ஞாயிறு, 31 ஜூலை, 2022

அரியலூர் படைத்தது அரும்பெரும் வரலாற்றை!

வெள்ளி, 29 ஜூலை, 2022

அமைச்சர் மற்றும் பல்வேறு தோழர்கள் விடுதலை சந்தா, நன்கொடை வழங்கினர் (தென் சென்னை-44 ஆண்டு சந்தா)

      July 29, 2022 • Viduthalai

தென்சென்னை மாவட்ட தலைவர்  இரா. வில்வநாதன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்  44  ஆண்டு விடுதலை சந்தாவுக்கான  தொகை ரூ.79,200அய் வழங்கினார். உடன்  தென்சென்னை மாவட்ட செயலாளர்  செ.ர.பார்த்தசாரதி. (பெரியார் திடல் - 26.07.2022).

புதன், 27 ஜூலை, 2022

திராவிட மகளிர் கொண்டாடிய பவளவிழா பிறந்தநாள் மாட்சி

தென் சென்னை மாவட்டத்தில் "விடுதலை" சந்தா சேர்ப்பை விரைவில் முடிக்க கலந்துரையாடலில் முடிவு


சென்னை, ஜூலை 27- தென் சென்னை மாவட்டத்தில் விடுதலை நாளேட்டிற்கு சந்தா சேர்க்கும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது. 

மேலும் விரைவு படுத்தி மிக விரைவில் சந்தா இலக்கை முடிப்ப தற்காக சைதாப்பேட்டை, கோடம் பாக்கம் சாலையில் உள்ள அமைப் பாளர் மு.ந.மதியழகன் இல்லத்தில் தென் சென்னை மாவட்டத் தினுடைய கலந்துரையாடல் கூட் டம் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையிலும் அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், தே.செ.கோபால் மற்றும் இரா. வில்வநாதன் ஆகியோர் முன்னிலையிலும் நடை பெற்றது.

அமைப்பாளர் மு.ந.மதியழகன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர்கள் கோ.வீ. ராகவன், சா.தாமோதரன், இளைஞர் அணி மண்டல அமைப்பாளர் மு.சண்முகப்பிரியன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ந.மணி துரை, ஆயிரம் விளக்கு மு.சேகர் மற்றும் சூளைமேடு கோபால கிருஷ்ணன் போன்றோர் விரைவில் சந்தா சேர்ப்பது குறித்தும் ஏற் கெனவே சந்தா சேர்ப்பு பணியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட அனு பவங்களையும் கருத்துகளையும்  எடுத்துரைத்தனர். 

சூளைமேடு ச. மாரியப்பன் நன்றி கூறினார்.

------_-----++++++++-------++++------+++++

தென் சென்னை மாவட்டத்தில் 'விடுதலை' சந்தா சேர்ப்பை விரைவில் முடிக்க ஏற்பாடு

சென்னை, ஜூலை 21- தென் சென்னை மாவட்டத்தில் விடுதலை நாளேட்டிற்கு சந்தா சேர்க்கும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது. மேலும் விரைவு படுத்தி மிக விரைவில் சந்தா இலக்கை முடிப்பதற்காக சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் சாலையில் உள்ள அமைப்பாளர் மு.ந.மதியழகன் இல்லத் தில் தென் சென்னை மாவட்டத்தினுடைய கலந்துரையாடல் கூட்டம் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமை யிலும் அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், தே.செ.கோபால் மற்றும் இரா. வில்வ நாதன் ஆகியோர் முன்னிலையிலும் நடை பெற்றது.

அமைப்பாளர் மு.ந.மதியழகன், செயலா ளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், இளை ஞரணி மண்டல அமைப்பாளர் மு.சண்முகப் பிரியன், இளைஞர் அணி மாவட்ட செய லாளர் ந.மணிதுரை, ஆயிரம் விளக்கு மு.சேகர் மற்றும் சூளைமேடு கோபாலகிருஷ் ணன் போன்றோர் விரைவில் சந்தா சேர்ப்பது குறித்தும் ஏற்கெனவே சந்தா சேர்ப்பு பணி யில் ஈடுபட்ட போது ஏற்பட்ட அனுபவங் களையும் கருத்துகளையும்  எடுத்துரைத்தனர். 

