போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 மார்ச், 2026

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சியைக் கண்டித்து சமூகநீதிக்கான பெரும் போராட்டத்தில் பங்கேற்றோர்




சென்னை, மார்ச் 5– ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. ஆட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறித்து அதிகாரப் பதவிகளை உயர்ஜாதியினரின் ஏகபோகமாக்கும் அநீதியைக் கண்டித்து 3.3.2026 அன்று சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் விவரம் வருமாறு:-

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், மாநில கழக மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில கழக கிராமப்புற பிரச்சார செயலாளர் முனைவர் அதிரடி அன்பழகன், துணைப் பொதுச் செயலாளர்கள் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், பொறியாளர் ச.இன்பக்கனி, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்கள் செ.பெ.தொண்டறம், பொறியாளர் தேவ.நர்மதா..

வடசென்னை

மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், மாவட்ட கழகச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், காப்பாளர் கி.இராமலிங்கம், தி.செ.கணேசன், நா.பார்த்திபன், சி.பாசுகர், ப.கோபாலகிருஷ்ணன், அயன்புரம் துரைராசு, ஆ.பாஸ்கர், புரசை பாலா, இரா.எம்ரோஸ், ஓட்டேரி சேகர், பழ.சேரலாதன், வழக்குரைஞர் ஜெ.துரை, சி.காமராஜ், ஓ.இராமச்சந்திரன், சி.சித்தார்த்தன், வ.தமிழ்ச்செல்வன், அ.புகழேந்தி, பா.பார்த்திபன், சஞ்சய், பார்த்தீஸ்வரன், விஸ்வா, கோகுல், ச.விஜய், இரா.அருள், ம.பூவரசன், சி.முரளிகிருஷ்ணன்.

தென் சென்னை

மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட கழகச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி,கோ.வீ.ராகவன், மு.சண்முகப்பிரியன், இரா.மாரிமுத்து, ந.இராமச்சந்திரன், ச.மாரியப்பன், நுங்கம்பாக்கம் சஞ்சய், ச.ஆனந்தன், பா.இராசேந்திரன்,எம்..டி.சி, ச.மகேந்திரன், அ.அன்பு, எம்.ஆனந்தன், உதயசூரியன், எஸ்.அப்துல்லா, ச.சந்தோஷ், வே.சித்தார்த்தன்.

மேற்கு சென்னை

மாவட்ட கழகத் தலைவர் கரு.அண்ணாமலை, மாவட்டக் கழகச் செயலாளர் க.சுப்பிரமணியன், நெய்வேலி வெ.ஞானசேகரன், மு.ரா.மாணிக்கம், அரும்பாக்கம் தாமோதரன், ச.ஜனார்த்தனன், சு.ஜெயசீலன், ஈக்காட்டுத்தாங்கல் மு.சேகர், அருள், தம்பி சேகுவாரா, ஜான்.

தாம்பரம்

மாவட்டக் கழகத் தலைவர் ப.முத்தையன், மாவட்ட கழகச் செயலாளர் கோ.நாத்திகன், வழக்குரைஞர் ஆர்.உத்திரகுமாரன், சு.மோகன்ராஜ், கருப்பையா, குணசேகரன், சன் சரவணன், இர.சிவசாமி, கார்த்திக், பழனிசாமி, மதியழகன், தனசேகரன், ராமண்ணா, ஆறுமுகம், பாலமுரளி, ஆதித்யா.

ஆவடி

மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன், மாவட்டக் கழகச் செயலாளர் க.இளவரசன், ரகுபதி, பூவை.தமிழ்ச்செல்வன், கோ.முருகன் இ.தமிழ்மணி, வேல் முருகன், பெரியார் மாணாக்கன், சுந்தர்ராஜ், சு.வெங்கடேசன், இனியன், நன்னன், சேத்பட் நாகராஜ், சதீஷ், கண்ணன், முகபேர் முரளி, தங்க ரவி, அ.சரவணன், பாசறை கோபால், பட்டரவாக்கம் ரவிச்சந்திரன், ஆ.வெ.நடராசன், முத்துகிருஷ்ணன், உடுமலை வடிவேல், வேல்சாமி, இரணியன், பன்னீர்செல்வம், சி.வச்சிரவேல், ஆதிரன், அண்ணாதுரை.

