ஞாயிறு, 25 அக்டோபர், 2015

ஒரத்தநாடு குணசேகரன் அவர்களுடன் சந்திப்பு

 உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பின் தனது மகளின் இல்லத்தில் (தாம்பரம் அருகிலுள்ள வண்டலூர் அடுத்த கொளத்தூர்-ஊனமாஞ்சேரி) ஓய்வெடுத்துவரும் துணை பொதுச்செயசாளர் ஒரத்தநாடு குணசேகரன் அவர்களை 21.10.15 மாலை தென் சென்னை திராவிடர் கழக தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் மற்றும் தரமணி கிளை கழகத் தலைவர் கோ.மஞ்சநாதன்.ஆகியோர்  தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் சந்தித்து நலம் அறிந்தோம்.

சனி, 24 அக்டோபர், 2015

முற்போக்கு சிந்தனையாளர்கள் படுகொலை, மதவெறி, ஜாதிவெறியை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நுழைவுத் தேர்வு, பாலியல் வன்முறை, மாட்டுக்கறிக்கு தடை, பகுத்தறிவு - முற்போக்கு சிந்தனையாளர்கள் படுகொலை, மதவெறி, ஜாதிவெறியை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது


சென்னை, அக். 22_ நுழைவுத் தேர்வு, பாலியல் வன்முறை, மாட்டுக்கறிக்கு தடை, பகுத்தறிவு _ முற்போக்கு சிந்தனையாளர்கள் படுகொலை, மதவெறி _ ஜாதி வெறியை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (22.10.2015) மாவட்டத் தலைநகரங் களில் காலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத் தலை வர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கி ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக் கங்கள் வருமாறு:-
மத்திய அரசே மத்திய அரசே! திணிக்காதே, திணிக்காதே!
நுழைவுத் தேர்வை திணிக்காதே!

நுழைவுத் தேர்வு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும்
நுழைவுத் தேர்வைத் திணிப்பதா?  கவுரவக்கொலை என்று சொல்லி
ஜாதிவெறி நோய்ப்பிடித்து
கொல்லாதே கொல்லாதே
காதலர்களைக் கொல்லாதே!
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்,
ஜாதி வெறியர்களை கண்டிக்கிறோம்

தேநீர்க் கடைகளில் இரட்டை டம்ளரா
என்ன செய்கிறது, பி.சி.ஆர் சட்டம்?
தமிழக அரசே தமிழக அரசே
செயல்படுத்து, செயல்படுத்து!
பி.சி.ஆர்.சட்டத்தை செயல்படுத்து!

பாலியல் வன்கொடுமையை கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
தமிழ்நாடு அரசே, தமிழ்நாடு அரசே!
தடுத்து நிறுத்து, தடுத்து நிறுத்து
பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!!
நரபலியை எதிர்த்து,
மாட்டுக்கறித் தடையை எதிர்த்து ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம்
திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

மாடுகளைக் காப்பாற்ற
மனிதர்களைக் கொல்லுவதா?
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
காவிக்கூட்டத்தை, காலிக்கூட்டத்தை
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்!
பகுத்தறிவு பேசும் அறிஞர்களை
சீர்திருத்த எழுத்தாளர்களை
படுகொலை செய்யும்
காவிகளை, காலிகளை
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
மத்திய அரசே! மாநில அரசே
நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு!!

போன்ற ஒலி முழக்கங்களை கழக தோழர், தோழியர்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழ கத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலா ளர் வீ.குமரேசன், திராவிடர் கழக வழக் குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், திரா விடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரை ஞர் அ.அருள்மொழி, மாவட்டத் தலைவர் இராசபாளையம் இல.திருப்பதி, மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில தொழிலாள ரணி துணைச் செயலாளர் பெ.செல்வராசு, வடமாவட்டங்களின் கழக அமைப்பு செயலாளர் வெ.ஞானசேகரன்,  சென்னை மண்டல செயலாளர் பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப. முத்தையன், சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை ஆகியோர் பங்கேற்று முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்
தென் சென்னை: செ.ர.பார்த்தசாரதி (மா.செ), டி.ஆர்.சேதுராமன் (ம.து.த), சி.செங்குட்டுவன், கோ.வீ.ராகவன், தரமணி கோ.மஞ்சநாதன், சா.தாமோதரன், ச.மாரியப்பன், ந..இராமச்சந்திரன், க.பாலமுருகன், ச.மகேந்திரன், மு.பவானி, வி.தங்கமணி, பி.அஜந்தா, வி.நிலா, கு.பா. கவிமலர், அய்ஸ்அவுஸ் விசு, அய்ஸ் அவுஸ் கோவிந்த், மயிலை ஜான்சன், இரா.பிரபாகரன், துணைவேந்தன், இரா.மோகன், கு.செல்வேந்திரன், மந்தை வெளி முகிலன்,  அ.செல்வராசன், மா.நட ராசன், மயிலை பாலு, சைதை தென்றல்.மணித்துரை
ஆவடி மாவட்டம்: இல.குப்புராசு (மா.செ), இரா.இராமதுரை (மா.செ.), மு. இரகுபதி (தலைவர், திருநின்றவூர்), அ.அருண் (மு.அமைப்பாளர்), பாலமுரளி (மதுரவாயல்), பெரியார் மாணாக்கன் (பூவை), பட்டாளம் பன்னீர் (வேப்பம் பட்டு, செயலாளர்), பாலமுருகன், உ.மோக னப்பிரியா, ப.எழிலரசி (மாணவரணி), நெடுங்கிள்ளி (வேப்பம்பட்டு), தொண்ட றம் (பூவை), செல்வி மாணாக்கன், க.இளங்கோவன் (திமுக), கே.குமார், செந்தில், உடுமலை வடிவேல், எழிலரசி.
மகளிரணி: சி.வெற்றிசெல்வி, செல்வி, மரகதமணி, சுமதி, கு.தங்கமணி, உமா, தங்க.தனலட்சுமி, கற்பகம், வளர்மதி,  திலகவதி, இன்பக்கனி, சண்முகலட்சுமி, மணிமேகலை, மாலதி, தாமரைச்செல்வி.
பெரியார் பிஞ்சுகள்: யாழொலி, தங்கமணி, நிலா, கவின்மலர், பகுத்தறிவு, தொண்டறம்.
கும்முடிப்பூண்டி மாவட்டம்:  புழல் ஆனந்தன் (மா.செயலாளர்), கஜேந்திரன் (மா.து.தலைவர்), புழல் டி.பி.ஏழுமலை, மாலதி, எஸ்.கண்ணன், தாமரைசெல்வி, மழலை நலன், மழலை நவிலன், கவனப் பேட்டை ரவி, உதயகுமார் (மா.தலைவர்).
தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்: மா.ராசு, ஆ.இர.சிவசாமி (வழக் குரைஞர்), கெ.விஜயகுமார், பொழிசை க.கண்ணன், சு.மோகன்ராஜ், ஏசா, நாகரத் தினம்.
வடசென்னை: பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராசன், பொதுக்குழு உறுப்பினர் திருவள்ளுவன், வியாசர்பாடி ஜீவா, வெங்கடேசன், கு.தங்கமணி, புரசை அன்புச்செல்வன், தளபதி பாண்டியன், கணேசன், பெரியார் திடல் சுரேஷ் கலைமணி, தமிழ்குடிமகன், மகேஷ், பேராசிரியர் பெரியாரடியான், தமிழ் லெமூரியா மு.தருமராசன், வழக் குரைஞர் சென்னியப்பன்,  பார்த்திபன், நெடுவை கு. குட்டிமணி, தஞ்சை கி.சவுந்த ரராசன், மற்றும் திரளான கழகத் தோழர் _ தோழியர்கள் பங்கேற்றனர்.
-விடுதலை,22.10.15

