களை தென் சென்னை மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி வாசித்தார். குறிப்பாக, 91 வயதை நெருங்கக் கூடிய அவரின் வாழ்க்கை குறிப்பு, அவருடைய சிந்தனை, கண்ட போர்க் களங்கள், திராவிடர் கழகத்தில் அவர் கண்ட களங்கள், சிறை ஆகியவற்றை தெரிவித்தார். அவரை பாராட்டி கழகத் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து, நினைவுப் பரிசினை வழங்கினார். இன்றைக்கும் தனது  தெருக்குரலின் மூலம் ஜாதிய கட்டமைப்புகளுக்கு எதிராக பாடல் வரிகளை எழுதி, இசைக்கும் தெருக்குரல் அறிவு அவர்களுக்கு தமிழர் தலைவரால் பாராட்டு செய்யப்பட்டது. அவரைப் பற்றிய அறிமுக குறிப்பினை பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் வாசித்தார்.

பெரியார் விருதுகள் 2023!

பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் 2023 ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது, எழுத்தாளர் வீ.மா.ச.சுபகுண ராஜன், குழலிசைக் கலைஞரும், திரைப்பட பின்னணி பாடகருமான அருண்மொழி (எ)நெப்போலியன் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது.

தமிழ் சமூகத்திற்கு நடைபெற்ற பெரு வெடிப்பு தந்தை பெரியார்!

பெரியார் விருதினை பெற்ற எழுத்தாளர் வீ.மா.ச.சுபகுண ராஜன் அவர்கள் தனது ஏற்புறையில் ; 

இது ஏற்புரை அல்ல; நன்றி உரையே! பெரியார் பெயரில் விருது பெற்றிருப்பதற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கி றேன் என்றும், காரணம் பெரியார் இல்லை என்றால், அவரது சிந்தனை இல்லை என்றால், உங்கள் முன்னாடி நிற்கும் நான் ஒருபோதும் தோன்றியிருக்க முடியாது என்றார்.இது எப்படி பெரியார் மண் என்று நிறைய பேர் கேள்வி கேட்பார்கள். உலகம் தோன்றியதற்கு காரணம், பெருவெடிப்பு (ஙிவீரீ ஙிணீஸீரீ) என்று அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படி, தமிழ் சமூகத்திற்கு நடைபெற்ற பெருவெடிப்பு பெரியார் தான் என்றார்.  கேரளம், மராட்டியம், மைசூர் போன்ற பகுதிகளில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. சில பகுதிகளில் தமிழ்நாட்டிற்கு முன்பே பல சமூக நீதி கருத்துகள் தோன்றியது. ஆனால் , அங்கு நடைபெறாத மாற்றங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றது என்றால் அதற்கு காரணம் தந்தை பெரியார் என்பதை பல செய்திகளுடன் விளக்கினார். பார்ப்பனியம் எங்கு இருந்தாலும் அதை அழித்து விட வேண்டும் என்பதில் பெரியார் எப்படி முனைப்பாக இருந்தார் என்பதை விளக்கி, பகுத்தறிவு , சுயமரியாதை, சமூக நீதி ஆகியவற்றை தமிழ் சமூகத்திற்கு கொடுத்து நம்மையெல்லாம் வழிநடத்த பெரியார் இருக்கிறார் என்பதை பதிவு செய்து, இந்த விருதுக்கு நான் தகுதியானவனா என்பது தெரியவில்லை; ஆனால் நன்றி சொல்வதற்கு தகுதியானவன் என்று ஆசிரியருக்கும், இந்த நிகழ்விற்காக உழைத்த தோழர்களுக்கும் நன்றி கூறினார்.

முதல் விருதே பெரியார் விருதுதான்!

