தென் சென்னை திராவிடர் கழகம்

நடவடிக்கை மற்றும் செயல்பாடு இடம் பெறும்

பக்கங்கள்

  • முகப்பு
  • பெரியார் உலகம்
  • சுயமரியாதை உலகு
  • பகுத்தறிவு உலகு
  • சிந்தனை செய்வோம்
  • தமிழ் மலர்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வெற்றிவலவன் பக்கம்
  • சமூக நீதி
  • Rationalist forum-Periyar-Tamizh Nadu
நூல் வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

கோயிலைக் காட்டி மக்களை திசை திருப்புவதா? ( டி.ஆர்.பாலு எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா)

 Published January 24, 2024,விடுதலை நாளேடு

கோயிலைக் காட்டி மக்களை திசை திருப்புவதா?

வருகிற தேர்தலில் யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம்
தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

சென்னை, ஜன. 24- தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று (23-01-2024) மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடை பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தி.மு. கழ கப் பொருளாளரும் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு எழுதிய உரிமைக்குரல், ஜி.ஸி.ஙிணீறீu – ஜிலீமீ விணீஸீ ணீஸீபீ விமீssணீரீமீ, விஹ் ஸ்ஷீவீநீமீ யீஷீக்ஷீ tலீமீ ஸ்ஷீவீநீமீறீமீss, பாதை மாறாப் பயணம் (பாகம்-3) ஆகிய நூல்களை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ஒன்றிய மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம், இந்து குழுமத் தலைவர் என்.ராம், கவிப்பேரரசு வைரமுத்து, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள் ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி கருணாநிதி, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடா ளுமன்ற மேனாள் உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி. டி.கே.எஸ். இளங்கோவன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாண்மை இயக்குநர் க. சந்தானம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு,
இன்று, நமது கழக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் – கழகப் பொருளாளருமான என் னுடைய அருமைச் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்கள் எழுதியுள்ள ‘பாதை மாறாப் பயணம்‘ புத்தகத்தின் மூன்றாவது பாகத்தை வெளியிடுகிறேன்.
பாலு அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை யில் சொல்லவேண்டும் என்றால், சின்சியா ரிட்டி! ஏதாவது சொன்னோம் என்றால், அதை முடித்துவிட்டுத்தான் அடுத்த போனே செய்வார்.

கலை­ஞர் மீது பாலு கொண்ட பற்று!

விருதுநகர் முப்பெரும் விழாவில் நம்முடைய பாலு அவர்களைப் பற்றிநான் பேசியதை, மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்க்கிறேன்… ‘கலைஞரின் தொண்டரா? தோழரா? செல்லப்பிள்ளையா? உடன்பிறப்பா? பற்றாளரா? வெறியரா? என்னவென்று பாலுவைச் சொல்வது? இது எல்லாம் கலந்த கலவைதான் பாலு‘ என்று அன்று நான் சொன்னேன்.

அன்றைக்கு நான் சுருக்கமாகச் சொன்னதற்கு விளக்கவுரையாக தன்னுடைய தன்வரலாற்றை எழுதி இருக்கிறார் நம் முடைய பாலு! 17 வயதில் தலைவர் கலைஞரின் பேச்சைக் கேட்டு அரசியலுக்கு வந்த பாலுவிற்கு, இப்போது 80 வயது! இன்றைக்கு வரைக்கும், ‘ஒரே கொடி – ஒரே இயக்கம் – ஒரே தலைமை‘ என்று கொள்கைப் பிடிப் போடு இயங்கிக் கொண்டு இருக்கிறார்.

முதல் பாகத்தில், அரசியலில் அவர் வளர்ந் தது பற்றியும், கழகத்தின் வளர்ச்சிக்காகத் தொண்டாற்றியது பற்றியும் எழுதிய அவர், இரண்டாவது பாகத்தில், அவரால் இந்திய நாடும் – நம்முடைய மாநிலமான தமிழ்நாடும் எப்படிப்பட்ட வளர்ச்சியை அடைந்தது என் றும் விரிவாக எழுதியிருக்கிறார்.
கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் நாடாளு மன்ற உறுப்பினராக, 12 ஆண்டுகள் ஒன்றியத் தில் அமைச்சராக இருந்திருக்கிறார். நாடாளு மன்றத்தின் இரண்டு அவைகளிலும் கழகத் தின் குரலை அவர் கம்பீரமாக ஒலித்திருக் கிறார்.

தமிழ்நாட்டில் ஓடும் தங்கநாற்கரச் சாலை யாக இருந்தாலும், தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் பாலங்களாக இருந்தாலும், இது அனைத்துமே நம்முடைய பாலு அவர்களின் திறமைக்கான மகுடங்கள்!

12 ஆண்டுகள் ஒன்றிய அமைச்சராக இருந்த பாலு, மூன்று முக்கியமான துறைகளில் முத்திரை பதித்தார். ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட் டிற்கு மட்டும் 22 ஆயிரத்து 758 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய பெட்ரோலியத் துறை சார்ந்த திட்டங்களை கொண்டு வந்தார்.
சுற்றுச்சூழல் – வனத்துறை அமைச்சராக இருந்தபோது, தேசிய பல்வகை உயிரின வளங்கள் ஆணையத்தைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்தார். கப்பல் – தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது, 56 ஆயிரத்து 644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தது. தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் 335 பாலங்களைக் கட்டியது பாலுவின் மாபெரும் சாதனை!

அரசியல் சூழ்ச்சியால் சேது சமுத்திரத் திட்டம் முடக்கம்!

ஆனால், இதையெல்லாம் விடப் பெரிய சாதனையாக வந்திருக்க வேண்டிய ஒன்று இருக்கிறது! அதுதான், அறிஞர் அண்ணாவின் கனவுத் திட்டமான சேதுசமுத்திரத் திட்டம்! தலைவர் கலைஞரின் வற்புறுத்தலால் இந்தத் திட்டம் 2004-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டாலும் அடுத்தடுத்து வந்த அரசியல் சூழ்ச்சிகளின் காரணமாக அந்தத் திட்டம் முடக்கப்பட்டது. அந்தத் திட்டம் நிறைவேறி இருந்தால், இந்தியாவின் வளர்ச்சிக்கும் – தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மிக முக்கிய மானதாக இன்றைக்கு அமைந்திருக்கும்.
இத்தகைய சாதனைக் களஞ்சியமாக இருக்கிறது டி.ஆர்.பாலு எழுதி இருக்கும் இந்த வாழ்க்கை வரலாறு! அதேபோல ஈழத் தமிழர் விடியலுக்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆற்றிய பணிகளையும், அதனால் ஆட்சியையே இழந்த தியாகத்தையும் யாராலும் மறக்க முடியாது. இனப்படுகொலை மற்றும் மனித உரிமைக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இலங்கை அரசு மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, அய்க்கிய நாடுகள் அவையிடம் கோரிக்கை மனு அளிப்பதற்காக என்னையும், டி.ஆர். பாலுவையும்தான் தலைவர் கலைஞர் அவர் கள் அனுப்பி வைத்தார். அய்.நா. துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசன் அவர் களையும், மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்களையும் சென்று சந்தித்து, ஈழத்தமிழர்களுக்காக வாதிட்டோம். இது தொடர்பான முழுமையான செய்திகளை பாலு இந்த நூலில் விளக்கமாக எழுதியிருக் கிறார்.

தலைவர் கலைஞர் அவர்கள் மறைவுற்ற பிறகு நடந்த நிகழ்வுகளைச் சொல்கிறபோது, அது கழக வரலாறாகவும், என்னுடைய வரலாறாகவும் அமைந்துவிட்டது. கழகத்தை யும் – என்னையும் – பாலுவையும் பிரித்து வரலாற்றை எழுத முடியாது! நெருக்கடிக் காலத்திற்கு முன்பு, கோபாலபுரம் பகுதியில் நான் இளைஞர் தி.மு.க. தொடங்கிய நேரத்தில் எனக்குத் துணையாக இருந்தவர். பின்னாளில் நெருங்கிய நண்பர்கள் ஆனோம். இந்த வளர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் வழித்தடத்தை விளக்கத்தான் இந்தப் ‘பாதை மாறாப் பயணம்‘! இது பாலுவின் வரலாற்றுப் புத்தகம் மட்டுமல்ல, மற்றவர்களுக்கு வழி காட்டும் புத்தகம்!
பா.ஜ.க.வை வீழ்த்தப் போகும் “இந்தியா” கூட்டணியின் உருவாக்கத்தில் நம்முடைய பாலுவிற்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. இந்தியாவின் எதிர்காலத்தை மனதில் வைத்து, எல்லோரும் கடமையாற்ற வேண் டும்! ஏன் என்றால், நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது, யார் ஆட்சியில் அமரக் கூடாது என்பதற்காக நடைபெறும் தேர்தல்!

கடந்த பத்தாண்டுகாலமாக, மக்களுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறை வேற்றாமல், தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதையும் செய்யாமல், பேரிடர் பாதிப்புக்குக் கூட நிதி ஒதுக்காமல் இறுதிக் காலத்தில் ஒரு கோயிலைக் காட்டி, மக்களைத் திசைதிருப்பப்பார்க்கிறது பா.ஜ.க. தலைமை. தேர்தலைச் சந்திக்க இருக்கும் பா.ஜ.க.விற்கு மக்களிடம் சொல்வதற்குச் சாதனை என்று எதுவும் இல்லை. அதனால்தான் முழுவதுமாக கட்டி முடிக்கப்படாத கோயிலை, அவசர அவரசமாகத் திறந்து, எதையோ சாதித்து விட்டதாகக் காட்ட நினைக்கிறார்கள். இது மாதிரியான திசைதிருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் சரியான பாடம் கொடுப்பார்கள். இது உறுதி!