நுழைவுத் தேர்வு, மாட்டுக்கறிக்கு தடை, பகுத்தறிவு - முற்போக்கு சிந்தனையாளர்கள் படுகொலை, மதவெறி, ஜாதிவெறியை எதிர்த்து
மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்ட மாட்சிகள் (22.10.2015)






















பிஜேபி ஆட்சியில் ஓராண்டில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக 43 ஆயிரம் கொடுமைகள்! கொடுமைகள்!!


  • கொலையில் என்ன கவுரவக் கொலை?
  • உண்ணுவதற்கும், எண்ணுவதற்கும்கூட உரிமை இல்லையா?
பிஜேபி ஆட்சியில் ஓராண்டில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக
43 ஆயிரம் கொடுமைகள்! கொடுமைகள்!!
கண்டனங்கள் பெரியார் மண்ணிலிருந்து வெடித்துக் கிளம்புகின்றன
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கண்டன உரை

சென்னை, அக்.22-   பிஜேபி ஆட்சியில் உண்ணும் உரிமை, எண்ணும் உரிமைக்குக்கூட ஆபத்து சூழ்ந்து விட்டது. கவுரவக் கொலைகள், நரபலிகள் தலை குனியத்தக்கவை! இவற்றை எதிர்த்து தந்தை பெரியார் பிறந்த பூமியிலிருந்து கண்டனக் கணைகள் வெடித்துக் கிளம்புகின்றன - இந்த ஆர்ப்பாட்டம் அதற்காகத்தான் என்று உரைத்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். 22.10.2015 அன்று சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:
மத்திய அரசுக்கு  மாநில அரசு துணை போகிறது!
சிறுபான்மை மக்களுக்கும், மிகப்பெரும்பான்மையான  மக்களுக்கும்  விரோதமாக ஒரு இந்துத்துவப் போக்கு, ஜாதி வெறி, மதவெறி இவைகளையெல்லாம் தூக்கிப் பிடிக்கக்கூடிய ஒரு ஆட்சியாக மத்திய அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு மாநில அரசு துணை போகக்கூடிய அவல நிலைக்கு ஆளாகி இருக்கிறது.
இந்த நாட்டில் இதற்கு முன்பு கேள்விப்படாத ஒரு புதிய சொல்லாக்கம் வந்திருக்கிறது. அதுதான் கவுரவக் கொலை என்பதாகும். கொலை என்பதே அசிங்கப்படவேண்டிய, அருவருக்கத்தகுந்த, கண்டிக்கத்தகுந்த, ஒழிக்கத் தகுந்த ஒன்றாகும். அப்படி இருக்கக்கூடிய நிலையில், கொலைக்கு கவுரவக் கொலை என்று பெயர் கொடுத்திருப்பது நாகரிக மனிதர்கள் அனைவரும் தலைகுனியவேண்டிய ஒரு செய்தியாகும்.
கவுரவக் கொலைகள் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன
ஒருவரை ஒருவர் விரும்பி, அவர்கள் திருமணம் செய்துகொண்டால், யாரோ சிலர் அவர்களைக் கொல்வது என்று சொன்னால், நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழுகிறோமா? அல்லது காட்டுமிராண்டி காலத்திற்குத் திரும்பிச் செல்கிறோமா என்பதுதான் மிக முக்கியமானது. அந்த வகையில், கவுரவக் கொலைகள் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இன்னொருபக்கம் உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பு கொடுத்து, நாம் சுமார் ஒரு கால்நூற்றாண்டு காலம் போராடி, நுழைவுத் தேர்வை தமிழகத்தில் ஒழித்தோம். அதன் மூலம்தான் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் உள்ள அனைவரும், மருத்துவக் கல்லூரிகளில், பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. மீண்டும் நுழைவுத் தேர்வு என்று கொண்டுவரக்கூடிய அந்த அவலத்தை மத்திய அரசு நீட்டி முழங்கி, பதம் பார்க்கிறது - முன்னோட்டம் பார்க்கிறது.
கண்டிக்கத்தகுந்த நிலையில் நாம் இருக்கிறோம்
எனவேதான், அதனைக் கடுமையாகக் கண்டிக்கிறோம் என்பதை வலியுறுத்தக்கூடிய வகையிலும், கவுரவக் கொலை என்ற பெயராலே ஜாதி மறுப்புத் திருமணங்களை கொச்சைப்படுத்தக்கூடிய ஒரு அவலம் ஏற்பட்டிருப்ப தாலும், அத்தகையவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு சட்டமும், அரசும் இருப்பதால், அதனைக் கண்டிக்கத் தகுந்த நிலையில் நாம் இருக்கிறோம்.
அதுபோலவே, உண்ணுவது அவரவர்களுக்குரிய  உரிமை. எண்ணுவதும் அவரவர்களுடைய உரிமை. உண்ணுவதற்கும் உரிமையில்லை, எண்ணுவதற்கும் உரிமையில்லை என்று சொல்வதைப்போல, நான் என்ன சாப்பிடவேண்டும் என்பதை, அரசு அல்லது இந்துத்துவா வாதிகள் அல்லது மதவெறியர்கள், ஜாதி வெறியர்கள் அவர்கள் நிர்ணயித்தால், இந்த நாடு ஜனநாயக நாடா? என்கிற கேள்வி நிச்சயமாக எழத்தான் செய்யும்.
அந்த வகையில், நிச்சயமாக இன்றைக்கு மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்பது மட்டுமல்ல, யாரோ சிலர் சாப்பிட்டார்கள் என்கிற வதந்தியைக் கிளப்பினால்கூட, அவரைக் கொல்லக்கூடிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான், கோழி திருடியவனும் கூடவே குலவுகிறான் என்ற கிராமத்துப் பழ மொழியைப்போல, இப்பொழுது அவர்களும்கூட ஜாதி, மதவெறியை விட்டு எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் இப்பொழுது இதோபதேசம் செய்கிறார். இதைவிட வேடிக்கையான ஒரு விபரீதமான நிலை வேறு எதுவும் கிடையாது. குழந்தை யையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக்கூடிய ஓர் அவலம்தான் இது. ஆகவே, இதுபோன்ற நிலைமைகளை எடுத்துச் சொல்கிறோம் நாங்கள்.
மனித எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்படக்கூடிய அவலம் இருக்கிறது
இதுவரையில் இல்லாத பெரியார் பூமியில், பகுத்தறிவுப் பூமி என்று கருதப்பட்ட தமிழ்நாட்டில், மற்ற இடங்களில்  இருப்பதையெல்லாம்விட மூடநம்பிக்கைகள் குறைந்திருக் கக்கூடிய இந்தக் காலகட்டத்தில், மதுரையில், சகாயம் குழுவினர் குவாரிகளை ஆய்வு செய்யும் நேரத்தில், தோண்டித் தோண்டி எடுக்கும்பொழுது எலும்புக் கூடு களாக வருகின்றன. தங்கம் தோண்டி எடுத்த நாட்டில், நிலக்கரி தோண்டி எடுத்த நாட்டில், வெறும் மனித எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்படக்கூடிய அவலம் இருக்கிறது. நரபலிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்றால், நாமெல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