பெரியார் விருதை பெற்று ஏற்புரை வழங்கிய அருண் மொழி (எ)என்ற நெப்போலியன் அவர்கள் தனது ஏற்புரையில்;

குக்கிராமத்தில், இசை என்றால் என்ன என்று தெரியாத ஒரு ஊரில் பிறந்த அவர் புல்லாங்குழலை தேர்ந்தெடுக்க வில்லை என்றும், புல்லாங்குழல் தான் தன்னை தேர்ந்தெடுத்திருக்கிறது என்றார். ஆறு, ஏழு வருடமாக மேடை கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்த தனக்கு இருந்த ஒற்றை நோக்கம், ஒரே ஒரு  முறை ,தான் வாசிக்கும் குழல் ஒளிப்பதிவில் வரவேண்டும் என்பதே. ஆனால் இயற்கை தன்னை விட்டு வைக்காமல் இசையோடு பயணிக்க வைத்தது என்றும், 32 ஆண்டு காலமாக இசை மேதை இளையராஜா அவர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் வாய்ப்பை பெற்றதாகவும், ஏறத்தாழ 43 ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்தும் இதுவரை ஒரு விருது கூட பெறவில்லை, தான் பெரும் முதல் விருதே பெரியார் விருதுதான் என்றார். இந்த விருதை பெறுவதற்காக தான் மற்ற விருதுகள் இத்தனை ஆண்டு காலம் தன்னை தேடி வராமல் இருந்தது என்றும், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விருது வழங்கிய அனைவருக்கும் நன்றி என்று, இதனால் அவர் அடையும் மட்டற்ற மகிழ்ச்சியை, ஆனந்தத்தை பதிவு செய்தார்.

ஆசிரியரை சந்தித்தது மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்!

நிகழ்வில், தமிழர் தலைவர் ஆசிரியரிடம் பாராட்டினை பெற்ற தெருக்குரல் அறிவு அவர்கள் தனது ஏற்புரையில்;

இந்த நாள் இவ்வளவு சிறப்பாக அமையும் என்று, தான் திட்டமிடவில்லை என்றும், தனது பாடல் காட்சியை பார்த்த உடனே தன்னை பாராட்ட வேண்டும் என்று ஆசிரியர் நினைத்ததை கூறி, இங்கு வந்து ஆசிரியரை சந்தித்தது தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக இருப்பதாகவும், தான் பள்ளிக்கூடத்தில் பயின்றபோது அரக்கோணம் பகுதியில் திராவிடர் கழக கூட்டம் நடைபெற்றுக் கொண் டிருக்கும், பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு கூட புரியும் வண்ணம் எப்படி அரசியல் பேசுவார்கள் என்றும், பகுத்தறிவு கருத்துகளை வீதியெங்கும் கொண்டு போய் சேர்த்த ஆணிவேரான மேடையில் நிற்பது பெருமையாக இருக்கிறது என்றார். இன்றைய தலைமுறை பெரியாருக்கும், அம்பேத் கருக்கும், திராவிட இயக்கத்திற்கும் நன்றி காட்ட கடமைப்பட்டுள்ளது என்றார். வாழ்வில் நம்முடைய எல்லா அம்சங்களும் சூறையாடப்படுகிறது. அதை எதிர்த்து, அதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு முறையேனும் பெரியார் திடலுக்கு வர வேண்டும் என்றார். சமூகம் பற்றிய புரிதலை, அந்த உணர்வை தனக்கு ஏற்படுத்தியதில் இப்படிப் பட்ட செய்திகளுக்கு மிக முக்கிய பங்கு இருப்பதாகவும்,  உணர்வெழுச்சி மட்டும் இப்போது தேவையில்லை,  சமத்துவம் சார்ந்த புரிதலுடன் கூடிய ஒரு பயணம் நமக்கு தேவைப்படுகிறது என்றும், இந்த சமயத்தில் தன்னை பாராட்டிய ஆசிரியருக்கும், அனைவருக்கும் தான் நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்று பதிவு செய்தார்.

தமிழறிஞர் அவ்வை நடராசனும் - ஆசிரியரும்!

