புதன், 20 அக்டோபர், 2021

மயிலை டி.ஆர்.சேதுராமனின் துணைவியார் டி.எஸ்.பிரேமா மறைவு


கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

சென்னை,அக்.20- தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன் அவர்களின் துணைவியார் டி.எஸ். பிரேமா (வயது-68) 18.10.2021இரவு 8.00 மணி அளவில் மறைவுற்றார். மயிலாப்பூர், புதுத்தெருவில் அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டிருந்தது.

19.10.2021 முற்பகல் 10.30 மணி அளவில்  திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார். டி.ஆர். சேதுராமன் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

உடன் மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, அமைப்பாளர் மு.ந.மதியழகன், துணைச் செயலாளர் சா.தாமோதரன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி .வீரபத்திரன், தரமணி கோ. மஞ்சநாதன், ஆயிரம் விளக்கு மு.சேகர், கோ.குமாரி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, இரா. பிரபாகரன், பூவிருந்தவல்லி க.தமிழ்ச்செல்வன், பெரியார் மாணாக்கன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ்,  தாம்பரம் நகர துணை செயலாளர் மா.குணசேகரன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
ஞாயிறு, 10 அக்டோபர், 2021

ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் போராட்டம்!

 


சென்னைசெப்.21 ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சிகளின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தையொட்டிநேற்று (20.9.2021) காலை 10 மணிக்கு சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடல் நுழைவு வாயிலில்திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில்  எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்!

ஆர்ப்பாட்டம்ஆர்ப்பாட்டம்இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் தலைமையிலே ஆர்ப்பாட்டம்ஆர்ப்பாட்டம்!

மக்கள் விரோத பா..அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்ஆர்ப்பாட்டம்!

மறுக்காதேமறுக்காதேரத்து செய்ய மறுக்காதேமூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுக்காதே!

வஞ்சிக்காதேவஞ்சிக்காதேவிவசாயிகளை வஞ்சிக்காதே!

மோடி அரசேமோடி அரசேஉயருதுஉயருது!  கேஸ் விலை உயருதுகட்டுப்படுத்துகட்டுப்படுத்து!  கேஸ் விலையைக் கட்டுப்படுத்து!

ஒன்றிய அரசேமோடி அரசேகட்டுப்படுத்துகட்டுப்படுத்துபெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்து!

மோடி அரசால்... மோடி அரசால்....  பொருளாதாரச் சீரழிவுத் திண்டாட்டம் அதனால்... அதனால்.. வேலையில்லாத் திண்டாட்டம்!

மோடி அரசேஒன்றிய அரசே!  விற்காதேவிற்காதேபொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே!

ஆகிய முழக்கங்கள் உணர்ச்சிகரமாக இப்போராட்டத்தின் போது ஒலிக்கப்பட்டன.

பங்கேற்றோர்

இப்போராட்டத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்கழகப் பொருளாளர் வீ.குமரேசன்திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயலாளர்  பேராசிரியர் ..மங்கள முருகேசன்மண்டல செயலாளர் தே.செ.கோபால்தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன்,  செயலாளர் செ..பார்த்தசாரதிவடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன்,    திருவொற்றியூர் மாவட்ட தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன்வடசென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன்ஆவடி மாவட்ட துணைத் தலைவர் பா.முத்தழகுபெரியார் சமூகக் காப்பு அணி பயிற்றுநர் சி.காமராஜ்,  பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரிதென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர்கள் அரும்பாக்கம் சாதாமோதரன்கோ.வீ.இராகவன்ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல்சென்னை மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ் வழக்குரைஞர்கள் வீரமணிதுரைசாமிபகுத்தறிவாளர் கழக வடசென்னை அமைப்பாளர் .வெங்கடேசன்கூடுவாஞ்சேரி ராஜூவடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் தளபதி பாண்டியன்தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் மகேந்திரன்பெரியார் பெருந்தொண்டர் ஜெஜெ நகர் ராஜேந்திரன்பெரியார் மாணாக்கன்வை.கலையரசன்திராவிட மாணவர் கழக தோழர்கள் மங்களபுரம் பார்த்திபன்செந்தமிழ் சேரன்டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மாணவர் தமிழ்ச்செல்வன்இளைஞர் அணி  மதுராந்தகம் கவுதமன்அண்ணா நகர் ஆகாஷ்வி.ரவிக்குமார்திராவிடர் மகளிர் பாசறை .மரகதமணிகோடம்பாக்கம் கோடீஸ்வரி, 100ஆவது வட்ட திமுக பிரதிநிதி சதீஷ்குமார்அரும்பாக்கம் அருள்தாஸ்கொரட்டூர் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவுப் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால்மதுராந்தகம் நகரச் செயலாளர் அறிவுக் கடல் செல்வம்ஓட்டுநர்கள் ஆனந்த்மகேஷ்இளங்கோ  உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள்தோழர்கள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பங்கேற்றனர்.

ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்துப் போராட்டம்! எதேச்சதிகார ஆட்சியை மக்கள் மன்றத்திலிருந்து - ஜனநாயக முறைப்படி அகற்றுகின்ற வரையில் போராட்டங்கள் தொடரும், தொடரும், தொடரும்!

செய்தியாளர்களிடையே  திராவிடர் கழகத் தலைவர்

 சென்னைசெப்.21 - இந்தப் போராட்டம்  முதல் கட்டம்தான் - இதோடு முடிவதல்ல - ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதச் சட்டம் அகற்றப்படுகின்ற வரையில்இப்படிப்பட்ட எதேச்சதிகார ஆட்சியை - மக்கள் மன்றத்திலிருந்து ஜனநாயக முறைப்படி அகற்றப்படுகின்ற வரையில்நிச்சயமாக இதுபோன்ற போராட்டங்கள் பல வடிவங்களில் தொடரும்தொடரும்!! தொடரும்!!! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்..

ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண் டித்து நேற்று  (20.9.2021)  காலை சென்னை பெரியார் திடல் வாயிலில் நடைபெற்ற  கண்டனப் போராட்டத்தின் போது செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது பேட்டி வருமாறு:

திருமதி.சோனியா காந்தியின் வழிகாட்டுதலில்...

இந்தியத் தலைநகர் டில்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி.சோனியா காந்தி அவர்களின் வழிகாட் டுதலில், 19 கட்சிகள் சிறப்பாக இணைந்தனஅதிலே திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து - இந்தியா முழுவதும் இப்பொழுது இருக்கக்கூடிய மக்கள் பிரச்சி னைகளை முன்னிலைப்படுத்திஒன்றிய அரசினுடைய கவனத்திற்குக்கொண்டு செல்லவேண்டும் - அதற்கான ஆர்ப்பாட்டங்களையும்கண்டனப் போராட்டங்களையும் அமைதி வழியில்அறவழியில் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் தொடங்கி, 30 ஆம் தேதிவரை நடத்துவது என்று முடிவெடுத்ததற்கு ஏற்பதமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டணி - அதனுடைய ஒப்பற்ற தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் இருக்கக்கூடிய கூட்டணிக் கட்சிகளான 10 கட்சிகளும்இயக்கங்களும்மற்ற ஆதரவாளர்களும் இணைந்துதமிழ்நாடு முழுக்க அமைதி வழியில் - கரோனா காலகட்டத்தில் - கரோனா விதிகளை மீறாமல்ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும்ஒன்றிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடுவிவசாயிகளுடைய நலனுக்கு விரோதமாகமுற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமாக நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண்மைச் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் என்று - தமிழ்நாடு சட்டப்பேரவையில் நம்முடைய முதலமைச்சர் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு..ஸ்டாலின் அவர்கள் தீர்மானத்தை சட்டசபையில் முன்மொழிந்து - ஒரு சில கட்சிகளைத் தவிரஅனைவரும் மிகத் தெளிவான அளவிற்கு வழிமொழிந்தார்களே - அதையே வலியுறுத்தக் கூடிய மக்கள் போராட்டமாக இந்தப் போராட்டம் ஆகியிருக்கிறது.

அதுமட்டுமல்லநாங்கள் ஆட்சிக்கு வந்தால்வளர்ச்சிக்கு வழிவகுப்போம் - குஜராத் மாடல் என்றெல்லாம் சொன்னார் இன்றைய பிரதமர் மோடி அவர்கள்.

ஜனநாயக உரிமைகள் பறி போனதுதான் மிச்சம்

ஆனால், 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்  அவர்களுடைய தேர்தல் அறிக்கையில்ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று சொன்னார்.

அதோடுஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுப்போம் என்று சொன்னார்.

அவர் கணக்குப்படி பார்த்தால், 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் வந்திருக்கவேண்டும் - 5 ஆண்டுகளுக்கு.

இப்பொழுது இன்னும் 3 ஆண்டுகள் கழிந்தால்மொத்தம் 16 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கவேண்டும்அப்படியானால்வேலை இல்லா திண்டாட்டமே இல்லாத அளவிற்கு ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கியிருக்க முடியும்ஆனால்நீரிலே எழுதப்பட்ட எழுத்துகளாகஅந்த வாக்குறுதிகள் காற்றிலே பறக்கவிடப்பட்டுமுழுக்க முழுக்க ஜனநாயக உரிமைகள் பறிபோனதுதான் மிச்சம்.