எல்லா வகையிலும் மக்களை நசுக்கிய ஆட்சி, பா.ஜ.க. ஆட்சி. அந்தக் கோபம் மக்கள் மனதில் இருக்கிறது. தமிழ்நாட்டில் நாம் வலுவான கூட்டணியை அமைத்திருப் பது போன்று, இந்தியா முழுமைக்கும் வலு வான கூட்டணியை உறுதி செய்தாக வேண் டும்.

“இந்தியா” கூட்டணிக் கட்சிகள், தங்க ளுக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த் தையை அந்தந்த மாநிலங்களில் நடத்தி வருவதாக செய்திகள் வருகிறது. விரைவில் எல்லாம் நல்லபடியாக முடிந்து நாட்டு மக் களைக் காப்பாற்ற, தமிழ்நாட்டின் முன்னேற் றத்திற்கு உதவும் ஒரு ஒன்றிய அரசை உரு வாக்க நாமெல்லாம் தேர்தல் களத்தில் நுழை கிறோம். அதற்கும், டி.ஆர்.பாலு அவர்கள் தயாராக வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தப் பணிகளை எல்லாம் வெற்றிகரமாக முடித்த பிறகு, இந்த பாதை மாறாப் பயணத் தின் அடுத்தடுத்த பாகங்களை எழுதுவதற் கான வேலைகள் நம்முடைய டி.ஆர்.பாலு அவர்களுக்குக் காத்திருக்கிறது. தமிழ்நாட்டு முன்னேற்ற த்தின் வரலாற்றைச் சொல்ல, திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றை, தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் வரலாற்றை, இந்தத் திராவிட மாடல் அரசின் வரலாற்றைத் தொடர்ந்து கழகத்தினர் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து எனது உரையை நிறைவு செய்கிறேன். – இவ்வாறு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மக்­க­ளைத் திசை­ தி­ருப்­பப் பார்க்­கி­றது பா.ஜ.க. தலைமை. தேர்­த­லைச் சந்­திக்க இருக்­கும் பா.ஜ.க.விற்கு மக்­க­ளி­டம் சொல்­வ­தற்­குச் சாதனை என்று எது­வும் இல்லை. அத­னால்­தான் முழு­வ­து­மாக கட்டி முடிக்­கப்­ப­டாத கோயிலை, அவ­சர அவ­ர­ச­மா­கத் திறந்து, எதையோ
சாதித்­து­விட்­ட­தா­கக் காட்ட நினைக்­கி­றார்­கள். இது­மா­தி­ரி­யான திசை­தி­ருப்­பும் தந்­தி­ரங்­க­ளுக்கு மக்­கள் சரி­யான பாடம் கொடுப்­பார்­கள். இது உறுதி!

---------------------------





இடுகையிட்டது parthasarathy r நேரம் 12:50 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: டி.ஆர்.பாலு, நூல் வெளியீடு

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

நூல்களின் ஆதிக்கத்தை அறுக்கும் நூலாசிரியர் சுதாகர் பிச்சைமுத்துவின் நோக்கவுரை



  July 24, 2022 • Viduthalai

நூல் வெளியீட்டு விழா ஒரு கருத்தரங்கமாக நடைபெற்ற முத்திரை இந்நிகழ்ச்சிக்கு கிடைத்திருப்பது தனிச் சிறப்பு.

கருத்தரங்கில் பேசிய கவுதம்ராஜ் தேர்தல் அறிக்கை என்ற ஒன்றை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் அறிஞர் அண்ணா என்றார்.

கனிமொழி சோமு எம்.பி.

நூலினை வெளியிட்ட மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமு அவர்கள் சுருக்கமாகக் கருத் துரைத்ததாவது:

ஒரு காலம் இருந்தது. நமது திராவிட இயக்கக் கூட்டங்களில்கூட வேட்டி, சட்டையோடு தரையில் அமர்ந்து கூட்டங்களைக் கேட்பார்கள். இன்று பேண்ட், டீ சர்ட், கோட் அணிந்து குளிரூட்டப்பட்ட மண்டபங்களில் நாற்காலிகளில் அமர்ந்து உரைகளைக்கேட்கும் நிலைக்கு உயர்ந்துள்ளோம். இதுவும் ஒரு வளர்ச்சிதான் - 'திராவிட மாடல்' ஆட்சியின் பங்களிப்பும் இதில் உண்டு.

இலவச திட்டங்களைப் பற்றிக் குறை கூறுவோரும் இருக்கிறார்கள். இலவச திட்டங்கள் பாதிப்பை ஏற்படுத்தவில்லை - வளர்ச்சிப் பாதைக்கு இழுத்துச் சென்றுள்ளன. இதன் அருமையை அயல் நாட்டவர்களும், அயல்நாடு சென்று பணியாற்றும் முனைவர் சுதாகர் பிச்சைமுத்து  போன்றவர்களும் உணர்ந்து ஆய்வு நூல்களை எழுதுவது எவ்வளவு சிறப்பு!

என்னுடைய தந்தையார் என்னிடம் எனது சிறிய வயதுமுதல் சொல்லிச் சொல்லி வளர்த்தது என்ன தெரியுமா?

தந்தை பெரியார் கடற்கரையில் பேசுவார். பெரிய கூட்டமெல்லாம் இருக்காது; ஆங்காங்கே தனித் தனியாக அமர்ந்துகேட்பார்கள். ஆனாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் உரையைத் தந்தை பெரியார் நிகழ்த்திக் கொண்டே இருப்பார். அப்படி எல்லாம் வளர்ந்ததுதான் இந்த திராவிடர் இயக்கம்.

இன்றைக்குப் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவராக ஆக்கி விட்டதாக ஒன்றிய பிஜேபி அரசு பெருமையாகக் கூறிக் கொண்டுள்ளது. இது ஓர் ஏமாற்று வித்தை.

9ஆம் வகுப்புப் படிக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு 3000 ரூபாய் நிரந்தர வைப்பு நிதியில் வைக்கப்பட்டு 18 வயது வரும்போது வட்டியோடு பணம் கொடுக்கப்பட்டு வந்தது. அத்திட்டத்தை நிறுத்தியது இன்றைய பிஜேபி அரசு. இவர்கள்தான் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவரைக் குடியரசுத் தலைவராகக் கொண்டு வந்து விட்டதாகப் பெருமையடித்துக் கொள்கிறார்கள். இதைக் கண்டு எல்லாம் மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், ஆசிரியர் போன்ற திராவிட இயக்க முன்னோடிகளுக்கு வணக்கம். நன்றி கூறி முடிக்கிறேன் என்றார்.

முனைவர் சுதாகர் பிச்சைமுத்து

 M.Sc., M.Phil, Ph.D., FRSC   - நோக்கவுரை

இவர் எழுதிய நூல்தான் "அய்க்கிய நாடுகளின் வளம் குன்றா குறிக்கோள் பார்வையில் திமுக தேர்தல் அறிக்கை 2021" - என்பதாகும்.

இவர் தன் நோக்கவுரையாகக் கருத்தரங்கில் குறிப்பிட்டதாவது:

திராவிட மாடல் என்பது சுயமரியாதை  'Self Respect'  என்பதன் தொடர்ச்சியாகும்.

2015ஆம் ஆண்டு அய்க்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் 'வளம் குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்  (Sustainable Development Goals)  என்று 17 இலக்குகளை அடையாளப்படுத்தி அவற்றை முன்னிலைப்படுத்தி திட்டங்கள், திட்ட வரைவுகள் என்று 2030க்குள் அவற்றினை எட்ட வேண்டிய வேலைகளைச் செய்கின்றன.

உண்மை என்னவென்றால் இந்தத் திட்டங்களை நாம் முடித்து விட்டோம் என்பதுதான். கரோனா காலத்தில் விளையாட்டுத் திடல் பக்கம் மாணவர்கள் செல்ல முடியாத சூழலில் அவர்களுக்குக் கால் ஷுவை இலவசமாக அணிவித்து விளையாட்டில் ஆர்வத்தை ஊட்டியது பிரிட்டன் அரசு.

(இந்திய பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும் இலவசங்களைக் கொடுத்த தமிழ்நாடு பொருளாதாரத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டதாகக் கூறுவதைக் கண்டு வயிறு குலுங்குக் குலுங்க சிரித்துத் தொலையுங்கள்)

தமிழ்நாட்டை இந்திய மாநிலங்களோடு ஒப்பிடக் கூடாது; உலக நாடுகளுடன் ஒப்பிட வேண்டும்.

கட்டணமில்லாப் பேருந்து பயணம் பெண்களுக்கு என்பது சாதாரணமா? ஒவ்வொரு நாளும் இதனால் பொருளாதார பலன் அடைகிறார்கள் - பெண்களுக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது.

அரசு தொடக்கப்பள்ளிகளில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளில் 75 விழுக்காடு பெண் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2006  -2011ஆம் ஆண்டிற்கு இடையில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி 100 ஆண் ஆசிரியர்களோடு ஒப்பிடும் போது பெண் ஆசிரியர் களின் விகிதம் 288 ஆக உயர்ந்துள்ளது. இது ஆண் ஆசிரியர்களைவிட பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை உயர்வு  2 புள்ளி 8 மடங்காகும். இதற்குக் காரணம் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு என்று முதல் அமைச்சர் கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட சட்டத்தின் பலனாகும்.

12ஆம் வகுப்பில் 'தோற்றேன்!'

நான் 12ஆம் வகுப்பில் தோற்றேன். இதனால் நான் என்ன கெட்டு விட்டேன்?