எனவே, நரபலியானாலும், கவுரக் கொலை என்கிற பெயரால் கொலை வெறியானாலும், பாலியல் வன் முறைக்கு ஆளாக்கப்பட்டாலும் - அண்மையில் வெளி வந்த செய்தி - அரியானாவில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளை எரித்துக் கொன்றிருக் கிறார்கள்  இதயமற்றவர்கள். யாருடைய ஆட்சியில்? பா.ஜ.க. ஆட்சியில்!
சமூகநீதி அடிப்படையில் நீதிபதிகளை நியமிக்கவேண்டும்
அதுமட்டுமல்ல, எல்லாவற்றையும்விட, இவைகளைப் பற்றியெல்லாம் தீர்ப்பு எழுதக்கூடிய இடம் நீதிமன்றங்கள். அந்த நீதிமன்றங்களில்கூட சமூகநீதி கடைபிடிக்கப்பட முடியாத ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. இப்பொழுது விரைவில் 400 நீதிபதிகள் நியமிக்கப்படக்கூடிய இந்தக் காலகட்டத்தில், சென்னை உயர்நீதிமன்றத்திலும் சரி, உச்சநீதிமன்றத்திலும் சரி, சமூகநீதி அடிப்படையில் நீதிபதிகளை நியமிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே, இந்த ஆர்ப்பாட்டம் என்பது சமுதாயத்தி னுடைய மிக முக்கிய பிரச்சினைகள் - நாடித் துடிப்பாக இருக்கக்கூடிய பிரச்சினைகளைப்பற்றி நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட - ஒரு சமுதாய இயக்கத்தினர் என்கிற முறையில் இதில் கவலை கொள்கிறோம் என்பதற்காகத்தான் தோழர்களே, இந்த ஆர்ப்பாட்டம்.
ஒன்றாக சேர்ந்து ஒரே மேடையில் முழங்காவிட்டாலும்கூட...
இந்த ஆர்ப்பாட்டம் சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட தலைநகரங்களில் எல்லாம் நடைபெறுகிறது. இந்த நிலைமைகள் மிக மோசமாகப் போகக்கூடாது; தடுத்து நிறுத்தப்படவேண்டும். ஒத்த கருத்துள்ள அனைவரும், முற்போக்குச் சிந்தனையாளர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரே மேடையில் முழங்காவிட்டாலும் கூட, அனைவரும் அவரவர் எல்லையில் இருந்து கொண்டு கூட, அவரவர் மேடையில், அவரவர் தளத்தில் இருந்து கொண்டு கூட, இவற்றைக் கண்டித்து குரல் எழுப்ப வேண்டும்.
தமிழ்நாடு ஒரு முற்போக்கான  மாநிலம் என்பதை எடுத்துக்காட்டி, இந்தியாவிற்கு வழிகாட்டவேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். ஆகவேதான், இந்த ஆர்ப்பாட்ட முழக்கங்கள். பெரியார் மண்ணிலிருந்து இந்தக்கண்டனங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
-------------------
தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக 43 ஆயிரம் கொடுமையோ கொடுமைகள்!
இன்றைக்குக் காலையில் வந்திருக்கின்ற ஒரு புள்ளி விவரம் - தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு எதிராக 2014 ஆம் ஆண்டில் மட்டும் 43 ஆயிரம் கொடுமையான நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. அந்தச் சமுதாயத்து சகோதரிகளுக்கு எதிராக 2,233 பாலியல் வன்முறைகள் நடை பெற்று இருக்கின்றன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை கொடுத்திருக்கிறது.
ஆகவே, இப்படிப்பட்ட கொடுமைகளை எதிர்த்து, ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்த வேண்டிய அளவிற்கு நிலைமைகள் மோசமாகிக் கொண்டிருக்கின்றன.
மாற்றம் வரும், மாற்றம் வரும் என்று சொன்னவர்கள், பெரிய ஏமாற்றத்தைத் தந்து கொண்டி ருக்கிறார்கள்.
-விடுதலை,22.10.15

வெள்ளி, 2 அக்டோபர், 2015

அறிஞர் அண்ணா அவர்களின் 107ஆம் ஆண்டு பிறந்த நாள்

அறிஞர் அண்ணா அவர்களின் 107ஆம் ஆண்டு பிறந்த நாள்
சிலைக்கு கழகத் துணை தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, செப். 15_ அறிஞர் அண்ணா அவர் களின் 1-07ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திராவிடர் முன்னேற்ற கழக நிறுவனரும், முன் னாள் முதல்வருமான பேர றிஞர் அண்ணா அவர்களின் 107ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2015) காலை 10.45 மணியளவில் சென்னை அண்ணா சாலை யில் உள்ள அவரது சிலைக்கு கழக தோழர், தோழியர்கள் புடைசூழ திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள் மலர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.திருமகள், பழநி.புள்ளை யண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் சைதை எம்.பி.பாலு, நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், கழக வழக்குரைஞரணி அமைப் பாளர் வீரமர்த்தினி,
சென்னை மண்டல கழக செயலாளர் பன்னீர்செல் வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத் தையன், சி.செங்குட்டுவன், மயிலை சேதுராமன், சென்னை மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை.
வடசென்னை மாவட்ட மகளிரணி தலைவர் கு.தங் கமணி, சி.வெற்றிச்செல்வி, இ.பசும்பொன், சீர்த்தி, தங்க.தனலட்சுமி, வட சென்னை சொ.அன்பு, அரும்பாக்கம் தாமோதரன், திருவொற்றியூர் கணேசன், பெரியார் திடல் சுரேஷ், சைதை தென்றல், கோடம் பாக்கம் மாரியப்பன், செஞ்சி கதிரவன், தரமணி மஞ்சு நாதன், சேகுவரா, அம்பேத் கர், மகேஷ், தொழிலாள ரணி நாகரத்தினம், வெற்றி வீரன், உடுமலை வடிவேல் மற்றும் திரளான கழகத் தோழர், தோழியர்கள் பங்கேற்றனர்.
-விடுதலை,15.9.15

தந்தை பெரியாரின் 137வது பிறந்த நாள் நிகழ்ச்சிகள்



தந்தை பெரியாரின் 137வது பிறந்த நாளான 17.9.15 காலை 8.30 மணி அளவில் தியாகராயர் நகர் தந்தை பெரியாரின் சிலைக்கு தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.