அவ்வை அருள்மணி அவர்கள் ,தனது தந்தையார் அவரது மறைவுக்கு  முன்னாள் ஆசிரியருடன் இறுதியாக பகிர்ந்த மேடையை பற்றி கூறி, தனது தாயாரின் பெயர் இங்கர்சால் என்றும், அதே பெயரை தலைப்பாக வைத்து இதே மேடையில் அவரது தாயார் பேசியதை நினைவு கூர்ந்து, ஆசிரியருக்கும் அவர்கள் குடும்பத்திற்குமான உறவைப் பற்றி விளக்கி அனைவருக்கும் நன்றி கூறினார்.

எங்கள் தோள்கள் உங்களை தூக்கிச்

சுமக்க தயாராக இருக்கிறது!

சிறப்புரை நிகழ்த்திய ஆசிரியர் அவர்கள் தனது உரையில்; எல்லையற்ற மகிழ்ச்சி அடையும்போது பேச முடியாமல் போகும் அப்படி ஒரு தருணத்தில் தான் இருப்பதாகவும் , தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளும், ரஷ்ய கலை நிகழ்ச்சிகளும் எவ்வளவு இனிமையாக அமைந்தது என்பதை விவரித்து, அதில் முத்தாய்ப்பாக "சங்கே முழங்கு"  எப்படி அனைவரையும் ஈர்த்தது என்பதை பதிவு செய்தார். திருக்குறள்  கேட்டு பழகியவர்கள் எல்லாம் இப்போது தெருக்குரல் கேட்கிறார்கள் என்றார். கலை ஒரு சாரர் கையில் மட்டும் இருந்ததை மீட்டதே பெரியார் தான் என்றார். அந்த மீட்பு வேலையை தற்போது பெரியார் முத்தமிழ் மன்றம் பார்க்கிறது என்றும், அதற்கு மிக நேர்த்தியாக இது அனைத்தையும் செய்து முடித்த கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் , மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் இதற்காக உழைத்த அனைவரையும் நெகிழ்ந்து பாராட்டினார். இது ஒரு ஏணி; தமிழரை ஏற்றி விட வேண்டும் , ஏற்றம் பெற வேண்டிய தமிழர்களை ஏற்றி விட வேண்டும் என்று நினைக்கும் மேடை இது என்றார். திராவிடர்களுக்கு அறிவு பஞ்சமில்லை ; அவர்களை அடையாளம் காட்டும் வேலையை செய்வதற்கு நாங்கள் இருக்கிறோம். இருட்டில் இருப்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே திடலின் வேலை என்றார். பெரியார் அனைவருக்கும் உரியார்; ஒருவரைத் தவிர அவர்தான் நரியார் என்றும் அப்படிப்பட்ட நரியார்களை பார்த்து சிங்கங்கள் பயப்படத் தேவையில்லை. அந்த சிங்கங்களை அழைத்து தான் இன்றைக்கு பெருமைப்படுத்தி இருக்கிறோம். இவர்கள் அடையும் பெருமை, நமக்கான பெருமை என்றார். அனைவரும் உணர்ச்சி அடையும் வகையில் , எங்கள் தோள்கள் உங்களை தூக்கி சுமக்க தயாராக இருக்கிறது என்றார். தொடர்ந்து, மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராசன் அவர்களைப் பற்றி பல செய்திகளை குறிப்பிட்டு, இறந்தும் இருப்பாராக எப்படி அவர் வாழ்கிறார் என்பதை எல்லாம் நினைவு கூர்ந்து, அவரின் குடும்பத்திற்கு நாங்கள் இருக்கிறோம் ; இது எங்கள் குடும்பம் என்று அவரின் நினைவு போற்றி மிகுந்த மனநிறைவுடன் உரை நிகழ்த்தி,

வாழ்க பெரியார்! வாழ்க தமிழ்நாடு என்று நிறைவு செய்தார்.

நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும், சிறப்பாக அமைய உழைத்த அனைவருக்கும் பெரியார் திடல் மேலாளர்  ப.சீதாராமன் நன்றியுரை கூறினார்.

