வெள்ளி, 23 டிசம்பர், 2016

தென் சென்னையில் தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சிகள்

தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 அன்று தென் சென்னையில் கீழ்க்கண்டவாறு நிகழ்ச்சிகள் நடைபெற விருக்கின்றன.

காலை 8.00 மணி தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு,  அண்ணா சாலை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தென்சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் மாலை அணிவிப்பு.

தலைமைக் கழக நிகழ்ச்சிகள்

காலை 9.00 மணியளவில் சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகிலிருந்து கழகத் தோழர்கள் பெருந்திரளான அளவில் திரண்டு பங்கேற்கும் அமைதி ஊர்வலம்Õ தொடங்கி, சிந்தாதிரிப்பேட்டை வழியே பெரியார் திடல் அடைகிறது.

காலை 10 மணி: பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை யில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிப்பு: கழக மகளிரணி சார்பில், பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு; திராவிடர் தொழிலாளர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரியார் நூலக வாசகர் வட்டம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கழகத் தலைவர் தலைமையில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்தல்.

அதனைத் தொடர்ந்து இந்திய நாத்திக சங்கத்தின் ஆந்திர அறிவியல் மாணவர் கழகம் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

காலை 10.30 மணி முதல் பகல் 1 மணிவரை தந்தை பெரியார் நினைவுநாள் சிறப்புக்கூட்டம் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெறுகிறது.
நூல் வெளியீடு

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுதிய உலகத் தலைவர் பெரியார்’- தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு (தொகுதி-4) நூல் வெளியிடப்படுகிறது.
மருத்துவ முகாம்

தந்தை பெரியார் நினைவு நாளை யொட்டி, சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் மணியம்மை மருத்துவ மனையில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி முடிய குருதிக் கொடை முகாம், மகளிர் மார்பகப் பரிசோதனை, கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, பொது மருத்துவம், தாய்சேய் நலம், நீரிழிவுநோய், கண், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், சிறுநீரகம் பல்வேறு பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள், மருத்துவ சிகிச்சை வழங்கப்பட உள்ளது.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

செல்வேந்திரன்-புவனேசுவரி இணை ஏற்பு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் நடத்தி வைத்தார்