தியாகராயர் நகர்:
காலை 8 .30 மணிக்கு தியாக ராயர் நகர் பெரியார் சிலைக்கு மாவட்டத் தலைவர் இரா.வில்வ நாதன் தலைமையில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையிலும் பொதுக்குழு உறுப் பினர் எம்.பி.பாலு மாலை அணிவித்தார். மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன், துணைத்தலைவர் டி.ஆர்.சேதுராமன், துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராகவன்,சா.தாமோதரன்,ம.தமிழ், இளைஞரணி சென்னை மண்டல செயலாளர் செ.தமிழ் சாக்ரடீசு,  இளைஞரணி தலைவர் கு.செல்வேந்திரன், இளைஞரணி செயலாளர் மு.சண்முகப்பிரியன், ச.தாஸ், இளைஞரணி துணைச்செயலாளர் இரா.பிரபாகரன்,, தரமணி மஞ்சநாதன், ந.இராமச் சந்திரன், க.வெற்றி வீரன், க.தமிழ்ச்செல்வன்,மு.திருமலை, துணைவேந்தன், திருவேங்கடம் மற்றும் பல தோழர்கள் கலந்து 
கொண்டனர்
திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ்
.தந்தை பெரியாரின் 137வது பிறந்த நாளான 17.9.15 முற் பகல் 11.45 மணி அளவில் தென் சென்னை திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதியில் தந்தை பெரியாரின் 137வது பிறந்த நாள் திருவல்லிக்கேணி திராவிடர் கழகம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அவர்கள் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்தார். .தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் முன்னிலையில் தென் சென்னை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.பிரபாகரன் கேசரி இனிப்பு 150 பேருக்கு வழங்கினார். தரமணி கோ.மஞ்சநாதன், சூளைமேடு ந.இராமச்சந்திரன், துணைவேந்தன், இராபட் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தந்தை பெரியாரின் 137வது பிறந்த நாளான 17.9.15 காலை 4.30 மணி அளவில் தரமணியில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அவர்கள் தலைமையிலும் தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் முன்னிலையில்.தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அவர்கள் மாலை அணிவித்தார். தரமணி கோ.மஞ்சநாதன் அவர்களும் ஜாபர் அவர்களும் இனிப்பு வழங்கினர்.


தியாகராயர் நகர்
காலை 8.30 மணிக்கு தியாகராயர் நகர் பெரியார் சிலைக்கு மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலை மையில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன் னிலையிலும் பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு மாலை அணிவித்தார். மாவட்ட அமைப்பாளர் மு.ந. மதியழகன், துணைத்தலைவர் டி.ஆர்.சேதுராமன், துணைச் செயலாளர்கள் கோ.வீ.ராகவன், சா.தாமோ தரன், ம.தமிழ், இளைஞரணி சென்னை மண்டல செயலாளர் செ.தமிழ் சாக்ரடீசு,  இளைஞரணி தலை வர் கு.செல்வேந்திரன், இளைஞரணி செயலாளர் மு. சண்முகப்பிரியன், ச.தாஸ், இளைஞரணி துணைச் செயலாளர் இரா.பிரபாகரன், தரமணி மஞ்சுநாதன், ந.இராமச்சந்திரன், க.தமிழ்ச்செல்வன், மு.திருமலை, துணைவேந்தன், திருவேங்கடம் மற்றும் பல தோழர்கள் கலந்துகொண்டனர்.
திருவல்லிக்கேணி - அய்ஸ் அவுஸ்
நண்பகல் 11.45மணிக்கு திருவல்லிக்கேணி - அய்ஸ் அவுஸ் பகுதியில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்த சாரதி முன்னிலையில் மாவட்ட துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் பெரியார் படத்திற்கு மாலை அணி வித்தார். 150 பேருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இளை ஞரணி துணைச் செயலாளர் இரா.பிரபாகரன், தரமணி மஞ்சநாதன், துணைவேந்தன், இராபர்ட், விகார்த்திக் சு. தினேஷ், மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். நொச்சி நகர் (காமராசர் சாலை):
பிற்பகல் 4.00 மணிக்கு நொச்சி நகர் (காமராசர் சாலை) பகுதியில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில் துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் முன்னிலையில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்த சாரதி அவர்களால் கழகக் கொடியேற்றி வைக்கப்பட் டது. இளைஞரணி துணைச் செயலாளர் இரா.பிரபா கரன், வி.வளர்மதி, பி.அஜந்தா,  இரா.கார்த்தி, சேது, தீனா, கிருஷ்ணமூர்த்தி, வி.தங்கமணி, வி.யாழ்ஒளி மற்றும் பல தோழர்கள் கலந்துகொண்டனர்.
தரமணி
பிற்பகல் 4.30 மணிக்குத் தரமணி பெரியார் நகரி லுள்ள தந்தை பெரியார் சிலைக்கு தரமணி மஞ்சு
நாதன் தலைமையில் மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் மாவட்டத் தலைவர்இரா.வில்வநாதன் மற்றும் துணைச் செய லா ளர் கோ.வீ.ராகவன் ஆகியோர் மாலை அணிவித்தனர். தரமணி ஜாபர் இனிப்பு வழங்கினர் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனர். தென்சென்னையில் பல இடங் களில் தந்தை பெரியார் படத்தை வைத்து மாலை அணிவித்தும், ஒலிபெருக்கி வைத்து கொள்கை பாடல்கள் ஒலிபரப்பியும், இனிப்பு வழங்கியும் பிறந்தநாள் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

விடுதலை,9.10.15  செய்தி(பக்கம்-4)

தந்தை பெரியார் 137ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி (17.9.2015) சென்னை அடையாறில் கழகக் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஓட்டுநர்கள் அசோக்குமார், பிரபாகரன், அலெக்ஸ், வெங்கடேசு, கருணாநிதி, ரங்கசாமி மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
              விடுதலை,28.9.15  செய்தி(பக்கம்-3)                       

தந்தை பெரியாரின் 137வது பிறந்த நாளான 17.9.15 காலை 8.30 மணி அளவில் தியாகராயர் நகர் தந்தை பெரியாரின் சிலைக்கு தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.குறித்து   11.10.15 விடுதலை நாளேட்டு செய்தி(பக்கம்-7)                        


தந்தை பெரியார் 137வது பிறந்த நாள் - 21அடி உயர தந்தை பெரியார் சிலை திறப்பு விளம்பர நெகிழி தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக திருவல்லிக்கேணி பகுதி சார்பாக அய்ஸ் அவுஸ் பகுதியில் 15.9.15 இரவு வைக்கப்பட்டது. தந்தை பெரியார் 137வது பிறந்த நாள் - 21அடி உயர தந்தை பெரியார் சிலை திறப்பு நெகிழி தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக சொச்சி நகர் பகுதி சார்பாக கலங்கரை விளக்கம் எதிரில்15.9.15 இரவு வைக்கப்பட்டது.