நம்மை ஆண்ட வெள்ளைக்கார பரம்பரையினருக்கு வகுப்பு நடத்தும் பேராசிரியராக உயரவில்லையா? (பலத்த கரஒலி) (மெரிட் என்றும் - மார்க்கு தான் அதற்கு அடையாளம் என்றும் கொக்கரிப் போரின் மூக்கு இந்த இடத்தில் உடைபடவில்லையா?)

Welfare State என்ற சமூக நலத் திட்டங்களுக்கு முதலீடு செய்வதுதான் முக்கியம் என்பதை நமது திராவிட மாடல் உருவாக்கியதன் விளைவு சாதாரணமானதல்ல - இது பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:38 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆசிரியர், சுதாகர், நூல் வெளியீடு

ஞாயிறு, 17 ஜூலை, 2022

பேராசிரியர் மு. நாகநாதன் நூல்கள்: தமிழர் தலைவர் வெளியிட்டார்


   July 10, 2022 • Viduthalai

சென்னை லயோலா கல்லூரியில்  பேராசிரியர் மு. நாகநாதன் எழுதிய  "வளர்ச்சியா? வீழ்ச்சியா?",  "பொறிகள்",  "Dravidian Political Economy" ஆகிய முன்று நூல்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  வெளியிட்டார். இவ்விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி அரிபரந்தாமன், இந்தியக் கடல்சார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் கே.அசோக் வரதன் ஷெட்டி (இ.ஆ.ப. ஓய்வு), சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர்  முனைவர் இராமு. மணிவண்ணன் மற்றும் லயோலா கல்லூரியின் சமூக அறிவியல் மய்யத்தின் இயக்குநர் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி ஆகியோர் பங்கேற்றனர். (9.7.2022)

இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:50 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: இலயோலா, நாகநாதன், நூல் வெளியீடு

திங்கள், 22 பிப்ரவரி, 2021

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நூல்கள் வெளியீடு....


February 22, 2021 • Viduthalai

 

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாரதிதாசன் ஆய்விருக்கை சார்பில் 17.2.2021 அன்று விழா நடந்தது. விழாவில் இயக்குநர் கோ.விசயராகவன் இரு நூல்களை வெளியிட்டார். முதல் நூலை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், இன்னொரு நூலை புரட்சிக்கவிஞரின் பேரன் கோ.செல்வம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:04 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தரமணி, நூல் வெளியீடு

திங்கள், 2 செப்டம்பர், 2019

நூல் வெளியீடு

கலைமாமணி முனைவர் பெரு. மதியழகன் மணி விழாவில் "என் பார்வையில் பாவேந்தரின் குடும்ப விளக்கு' என்ற நூலினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட கவிஞர் நெல்லை ஜெயந்தா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு ஒடிசா அரசின் மேனாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். (சென்னை -1.9.2019)
-விடுதலை நாளேடு, 2.9.19
இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:53 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: நூல் வெளியீடு

செவ்வாய், 19 ஜூன், 2018

மேனாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் எழுதிய நூல்களை வெளியிட்டு தமிழர் தலைவர் உரை



மேனாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., அவர்கள் எழுதிய ஷிஜீமீணீளீவீஸீரீ ஜிக்ஷீutலீ tஷீ றிஷீஷ்மீக்ஷீ (ஆங்கில நூல்) - அந்நூலின் தமிழாக்கமான ‘‘வாய்மையே வெல்லும்'' ஆகிய இரு நூல்களையும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார். கவிப்பேரரசு வைரமுத்து இரு நூல்களையும் பெற்றுக் கொண்டார்.

விழாவுக்கு தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் தலைமை வகித்தார். கவிதா பதிப்பகம் சேது.சொக்கலிங்கம் வரவேற்புரையாற்றிட, எழுத்தாளர்

எஸ்.இராமகிருஷ்ணன், முனைவர் செ.கு.தமிழரசன் ஆகியோர் உரையாற்றினர். நூலாசிரியர் ப.சிதம்பரம் ஏற்புரை வழங்கினார். கவிஞர் இலக்கியா நடராஜன் நன்றி கூறினார். அரங்கம் வழிய பல்துறைப் பெருமக்கள் கூடியிருந்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் விழாக் குழுவின் சார்பில், சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது (சென்னை வித்யோதயா பள்ளி அரங்கம், 16.6.2018, மாலை

- விடுதலை நாளேடு, 17.6.18

இடுகையிட்டது parthasarathy r நேரம் 5:07 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: நூல் வெளியீடு