சுயமரியாதை குடும்பங்களின் சங்கமம் 

போட்டி உற்சாகத்துடன் பங்கேற்ற பெரியார் பிஞ்சுகள்

ஆண்டுதோறும் திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தைபெரியார் முத்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் திராவிடர் திருநாள் பொங்கல் பெருவிழா சுயமரியாதை குடும்பங்களின் சங்கமமாக மழலைகள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு துறைகளில் சாதனையாளர்களான தமிழர்களை அடையாளம் கண்டு தந்தைபெரியார் பெய ரில் விருது அளித்து பாராட்டப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று (17.1.2023) காலையிலிருந்தே  சென்னை பெரியார் திடலில் குடும்பம் குடும்பமாக கழகத்தினர் பெரியார் பிஞ்சுகளான மழலைகளுடன் குவிந்தனர். 

பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் அனை வருக்கும் இனிப்புப் பொங்கல், வடையுடன் வழங்கப்பட் டது. பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் சார்பில் இனிப்புப் பொங்கல் வழங்கப்பட்டது.

பகல் உணவு இடைவேளைக்குப்பின்னர்  பிற்பகல் நிகழ்வாக பெரியார் திடலில் அமைக்கப்பெற்றுள்ள தந்தை பெரியார் 21 அடி உயர முழு உருவச்சிலை முன்பாக அனைவரும் கூடினர்.  பெரியார் பிஞ்சுகளை உள்ளடக்கிய பெரியார் வீர விளையாட்டுக் குழுவினர்  பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டினர். இளைஞர்கள், பெண்கள் அனைவரையும் கரவொலி எழுப்பி உற்சாகமூட்டினர்.

நாள் முழுவதும் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மாலையில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற திராவிடர் திருநாள் விழா மேடையில் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் சான்றிதழ், இயக்க வெளியீடுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

சென்னை புத்தகக்காட்சியில் தமிழர் தலைவர் வாசகப்பார்வையாளர்கள் உற்சாகம்

சென்னை, ஜன. 19- தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் 46ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சிஏ மைதானத்தில் அமைக்கப்பட்டு 6.1.2023 முதல் 22.1.2023 முடிய நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக தமிழ்நாடு அரசின் சார்பில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி அமையப்பெற்றது குறிப்பிடத்தக்கது. 

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் எஃப் 18 அரங்கில் இயக்க வெளியீடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அரங்கில் தந்தை பெரியார் முழு உருவச்சிலை அமைக்கப்பட்டு அனைவரின் கவனத்தையும், கருத்தையும் கவர்ந்துகொண்டிருக்கிறது. வாசகப்பார்வையாளர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் தந்தைபெரியார் உருவச்சிலை அருகில் செல்ஃபி படம் எடுத்து மகிழ்கின்றனர்.

தந்தை பெரியார் பேச்சுகள், எழுத்தாக்கங்கள் தொகுப்புகளாக பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இயக்க வெளியீடுகளாக வெளியிடப்பட்டு வருகின்றன. அழகிய முறையில் அச்சிடப்பட்டு முற்றிலும் மலிவுப்பதிப்புகளாக வெளியிடப்பட்டு வருகின்றன. தந்தை பெரியார் கருத்துகளின் கருவூலங்களாக கடவுள், மதம், பெண்ணுரிமை, ஜாதி, பகுத்தறிவு, கடவுள் - புராணங்கள், திருக்குறள்-வள்ளுவர் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தொகுக்கப்பட்டு பெரியார் களஞ்சியங்களாக தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

தந்தைபெரியார் குடிஅரசு ஏட்டில் எழுதிய கட்டுரைகள் இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளவேண்டிய கொள்கை விளக்கங்களாக உள்ளன.  பெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள் 1925 ஆம் ஆண்டு தொடக்கம் 1949 வரையிலான தொகுப்புகள் வெளியிடப் பட்டுள்ளன.

 தந்தைபெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், நாவலர் இரா.நெடுஞ்செழியன், இனமான பேராசிரியர் க.அன்பழகன், ம.சிங்காரவேலர், பேராசிரியர் இராமநாதன், கவிஞர் கலி.பூங்குன்றன், மஞ்சை வசந்தன்,கு.வெ.கி.ஆசான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், பகுத்தறிவாளர்களின் புத்தகங்கள் இயக்க வெளியீடுகளாக வெளியிடப்பட்டுள்ளன. 