17.9.15 காலை 9.30 மணி அளவில், தந்தை பெரியாரின் 137வது பிறந்த நாளை முன்னிட்டு நாள் முழுக்க 50% கட்டணத்தில் ஆட்டோவை இயக்க முன்வந்த ஆட்டோ ஓட்டுனரை பாராட்டி பயணத்தை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெரியார் திடலிலிருந்து தொடக்கிவைத்தார்.

தந்தை பெரியாரின் 137வது பிறந்த நாளான 17.9.15 காலை 9.30 மணி அளவில் முன்னதாக ஊர்வலமாக சென்று அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
தந்தை பெரியாரின் 137வது பிறந்த நாளான 17.9.15 காலை 10.00 மணி அளவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஊர்வலமாக சென்று தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.தந்தை பெரியாரின் 137வது பிறந்த நாளான 17.9.15 காலை 10.00 மணி அளவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மலர் வளையம் வைகப்பட்டது.



பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 137ஆம் ஆண்டு பிறந்த நாள்  தந்தை பெரியார் 21 அடி உயர பிரமாண்ட சிலையை தமிழர் தலைவர் திறந்தார்
திருக்குறள் வள்ளுவர் நூலை இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் வெளியிட்டார்
யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார் மகளிர் கருத்தரங்கம் நடைபெற்றது


சென்னை, செப். 17, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 137 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று சென்னை, பெரியார் திடலில் அமைக் கப்பட்டுள்ள தந்தை பெரியார் 21 அடி உயர பிரமாண்ட சிலையை கழகத் தோழர்களின் உணர்ச்சிப் பெருக்கான முழக்கங்களுடன் தமிழர் தலைவர் திறந்து வைத்து,  மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
பெரியார் களஞ்சியம் (37ஆம் தொகுதி) திருக் குறள் வள்ளுவர் நூலை தி.மு.க. பொதுச் செயலா ளர் இனமானப் பேரா சிரியர் க.அன்பழகன் வெளியிட்டார். யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார் என்ற தலைப்பில் மகளிர் கருத்தரங்கம் நடைபெற்றது. முன்னதாக தந்தை பெரியார் _ அன்னை மணியம்மையார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து தமிழர் தலைவர் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
உலகமெங்கும் பிறந்த நாள் விழா
பகுத்தறிவுப் பகல வனாம் தந்தை பெரியார் அவர்களின் 137ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2015) உலக மெங்கும் உள்ள பகுத்தறி வாளர்களால் மிகுந்த எழுச்சியுடன் கொண்டா டப்படுகிறது. திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் நகரங்கள், கிராமங்கள்தோறும் இன்று பல்வேறு சமூக தொண்டறச் செயல்களு டன் கொண்டாடப்படுகிறது. நினைவிடங்களில் மரியாதை திராவிடர் கழகத்தின் தலைமையகமாம் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இன்று காலை முதலே கழகத்தோழர், தோழி யர்கள் பெரும் திரளாக கூடி தமிழர் தலைவரிடம் பெரியார் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச் சியை பகிர்ந்து கொண்டனர்.
பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந் துள்ள அன்னை மணி யம்மையார் சிலைக்கு திராவிடர் கழக மகளிரணி சார்பில் மாலை அணிவிக் கப்பட்டு, தந்தை பெரியார் _ அன்னை மணியம்மை யார் நினைவிடத்திற்கு பெருந்திரளாக கூடியிருந்த கழகத்தோழர் _ தோழியர் களுடன் சென்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்வளையம் வைத்து உறுதி மொழி கூற கழக தோழர்களும் தொடர்ந்து  கூறி உறுதி மொழி எடுத் துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் திராவி டர் கழகத்துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன் றன், பொருளாளர் மருத் துவர் பிறைநுதல் செல்வி, செயலவைத்தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கழக வழக்குரைஞரணி தலைவர் வழக்குரைஞர் தா.வீரசேகரன், பெரியார் மருத்துவரணி இயக்குநர் குன்னூர் டாக்டர் கவுத மன், மூதறிஞர் குழு செய லாளர் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி இரா. பரஞ்சோதி, மோகனா அம்மையார், கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி,  மகளிர் பாசறை செயலாளர் டெய்சி மணியம்மை, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் க.பார்வதி, திருமகள் மற்றும் டாக்டர் மீனாம் பாள், ஆடிட்டர் ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் என பெருந்திரளானோர் பங்கேற்றனர்.
21 அடி உயர சிலை திறப்பு
சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர் களின் முழுஉருவ 21 அடி உயர பிரமாண்ட சிலையை காலை 10 மணிக்கு பெருந் திரளான கழகத் தோழர் களின் கரவொலிகளுக்கி டையே திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து மலர் மாலை வைத்து மரியாதை செய்தார்.