-விடுதலை,16.12.16
சென்னை, டிச. 19- தென் சென்னை மாவட்டக் கழக இளைஞரணித் தோழர் கு.செல்வேந்திரன் - மு.புவனேசுவரி வாழ்க்கை இணை ஏற்பு விழா, 15.12.2016 அன்று மாலை 6.30 மணியள வில் சென்னை சைதாப்பேட்டை எஸ்.பி.எஸ். திருமண மண்ட பத்தில் சிறப்பாக நடைபெற் றது.
தென் சென்னை மாவட்டக் கழக இளைஞரணித் துணைத் தலைவர் மு.முகிலன் வரவேற் புரையாற்றினார். தலைமைக் கழக சொற்பொழிவாளர் செ.தமிழ்சாக்ரடீஸ் அறிமுகவுரை வழங்கினார்.
கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மணவிழாவிற்குத் தலைமை வகித்து, மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழி யினை ஏற்கச் செய்து, இணை ஏற்பு நிகழ்வினை நடத்தி வைத்து அறிவுரையாற்றினார்.
தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் இரா.வில்வ நாதன், சென்னை மண்டல கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, கழகப்பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினர்.
மணவிழாவிற்கு தலைமை வகித்து நடத்தி வைத்த கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களுக்கு மணமக்கள் குடும்பத்தார் பயனாடை அணி வித்து சிறப்புச் செய்தனர்.
மணமகன் கு.செல்வேந்தி ரன் கழக கொள்கை வழி நடக்க ஊக்கிய அவரது பெற்றோர் சு.பெ.குமார் - நீலாவதி, சகோ தரியார் சாந்தி மற்றும் மண மகள் மு.புவனேசுவரி தாயார் மு.லட்சுமி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.
மணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த் திய கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு மணமகன் கு.செல்வேந்திரன் பெரு மகிழ்வுடன் பயனாடை அணிவித்து சிறப்பித்தார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழ கப் பிரச்சார செயலாளர் வழக் குரைஞர் அ.அருள்மொழி மற் றும் கழகப் பொறுப்பாளர்க ளுக்கு மணமக்கள் குடும்பத்தி னர் பயனாடை அணிவித் தனர்.
மணவிணீழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பறை இசை முழக்கத்துடன் குழுமிய கழகத் தோழர்களும், மணமக்கள் குடும்பத்தினர் உற் சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழர் தலைவரை வரவேற் கும் விதமாக சைதை அண்ணா சாலை சந்திப்பிலும், மண விழா மண்டபத்திலும் டிஜிட் டல் பேனர்களும், சாலையின் இருபுறங்களில் கழகக் கொடி களுடன் கூடிய கம்பங்களும் நிறுவப்பட்டிருந்தன.
மண விழாவில் மாநில கழக மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் பொழிசை கண்ணன், சென்னை மண்டல கழக செயலாளர் வி.பன்னீர் செல்வம், கழகப் பொதுக்குழு உறுப்பினர்களான சைதை எம்.பி.பாலு, நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், எண்ணூர் வெ.மு.மோகன், சவுந்தரி நட ராசன், வடசென்னை மாவட் டக் கழகத் தலைவர் வழக்கு ரைஞர் சு.குமாரதேவன், சைதை வள்ளியம்மாள் பாலு, தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர்கள் மயிலை டி.ஆர்.சேதுராமன், சா.தாமோதரன், துணைத் தலைவர் கோ.வீ.இராகவன், சைதை தென்றல், ப.ஆனந்தன், தாம்பரம் மாவட்டக் கழகத் தலைவர் ப.முத்தய்யன், செய லாளர் கரசங்கால் நாத்திகன், முன்னாள் செயலாளர் அனகை ஆறுமுகம், மண்டல கழக இளைஞரணிச் செயலாளர் இர.சிவசாமி, மாவட்டக் கழக இளைஞரணி துணைச் செயலாளர் சுரேசு, தமிழினியன், விடுதலை நகர் சி.ஜெயராமன், மாநில கழக வழக்குரைஞரணி அமைப்பா ளர் ஆ.வீரமர்த்தினி, வழக் குரைஞர் ந.விவேகானந்தன், வழக்குரைஞர் ம.வீ.அருள் மொழி, மாநில கழக மாண வரணி துணை செயலாளர் நா.பார்த்திபன், வடசென்னை மாவட்டக் கழக செயலாளர் தே.ஒளிவண்ணன், துணை செயலாளர் கி.இராமலிங்கம், இளைஞரணி தலைவர் புரசை சு.அன்புச் செல்வன், செய லாளர் தளபதி பாண்டியன், துணைத் தலைவர் மங்களபுரம் பாசுகர், மகளிர் பாசறை செய லாளர் த.மரகதமணி, செஞ்சி ந.கதிரவன், பெரியார்திடல் சுரேசு, வை.கலையரசன், கலை மணி, திருநின்றவூர் அருண், வேப்பம்பட்டு கழகத் தலைவர் சிவ.இரவிச்சந்திரன், செயலா ளர் பட்டாளம் பன்னீர்செல்வம், கும்மிடிப்பூண்டி மாவட்டக் கழக இளைஞரணி செயலாளர் க.ச.க.இரணியன், பொன்னேரி ப.க. தோழர் கே.வினோத், திரா விடர் மகளிர் பாசறை செல்வி, கார்க்காத்தகுடி ஊராட்சி மன் றத்தலைவர் கா.சேகர், மலர் விழி - நெடுங்கிள்ளி, பெரியார் களம் இறைவி, பெரியார் சுய மரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந் தில்குமாரி, கலைத்துறை பொறுப் பாளர் செ.கனகா, வழக்குரை ஞர் ம.வீ. அருள்மொழி, இங் கர்சால் பெரியார் சாக்ரட்டீஸ், புரூனோ, இனியரசன், ஈழ முகிலன், பொறியாளர் ஈ. குமார், புரசை பாலமுருகன், ஆவடி பன்னீர், சூளைமேடு கோ.வீ.ராகவன், சைதை மு.ந. மதியழகன், பெரியார் மாணாக் கன், க.வெண்ணிலா, இ.சீர்த்தி,  கலைமதி, தமிழ்ச்செல்வி, பவானி, ரேவந்த், க.ஆற்றல் அரசி, தமிழீழம், பெரியார் பிஞ்சுகள் ஆ.பிரியவர்சினி, ஆ.ஆதவன், சித்தார்த் புருனோ மற்றும் கழகப் பொறுப்பாளர் களும், தோழர்களும் கலந்து கொண்டனர்.
மணவிழாவில் கழக இளை ஞரணித் தோழர் மு.சண்முகப் பிரியன் இணைப்புரை வழங் கினார். தென் சென்னை மாவட்ட இளைஞரணி செய லாளர் ச.மகேந்திரன் நன்றி கூறினார்.
விடுதலை,19.12.16
விடுதலை,13.12.16