புதிதாக வரவேண்டாம் ‘‘நரி வலது பக்கம் போனாலும் சரிஇடது பக்கம் போனாலும் சரிமேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் போதும்'' என்று சொல்வதுபோலஇவர்கள் மிகப்பெரிய அளவிற்கு உரிமைகளைப் பறிக்க ஆரம்பித்தார்கள்கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களையெல்லாம் ஒரு பக்கம் விற்பது - இன்னொரு பக்கம் அடமானம் போடுவது.

இல்லத்தரசிகளின் உள்ளமெலாம் எரிகின்ற  சூழ்நிலையை ஒன்றிய அரசு உருவாக்கியிருக்கிறது

அதேநேரத்தில்இல்லத்தரசிகளையெல்லாம் நாங்கள் மகிழ்விப்போம் - பெண்களுக்கு வாய்ப்புகளைக் கொடுப் போம் - அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று பதவிக்கு வந்தவர்கள் - சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எத்தனை முறை உயர்த்தியிருக்கிறார்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்ஒவ்வொரு வீட்டிலும் எரிவது அடுப்பு மட்டுமல்ல - அவர்களுடைய உள்ளமெல்லாம் எரிகின்ற அப்படிப்பட்ட சூழ்நிலையை ஒன்றிய அரசு உருவாக்கியிருக்கிறது.

பெட்ரோல்டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்கா விட்டாலும் - தமிழ்நாட்டில் தி.மு.அரசு குறைத்துள்ளது!

அதுபோலவேசாதாரண மக்கள்நம்முடைய தோழர்கள்நம்முடைய வெகுமக்கள் இன்றைக்கு அதிகமாகப் பயன்படுத்துவது இரண்டு சக்கர வாகனம்அந்த இரண்டு சக்கர வாகனத்தைக்கூட பயன்படுத்த முடியாத அளவிற்குஇந்தக் கரோனா காலகட்டத்தில்வருமானம் குறைந்திருக்கின்ற காலத்தில்வேலை வாய்ப்புகள் குறைக்கப்பட்டு இருக்கிற காலத்தில்பெட்ரோல்டீசல் விலை மிகப்பெரிய அளவிற்கு உயர்த்தப்பட்டு இருக்கிறதுஅதில் கொஞ்சம்கூட கருணை காட்டுவதற்கு ஒன்றிய அரசு தயாராக இல்லை.

அதேநேரத்தில்தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 3 ரூபாய் குறைத்தார்கள்இத்தனைக்கும் தமிழ்நாடு அரசுக்கு நிதி நெருக்கடி உண்டுஅப்படி இருந்தும் இதை செய்திருக்கிறார்கள்எனவேதான்இவற்றையெல்லாம் முன்னிறுத்தக் கூடிய அளவிற்குவேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

நண்பர்களேஒரு செய்தியை நாம் கவனிக்கவேண்டும்ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களால் விவசாயிகள்  மட்டும் பாதிக்கப்படவில்லைமாறாகமாநில உரிமைகளைப் பறிமுதல் செய்கிறதுமாநில உரிமைகளை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறது.

கொட்டும் மழையிலும்கொளுத்தும் வெயிலிலும்கூட...

என்னவென்று சொன்னால்விவசாயத்தைப் பொறுத்தவரை சட்டங்களை செய்கின்ற முன்னுரிமை - முதல் உரிமை மாநில அரசுகளுக்குத்தான் உண்டுமாநில அரசு பட்டியலில் இருந்ததை எடுத்துமாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல்எதேச்சதிகார மனப்பான்மையுடன் மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய அரசு - முழுக்க முழுக்க மூன்று சட்டங்களைக் கொண்டு வந்ததை எதிர்த்துகொதித்துப்  போய்ஏறத்தாழ 9 மாதங்களாக விவசாயிகள் டில்லயில் கடுமையான குளிரிலும்கொட்டும் மழையிலும்கொளுத்தும் வெயிலிலும்கூட இன்றைக்கும் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால்தான்ஒன்றிய ஆட்சி  மக்கள் விரோத ஆட்சியாக  இருக்கிறது என்கிறோம்

இந்தியா முழுமையும் ஒன்றுபட்டு நிற்கிறது

இவர்கள் ஜனநாயகத்தில் மக்களுடைய வாக்குகளைப் பெற்று வந்தோம் என்று சொல்லிஇன்றைக்கு எதேச்சதி காரமாக சட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்இதையெல்லாம் எதிர்த்துஇந்தியா முழுமையும் ஒன்றுபட்டு நிற்கிறது.