பெரியார் களஞ்சியம் (37ஆம் தொகுதி) திருக்குறள் வள்ளுவர் நூலை பேராசிரியர் வெளியிட்டார்
இதைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 137ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் பெரியார் களஞ்சியம் தொகுதி 37 திருக்குறள் வள்ளுவர் நூலை திமுக பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் க.அன்பழன் அவர்கள் வெளியிட்டுப் பேசினார். முன்னாள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் அவ்வை நடராசன் அவர்கள் நூல்பற்றிய விளக்கவுரையாற்றினார். தமிழர் தலைவர் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்கவுரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வீ.குமரேசன் இணைப்புரை வழங்கினார். இந்நூலை பெரியார்  நூலக வாசகர் வட்டத்தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் கோ.ஒளி வண்ணன், ப.க.அமைப்பு செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், கழக வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டல தலைவர் தி.ரா.இரத்தினசாமி, செயலாளர் வி.பன்னீர்செல்வம், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், ஆவடி மாவட்டத்தலைவர் பா.தென்னரசு, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், கும்முடிபூண்டி மாவட்டத் தலைவர் செ.உதயகுமார், பேரா.மா.நன்னன், சட்டக்கதிர் ஆசிரியர் சம்பத் சார்பில் சென்னியப்பன், கரூர் இராஜசேகரன், கவிஞர் கண்மதியன், மாணிக்கம் உள்பட பலர் பெற்றுக்கொண்டனர்.
யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார் மகளிர் கருத்தரங்கம் நடைபெற்றது
இதைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார் என்ற பொதுத்தலைப்பில் மகளிர் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு கழக பொருளாளர் மருத்துவர் சு.பிறைநுதல் செல்வி தலைமை தாங்கிப் பேசினார். க.பார்வதி, திருமகள், கு.தங்கமணி, க.வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கருத்தரங்கின் தொடக்க வுரையை அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திருமதி குஷ்பு சுந்தர் நிகழ்த்தினார்.
தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் என்ற தலைப்பில் வழக்குரைஞர் அ.அருள்மொழி, புத்துலகின் தொலை நோக்காளர் என்ற தலைப்பில் பேராசிரியர் சுந்தரவல்லி, சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை என்ற தலைப்பில் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், பழைமை மூடநம்பிக்கைகளின் எதிரி என்ற தலைப்பில் கவிஞர் சல்மா ஆகியோர் உரையாற்றினர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை யாற்றினார்.
இக்கருத்தரங்கின் இணைப்புரையை வழக்குரைஞர் தெ.வீரமர்த்தினி வழங்கினார். செ.உமா நன்றி கூற கருத்தரங்கு நிறைவு பெற்றது.
முன்னதாக தந்தை பெரியாரின் 137ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி இன்று (17.9.2015) காலை சென்னை பெரியார் திடலில் இயங்கிவரும் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் குருதிக்கொடை, விழிக்கொடை பதிவு மற்றும் பல்நோக்குச் சிறப்பு மருத்துவ முகாமை தமிழர் தலைவர் முன்னிலையில் நீரிழிவு சிறப்பு நிபுணர் மருத்துவர் எஸ்.நல்லபெருமாள் தொடங்கி வைத்தார்.
புதியதாக அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலைக்கும், தந்தை பெரியார் நினைவிடத்திலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மலர் மாலை, மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது. திராவிடன் நலநிதி, பெரியார் மருத்துவமனை, பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகம், கழக மகளிரணி, கழக தொழிலாளரணி சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் சென்னை பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராஜன், விடுதலை அச்சகப்பிரிவு மேலாளர் க.சரவணன், பெரியார் மணியம்மை மருத்துவமனை மேலாளர் குணசேகரன், திராவிடர் கழக தொழிலாளரணி இணைச் செயலாளர் செல்வராஜ், வெற்றி, பாண்டியன், விசுவநாதன், தமிழ்இனியன், மதியழகன், பெரியார் மாணாக்கன், நாகரத்தினம், துரை.ராவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
பேராசிரியர் முனைவர் நன்னன், மஞ்சை வசந்தன், முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன், பேராசிரியர் இராமசாமி, முனைவர் ந.க.மங்கள முருகேசன், பேராசிரியர் திருக்குறள் க.பாஸ்கரன், திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, பாலகிருஷ்ணன், விடுதலை இராதா, பொழிச்சலூர் துரை, மருத்துவர் சொக்கலிங்கம், நளினி ஒளிவண்ணன், கழக பொதுக்குழு உறுப்பினர்கள் சைதை எம்.பி.பாலு, நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், திருவள்ளுவன், மோகன், சொ.அன்பு, கருங்குழி கண்ணன், செம்பியம் இராமலிங்கம், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் வெங்கடேசன், செங்குட்டுவன், கோவி.கோபால், இராமு மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி, தாம்பரம் மாவட்டச் செயலாளர் அனகை ஆறுமுகம், வடசென்னை மாவட்டச் செயலாளர் ஒளிவண்ணன், இணைச்செயலாளர் கோ.வீ.ராகவன், தரமணி மஞ்சுநாதன், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தமிழ்சாக்ரடீசு, மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை சுதா அன்புராஜ், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவி வெ.எழில்மதி, காரைக்குடி மாவட்டச் செயலாளர் பிராட்லா, மேனாள் மேயர் சா.கணேசன், பேராசிரியர் ராஜதுரை, பேராசிரியர் இசையமுது, சி.வெற்றிச்செல்வி, சி.காமராஜ், கனகா, மயிலை சேதுராமன், சந்திரா, தங்க.தனலட்சுமி, இறைவி, பொன்.இரத்தினாவதி, சவுந்தரி நடராசன், வெண்ணிலா, வளர்மதி, பவானி, மீனா, சேரலாதன், கு.செல்வேந்திரன்,  வழக்குரைஞர் ஜெ.துரைசாமி,  ஆவடி பன்னீர், பொறியாளர் குமார், சண்முகப்பிரியன், அரும்பாக்கம் தாமோதரன், தமிழ்செல்வன், பாலமுரளி, முகிலன்,  அன்புச்செல்வன், தருமராசன் மற்றும் கழக நிர்வாகிகள் பல்வேறு பகுதி கழக தோழர் தோழியர்கள் திரளாக பங்கேற்றனர்.
பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்திய நாராயணன், பொருளாளர் மனோகரன், சுப்பிரமணி, திருவொற்றியூர் கணேசன், புழல் சிறை ஆசிரியர் செந்துறை ராஜேந்திரன், வழக்குரைஞர் ரவி,  மடிப்பாக்கம் ஜெயராமன், பாண்டு, புலவர் வீரமணி சட்டக்கதிர் வி.ஆர்.சம்பத், பொறியாளர் வேல் சோ.நெடுமாறன், டாக்டர் நெ.பரத்குரு, கவிஞர் ஓவியா, அரும்பாக்கம் தாமோதரன், பெரியார் திடல் கணக்கு பிரிவு தலைவர் முத்துகிருஷ்ணன், ஜெயராஜ், மற்றும்  திராவிடன் நலநிதி பொது மேலாளர் அருள் செல்வன் மற்றும் பணியாளர்கள், பெரியார் ஆராய்ச்சி நூலக நூலகர் கோவிந்தன், பெரியார் பயிற்சி மய்ய ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் மற்றும் பெரியார் திடல் விடுதலை செய்திபிரிவு, அச்சகப்பிரிவு பணியாளர்கள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
முன்னதாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவையொட்டி இன்று காலை சென்னை பெரியார் திடலில் ஆட்டோ ஓட்டுநர் வியாசர்பாடி குமரகுருவின்  ஒரு நாள் பாதி கட்டண சேவை திட்டத்தை தமிழர் தலைவர் பாராட்டி தொடங்கி வைத்தார்.
திருமாவளவன் மாலை அணிவிப்பு
தந்தை பெரியார் 137 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பெரியார் திடலில் புதியதாக நிறுவி உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் உடன் வன்னியரசு உள்ளிட்ட தோழர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைமை பொதுச் செயலாளர் வழக்குரைஞர் கவி.எஸ்.வாசு அவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பிரிவு தலைவர் சாரதி மாலை அணிவித்தார்.
 Smaller Font
தந்தை பெரியார் 137 ஆவது பிறந்த நாள் விழா - பகுத்தறிவு பகலவன் சிலை திறப்பு விழா (சென்னை, 17.9.2015)
தந்தை பெரியாரின் 21 அடி சிலையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பலத்த கொள்கை முழக்கத்தினிடையே திறந்து வைத்தார்
பெரியார் களஞ்சியம் தொகுதி 37 திருக்குறள் வள்ளுவர் என்ற நூலினை தமிழர் தலைவர் முன்னிலையில், இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் வெளிட, முனைவர் அவ்வை நடராசன் பெற்றுக்கொண்டார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பொருளாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி,
மகளிர் கருத்தரங்கத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில், அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு சுந்தர் தொடங்கி வைத்து உரையாற்றினார். உடன் வழக்குரைஞர் அருள்மொழி, பேராசிரியர் சுந்தரவல்லி, கவிஞர் சல்மா, பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி ஆகியோர் உள்ளனர்
தந்தை பெரியார் பிறந்த நாளினையொட்டி பெரியார் மணியம்மை மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ முகாமை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொடங்கி வைத்தார். உடன் முகாமில் பங்கேற்ற மருத்துவர்கள்.
21 அடி உயர பெரியார் சிலையை வடிவமைத்த சிற்பி மருதுபாண்டி செல்வத்திற்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து சான்றிதழ் வழங்கினார்.
சென்னை பெரியார் மணியம்மை மருத்துவமனையில் நடைபெற்ற இலவச சிறப்பு மருத்துவ முகாமை தமிழர் தலைவர் முன்னிலையில் நீரிழிவு சிறப்பு மருத்துவர் நல்லபெருமாள் தொடங்கி வைத்தார். இம்முகாமில்  பல்வேறு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று பொது மருத்துவம், காது- மூக்குத்-தொண்டை மருத்துவம், கண் மருத்துவம், மகளிர் நோய் இயல், குழந்தைகள் மருத்துவம், பல் மருத்துவம், சிறுநீரகவியல் பரிசோதனைகள் நடைபெற்றது. உடன் மருத்துவர்கள் பிறைநுதல்செல்வி, மீனாம்பாள், கவுதமன், தேனருவி  ஆகியோர் உள்ளனர்.