திங்கள், 19 டிசம்பர், 2016

மறைவு-நுங்கம்பாக்கம் என்.கிருஷ்ணமூர்த்தி


தென் சென்னை நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழகத் துணைச் செயலாளர் ல.கி.சரவணனின் தந்தையார் தி.மு.க. செயல் வீரர் ல.என். கிருஷ்ண மூர்த்தி (வயது-78) அவர்கள் 6.12.2016  விடியற் காலை 5 மணியளவில் காலமானார்.   தென் சென்னை சார்பில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்   தலைமையில்  மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் சா.தாமோதரன், அரும்பாக்கம் க.தமிழ்ச்செல்வன், மதுரவாயல்  க.பாலமுரளி, நுங்கம் பாக்கம் பகுதி தலைவர் மு.கோபால், செயலாளர் க.வெற்றிவீரன், கோ.குமாரி மற்றும் பகுதி தி.மு.க.பொறுப்பாளர் நு.வே.மோகன் ஆகியோர் அவரது உடலுக்கு  மாலைவைத்து மரியாதை செலுத் தினர். மாலை 5 மணி அளவில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.

-விடுதலை,10.12.16

வியாழன், 1 டிசம்பர், 2016

நுங்கம்பாக்கம் மா.நடராசன் முதலாமாண்டு நினைவேந்தல்

புரசைவாக்கம், டிச. 1- 26.11.2016 சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் சென்னை  புர சைவாக்கம் பகுதியிலுள்ள ராஜ் பவன் உணவக அரங்கில் தென் சென்னையை சேர்ந்த நுங்கம் பாக்கம் பகுதி கழக துணைத் தலைவரும், அசோக் லேலண்டு திராவிடர் தொழிலாளர் கழக துணைச் செயலாளருமான சுய மரியாதைச் சுடர் மா.நடராசன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பெ. செல்வராசு (மாநில தி.தொ.க.) அவர்கள் தலைமையில் நடை பெற்றது. செ.ர.பார்த்தசாரதி (மாவட்டச் செயலாளர்) வரவேற்புரை யாற்றினார்.
இரா.வில்வநாதன் (மாவட் டத் தலைவர்) அவர்களின் வீர வணக்க உரைக்குப்பின் சுய மரியாதைச் சுடர் மா.நடராசன் அவர்களின் படத்தை திறந்து வைத்து கழக துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் நினைவேந்தல் உரை யாற்றினார்.
சா.தாமோதரன் (துணைச் செயலாளர்), நுங்கம்பாக்கம் வெற்றிவீரன், நா.மதிவாணன், க.தமிழினியன், துரை.ராவ ணன், கோ.தங்கமணி, த.தன லட்சுமி, செ.உமா, க.சுமதி, அரும்பாக்கம் க.தமிழ்ச்செல் வன், புரசை அன் புச் செல்வன் மற்றும் குடும்ப நண்பர்களும் உறவினர்களும் கலந்துகொண் டனர்.
நிகழ்ச்சி முடிவில் மா.நட ராசன் அவர்களின் துணைவி யார்  பத்மாவதி அனைவருக்கும் நன்றி கூறினார.


-விடுதலை,1.12.16

Image may contain: 2 people, people standing and indoor

Image may contain: 4 people, people sitting


-விடுதலை,17.11.16

செவ்வாய், 29 நவம்பர், 2016

தமிழர் தலைவர், ஆசிரியர் பிரச்சார ஊர்தி நிதி வழங்கல்

தென்சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் கழகத் தோழர்கள் ரூ.27,500 நிதியை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர். உடன் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணிச் செயலாளர் த.சீ.இளந்திரையன், மாநில மாணவரணிச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்.
-விடுதலை,29.11.16

திங்கள், 28 நவம்பர், 2016

வேன் நிதி வழங்குதல்.....


தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் செங்குட்டுவன் ரூ.5000/-- நிதியை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கினார். உடன் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் மற்றும் தோழர்கள்.
-விடுதலை,26.11.16

வெள்ளி, 25 நவம்பர், 2016

நடக்க இருப்பவை நுங்கம்பாக்கம் எம்.நடராஜன் முதலாண்டு நினைவேந்தல்

நடக்க இருப்பவை

நுங்கம்பாக்கம் எம்.நடராஜன் முதலாண்டு நினைவேந்தல்

26.11.2016 சனிக்கிழமை

சென்னை: மாலை 5 மணி

இடம்: ஓட்டல் ராஜ் பவன், கங்காதீசுவரர் சாலை, புரசைவாக்கம், சென்னை

வரவேற்புரை: செ.ர.பார்த்தசாரதி (மாவட்டச் செயலாளர்)

தலைமையுரை: பெ.செல்வராசு (மாநில தி.தொ.க.)

நினைவேந்தல் சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

பாராட்டுரை: இரா. வில்வநாதன் (மாவட்டத் தலைவர்), கோ.வீ.ராகவன் (துணைத் தலைவர்), சி.செங்குட்டுவன் (துணைத் தலைவர்), டி.ஆர்.சேதுராமன் (துணைச் செயலாளர்), க.தாமோதரன் (துணைச் செயலாளர்), நுங்கம்பாக்கம் வெற்றிவீரன், நா.மதிவாணன்,
க.தமிழினியன், துரை.ராவணன்

நன்றியுரை: பத்மாவதி நடராசன்.

சனி, 29 அக்டோபர், 2016

சி.பா.ஆதித்தனார் அவர்களின் 112ஆம் ஆண்டு பிறந்தநாள்


தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் 112ஆம் ஆண்டு பிறந்தநாளான இன்று (27.9.2016) சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர்களோடு சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் விழா
தமிழர்களின் உரிமை பறிக்கப்படும் இந்தக் கால கட்டத்தில் அவர் ஊட்டிய உணர்வு தேவைப்படுகிறது!
இலங்கையில் தமிழர் பகுதியில் சிங்களமயம்
இராணுவப் பயிற்சி  மிகப் பெரிய அச்சுறுத்தல்!
செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் அளித்த பேட்டி
சென்னை, செப். 27 தமிழர்களின் தமிழ்நாட்டின் உரிமைகளுக்குச் சவால்கள் நிறைந்துள்ள இந்தக் காலக் கட்டத்தில், சி.பா. ஆதித் தனார் - தந்தை பெரியார் அவர் களின் உணர்வோடு கலந்து வெளிப் படுத்திய உணர்வுகள் தேவைப்படு கின்றன. அவற்றை மீண்டும் புதுப் பித்துக் கொள்வோம் என்றார் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
சென்னையில் உள்ள தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அவரது 112ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி இன்று (27.9.2016)  காலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்தார்.

சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்தபின் செய்தியாளர்களை சந்தித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தெரி வித்ததாவது:

தமிழர் தலைவர் பேட்டி


அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர் களுக்கு மிகவும் நெருங்கியவராகவும், அதே நேரத்திலே தந்தை பெரியார் அவர்களுடைய உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு  நாம் தமிழர் இயக்கத்தின் மூலமாக, மிகச்சிறப்பான வகையிலே தமிழ் உணர்வை ஊட்டிய அருமை அய்யா ஆதித்தனார் அவர்களு டைய பிறந்த நாள் விழாவாகிய இன்றைக்கு  அவரால் தோற்றுவிக்கப்பட்ட அந்த உணர் வுகள், மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.
ஏனென்றால், தமிழ்நாட்டைப் பொறுத்த வரையிலே ஒவ்வொரு துறையிலும் ஆக்கிர மிப்புகள், உரிமைப்பறிப்புகள் இருக்கிற இந்தக் காலக்கட்டத்திலே, தமிழன் என்ற உணர்வும், மொழி உணர்வும், நம்முடைய உரிமைகளை நாம் பாதுகாப்போம் என்ற அளவிலே, உரிமைக்குக் குரல் கொடுத்து, உறவுக்குக் கைகொடுக்கக்கூடிய அந்த அளவிலே இருக்க வேண்டும். அதுமாத்திரம் அல்லாமல் தமிழ்ப் பத்திரிகை உலகிலே அவர் போட்டியிட்டு ஒரு பெரிய புரட்சி செய்தது என்பது வேறு எந்த தமிழராலும், இதுவரையிலே வேறு யாராலும் அடைய முடியாத இலக்காக இருக்கிறது.

தமிழ் உணர்வு - இனவுணர்வு

எனவே, ஆதித்தனார் அவர்களால் ஊட் டப்பட்ட  தமிழ் இன உணர்வு, பற்று மேலும் ஓங்கி, நம்முடைய உரிமைகளை பாதுகாப் பதற்கு இந்நாளில் நாம் மீண்டும் நம்மை அந்த உணர்வின்மூலமாக புதுப்பித்துக் கொள்வோம். வளர்க ஆதித்தனார் அவர்கள் நினைவு!

