
சனி, 1 ஜூன், 2024
விடுதலை 90′ ஆம் ஆண்டு தொடக்க விழாவில் தமிழ்நாடு முழுவதுமிருந்து வருகை தந்த தோழர்கள் ‘விடுதலை’ சந்தாக்களை வழங்கினர் (சென்னை, 1.6.2024)

செவ்வாய், 23 மே, 2023
விடுதலை வாழ்நாள் சந்தா- சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு பத்து விடுதலை வாழ்நாள் சந்தா உறுதி செய்யப்பட்டது
தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையில், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலையில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் தனி உதவியாளர் செந்திலை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.செயராமன் ஆகியோருடன் சந்தித்து சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு பத்து விடுதலை வாழ்நாள் சந்தாவினை உறுதி செய்தனர்.
வியாழன், 13 ஏப்ரல், 2023
புதன், 1 மார்ச், 2023
மு.இரா.மாணிக்கம் ‘விடுதலை' 10 ஆண்டு சந்தா தொகை அளிப்பு
40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!
திங்கள், 19 டிசம்பர், 2022
தமிழர் தலைவர் பிறந்த நாள் விழாவில் 'விடுதலை' சந்தாக்களை வழங்கினர் (தென் சென்னை)
புதன், 14 டிசம்பர், 2022
கழகப் பொதுச்செயலாளரிடம் விடுதலை சந்தா ரூ.1 லட்சம் உதயநிதி ஸ்டாலின் வழங்கல் (தென் சென்னை)
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கழகப்பொதுச்செயலாளரிடம் விடுதலை சந்தாவுக்காக ரூ.1 லட்சம் வழங்கினார். இதுகுறித்து அவர் தம் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: பகுத்தறிவு, சமூகநீதிக் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் பெரும் பணியைத் தொய்வின்றிச் செய்து வரும் 'விடுதலை' நாளிதழுக்கு எனது சிறு பங்களிப்பாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை ஆயுள் சந்தாவாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் அன்புராஜ் அவர்களிடம் இன்று வழங்கினேன். வாழ்க பெரியார்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.
திங்கள், 12 டிசம்பர், 2022
விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - பார்வதி நன்னனின் மகள் அவ்வை - தமிழ்ச்செல்வன் இணையர் விடுதலை வாழ்நாள் சந்தா வழங்கினர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கப்படும் 'விடுதலை' சந்தா சேர்ப்பு இயக்கம் இரண்டாம் கட்ட பணி - சந்தா வழங்கினர் (கு.க.செல்வம் வாழ்நாள் சந்தா வழங்கினார்)
திருப்பூர் மாவட்ட செயலாளர் யாழ்.ஆறுச்சாமி திரட்டிய விடுதலை சந்தா ரூ.15,700த்தை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம் (24-11-2022).
தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் மாவட்டச் செயலாளர் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி ஆகியோரிடம் மேனாள் சட்டமன்ற திமுக உறுப்பினர் கு.க.செல்வம் வாழ்நாள் விடுதலை சந்தா ரூ.20,000த்தை வழங்கினார். உடன்: மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன்,வி.பன்னீர்செல்வம்.
காரைக்கால் மண்டல திராவிடர் கழகம் சார்பாக நல்லாத்தூர் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் செ. அமுதன் விடுதலை சந்தா தொகை ரூ.20,000த்தை புதுச்சேரி மாநில கழகத் தலைவர் சிவ. வீரமணியிடம் வழங்கினார். உடன்: காரைக்கால் மண்டல கழக தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி, காரைக்கால் மண்டல கழக செயலாளர் பொன். பன்னீர்செல்வம்.
ஈரோடு சேவா பேப்பர் மார்ட் உரிமையாளர் காசி, அவரது மகன் செந்தில்குமார் ஆகியோர் விடுதலை ஆயுள் சந்தா ரூ.20,000த்தை அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகத்திடம் வழங்கினர். (இவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலை வாசகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது).
திருப்பூர் மாநகராட்சி 3-ஆம் மண்டலத் தலைவர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சி.கோவிந்தசாமி (தி.மு.க) விடுதலை சந்தா ரூ.10,000த்தை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், மாவட்டச்செயலாளர் யாழ்.ஆறுச்சாமி (24-11-2022).