தந்தை பெரியார் 137 ஆவது பிறந்த நாள் விழா - பகுத்தறிவு பகலவன் சிலை திறப்பு விழா (சென்னை, 17.9.2015)
பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நிறைவுரையாற்றினார் (சென்னை, 17.9.2015)
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மேடையில், பாலன் - நிர்மலா ஆகியோரின் மகள்  பா.ஆனந்திக்கும், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கருணாநிதி - மல்லிகா ஆகியோரின் மகன் க.அருண் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர் நடத்தி வைத்தார். மணவிழாவின் மகிழ்வாக, பெரியார் உலகத்திற்கு முதல் தவணையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. உடன் மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை மற்றும் குடும்பத்தினர் (சென்னை, 17.9.2015).
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற சிவசுப்பிரமணியம் அவர்களுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பெரியார் களஞ்சியம் தொகுதி 37 திருக்குறள் - வள்ளுவர் நூலினை கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பேராசிரியர் நன்னனிடம் வழங்கினார்.
எமரால்ட் ஒளிவண்ணனின் இணையர் நல்லினி தனது பிறந்த நாளினையொட்டி ரூபாய் அய்யாயிரத்திற்கான காசோலையை தமிழர் தலைவரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்.
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் மயிலை நா.கிருஷ்ணனும், திராவிடன் நிதி நிறுவனம் சார்பில் டி.கே.நடராசன், அருட்செல்வன் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்
சென்னை எழும்பூர் பகுதி ஆட்டோ ஓட்டுநர் குமரகுரு பெரியார் பிறந்த நாளான (செப்டம்பர் 17) அன்று முழுவதும் தனது ஆட்டோவில் பயணம் செய்பவர்களுக்கு 50 சதவிகித சலுகை வழங்கினார். தமிழர் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். உடன் தலைமைக் கழகப் பேச்சாளர் பிராட்லா.
தந்தை பெரியார் பிறந்த நாளன்று சென்னை பெரியார் திடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வருகை தந்த  டிகே.ரங்கராஜன் மற்றும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பிறந்த நாள் மலரை வழங்கினார். உடன் வழக்குரைஞர்கள் த.வீரசேகரன், துரை ஆகியோர் உள்ளனர் (17.9.2015)

தந்தை பெரியாரின் 137வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வட சென்னை வில்லிவாக்கம் பகுதியில் 18.9.15 மாலை நடைபெற்றது. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.






டில்லி பெரியார் மய்யத்தில்  தந்தை பெரியார் 137ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி பெரியார் சிலைக்கு பெரியார் மேலாண்மை மற்றும் கணினிக் கல்லூரியின்  இயக்குநர் டாக்டர் சுஷீல் சாப்ரா  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. (17.9.2015)