செய்தியாளர்: உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்களே இதுகுறித்து...?

தமிழர் தலைவர்: உள்ளாட்சித் தேர்தல் என்பது இருக்கிறதே, அது மக்கள் தேர்தலாக நடைபெற வேண்டியதற்குப் பதிலாக, மக் களைத் தூக்கிக் கொண்டு போய், மீண்டும் பதவிக்குக் கொண்டுவரக்கூடிய தேர்தலாக நடக்கக்கூடாது.

செய்தியாளர்: இலங்கையில் போர் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆனபின்பும், தமிழர்கள் நிலை மாறவில்லையே?

தமிழர் தலைவர்: இலங்கையில் போர் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆனபின்பும், அங்கே மீண்டும் சகஜ நிலை, தமிழர் களுடைய உரிமை வாழ்வு திரும்பவில்லை. தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகள் எல்லாம் சிங்களக் குடியேற்றங்கள் இருக்கின்றன. ஊர்ப்பெயர்களில் தமிழ்ப்பெயர்கள் எல்லாம் சிங்கள மயமாக ஆக்கப்படுகின்றன. இராணு வத்தை அவர்கள் திரும்பப் பெறவில்லை. திரிகோணமலையில் இராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகள் பூராவும் இராணுவப் பிரதேசமாக இருக்கிறது. அதை முற்றிலும் தமிழர்கள் வாழாத சிங்களர்களுடைய குடியேற்றமாக ஆக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, இராணுவத் துக்குப் பயிற்சி அளிப்பது மிகப் பெரிய அளவுக்கு ஆபத்து. அச் சுறுத்தல் ஆக.

அதேபோல, தமிழக மீனவர் களுடைய பிரச்சினை. இது வரையில் கைப்பற்றப்பட்ட படகு களை திருப்பிக் கொடுத்ததாக வரலாறு கிடையாது. எத்தனையோ முறை மீனவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே, எந்தப் பிரச்சினை என்றாலும் மத்திய அரசு கண்டும் காணாததைப்போல இருந்து வரு வது நல்லதல்ல. தமிழ்நாட்டின் உரி மைக்கு மட்டுமல்ல,  அது  இந்திய உரிமைக்கே ஆபத்து ஏற்படும் போக்காகவே இருக்கும்.

கலந்து கொண்டவர்கள்

இந்நிகழ்ச்சியில் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவு தொடர்பு செயலாளர் வீ.குமரேசன், தஞ்சை மாவட்டத் தலைவர் அமர்சிங், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு,  தென் சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்டச் செயலாளர் தே.ஒளிவண்ணன்,  வழக்குரை ஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி,   சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, சென்னை மண் டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, ஆடிட்டர் சண்முகம்,  ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், கலை மணி, கொடைரோடு மாலதி,  அரும்பாக்கம் சா.தாமோதரன், தரமணி மஞ்சுநாதன், செஞ்சி ந.கதிரவன், சுரேஷ், ராஜ், அசோக், ஆனந்த், அருள்,  கலைமதி, பவானி,  யுவராஜ், காரல் மார்க்ஸ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


-விடுதலை,27.9.16

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மாட்சிகள் (17.9.2016)