கும்மிடிப்பூண்டி

மாவட்ட கழகத் தலைவர் புழல் ஆனந்தன், வடகரை ஜெகத் விசயகுமார், வடகரை உதயக்குமார், பொன்னேரி அருள், சக்கரவர்த்தி, கஜேந்திரன், பெரியபாளையம் ஆகாஸ், அருணகிரி, செல்வராஜ், க.ச.க.இரணியன்.

சோழிங்கநல்லூர்

மாவட்ட கழகத் தலைவர் வேலூர் பாண்டு, மாவட்ட கழக செயலாளர் நங்கநல்லூர் தமிழினியன், காப்பாளர் இரா.தே.வீரபத்திரன், பி.சி.ஜெயராமன, நித்தியானந்தன்.

திருவொற்றியூர்

மாவடட கழகத் தலைவர் வெ.மு.மோகன், மாவட்ட கழகச் செயலாளர் ந.இராசேந்திரன், மா.சேகர், கோ.தங்கமணி, சி.வாசு.

மகளிரணி

சி.வெற்றிச்செல்வி, வி.கே.ஆர்.பெரியார்செல்வி, பசும்பொன், தங்க.தனலட்சுமி, பூவை செல்வி, வி.வளர்மதி, பி.அஜந்தா, த.மரகதமணி, நர்மதா, அறிவுமதி, சி.மெர்சி ஆஞ்சலாமேரி, சி.அமலசுந்திரி, வி.கே.மகிழினி, அன்புச்செல்வி, கீதா ராமதுரை, சுகந்தி தமிழ்மணி, எல்லம்மாள், தேன்மொழி, வள்ளி, முகபேர் செல்வி, இனியன், நாகவள்ளி, அருணா, மீனாம்பாள், நன்னன், புஷ்பா பன்னீர்செல்வம், நந்தினி அண்ணாதுரை, நதியா, வெண்ணிலா, த.இளவரசி, யாழ் தமிழ், திராவிட எழில்,  வெண்ணிலா, ராணி ரகுபதி (ஆவடி) ஆகியோர் பங்கேற்றனர்.

 - விடுதலை நாளேடு, 5.3.2

போராட்டத்தில் தென் சென்னை மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்டோர் பட்டியல்

1.இரா.வில்வநாதன், (மாவட்ட தலைவர்)

2.செ.ர.பார்த்தசாரதி ,(மாவட்ட செயலாளர்)

3.கோ.வீ.ராகவன்(பொதுக்குழு உறுப்பினர்),

4.மு.சண்முகப்பிரின் (துணைத்தலைவர்)

5.இரா.மாரிமுத்து(இளைஞர் அணி துணைச் செயலாளர்)

6.ந.இராமச்சந்திரன்,

7.ச.மாரியப்பன்

8.நுங்கம்பாக்கம் சஞ்சய்

9.ச.ஆனந்தன்

10.பா.இராசேந்திரன்,எம்..டி.சி

11.ச.மகேந்திரன் (மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ) 

12.அ.அன்பு (மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ) 

13.வி.வளர்மதி,(மாவட்ட மகளிரணி தலைவர்)

14.பி.அஜந்தா (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்) 

15.உதயசூரியன்

16.எஸ்.அப்துல்லா

17.ச.சந்தோஷ்

18.வே.சித்தார்த்தன்

19.ஆ.வீரமர்த்தினி(கழக செயலவைத் தலைவர்) 

20. த.வீரசேகரன் (வழக்குரைஞர் அணி தலைவர்)

21. சே.மெ.மதிவதனி துணைப் பொதுச் செயலாளர்)



,


செவ்வாய், 3 மார்ச், 2026

சென்னையில் ‘சாஸ்திரிபவன்’ முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்: தமிழர் தலைவர் ஆசிரியர் உள்பட தோழர்கள் கைது!