சனி, 31 ஜனவரி, 2015

ஆதித்தனார் நூல் வெளியீட்டு விழா

அ.மா.சாமி எழுதிய ஆதித்தனார் போராட்ட 



வாழ்க்கை நூல் வெளியீட்டு விழா 



தந்தை பெரியாரால் புரட்சி செய்தவர் என்று 



பாராட்டப்பட்டவர் ஆதித்தனார்


திராவிடர் கழகத் தலைவர் தமிழர் 
தலைவர் ஆசிரியர் உரை
சென்னை, ஜன. 6_- எழுத்தாளர், மூத்த பத்திரிகையா ளர் அ.மா.சாமி எழுதிய ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை  நூல் வெளியீட்டு விழா உலகத் தமிழ்ப் பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் சென்னை மயிலாப்பூர் சி.அய்.டி. காலனியில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் நேற்று (5.1.2015) நடைபெற்றது. உலகத் தமிழ்ப் பண் பாட்டுக் கழகத் தலைவர் அ.இரபியுதீன் வரவேற்றார். மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.மோகன் தலை மையேற்று உரையாற்றினார்.
எழுத்தாளர், மூத்த பத்திரிகையாளர் அ.மா.சாமி எழுதிய ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை என்ற நூலை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட தொழில திபர் வி.ஜி.சந்தோஷம் முதல் நூலைப் பெற்றுக்கொண்டார்.
விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு விழாக்குழுவின் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. நூலாசிரியர் அ.மா.சாமியைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து, பெரியார் களஞ்சியம் நூலை அன்பளிப்பாக வழங்கினார்கள்.
நீதியரசர் எஸ்.மோகன்
நீதியரசர் எஸ்.மோகன் தலைமையுரையில் குறிப்பிட்டதாவது: நீதிபதி ஒருவர் பதவியில் இருந்து விலகிவிட்டால் ஒரு காசும் கிடைக்காது. ஆனால், என்னைத் தேடி இந்த நூலை வெளியிட வேண்டும் என்று அழைத்தமைக்கு மிகவும் நன்றி.
ஆதித்தனார் என் கட்சிக்காரர். வாழ்க்கையில் போராட்டம் இருப்பதுண்டு. போராட்டமே வாழ்க்கை என்று ஆதித்தனார் இருந்தவர். நெருங்கிப் பழகியவன் நான். இந்தியாவிலேயே தினத்தந்தி முதல் இடத்தைப் பெற்றுள்ளது என்றால், அந்த அளவுக்கு முன்னேற்றி இருக்கிறார்கள். ஆதித்தனார் போராட் டத்தால் அது ஏற்பட்டது. முதலில் தமிழன். எத்தனை இன்னல் சொல்லி முடியாது. கையாலேயே கூழைக் கரைத்து, காகிதம் செய்தார். பாரிஸ்டர் வேலையா இது? இந்தியாவின் முதல் இடத்தைப் பெற்றுள்ள தமிழ் நாளிதழ் தினத்தந்தி உறுதி, நெஞ்சுறுதி மட்டு மன்றி உண்மைகளைத் துணிச்சலோடு செய்த மனிதர்.
ஆதித்தனாருக்கு பன்முகங்கள் உண்டு. ஏழைகளைப்பார்த்து இரங்குபவர். காலை முதல் இரவுவரை பாடுபடுபவர். 30 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களுக்கு என்று பத்திரிகைகள் கிடையாது. ஆதித்தனாரை, பெரியார் ஆதரித்து வந்தார். வழக்கு ரைஞர் தொழிலில் நிறைய சம்பாதித்திருக்க வேண்டி யவர் மக்களோடு மக்களாக உழைத்து, பெயரை சம் பாதித்தவர் ஆதித்தனார்.-இவ்வாறு தலைமை யுரையில் நீதியரசர் எஸ்.மோகன் குறிப்பிட்டார்.
தமிழர் தலைவர்
நூலை வெளியிட்டு  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டதாவது:
தந்தை பெரியார் அறியாமையைக் களைவதில் புரட்சி செய்தார். சமூக மறுமலர்ச்சி, சமூகப் புரட்சி யின்மூலம் ரத்தம் சிந்தாத புரட்சியை ஆதித்தனார் செய்தார். Pen is mightier than sword. என்பதற்கேற்ப மொழிக்காக சிறந்த ஆயுதமாக பயன்படுத்தியவர். 1967ஆம் ஆண்டிலே பெரிய மாற்றம் தமிழகத்தில் வந்தது. மொழியை அடித்தளமாகக் கொண்டு ஆதித் தனார் செய்த தொண்டு சாதாரணமானதல்ல. எல் லோருக்கும், எளிய மக்களுக்கும் தொண்டாற்றியவர்.
நூலாசிரியர் அ.மா.சாமி அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பெரியார் களஞ்சியம் நூலினை வழங்கிப் பாராட்டினார்
அந்தக்காலத்தில் பத்திரிகைகள் மேல் ஜாதி, மேல் வர்க்கம் என்பவர்களிடம் இருந்தது. பாரத தேவி, சுதேசமித்திரன், ஹிந்து, பின்னாளில் தினமணி, சொக்க லிங்கத்தின் தினசரி என்று இருந்தது. தேனீர்க்கடையில் சென்று சேரும் வகையில் ஆதித்தனார் சேவை இருந்தது.
நான் மாணவப்பருவத்தில் இருந்தபோது இரண்டாம் உலக யுத்தம் நடந்த காலகட்டம். என்னு டைய 10, 11 வயதிலேயே தந்தை பெரியார் கொள்கை யில் ஒப்படைத்துக் கொண்ட போது தமிழன் வார ஏடு படித்திருக்கிறேன். என் மூத்த சகோதரர் செய்தித் தாள் விற்பனை செய்துகொண்டிருந்தார். அப்போது பல பத்திரிகைகளையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆதித்தனார் சிங்கப்பூரிலிருந்து இங்கு வந்து நடத்திய ஏடுதான் தமிழன். வார ஏடு  உலகப்போரின் போது காகிதங்களுக்கு நெருக்கடியான கட்டத்தில் காகிதத்தைத் தானே தயாரித்தார். ஆதித்தனார் தந்தை பெரியாருக்கு பக்கத்து வீடு மட்டுமல்ல, பக்கத்து உறவாகவே இருந்தவர்.
சிங்கப்பூர் ஓ.இராமசாமி நாடார் காரைக்குடி மணச்சை பகுதியிலிருந்து 1929 ஆண்டில் சிங்கப்பூர் சென்றவர். இரண்டாம் முறையாக 1953ஆம் ஆண்டில் பர்மா சென்றவர்.
தந்தை பெரியார் சிங்கப்பூர் சென்றபோது முதல் முதலாக ரோல்ஸ்ராய்ஸ் கார்மூலம் பெரிய அளவில் வரவேற்றார். வரலாற்று உணர்வு இருக்க வேண்டும். நம் குடும்பத்தைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். நம்மில் பலருக்கும் தாத்தா, தாத்தாவுக்கு அப்பா பெயர் தெரிந்திருக்கும். தாத்தாவுக்கு தாத்தா பெயர் தெரியாது. அதை எழுதிவைக்கும் பழக்கம்கூட கிடையாது.
தமிழர் சீர்திருத்த  சங்கம் அமைத்து தந்தை பெரியார் கொள்கைகளைச் சொல்வதற்கு, தமிழவேள் சாரங்கபாணி அந்த உணர்வை, அந்த   வரலாற்றை உருவாக்கினார்கள். கடல்கடந்த உணர்வு அது. கே.டிகே.தங்கமணி, செல்லமணி ஆதித்தனார் எல்லோருமே பார் அட்லா பட்டம் பெற்றவர்கள். சமுதாயத்துக்குத்தான் பாடுபட்டார்கள்.
நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டோர்...
இந்த உணர்வுகளை உருவாக் கினார்கள். பத்திரிகை நடத்தினார்கள். தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழந்துவிட்டார்களே, ஓர் இனம் தங்கள் மொழி, இன அடையாளங்களை இழக் கக்கூடாது என்று ஆதித்தனார் பத்திரிகை நடத் தினார். தினத்தந்தி அலுவலகம் பெரியார் திடலில் இருப்பதுபோன்று, கொள்கையிலும் தந்தை பெரியாரின் பக்கத்தில் இருந்தார்.
1960ஆம் ஆண்டில் என் திருமணம். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நடத்தி வைத்தார்கள். அப்போது சுதந்திர தமிழ்நாடு போராட்டம், தமிழ்நாடு நீங்கலாக படத்தை எரிப்பு போராட்டம்  அறிவிக்கப் பட்ட நிலை.  25 வயதிலே திருச்சி பெரியார் மாளிகையிலே என்னுடைய திருமணம் நடைபெற்ற போது, தினத்தந்தி அ.மாரிச்சாமி செய்தியாளராக இருந்தவர்.
செய்தியாளர்களை எப்போதுமே தந்தை பெரியார் எதிர்பார்ப்பதில்லை. நான் என்ன பேசினாலும் அதைப் போட மாட்டீர்கள். நான் மக்களை சந்திப்பவன். பத்திரிகை தயவு எனக்கு வேண்டியதில்லை என்று கூறுபவர். ஆனாலும், விதிவிலக்கு அ.மாரிச்சாமிக்கு உண்டு. தந்தை பெரியார் வேனிலேயே பயணம் செய்ய அ.மா.சாமிக்கு மட்டும் இடம் உண்டு. நான், புலவர் இமயவரம்பன் உடன் இருப்போம்.
காலச்சுவடு என்று வரும்போது, பிடிக்கவில்லை என்றாலும், செய்திகளை செய்திகளாகவே கொடுக்க வேண்டும். சிந்தாதிரிப்பேட்டையில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டபோது, கழகச் செயலாளர் நான், தந்தை பெரியாரின் செயலாளர் புலவர் இமயவரம்பன், விடுதலை ஆசிரியர் குருசாமி கைது செய்யப்பட்டோம்.
நாங்கள் அடைக்கப்பட்ட சிறையில் அடுத்த அறையில் ஆதித்தனார் இருந்தார். ஆதித்தனார் இலக்கியத்தை சத்தமாகப் படிப்பார். தந்தை பெரியார், ஆதித்தனார் இருவரும் தந்தை மகன் உறவுபோல் பேசுவார்கள். பல வரலாற்றுத் தகவல்களைப் பேசிக்கொள்வார்கள். பெரியாரும், ஆதித்தனாரும் பேசும்போது நாங்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்போம்.
ஆதித்தனார் விவசாயிகளுக்காகப் போராட்டத்தில் பங்கேற்றபோது கை விலங்கு போட்டு கைது செய்யப் பட்டார். பார் அட்லா படித்தவர் என்கிற அந்தஸ்து, செல்வாக்குகளைப் பார்க்காமல் சாதாரணமானவராகவே சென்றார். லேனா தமிழ்வாணன் கூறியதுபோல் ஆதித்தனார் சாதித்தனார் என்பதில் சாதியைமட்டும் அடையாளமாக்க முற்படுகிறார்கள்.
உயர்ஜாதி, உயர் வர்க்கம் கைகளிலிருந்த பத்திரிகைத் துறையில் எளிய மக்களுக்காக புரட்சி செய்தவர்.  என்று தந்தை பெரியார் அவர்கள் கூறினார். ஜாதி தீண்டாமை பாகம் 9 இல் தந்தை பெரியார் ஆதித்தனார்குறித்து கூறியதை அப்படியே போட்டுள்ளோம். இதுவரையிலும் 35, 40க்கும் மேல் களஞ்சியம் வந்துள்ளது.
பார்ப்பனர்கள் கைகளில் வலிமையான ஆயுதமாக பத்திரிகைகள் இருந்தன. அமைச்சராக இருந்தபோது பொப்பிலி அரசர் கஸ்தூரி அய்யங்காருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் பொப்பிலியரசர் சென்று பார்ப்பார். ஏனென்றால், பத்திரிகை தயவு அவர்களுக்கு வேண்டி யிருந்தது. நான் மக்களிடம் தினமும் 10ஆயிரம்பேரிடம் பேசி வருபவன் என்று  தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்கள்.
இந்த பத்திரிகைத்துறை அனைத்தும் பார்ப்பனர் களிடம் உள்ளது. ஜஸ்டிஸ் கட்சி நஷ்டம் அடைந்து, பத்திரிகை ஆபீஸ் ஏலத்துக்கு வந்தது. அதை நான்தான் எடுத்தேன் என்றார். ஏலத்துக்கு எடுக்கப்பட்டதுதான் இன்றைக்கும் விடுதலை நாளிதழாக உள்ளது.
ஆதித்தனார் Innovation புத்தாக்கம் செய்தவர். பெரியார்  ஓவியக்காரர், போட்டோ கலைஞர் அல்ல. எக்ஸ்ரே நிபுணர்போல்தான் பேசுவார். உள்ளதை உள்ளவாறே பேசுவார். நண்பர் ஆதித்தனார் கஷ்ட, நஷ்டம் பட்டார். அவர் பத்திரிகை பார்ப்பனப் பத்திரிகைகளின் பல்லைப் பிடுங்கிவிட்டது. அதற்காக அதில் உள்ள செய்திகளை எல்லாம் ஆதரிக்கிறேன் என்பதல்ல. (இது கொள்கை) புரட்சியைச் செய்தார் என்று பெரியார் பேசியுள்ளார்.
அதற்கு முன் தேசிய இயக்கங்களின் தலைவர்கள் பெயரில் பத்திரிகை ஆசிரியர்களே அறிக்கை வெளியிடுவார்கள். தினத்தந்தி வந்தபின் மாற்றினார்கள்.
ஏட்டின் கருத்தை ஏற்கலாம் ஏற்காமல் போகலாம். சமூக அநீதியாக இருந்ததை, நான்காவது தூணாக மாற்றி யவர் ஆதித்தனார். ஏழை, எளிய அடித்தள மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. ஆதித்தனார் உயிர் தமிழுக்கு என்றார்.
அண்ணா தமிழருக்கு அளவு கோல் என்று கூறும்போது, மொழியால், விழியால், வழியால் தமிழர் என்று கூறுவார். ஆதித்தனார் சபாநாயகராக இருந்தபோது திருக்குறள் சட்டசபை நிகழ்ச்சியில் இடம்பெற்றது. தினத்தந்தியில் கேலிச்சித்திரம் அருமையாக வரும். குறுந்தாடியுடன் ஆதித்தனார் காந்தி நகரில் இருப்பார். நான் கஸ்தூரிபாய் நகரிலிருந்தேன்.
அப்போது அவரது இல்லம் செல்வேன். இரவு 1 மணிவரை பேசிக்கொண்டிருப்போம். பேசிக்கோண்டிருக்கும்போதே எட்டு காலச் செய்திகுறித்து பேசுவார். தமிழ்நாட்டில் பொதுவாழ்க்கை சாதாரணமானதல்ல. அவருடைய தாடிகுறித்தெல்லாம் எழுதினார்கள். அப்போது வழக்கு போடவேண்டும் என்றபோது வேண்டாம் என்று ஆதித்தனார் மறுத்துவிட்டார். இன்றைக்கு கொள்கை வழியில் எழுதும்போதுகூட வழக்கு என்கிறார்கள். சகிப்புத்தன்மையே இல்லை.
பல்கலைக்கழகங்களில் இதழியல் துறையில் இந்த நூல் பாடமாக வைக்கப்பட் வேண்டும். அரசியல், மொழி, பண்பாடு துறைகளில் மாற்றம் ஏற்பட்டது. தனியாருக்கு உரிமை உள்ளது என்றாலும், பொது உரிமையை உடையது. ஆதித்தனார் மாணவர் அ.மா.சாமி எழுதிய நூலை வெளியிட பெரியாரின் மாணவனாகிய எனக்கு அற்புதமான வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.
-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரையில் குறிப்பிட்டார்.
விழாவில் உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகப் பொதுச்செயலாளர் அ.அய்யூப், எழுத்தாளர், ஊடக வியலாளர் கோமல் ஆர்.கே. அன்பரசன் பேசினார்கள்.
விழாவில் காங்கிரசு கட்சியின் மூத்தத் தலைவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்,  தஞ்சை கூத்தரசன், ஊடகவி யலாளர்கள் லேனா தமிழ்வாணன், வசீகரன், மாநில பகுத்தறிவாளர் கழகப்பொதுச்செயலாளர் வீ.குமரேசன், பகுத்தறிவாளர் கழக வட சென்னை மாவட்டத் துணைத்தலைவர் வெங்கடேசன், திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் மயிலை சேதுராமன், எம்.கே.காளத்தி, சண்முகப்பிரியன், பொறியாளர் குமார், பெரியார் மாணாக்கன் உள்பட பலரும் கலந்துகொண்டார்கள்.
உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் அப்துல் வகாப் நன்றி கூறினார்.
-விடுதலை,6.1.15,பக்-8