சென்னை, செப். 19- உலகத் தலை வர் தந்தை பெரியார் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் பங்கேற்றோர் விவரம் வரு மாறு:
திராவிடர் தொழிலாளரணி
பெ. செல்வராஜ் (மாநில செயலாளர்), ராஜூ, தமிழினியன், விசுவநாதன், வி.எஸ். பாண்டியன், நாகரத்தினம், வெற்றிவீரன், துரை ராவணன், மதிவாணன், பெரியார் மாணாக்கன், பழனி பாலு.
பெரியார் நூலக  வாசகர் வட்டம்
மயிலை நா.கிருட்டிணன் (தலைவர்), கி.சத்தியநாராய ணன் (செயலாளர்), கு.மனோக ரன் (பொருளாளர்), ஜே. ஜனார்த்தனன், கு.தென்னவன், க.சங்கரலிங்கம், சா.கணேசன் (சாலிக்கிராமம்), கோ.பரந் தாமன் (பூம்புகார்), பூவை. சோமசுந்தரம், சு.குமாறன், வழக்குரைஞர் இர.அருணாச் சலம், பச்சியப்பன், மறை மலை இலக்குவனார், ஜெய குருநாதன், ஆ.வெ.நடராஜன், சிவானந்தம், சண்முகநாதன், கவிஞர் அரிமா, கண்ணப்பன்
தொ.மு.ச.பேரவை சார்பில் கலந்து கொண்டவர்கள்
மு.சண்முகம் (பொதுச் செயலாளர்), வே.சுப்புராமன் (இணைப் பொதுச்செயலாளர்), ஆ.சீ.அருணகிரி (உழைப்பாளி துணையாசிரியர்), எம்.ஏ.சுப் பிரமணியம் (துணைத் தலை வர்), சுந்தரமூர்த்தி (பி.எஸ். என்.எல். நிர்வாகி), நாராய ணசாமி (தொ.மு.ச.).
பகுத்தறிவாளர் கழகம்
மாநில பொருளாளர் முனைவர் சி.தமிழ்ச்செல்வன் வடசென்னை மாவட்ட ப.க. தலைவர் கோவி.கோபால், வடசென்னை மாவட்ட ப.க. செயலாளர் பா.இராமு மற்றும் தோழர் பேராசிரியர் இலதா தமிழ்ச்செல்வன்
தென்சென்னை
மு.ந.மதியழகன், கோ.வீ. ராகவன், கோ.மஞ்சநாதன், டி. ஆர்.சேதுராமன், க.வெற்றி வீரன், மு.சண்முகப்பிரியன், சா.தாமோதரன், க.தமிழ்ச் செல் வன், சி.தங்கவேலு, க.விஜய ராசா, ஈ.குமார், இரா.பிரபாக ரன், கு.செல்வேந்திரன், வி. வளர்மதி, பி.அஜந்தா, வி.தங்க மணி, வி.யாழ்ஒளி, வெண்மதி தாமோதரன், வெ.தா.தமிழ்ச் செல்வி, வெ.தா.செந்தமிழ்ச் செல்வி, லலிதா தமிழ்ச்செல் வம், மு.பவானி, அசோக்நகர் ராஜா, அய்ஸ் அவுஸ் அன்பு, நொச்சிநகர் சேது, ச.துணை வேந்தன், நெடுங்கிள்ளி.
தாம்பரம் 
தி.இர.இரத்தினசாமி, ப. முத்தையா, ஆர்.டி.வீரபத்திரன், கோ.நாத்திகன், புலவர் சங்கர லிங்கம், கோபி, அப்துல்சத்தார், அருணாசலம், மோகன்ராஜ், மா.குணசேகரன், தமிழினியன், நாகரத்தினம், பொழிசை கண் ணன், கிருட்டிணமூர்த்தி, சிவ சாமி, ராஜேந்திரன், மா.இராசு, சோமசுந்தரம், சேரன் தம்பி, அரவிந்த், அர்சுனன், யாசா, சுரேஷ், அரி, ராஜன், கலாநிதி, மணிகண்டன், சுமதி, மடிப் பாக்கம் ஜெயராமன், மடிப் பாக்கம் மணிவண்ணன், தாம் பரம் பசுவ நிதி
வடசென்னை
தந்தை பெரியார் 138ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி 17.9.2016 அன்று வடசென்னை மாவட்ட கழகம் சார்பில் பட் டாளம், சேத்துப்பட்டு, அண்ணா சாலை (சிம்சன் எதிரே) ஆகிய இடங்களில் அமைந்த தந்தை பெரியார் சிலைகட்கு, வட சென்னை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சு. குமாரதேவன் மாலை அணி வித்தார்.
மாவட்டக் கழகத் தோழர் கள் அனைவரும் அணியாகச் சென்று சிலைகட்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பெரியார் திடலுக்கு வருகை புரிந்தனர்.
வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் தி.வே.சு.திருவள்ளுவன், வெ.மு.மோகன், துணைத் தலைவர் கருங்குழி கண்ணன், துணைச் செயலாளர் கி.இராமலிங்கம், அமைப்பாளர் சொ.அன்பு, மாநில கழக மாணவரணி துணை செயலா ளர் நா.பார்த்திபன், கொடுங் கையூர் கழக தலைவர் கோ.தங்கமணி, தங்க.தனலட்சுமி, த.மரகதமணி, திருவொற்றியூர் கழக செயலாளர் பெரு.இளங் கோவன், சி.பாசுகர், கண்ண தாசன் நகர் கு.ஜீவா, க..சிட்டி பாபு, து.தியாகராசன், அர. சிங்காரவேலு, கு.சவுந்தர்ராசன், ச.முகிலரசு, மங்களபுரம் பாசு கர், அ.செந்தமிழ்தாசன், தா. கருத்தோவியன், வ.தமிழ்ச் செல்வன், வ.கலைச்செல்வன், ச.சிற்றரசு, செ.கலையரசன், சிவராமன், மும்பை மு.தரும ராசன், துரை.இராவணன், சே.தமிழ்மில்லர், சே.தமிழரசி, சே.திலீபன் மற்றும் தோழர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட னர்.
-விடுதலை,18.9.16