சமூகநீதிக்கான பெரும் போராட்டம் தமிழ்நாடு அளவில்!
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். பதவிகளில் பார்ப்பனர்– உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தைக் கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
57 ஆவது முறையாகக் கைது!

சென்னை, மார்ச் 3- ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறித்து அதிகாரப் பதவிகளை உயர்ஜாதியினரின் ஏகபோகமாக்கும் அநீதியைக் கண்டித்து இன்று (3.3.2026) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகங்களில் திராவிடர் கழகம் சார்பில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்பு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

தொடக்கத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆரப்பாட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காவல் துறை யினரால் கைது செய்யப்பட்டார். அவர் கைதாவது 57 ஆவது முறையாகும்.

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தந்த தகவலின்படி, இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), இந்திய அயல் தொடர்புப் பணி (IFS) உள்ளிட்ட அகில இந்திய சேவைகளில் அனுமதிக்கப்பட்ட மொத்தப் பணியிடங்கள் மற்றும் தற்போதைய பணியில் உள்ள அதிகாரிகள் பற்றிய சேவை வாரியான, மாநில வாரியான விவரங்கள் பின்வருமாறு:

மொத்தம் அனுமதிக்கப்பட்டுள்ள 6,877 இந்திய ஆட்சிப் பணி, 5,099 இந்திய காவல் பணி, 3,193 இந்திய அயல் நாட்டுப் பணி ஆகியவற்றில் முறையே 5,577, 4,594, 2,164 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

கடந்த அய்ந்து ஆண்டுகளில் 2020 முதல் 2024 வரை நடத்தப்பட்ட குடிமைப் பணி தேர்வுகளில் நேரடி நியமனமாக IAS, IPS, IFS சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள பட்டியலின்படி, அட்டவணை ஜாதி  (SC), அட்டவணை பழங்குடி (ST), பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (OBC) சார்ந்த அதிகாரிகளின் எண்ணிக்கை யும் தரப்பட்டுள்ளன.

01.01.2025 நிலவரப்படி, IAS,. IPS, IFS சேவை களில் மாநிலக் கட்டமைப்பு வாரியாக உள்ள காலிப் பணியிட விவரங்கள் சிவில் லிஸ்ட் (Civil List) அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 1,300 இந்திய ஆட்சிப் பணியிடங்களும், 505 இந்திய காவல் பணியிடங்களும், 1,029 இந்திய அயலுறவுப் பணியிடங்களும் காலியாக இருப்பதாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய சேவைகளில் சமூக நீதி, சமச்சீர் பிரதிநிதித்துவம் மற்றும் நிர்வாகத் திறன் ஆகியவை குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், இந்தத் தகவல்கள் அரசின் அதிகாரப்பூர்வ பதிலாகப் பதிவாகியுள்ளன.

ஒன்றிய அரசு தந்துள்ள இந்த தகவல்களின்படி, சமூகநீதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அய்.ஏ.எஸ்.சில் 8 சதவீதம், அய்.பி.எஸ்.சில் 10 சதவீதம், அய்.எஃப்.எஸ்.சில் 17.28 சதவீதம் மட்டுமே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவு அதிகாரிகள் இருப்பதும் எஞ்சியுள்ள 82 சதவீதம் முதல் 92 சதவீதம் வரையிலான இடங்கள் பார்ப்பனர் உள்ளிட்ட உயர்ஜாதியினரால் அபகரிக்கப்பட்டிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவின் அதிகாரப்பிடி இன்னும் பார்ப்பனர்களின் கைகளில்தான் இருக்கிறது என்ற சுடும் உண்மையை ஒளிக்கப் பார்க்கிறார்கள்.