இடுகையிட்டது parthasarathy r நேரம் 11:58 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: நூல் வெளியீடு
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

திராவிடம் வெல்லும்

திராவிடம் வெல்லும்

தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாள்

தந்தை பெரியார் 148ஆவது பிறந்த நாள்
தியாகராயர் நகர்

Translate

இந்த வலைப்பதிவில் தேடு

முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் நன்கொடை வசூல்

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம, 22. 11 .2025 மாலை 6 மணி அளவில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ், கஜபதி தெருவில் உள்ள ஆர்.வீ. ஆட்டோ ஒர்க்ஸ் அருகில், மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன் கடவுள் மறுப்பு கூறினார். மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம் அவர்கள் பெரியார் உலகம் நிதி திரட்டுதல், கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்தல், தமிழர் தலைவர் ஆசிரியரின் 93 வது பிறந்த நாளை(டிசம்பர்- 2) சிறப்பாக கொண்டாடுதல் குறித்து நோக்க உரையாற்றினார். நோக்க உரையின் அடிப்படையில் பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ. ராகவன், துணைச் செயலாளர் கரு. அண்ணாமலை, அரும்பாக்கம் சா. தாமோதரன், மயிலை சோ.பாலு, எம்.டி. சி. சு.செல்வம், வெ.கண்ணன், இளைஞர் அணி துணைத் தலைவர் அ.அன்பு, இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா. மாரிமுத்து, மந்தைவெளி எ. பன்னீர்செல்வம், தரமணி ம.ராஜு ஆகியோர் கருத்துகளை எடுத்துரைத்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. இரங்கல் தீர்மானம் கவியருவி ஈரோடு தமிழன்பன், தாம்பரம் பெரியார் பெருந்தொண்டர் தி.இரா.ரத்னசாமி, இரத்தினசாமி அவர்களின் இணையர் ர. ஆதிலட்சுமி மற்றும் பெரியார் பெருந்தொண்டர் மயிலை ந.கிருஷ்ணன் ஆகியோரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 2. 'பெரியார் உலகம்' கட்டுமான நிதிக்கு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாய் நன்கொடை வசூல் செய்து தருவதன ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது. 3. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93 வது ஆண்டு (டிசம்பர் -2) பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்துவது எனவும், 4. கழக ஏடுகளுக்கு சந்தா சேர்த்து வழங்குதல் மற்றும் கழக பரப்புரை பணிகளை தீவிரப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 5. பெரியார் உலகம் நிதி திரட்டுவதற்காக மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இளைஞர் அணி துணைத் தலைவர் அ. அன்பு நன்றி கூறினார்.
Powered By Blogger

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

Wikipedia

தேடல் முடிவுகள்

சிறப்புடைய இடுகை

தெலங்கான நாத்திக சங்கத்தினரின் இசைப் பாடலுடன் பெரவள்ளூரில் பெரியார் 148 ஆம் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம்!

சென்னை, செப்.20 வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், பெரம்பூர் – அகரம் – பெரவள்ளூர் சதுக்கத்தில் கடந்த 17.9.2026 அன்று மாலை 6 மணிக்கு, ...

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்தை அமலாக்க கோரி மறியல்-18.4.16
தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில்-அறநிலையத்துறை-நுங்கம்பாக்கம்

