வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 19 மே, 2025

இரா.எத்திராஜன் ஆசிரியர் அவர்களிடம் வாழ்த்து

 


விடுதலை நாளேடு
வாழ்த்து

சிங்கப்பூரில் நடைபெற்ற பன்னாட்டு டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரா.எத்திராஜன் – குழுப் போட்டியில் 3ஆம் இடத்தை பெற்றதையொட்டி ஆசிரியர் அவர்களை 12.5.2025 அன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். மத்தியப் பிரதேசத்தில், தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் தமிழ் நாட்டின் சார்பில் குழு போட்டியில் சுற்று 16க்கும், தனிநபர் போட்டியில் சுற்று 64க்கும் தகுதி பெற்றார் எத்திராஜன்.

திங்கள், 28 அக்டோபர், 2024

இரா. கவிதா – இர.ஹேமந்த்குமார் மணவிழா வரவேற்பில் தமிழர் தலைவர் வாழ்த்து

 

 

வட சென்னை கழக காப்பாளர் கி. இராமலிங்கம் – இலட்சுமி இணையரின் மகள் இரா. கவிதா மற்றும் சு. ரங்கநாதன் – (நலமுடன்) கலாவதி இணையரின் மகன் இர.ேஹமந்த்குமார் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்றது. உடன்: கலி. பூங்குன்றன் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்), கலாநிதி வீராசாமி எம்.பி., (மாநில தி.மு.க. அயலக அணித் தலைவர்), வீ. குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்),சு. குமாரதேவன் (தமிழ்நாடு ஆதிதிராவிடர் – பழங்குடியினர் ஆணைய உறுப்பினர்), வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (தலைவர், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்), புரசை சு. அன்புச்செல்வன் (செயலாளர், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம்) மற்றும் கழகத் தோழர்கள், மணமக்களின் உறவினர்கள் (சென்னை – 23.10.2024)

வெள்ளி, 14 ஜூன், 2024

தென் சென்னை தொகுதியில் வெற்றி பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் தமிழர் தலைவருடன் சந்திப்பு


விடுதலை நாளேடு
Published June 14, 2024

தி.மு.க. சார்பில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன் தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன்: தமிழச்சி தங்கபாண்டியனின் இணையர் சந்திரசேகரன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் (சென்னை – 14.6.2024)

வெள்ளி, 27 அக்டோபர், 2023

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இல்ல மணவிழா வரவேற்பு! கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து!

  

 

6

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்-செந்தமிழ் செல்வி இணையர் மகள் டாக்டர் எம்.ஆர்.கே.பி.கண்மணி, சென்னை கீழ்ப்பாக்கம் ஆர்.கார்த்திக்-நீதிபதி திலகவதி இணையர் மகன் டாக்டர் கே.சித்தார்த் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா 25.10.2023 புதன் காலை நடைபெற்றது. மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி 24.10.2023 செவ்வாய் மாலை திருவான்மியூர் சிறீராமச்சந்திரா கண்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மணமக்களை வாழ்த்தினார். உடன் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், தென் சென்னை மாவட்ட தலைவர் வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, கடலூர் மாவட்ட தலைவர் தண்டபாணி, கடலூர் மாநகரத் தலைவர் தென் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், மாவட்ட இணைச்செயலாளர் பஞ்சமூர்த்தி, பெரியார் வீர விளையாட்டு கழக மாவட்ட தலைவர் மாணிக்கவேல், கழக இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் வேலு, வடலூர் வழக்குரைஞர் திராவிட அரசு, மறுவாய் க.சேகர் ஆகியோர் உள்ளனர்.  அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழர் தலைவர் ஆசிரியரை வரவேற்று மகிழ்ந்தார்.

வியாழன், 20 ஏப்ரல், 2023

இரா. வில்வநாதன் - வளர்மதி 25ஆம் ஆண்டு மணநாள் கழகத் துணைத் தலைவர் வாழ்த்து


13

தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் - வளர்மதி ஆகியோரின் 25ஆம் ஆண்டு மணநாளையொட்டி (19.4.2023) இரா. வில்வநாதனுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். சென்னை கடற்கரைச் சாலையில் செல்லும் போது கம்பீரமாக பறக்கும் கழகக் கொடியை தொடர்ந்து புதுப்பித்து வருபவரும், அகில இந்திய வானொலி நிலையம் அருகே கழகச்  செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து பதாகை வைத்து இயக்கப் பிரச்சாரம் செய்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வியாழன், 8 டிசம்பர், 2022

தமிழர் தலைவர் ஆசிரியர் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தென் சென்னை சார்பில் வாழ்த்து

செவ்வாய், 23 மார்ச், 2021

தி.மு.க வேட்பாளர்களுக்கு தென்சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் வாழ்த்து

தியாகராயர்நகர்-ஜெ.கருணாநிதி, மயிலாப்பூர்-மயிலை த.வேலு, சைதாப்பேட்டை-மா.சுப்ரமணியன் தி.மு.க வேட்பாளர்களுக்கு தென்சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் வாழ்த்து

தியாகராயர் நகர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெ. கருணாநிதி அவர்களை சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்து ஆசிரியர் அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஏற்பாடு பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் மயிலை த.வேலு அவர்களையும், சைதாப்பேட்டை திமுக வேட்பாளர் மா.சுப்ரமணியன் அவர்களையும், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக சந்தித்து வாழ்த்து தெரிவித்து "திமுக கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும்" புத்தகத்தை வழங்கி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஏற்பாடு செய்வதை பற்றி ஆலோசிக்கபட்டது. மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி. மாவட்ட துணைத் தலைவர் கோ.வீ.ராகவன், மு.சண்முகப்பிரியன். ந.மணித்துரை, சிவசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்

வியாழன், 18 மார்ச், 2021

ஆயிரம் விளக்குத் தொகுதி வேட்பாளர் தமிழர் தலைவரிடம் வாழ்த்து!


சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருத்துவர் நா.எழிலன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்துப் பயனாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். உடன்: கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் நாகநாதன்,  மா.பாஅன்புதுரை (சென்னை, 16.3.2021)

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

புதியதாக பொறுப்பேற்ற வி.பி. கலைராஜன் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை - தமிழர் தலைவரிடம் வாழ்த்து



திமுகவின் இலக்கிய அணி இணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட வி.பி. கலைராஜன் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தமிழர் தலைவர் ஆசிரியரை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துகளை பெற்றார். உடன்: சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளனர். (சென்னை, 2.9.2019)
- விடுதலை நாளேடு, 3.9.19