சூளைமேடு ச. மாரியப்பன் நன்றி கூறினார்.

ஞாயிறு, 24 ஜூலை, 2022

சுயமரியாதைச் சுடரொளி இராம. அரங்கண்ணல் துணைவியார் திருமதி ஆண்டாள் மறைவு : கழகத் தலைவர் இரங்கல், ஆறுதல்


தி.மு.க.வின் துவக்க கால முன்னோடிகளில் ஒருவரும், 'விடுதலை' நாளேட்டின் மேனாள் துணையாசிரியரும்,  முத்தமிழறிஞர் கலைஞரின் உற்ற தோழரும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் நண்பருமான இராம. அரங்கண்ணல் துணைவியார் திருமதி ஆண்டாள் அம்மையார் (வயது 87) நேற்று  (23.7.2022) சென்னை கோபாலபுரம் இராமசாமித் தெருவில் உள்ள இல்லத்தில் மறைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

ஆண்டாள் அம்மையார் தனது வாழ்நாள் முழுவதும் விருந்தோம்பலில்  சிறந்தோங்கிய பான்மையராவார்.   

அம்மையாரின் உடலுக்கு கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (24.7.2022) காலை 8.30 மணியளவில் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். 

இராம. அரங்கண்ணல் - ஆண்டாள் ஆகியோரின் மகன்கள்   பொறியாளர் அ.அசோகன் அரங்கண்ணல், டாக்டர் அ.அருள் (இங்கிலாந்து), அ.அன்புதுரை (மலேசியா) அ.ஆனந்தன், டாக்டர் அ.பொன்னுதுரை ஆகியோரிடம் அம்மையாரின் மறைவிற்குத் தமிழர் தலைவர் ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்தார்.

தமிழர் தலைவருடன் சென்ற கழகப் பொதுச் செயலாளர் 

வீ. அன்புராஜ், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, ஆடிட்டர் அ. இராமச் சந்திரன் ஆகியோரும் மறைந்த   அம்மையாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.  இறுதி நிகழ்வு இன்று  நடைபெற்றது.  


தென் சென்னையில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி (அமைச்சர்)

சட்டக்கதிர் வி.ஆர்.எஸ். சம்பத் அவர்களின் தாயார் கமலம்மாள் இராஜசேகரம் படத்திறப்பு


103  ஆண்டுகள் வாழ்ந்த கமலம்மாள் இராஜசேகரம் அவர்களின் படத்தைத் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.  நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, வி.அய்.டி. பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ். ஜெகத்ரட்சகன், எஸ்.எஸ். பழனி மாணிக்கம் மற்றும் வி.ஜி. சந்தோசம், மருத்துவர் காந்தராஜ், வி.ஆர்.எஸ். சம்பத் ஆகியோர் உடன் உள்ளனர். (பாம்குரோவ் ஹோட்டல், 23-07-2022)

தென்சென்னையில் விடுதலை சந்தா சேர்க்கும் பணி (மக்களவை உறுப்பினர், அமைச்சர்)


திராவிட முன்னேற்றக் கழக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, பத்து ஓர் ஆண்டுக்கான 'விடுதலை' சந்தாக்களையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அய்ந்து அரையாண்டு சந்தாக்களையும் தென் சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர. பார்த்தசாரதி ஆகியோரிடம் வழங்கினர்.

வெள்ளி, 22 ஜூலை, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! (தென்சென்னை)

திங்கள், 18 ஜூலை, 2022

சென்னை தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர், வழக்குரைஞர் சு.ஜெயந்தி விடுதலை ஆண்டு சந்தா வழங்கினார்.