அண்ணல் அம்பேத்கர், சாக்ரட்டீஸ், இங்கர்சால், வால்டேர்,, பெட்ரன்ட் ரசல் உள்ளிட்ட பன்னாட்டு அறிஞர்கள், பகுத்தறிவாளர்களின் புத்தகங்கள், ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதிய தி காட் டில்யூஷன் ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்க நூலாக கடவுள் ஒரு பொய் நம்பிக்கை மற்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதியுள்ள புத்தகங்கள், பல்வேறு தலைப்புகளில் தமிழர் தலைவர் ஆற்றிய சிறப்பு சொற் பொழிவுகள், பேட்டிகள், அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து புத்தகங்களும் மலிவுப்பதிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.

கீதையின் மறுபக்கம் (ஆய்வு நூல்), வாழ்வியல் சிந்தனைகள் (16 தொகுதிகள்),  பெண் ஏன் அடிமையானாள்?, மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி, இனிவரும் உலகம், சித்திரபுத்திரன் கட்டுரைகள், அன்னை மணியம்மையாரின் சிந்தனை முத்துகள், பெரியாரியல், சமூகநீதி, வகுபபுரிமை வரலாறு, திராவிட இயக்கத் தலைவர்கள், திராவிட இயக்க வரலாறு என அள்ள அள்ளக் குறையாத கருத்துக் கரு வூலங்களாக இயக்க வெளியீடுகள் எஃப் 18 அரங்கில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

பெரியார் சுயமரியாதைப்பிரச்சார நிறுவன அரங்கில் தமிழர் தலைவர்

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த 16.1.2023 அன்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அரங்கில் வாசகப்பார்வையாளர்களை சந்தித்தார். பலரும் பெரியார் பிஞ்சுகளுடன் குடும்பம் குடும்பமாக இயக்க வெளியீடுகளை வாங்கியதுடன், தமிழர்தலைவரிடம் கையொப்பம் பெற்று மகிழ்ந்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அனைவரிடமும் நலனை விசாரித்து, பிள்ளைகளிடம் நன்கு படிக்குமாறு வாழ்த்து தெரிவித் தார்.

தமிழர் தலைவர் வருகையின் போது தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புத்தகக் காட்சிக்கு வருகை தந்தார்.  தமிழர் தலைவருடன் அமைச்சர் உரையாடினார்.

புத்தகக்காட்சியில் தமிழர் தலைவர் வருகை அறிந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகப் பார்வையாளர்கள் அவருடன் கலந்துரையாடி மகிழ்ந்தனர்.

அன்னை மணியம்மையார் 45ஆம் நினைவு நாளில் தமிழர் தலைவர் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிப்பு, நினைவிடத்தில் மரியாதை

அன்னை மணியம்மையார் 45ஆவது நினைவு நாளையொட்டி நினைவிடத்தில் திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை தோழர்கள் மரியாதை

அன்னை மணியம்மையார் 45ஆவது நினைவு நாளையொட்டி நினைவிடத்தில் திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை தோழர்கள் மரியாதை செலுத்தினர் (சென்னை பெரியார் திடல், 16.3.2023)

மயிலாப்பூரில் சுவர் எழுத்து பரப்புரை

"இன்றைய விடுதலை படித்தீர்களா?"

"இன்றைய விடுதலை படித்தீர்களா?" மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி அருகில் மயிலாப்பூர் பகுதி திராவிடர் கழகத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ள சுவரெழுத்து பிரச்சாரம்.