                                                                              தென் சென்னை
தென் செள்ளை மாவட்ட மோட்டர் சைக்கிள் ஊர்வலம் 17.09.16 காலை 8.15மணிக்கு தரமணியில் தொடங்கியது.
தரமணி தந்தை பெரியார் சிலைக்கு மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மாலை அணிவித்தார்
9.00 மணிக்கு தியாகராயர் நகர் தந்தை பெரியார்.சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது..(17.9.16)
17.09.16 மு.ப.11.00மணி அளவில் சென்னை சேத்துப்பட்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.




திருவல்லிக்கேணி-அய்ஸ் அவுஸ் பகுதியில் நண்பகல் 12.00 மணி அளவில் பெரியார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. 150பேருக்கு கேசரி இனிப்பு வழங்கப்பட்டது. 

-விடுதலை,23.9.16
தந்தை பெரியார் பிறந்த நாளன்று (17.9.2016) அடையாறு பகுதி கழகத் தோழர்கள் அசோக், ராஜ், நியூஸ் ஏஜென்ட் சீதாராமன் உள்ளிட்டோர் எல்.பி. சாலை - கஸ்தூரிபாய் நகர் ரயில் நிலையம் அருகில் கழகக் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
-விடுதலை,19.9.16
தென் சென்னை

தென் சென்னை மாவட்ட துள்ளுந்து பிரச்சார பயணம் 17.9.2016 காலை 7.30 மணி அளவில் தரமணி தந்தை பெரியார் நகர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி நினைவு மன்றத்தின் வாயிலி லுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தந்தை பெரியார் படம் பொறித்த அட்டைகளை தாங்கி நடைபெற்றது.
கானகம், அடையாறு, கோட்டூர் புரம், நந்தனம், வடக்கு உஸ்மான் சாலை வழியாக தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலையை அடைந்தது. அங்கிருந்து புறப்பட்டு பர்கிட் சாலை, செவாலியர் சிவாஜி சாலை, தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணா சாலை, சிந்தாதரிப்பேட்டை வழியாக பெரியார் திடல் அடைந்தது.
அங்கிருந்து புறப்பட்டு பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை வழியாக சேத்துப்பட்டு அடைந்தது, அங்கிருந்து புறப்பட்டு எழும்பூர், புதுப்பேட்டை வழியாக திருவல்லிக்கேணி, அய்ஸ் அவுஸ் சென்று முடிவுற்றது.

தரமணி - தந்தை பெரியார் நகர்

காலை 8.00 மணிக்கு தரமணி-பெரியார் நகரிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு தரமணி மஞ்சநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் முன்னிலையில் மாவட்ட தலைவர் இரா.வில்வ நாதன் மாலை அணிவித்தார். ஜாபர், நொச்சி நகர் சேது,  ந.இராமச்சந்திரன், அய்ஸ் அவுஸ் அன்பு, ஏ.வி.பி.ஆசைத்தம்பி நினைவு மன்ற பொறுப்பாளர்கள் பி.வேம்புலி, கோ.மனோகர், டி.சேகர் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். அங்கிருந்து புறப்பட்டு சென்று,

தியாகராயர் நகர்

காலை 9 .00 மணிக்கு தியாகராயர் நகர் அடைந்து தந்தை பெரியார் சிலைக்கு மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைத்தலைவர் டி.ஆர்.சேதுராமன் முன்னிலையில் அமைப்பாளர் மு.ந.மதியழகன் மாலை அணிவித்தார்.
மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், கு.செல் வேந்திரன், தரமணி மஞ்சநாதன், நொச்சி நகர் சேது,  ந.இராமச் சந்திரன், அய்ஸ் அவுஸ் அன்பு மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். அங்கிருந்து புறப்பட்டு முற் பகல் 10.45 மணிக்கு பெரியார் திடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு சேத்துப்பட்டு சென்றடைந்தனர்