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!
சென்னை தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி துணை அமைப்பாளர், வழக்குரைஞர் சு.ஜெயந்தி விடுதலை ஆண்டு சந்தாவை சென்னை மண்டல இளைஞர் அணி அமைப்பாளர் மு. சண்முகப்பிரியனிடம் வழங்கினார், உடன் தென்சென்னை இளைஞர் அணி செயலாளர் ந. மணிதுரை. (17.07.2022).

திருவல்லிக்கேணி பாரதி சாலையில் கடைவீதிப்பிரசாரம்

கடைவீதிப்பிரசாரம்

ஜூலை 30இல் அரியலூரில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட்டினை முன்னிட்டு தென் சென்னை மாவட்ட இளைஞரணி சார்பாக சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.சண்முகப் பிரியன் தலைமையில் திருவல்லிக்கேணி பாரதி சாலையில் கடைவீதிப்பிரசாரம் நடைபெற்றது. இதில் தென் சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன், தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

116ஆவது மாமன்ற உறுப்பினர் மற்றும் மாமன்ற ஆளுங் கட்சி துணைத் தலைவருமான ஏ.ஆர்.பி.எம். காமராஜ் விடுதலை சந்தா வழங்கினார்.

திருவல்லிக்கேணி திமுக பகுதி கழக செயலாளரும் 116ஆவது மாமன்ற உறுப்பினர் மற்றும் மாமன்ற ஆளுங் கட்சி துணைத் தலைவருமான ஏ.ஆர்.பி.எம். காமராஜ் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் செயலாளர் செ.ர.பார்த்த சாரதியிடம் விடுதலை நாளேட்டிற்கு அய்ந்து அரையாண்டு சந்தா வழங்கினார். 

ஞாயிறு, 17 ஜூலை, 2022

தமிழர் தலைவரிடம் ‘விடுதலை' சந்தாக்கள் வழங்கல் (சண்முகப்பிரியன்)


படம் 1: பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராஜன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் 5 ஆண்டு விடுதலை சந்தாவுக்கான காசோலையை வழங்கினார் (12.07.2022).  படம் 2: சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.சண்முகப்பிரியன் - வி.விஜித்ரா இணையரின் மகன் ச.வி.இன்பா (எ) ராவணப்பிரியனின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து அரையாண்டு விடுதலை சந்தா வழங்கினர் (12.07.2022). படம் 3: வடசென்னை மாவட்ட அமைப்பாளர் அன்புச்செல்வன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை ஓராண்டு சந்தா வழங்கினார். (9.7.2022, பெரியார் திடல்)

பேராசிரியர் மு. நாகநாதன் நூல்கள்: தமிழர் தலைவர் வெளியிட்டார்


சென்னை லயோலா கல்லூரியில்  பேராசிரியர் மு. நாகநாதன் எழுதிய  "வளர்ச்சியா? வீழ்ச்சியா?",  "பொறிகள்",  "Dravidian Political Economy" ஆகிய முன்று நூல்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  வெளியிட்டார். இவ்விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி அரிபரந்தாமன், இந்தியக் கடல்சார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கே.அசோக் வரதன் ஷெட்டி (இ.ஆ.ப. ஓய்வு), சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர்  முனைவர் இராமு. மணிவண்ணன் மற்றும் லயோலா கல்லூரியின் சமூக அறிவியல் மய்யத்தின் இயக்குநர் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி ஆகியோர் பங்கேற்றனர். (9.7.2022)

வெள்ளி, 15 ஜூலை, 2022

கல்வி வள்ளல் காமராசரின் 120 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்றுஉருவப் படத்திற்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கல்வி வள்ளல் காமராசரின் 120 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2022) சென்னை சிம்சன் (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கல்வி வள்ளல் காமராசரின் 120 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2022) சென்னை சிம்சன்  (ஜிம்கானா கிளப்) அருகில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், கழக மாநில வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், அமைப்புச் செயலாளர் தருமபுரி ஊமை.ஜெயராமன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூர்பாண்டியன், மற்றும் பொறுப்பாளர்கள், தோழர்கள்.