இந்தியாவின் திட்டங்களை வகுக்கும் பிரதமர் அலுவலகத்தின் அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 90 சதவீதத்திற்கும் மேல் பார்ப்பனர்களும், உயர் ஜாதியினரும்தான் என்கிறார்கள் தகவலறிந்த வட்டாரத்தினர்.

பார்ப்பன – உயர்ஜாதி ஆதிக்கத்தைப் பாரீர்!

2022 ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, 75 அமைச்சகம் மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றும் செயலாளர்கள், இணைச் செயலாளர்களின் எண்ணிக்கை 322 பேர்.
இதில்,
எஸ்.சி (பட்டியல் ஜாதியினர்) – 16
எஸ்.டி (பழங்குடியினர்) – 19
ஓ.பி.சி (பிற்படுத்தப்பட்டோர்) – 39
மட்டும் தான்!
உயர் அதிகாரமிக்க செயலாளர்கள் என்று மட்டும் எடுத்துக்கொண்டால்,
2019-ஆம் ஆண்டு நிலவரப்படி,
மொத்தமுள்ள 89 செயலாளர்களில்,
பழங்குடியினர் (ST) – 3
ஒடுக்கப்பட்டோர் (SC) – 1
இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) – 0
ஆம், ஒருவர் கூட பிற்படுத்தப்பட்டவர் இல்லை. ஒரே ஒருவர் தான் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்!

இந்தியாவின் உயர் அதிகாரம் அனைத்தும் பார்ப்பனர், உயர்ஜாதியினரின் கைகளிலேயே இருக்கிறது என்பதற்கு இதற்குமேல் என்ன ஆதாரம் வேண்டும்! பாரீர், பாரீர்! பார்ப்பன உயர்ஜாதி ஆதிக்கத்தைப் பாரீர்!

எனவே, சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வரும் இந்த ஒன்றிய பிஜேபி அரசைக் கண்டித்து இன்று (3.3.2026) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகத் தோழர்கள் ஒன்றிய அரசின் அலுவலகங்கள் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

தமிழர் தலைவர் பங்கேற்பு

சென்னையில் இன்று (3.3.2026) காலை 11 மணியளவில் ஒன்றிய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற பெருந்திரளான ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கண்டன முழக்கங்களை ஒலித்து கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், காவல் துறையினரால் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கைது செய்யப்பட்டார்.

காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட தமிழர் தலைவரும், கழகத் தோழர்களும் முதற்கட்டமாக ஷெனாய் நகர் சமூக நலக் கூடத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.

தமிழ்நாடு

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, துணைப் பொதுச் செயலாளர்கள் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், நெய்வேலி ஞானசேகரன், பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், சி.வெற்றிச்செல்வி, பொறியாளர் ச.இன்பக்கனி க.பெரியார் செல்வி, பசும்பொன் உள்ளிட்டோர் மற்றும் வடசென்னை, தென்சென்னை, தாம்பரம், ஆவடி மாவட்டக் கழக நிர்வாகிகள் – தோழர்கள் பெருந்திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட
ஒலி முழக்கங்கள்!

வாழ்க வாழ்க வாழ்கவே சமூகநீதிப் போராளிகள் வாழ்கவே! வெல்லட்டும்! வெல்லட்டும்! சமூகநீதி வெல்லட்டும்! வீழட்டும்! வீழட்டும்! ஆரிய ஆதிக்கம் வீழட்டும்! உறுதி செய், உறுதி செய்! ஒன்றிய அரசே உறுதி செய்! உயர் அதிகாரப் பதவிகளில் ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை உறுதி செய்! தேவை! தேவை! அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை!

தமிழ்நாடு

 

ஒன்றிய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அரசே! ஏமாற்றாதே, ஏமாற்றாதே! இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் ஏமாற்றாதே, ஏமாற்றாதே! எங்கே எங்கே இடஒதுக்கீடு? உயர் பதவிகளில் இடஒதுக்கீடு! அமல்படுத்து! அமல்படுத்து! மண்டல் கமிஷன் பரிந்துரையை   முழுமையாக அமல்படுத்து!