முனைவர் ந.க. மங்களமுருகேசனுக்கு கழகத் தலைவர் இறுதி மரியாதை

மறைந்த பகுத்தறிவுப் பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன் உடலுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தி அவரது மகனுக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன்: கழகப் பொருளாளர் வீ. குமரேசன் மற்றும் தோழர்கள். (சென்னை 18.3.2023)

ஞாயிறு, 12 மார்ச், 2023

''எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை!'' என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரலாற்று ஒளிப்படக் கண்காட்சி - தமிழர் தலைவர் பாராட்டு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளினையொட்டி ''எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை'' என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள வரலாற்று ஒளிப்படக் கண்காட்சியை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பார்வையிட்டு, வியந்து பாராட்டினார்.  உடன் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியாராஜன், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உள்ளனர் (சென்னை, 12.3.2023) 

சனி, 11 மார்ச், 2023

நெருக்கடி நிலை காலத்திலும் நிமிர்ந்து நின்றவர் அன்னை மணியம்மையார் அந்தத் துணிவோடு மதவாத சக்திகளை எதிர்த்து முறியடிப்போம்

அன்னை மணியம்மையார் சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

வெள்ளி, 10 மார்ச், 2023

கற்போம் - அவர் வழி நிற்போம்!அன்னையார்தம் பிறந்த நாளில் கழகத் தலைவரின் அறிக்கை

அன்னை மணியம்மையார் 104ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு மாலை அணிவித்து - நினைவிடத்தில் மரியாதை

வியாழன், 9 மார்ச், 2023

தமிழர் தலைவருக்கு விருது, சென்னை பெரியார் திடலில் காணொலியில் தோழர்கள் பங்கேற்பு

சென்னை பெரியார் திடலில் காணொலியில் தோழர்கள் பங்கேற்பு

சென்னை, செப். 27- கனடா நாட் டின் டொராண்டோ நகரில் சமூகநீதிக்கான 3ஆவது பன் னாட்டு மனிதநேய மாநாட்டில் காணொலி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரை ஆற்றினார்கள்.  

இரண்டாம் நாளில் (25.9.2022) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்க ளுக்கு கனடா மனிதநேய அமைப்பின் சார்பில்  2022ஆம் ஆண்டுக்கான ‘மனிதநேயர் சாதனை விருது’ (2022 Humanist Achievement Award) வழங் கப்பட்டது.

கனடா மனிதநேயர் அமைப்பின் (Humanist, Canada) சார்பில் 2022ஆம் ஆண் டுக்கான “மனிதநேயர் சாதனை விருதினை” (2022 Humanist Achievement Award) மார்ட் டின் ஃபிளிர்த் வழங்கினார். திராவிடர் கழகப்பொருளாளர் வீ.குமரேசன்அமெரிக்கா பெரியார் பன்னாட்டு மய்ய பொருளாளர் அருள்செல்வி பாலகுரு,  ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அமெரிக்கா பெரியார் பன் னாட்டு மய்யத்தின்  இயக்குநர் மருத்துவர் சிகாகோ சோம.இளங்கோவன், முனைவர் கண்ணபிரான்  ரவிசங்கர் மற் றும் மாநாட்டில் பங்குபெற்ற பல்வேறு அமைப்புகளின் பேரா ளர்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தனர். 

கனடா மாநாட்டு அரங்கி லும், சென்னை பெரியார் திடலில் காணொலியிலும் கலந்துகொண்ட தோழர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி, தந்தைபெரியார் வாழ்க, அன்னை மணியம்மையார் வாழ்க, தமிழர் தலைவர் வாழ்க என முழக்கமிட்டனர்.

சென்னை பெரியார் திட லில் காணொலியில் விருதைப் பெற்றுக்கொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரை யாற்றினார்.