லேபிள்கள்

  • ‘உரையாடல் குடில்
  • 'முகம்' மாமணி
  • 1000 ஆவது நிகழ்ச்சி
  • 1000ஆவது நிகழ்ச்சி
  • 13மாவட்டம்
  • 1985
  • 2020
  • 2021
  • 2022
  • 2025
  • 2053
  • 6 மாவட்டங்கள்
  • 90வயது
  • 9ஆவது அட்டவணை
  • அ. அன்பரசன் – பொ. மந்த்ரா அபிநயா
  • அ.பாபு
  • அகழாய்வு அறிக்கை
  • அகற்றம்
  • அசோக் நகர்
  • அஞ்சலா
  • அஞ்சாமை
  • அடையாறு
  • அண்ணா
  • அண்ணா நினைவு நாள்
  • அண்ணா பிறந்தநாள்
  • அண்ணாநகர்
  • அதிரடி அன்பழகன்
  • அம்பேத்கர்
  • அம்பேத்கர் பாலம்
  • அமுதவள்ளி
  • அமைச்சர்
  • அமைதிப்பேரணி
  • அமைந்தகரை
  • அமைப்பு
  • அய்ந்தாம் பயணக்குழு
  • அய்யாவின் அடிச்சுவட்டில்
  • அய்ஸ் அவுஸ்
  • அய்ஸ்அவுஸ்
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர் உரிமை
  • அர்ச்சுனன்
  • அரங்கண்ணல்
  • அரங்கநாதன்
  • அரங்கம்
  • அரியலூர்
  • அரும்பாக்கம்
  • அரும்பாக்கம்< சா. தாமோதரன்
  • அருள்
  • அருள்மொழி
  • அவ்வை நடராசன்
  • அவமதிப்பு
  • அழகிரி
  • அழிப்பு
  • அளிப்பு
  • அறிக்கை
  • அறிஞர் அண்ணா
  • அறிப்பு
  • அறிவிப்பு
  • அறிவிப்பு பலகை
  • அறிவு இல்லம்
  • அறிவுக்கரசு
  • அன்பளிப்பு
  • அன்பு
  • அனகை ஆறுமுகம்
  • அனைத்து கட்சி
  • அனைத்து ஜாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆசிரியர் பிறந்தநாள்
  • ஆசிரியர் பேட்டி
  • ஆசிரியருக்கு பாராட்டு
  • ஆசைத்தம்பி
  • ஆட்சியர் அலுவலகம்
  • ஆடிட்டர் ராமச்சந்திரன்
  • ஆண்டு சந்தா
  • ஆண்டு மலர்
  • ஆதித்தமிழர்
  • ஆதித்தனார்
  • ஆம்ஸ்ட்ராங்
  • ஆயிரம் விளக்கு
  • ஆர்எஸ்எஸ்
  • ஆர்ப்பாட்டம்
  • ஆர்பாட்டம்
  • ஆரம் வீரப்பன்
  • ஆலந்தூர்
  • ஆவடி
  • ஆளுநர்
  • ஆளுநர் எதிர்ப்பு
  • இசையின்பன்
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டைக் காக்க
  • இடஒதுக்கீடு
  • இடஒதுக்கீடு ஆணை
  • இடிப்பு
  • இணையதளம்
  • இணையேற்பு
  • இணையேற்பு நாள்
  • இதழ்
  • இதழ் வெளியீடு
  • இந்தி
  • இந்தி எதிர்ப்பு
  • இந்தி திணிப்பு
  • இந்தித் திணிப்பு
  • இந்திய எதிர்ப்பு
  • இந்திய மாணவர் சங்கம்
  • இந்திரா நகர்
  • இந்திராநகர்
  • இயக்க நிதி
  • இரங்கல்
  • இரண்டாம் கட்டம்
  • இரத்தினசாமி
  • இரயில் நிலையம்
  • இராசவேலு
  • இராமநாதபுரம்
  • இராயப்பேட்டை
  • இராஜரத்தினம் அரங்கம்
  • இராஜரத்தினம் ஸ்டேடியம்
  • இராஜா அண்ணாமலைபுரம்
  • இருசக்கர வண்டி
  • இல்லத் திறப்பு
  • இல கணேசன்
  • இலங்கைத் தூதரகம்
  • இலயோலா
  • இளங்கோவன்
  • இளைஞர் அணி
  • இளைஞர் அணி மாநாடு
  • இளைஞர்அணி
  • இளைஞரணி
  • இளைஞரணி மாநில மாநாடு
  • இறப்பு
  • இறுதி மரியாதை
  • இறுதி முழக்கம்
  • இறுதிப் பேட்டி
  • இறுதிப் பேருரை
  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை
  • ஈக்காட்டுத்தாங்கல்
  • ஈரோட்டுத் தீர்மானம்
  • ஈரோடு
  • ஈரோடு. சிறப்புத் தீர்மானம்
  • ஈழப்போராட்டம்
  • ஈழம்
  • உடல் நலன்
  • உடல்நலம்
  • உண்ணா நிலை
  • உத்திரமேரூர்
  • உதயநிதி
  • உதயநிதி ஸ்டாலின்
  • உதவி
  • உயர்நீதிமன்றம்
  • உரை
  • உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
  • உறுதி முழக்கம்
  • உறுதிமொழி
  • உறுப்பினர் சேர்க்கை
  • ஊடகவியலாளர்
  • எத்திராஜ்
  • எத்திராஜன்
  • எதிர்ப்பு
  • எம் பி பாலு
  • எம் ஜி ஆர் நகர்
  • எம்.பி பாலு
  • எம்.பி.பாலு
  • எம்.ஜி.ஆர். நகர்
  • எம்.ஜி.ஆர்.நகர்
  • எம்பி பாலு
  • எம்ஜிஆர் நகர்
  • எரிப்பு
  • எழிலன்
  • எழுச்சி மாநாடு
  • எழுத்தாளர் மன்றம்
  • எழும்பூர்
  • எஸ்.அய். ஆர்.
  • ஏழுமலை
  • ஏற்புரை
  • ஒழிப்பு
  • ஒளிப்படக் கண்காட்சி
  • ஒளிபெருக்கி
  • ஓசூர்
  • ஓட்டேரி
  • ஓபிசி வாய்ஸ்
  • க.தனசேகரன்
  • க.பார்வதி
  • க.வெற்றிவீரன்
  • கடலூர்
  • கடற்கரை
  • கடை அடைப்பு
  • கடை வசூல்
  • கண்டண போராட்டம்
  • கண்டன ஆர்ப்பாட்டம்
  • கண்டன உரை
  • கண்டனக் கூட்டம்
  • கண்டனம்
  • கண்மதியன்
  • கந்தவேல்
  • கம்யூனிஸ்ட்
  • கருத்தரங்கம்
  • கருப்புக் கொடி
  • கருப்புக்கொடி
  • கரூர்
  • கரோனா
  • கல்வி
  • கல்வெட்டு
  • கலந்துரை
  • கலந்துரையாடல்
  • கலைஞர்
  • கலைஞர் நகர்
  • கலைஞர் பிறந்த நாள்
  • கலைஞர் பிறந்தநாள்
  • கவிஞர்
  • கவிஞர் கலி.பூங்குன்றன்
  • கவிதை
  • கவிதைப் பித்தன்
  • கழக கொடி
  • கழக நிகழ்வுகள்
  • கழக போராட்டம்
  • கள வீரர்கள்
  • கற்போம் பெரியாரியம்
  • கன்சிராம்
  • கனகரத்தினம்
  • கனடா
  • கனிமொழி
  • காசா
  • காஞ்சி
  • காட்டுப்பாக்கம்
  • காண்டீபன்
  • காணொலி
  • காமராசர்
  • காமராசர் அரங்கம்
  • காமராஜ்
  • கார்ல்மார்க்ஸ்
  • காரல் மார்க்ஸ்
  • கால்டுவெல்
  • காலக்கணக்கு
  • காலச்சுவடு
  • காவிரி
  • கி வீரமணி
  • கி. இராமலிங்கம்
  • கி.வீரமணி
  • கி.வீரமணி விருது
  • கிரகணம்
  • கிரிதரன்
  • கிளைக் கழகங்கள்
  • கிளைக்கழகம்
  • கீழடி
  • கு.க.செல்வம்
  • குட்டிமணி
  • குடந்தை
  • குடியரசுத்தலைவர்
  • குடியுரிமை
  • குடும்ப விழா
  • கும்பகோணம்
  • கும்மிடிப்பூண்டி
  • குமரேசன்
  • குமார்
  • குமாரி
  • குலக்கல்வி
  • குழந்தை நாதன்
  • குழு
  • குளக்கரை
  • குளித்தலை
  • கூட்டம்
  • கூடல் மாநாடு
  • கேந்திரிய வித்யாலயா
  • கேரளம்
  • கேரளா
  • கைது
  • கையெழுத்து
  • கொடி ஏற்றம்
  • கொடியேற்றம்
  • கொடும்பாவி எரிப்பு
  • கொலை முயற்சி
  • கோ. அரங்கநாதன்
  • கோ.சாமிதுரை
  • கோ.பா.சாரதி
  • கோ.வீ. ராகவன்
  • கோட்சே
  • கோட்டூர்
  • கோட்டூர்புரம்
  • கோடம்பாக்கம்
  • கோத்ரேஜ்
  • கோயில்
  • கோவிந்தசாமி
  • கோவில்
  • கோவில்பட்டி
  • கோவை
  • சக்திதாசன்
  • சங்கம்
  • சங்கரய்யா
  • சங்கராச்சாரி
  • சட்ட விழிப்புணர்வு
  • சட்டமன்றம்
  • சடுகுடு
  • சண்முகநாதன்
  • சண்முகப்பிரியன்
  • சத்யராஜ்
  • சந்தா
  • சந்தா வழங்கல்
  • சந்திப்பு
  • சந்திப்புக் கூட்டம்
  • சந்திரா
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூக நீதி மாநாடு
  • சமூகநீதி
  • சமூகநீதி மாநாடு
  • சமூகநீதிக் காவலர்
  • சனாதனம்
  • சா. தாமோதரன்
  • சா.தாமோதரன்
  • சாதி ஒழிப்பு
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாமிநாதன்
  • சாலிகிராம்
  • சாஸ்திரி பவன்
  • சி.பா.ஆதித்தனார்
  • சி.பி.அய் – எம்
  • சிகாமணி
  • சிட்டிபாபு
  • சித்த மருத்துவர்கள்
  • சிதம்பரம்
  • சிந்தனை பலகை
  • சிந்தாதிரிப்பேட்டை
  • சிந்தாதிரிபேட்டை
  • சிலை திறப்பு
  • சிவகங்கை
  • சிறப்புக்கூட்டம்
  • சின்மயா நகர்
  • சு.குமாரதேவன்
  • சுதாகர்
  • சுபவீ
  • சுயமரியாதை
  • சுயமரியாதை இயக்க நூற்றாண்டு
  • சுயமரியாதை இயக்கம்
  • சுயமரியாதைச் சுடரொளி
  • சுவர் எழுத்து
  • சுவர் ஓவியம்
  • சுவரெழுத்து
  • சுழலும் சொற்போர்
  • சுற்றுலாத்துறை அமைச்சர்
  • சூரிய கிரகணம்
  • சூளுரை
  • சூளைமேடு
  • சூளைமேடு நன்கொடை
  • செ.ர.பார்த்தசாரதி
  • செங்கல்பட்டு
  • செங்கற்பட்டு
  • செங்குட்டுவன்
  • செங்கை
  • செந்தில்வேல்
  • செந்துறை
  • செயல்முறை
  • செயலவைத் தலைவர்
  • செயற்குழு
  • செயற்குழுக் கூட்டம்
  • செல்வப்பெருந்தகை
  • சென்னை
  • சென்னை அசோக் நகர்
  • சென்னை காஞ்சி
  • சென்னை பல்கலைக்கழகம்
  • சென்னை மண் டலம்
  • சென்னை மண்டலம்
  • சேகர்
  • சேத்துப்பட்டு
  • சேதுராமன்
  • சேலம்
  • சைதாப்-பேட்டை
  • சைதாப்பேட்டை
  • சைதை
  • சைதை எம்.பி பாலு
  • சைதை எம்.பி.பாலு
  • சைதை துரைசாமி
  • சைதை தொகுதி
  • சைதை பாலு
  • சைதை மேற்கு
  • சோ.சுரேஷ் – மு.பவானி
  • சோமங்கலம்
  • சோமு கனிமொழி
  • சோழிங்கநல்லூர்
  • ஞாயிறு மலர்
  • டி ஆர் பாலு மனைவி
  • டி கே நடராஜன்
  • டி.ஆர். சேதுராமன்
  • டி.ஆர்.பாலு
  • டி.கே.நடராசன் – குஞ்சிதம்
  • டிரோஜன் குதிரை
  • டில்லி
  • டில்லி பெரியார் மய்யம்
  • டெய்சி
  • த.க.நடராசன்
  • த.புகழேந்தி
  • த.வீரசேகரன்
  • தங்கம்
  • தஞ்சாவூர்
  • தஞ்சை
  • தஞ்சை மாநாடு
  • தட்சிணாமூர்த்தி
  • தட்ஷணாமூர்த்தி
  • தடை
  • தந்தை பெரியார்
  • தந்தை பெரியார் சிலைக்கு மாலை
  • தந்தை பெரியார் பிறந்த நாள்
  • தமிழ்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழ் வார விழா
  • தமிழ்ச்செல்வன்
  • தமிழ்நாடு முதல்வர் உரை
  • தமிழ்ப் புத்தாண்டு
  • தமிழ்ப் புலிகள்
  • தமிழச்சி
  • தமிழர் தலைவர்
  • தமிழர்கள்
  • தமிழின எழுச்சி நாள்
  • தமிழினி
  • தரமணி
  • தலைமை கழகம்
  • தலைமை செயற்குழு
  • தலைமைக் கழகம்
  • தலைமைச் செயற்குழு
  • தலையங்கம்
  • தாக்குதல்
  • தாம்பரம்
  • தாம்பரம்<விஜயவாடா
  • தாமோதரன்
  • தாராபுரம்
  • தி.இரா.இரத்தினசாமி
  • தி.தொ.க.
  • தி.மு.க. மாணவர்
  • திசை
  • திட்டங்கள்
  • திட்டம்
  • திணிப்பு
  • திமுக
  • தியாகராய நகர்
  • தியாகராயர்
  • தியாகராயர் கலையரங்கம்
  • தியாகராயர் நகர்
  • தியாகராயர் பிறந்த நாள்
  • திராவிட மகளிர்
  • திராவிட மாணவர் கழகம்
  • திராவிடக் கொள்கை அறிக்கை 
  • திராவிடர் எழுச்சி மாநாடு
  • திராவிடர் எழுச்சி மாநாடு!
  • திராவிடர் கழக மகளிரணி
  • திராவிடர் கழகம்
  • திராவிடர் திருநாள்
  • திராவிடர்கழகம்
  • திரிபுரா
  • திருச்சி
  • திருத்தணிகாசலம்
  • திருத்தம்
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருமண நாள்
  • திருமண வரவேற்பு
  • திருமணநாள்
  • திருமணம்
  • திருமா
  • திருமாவளவன்
  • திருவண்ணாமலை
  • திருவல்லிக்கேணி
  • திருவள்ளுவர்
  • திருவள்ளுவர் சிலை
  • திருவான்மியூர்
  • திருவிழா
  • திருவெற்றியூர்
  • திருவொற்றியூர்
  • திரைப்படம்
  • திவாகரன்
  • திறந்தவெளி மாநாடு
  • திறப்பு
  • தினத்தந்தி
  • தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
  • தீர்மான விளக்கம்
  • தீர்மானங்கள்
  • தீர்மானம்
  • துண்டறிக்கை
  • துப்பாக்கிசூடு