கட்சிகளால் பிரிந்திருந்தாலும்இந்த அடிப்படைக் கோரிக்கைகளால்  ஒன்றிணைந்திருக்கிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவேதான்தமிழ்நாட்டில் நீண்ட காலமாக அறப் போராட்டத்தை - மக்கள் போராட்டமாக நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த இயக்கம் - இன்றைக்குக் கரோனா காலகட்டம் என்பதால்மிகப்பெரிய அளவிற்கு மக்களைத் திரட்டக்கூடாது என்பதற்காகஅவரவர் இல்லத்தின் வாசலில் நின்றுஅவரவர் அலுவலக வாசலில் நின்றுஅவரவர் கட்சி அலுவலக வாசலில் நின்று இந்தப் பணியை செய்கிறோம்.

இந்தப் போராட்டம்  முதல் கட்டம்தான் - இதோடு முடிவதல்ல - ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதச் சட்டம் அகற்றப்படுகின்ற வரையில்இப்படிப்பட்ட எதேச்சதிகார ஆட்சி - மக்கள் மன்றத்திலிருந்து ஜனநாயக முறைப்படி அகற்றப்படுகின்ற வரையில்நிச்சயமாக இதுபோன்ற போராட்டங்கள் பல வடிவங்களில் தொடரும்தொடரும்!! தொடரும்!!!

வாழ்க பெரியார்!

வாழ்க ஜனநாயகம்,

ஒழிக அடக்குமுறைகளும்எதேச்சதிகாரமும்!

நன்றிவணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

நலம் விசாரிப்பு - நன்கொடை (சேதுராமன்)


சுயமரியாதைச் சுடரொளிகள் மேனாள் மேலத் தஞ்சை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் குடந்தை எம்.எல்.பத்மாவதி - ராமமூர்த்தியின் தங்கை -  தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவர் மயிலை டி.ஆர்.சேதுராமன் அவர்களின் துணைவியார் டி.எஸ்பிரேமா சிறிது காலமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்தகவல் அறிந்து அவரை நேரில் சென்று தென் சென்னை கழக பொறுப்பாளர்கள் உடல் நலம் விசாரித்தனர்.

டி.ஆர்.சேதுராமன் - டி.எஸ்பிரேமா ஆகியோர் தங்களது 49ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு  (15.7.2021)  நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000/- த்தை நன்கொடையாக தென் சென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களிடம் வழங்கினர்.

அறிஞர் அண்ணா அவர்களின் 113ஆம் ஆண்டு பிறந்தநாள் சிலைக்கு - படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் மரியாதை

 திராவிட சமுதாயத்தை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக- உரிமையுள்ள ஒரு சமுதாயமாக உருவாக்க சூளுரைப்போம்!

அறிஞர் அண்ணா படம் அல்ல - பாடம்!

செய்தியாளர்களிடையே திராவிடர் கழகத் தலைவர்

சென்னைசெப்.15 அறிஞர் அண்ணா அவர்கள் விரும்பிய ஒரு புதிய திராவிட சமுதாயத்தைமானமும் அறிவும் உள்ள சமுதாயத்தைஅதேநேரத்தில் உரிமை யுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்க சூளுரைக்கும் நாளாக இந்த நாளைப் பார்க்கிறோம்இந்நாள் வெறும் மகிழ்ச்சிக்குரிய நாளல்ல - காரணம்அண்ணா படம் அல்ல - பாடம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

அறிஞர் அண்ணாவின் 113 ஆம் நாளான இன்று (15.9.2021) காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலையின்கீழ் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு தமிழர் தலைவர் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார்அவ்விவரம் வருமாறு:

ஓர் ஆட்சியினுடைய நீட்சி - தொடர்ச்சியாக இன்றைய ஆட்சி!

பேரறிஞர்அண்ணாவின்113ஆம்ஆண்டுபிறந்த நாள் விழாவான இன்று எல்லையற்ற மகிழ்ச்சி யோடு கொண்டாடக் கூடிய வகையில்உண்மை யான ஒரு திராவிட ஆட்சி - அண்ணா எந்த உணர்வோடு அரசி யலுக்குச் சென்று ஆட்சி அமைத்தார்களோஅந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று ஆக்கினார்களோ - அதே உணர்வு கொண்ட ஓர்ஆட்சியினுடையநீட்சியாக-தொடர்ச்சியாகஇன்று ஆட்சி அமைந்த நிலையில்அண்ணா அவர்களு டைய பிறந்த நாளைக் கொண்டாடுவது - மற்ற பிறந்த நாள் விழாக்களைவிட தனிச் சிறப்பு மிகுந்த தாகும்.