விருதினைப் பெற்றுக் கொண்ட தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் மோகனா அம்மையாருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன், துணைப்பொதுச்செயலா ளர் பொறியாளர் ச.இன்பக் கனி,  சி.வெற்றிசெல்வி உள் ளிட்ட மகளிர் அணியினர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் வர லாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுரு கேசன்,மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, வழக்குரைஞர் ம.வீ.அருள்மொழி, மகளிர் பாசறை த.மரகதமணி, ஆடிட் டர் இராமச்சந்திரன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், சென்னை மண்டல செயலாளர் தே.செ. கோபால், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கோ.வீ. ராகவன், செங்குட்டுவன், அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ்செல்வன், வடசென்னை மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணேசன், அமைப்பாளர் புரசை அன்புசெல்வன், ஆவடி மாவட்ட செயலாளர் க.இள வரசன், அமைப்பாளர் உடு மலை வடிவேல், இளைஞரணி பொழிசை கண்ணன், சோ.சுரேஷ், தளபதி பாண்டியன், க.கலை மணி, கார்வேந்தன், சைதை தென்றல், விழிகள் வேணு கோபால், பெரியார் நூலக வாசகர் வட்டம் ஜனார்த்தனம், தென்சென்னை பகுத்தறிவா ளர் கழகம் மாணிக்கம், ச.இராஜசேகரன், வெ.ஞானசேக ரன், வழக்குரைஞர் தமிழ்செல் வன் உள்பட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

விருது பெற்றதைப் பாராட்டி கழகத் துணைப் பொதுச் செய லாளர் பொறியாளர் ச.இன்பக் கனி, சென்னை மண்டல கழக செயலாளர் கொடுங்கையூர் கோபால், தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன் ஆகியோர் தலா ரூ. 1000 (ஆயிரம்) நன்கொடை வழங் கினர்.

ஞாயிறு, 5 மார்ச், 2023

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்களுக்கு பாராட்டு

விடுதலை நாளேடு,புதன் 12.10.2022

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்களுக்கு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் "பெரியார் மணியம்மையார் திருமணம்" என்ற நூலை வழங்கி, பயனாடை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். உடன் திருவல்லிக்கேணி பகுதி கழகத் தோழர் அப்துல்லா

கழகத் தலைவரால் திருத்தி அமைக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள்

 தாராபுரம் கழக மாவட்டம்

தாராபுரம், மடத்துகுளம், உடுமலைப்பேட்டை, மூலனூர், வெள்ளக்கோவில், குண்டடம், குடிமங்கலம் ஒன்றியங்கள்

தாராபுரம் கழக மாவட்ட பொறுப்பாளர்கள்

மாவட்டத் தலைவர்: க.கிருஷ்ணன்

செயலாளர்: வழக்குரைஞர் ஜெ.தம்பி பிரபாகரன்

அமைப்பாளர்: ஆ.முனீஸ்வரன்

துணைத் தலைவர்: நாசும் புள்ளியான்

துணைச் செயலாளர்: நா.மாயவன்

பொதுக்குழு உறுப்பினர்கள்: 

கணியூர் கி.மயில்சாமி, தாராபுரம் வழக்குரைஞர் நா.சக்திவேல், தாராபுரம் க.சண்முகம்.

தாராபுரம் மாவட்ட இளைஞரணி

இளைஞரணித் தலைவர்: கி.இளந்தென்றல்

இளைஞரணி செயலாளர்: செ.முத்துகிருஷ்ணன்

இளைஞரணி அமைப்பாளர்: த.இனியன்

திருப்பூர் கழக மாவட்டம்

திருப்பூர், அவினாசி, பல்லடம், பொங்கலூர், ஊத்துக்குளி, காங்கயம் ஒன்றியங்கள், 

திருப்பூர் மாநகரம்

திருப்பூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள்

தலைவர்: யாழ்.ஆறுச்சாமி

செயலாளர்: ப.குமரவேல்

துணைத் தலைவர்: முத்து.முருகேசன்

அமைப்பாளர்: அ.ராமசாமி

துணைச் செயலாளர்: நளினம் நாகராஜ்

பொதுக்குழு உறுப்பினர்கள்: 

ஆறுமுகம், இல.பாலகிருட்டிணன்.