---------+++++++------+++++++----+++++--------

கல்வி வள்ளல் காமராசர் 120ஆம் ஆண்டு பிறந்தநாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஜூலை 15 கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் 120ஆம் ஆண்டு பிறந்தநாளான இன்று (15.7.2022 காலை 9 மணியளவில் சென்னை அண்ணாசாலை, பெரியார் பாலம் அருகில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும், காமராசரின் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர், வீ.குமசேரன், கழக மாநில வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை ஜெயராமன், மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், அமைப்பாளர் செந்தூரபாண்டியன், சென்னை மண்டல செயலாளர் தே.செ. கோபால், வடசென்னை மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன் செயலாளர் தி.செ.கணேசன், பெரியார் நூலக வாசகர் வட்டம் செல்லப்பன், நா.பார்த்திபன், அ.வெ.முரளி, சி.வெற்றிச்செல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, க.சுமதி, நித்யா

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் மு.சண்முகப்பிரியன், தென்சென்னை இளைஞரணி தலைவர் ச.மகேந்திரன், செயலாளர் ந.மணிதுரை, கோடம்பாக்கம் ச.மாரியப்பன், பி.டி.சி.இரோஜந்திரன், செவ்வியன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், கே.ராஜேந்திரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்று மரியாதை செலுத்தினர்.


திங்கள், 11 ஜூலை, 2022

அரும்பாக்கம் கோ.பா.சாரதி மறைவு

புதன், 6 ஜூலை, 2022

மணவிழா மகிழ்வாக ஆசிரியரிடம் சந்தாக்கள் வழங்கல் (இரா.வில்வநாதன்- வி.வளர்மதி)


தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் - வி.வளர்மதி இணையர் 23ஆம் ஆண்டு மண நாள் மகிழ்வாக விடுதலை மற்றும் உண்மை சந்தாக்களுக்கான தொகை ரூ.2100அய் தமிழர் தலைவர்  ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.

(சென்னை, 19.4.2021

திங்கள், 4 ஜூலை, 2022

தென்சென்னை கடைவீதி பரப்புரை வசூல்


அரியலூர் இளைஞர் அணி மாநில மாநாட்டிற்காக 3.7.2022 மாலை 6மணி முதல் 9 மணி வரை  தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதியில் இளைஞர் அணி சார்பில் இரா. மாரிமுத்து தலைமையில் கடைவீதி வசூல் நடைபெற்றது, பொறியாளர் ஈ.குமார் வசூலை துவக்கி வைத்தார். மு.சண் முகப்பிரியன், ச.மகேந்திரன். ந.மணிதுரை, வேல்முருகன், ஜீவன் ஆகிய தோழர்கள் பங்கேற்றனர்.

சனி, 2 ஜூலை, 2022

திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி 'விடுதலை'க்கு நன்கொடை

ஆசிரியர் அறிவிப்பு

'விடுதலை'க்கு நன்கொடை தொடர்கிறது...

திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி 'விடுதலை'க்கு ரூ.5,000/- நிதியை நன்கொடையாக விடுதலை ஆசிரியரிடம் வழங்கினார்.

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் எச்சரிக்கை!

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்

இந்தி எதிர்ப்பு மாநாட்டில் செய்தி எம்பி பாலு அவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

நன்கொடை

படம்: 1 19.06.2022 அன்று செஞ்சியில் நடைபெற இருக்கும் பகுத்தறிவாளர் கழக பொன்விழா   மாநாட்டுக்கு நன்கொடையாக பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் பொறியாளர் கரிகாலன் ரூ 10,000 (ரூபாய் பத்தாயிரம்) த்தை  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். படம்: 2  சைதை எம்.பி. பாலு அவர்களின் 91ஆவது பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். படம்: 3  தரும. வீரமணி இயக்க இதழ்களுக்கு சந்தா  தொகையினை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை சைதாப்பேட்டை - 04.06.2022)

வெள்ளி, 1 ஜூலை, 2022

இந்தி வந்தால் நம் வரலாறும் - பண்பாடும் அழிந்துபோகும்! இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் வாழ்த்துரை