 இழந்த உரிமைகள் மீட்டுருவாக்கம்

தந்தை பெரியார் பண்படுத்திய நிலத்தை - அறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிய அடிக்கட்டு மானத்திலே - மிகச் சிறப்பான ஒரு திராவிடக் கொள்கை மாளிகையை கலைஞர் அவர்கள் உருவாக்கினார்கள் என்றால்அதனைக் கட்டிக்காத்துமேலும் வலிவு டனும்பொலிவுடனும் நடத்தக்கூடிய ஆற்றல் - சமூகநீதிக்கான சரித்திர நாயகராக இன்றைக்கு உயர்ந்து கொண்டிருக்கின்ற நம்முடைய முதலமைச்சர் - கலைஞர் அவர்களுடைய பாணியிலேயே ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய மு..ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சியில்ஒப்பற்ற திராவிடக் கொள்கைகள் பாதுகாக்கப்படுகின்றன என்பது மட்டுமல்ல - இழந்த உரிமைகளை மீட்டுருவாக்கம் செய்யவேண்டும் என்பதற்காகத்தான்நீட் போன்ற கொடுமைகளையும் எதிர்த்துக் களம் காணவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.

என்றைக்கும் பெரியார் தேவைப்படுகிறார் - எப்பொழுதும் அண்ணா அமைத்த களம் தேவைப்படுகிறது

அண்ணா அவர்கள் சொன்னார்கள்என் பணி ஓயவில்லை என்றுஅதுபோன்ற அளவிற்குஇன்றைக்கு மாநிலங்களுடைய உரிமைகள் நாளும் பறிக்கப்படக் கூடிய சூழ்நிலையில்ஹிந்தித் திணிக்கப்படக் கூடிய ஒரு நெருக்கடியான காலகட்டத்தில்என்றைக்கும் பெரியார் தேவைப்படுகிறார் - எப்பொழுதும் அண்ணா அமைத்த களம் தேவைப்படுகிறது - எப்பொழுதும் கலைஞர் நின்று போராடிய அந்த நிலம் நமக்குப் பாடங்களை உணர்த்திக் கொண்டிருக்கிறது.

அண்ணா படம் அல்ல - பாடம்!

எனவேதான்அண்ணா பிறந்த நாளில்நாம் சூளுரை எடுக்கவேண்டும் - அவர் விரும்பிய ஒரு புதிய திராவிட சமுதாயத்தைமானமும் அறிவும் உள்ள சமுதாயத்தைஅதேநேரத்தில் உரிமையுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்க சூளுரைக்கும் நாளாக இந்த நாளைப் பார்க்கிறோம்.

வெறும் மகிழ்ச்சிக்குரிய நாளல்ல - காரணம்அண்ணா படம் அல்ல - பாடம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடையே கூறினார்.

அறிஞர் அண்ணா அவர்களின் 113ஆம் ஆண்டு பிறந்தநாள் சிலைக்கு - படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் மரியாதை

சென்னைசெப்.15 திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர்மேனாள் முதலமைச்சர்தந்தை பெரியாரின் தலைமகன் அறிஞர் அண்ணா அவர்களின் 113ஆம் ஆண்டு பிறந்தநாளான இன்று (15.9.2021) காலை சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அண்ணா அவர்களின் உருவப் படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவித்தும்மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்பொருளாளர் வீ.குமரேசன்பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி மாநிலத் தலைவர் பேராசிரியர் காளிமுத்து,  அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம்திராவிடர் மாணவர் கழக மாநிலச் செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார்பெரியார் சமூக காப்பணி மாநில அமைப்பாளர் சோ.சுரேஷ்சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால்தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்மாவட்டச் செயலாளர் செ..பார்த்தசாரதிமாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன்வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன்ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் பூவை .தமிழ்ச்செல்வன்திருவொற்றியூர் பெரு இளங்கோபாலுபரிதின்அனகை ஆறுமுகம்தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் மகேந்திரன்திராவிடர் மாணவர் கழக தமிழ்ச்செல்வன்பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரிஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல்சி.முரளிகிருஷ்ணன்வை.கலையரசன்.கலைமணிமுத்துலட்சுமிஆனந்த்திராவிட தொழிலாளர் கழக மோகன் மற்றும் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.