திருப்பூர் மாநகர பொறுப்பாளர்கள்

மாநகர தலைவர்: பா.மா.கருணாகரன்

மாநகர செயலாளர்: பெ.செல்வம்

மாநகர அமைப்பாளர்: ஆசிரியர் முத்தையா

மாநகர துணை செயலாளர்: செ.கணேசன்

திருப்பூர் மாவட்ட இளைஞரணி

இளைஞரணி தலைவர்: வானவில் துரைமுருகன்

இளைஞரணி செயலாளர்: கு.திலீபன்

திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர்: ச.நவயுவன்

கோவை மாநகர பகுதி செயலாளர்கள்

கிழக்கு பகுதி செயலாளர்: இல.கிருஷ்ணமூர்த்தி

மேற்கு பகுதி செயலாளர்: 

வேலாண்டிபாளையம் பிரபு

வடக்கு பகுதி செயலாளர்: கவி.கிருட்டிணன்

தெற்கு பகுதி செயலாளர்: குமரேசன்

ஒன்றிய பொறுப்பாளர்கள்

தொண்டாமுத்தூர் ஒன்றிய அமைப்பாளர்: 

பா.செயக்குமார்

மதுக்கரை ஒன்றிய தலைவர்: 

எட்டிமடை ந.மருதமுத்து

மதுக்கரை ஒன்றிய செயலாளர்: பொன்ராஜ்

சூலூர் ஒன்றிய அமைப்பாளர்: கனகராஜ்

கோவை மாவட்ட இளைஞரணி

இளைஞரணி தலைவர்: இரா.சி.பிரபாகரன்

இளைஞரணி செயலாளர்: சசிகுமார்

கோவை மாவட்ட திராவிட மாணவர் கழகம்

மாவட்ட தலைவர்: த.க.கவுதமன்

மாவட்ட செயலாளர்: பெ.தமிழ்ச்செல்வன்

மாவட்ட அமைப்பாளர்: கா.கவுதமன்

கோயம்புத்தூர் கழக மாவட்டம்

கோவை மாநகரம், தொண்டாமுத்தூர், சூலூர், 

மதுக்கூர், கிணத்துக்கடவு ஒன்றியங்கள்

கோவை மாவட்ட பொறுப்பாளர்கள்

மாவட்ட காப்பாளர்கள்: 

வசந்தம் கு.இராமச்சந்தின், ம.சந்திரசேகர்

மாவட்ட தலைவர்: தி.க.செந்தில்நாதன்

மாவட்ட செயலாளர்: க.வீரமணி

மாவட்ட அமைப்பாளர்: மு.தமிழ்செல்வம்

மாவட்ட துணை தலைவர்: ஆட்டோ சக்தி

மாவட்ட துணை செயலாளர்: தி.க.காளிமுத்து

பொதுக்குழு உறுப்பினர்கள்: 

பழ.அன்பரசு, ச.திலகமணி

கோவை மாநகர திராவிடர் கழகம்

மாநகர தலைவர்: வே.தமிழ்முரசு

மாநகர செயலாளர்: ச.திராவிடமணி

மாநகர அமைப்பாளர்: யாழ்.வெங்கடேசு

புதுச்சேரி மண்டலம்

காப்பாளர் - இரா.சடகோபன்

மண்டல தலைவர் - வே.அன்பரசன்

மண்டல செயலாளர் - கி.அறிவழகன்

மண்டல துணைத் தலைவர் - மு.குப்புசாமி

மண்டல அமைப்பாளர் - இர.இராசு

விடுதலை வாசகர் வட்டம் தலைவர் - கோ.மு.தமிழ்ச்செல்வன்

மயிலாடுதுறை மாவட்டம்

துணைத் தலைவர்: செம்பனார்கோயில் அன்பழகன்

இளைஞரணி தலைவர்: க.அருள் தாஸ்

மாணவர் கழக அமைப்பாளர்: அ.திலீபன்

செம்பனார்கோயில் ஒன்றியம்

தலைவர்: டி.கனகலிங்கம்

செயலாளர்: எஸ்.பி.கே.கவுதமன்

குத்தாலம் ஒன்றியம் 

இளைஞரணி தலைவர்: ஜான்சன் 

இளைஞரணி செயலாளர்: தமிழ்மாறன்

மயிலாடுதுறை நகரம் 

பகுத்தறிவாளர் கழக தலைவர்: க.செல்வராஜ்

- கலி.பூங்குன்றன், துணைத் தலைவர்

(கழகத் தலைவர் ஆணைப்படி)