நடைமுறைப்படுத்து! நடைமுறைப்படுத்து! இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்து! உயர் அதிகாரப் பதவிகளில் ஒடுக்கப் பட்டோருக்கும்,    பிற்படுத்தப் பட்டோருக்கும் சட்டப்படி இடஒதுக்கீட்டை  முழுமையாக வழங்கிடு!

ஒன்றிய அரசே, ஒன்றிய அரசே! வெளியிடு, வெளியிடு! வெள்ளை அறிக்கை வெளியிடு! ஒன்றிய அரசின் பதவிகளில் உயர் அதிகாரப் பதவிகளில் இடஒதுக்கீட்டு விவரங்களை முழுமையாக வெளியிடு!

 

அமைத்திடு, அமைத்திடு! சமூகநீதியைக் கண்காணிக்க அதிகாரமிக்க ஆணையத்தை அமைத்திடு, அமைத்திடு!       ஒன்றிய அரசே அமைத்திடு!

பின்பற்று! பின்பற்று! திராவிட மாடலைப் பின்பற்று! ஒன்றிய பாஜக மோடி அரசே! சமூகநீதியை நிலைநாட்டுவதில்   திராவிட மாடலைப் பின்பற்று! கற்றுக் கொள்! கற்றுக்கொள்!     பெரியார் மண்ணாம் தமிழ்நாட்டிலிருந்து ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற சமூகநீதியைக் கற்றுக் கொள்!

 

EWS என்ற பெயரால் 10 சதவிகித இடங்களை அபகரிக்கும் பார்ப்பனச் சதியை முறியடிப்போம், முறியடிப்போம்! எங்கள் தந்தை பெரியாரும் பாபாசாகேப் அம்பேத்கரும் தமிழர் தலைவர் ஆசிரியரும் பெற்றுத் தந்த சமூகநீதியை அழிக்கத் துடிக்கும் ஆரியத்தை விடமாட்டோம், விடமாட்டோம்! போராடுவோம், வெற்றிபெறுவோம் வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!

தமிழ்நாடு

ஞ

ஞாயிறு, 8 மே, 2022

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டக் களம்

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் போராட்டம்!

 


சென்னை, செப்.21 ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சிகளின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தையொட்டி, நேற்று (20.9.2021) காலை 10 மணிக்கு சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடல் நுழைவு வாயிலில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில்  எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்!

ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்! இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் தலைமையிலே ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!

மக்கள் விரோத பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!

மறுக்காதே! மறுக்காதே! ரத்து செய்ய மறுக்காதே! மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுக்காதே!

வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே! விவசாயிகளை வஞ்சிக்காதே!

மோடி அரசே! மோடி அரசே! உயருது! உயருது!  கேஸ் விலை உயருது! கட்டுப்படுத்து! கட்டுப்படுத்து!  கேஸ் விலையைக் கட்டுப்படுத்து!

ஒன்றிய அரசே! மோடி அரசே! கட்டுப்படுத்து! கட்டுப்படுத்து! பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்து!

மோடி அரசால்... மோடி அரசால்....  பொருளாதாரச் சீரழிவுத் திண்டாட்டம் அதனால்... அதனால்.. வேலையில்லாத் திண்டாட்டம்!

மோடி அரசே! ஒன்றிய அரசே!  விற்காதே! விற்காதே! பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே!

ஆகிய முழக்கங்கள் உணர்ச்சிகரமாக இப்போராட்டத்தின் போது ஒலிக்கப்பட்டன.