சேத்துப்பட்டு

முற்பகல் 11.30 மணிக்கு சேத்துப்பட்டு அம்பேத்தர் திடலிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்களும், டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அவர்களும் துணைத்தலைவர் டி.ஆர்.சேதுராமன் மற்றும் துணைச் செய லாளர் கோ.வீ.ராகவன் ஆகியோர் முன்னிலையில் பகுதி பொறுப்பாளர் அ.பாபு தலைமையில் மாலை அணிவித்தனர். தரமணி மஞ்சநாதன், இளைஞரணி துணைச்செயலாளர் இரா.பிரபாகரன் நொச்சி நகர் சேது,  ந.இராமச்சந்திரன், நுங்கம் பாக்கம் க.வெற்றிவீரன், ந.மணித்துரை, ச.துணைவேந்தன் கோட்டூர் பாஸ்கர்,  மற்றும் பல தோழர்கள் கலந்து கொண் டனர்.

திருவல்லிக்கேணி - அய்ஸ் அவுஸ்:

திருவல்லிக்கேணி சென்றடைந்து நண்பகல் 12.00மணிக்கு திருவல்லிக்கேணி - அய்ஸ் அவுஸ் பகுதியில் மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், மாவட்ட செயலா ளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில்  பெரியார் படத்திற்கு  துணைத்தலைவர் டி.ஆர்.சேதுராமன் மாலை அணிவித்தார். 150 பேருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன், இளைஞரணி துணைச் செயலாளர் இரா.பிரபாகரன்,  தரமணி கோ.மஞ்சநாதன், நுங்கம்பாக்கம் க.வெற்றிவீரன், நொச்சி நகர் சேது  ந.மணித்துரை, ச.துணை வேந்தன், கோட்டூர் பாஸ்கர், ஆட்டோ அன்பு, பெரியார் சித்தன், பாவலன்  மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். பிரச்சார பயணம் முடிவுற்றது

நுங்கம்பாக்கம்

காலை 7.00மணிக்கு மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்த சாரதி இல்லம் எதிரில் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

சூளைமேடு

பிற்பகல் 3.00 மணிக்கு சூளைமேடு ஆத்ரேயா நகரில், தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து ந. இராமச்சந் திரன் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடினார். தோழர்கள் கலந்து கொண்டனர்.

நொச்சிக்குப்பம் (கடற்கரை):

பிற்பகல் 3.30. மணிக்கு நொச்சிக் குப்பம் (கடற்கரை) பகுதி யில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் முன்னிலையில் இளைஞரணி துணைச் செயலாளர் இரா.பிரபாகரன் அவர்களால் 150 பேருக்கு இனிப்பு வழங்கப்பட்டு பெருமகிழ்ச்சியுடன் கொண் டாடினர். ச.துணைவேந்தன், வி.வளர்மதி, பி.அஜந்தா,  இரா.கார்த்தி, நொச்சி நகர் சேது, தீனா, கிருஷ்ணமூர்த்தி, வி.தங்க மணி, வி.யாழ்ஒளி மற்றும் பல தோழர்கள் கலந்துகொண்டனர்.
நொச்சி நகர் (காமராசர் கடற்கரை சாலை):

பிற்பகல் 4.00 மணிக்கு நொச்சி நகர் (காமராசர் கடற்கரை சாலை) பகுதியில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில்  துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் முன்னி லையில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அவர்களால் கழகக் கொடியேற்றி வைக்கப்பட்டது. இளைஞரணி துணைச் செயலாளர் இரா.பிரபாகரன், ச.துணைவேந்தன், வி.வளர்மதி, பி.அஜந்தா,  இரா.கார்த்தி, நொச்சி நகர் சேது, தீனா, கிருஷ்ண மூர்த்தி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி மற்றும் பல தோழர்கள் கலந்துகொண்டனர்.

தென்சென்னையில் பல இடங்களில் தந்தை பெரியார் படத்தை வைத்து மாலை அணிவித்தும், ஒலி பெருக்கி வைத்து கொள்கை பாடல்கள் ஒலிபரப்பியும் இனிப்பு வழங் கியும் பிறந்தநாள் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

-விடுதலை,18.10.16








 
தந்தை பெரியார் நினைவிடத்தில் மகளிர் அணியினர்

தந்தை பெரியார் நினைவிடத்தில் தொல்.திருமாவளவன்.மு.ப.10.45மணி(17.9.16)