  • துயர் துடைப்பு
  • துரை.அருண்
  • துரை.இராவணன்
  • துரைமுத்து
  • தூத்துக்குடி
  • தெருமுனை
  • தெருமுனை கூட்டம்
  • தெருமுனைக் கூட்டம்
  • தென் சென்னை
  • தென்சென்னை
  • தென்றல்
  • தென்னரசு
  • தே.செ.கோபால்
  • தேசியக் கல்வி
  • தேர்தல்
  • தேர்தல் பரப்புரை
  • தேனாம்பேட்டை
  • தேனி
  • தொல்லியல் அகழாய்வு
  • தொலைக்காட்சி
  • தொலைக்காட்சி நிலையம்
  • தொழிலாளர்
  • தொழிலாளர் அணி
  • தொழிலாளர் அமைச்சர்
  • தொழிலாளர் சட்டம்
  • தொழிலாளரணி மாநாடு
  • தொழிற்சங்கம்
  • தோழர்
  • நகல் எரிப்பு
  • நடராசன்
  • நடராஜன்
  • நடராஜன் குடும்பம்
  • நடவடிக்கைகள்
  • நடிகர்ராஜேஷ்
  • நரிமணம்
  • நலம் விசாரிப்பு
  • நன்கொடை
  • நன்னன்
  • நன்னன் குடில்
  • நன்னன் மகள்
  • நன்னிலம்
  • நாகநாதன்
  • நாகப்பன்
  • நாகம்மையார்
  • நாகர்கோயில்
  • நாத்திகர் மாநாடு
  • நால் அறிமுகம்
  • நிதி
  • நிவாரணப் பணி
  • நிவாரணம்
  • நிறைவு விழா
  • நினைவகம்
  • நினைவகம் திறப்பு
  • நினைவிடம்
  • நினைவு
  • நினைவு நாள்
  • நினைவு நாள் கூட்டம்
  • நினைவுநாள்
  • நினைவேந்தல்
  • நீட்
  • நீட் எதிர்ப்பு
  • நீட் ஒழிப்பு
  • நீட் தேர்வு
  • நீட் தேர்வு எதிர்ப்பு
  • நீட் விலக்கு
  • நீதிபதி
  • நீதிபதி நியமனம்
  • நீதிபதிகள்
  • நீதிபதிகள் தீர்ப்பு
  • நீதிபதிகள் நியமனம்
  • நீதிமன்றம்
  • நீலகண்டன்
  • நுங்கம்பாக்கம்
  • நுழைவுத் (CUET) தேர்வு
  • நூல்
  • நூல் வெளியீடு
  • நூற்றாண்டு
  • நூற்றாண்டு நிறைவு
  • நூற்றாண்டு நிறைவு விழா
  • நெகிழித்திரை
  • நேர்காணல்
  • நொச்சி நகர்
  • ப.க
  • பக்தவச்சலம்
  • பகுத்தறிவாளர் கழகம்
  • பகுதி
  • பச்சையப்பன் கல்லூரி
  • பஞ்சாட்சரம்
  • பட்டம்மாள்
  • பட்டாளம்
  • பட்டியல்
  • பட்ஜெட்
  • பட்ஜெட்டைக் கண்டித்து
  • படத் திறப்பு
  • படத்திறப்பு
  • படிப்பகம்
  • படுகொலை
  • பணி நிறைவு
  • பணிநிறைவு
  • பயணக் குழுவிற்கு வரவேற்பு
  • பயணம்
  • பயனாடை
  • பயிலரங்கம்
  • பயிற்சி
  • பயிற்சி பட்டறை
  • பயிற்சிப் பட்டறை
  • பரப்புரை
  • பரப்புரை பயணம்
  • பல்கலைக்கழகம்
  • பவழ விழா
  • பவழ விழா மாநாடு
  • பள்ளி
  • பா. தென்னரசு
  • பா.தட்சிணாமூர்த்தி
  • பாக்கியம்
  • பாடல் தொகுப்பு
  • பாத பூஜை
  • பாதுகாப்பு மாநாடு
  • பாம்குரோ
  • பார்த்தசாரதி
  • பார்வதி
  • பாரத் ஓவர்சீஸ் வங்கி
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பாராட்டுரை
  • பாலகிருஷ்ணன்
  • பாவாணர் மகன்
  • பாஸ்கர்
  • பி பி சிங்
  • பிரச்சார பயணம்
  • பிரச்சாரப் பயணம்
  • பிரபாகரன்
  • பிரேமா
  • பிறந்த நாள்
  • பிறந்தநாள்
  • பினராய் விஜயன்
  • புகழ் பேரணி
  • புகார்
  • புத்தகக்காட்சி
  • புத்தகம் வெளியீடு
  • புத்தாண்டு
  • புதிய பொறுப்பாளர்
  • புதிய பொறுப்பாளர்கள்
  • புதிய பொறுப்பு
  • புதுக்கோட்டை
  • புதுப்பேட்டை
  • புதுமை இலக்கிய தென்றல்
  • புதுமை இலக்கியத் தென்றல்
  • புரசை
  • புரசைவாக்கம்
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புரட்சிக்கவிஞர் விருது
  • புரட்சிக்கவிஞர் விழா
  • புரடசிக்கவிஞர்
  • புழல்
  • பூவிருந்தவல்லி
  • பெரியார்
  • பெரியார் ஆயிரம்
  • பெரியார் உலகம்
  • பெரியார் சிலை
  • பெரியார் திடல்
  • பெரியார் பன்னாட்டு அமைப்பு
  • பெரியார் பிஞ்சு
  • பெரியார் பிறந்த நாள்
  • பெரியார் பிறந்தநாள்
  • பெரியார் பெருந்தொண்டர்
  • பெரியார் மேளா
  • பெரியார் யுவராஜ்
  • பெரியார் விருது
  • பெலா மு. சந்திரா
  • பேட்டி
  • பேரணி
  • பேரமனூர்
  • பொதுக் குழு
  • பொதுக் கூட்டம்
  • பொதுக்-கூட்டம்
  • பொதுக்குழு
  • பொதுக்குழு உறுப்பினர்
  • பொதுக்கூட்டம்
  • பொறுப்பாளர்
  • பொறுப்பாளர் கலந்துரையாடல்
  • பொறுப்பாளர்கள்
  • பொறுப்பு
  • பொறுப்பு மாவட்டங்கள்
  • பொன்.மாடசாமி
  • பொன்முடி
  • பொன்விழா
  • பொன்னேரி
  • போராட்டம்
  • போரூர்
  • மகளிர்
  • மகளிர் அணி
  • மகளிர் பாசறை
  • மகளிர்ப் பாசறை
  • மகளிரணி
  • மகளிரணி -மகளிர் பாசறை
  • மகளிரணி கலந்துரையாடல்
  • மஞ்சநாதன்
  • மண்டல் குழு பரிந்துரை
  • மண்டல் பரிந்துரை
  • மண்டல கலந்துரை
  • மண்டல கலந்துரையாடல்
  • மண்டல மாநாடு
  • மண்டலம்
  • மண நாள்
  • மணநாள்
  • மணவிழா
  • மணவிழா வரவேற்பு
  • மணி அம்மையார்
  • மணிப்பூர்
  • மணியம்மையார்
  • மதியழகன்
  • மதிவதனி
  • மதுரை
  • மந்தவெளி
  • மந்தைவெளி
  • மம்தா
  • மயக்க பிஸ்கட்டுகள்
  • மயிலாப்பூர்
  • மயிலை
  • மயிலை த.வேலு
  • மயிலை முரளி
  • மரியாதை
  • மருத்துவக் கல்லூரி
  • மல்யுத்த வீராங்கனை
  • மலர் வளையம்
  • மலையாளிகள்
  • மறியல்
  • மறைமலைநகர்
  • மறைவு
  • மன்றல்
  • மனித சங்கிலி
  • மனுதர்ம எரிப்பு
  • மா. சுப்பிரமணியன்
  • மா.பா.அன்புதுரை
  • மாசு
  • மாட்சிகள்
  • மாட்டுக்கறி
  • மாணவர்
  • மாணவர் இயக்கம்
  • மாணவர் எழுச்சி மாநாடு
  • மாணவர் கழகம்
  • மாணவர் நகலகம்
  • மாணவர் பேரணி
  • மாணவரணி
  • மாணவரணி கூட்டம்
  • மாணிக்கம்
  • மாதவன்
  • மாநாட்டு தீர்மானங்கள்
  • மாநாடு
  • மாநில இளைஞரணி
  • மாநில கலந்துரை
  • மாநில கலந்துரையாடல்
  • மாநில பொறுப்பாளர்
  • மாநில பொறுப்பாளர்கள்
  • மாநில மாநாடு
  • மாநிலக் கல்லூரி
  • மார்ஷல்
  • மாலை
  • மாலை அணிவி
  • மாலை அணிவிப்பு
  • மாவட்ட கலந்துரையாடல்
  • மாவட்டக் கழகம்
  • மாவட்டம்
  • மின்சாரம்
  • மீனம்பாக்கம்
  • மீனா முத்தையா
  • மு.இரா.மாணிக்கம்
  • மு.சண்முகப்பிரியன்
  • முகம் மாமணி
  • முத்தரசன்
  • முத்தையன்
  • முதல்வர்
  • மும்பை
  • மும்மொழித் திட்டம்
  • முழக்கம்
  • முழு அடைப்பு
  • முற்றுகை போராட்டம்
  • மூடநம்பிக்கை
  • மூடநம்பிக்கை ஒழிப்பு
  • மூர்த்தி
  • மெமோரியல் ஹால்
  • மேற்கு சென்னை
  • மேனாள் டிஜிபி ஏ.ராஜ்மோகன்
  • மேனாள் பிரதமர்
  • மோட்டார் சைக்கிள்
  • யுவராஜ்
  • யூஜிசி
  • ரகுராமன்
  • ரயில்
  • ரயில் மறியல்
  • ராதிகா தாயார்
  • ராமாபுரம்
  • ராமேசுவரம்
  • ராயப்பேட்டை
  • ராயல்டி
  • ராஜரத்தினம் அரங்கம்
  • ரிசர்வ் வங்கி
  • ரெக்கார்ட்ஸ்
  • லக்னோ
  • லெனின்
  • வ.உ.சி.
  • வ.கோட்டம்
  • வங்கி
  • வங்கிகள்
  • வங்கிப் பணி
  • வட்டார மாநாடு
  • வட சென்னை
  • வடசென்னை
  • வண்டி பரப்புரை
  • வர்ணாசிரம எதிர்ப்பு
  • வரவேற்பு
  • வரவேற்பு விழா
  • வருணாசிரம எதிர்ப்பு
  • வருமானவரம்பாணை
  • வழக்குரைஞர்
  • வழக்குரைஞரணி
  • வழகுரைஞர்
  • வள்ளியம்மாள்
  • வள்ளுவர் கோட்டம்
  • வள்ளுவர்கோட்டம்
  • வளசரவாக்கம்
  • வளர்ச்சி நிதி
  • வன்னி அரசு
  • வாகனம் பரப்புரை
  • வாசுதேவன்
  • வாழ்க்கை
  • வாழ்க்கை குறிப்பு
  • வாழ்த்து
  • வி.சி.க.
  • வி.பி.சிங்
  • வி.ஜி.பி.
  • விடுதலை
  • விடுதலை சந்தா
  • விடுதலை சிறுத்தைகள்
  • விடுதலை நிதி
  • விடுதலை90
  • விடுதலைச் சந்தா
  • விருகம்பாக்கம்
  • விருது
  • வில்சன்
  • வில்வநாதன்
  • விலைவாசி
  • விழா
  • விழிப்புணர்வுப் பிரச்சார பயணம்
  • விழுப்புரம்
  • விளக்கக் கூட்டம்
  • விளக்கம்
  • விளம்பரம்
  • விளையாட்டுப் போட்டி
  • வீரசேகரன்
  • வீரமர்த்தினி
  • வீரர்
  • வீரவணக்கம்
  • வெளியீடு
  • வெற்றி
  • வே.சிறீதர்
  • வேட்பாளர்
  • வேலை வாய்ப்பு
  • வேலைத் திட்டம்
  • வேழவேந்தன்
  • வைக்கம்
  • வைக்கம் போராட்டம்
  • வைகோ
  • ஜனநாதன்
  • ஜனநாயக விரோதம்
  • ஜனவரி2024
  • ஜாதி ஒழிப்பு மாநாடு
  • ஜாபர்
  • ஜாபர்கான் பேட்டை
  • ஸ்டாலின்
  • ஹிந்தி எதிர்ப்பு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை பெயர் எழுதிட போராட்டம்
    திராவிடர் கழகத்தின் பெரும் முயற்சியால் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை என்றும், மவுண்ட் ரோடு - என்பதை அ...
  • நுங்கம்பாக்கம் பகுதி திராவிடர் கழக துணைத் தலைவர் மா.நடராசன் அவர்கள் மறைவு
                                                                                வருந்துகிறோம் தென் சென்னை மாவட் டத்தை சேர்ந்த நுங்கம்பாக்கம் பகு...
  • சூளைமேட்டில் 43வது மாநாடு-9.2.15
    விடுதலை,6.2.15 விடுதலை,8.2.15,பக்கம்-3
  • மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் நன்கொடை
    பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தமது 84ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக கழக வளர்ச்சிக்காக ரூ.5000, பெரியார் நூலக வாச...
  • கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி நன்கொடை
     சென்னை சூளைமேடு சவுராஷ் டிரா நகரைச் சேர்ந்த கே.கோமளா (WCS) அவர்களின் 16ஆம் ஆண்டு (8.12.2021) நினைவுநாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைக...
  • ச.துணைவேந்தன் - மு. உமா இணையேற்பு விழா
    சுயமரியாதை திருமண விழா நாள்: 10.2.2019 ஞாயிறு மாலை 4.00 மணி முதல் 6 மணிக்குள் இடம்: பத்மாவதி திருமண மண்டபம், சூனாம்பேடு மணமக்கள்:...
  • கு.பா. தமிழினி – சு. ஆகாஷ் மகோதர் வாழ்க்கை இணையேற்பு விழா
    கு.பா. தமிழினி – சு. ஆகாஷ் மகோதர் வாழ்க்கை இணையேற்பு விழா தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி – கோ. குமாரி இணையரின்...
  • இனமானப் பேராசிரியர் அன்பழகன் இறுதி ஊர்வலம்
    மறைந்த இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்...
  • சைதை எம்.பி. பாலு பேசுகிறேன்!
    1948 ஆம் ஆண்டு ஆலந்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியாரின் பேச்சை முதல் முதலாக கேட்டேன். அன்று முதல் நான் பெரியாரின் ...
  • நடிகர் எம்.ஏ.கிரிதரன் அவர்களின் முதலாம் ஆண்டு  நினைவுநாளையொட்டி நன்கொடை!
    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, சிக்கல்நாய்க்கன் பேட்டை அஞ்சல் கிளிமங்கலத்தைச் சேர்ந்த பிச்சைமணியின் மகள் பி.முத்துச்செல்வி அவர...