பங்கேற்றோர்

இப்போராட்டத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர்  பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன், மண்டல செயலாளர் தே.செ.கோபால், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன்,  செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன்,    திருவொற்றியூர் மாவட்ட தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், ஆவடி மாவட்ட துணைத் தலைவர் பா.முத்தழகு, பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்றுநர் சி.காமராஜ்,  பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர்கள் அரும்பாக்கம் சா. தாமோதரன், கோ.வீ.இராகவன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ் வழக்குரைஞர்கள் வீரமணி, துரைசாமி, பகுத்தறிவாளர் கழக வடசென்னை அமைப்பாளர் ஆ.வெங்கடேசன், கூடுவாஞ்சேரி ராஜூ, வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன், தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் மகேந்திரன், பெரியார் பெருந்தொண்டர் ஜெஜெ நகர் ராஜேந்திரன், பெரியார் மாணாக்கன், வை.கலையரசன், திராவிட மாணவர் கழக தோழர்கள் மங்களபுரம் பார்த்திபன், செந்தமிழ் சேரன், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மாணவர் தமிழ்ச்செல்வன், இளைஞர் அணி  மதுராந்தகம் கவுதமன், அண்ணா நகர் ஆகாஷ், வி.ரவிக்குமார், திராவிடர் மகளிர் பாசறை த.மரகதமணி, கோடம்பாக்கம் கோடீஸ்வரி, 100ஆவது வட்ட திமுக பிரதிநிதி சதீஷ்குமார், அரும்பாக்கம் அருள்தாஸ், கொரட்டூர் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால், மதுராந்தகம் நகரச் செயலாளர் அறிவுக் கடல் செல்வம், ஓட்டுநர்கள் ஆனந்த், மகேஷ், இளங்கோ  உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பங்கேற்றனர்.

ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்துப் போராட்டம்! எதேச்சதிகார ஆட்சியை மக்கள் மன்றத்திலிருந்து - ஜனநாயக முறைப்படி அகற்றுகின்ற வரையில் போராட்டங்கள் தொடரும், தொடரும், தொடரும்!

செய்தியாளர்களிடையே  திராவிடர் கழகத் தலைவர்

 சென்னை, செப்.21 - இந்தப் போராட்டம்  முதல் கட்டம்தான் - இதோடு முடிவதல்ல - ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதச் சட்டம் அகற்றப்படுகின்ற வரையில், இப்படிப்பட்ட எதேச்சதிகார ஆட்சியை - மக்கள் மன்றத்திலிருந்து ஜனநாயக முறைப்படி அகற்றப்படுகின்ற வரையில், நிச்சயமாக இதுபோன்ற போராட்டங்கள் பல வடிவங்களில் தொடரும்! தொடரும்!! தொடரும்!!! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்..

ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண் டித்து நேற்று  (20.9.2021)  காலை சென்னை பெரியார் திடல் வாயிலில் நடைபெற்ற  கண்டனப் போராட்டத்தின் போது செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது பேட்டி வருமாறு:

திருமதி.சோனியா காந்தியின் வழிகாட்டுதலில்...

இந்தியத் தலைநகர் டில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி.சோனியா காந்தி அவர்களின் வழிகாட் டுதலில், 19 கட்சிகள் சிறப்பாக இணைந்தன. அதிலே திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து - இந்தியா முழுவதும் இப்பொழுது இருக்கக்கூடிய மக்கள் பிரச்சி னைகளை முன்னிலைப்படுத்தி, ஒன்றிய அரசினுடைய கவனத்திற்குக்கொண்டு செல்லவேண்டும் - அதற்கான ஆர்ப்பாட்டங்களையும், கண்டனப் போராட்டங்களையும் அமைதி வழியில், அறவழியில் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் தொடங்கி, 30 ஆம் தேதிவரை நடத்துவது என்று முடிவெடுத்ததற்கு ஏற்ப, தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணி - அதனுடைய ஒப்பற்ற தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் இருக்கக்கூடிய கூட்டணிக் கட்சிகளான 10 கட்சிகளும், இயக்கங்களும், மற்ற ஆதரவாளர்களும் இணைந்து, தமிழ்நாடு முழுக்க அமைதி வழியில் - கரோனா காலகட்டத்தில் - கரோனா விதிகளை மீறாமல், ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும், ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு, விவசாயிகளுடைய நலனுக்கு விரோதமாக, முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமாக நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண்மைச் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் என்று - தமிழ்நாடு சட்டப்பேரவையில் நம்முடைய முதலமைச்சர் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானத்தை சட்டசபையில் முன்மொழிந்து - ஒரு சில கட்சிகளைத் தவிர, அனைவரும் மிகத் தெளிவான அளவிற்கு வழிமொழிந்தார்களே - அதையே வலியுறுத்தக் கூடிய மக்கள் போராட்டமாக இந்தப் போராட்டம் ஆகியிருக்கிறது.