திருச்சி சட்டமன்றத் தொகுதியில் விடுதலை சந்தா தொகை ரூ.10,000த்தை திருச்சி தொழிலதிபர் ஜான்சன் குமார் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், பீம நகர் பகுதி செயலாளர் முபாரக் , ஜெயராஜ், விடுதலைச்சந்திரன் ஆகியோர்.(18.11.2022)
சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரனிடம் கோவிளம்பாக்கம் பொறியாளர் சி.மணிமாறன் (அ.இ.அ.திமுக) விடுதலை வாழ்நாள் சந்தாவிற்கு ரூ.20,000த்தை வழங்கினார். உடன்: மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.செயராமன், வி.பன்னீர்செல்வம்.மாவட்டச்செயலாளர் விசய் உத்தமன், மாவட்ட அமைப்பாளர் குழ.செல்வராசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் விடுதலைநகர் பி.சி.செயராமன்.
மாவட்டத்தலைவர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், மகள் இரமணாதிலகம் ஆகியோர் விடுதலை வாழ்நாள் சந்தாவிற்கு ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரனிடம் வழங்கினார்.
நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர். மனோகரன் விடுதலை வாழ்நாள் சந்தாவிற்கு ரூ.20,000த்தை மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார்.
கோவை வடக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி விடுதலை சந்தா ரூ.20,000த்தை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம்,மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகரன், மாநில இளைஞரணி அமைப்பாளர் ஆ.பிரபாகரன், போத்தனூர் வெங்கடேஷ், குறிச்சி ஆவின் சுப்பையா (28-11-2022)
சந்தா தொகை ரூ.20,000த்தை ஊராட்சி மன்ற தலைவர் வடமதுரை.ரேவதி நாகராஜ் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகரிடம் வழங்கினார்.உடன் மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா. வீரபாண்டியன், மண்டல தலைவர் மு.நாகராஜன், தொழிலாளர் கழக பேரவை தலைவர் அ.மோகன்,மாநில இளைஞரணி துணை செயலாளர் நா.கமல்குமார் ஆகியோர்(21.11.2022)உடுமலை 27ஆவது வார்டு நகராட்சி மன்ற உறுப்பினர் ரீகன் (தி.மு.க) அய்ந்து விடுதலை ஆண்டு சந்தா ரூ.10,000த்தை பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம், வழக்குரைஞரணி மாநில துணைத்தலைவர் உடுமலை ஜெ.தம்பிபிரபாகரன், தி.மு.க மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கோ.இளங்கோவன், மாவட்டத் தலைவர் கணியூர் க.கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஆ.முனிஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் நா.சக்திவேல், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் பு.முருகேசு,மடத்துக்குளம் ஒன்றியதலைவர் மா.தங்கவேல் (28-11-2022)
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் விடுதலை சந்தா தொகை ரூ.16,000த்தை திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் மாரியப்பன் மாநில தொழிலாளரணி செயலாளர் மு. சேகரிடம் வழங்கினார்.(15.11.2022)
விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் அரங்க. பரணிதரன் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனிடம் 13 ஆண்டு சந்தாக்கள் 10 அரையாண்டு சந்தாக்களுக்கான தொகையினை வழங்கினார்.
ஊராட்சி மன்றத் தலைவர் நாஞ்சி கி.வ.சத்தியராஜ் விடுதலை வாழ்நாள் சந்தா ரூ.20,000த்தை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன்: மண்டலத் தலைவர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன்,மாநகர செயலாளர் அ.டேவிட் (21-11-2022)
அய்ந்து விடுதலை ஆண்டு சந்தாக்களுக்காக விழுப்புரம் ஆர்.அலெக்ஸ் ரூபாய் பத்தாயிரத்தை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரனிடம் வழங்கினார். உடன்: நகர திமுக செயலாளர் சக்கரை.
















