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (55)
    • ▼  செப்டம்பர் (5)
      • தினத்தந்தி' நாளிதழின் நிறுவனர் சி.பா. ஆதித்தனாரின்...
      • பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 148ஆம் பிறந்த ந...
      • தெலங்கான நாத்திக சங்கத்தினரின் இசைப் பாடலுடன் பெரவ...
      • அறிஞர் அண்ணாவின் 118ஆம் ஆண்டு பிறந்த நாள் : சிலை –...
      • திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் உற்சாகமூட்டு...
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (8)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (10)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (6)
  • ►  2025 (94)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (5)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (16)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (9)
  • ►  2024 (177)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (22)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (13)
    • ►  ஜூலை (40)
    • ►  ஜூன் (19)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (11)
    • ►  பிப்ரவரி (12)
    • ►  ஜனவரி (10)
  • ►  2023 (164)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (14)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (19)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (26)
    • ►  பிப்ரவரி (18)
    • ►  ஜனவரி (13)
  • ►  2022 (180)
    • ►  டிசம்பர் (28)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (23)
    • ►  செப்டம்பர் (13)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (25)
    • ►  ஜூன் (23)
    • ►  மே (18)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (9)
  • ►  2021 (119)
    • ►  டிசம்பர் (13)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  மார்ச் (14)
    • ►  பிப்ரவரி (24)
    • ►  ஜனவரி (18)
  • ►  2020 (66)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (4)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (12)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (11)
  • ►  2019 (119)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (19)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (14)
    • ►  ஜனவரி (10)
  • ►  2018 (123)
    • ►  டிசம்பர் (20)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (12)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (15)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (14)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (6)
  • ►  2017 (81)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (10)
    • ►  செப்டம்பர் (8)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (8)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (11)
  • ►  2016 (46)
    • ►  டிசம்பர் (4)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (5)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (84)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (7)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (13)
    • ►  மார்ச் (9)
    • ►  பிப்ரவரி (13)
    • ►  ஜனவரி (5)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.