அதுமட்டுமல்ல, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வளர்ச்சிக்கு வழிவகுப்போம் - குஜராத் மாடல் என்றெல்லாம் சொன்னார் இன்றைய பிரதமர் மோடி அவர்கள்.

ஜனநாயக உரிமைகள் பறி போனதுதான் மிச்சம்

ஆனால், 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்  அவர்களுடைய தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று சொன்னார்.

அதோடு, ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுப்போம் என்று சொன்னார்.

அவர் கணக்குப்படி பார்த்தால், 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் வந்திருக்கவேண்டும் - 5 ஆண்டுகளுக்கு.

இப்பொழுது இன்னும் 3 ஆண்டுகள் கழிந்தால், மொத்தம் 16 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கவேண்டும். அப்படியானால், வேலை இல்லா திண்டாட்டமே இல்லாத அளவிற்கு ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கியிருக்க முடியும். ஆனால், நீரிலே எழுதப்பட்ட எழுத்துகளாக, அந்த வாக்குறுதிகள் காற்றிலே பறக்கவிடப்பட்டு, முழுக்க முழுக்க ஜனநாயக உரிமைகள் பறிபோனதுதான் மிச்சம்.

புதிதாக வரவேண்டாம் ‘‘நரி வலது பக்கம் போனாலும் சரி, இடது பக்கம் போனாலும் சரி, மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் போதும்'' என்று சொல்வதுபோல, இவர்கள் மிகப்பெரிய அளவிற்கு உரிமைகளைப் பறிக்க ஆரம்பித்தார்கள். கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களையெல்லாம் ஒரு பக்கம் விற்பது - இன்னொரு பக்கம் அடமானம் போடுவது.

இல்லத்தரசிகளின் உள்ளமெலாம் எரிகின்ற  சூழ்நிலையை ஒன்றிய அரசு உருவாக்கியிருக்கிறது

அதேநேரத்தில், இல்லத்தரசிகளையெல்லாம் நாங்கள் மகிழ்விப்போம் - பெண்களுக்கு வாய்ப்புகளைக் கொடுப் போம் - அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று பதவிக்கு வந்தவர்கள் - சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எத்தனை முறை உயர்த்தியிருக்கிறார்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஒவ்வொரு வீட்டிலும் எரிவது அடுப்பு மட்டுமல்ல - அவர்களுடைய உள்ளமெல்லாம் எரிகின்ற அப்படிப்பட்ட சூழ்நிலையை ஒன்றிய அரசு உருவாக்கியிருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்கா விட்டாலும் - தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு குறைத்துள்ளது!

அதுபோலவே, சாதாரண மக்கள், நம்முடைய தோழர்கள், நம்முடைய வெகுமக்கள் இன்றைக்கு அதிகமாகப் பயன்படுத்துவது இரண்டு சக்கர வாகனம். அந்த இரண்டு சக்கர வாகனத்தைக்கூட பயன்படுத்த முடியாத அளவிற்கு, இந்தக் கரோனா காலகட்டத்தில், வருமானம் குறைந்திருக்கின்ற காலத்தில், வேலை வாய்ப்புகள் குறைக்கப்பட்டு இருக்கிற காலத்தில், பெட்ரோல், டீசல் விலை மிகப்பெரிய அளவிற்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதில் கொஞ்சம்கூட கருணை காட்டுவதற்கு ஒன்றிய அரசு தயாராக இல்லை.