வட அமெரிக்காவில் வைக்கம் வீரர் தந்தை பெரியார் பிறந்த நாள் பெரு விழா

பல்வேறு அமைப்புகள் பங்கு கொண்ட பயனுறு கருத்தரங்கம்

பிரீமாண்ட், செப்.15 வட அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத் தில் உள்ள பிரீமாண்ட் நகரில், சமூகப் புரட்சியா ளர் தந்தை பெரியாரின் 137-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, சமூக நீதிக் கருத் தரங்கமாக செப்டம்பர் 12-ஆம் தேதி சனிக்கிழமை வெகு சிறப்பாகக் கொண் டாடப்பட்டது.
பெரியார் பன்னாட்ட மைப்பு, டாக்டர் அம்பேத் கர் சீக்கியர் அமைப்பு, இந்திய அமெரிக்க முசுலீம் அமைப்பு, அம்பேத்கர் பன்னாட்டமைப்பு, முல்னி வாசி சங்கம், பாம்செப் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த விழாவை நடத்தின.
பெரியார் பிறந்த நாள் விழா, சமூக நீதிக் கருத் தரங்கம், பிரீமாண்ட் நகரின், லாஸ் செரிட் டோஸ் சமூக அரங்கில் 12.9.2015 அன்று மாலை 5 மணிக்கு துவங்கியது.
மேடையில் தந்தை பெரியார், ஜோதிராவ் பூலே, சாகு மகராஜ், அம் பேத்கர், நாராயண குரு ஆகிய தலைவர்களின் படங்களுடன் பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் சமூக நீதிக் கருத்தரங்கம் எனும் பதாகையும் மேடை யில் அமைக்கப்பட்டிருந்தது.
யுனெஸ்கோ அமைப்பு 27.6.1970- அன்று தந்தை பெரியாருக்கு அளித்த விருதில் உள்ள பாராட்டு மொழிகளுடன் கூடிய பெரியார் படம், விழா அமைப்பின் சார்பாக டாக்டர் அம்ரிக் சிங் அவர் களால் திறந்து வைக்கப் பட்டது.
சமூக நீதி - அடுத்த கட்ட நகர்வு
இந்தியாவில் சமூக நீதி  அடுத்த கட்ட நகர்வு எனும் தலைப்பில் கருத்தரங்கம் துவங்கியது.
கருத்தரங்கில் பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன், டாக்டர் அம்பேத்கர் சீக் கியர் அமைப்பின் டாக்டர் அம்ரிக் சிங், இந்திய அமெ ரிக்க முசுலீம் அமைப்பின் சார்பில் உமர் மாலிக், பாம்செப் அமைப்பின் அசோக் புலா, அகில இந்திய பிற்படுத்தப்பட் டோர் கூட்டமைப்பின் சார்பில் கோ.கருணாநிதி ஆகியோர் உரையாற்றினர்.
டாக்டர் சோம இளங் கோவன் தமதுரையில், சமூக அநீதியின் வர்ண அமைப்பு என்பது வேத காலத்தில் இருந்ததையும், கீதையில் குறிப்பிடப்பட்ட தையும், பின் புத்தர், திரு வள்ளுவர், ஜோதிராவ் பூலே, சாகு மகராஜ், நாரா யண குரு, அம்பேத்கர், பெரியார் ஆகியோரது பணிகளையும் குறிப்பிட் டுப் பேசினார். சாவித்திரி பூலேயும், அம்பேத்கரும் மனுவை எரித்தவர்கள்.. பெரியாரது உழைப்பு மட் டுமன்றி, அவரது சொத் துகள் மக்களுக்கான திட் டங்களாக, கல்வி அரங்கு களாக இன்றைக்கும் மிகப் பெரிய வளர்ச்சி அடைந் துள்ளதையும், அதற்கு முழு காரணமாக இன்றைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் விளங்குவதையும் எடுத் துரைத்தார். வீரமணி சமூகநீதி விருது வி.பி.சிங் முதல் வழங்கப்படுவதைச் சொன்னார்.இனி அடுத்த கட்டமாக, ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிடவும், ஜாதிய கட்டுமானத்தை உடைத் திட, ஜாதி மறுப்புத் திருமணம் செய்த குடும்பத் தினருக்கு தனி இட ஒதுக் கீடு போன்ற முற்போக்கு சிந்தனைகளை சட்ட வடி வமாக்க பாடுபடவும் வலியுறுத்தினார்.
இந்திய அமெரிக்க முஸ்லீம் அமைப்பின் உமர் மாலிக், சிறுபான்மை மக் களின் உரிமைகள் குறித்து பெரியாரின் சிந்தனைகளை விரிவாக எடுத்துரைத்தார்.
பி.ஆர்.அம்பேத்கர் சீக்கியர் அமைப்பின் டாக் டர் அம்ரிக் சிங் தமதுரை யில் ஜாதி, மதம், கடவுள் பற்றிய பெரியாரின் கருத் துகளை வரிசைப்படுத்திப் பேசியதுடன், பகத்சிங்
தூக்கிலிடப்பட்டபோது, இந்தியாவில் மற்ற தலைவர்கள் வாய்மூடி மவுனி களாக இருந்த நிலையில், பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து, ஆங்கி லேயரை எதிர்த்தும், காந்தியைக் கண்டித்தும் கட்டுரை எழுதியதையும் நினைவு கூர்ந்தார்.
பாம்செப் அமைப்பின் பொறுப்பா ளர் அசோக் பூலா, தமதுரையில் மனுஸ் மிரிதி தொடங்கி, பார்ப்பனர்கள் ஜாதிய அடக்கு முறைகளை கையாண்டு வருவதையும், அதனை எதிர்த்து பெரியார், அம்பேத்கர், பூலே, நாராயண குரு, அய்யங்காளி, அயோத்தி தாச பண்டிதர் என பலரும் போராடியதையும், இவர்கள் வழியில் நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்றும் பேசினார்.
தமிழர் தலைவர் முயற்சியால் தமிழ் நாட்டில்  69  விழுக்காடு இடஒதுக்கீடு
அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி தமதுரை யில் இட ஒதுக்கீடு வரலாற்றை, நீதிக் கட்சி காலந்தொட்டு இன்று வரை உள்ள நிலையையும், பெரியார் போராட்டத்தால் ஏற்பட்ட முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம், ஆசிரியர் வீரமணி அவர்களின் முனைப்பால் ஏற்பட்ட 69 விழுக்காட்டுக்கான பாதுகாப்புச் சட்டம் பற்றியும், இதன் காரணமாக ஒடுக்கப்பட்டோர், குறிப்பாக, மருத்துவக் கல்லூரியில் பெற்ற அதிக இடங்களின் விவ ரத்தையும், மத்தியில் இட ஒதுக்கீடு சரிவர நிரப்பப் படாத சூழ்நிலையையும். புள்ளி விவரங்களோடு எடுத் துரைத்தார். தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு உரிமையின் அவசியத்தை யும், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடு களில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது பற்றியும் கூறினார். அடுத்த கட்டமாக, ஒடுக்கப்பட்டோர் அனைவரும் பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை ஏற்று ஒருங்கிணைந்து பாடுபட வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டார்.
அம்பேத்கர் பன்னாட்டமைப்பின் சார்பில் ராமச்சந்திரா, மற்றும் பெஞ்சமின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
உரையாற்றிய அனை வரும் தத்தம் கருத்துகளை கணினி மூலம் விளக்கக் காட்சிகளாக திரையிட்டு வெளிப் படுத்தியது பார்வையாளர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் சிறப்பாக அமைந்தது.
முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பன்னாட்டு சீக்கியர் அமைப்பின் ஸ்டீவ் மசியாஸ் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் உரையாற்றிய அனைவருக் கும் கோ.கருணாநிதி, தந்தை பெரியார் படத்தை பரிசாக அளித்தார். அதே போல் விழா சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு அளித்த நண்பர்கள் பிந்தர்சிங், நானக் சிங் ஆகியோருக்கும் பெரியார் படம் அளிக்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.
டாக்டர் சோம.இளங்கோவன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
விழாவிற்கு அமெரிக்கா வில் வசிக்கும் தமிழ் மக்கள், வட மாநிலத்த வர்கள் குறிப்பாக சீக்கி யர்கள் பெருந் திரளாக கலந்து கொண்டனர்.
வருகை தந்த அனை வருக்கும் தேநீரும், இரவு உணவும் வழங்கப்பட் டது.
வட அமெரிக்காவின் கலிபோர்னி யாவில் முதன் முறையாக நடைபெற்ற தந்தை பெரியார் விழா, அனைவராலும் பாராட்டத்தக்கதாகவும், பயனுள்ள கருத்துப் பரிமாற்ற மய்யமாகவும் அமைந்தது என்பது மட்டுமல்லாமல், வரும் நாட்களில், இந்த அமைப்பினர் ஒருங்கிணைந்து இயங்கிட முடிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.