அதேநேரத்தில், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 3 ரூபாய் குறைத்தார்கள். இத்தனைக்கும் தமிழ்நாடு அரசுக்கு நிதி நெருக்கடி உண்டு. அப்படி இருந்தும் இதை செய்திருக்கிறார்கள். எனவேதான், இவற்றையெல்லாம் முன்னிறுத்தக் கூடிய அளவிற்கு, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

நண்பர்களே, ஒரு செய்தியை நாம் கவனிக்கவேண்டும்; ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களால் விவசாயிகள்  மட்டும் பாதிக்கப்படவில்லை; மாறாக, மாநில உரிமைகளைப் பறிமுதல் செய்கிறது; மாநில உரிமைகளை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது.

கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும்கூட...

என்னவென்று சொன்னால், விவசாயத்தைப் பொறுத்தவரை சட்டங்களை செய்கின்ற முன்னுரிமை - முதல் உரிமை மாநில அரசுகளுக்குத்தான் உண்டு. மாநில அரசு பட்டியலில் இருந்ததை எடுத்து, மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல், எதேச்சதிகார மனப்பான்மையுடன் மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய அரசு - முழுக்க முழுக்க மூன்று சட்டங்களைக் கொண்டு வந்ததை எதிர்த்து, கொதித்துப்  போய், ஏறத்தாழ 9 மாதங்களாக விவசாயிகள் டில்லயில் கடுமையான குளிரிலும், கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும்கூட இன்றைக்கும் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால்தான், ஒன்றிய ஆட்சி  - மக்கள் விரோத ஆட்சியாக  இருக்கிறது என்கிறோம்

இந்தியா முழுமையும் ஒன்றுபட்டு நிற்கிறது

இவர்கள் ஜனநாயகத்தில் மக்களுடைய வாக்குகளைப் பெற்று வந்தோம் என்று சொல்லி, இன்றைக்கு எதேச்சதி காரமாக சட்டங்களை நிறைவேற்றுகிறார்கள். இதையெல்லாம் எதிர்த்து, இந்தியா முழுமையும் ஒன்றுபட்டு நிற்கிறது.

கட்சிகளால் பிரிந்திருந்தாலும், இந்த அடிப்படைக் கோரிக்கைகளால்  ஒன்றிணைந்திருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவேதான், தமிழ்நாட்டில் நீண்ட காலமாக அறப் போராட்டத்தை - மக்கள் போராட்டமாக நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த இயக்கம் - இன்றைக்குக் கரோனா காலகட்டம் என்பதால், மிகப்பெரிய அளவிற்கு மக்களைத் திரட்டக்கூடாது என்பதற்காக, அவரவர் இல்லத்தின் வாசலில் நின்று, அவரவர் அலுவலக வாசலில் நின்று, அவரவர் கட்சி அலுவலக வாசலில் நின்று இந்தப் பணியை செய்கிறோம்.

இந்தப் போராட்டம்  முதல் கட்டம்தான் - இதோடு முடிவதல்ல - ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதச் சட்டம் அகற்றப்படுகின்ற வரையில், இப்படிப்பட்ட எதேச்சதிகார ஆட்சி - மக்கள் மன்றத்திலிருந்து ஜனநாயக முறைப்படி அகற்றப்படுகின்ற வரையில், நிச்சயமாக இதுபோன்ற போராட்டங்கள் பல வடிவங்களில் தொடரும்! தொடரும்!! தொடரும்!!!

வாழ்க பெரியார்!

வாழ்க ஜனநாயகம்,

ஒழிக அடக்குமுறைகளும், எதேச்சதிகாரமும்!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.